Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 1

தன் அறைக்குள் வந்தவன் ….வீட்டிற்கு அழைத்து கெளம்புவதாக சொல்லிவிட்டு அவர்களுக்கான பொருட்கள் …அக்கா பிள்ளைகளுக்கு பொம்மை வாங்குவதற்காக ….ஷாப்பிங்கு கெளம்பினான்..

காரில் செல்லும் போது தனக்கு பிடித்தனமான பாடல்களை கேட்டு கொண்டும் அங்கே இருக்கும் சில நண்பர்களுக்கு …ஊருக்கு போவதை சொல்லி கொண்டே மால் ஒன்றில் நுழைந்தான் …..

தேவையான அனைத்தும் வாங்கியவன் …தன்னவளுக்கு…ஏதேனும் பரிசு வாங்க வேண்டும் என்று தேடி கொண்டிருந்தான்…அப்போது அவன் கண்களில் தென்பட்டது …அவளுக்கான 
ஒன்று

அது ஒரு சிறிய கண்ணாடி பெட்டியில் பாதரசம் போன்ற திரவத்தில் பந்து ஒன்று மிதந்து கொண்டு இருந்தது… அந்த பந்தில் ஒரு பெயரை எழுதி உள்ளே இருக்கும் திரவத்தில் போட்டால் அதற்கு இணையான பெயர் வருமாம் …

இதை அவன் நம்பவில்லை என்றாலும் அதை வாங்க வேண்டும் ஆசையில்.. அதன் விலையை பற்றி விசாரித்தான்… அதிலும் அவனுக்கு ராசி இல்லை தான் போலும் …அதை ஏற்கனவே வாங்கி விட்டதாகவும் ..அதுவே கடைசி பீஸ் என்று கேட்டதும்…. நமக்கு ஏதும் ராசி இல்ல போல என்று சிறு சிரிப்புடன் …பார்த்து கொண்டிருந்த போது பின்னே இருந்த ஒரு குரல் அழைத்தது….

அந்த கிப்ட் பற்றி விசாரித்து கொண்டும், அதனை எப்புடி செய்வது என்றும் கேட்டு இருக்கும் போது பின்னால் இருந்து அழைத்தது ஒரு குரல்….பழக்கப்பட்ட குரலில் இருந்ததால் ..மகிழ்ச்சியுடன் திரும்பியவன் பார்த்ததும் முகம் இருண்டு போனது..

“சஞ்சய் இவன் இங்க என்ன செய்றான்”…”டேய்    எப்புடி இருக்க… பாத்து ரொம்ப வருஷம் ஆச்சுல ” … என்று அவன்  சந்தோசமாக விசாரித்தான் இவனும் சிறிது சிரித்து கொண்டு நலம் விசாரித்தான் … அவன் இங்கு வந்து 3 வருடம் ஆகிவிட்டது என்றும்  ,தனக்கு திருமணம் என்பதால்  ஷாப்பிங் செய்ய வந்ததாகவும் ..கூறி கொண்டே ஒரு பத்திரிக்கை எடுத்து அவன் கையில் கொடுத்தான் …

மேலும் …” 4 வருசமா  நீ இங்க இருக்க எனக்கு தெரில …இதுல பக்கத்து ஸ்ட்ரீட் வேர”…என்று கூறி சத்தமாக சிரித்தான் …இவனும் சிறு புன்னகையுடன் …”நீ எந்த பிளைட் கு போர ..எப்போ ” அவன் ” இன்னும் ஒன் வீக் ல டா ” என்று சொன்னதும் இவன் மனம் திருப்தி உற்றவனாய் … ” ஓகே  எனக்கு time ஆச்சு ..நாம ஊருல பாக்கலாம் ” என்று கையை குலுக்கி கொண்டு திருப்பினான்….
” நல்ல வேளை நம்ம பிளைட் இல்ல “

அவன் ” டேய் ஒரு நிமிஷம்….. பழசு லாம் எதையும் நியாபகம் வச்சுக்காத… எல்லாத்தையும் மறந்துட்டு என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் ” என்று கூறவும் ..அவன் பார்த்த அதே கிப்ட் இவனுக்கு பேக் செய்வதையும் பார்த்து இத இவன் தான் வாங்குனான…என்று பார்த்து விட்டு …

“ச்சே ச்சே ..அதலாம் எப்பவோ மறந்துட்டேன் ” என்று சிரித்து விட்டு கிளம்பினான் ….போகும் போது அவன் மனம் அவன் செய்த காரியத்தை நினைத்தது…

” மாப்ள நீ என்ன டா உன் ஆள பாத்துட்டே இருக்க ஏதும் பேச மாட்றா…. ஆனா அவன் எப்ப பாரு அவ கிட்ட தான் பேசிட்டு இருக்கான் …ஏரியால லாம் …அவன் ஆளுன்னு தான் பேசிக்குரானுக ..பாத்துக்க “என்று கார்த்தி சொன்னதும்

மூன்று வருடமாக ஒரு தலையாய்  காதலித்து வந்த சஞ்சய் …இந்த விஷயம் புதித்தல்ல… இதே போல் அவனுக்கு தெரிந்த நண்பர்களும் இதே தான் சொன்னார்கள்… இதற்கு மேல் விட்டால் சரி வராது என்று நினைத்தவன் ..ராகுல் வரும் வழியில் நின்றான் ….

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: