Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “மலரோடு மலர்ந்தவள்…!” – 13

மலர்…13

 

பாலாவை வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் காபி ஷாப்பிற்குள் வந்து மதுரனுக்கு எதிராக அமர்ந்தாள் பூமதி.

ஏதோ தீவிர சிந்தனையில் முகம் மலர்ந்து இருந்தவளை கூர்ந்து கவனித்த மதுரன்.. “ என்ன மதி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிகிறது வந்தவர் என்ன சொன்னார்?” என்று ஆர்வமாய் வினவினான் மதுரன். 

குறும்பாய் சிரித்து “பாலா உங்களை ரொம்ப…  நல்லவர் என்றார்!” என்று கேலிபோல்  மதி கூறிட.. “இன்னைக்கு பார்த்தவருக்கு தெரிந்த விஷயம் இரண்டு நாளைக்கு முன்னாடி பழகிய உங்களுக்கு தெரியவில்லை! என்று நினைக்கும் போது உங்கள் புத்திகூர்மையை கண்டு மெய்சிலிர்த்து போகின்றேன் மதி!” என்று  உதட்டை ஏளனமாக சுழித்து நக்கலாய் பதில் தந்தான் மதுரன். 

வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கு நிற்கும் மதுரனின் வாய்ஜாலத்தை கண்டு தனக்குள் சிலிர்த்தபடி..  “ ஒரு வார்த்தை பொறுக்காமல் பதிலுக்கு பதில் கொடுத்து வாயடைக்க வைத்துவிடுகின்றீர்கள்! உங்களுக்கு மனைவியாக வரப்போகின்ற  பெண்ணின் நிலைமையை நினைக்கும் போதுதான் பாவமாய் இருக்கின்றது, எப்படித்தான் உங்களை சமாளிக்க போகின்றார்களோ!” என்று அலுத்துக்கொண்டாள் பூமதி.

“அந்தக் கவலை உனக்கு வேண்டாம் மிஸ்.பூமதி “ என்று மதுரன் சிரிக்க.. ‘ஒருவேளை அப்பா  அவர் விருப்பத்தை மட்டும் கூறி.. மதுரன் விருப்பத்தை கேட்காமல் இருந்திருப்பாரோ இப்படி  சொல்கின்றார்’ என்று அரைநொடியில் தனக்குள் பல அனுமானங்கள் செய்து தவிக்கதுவங்கினாள் பூமதி.

தனக்கு முன்   அமர்ந்திருந்தவள் முகத்தில் உண்டான உணர்வுகளை ரசித்தபடி.. “ என் சரிபாதியுடன் வாய்ச்சண்டை போட்டு நானேன்  என் வாழ்க்கையை வீணடிக்கப் போகின்றேன் மதி, சண்டை வருவதற்கு முன்பே சமாதானக் கொடியை பறக்கவிட்டு பஞ்சாயத்தை முடித்து வைத்துவிடமாட்டேன்” என்று   ஒற்றை புருவம் ஏறியிறங்க கூறிட.. மனதிலிருந்த குழப்பம் குறைந்து மதுரன் சமதானக் கொடியின் ரகசியம் அறியும் ஆவல் வந்தது, “அது என்ன? சமாதான ரகசியம்! “ என்று ஆர்வமாய் வினவினாள் பூமதி.

அசடு வலிந்தபடி தலையை சொரிந்தவன், “அதெப்படி இப்போது சொல்லமுடியும் ,  இப்போதே என் ரகசியம் தெரிந்து நீ உஷாராகிவிட்டால், என் பிளான் வேஸ்ட் ஆகிவிடுமே!” என்றான் மதுரன்.  “என்ன?”என்று புரியாமல் பூமதி நிறுத்த.. “அதாவது நான் என்ன சொல்ல வருகின்றேனென்றால்  நாளைக்கே நமக்கு, அதாவது எனக்கு கல்யாணம் ஆகும் போது, உண்மை தெரிந்த நீங்கள் என் மனைவிடம்  போட்டுக் கொடுத்துவிட்டால் என் பிளான் பிளாப் தானே! அதை சொன்னேன்” என்று மழுப்பினான் மதுரன்.

“உங்கள் கல்யாணத்துக்கு   நான் வரவேண்டுமென்று நீங்கள் எதிர்ப்பார்கின்றீர்களா? நல்ல கதை மது?  பயபடாதீர்கள் உங்கள் ரகசியம் காக்கப்படும் இது காவல் துறையின் வாக்குறுதி! ”  என்று சற்று வற்புறுத்தலுடன் கேட்க.. விஷயம் அறியும் ஆவலில் மதுரன் பெயரை சுருக்கி  அழைத்தது பூமதி கவனிக்காமலிருக்க, தன்னவள் அழைப்பை தனக்குள் ரசித்த மதுரன், அதற்கு மேலும் மறுத்திட மனமில்லாமல் , “பெரிய சிதம்பர ரகசியமில்லை மதி, பெண்களை வசியம் செய்திடும் ஆண்களின் ஆயுதம்தான், மல்லிகைப்பூ  அல்வா!” என்று சிறு வெட்கம் கலந்த புன்னகையில் கூறினான் மதுரன்.

“இது ஒரு ரகசியம்,   இதை மறைக்க இத்தனை போராட்டமா! “ என்று அலுத்துகொண்டவள்.. “ ஆனால், நீங்கள் ஒன்றை மறந்துவிடீர்கள்! ஜீனியஸ்.. பொதுவாய் எல்லோருக்கும் ஒரே   ரசனையிருக்காது, எல்லாப் பெண்களும் மல்லிகைபூ, அல்வாவிற்கு மயங்கமாட்டார்கள்!, கொஞ்சம் முரட்டுத்தனமான பெண்களை கவர்வது அவ்வளவு சுலபம் இல்லை” என்று பூமதி ஒற்றை புருவம் உயர்த்தி  கர்வமாய் அறிவித்தாள் பூமதி.

 

“சரி, நான் ஒத்துக்கொள்கின்றேன்! எல்லாப் பெண்களும் உன்னைப் போல இல்லை.. “ என்று சற்று நிறுத்தி, பெரிய பெரிய மூச்சுகளை வெளியேற்றி தன்னை தயார்படுத்திக்கொண்ட  மதுரன், “எனக்கு சுற்றிவளைத்து பேசி பழக்கமில்லை மதி, நானே நேரடியாக கேட்டுவிடுகின்றேன், சத்தியமாய் உன்னை எப்படி இம்ப்ரெஸ் செய்து என் வழிக்கு கொண்டுவருவதென்று   தெரியவில்லை, இங்கு வந்த முதல் நாளே  உன்  திமிரான குறும்பு, கர்வம் கலந்த  பெண்மை எனக்கு பிடித்துபோனது, உன்னை பற்றி ஏதும் சொன்னால்.. சொன்னது  உன் அம்மாவாகவே  இருந்தாலும் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..  நான் வந்த அன்று மாலை உன் அப்பாவை சந்தித்த போது உன் கல்யாண விஷயத்தை எண்ணி ரொம்பவே சங்கடப்பட்டார், அவரிடம் மறைமுகமாகவே என் விருப்பத்தை தெரியப்படுத்திவிட்டேன், மிலிட்டரி ஆஃபீஸ்ர் இல்லையா? சட்டென்று  என் விருப்பத்தை புரிந்துகொண்டுவிட்டார், பிரபுவும் இது பற்றி உன்னிடம் பேசியிருப்பான், அதுசமந்தமாக பேசத்தான் நீயும் என்னைத்  தேடிவந்திருப்பாய்நாளை காலை நான் ஊருக்கு கிளம்புகின்றேன்அதற்குள் உன் முடிவு என்னவென்று பட்டென்று சொல்லிவிட்டால் நல்லது, இல்லை நிம்மதி இல்லாமல் ஊருக்கு போய் அங்கும் இதைப்பற்றி நினைத்து நினைத்தே மண்டையை உடைத்து கொண்டிருப்பேன்!” என்று எதிர்பாராத விதமாய் எல்லவற்றையும் போட்டுடைத்துவிட்டு பூமதி பதிலுக்காக, ஆவல் கலந்த அச்சத்துடன் காத்திருந்தான் மதுரன்.

 

தன் மனதில் உள்ளதை எப்படி சொல்வது என்று பூமதி யோசித்திக்கொண்டிருக்க, நேரடியாக கேட்டுவிட்டவனுக்கு என்ன பதில் சொல்வது, எப்படி சொல்வது என்று தடுமாறியவள், அது தன் குணத்திற்கு சிறிதும் பொருந்தாது  முன்னிருப்பவன் முகம் பார்த்தே மனம் படிக்கும் வித்தை கற்றவன் என்று தன் முகபாவத்தை  கவனித்து கொண்டு பில் வந்துவிட்டது பணம் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று ஷாப்விட்டு வெளியேறினாள்

 

பில்லுக்கான பணத்தை கொடுத்துவிட்டுபதில் தராமல் மௌனமாய்  வெளியேறியவளை  குழப்பமான மனநிலையுடன் பின்தொடர்ந்து சென்றவன்  வாசலில் ஒரு ஆட்டோவில்  காத்திருந்தவளைக் கண்டு  தானும் ஆட்டோவில் ஏறியமர்ந்தான், “ மதி, இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை அதை  வெளிப்படையாக சொல்லிவிடு, உன் விருப்பம்  எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், ப்ளீஸ் இப்படி அமைதியாய் மட்டும் இருக்காதே எனக்கு டென்ஷனில் தலையே வெடித்துவிடும் போலிருக்கின்றது என்று பூமதியின்  மௌனத்தை கலைக்கும் வேலையில் இறங்கினான் மதுரன்.

 

ஆட்டோகாரன்   இரண்டு முறை திரும்பி வித்தியாசமாய் பார்ப்பதை கவனித்துமதுரன் புறம் திரும்பியவள் ஒற்றைப்புறுவம் உயர்த்தி கோபமாய் முறைத்துவிட்டு மீண்டும் அமைதியானாள் பூமதி

 

அவசரப்பட்டு என்னமோ பேசி காரியத்தை கெடுத்துவிட்டேன், டேய் மது.. உன் திருவாயை திறந்து எதையும் உளறிக் கொட்டாமல் இருந்திருந்தாலாவது, அவள் அப்பா விருப்பத்திற்காக கல்யாணத்திற்கு சம்மதித்திருப்பாள், போச்சே போச்சே இந்த அழகான திமிருபுடிச்ச பொண்ணு எனக்கு இல்லை’, என்று தனக்குள் பலவிதமாய் புலம்பி தன்னையே புகழ்ந்துகொண்டிருந்தான் மதுரன்.

 

வீடு வரவும் வாசல் கதவு பூட்டியிருக்க, “ என்ன மதி, அத்தை வீட்டுக்குள்  இருந்துகொண்டே வெளியே பூட்டு போட்டு இருக்காங்கஎன்று மதுரன் புரியாமல் நிறுத்த,   தன் அன்னையை  அத்தை  என்று உரிமையாய்  அழைத்தவனை, ஏளமாய் திரும்பி பார்த்துநீங்க எப்பவுமே இப்படித்தானா  இல்லை இன்னைக்கு தான் இப்படியா? ஊரிலிருந்து வரும்போதே! பத்திரமாய் இருக்கட்டும் என்று மூளையை கழட்டி பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு வந்து விட்டீர்களா!, உள்ளே  இருந்துகொண்டே யாராவது வெளியில் பூட்டுவர்களா என்ன?, அம்மாவும் அப்பாவும் தெரிந்தவர்  வீட்டுக் கல்யாணத்துக்கு போயிருக்கிறார்கள்,” என்று பதில் கூறிக்கொண்டே தன் கையில் இருந்த மற்றொரு சாவி கொண்டு காதவைத்திறந்து உள்ளே நுழைந்தாள், மதி.

 

அப்போ வீட்டில் யாரும் இல்லை!” என்று வினவிய மதுரன் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவள்தன்  துப்பாக்கி எடுத்து துடைப்பது போல் செய்கை செய்துவிட்டு ரொம்ப நாள் யூஸ் பண்ணாமல் இருந்ததால் கொஞ்சம் தூசியாகிடுச்சு, இன்னைக்கு அதுக்கு  வேலை  வரும் வேளை வந்துவிட்டது போலஒழுங்கு மறியாதையாய் வாலை  சூருட்டிக்கொண்டு உங்கள் ரூமிற்கு போங்கள்என்று எச்சரிக்கை விடுத்து தன் அறைக்குள் சென்று மறைந்தாள் மதி

 

என்ன கேட்டுவிட்டேன் என்று இப்படி கோவில்பட்டி வீரலட்சுமி  மாதிரி விறைபாய் திரியுது இந்த ஹிட்லர் பாப்பா, பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டது ஒரு குத்தமா?   இதுக்கு போய் பார்வையாலேயே சுட்டெரித்து பத்ரகாளியாய் முறைக்கிறாள்என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டே தனது அறைக்குள் சென்று கதவை மூடித் தாழிட்டுக்கொண்டான் மதுரன்.

 

சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவசரமாய் மேல் சட்டை அணிந்தபடி வந்து கதவைத் திறந்த மதுரன் அறையின் வாசலில் வான் நீல வண்ணத்தில் புடவை அணிந்து  அதற்குப் பொருத்தமான  அணிகலன் பூண்டு  எளிமையான  ஒப்பனையுடன் எழில் ஓவியமாய் நின்றிருந்த பூமதியை கண்டு வியந்துபோனான், “ நீ நீயேதானா? இது ஒன்றும் என் கனவில்லையே மதுரா முழிச்சுக்கோ!“ என்று தன் பின்னந்தலையில் தட்டி அதிர்ச்சி விலகாமல் புலம்பினான் மதுரன்.

 

என்ன மது காதல் கண்ணைக் கட்டும் என்பார்கள் அது காதலியையே யாரென்று தெரியாமல் மூளையையும் சேர்த்து  கட்டும் என்று இப்போதுதான்   புரிகின்றது, “ என்று முத்துப் பற்கள் மின்னிட அழகாய் புன்னகை செய்தபடி வினவினாள் பூமதி

 

தன் காதுகளில் விழுந்த வார்த்தையை நம்பிடமுடியாமல், “மதி இப்போது நீ என்ன சொன்னாய்? “ என்று மீண்டும் மதுரன் வினவ.. அவன்  தலையில் ஓங்கி அடித்த மதி, “ மடையா எல்லோரும் உன்னை மாதிரியே சுற்றி வளைக்காமல் விஷயத்தை போட்டு உடைப்பார்களா என்ன? எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது மாங்கா மடையா!” என்று  தன் மனதை  கூறிய  தன் மனம் கவர்ந்தவனை இன்பத்தில் மூழ்கடித்தாள் பூமதி.

 

 பொய்க் கோபமாய்  முகம் திருப்பிகொண்டு,” இந்த பதிலை  காபி ஷாப்பில் கேட்டேனே அப்போதே சொல்வதற்கு என்ன? அருமையான காபி முழுதாய் குடிக்க முடியாமல்  போனதுஇவ்வளவு நேரம் அமைதியாய் இருந்து என் பொறுமையை சோதித்துவிட்டுபதுமையாய் வந்து நின்று அழகான முகத்தை  அப்பாவியாய் வைத்து.. பிடித்திருக்கிறது என்றால் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிடுவேனா என்ன?, இவ்வளவு நேரம்  நான் அனுபவித்த மன உளைச்சலுக்கு   நஷ்ட ஈடாய் உன் கையாலேயே ஒரு காபி போட்டு  கொடு!” என்று விரைப்பாய்  கூறினான் மதுரன்

 

சரியான சாமியார்என்று மதுரன் காது படவே கூறிவிட்டு  நகர்ந்தவள், அடுத்தஅடி எடுத்து  வைப்பதற்குள், அவள் முன் வந்து வழி மறித்து நின்ற மதுரன், “ என்ன  முணுமுணுத்தாய், சாமியாரா! உனக்கு இன்னும் இந்த மதுரனுக்குள் மறைந்திருக்கும் மன்மதன் பற்றிய ரகசியம் புரியவில்லைநான் படிக்கும் போது எத்தனை பெண்கள் பிரப்போஸ்  செய்தார்கள் தெரியுமாஉன் மாமன் காதலில் பலே கேடி, இந்த ஊரையே கட்டிக்காக்கும் உயர்அதிகாரி என்று உன்  துப்பாக்கிக்கு  மரியாதை கொடுத்து விலகியிருக்கின்றேன், இதை வைத்து நீ என்னை அம்மாஞ்சி என்று முடிவெடுக்க கூடாது, நீ உன்  துப்பாக்கிக்கு வேலை கொடுக்கமாட்டேன் என்று மட்டும் சொல்லிப் பார், இந்த அம்பிக்குள் இருக்கும் ரெமோ   துள்ளிகுதித்து வெளியே வருவான்,” என்று ஒற்றை கண்ணாடித்து மயக்கும் புன்னகை  செய்து சட்டை காலரை ஸ்டைலாக தூக்கிவிட்டான் மதுரன்.

 

யாரு நீ படிக்கும் போது மன்மதன், இந்த கதையை நான் நம்பவேண்டும், நீ இங்கு வரப்போகிறாய் என்றதும், உன் படத்தை காட்டி உன்னைப்பற்றி கதை கதையாய் அளந்தான் உன் அருமை மச்சான் பிரபு, உன் மொக்கை படத்தை என்னிடம் ஓட்டாதே!”  என்று கேலி செய்துவிட்டு, முதலில் வழியை விடு, உன் கெட்ட நேரம் என் கையால் காபி  குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றாய்விதி யாரைவிட்டதுஎன்று அலுத்துக் கொண்டபடி தன்  வழிமறித்து  நின்ற மதுரன் மார்பில்  கைவைத்து தள்ளிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள் பூமதி.

 

தன்னவள் விரல்பட்ட இடத்தை பட்டும் படாமல் தொட்டுப் பார்த்தவன், ‘  எந்த கதையை உலரியிருப்பான் இந்த மடையன், ஒருவேளை அதுவா இருக்குமோ!” என்று வேகமாய்  அவளை பின் தொடர்ந்து சென்றவன், அடுப்புமேட்டில் ஏறி அமர்ந்தபடி, “ நீ அம்மாஞ்சி என்று நினைக்கும் அளவிற்கு என்வாழ்வில் பெரிதாய் ஒன்றும் நடக்கவில்லை, மதிஎன்றான் மதுரன்.

 

எதுவுமே  நடக்காததால் தான் அம்மாஞ்சி என்கின்றேன், ஒரு பொண்ணு வந்து ப்ரொபோஸ் பண்ணுனா  ஒரு நார்மல் பெர்ஸன் என்ன செய்வான் , பிடித்தால்  ஓகே, பிடிக்கலையா நாட்ஓகே சொல்லணும், அதைவிட்டு அந்த பொண்ண உட்காரவைத்து ஒருமணிநேரம் அட்வைஸ்   கொடுத்து, காலேஜ் விட்டே துரத்திவிட்டாய் சரியான சாமியார், உன்னை பற்றி பிரபு சொல்லவும் தான், இவ்வளவு பெரிய அம்மாஞ்சி பயல நேரில்  பார்க்க வேண்டும் என்று தான்நானே அன்று நேரடியாக வந்தேன், ஆனால் பிரபு சொன்னமாதிரி நீ பெரிய  அம்மாஞ்சி இல்லை, கொஞ்சம் கேடித்தனம் கலந்த மாங்கா,” என்று காபி கலந்து கொண்டே கூறினாள் பூமதி

 

முகத்தை உர்.. என்று வைத்துக் கொண்டு, “ என்ன நானும்  வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றேன், அம்மாஞ்சி என்கின்றாய், மடையா மாங்கா, கேடி, சாமியார் என்று வாய்க்கு  வந்த பெயரையெல்லாம் எனக்கு பட்டமாய் கொடுத்துக் கொண்டே போகின்றாய், “ என்று மதுரன் கோபமாய் துவங்க, “உனக்கு  வைத்த  பெயருக்கு அர்த்தம் தெரியவேண்டும் அவ்வளவு தானே!” என்று மதுரன் சட்டை காலரை பிடித்து இழுத்து தன் அருகில் கொண்டுவந்தவள், தடுமாறுவதுபோல் அவள் மீது விழுந்திடத் துடித்தவன் மார்பில் கரம் வைத்து தடுத்து, “இந்த நடிப்பும், என்  விருப்பம், முடிவு  என்னவென்று தெளிவாய் தெரிந்து கொண்டே ஒன்றுமே தெரியாத பச்சை குழந்தை போலஉன் பதிலென்ன என்று படுத்தியெடுத்தாய் பார் அந்த திருட்டுத்தனமும்  தான் கேடித்தனம்என்று செல்லமாய்  தலையில் தட்டி அவன் சுதாரிக்கும் முன் கன்னத்தில் இதழ் ஒற்றி பிரித்தவள், “ஒரு  சின்சியர் போலீஸ் ஆஃபீஸ்ர் பப்ளிக் பிளேசில் வைத்து  என் காதலை வெளிப்படுத்த முடியுமா என்ன? அதை புரிந்து கொள்ளாமல் ஆட்டோவிலும்  திறந்த வாய்யை மூடாமல் பேசிக்கொண்டே வருகின்றாய் அது தான் மடத்தனம், இவ்வளவு அழகாய் புடவைகட்டி முன்னாடி வந்து வெட்கப்பட்டுக்கொண்டே காலம் முழுவதும் திகட்டாமல் கிடைக்கும் காதலை தருகின்றேன் என்கின்றேன், ஒரு காபி குடிக்கமுடியவில்லை என்று பீல் பண்ணுகின்றாய்அந்த தப்புக்கு தண்டனையாய்  என் கைய்யால்  வெறும் ஒரு கப்காபி வேறு, இதை சாமியார் புத்தி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வார்கள்,” என்று அடக்க முடியாமல்  சிரித்தவள், மறுநொடி மதுரனின் இதழ் சிறையில் இன்பமாய் அடைபட்டு  அடங்கிப் போனாள் பூமதி.

 

இருவரின் மோனநிலை எவ்வளவு நேரம் நீடித்தது என்று இருவரும் அறியவில்லை, கலந்து வைத்த காபி தன் சூட்டை குறைத்து குளிர்ந்து போன வரை இருவரும் விலகவில்லை,   நீடித்த காதல் முத்த யுத்தம் ஒரு முடிவிற்கு வந்த போது  இருவரும் மூச்சு விடப் போராடிக் கொண்டிருந்தனர், முகம் மறைத்து வந்து விழுந்த ஒற்றை முடியை விளக்கிவிட்டவன்

 

உன் மீது 

கொண்ட காதலை

இறக்கி வைக்கிறேன்

முத்தமாய்

உன் இதழில்…..

 

என்று காதல் மொழி பேசி  கண்ணியவள் கடைப்பார்வையில் கரைந்து கொண்டிருந்தான் மதுரன், 

 

கல்நெஞ்சக்காரியென்று

பெயரெடுத்து

கர்வமாய் 

அழைந்துகொண்டிருந்தேன்

நானடா..

உன் அளவில்லா காதலில்

கற்பூரம் போல்

கரைந்து நிற்கின்றேன் ஏனடா…

என்று தன் மாற்றத்தை வெளிப்பைடையாகவே அறிவித்தாள் பூமதி.

 

இருவரும் உலகம் மறந்து ஒருவர் விழியில் ஒருவர் கலந்திருக்க,   வாசலில் அழைப்பு மணியடித்து இருவரையும் நிகழ் உலகிற்கு அழைத்து வந்தது.

 

அவசரமாய் விலகி நின்று தன்னை சரிப்படுத்திக் கொண்டு கதவை திறந்த பூமதியை  இதுவரை கண்டிடாதது போல் அசந்து போய் பார்த்தனர் அவள் பெற்றோர்.

 

மகளின் உடையிலிருந்த மாற்றமும் முகத்தில் இருந்த நாணமும் அவள் மனதை கூறிட பெற்றோர் மனமும் இன்பத்தின் சாயல் பூசிக்கொண்டது. 

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: