சூரப்புலி – 2

இந்தச் சம்பவத்தால் சூரப்புலி மனமுடைந்துவிட்டது. அந்த மாளிகையில் இனிமேல் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தது. ஒன்பது மாதமே ஆன குட்டியாகிய தன்னால் ஒரு பெரிய கோழியைப் பிடித்து முழுவதையும் தின்ன முடியாது என்பதைக் கூட யாரும் அறிந்துகொள்ளவில்லையே என்று நினைத்து, அது மிகவும் வருத்த மடைந்தது. உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்யும் நாயாகத் தன்னை அவர்கள் நினைத்ததை எண்ணியும் அது வருந்தி அழுதது. அன்று இரவு வெளிவாயிலை சாத்திப் பூட்டுவதற்கு முன்னால், யாரும் அறியாதபடி அது வெளியே கிளம்பிவிட்டது. மறுபடியும் தெரு வழியாக அலைய வேண்டி நேர்ந்ததை நினைத்து அது மிகவும் வருத்த மடைந்தது. சாட்டை அடியால் உடம்பிலே பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. காயத்தால் ஏற்படும் வலியைப் பொறுத்துக் கொண்டே, அது மேட்டுப்பாளையத்துத் தெருக்களின் வழியாகச் சுற்றிக்கொண்டிருந்தது. 

பல நாட்கள் பட்டினியாகக் கிடந்தும், அது வீட்டு வாயிலிலே போடும் எச்சிலிலையைத் தேடிச் செல்லவில்லை. அது பட்டினியாகவே 

அலைந்தது. மேட்டுப்பாளையத்து வீதிகளிலே முன்பு இப்படித் திரிந்த போது அது மிகச்சிறிய குட்டி. ஆனால் இப்பொழுது அது வளர்ந்து விட்டது. இருந்தாலும், அது இன்னும் இளமைப் பருவத்தைக் நடக்கவில்லை. பாக்கு வியாபாரியின் மாளிகையிலே ஒரு வே ை உண்டும், ஒரு வேளை உண்ணாமலும் அது காலங்கழித்ததால் 

இயல்பாக வளரவேண்டிய அளவிற்கு அது வளரவில்லை. உடம்பில் சதைப்பற்று இல்லையென்றே சொல்லவேண்டும். எங்குப் போவ தென்று தெரியாமல் அது மூன்று நாட்கள் அலைந்துவிட்டு, மூன்றாம் நாள் இரவு தொடங்கும் வேளையில் ஒரு உருளைக்கிழங்கு மண்டி எதிரே வந்து நின்றது. அந்த மண்டியை இரவிலே காவல் காக்கும் இரண்டு பேர் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள். அவர் களுக்குப் பக்கத்தில் தயங்கித் தயங்கிச் சூரப்புலி சென்றது. வாலைக் குழைத்துக் குழைத்துக் காட்டியது. அன்போடு கூப்பிட்டால் அவர் களுக்கு உதவியாக இருப்பதற்குத் தயாராக இருப்பதைத் தெரிவித்துக்கொண்டது. ஆனால் காவல்காரர்கள் அதைக் கவனிப்ப தாகத் தோன்றவில்லை. வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மடித்து மடித்து வாயில் போட்டுக்கொண்டு, ஏதேதோ பேசிக்கொண்டிருந் தார்கள். அந்த மண்டியிலே உருளைக்கிழங்கு திருட்டுப் போவதைப் பற்றியும் பேசிக்கொண்டார்கன். 

நீலகிரி மலையின் மேல்பகுதியிலே உருளைக்கிழங்குகள் எராளமாக விளைகின்றன. அவற்றை மேட்டுப்பாளையத்திற்குக் கொண்டுவந்து, கடைகளிலே வைத்து, வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பார்கள். அப்படி விற்கும் மண்டிகள் பல உண்டு. அவற்றில் ஒன்று இது. இந்த உருளைக்கிழங்கு மண்டியிலே அடிக்கடி திருட்டுப் போய்க்கொண்டிருந்தது. அதைப்பற்றித்தான் காவல்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் இரண்டு பேரும் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள், முன்பு காவல் காத்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவில்லையென்று அவர்களை நீக்கிவிட்டு, ஒரு வாரத்திற்கு முன்புதான் இவர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் இவர் களும் காவல் காப்பதிலே கெட்டிக்காரர்களல்ல  தூக்கத்திலேதான் 

கெட்டிக்காரர்கள், ஒரு வாரம் வரையில் திருட்டுப் போகவில்லை என் பதே தங்களுடைய திறமைக்கு அடையாளம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்களுக்குத் திறமை ஒன்றுமே இல்லை, புதிய காவல்காரர்களை நோட்டம் பார்க்கவே திருடர்கள் ஒரு வாரம் பொறுத்திருந்தார்கள், அதற்குள் இவர் களின் தூக்கத்தின் பெருமை திருடர்களுக்குத் தெரிந்துவிட்டது. 

அன்று இரவிலும் இவர்கள் நன்றாகப் படுத்துத் தூங்கி விட்டார்கள். அந்தச் சமயம் பார்த்து நான்கு திருடர்கள் மெதுவாக நுழைந்தனர். பல கிடங்குகளில் உருளைக் கிழங்கு மூட்டைகள் இருந்தன. கோடியிலிருந்த ஒரு கிடங்கின் பூட்டைத் திறக்கத் திருடர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். சூரப்புலி அதைக் கண்டு கொண்டது. ஆனால் காவல்காரர்கள் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை மெதுவாக எழுப்பித் திருடர்களைக் காட்டிக் கொடுக்கவேண்டும் என்று அது நினைத்தது. காவல்காரர் களின் பக்கத்திலே சென்று, மெதுவாக ஒருவன் காலை நக்கிற்று. அவன் எழுந்திருப்பதாகக் காணோம். பிறகு மற்றவனை எழுப்ப முயன்றது. அவனும் எழுந்திருக்கவில்லை; காலைக்கூட அசைக்க வில்லை. அவ்வளவு தூக்கம் அவர்கள் இரண்டு பேருக்கும். 

திருடர்கள் பூட்டைத் திறந்து, உருளைக்கிழங்கு மூட்டைகள் அடுக்கிக் கிடக்கும் அந்தக் கிடங்கிற்குள் நுழைந்துவிட்டார்கள். இந்தச் சமயத்தில் காவல்காரர்களை எழுப்பிவிட்டால், கிடங்கின் கதவை வெளிப்புறத்திலிருந்து சாத்திக்கொண்டு, பிறகு திருடர்களைக் கைப்பிடியாகப் பிடித்துவிடலாம். இதுதான் சூரப்புலியின் எண்ணம். ஆனால், காவல்காரர்கள் எழுந்திருப்பதாகக் காணோம். திருடர்கள் ஆளுக்கொரு மூட்டையாகத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்களே என்று சூரப்புலிக்குக் கவலை. அதனால் அது, காவல்காரர்களில் ஒருவர் போர்த்திருந்த துப்பட்டியைப் பிடித்து, வாயினால் மெதுவாகக் கவ்வி இழுத்தது. அப்பொழுதும் அவன் தூக்கம் கலையவில்லை. பிறகு சற்று வேகமாக இழுத்தது. துப்பட்டி முழுதும் தனியாக வந்துவிட்டது. அப்பொழுதுதான் அவன் எழுந்தான். ஆனால் இன்னும் அவனுக்குத் தூக்கம் கலையவில்லை, தூக்க வெறியோடு அவன் சூரப்புலியைப் பார்த்தான்.

”துப்பட்டியைப் பிடித்தார் இழுக்கிறாய்? திருட்டு நாயே’ என்று கூவிக்கொண்டு, அவன் தன் பக்கத்திலே வைத்திருந்த காவல் தடியை எடுத்து ஓங்கி வீசினான். சூரப்புலி அந்தக் தடிக்குத் தப்ப முயன்றது. ஆனால் முடியவில்லை. நீண்ட மூங்கிலான அந்தக் காவல் தடி , மூக்கின் மேலே பலமாகத் தாக்கிவிட்டது. வீல் வீல் என்று கத்திக்கொண்டு சூரப்புலி ஓட ஆரம்பித்தது. அப்படி ஓடும் போதே அதற்கு ஒரு யோசனை தோன்றிற்று. திருடர்கள் புகுந்த கிடங்கின் பக்கமாக, அது கத்தி அலறிக்கொண்டே ஓடிற்று. அதன் குரலைக் கேட்டுத் திருடர்கள், தப்பினால் போதுமென்று மூட்டைகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். இவ்வாறு திருடர்களை ஓட்டி விட்டதால் அதைத் தெரிந்து கொண்டு, அடுத்த நாளாவது காவல் காரர்கள் தன்னிடத்திலே அன்பு காட்டுவார்கள் என்று அது அங்கேயே ஒரு மூலையில் படுத்துக் கிடந்தது. 

மூன்று நாளாக அது பட்டினி. தண்ணீர் சேந்தும் கிணற்றடியிலே தேங்கிக் கிடந்த தண்ணீரைத் தவிர வேறு ஒன்றும் அதற்குக்காக 

கிடைக்கவில்லை, அதனால் பசியின் கொடுமை அதிகமாக இருந்தது. அதைவிட மூக்கில் பட்ட அடியினால் வலி அதிகமாக இருந்தது. மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகிக் கொண்டே இருந்தது. இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு சூரப்புலி , அடுத்த நாளை எதிர்பார்த்துப் படுத்திருந்தது. 

நன்றாகத் தூங்கிவிட்டுக் காலையில் எழுந்த காவல்காரர்கள், கோடிக் கிடங்கின் கதவு திறந்து கிடப்பதையும், உருளைக்கிழங்கு மூட்டைகளை எடுத்துப் பிறகு அவசரம் அவசரமாக எறிந்துவிட்டுப் போயிருப்பதையும் கண்டார்கள். திருடர்கள் வந்து பூட்டைத் திறந்திருப்பதையும், அவர்கள் முயற்சி பலிக்காமல் போனதையும் அறிந்து கொண்டார்கள். அந்தச் சமயத்திலே, சூரப்புலி அவர்கள் முன்னால் வந்து வாலைக் குழைத்துக் கொண்டு நின்றது ; காவல் தடியை வீசியதால் அதன் மூக்கில் காயமேற்பட்டிருந்ததையும், அதிலிருந்து ஒழுகிய ரத்தம் கோடிக் கிடங்கு வரையிலும், அதற்குள்ளும் சிந்தி உறைந்து கிடப்பதையும் அவர்கள் பார்த்தார்கள். சூரப்புலி செய்த உதவி அவர்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. 

இருந்தாலும் அதற்கு நன்றி செலுத்த அவர்கள் நினைக்கவில்லை. ‘இந்த நாயைத் துரத்திவிட்டாள். இது இங்கே இருந்தால் முதலாளி வருகின்றபோது உண்மை வெளியாகிவிடும்” என்றான் ஒருவன். 

”ஆமாம். நாம்தான் திருடர்களைக் கண்டுபிடித்து விரட்டி விட்டதாகச் சொல்லிக்கொள்ள வேண்டும். கைத்தடியால் திருடன் ஒருவனுக்கு முதுகிலே நல்ல அடி என்றும் சொல்லுவோம்” என்றான் மற்றவன். 

”நல்ல அடிதான் அவனுக்கு. அதிலென்ன சந்தேகம்? இதோ அவன் பட்ட அடியிலிருந்து ரத்தங்கூட ஒழுகிக் கிடக்கிறதே!” இது முதல் காவல்காரனுடைய புதிய கற்பனை. 

”பட்ட அடியிலே ஆள் பிழைப்பதுகூடக் கஷ்டம். அப்படி நான் ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டேன்.” இரண்டாவது காவல்காரன் இன்னுங் கொஞ்சம் கற்பனையைப் பெருக்கினான். 

“முதலில் இந்த நாயை ஒரு போடு போடு , பார்க்கலாம் என்றான் மற்றவன். 

சொல்லி வாய் மூடும் முன்பே, காவல் தடி மறுபடியும் சூரப்புலியை நோக்கிப் பறந்தது. சூரப்புலி இதை எதிர்பார்க்கவேயில்லை. அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இடத்தில் அடிதான் கிடைத்தது. இந்தத் தடவை அதற்கு முதுகிலே நல்ல காயம் ஏற்பட்டுவிட்டது. கை ……… கை என்று கத்துவதிலே சூரப்புலிக்கு இணை காணமுடியாது. பாவம், கத்திக்கொண்டே வாலை இடுக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தது. எங்கு போவதென்ற எண்ணமே இல்லாமல் கால் போன திக்கிலே பாய்ந்து ஓடியது. பசியையும் மீறி ஏற்பட்ட பயத்தினால் அதன் கால்கள் எப்படியோ சக்தி பெற்றுவிட்டன. 

மனிதனிடத்திலே அதற்கு வெறுப்புத் தோன்றிவிட்டது. எவன் ஆதரவளிப்பானென்று எண்ணியதோ அவன் இரக்கமற்றவனாக இருந்தான். பாக்கு வியாபாரியின் செல்வச் சிறுவன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக அதைத் துன்பப்படுத்தினான். முதலாளியிடத்திலே தாங்கள் நன்மதிப்புப் பெறுவதற்காகக் காவல்காரர்கள் தடியால் அடித்தார்கள். எல்லா மனிதரும் இப்படித்தானோ? அப்படியானால், எஜமானனாக இப்படிப்பட்ட மனிதனை ஏற்றுக் கொள்வதிலே பயனில்லை என்ற எண்ணம் அதன் இள உள்ளத்திலே முளைக்கத் தொடங்கியது. மனிதன் வாழாத அடர்ந்த காட்டிலே போய் வாழ வேண்டும் என்ற தீர்மானம் மெல்ல உதயமாயிற்று. ஓடிக்கொண்டிருக்கும் போதே இந்த எண்ணமும் தீர்மானமும் தோன்றிவிட்டன. 

பவானி ஆற்றுப் பாலத்தைக் கடந்துவிட்டால் பிறகு நீலகிரி மலைச்சாரலிலுள்ள காடுகளே உண்டு. மேலே போகப் போக மனித வாசனையே அநேகமாக இல்லாது போய்விடும். அப்படிப்பட்ட இடத்திலே போய் வாழலாம் என்று அது போய்க்கொண்டிருந்தது. 

பசியும், வலியும் அதன் தீர்மானத்தை உறுதிப்படுத்தின. இனி இந்த மனிதர்களுடைய உறவே வேண்டாம். மனிதன் சுயநலம் மிகுந்தவன். தன்னுடைய சுகத்தையும் இன்பத்தையுமே நாடுபவன். மற்றப் பிராணிகளை அவன் தனது சுகத்திற்காக எவ்வளவு கொடுமையாக நடத்தவும் தயங்க மாட்டான். இவ்வாறு சூரப்புலியின் உள்ளத்திலே எண்ணங்கள் எழுந்தன. 

அது பவானியாற்றின் மேலுள்ள பெரிய பாலத்தைக் கடந்தது. கமுகுத் தோப்புகளுக்குள்ளே நுழைந்தது. அவற்றையும் தாண்டினால் காட்டு மரங்கள் வளர்ந்த மலைச்சாலை அடையலாம். கமுகுத் தோப் யுக்குள்ளே மனிதர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் 

அருகில் கூடச் செல்லாமல் சூரப்புலி விலகிச் சென்றது. 

மாலை நேரத்திற்குள்ளே அடர்ந்த காட்டிற்குள்ளே அது புகுந்துவிட்டது. திடீரென்று வேகமாக இருள் சூழத் தொடங்கியது. மேட்டுப்பாளையத்திலே இவ்வளவு வேகமாக இருள் சூழ்வதை அது பார்த்ததில்லை. காட்டுக்குள்ளிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு இருள் படையெடுப்பதைப்போல் தோன்றியது. எதிர்பாராது திடீரென்று சூழ்ந்துகொண்ட அந்த இருட்டிலே என்ன செய்வதென்று அதற்குத் தோன்றவில்லை. நாள் முழுவதும் எங்கும் நிற்காமல் ஓடி வந்ததால் களைப்பு அதிகமாயிற்று ; நாக்கு வறண்டது. அதற்குத் தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று கூடத் தெரியாது. ஏதேதோ பயங்கரமான குரல்கள் கேட்டன். என்ன மிருகங்கள் இப்படி முழங்கு கின்றன என்று அதற்குத் தெரியவில்லை. அது கண்டிருக்கும் எந்த மிருகமும் இப்படிக் குரல் கொடுத்ததில்லை. ஒரு புலியின் குரல் வெகுதூரத்திலே கேட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – குழந்தைகள் கதைவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் விருதூர் எனும் ஊரில் ஒரு ஏழைத் தாய் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வாழ்க்கை மூன்று வேளை உணவு கூட உண்ண முடியாத அளவுக்கு மிகவும் சிரமம் வாய்ந்ததாகவே இருந்தது. அந்த மகனின் பெயர் வெற்றிவேலன். அவன்

சூரப்புலி – 1சூரப்புலி – 1

அது ஒரு சிறிய நாய்க்குட்டி. எப்படியோ அது அந்தப் பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தது. தெரு வழியாக அலுப்போடு மெதுவாக ஓடிக்கொண்டிருந்த அந்தக் குட்டி, மாளிகையின் வாயிலுக்குப் பக்கத்தில் வந்து, கொஞ்ச நேரம் தயங்கித் தயங்கி நின்றது. அழகாக வர்ணம் பூசப்பட்டிருந்த

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்