Advertisements

முபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 1

துபாயில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்றில்…. கடமையே…என்று வேலை பார்த்து கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன்……

சும்மா கீபோர்டை தட்டி கொண்டிருந்தவனை எழுப்பியது அவனுது செல்பேசி … இல் “அம்மா” என்று வந்தது …பார்த்ததும் முகம் சுளித்து… வராத புன்னைகையை வரவழைத்து பேசினான்….சிறுது நேரத்தில் வழக்கம் போல வாக்குவாதம் ஆரம்பித்து கடைசில் சண்டையில் முடிந்தது ….

இறுதியயாக அவன் அம்மா “இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது விஷ்வா …வயசு என்னாகுது உன்ன விட சிறுசலாம் கல்யாணம் பண்ணிருச்சு …நீ இன்னும் அப்புடியே இருக்க வயசு 28 ஆச்சு ….இந்த தடவை வரும் போது கண்டிப்பா நடந்தே ஆகனும்…. ஒழுங்கா கிளம்பி வா , இல்ல முடியாதுன்னு சொன்னா உனக்கு அம்மாவே இல்லன்னு நெனச்சுக்கோ ” என்று கூறி அவனுது செல்பேசி முடிந்தது……

இது வழக்கமான ஒன்று தான் ..ஆனால் கடைசி வந்த வார்த்தைகள் …புதிது என்ன செய்வது என தெரியாமல் ..தன் மொபைல் ஸ்க்ரீனில் இல் உள்ள அவளது போட்டோ வை பார்த்த படி அமர்ந்திருந்தான் , கலங்கிய கண்களோடு……. அவளுடன் எடுத்த செல்ஃபியை பார்க்கும் போது அதில் அவள் அவன் கழுத்தில் இருபுறமும் வளைத்து அவனுக்கு முத்தம் தரும் வகையில் இருந்தால் …அதை பார்க்கும்போது அது எடுத்த தருணம் நினைவுக்கு வந்தது….

” ஏன் டி சாதாரண டைம்ல பக்கத்துல கூட வர மாட்ற அது என்ன செல்பி எடுக்கும் போது மட்டும் குடும்பம் நடத்தரமாறி போஸ் கொடுக்குற ” அவள் சிரித்து கொண்டே …

” போட்டோ எதுக்கு எடுக்குறோம் …அவங்க பக்கத்துல இல்லாதப பாக்க தானே …அப்போ நா இல்லாதப்ப…நீ பாக்கும் போது நா இப்புடி இருந்தா…சார்..பீல் பண்ணாம இருப்பிங்கன்னு தான் “…என்றால் அவன் தலை முடியை களைத்தவாறு

அவன் “அப்போ நீ என்ன விட்டு போயிருவனு சொல்ல வர ” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் கை அவன் கண்ணத்தில் விரல்களை பதிந்திருந்தது….

அவனை அடித்து விட்டு இவள் அழுது கொண்டிருந்தாள் …..

அவள் அப்புடித்தான் …கோவம் , சந்தோசம் , துக்கம் எல்லாத்துலயும் அழுது தீர்க்கும் ஒரு பாசமிகு உள்ளம் …இப்போதும் கூட அவனை அடித்து விட்டோம் என்று இல்லாமல் ..அவனுக்கு வலிக்குமே என்று தான் இதழ்களால் ஒத்தடம் கொடுத்து கொண்டிருந்தாள் ….

இது அவனுக்கும் தெரியாமல் இல்லை …குழந்தையை அடித்து விட்டு சமாதானம் செய்யும் அன்னையை போல அவள் செய்து கொண்டிருந்தாள்…அவன் அவளை மெதுவாக இறுக்கி கொண்டு  “எனக்கு வலிக்கலமா” …என்று அவள் காதருகில் சொன்னான்… ஆனால் அவர்கள் பிரிந்து வீட்டிற்கு செல்லும் வரையிலும் அவள் அழுகை நின்ற பாடில்லை…

அந்த நெனைவில் திளைத்து இருந்தவன்…அலுவலக கடிகாரத்தில் மணி அடிக்கவும் நினைவு வந்தவனாய் …திரும்பி பார்த்தான் …சுற்றிலும் பார்க்கையில் ஒருவர் முகம் தெரியாத வண்ணம் பல கேபின்கள் இருந்தன …எல்லாவற்றிலும் கீபோர்டை தட்டும் ஓசை மட்டும் எதிரொலித்தது…

இதுவே நமது ஊராக இருந்தால் ..இந்நேரம் கேலி கிண்டல்கள் என சத்தத்தில் எதிரொலித்திருக்கும்…என்று நினைத்தவன்… தன் கேபினில் இருந்து எழுந்து மேனேஜர் அறைக்கு சென்று ஊருக்கு செல்வதை பற்றி கூறி அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வந்தான்…

இனி எட்டு மாதம் சொந்த ஊரில் இருப்பதை பற்றி நினைத்து களிச்சி உற்றவன்… பின் தன்னவள் எப்புடி இருக்கிறாள் …எங்கே .. இருக்கிறாள்…அவளுக்கு திருமணம் ஆகிருக்குமோ …என்ற சோக சிந்தனையிலேயே தன் அறைக்கு திரும்பினான்….

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: