Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 16

மலர்..16

பூமதிக்காக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தவனுக்கு தன் அன்னையின்  முகத்தில் மலர்ந்த மலர்ச்சி கண்டு மனம் நிறைந்ததுவெகுநேரம் அயர்ந்து உறங்கியவன், அறையில் பொருளொன்று விழுந்திட அதன்  சத்தத்தில்  உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான் மதுரன். 

“  கைதவறி விழுந்துவிட்டதுநல்லா தூங்கிட்டு இருந்தீங்க, தொந்தரவு பண்ணிட்டேன், மன்னித்துவிடுங்கள் மாமாஎன்று வேகமாய் அறையை விட்டு வெளியேறப் போனவளை தடுத்து நிறுத்திய  மதுரன்.. பவாணி நீ இங்க என்ன  செய்கிறாய்? உனக்கும்  சாரதிக்கும் கல்யாணம்  நடந்தது தானே!என்று விபரம் அறிந்திடும் ஆவலில் அவள் முகத்தில் உண்டான உணர்வுகளை கவனியாது..  பேசினான் மதுரன்.

ம்ஆமாம்என்று ஒற்றை வரியில் பதில் தந்துவிட்டு திரும்பியும் பாராது விலகிச்சென்றவளை  விசித்திரமாய் பார்த்தபடி அறையை விட்டு வெளியே வந்தவன், தன் தாயையை  தேடிச்சென்றான்.

வீட்டின் பின் கட்டில், ஒரு குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்த மீனாட்சி மதுரனை கண்டதும், “ அதுக்குள்ள எழுந்து வந்திட்ட  இன்னும் கொஞ்ச நேரம் படுத்து உறங்கவேண்டியது தானே!  சாப்பாடு தயாரானதும் நானே வந்து எழுப்புகின்றேன்என்று மீண்டும் மடியில் இருந்த சிறுவன் மீது கவனம் செலுத்திட துவங்கினார் மீனாட்சி.

இப்போது என் அறைக்குள் வந்தது, நம்ம பவானி தானே! அவள் ஏன்  இப்படி இருக்கிறாள்? ஆளே அடையாலம் தெரியமல் மெலிந்து போய்,  அவள்  எப்போது  வந்தாள்? அவள்    சாரதியுடன்என்று தயக்கமாய் நிறுத்த.. ஆமாம்  மதுரா.. நம்ம பவாணிதான் அது…   காதலித்தவன் தான் முக்கியமென்று  பெற்றவர்களை விட்டு ஓடிப்போனாள்.. பவாணி வீட்டில்தான் சாதி அந்தஸ்து பார்த்து வீட்டில் சேர்த்துக்கொள்ளமல்   ஒதுக்கினார்கள்சாரதி வீட்டில் இரண்டு பேரையும்  பிடித்தும் பிடிக்காமலும்  மகன் ஆசைக்காக  ஏற்றுக்கொண்டார்கள், கல்யாணம் முடிந்த ஒருவருடம் மாமியார் கொடுமையையும்   சாரதிக்காக சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தால், அவனும் கிடைக்கும் விடுமுறையில் எல்லாம் பாவாணிக்காக  ஓடிவந்துவிடுவான், கடைசியாக வந்தபோது கூட அடுத்து வரும்போது இவளையும் கூடவே கூட்டிப் போவதாய் சொன்னான், ஆசையாசையாய் போனவன்    பிணமாகத்தான் திரும்பி  வந்தான்  காஷ்மீர் தீவிரவாதத்தில் குண்டு வெடித்து இறந்த  வீரர்களில் இவனும் ஒருத்தன், ஏற்கனவே பிடிக்காத மருமகள் மகனை இழந்த சோகம் வேறு, எல்லா வெறுப்பையும் இவள் மீது காட்டத் துவங்கினர்.. இவளை   கல்யாணம்  செய்து  வந்த நேரம்தான் என்று வீட்டில் இவளை அடித்து துரத்திவிட்டார்கள், அப்போது கூட உன் மாமா மனம் இறங்கி மகளை மன்னிக்கவில்லை..  மிலிட்டரிக்காரன் வேண்டாம் என்று சொல்லியும் எங்கள் பேச்சை மீறி போனாய் தானே,  என்று அங்கும்  இவளை சேர்த்துக்கொள்ளவில்லை, நானும் உன் கல்யாண விஷயமாக ஊருக்கு  வந்துவிட்டேன், பாவம்   இருக்க  இடமில்லாமல்  யாரிடமும் சொல்லாமல்   ஊரைவிட்டே போய்விட்டாள்என்று தன்னை மீறி வழிந்த  கண்ணீரை துடைத்துக்கொண்டு மேலும் தொடர்ந்தார். 

இங்கிருந்து கிளம்பும் போதே.. இவன்  வயிற்றில் இருந்திருக்கின்றான்,   போக வழிதெரியாமல் அழைந்தவள் , நடுரோட்டில் மயக்கம் போட்டு விழுந்திட..  அக்கம் பக்கத்தில்  இருந்தவர்கள் பரிதாபப்பட்டுஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கின்றனர்அங்கு இவளுக்கு மருத்துவம் பார்த்த  டாக்டர் சொல்லவும்தான் இவள் மாசமாய் இருந்த விஷயம் இவளுக்கே தெரிந்தித்திருக்கிறது, சொந்த பந்தம்  யாருமில்லைகட்டினவனும்  இறந்துட்டான்என்று தெரிந்து அந்த டாக்டரே இரக்கப்பட்டு ஒரு ஆதரவற்ற இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள், ஹும்..  இந்த ஊரில் பாதி சொத்து இவன்  தாத்தாக்கு   சொந்தம்.. ராஜா மாதிரி பிறந்து வளர வேண்டியவன்யாருமில்லாமல் அனாதையா பிறந்திருக்கான்..  போன மாதம்     மாதர்சங்கத்தில் இருந்து  தஞ்சாவூர் கோவில்  சுற்றிப்பார்க்க போனோம் இல்லையாஅங்கு ஒரு கோவில் வாசலில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, பூ விற்றுக்கொண்திருந்தாள், பார்த்ததும் நெஞ்சே வெடித்த மாதிரி வலித்தது  மதுரா! சின்ன வயதிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளைஅவள் வீட்டில் எவ்வளவு செல்லமாய் வளர்ந்த பிள்ளை, கஷ்டப்படுறதை பார்த்துவிட்டு  எப்படி அப்படியே விட்டுவருவேன்ரோசக்காரி வரமாட்டேன் என்று அடம்பிடிக்க தான் செய்தாள்  நான் தான்  கட்டாயப்படுத்தி கூப்பிட்டு  வந்தேன், இன்னும்   அவள் வீட்டில் யாருக்கும்  கோபம்  குறையவில்லை…  அதனால் தான் என்னுடனே நம் வீட்டில் வைத்துக்கொண்டேன், அந்த பெண் பூமதி  இறந்தபின் கல்யாணத்தை  பற்றி பேசுகின்றேன் என்று நீயும் கோபித்துக்கொண்டு  இந்தப்பக்கம் வருவதே இல்லை.. ஒண்டிக்கட்டை எனக்கு இந்த   வாண்டுபையன் தான் துணைஎன்று சுருக்கமாய்  பவாணி கதையை கூறிவிட்டு.. மடியில் சிரித்தபடி அமர்ந்திருந்த பவாணி குழந்தை பார்த்திபன் கன்னத்தில் முத்தமிட்டவர்,” இதைப்பற்றி ஏன்மா  எனக்கு சொல்லவில்லை,” என்று  கோபத்துடன் வினவிட.. சொல்கின்ற நிலையில்  நீ எங்கு இருந்தாய்! அந்தப் பெண் இறந்ததிலிருந்து நீதான் நீயாகவே இல்லையே! எதையாவது பேசத்துவங்கினால் உடனே  போனை  வைத்துவிடுவாய், இரண்டு மூன்று முறை சொல்ல முயன்று பார்த்தேன் முடியவில்லை, இவளை  வீட்டிற்கு அழைத்து வந்த செய்தி சொல்லலாம் என்று நினைத்தபோது, மாமாவே கவலையில் இருக்கிறார், இதில் என் கஷ்டத்தை வேறு சொல்லி இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாமென்று பவாணி தான் தடுத்துவிட்டாள்சரி நடந்தது நடந்துவிட்டதுஇனி நடக்க இருப்பதை யோசிப்போம், என் கவலையெல்லாம்  என் கடைசி காலம் முடிவதற்குள் நான்  வளர்ந்த பிள்ளைகளுக்கு! என்று மீனாட்சி எதையோ சொல்லத்துவங்கஅதை எதையும் காதில் வாங்காமல் பவாணி அனுபவித்த கஷ்டங்களை எண்ணி  கனத்த மனதுடன் எழுந்து சென்றான் மதுரன். 

எதுவும் பேசாமல் அமைதியாய் எழுந்து சென்ற மகனின் மௌனம் வாட்டினாலும், தன்  மனதின் ஆசையை கூறி எப்படியாவது  சம்மதிக்க வைத்துவிடவேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டார் மீனாட்சி.

குறைவில்லா செல்வம்குவிந்த  வீட்டில் வரிசாய் பிறந்து, செல்வசெழிப்பில் வளர்ந்த பெண், தான் சாப்பிட தட்டை கூட நகர்த்தி வைத்து பழகமில்லாதவள், இன்று வீட்டின்  எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு முகம் சுளிக்காமல்   செய்வதும், எப்போதும் எதையாவது பேசி கலகலத்துக் கொண்டிருப்பவள் இப்போது பேசவே யோசிப்பதை கண்டு  மதுரன்  கொஞ்சம் வியந்தும்  நிறைய கவலையும் கொண்டான். பாவணியின் குழந்தை பார்த்திப்பனும் மீனாட்சியை ஒட்டிக்கொண்டே அலைந்தான். எப்போதும்  பாட்டிமா என்று பின் தொடரும்  பார்த்திபனை மீனாட்சியும் அரவணைத்துக் கொண்டார்.

பழைய எண்ணங்கள் மனதில் படம் போல  ஓடிட..  சிந்தனையை அதன் போக்கில் விட்டுகண்மூடி அமர்ந்தான் மதுரன்.  அப்போதெல்லாம் பவாணி அதிகம் இருப்பது மீனாட்சி வீட்டில்தான் சிறுவயதில் ஒன்றாய் ஓடியாடிய  குழந்தை பருவத்தில் பவாணி மதுரனை சீண்டாத நாள் இல்லை..  மதுரனும் கோபம் கொள்ளாமல் பவாணி  சீண்டலுக்கு சிரித்த முகமாகவே பதிலடி கொடுப்பான்., விடுமுறை நாட்களில் வரும் போதும்  இதுதான்  நிகழும்.. பூமதியுடன் காதல்  மலர்ந்து திருமணம் முடிவாவதற்கு சில மாதங்கள் முன் ஊருக்குள்  வந்தவனுக்கு தன் பள்ளிப்பருவத்து  நண்பன்  சராதியுடன்  பாவாணிக்கு உண்டான காதல் கதை தெரியவந்தது, சாரதி  பள்ளியில் படிக்கும்போதே,   தன் கனவாக இராணுவத்தில் சேருவதென்று தான் சொல்லித்  திரிவான், அவன் ஆசைப்படியேயே ராணுவத்திலும் சேர்ந்தான், ஒருமுறை விடுமுறையில் வந்த மதுரன்கோவில்  குளதங்கரையில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை கவனித்து விசாரித்திட இருவரும்  தங்களின் காதலை ஒத்துக்கொண்டனர்ஆனால் இருவரின் வீட்டிலும் இந்தக் கதை தெரிந்திட, பாவணி வீட்டில் ஒரேடியாக மறுத்தவிட்டனர் சாரதி வீட்டில் பெரிய இடம் என்று யோசிக்கின்றனர் என்று இருவரும் தங்கள் நிலை கூறி கலங்கி நின்றிட.. மதுரன் தான் உங்கள் காதல் உண்மையென்றால் ஒருவர் இல்லாமல் மற்றொருவரால் வாழ முடியாதென்றால், ஊரைவிட்டு  போய்விடுங்கள்  என்று யோசனை சொன்னான், முதலில் இருவரும் பயந்து மிரண்டு முடியாது என்று மறுத்தனர், அதன் பின் உங்கள்  இஷ்டம்  என்று மதுரனும் தன் வேலையை பார்த்து ஊருக்கு கிளம்பி வந்துவிட்டான்அதன் பிறகு சிறுது காலம் கடந்து வீட்டில் பவாணிக்கு கல்யாண ஏற்பாடு நடந்திட..  தன் காதலனுடன் சென்றுவிட்டாள், என்ற செய்தி மீனாட்சி மூலம் கிடைத்தது, இப்போதாவது நான் சொன்ன  யோசனை கேட்டு நடக்க தோன்றியதே, எங்கிருந்தாலும் வாழ்க என்று அதன் பிறகு  அதைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ள முயன்றதில்லை  அவன் சூழல் அதற்கு இடம் தரவுமில்லை.

இரவு உணவிற்கு வேண்டியதை மீனாட்சி எடுத்துவைத்து பரிமாறிட..   மனதில் சில சிந்தனைகளை அலசிக்கொண்டு தட்டில் இருக்கும் உணவை அளந்து கொண்டிருந்தான்  மதுரன், இன்று ஒருநாள் பழகத்திலேயே மதுரனிடம் ஒட்டிக்கொண்ட பார்த்திபன்.. மீனாட்சி  மடியில் இருந்து மதுரன் மடிக்கு தாவி, அவன் தட்டிலிருந்த உணவை எடுத்து  உண்ணத் துவங்கினான்.   மீனாட்சி இதை ஒரு வித மனநிறைவுடன்  கவனிக்க, அடுப்படியிலிருந்து வேகமாய் வந்த பவாணி மதுரன் மடியிலிருந்து பார்த்திபனை எழுப்பிட முயல, “விடு பவி சின்ன குழந்தை அவனுக்கு என்ன தெரியும்! இன்று என் பார்த்து குட்டி என்னுடன் தான்  சாப்பிடப் போகின்றான்என்று ஒரு வாய் எடுத்து ஊட்டிட, தன்னை இழுக்க வந்த தாயை மிரட்சியுடன் பார்த்தான் பார்த்திபன். 

குனிந்த தலை நிமிராது நின்றவள், “அவனுக்கு தனியா எடுத்து வைத்திருக்கின்றேன் மாமாநான் ஊட்டினால் தான் சாப்பிடுவான்!என்று மழுப்பலாய் பதில் தந்து மகனை மீண்டும்  அழைத்திட கைநீட்டினாள், பவாணி, இன்னைக்கு நான் ஊட்டினாலும் சாப்பிடுவான்,” என்று குழந்தை வாய் அருகில் கொண்டு சென்றவன், மீண்டும் குழந்தை  தாய் முகம் நோக்கிட.. வாங்கிக்கோ ராஜா, சித்தப்பா தான் ஆசையா கொடுக்கிறார் இல்லையாஎன்றார் மீனாட்சி. 

உன் அம்மாவை  பார்த்து  பயப்படாதே பார்த்தி, உன்னை  நான் இருக்கின்றேன், சின்ன  வயசுல உன் அம்மா இந்த  சித்தப்பாவை பார்த்தாலே  பயந்து  ஓடுவா  தெரியுமா? உன் சித்தப்பா சூப்பர் ஹீரோ டா..என்று சொல்லிக்கொண்டே ஊட்டிவிட.. தன் அம்மா  பயந்த கதை கேட்டு அரிசிப்பல் தெரிய சிரித்து அடுத்த  வாய்க்கு ஆகாட்டினான் பார்த்திபன். 

“நடப்பதை தடுக்க முடியாமல் அதற்கு மேல் அங்கு நிற்கவும் மனமில்லாமல் விலகிச் சென்றவளை யோசனையாய் பார்த்த மதுரன்,  “பவி ரொம்பவே மாறிட்டா அம்மா! என்று கண்ணில் கவலையுடன் பேசிட.. “அவள் வாழ்வதே இந்த குழந்தைக்காக தான் மதுரா.. இவன் மட்டும் இல்லையென்றால்  ஊரை விட்டு போன அன்றைக்கே உயிரை விட்டிருப்பாள் என்று வேதனையுடன் கூறிட.. சாப்பாட்டை பாதியில் முடித்துக்கொண்டு எழுந்தவன்   குழந்தையை மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு வீட்டின் பின் பக்கம் சென்று மீண்டும் யோசனையில் மூழ்கினான்.

மகன் முகத்திலிருந்த யோசனை உறுத்த..  மதுரனை பின் தொடர்ந்து வந்த மீனாட்சி.. “ மதுரா நான் உன்னிடம் ஒரு  விஷயம் பேசவேண்டும் என்றிட.. “நானும் உங்களிடம்  ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் அம்மா, அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியவில்லை என்றவன், மீனாட்சியை தேடிவந்த பார்த்திபனை தூக்கி தன் தோள்களில் வைத்துக்கொண்டு, “நான் ஒரு முடிவு எடுத்திருக்கின்றேன் அம்மா அதற்கு உங்கள் சம்மதம், வேண்டும் என்றவன், தாய் முகம் குழப்பத்தில் இருப்பதை கவனித்து அவரை அதிகம் யோசிக்கவிடாமல் “நான்  இந்த குட்டிப்பையனுக்கு ஒரு நல்ல அப்பாவாக இருக்க விரும்புகின்றேன்  என்று இதுவரை செய்த யோசனையில் உண்டான முடிவினை பட்டென்று போட்டுடைத்தான் மதுரன். 

“மதுரா! என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்து மீனாட்சி அழைத்திட, “என் கல்யாணத்தைப் பற்றி  என்னனவோ கனவுகள் உங்கள் மனதில் இருந்திருக்கும், இருந்தும் என் விருப்பத்திற்காக எல்லா விசயத்திலும்  விட்டுக்கொடுத்தீர்கள், இப்போதும் முதலில் உங்கள் விருப்பத்திற்கு ஒத்துக்கொண்டு திரும்பவும் வேறுவழியின்றி என் எண்ணத்தை உங்கள் மீது திணிக்கின்றேன் என்று எண்ணும்போது வருத்தமாய் தான் இருக்கிறது, ஆனால் இது நன்றாக யோசித்து எடுத்த முடிவுதான் அம்மா, இதில் எந்தவிதமாற்றமும் இல்லை,   பவி மீது எனக்கு அன்பும் அவள் வாழ்கையில் அக்கறையும் இருப்பதால் நிச்சயம் இந்த முடிவு எங்கள் மூவர் வாழ்க்கைக்கும் புது ஆரம்பமாய் இருக்கும் என்று நம்புகின்றேன் என்று தன் எண்ணத்தை தெளிவுபடுத்தினான் மதுரன்.

தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்தபடி,  சம்மதத்தின் வெளிப்பாடாய் மதுரன் தலையை ஆதராவாய் வருடி “எனக்கு நீ வேறு பவானி வேறுயில்லை,  நீங்கள் சின்னப்பிள்ளையாய் இருக்கும்போதே என் ஆசை இதுதான் மதுரா! ஆனால் வளர்ந்ததும் உங்கள் விருப்பம் வேறாய்ப்போனது, பவாணியை என்னறைக்கு நம் வீட்டுக்கு அழைத்து   வந்தேனோ அன்றிலிருந்து என் எண்ணம் இதுதான், உங்கள் இருவரையும் எப்படி சம்மதிக்கவைப்பதுதான் என் பெரும் கவலையே, உங்கள் சந்தோசம்தான் எனக்கு முக்கியம்.. “ என்று தன் விருப்பதை வெளிப்படையாக மகிழ்ந்தபடி கூறினார் மீனாட்சி.

“என்னை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று எனக்கு தெரியும் அம்மா.. பவியிடம் இது பற்றி நானே பேசுகின்றேன் என்று உறுதியும் தந்தான் மதுரன்.

“தீபன் என்று அழைத்த பவாணி குரல் சற்று நடுங்கியது போல இருக்க… இங்கு நடந்த பேச்சுவார்த்தையை அவள் கேட்டிருப்பாள் என்று மற்றவர்களால் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது, குழந்தை  இறங்கி தாயைத் தேடி ஓடிட… “யாரும் எங்கள் மீது இரக்கப்பட்டு வாழ்க்கை பிச்சை போடவேண்டாம், யாருக்கும் பாரமாய் இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை,என்று நடுங்கும் குரலில் பவாணி பேசிக்கொண்டே போக, அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கி மீனாட்சி கையில் கொடுத்தவன், “ நான் கொஞ்சம் பவியுடன் தனியாக பேசவேண்டும் அம்மா, நீங்கள் குழந்தையை உள்ளே அழைத்து செல்லுங்கள் என்றான் மதுரன்.

“எந்த விளக்கமும் எனக்கு தேவையில்லை என்று பவாணி உட்புறம் திரும்பிட, அவள் வழிமறித்து நின்றவன், “என் விளக்கம் நம் வாழ்க்கைக்கு நல்லது எனும் போது அதை கொஞ்சம் காது கொடுத்து கேட்பதில் தப்பில்லை, நீங்கள்  போங்கள் அம்மா என்று மீனாட்சிக்கு மட்டும் வழிவிட்டு நகர்ந்தவன், அவர் விலகி சென்றதும்  பிடிவாதமாய் நின்ற பவாணி கரம் பற்றி தன்னுடன் அழைத்து சென்று பொறுமையாய் என் முடிவின் காரணத்தை விளக்கத் துவங்கினான் மதுரன்.

“உன் மீது இரக்கப்பட்டோ, இல்லை உனக்கு வாழ்க்கை தருவதால் கிடைக்கும் வள்ளல் என்று பெயருக்கு ஆசைப்பட்டோ இந்த முடிவை எடுக்கவில்லை பவி,  கல்யாணம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில்தான் இங்கு வந்தேன், ஆனால் உன்னை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவு முழுமனதுடன் எடுத்தேன், அதற்கு முதல் காரணம் நீயும் என்னைப்போல் காதலை இழந்து வேதனையில் தவிப்பவள்… நான் என் மதியை இழந்து வாழும் வலியை உன்னைவிட வேறுயாரும்  புரிந்துகொள்ளமுடியாது, என்றவனை அவன் எண்ணம் புரிந்ததுபோல பார்த்த பவாணி கண்களை உடுருவிப் பார்த்தவன், அவள் எண்ணத்தில் ஓடிய வார்த்தையை சரியாக படித்ததுபோல பதில் சொல்லத்துவங்கினான்,  “நீ நினைப்பது சரிதான் பவி இந்த முடிவு கொஞ்சம் என் சுயநலத்திற்காக எடுத்ததுதான், உன்னுடன் முடிவாகும் இந்த திருமணத்தில் நாம்  கல்யாணபந்தத்தில் இணையவேண்டிய கட்டயாமில்லை, நம் மனம் மாறும்வரை நீ நீயாகவும் நான் நானகவும் இருக்கலாம்’” என்று மதுரன் விளக்கம் கொடுக்க, “நீங்கள் எப்போதிருந்து இப்படி சுயநலமாய் மாறினீர்கள் மாமா.. எனக்கு தெரிந்த என் மதுரன் மாமா எதையும் சுயநலமாய் யோசிக்கமாட்டார், அடுத்தவர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க தெரிந்தவர் என்று ஏமாற்றத்துடன்  கூறினாள் பவாணி.

மெலிதாய் மலர்ந்த இதழ்கள் மீண்டும் வாடிட.. “என் நாட்டை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த   இராணுவவீரனின் குடும்பத்தின் மேல் இருக்கும் அக்கறையும் இந்த முடிவிற்கு ஒரு காரணம், சுயநலம் பாராது நாட்டுக்காக வாழ்ந்தவன் குடும்பம்  இன்று யாருமற்று நிற்கும்போது எதுவும் செய்யாமல் விலகிப்போவதுதான்  சுயநலம் என்று நான் நினைக்கின்றேன், எந்த விதத்திலும் நான் உன்னைக் காட்டாயப்படுத்தப் போவதில்லை,  எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நம் பார்த்திபன் எதிர்காலத்தை பற்றி ஒருமுறை யோசித்துக்கொள், அவனுக்கு என்னால்  இயன்றயளவு நல்ல அப்பாவாக இருக்க முயற்சிசெய்வேன், ஒன்றை மறவாதே பவி உனக்கு கணவனாய் இருக்க உரிமை கேட்கவில்லை, உன் குழந்தைக்கு அப்பாவாக இருந்துகொள்கின்றேன்  என்று தான் உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று மதுரன் கூறிமுடிக்கும் முன், கண்ணீரில் கரைந்திடத் துவங்கினாள் பவாணி.

குழந்தையை உறங்கவைத்துவிட்டு வந்த மீனாட்சி பவாணி  அழுவதைக்கண்டு, ஆதரவாய் அவள் கரம் பற்றி கண்ணீரை துடைத்துவிட்டபடி, “என் மகனை கல்யாணம் பண்ணிக்கொள்மா, அவன் உன்னையும் உன் பிள்ளையையும் நன்றாக பார்த்துக்கொள்வான்  என்றார்.

“என்ன அத்தை நீங்களும்  இப்படி பேசுகின்றீர்கள், ஒரு பெண் கணவனை இழந்து தனியாய்  குழந்தையை நல்ல விதமாய் வளர்க்க முடியாதா என்ன? மாமா இறக்கும்போது உங்களுக்கு என்ன வயது, மதுரன் மாமாவை தனியாகத்தானே வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டுவந்தீர்கள், நீங்கள் என்னை பார்க்கும்வரை நானும் என் மகனை  நல்லபடியாகத்தான் வளர்த்தேன், இனிமேலும் இப்படியே தனியாக என்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது அத்தை என்று தன் மறுப்பை வலுவாக கூறமுயன்றாள் பவாணி,  

“கொஞ்ச வயதில் கணவனை இழந்து கையில் கைக்குழந்தையுடன் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும், அந்த வேதனையும் வலியையும் நீயும் அனுபவிக்ககூடாது என்ற எண்ணத்தில்தான் இதை சொல்கின்றேன், எங்கள் காலம் வேறு பவாணி,   இப்போது கணவன் உயிருடன் இருக்கும்போதே மனம் ஒத்துபோகவில்லை என்று விவாகரத்து செய்துவிட்டு வேறு கல்யாணம் செய்துகொள்கின்றார்கள், நீ இல்லாத கணவனுக்காக உன் வாழ்க்கையுடன் உன் குழந்தை வாழ்க்கையையும் சேர்த்து பலிகொடுகின்றேன் என்கின்றாய் என்று கூறிட.. மீண்டும் குழப்பத்தில் கலங்கிடத்துவங்கினாள் பவாணி, “உனக்கு விருப்பம் இல்லையென்றால்  ஒன்றும் பிரச்சனை இல்லைமா.. என் கடைசி காலம்வரை உன்னையும் உன் குழந்தையையும் பத்திரமாய் பார்த்துக்கொள்வேன், என் காலத்துக்கு பிறகு உனக்கு நல்ல வாழ்கை வேண்டும் என்பதுதான் என் கவலை என்று மகளாய் பாசம் காட்டிய பெண் கண்ணீரில் தானும் கலங்கியபடி கூறினார் மீனாட்சி.  

“தயவுசெய்து அழாதே பவி,  கல்யாணம் செய்துகொள் என்று உன்னை கட்டாயப்படுத்துவது மாதிரி குற்றவுணர்வில் மனம் வலிக்கிறது, கல்யாணம் செய்தால்தான்  உங்களுக்கு துணையாய் இருப்பேன் என்றில்லை, நம் உறவு கல்யாணத்தில் இணையவில்லை என்றாலும் என்றும் உனக்கு நண்பனாய் மாமனாய், பார்த்திபனுக்கு அப்…  நலம்விரும்பியாய் செய்யவேண்டியதை சரியாக செய்வேன், அது என் கடமை என்றவன் ஒருநொடி தயங்கி, “காலம் முழுவதும் என் மதியின் நினைவுபோதும் என்று வாழ்ந்திட நினைத்தேன்,  தீர்மானமாய் இருந்த என் முடிவில் உங்களை பார்த்தபிறகு சிறு மாற்றம் உருவானது, மதி நினைவுகள் என் மனதோடு இருந்தாலும் இனி நான் வாழப்போகும் வாழ்கை உங்கள் நலனுக்கு மட்டும்தான், அது கணவனாக  இருந்துதான் செய்திட வேண்டுமென்று இல்லை, நல்ல நண்பனாகவும் என்னால் அதை செய்திடமுடியும், நீ உன்னை வருத்திக்கொள்ளதே என்று அவ்விடம் விட்டு விலகிச் சென்றான் மதுரன்.

  மதுரன் தீர்மானம் மனதிற்கு மகிழ்ச்சியை தந்தாலும், பவாணி பிடிவாதம் எண்ணி கலங்கியிருந்த மீனாட்சி, “ இந்த ஊரில் ஏன் நம் சொந்தபந்தமே உன்னை எப்படி பார்க்கிறது என்று நான் சொல்லி உனக்கு தெரியவேண்டியது இல்லை, உன் பிள்ளை வளர்த்து வரும் போதும் இதே நிலைமைதான் நீடிக்கும், நீ தாண்டிவந்த வேதனையை உன் மகனும் தாங்கிக்கொள்ள வேண்டுமென்று நினைகின்றாயா? இந்த ஊரை விடு இந்த உலகத்தில் நீ எங்கு சென்றாலும்  இந்த நிலைமை தான் நீடிக்கும் என்று அறிவுரை வழங்கிவிட்டு எழுந்து சென்றார் மீனாட்சி.

அறையில் மகன் அருகில் வந்து படுத்துகொண்டவள் பால்மணம் மாறாத மழலை முகம் உறக்கத்தில் மலர்ந்திட அவன் தலைமுடி கோதி  நெற்றியில் முத்தமிட்டபோது.. இதுவரை யாரிடமும் பகிர்ந்திடாமல் நெஞ்சுக்குள் புதைத்துவைத்த பழைய நினைவுகள் நெஞ்சில் எழுந்திட, கண்ணீர்விடத்துவங்கினாள்,  வீட்டில் திருமண ஏற்பாடு நடக்க தனக்கு விருப்பமில்லை என்று சொன்ன பிறகும் கட்டாயப்படுத்திய பெற்றோரின் வசைமொழிகளை பெற்றுக்கொண்டு, தன் மனம் விரும்பிய சாரதியுடன் ஊரைவிட்டே சென்று திருமணம் செய்துகொண்டாள், திருமணம் முடிந்த கையோடு ஊருக்குள் நுழைந்தவளை அவமானப்படுத்தி ஊரைவிட்டே  துரத்தினர் உறவினர்கள், சாரதியின் பெற்றோருக்கு மகன் முடிவில் விருப்பமில்லை என்றாலும் ஒரே மகன் என்று கொஞ்சம் வளைந்துகொடுத்து ஊராருடன் பேசி ஒருமுடிவுக்கு வந்து அதன்பின் இருவரையும் ஏற்றனர், அவர்கள் பாசம் எல்லாம் சாரதி இருக்கும் வரைதான் விடுமுறை முடிந்து சாரதி இராணுவத்திற்கு சென்றபிறகு அவர்களின் சுயரூபத்தை காட்டத்துவங்கினர், கடும் சொற்கள் சுடும் மொழிகள் தினம் அவள் கேட்கும்  சுப்பரபாதம் ஆனது, வீட்டின் வேலைகள் அனைத்தும் பவாணியின் பொறுப்பானது, எந்த காதலுக்காக இதை எல்லாம் தாங்கிக்கொண்டாளோ அந்த காதலே ஒருநாள் இல்லாமல் போக, இனியும் உன் சுமையை எங்களால் ஏற்கமுடியாது, நீ இங்கிருக்க வேண்டுமென்றால் நீ உன் அப்பாவிடம் சென்று உன் பங்கு சொத்தை பிரித்துவாங்கிவா.. என்று கொடுமை செய்திடத்துவங்கினர். தான் அனுபவிக்கும் வேதனை எல்லாம் பெற்றோருக்கு செய்த துரோகம் என்று தன் தவறு உணர்ந்து மன்னிப்பு வேண்டிவந்தவளை, வாசலைக்கூட மிதிக்கவிடாமல் துரத்தியடித்தனர் பெற்றோர்கள்,  பெற்றோர் கைவிட, உறவு விரட்டிட, ஊர் மக்கள் துரத்திட இருக்க இடமின்றி காதலின் கரு தன்னுள் வளர்ந்ததும் தெரியாது கால்போன போக்கில் சென்றவள், சில நல்ல உள்ளங்களால் ஆதரவற்ற இல்லத்தில் அடைக்கலமானாள், ஆதரவு தேடிச் சென்ற கருணை இல்லத்தில் யாருமில்லாமல் தனித்துவிடப்பட்ட அனைவரும் ஒன்றே, நிறைமாதம் வரை உண்ணும் உணவிற்கு வேலை செய்துவந்தாள், குழந்தை வளர்ந்திட அதற்கு போதுமான உணவு கிடைக்காமல் இன்னல் அனுபவித்தாள், மகன் பசியென்று அழுதிடும் பொழுது அதன் பசி போக்க வழியறியாமல் வேதனையில் துவண்டவள், சிலரின் ஆலோசனைப்படி ஆசிரமம்விட்டு வெளியேறி தனக்கு தெரிந்த சிறு சிறு வேலைகள் செய்து அதில் கிடைக்கும் சொற்பவருமானத்தில் குழந்தை வயிற்றை  மட்டும் நிறைத்துவிட்டு பாதிநாள் பட்டினிகிடந்தாள், அந்த நேரத்தில்தான் மீனாட்சியை பார்த்தது, என்று தன் வாழ்வில் இருண்ட காலத்தை எண்ணி அப்படியே உறங்கிப்போனாள் பவாணி.

நடுஇரவு கனவு கண்டு உறக்கம் கலைந்து எழுந்தவள், தன் கனவில் கண்ட காட்சியை கற்பனைசெய்து கலங்கிப்போனாள், இன்னும் இங்கிருந்தால் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்துவார்களோ  என்ற பயதில் யாரிடமும் சொல்லாமல் குழந்தையுடன் வீட்டைவிட்டு அவசரமாய் வெளியேறியவள் மீது ஏதோ வந்து மோதிட அந்த இடத்திலேயே இறந்துபோகின்றாள், யாருமின்றி ஆதரவற்று குழந்தை தனியாய் தவிப்பது போல முடிந்தது அந்த கனவு.

கனவு கொடுத்த அச்சத்தை எண்ணி  உறக்கத்திலிருந்த மகனை அள்ளியெடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டவள், “இல்லை உனக்கு அந்தநிலை நேரவிடமாட்டேன் தீபன், நான் இருக்கின்றேனோ இல்லையோ  உனக்காக ஒரு உறவை ஏற்படுத்திக்கொடுப்பேன் என்று பிதற்றிட துவங்கினாள் பவாணி, அதன் பின் சிறுதும் உறக்கமின்றி  அன்றைய இரவை கடந்தாள்.  

மறுநாள் காலை விடிந்ததும் வீட்டின் பின் பக்கம் சென்றவள், அங்கு தனக்கு முன்பே  உறக்கமின்றி அலைந்துகொண்டிருந்த மதுரனை நெருங்கி தயக்கத்துடன்.. “என்ன முடிவு எடுப்பதென்று குழப்பமாய் இருக்கிறது,  என் மகனுக்காக நான் கொண்ட காதலை பொய்யாக்க வேண்டுமா? என்று என் மனம் என்னை குடைகின்றது  என்றிட… “என்னை கல்யாணம் செய்துகொள்வதால் உன் காதலுக்கு துரோகம் செய்வதாய் ஏன் நினைகின்றாய் பவி, நானும் உன்னைப்போல வேறுதிருமணம் செய்துகொண்டால் அது என் காதலுக்கும்.. காதலிக்கும்..  செய்யும் துரோகமாகத்தான் நினைத்து இத்தனை நாட்கள் தனியாய் வாழ்ந்திருந்தேன், நம்மை நம்பி நம்முடன் வாழ்பவர்களுக்கு செய்வதுதான் துரோகம்… இந்த உலகத்தில் இல்லாதவர்களுக்கு செய்வது துரோகமில்லை,    உண்மையில் காதல் மனது மற்றவர் கஷ்டத்தில் சந்தோசப்படாது, நீங்கள் இருவரும் இப்படி கஷ்டபடுவதை பார்க்கும்போது சாரதி ஆத்மாவும் கவலைதான் கொள்ளும் என் பூமதிபோல, நீ எடுக்கும் நல்லமுடிவு அவனுக்கு நிம்மதியைதான் தரும் என்றவன்..  பவாணி புரியாமல் விழிக்க.. “அது உனக்கு புரியாது பவி,   அன்பு அது தானாய் படர்வது, கட்டாயப்படுத்தி வருவது அல்ல, உனக்கு  என் நலனில் அக்கறை இருக்கிறது, எனக்கு உங்கள் மீது அக்கறை இருக்கிறது, இப்போதைக்கு இதுபோதும் நமக்குள் ஒரு பந்தத்தை உருவாக்கிக்கொள்ள,  காலம் நம் காயத்தை ஆற்றி மனதை மாற்றும்போது அதன் வழியில் செல்வோம் என்று பொறுமையாய் எடுத்துக்கூறினான்  மதுரன்.

“உங்கள் மனைவியாக என்னை மாற்றிகொள்வேன் என்று என்னால்  உறுதியாக கூறமுடியாது, இது என் மகன் நலனுக்காக சுயநலமாய்  எடுக்கும் முடிவு, என்றவள் ஒரு நொடி தயங்கி, “நம் திருமணம் இந்த ஊரில் நம் உறவுகள் முன்னிலையில் நடக்கவேண்டும், என்று வேண்டுதலாய் கூறிட.. அவள் அனுபவித்த வலிகளுக்கு இதுதான் சரியான மருந்து என்று புரிந்துகொண்ட மதுரன்  சம்மதமாய் தலையசைக்க மறுநொடி அவன் முகம்கூட நிமிர்ந்துபாராது விலகிச்சென்றாள் பவாணி.

இனம் புரியா நிம்மதி மனதில் எழுந்திட, “ என் முடிவு உனக்கு சம்மதம் தானே மதி! என்று மதுரன்  வினவிட… தென்றல் காற்று மெதுவாய் அவனை தீண்டி.. விரல் கொண்டு கலைத்தது போல தலைமுடியை கலைத்து சென்றது.  தன் மனதோடு மலர்ந்த காதலியின் புதுமொழி புரிந்துகொண்ட மதுரன் மனம் நிறைந்து. 

பவாணி சம்மதம் தெரிவித்ததுதான் தாமதம், அடுத்துவந்த மூகூர்த்ததிலேயே தடபுடலாய் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, ஊருக்கே அழைப்புவிடுத்து தன் மகன் திருமணத்தை நடத்தினார்  மீனாட்சி. 

பூமதி அம்மா, அப்பா, மற்றும் மதுரனின் ஆருயிர் நண்பன் பிரபு அனைவரும் மனம் நிறைந்த மகிழ்வுடன் திருமணத்தில் கலந்துகொண்டனர், “எங்கு என் மகளை நினைத்துகொண்டே காலத்தை கடத்திவிடுவாயோ என்று கவலைப்டுக்கொண்டிருந்தேன்” என்று உண்மையான அன்புடன் கூறினார் மகேஸ்வரன். “இந்த முடிவிற்கு காரணம் உங்கள் மகள் தான் மாமா” என்று மதுரன் கூறிட.. மற்றவர்கள் புரியாமல் விழித்திட… “நான் நல்லா  இருக்கவேண்டும் என்று எனக்காக யோசிப்பவர்களில் மதியும் ஒருத்தி மாமா அதை சொன்னேன்” என்று விளக்கம் கொடுத்தான் மதுரன். 

“உண்மையில் சந்தோசமாக இருக்கிறது மது..”என்று கட்டியணைத்துக்கொண்ட நண்பனின் அன்பில் நெகிழ்ந்து போனான் மதுரன்.  

திருமணதிற்கு வந்திருந்த உறவுகள் மதுரன் பவாணி பொருத்தத்தை கண்டு  புகைந்து கொண்டனர், “இவளுக்கு வந்த வாழ்வை பாரு என்று  மற்றவர் காதுபடவே  தெளிவாக முணுமுணுத்தனர், அம்மாவிடம்  போகவேண்டும் என்று அடம்பிடித்த பார்த்திபனை தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவன்   அன்னையை தன் வாழ்வின் அங்கமாய் இணைத்துக்கொண்டான் மதுரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: