Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48

48 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

இவள் அவனருகில் போனதும் “சாரா, எனக்கு பைக்ல போக புடிக்கும். அதுவும் உன்கூடன்னா ரொம்ப.. இதுலையே போலாமா? உனக்கு ஓகே வா?” என வினவ அவள் கண்கள் மட்டுமே அசைந்தது. அவனும் புன்னகையுடன் சோ ஸ்வீட். வண்டில ஏறு.. என இருவரும் கோவில் சென்றனர்.

அங்கே கோவிலில் அர்ச்சனை செய்ய பூ வாங்கியதும் அவன் என்ன நினைத்தானோ “ம்ம்.. உனக்கு பூ ரொம்ப பிடிக்கும்ல.. என்ன பூ வேணுமோ வாங்கிக்கோ..” என அவளும் சிரிப்புடன் மல்லிகை ரெட் ரோஸ் இரண்டையும் மாறி மாறி பார்த்தவள் அவனிடம் குழப்பமாக திரும்பி இதுவா அதுவா என பாவமாக வினவ அவளது செயலில் தன்னை இழந்தவன் “இரண்டுமே வெச்சுக்கோ.. இதுல என்ன இருக்கு…” என வாங்கிக்குடுக்க இரண்டையும் வைத்துக்கொண்டாள்.

“தாங்க் யூ..” என்றாள். புன்னகையுடனே வர ஆதர்ஷ் “என்ன எதுக்குன்னு சொல்லலாமே..” என்றான்.

அவள் “அதுவா.. என்னனு தெரில..காலைல இருந்து நீங்க பண்றது, என்னை சுத்தி நடக்கறது எல்லாமே இவளோ நாள் இல்லாம டிஃபரென்ட்டா இருக்கு.. ஆனா எல்லாமே எனக்கு பிடிச்சதும் கூட.. அதான் மேஜிக் மாதிரி இருக்கு… நீங்க நைட் விஷ் பண்ணது, எனக்கு பிடிச்ச கலர்ல இந்த சாரீ, எனக்கு பிடிச்சதை நீங்களே செஞ்சு ஊட்டிவிட்டது, அண்ட் அதோட அப்போதான் நினச்சேன்.. பைக்ல போனா நல்லா இருக்குமேன்னு.. வெளில வந்து பாத்தா எனக்கு பிடிச்ச RE.. நீங்க எனக்காக வெயிட் பண்றீங்க.. அதுல போலாமானு வேற கேட்டீங்களா .. எனக்கு எல்லாமே ஷாக் ஸ்வீட் சர்ப்ரைஸ்..” என

அவன் ஆச்சரியமாக பார்த்தான்.

அதனால தான் பூ வாங்கும்போது நீங்களா எனக்கு கேக்கறீங்களா? அதேமாதிரி மேஜிக் இதுலையும் நடக்குதான்னு பாத்தேன். நடந்திடிச்சு.. அதான் ரொம்ப ஹாப்பி..” என பூரிப்பில் புன்னகைக்க

ஆதர்ஷ் சிரித்துக்கொண்டே “ஷாக் ஸ்வீட் சர்ப்ரைஸ்…. அதனால தான் அப்போ அப்போ முட்டைக்கண்ண நல்லா விரிச்சு பேபி டால் மாதிரி பாக்றியே? அதுலையே தெரியுது மேடம் ஹாப்பினு..” என்று கூற அவளும் சிரித்துக்கொண்டே அவன் கை கோர்த்து சென்றாள்.

 

பின் வெளியே சுற்றிவிட்டு அவளுக்கு வேண்டும் என்பதை வாங்கி கொடுத்துவிட்டு  சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்ததும் அனைவருடனும் சேர்ந்து உண்டு முடித்து எல்லோரும்  ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டு, கிண்டல் செய்துகொண்டும் வீடே கோலாகலமாக இருந்தது. பெரியவர்கள் அனைவரும் மனநிறைவுடன் சென்று சற்று நேரம் உறங்க சென்றனர்.

மாலை அக்ஸாவின் பிறந்தநாள் என கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைவரும் அவளுக்கு ஒரு ஒரு பரிசு கொடுக்க அம்பிகா அவளிடம் வந்து வாழ்த்து கூறிவிட்டு “நேத்து ருத்திராவை பாத்துட்டு வந்தேன். பேசுனேன். இன்னைக்கு உனக்கு பொறந்தநாள்னு சொன்னதும் அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான். உனக்காக ஒரு கிப்ட் உன்கிட்ட இருந்து எடுத்ததை குடுக்க சொன்னான் என ஒரு சின்ன பாக்ஸ் தர அதை வாங்கி வைத்துகொண்டவள் “என்கிட்ட இருந்து எடுத்ததா?” என குழப்பமாக உணர சாந்தி “சரி, ஆதர்ஷ் நீ என்ன கிப்ட் குடுக்க போற?” என

வாசு, விக்ரம் “அட அண்ணி நீங்க வேற அவன் நேத்து நைட்ல இருந்து ஒரே கிப்ட்டா மட்டும் தான்  குடுத்திட்டு இருக்கான்.. வேணும்னா எப்போ முடிப்பானு கேளுங்க. என்ன அக்ஸா கரெக்ட் தானே..”

அவளும் சிரித்துவிட்டு “அது என்னமோ உண்மைதான். இன்னைக்கு அவர்கிட்ட இருந்து நிறையா சர்ப்ரைஸ், கிப்ட் எதிர்பார்த்து சிலது கிடைச்சது, எதிர்பாக்காம நிறையா கிடைச்சது.” என பெருமையாக சொல்ல அவனும் சிரித்துக்கொண்டே “சரி கடைசியா இன்னும் ஒரு கிப்ட் இருக்கு.” என்றான்.

அக்ஸா இன்னுமா என நினைத்தவள் என்னவாக இருக்கும் என யோசிக்க அறையினுள் சென்று கிட்டார் வாசிப்பது போன்ற அந்த பொம்மையை எடுத்து வந்தான். அதை பார்த்தவள் அதிர்ச்சியா ஆச்சரியமா என கூறமுடியாமல் இருக்க அவள் வீட்டினரிடம் திரும்பி “அந்த பொம்மையை பத்தி நீங்க அவர்கிட்ட சொன்னிங்களா?” என அவர்கள் இல்லை என்பது போல தலையசைக்க அவளருகே வந்தவன் அவளிடம் பொம்மையை நீட்ட அதை கைகள் நடுங்க வாங்க ஆதர்ஷ் “ஹாப்பி பர்த்டே அச்சு…” என அவள் இமைக்க மறந்து அவனையே பார்த்தாள். பின் அவன் சொடக்கிட்டு நிகழ்வுலர்க்கிற்கு கொண்டு வந்தவன் “பிடிச்சிருக்கா?” என

அவள் திக்கி திணறி “ஆ..ஆ.. ரொம்ப பிடிச்சிருக்கு..”

அவன் சிரித்துவிட்டு “இல்ல.. பிடிச்சா ஓகே…ஷாக் ஆகி நின்னையே அதனால தான்.. ”

ப்ரியா “அது வேற ஒண்ணுமில்ல அண்ணா.. அவளுக்கு அச்சுனு கூப்பிட்டா பிடிக்காது அவ வேண்டாம்னு சொல்லுவா.. அதனாலயா இருக்கும்..”

ஆதர்ஷ் “ஓ… பிடிக்காதுன்னா..” என அவன் முடிப்பதற்குள்

அக்ஸா “ஆ.. இல்லை இல்ல.. மத்தவங்கள கூப்பிட வேண்டாம்னு சொல்லுவேன். ஆனா பிடிக்காதுன்னு இல்லை… நீங்க அப்டியே கூப்பிடுங்க. ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல.” என அவள் கூற

சஞ்சு “மத்தவங்கள கூப்பிட வேண்டாம்னா பிடிக்கலன்னு தானே அர்த்தம். அதென்ன அவரு மட்டும் கூப்பிட்டா ஓகே? என வினவ

அவளுக்கே என்ன வேண்டும் என்ன நடக்கிறது என புரியாமல் குழப்பத்தில் இருக்க அவள் என்ன பதில் கூறுவாள். திருதிருவென விழிக்க ஆதர்ஷ் மெலிதாக புன்னகைத்துவிட்டு “சரி, கிப்ட் எல்லாம் ஓவர். எல்லாரும் போயி சாப்பிட்டு படுக்கலாம்.. பர்த்டே உனக்கு பிடிச்சமாதிரி தானே இருந்தது?” என அக்ஸாவிடம் கேட்க

அவள் ஆமாம் என்பது போல தலையசைத்தாள்.

பின் அனைவரும் உண்டு விட்டு படுக்க இவள் மட்டும் ஏதோ குழப்பிக்கொண்டே இருக்க மாடிக்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டே தூங்காமல் உலாவ ஆதர்ஷ் அவளிடம் வந்தவன் “என் அச்சு பாப்பு தூங்காம என்ன பண்ணுது?” என்றான்.

அவனை இமைக்காமல் பார்த்தவன் “ஆதவ், அது வந்து… எனக்கு பிடிச்சு… ஆனா ஏதோ குழப்பமா.. நான் உங்ககிட்ட கேட்க, இல்ல சொல்ல..” என திணறிக்கொண்டிருக்க

ஆதர்ஷ் அவளருகில் வந்தவன் இரு கைகளிலும் அவள் முகம் ஏந்தியவன் தன்னை நேருக்கு நேர் பார்க்க செய்தான். ” ஜஸ்ட் ரிலாக்ஸ் பேபி.. என்றவன் அவள் கண்களை மூட சொன்னவன்  அவள் காதோரம் கூந்தலை ஒதுக்கிவிட்டு என்னாச்சு உனக்கு, பிறந்தாள் அதுவுமா ஏன் இப்டி திணறிட்டு ஏதோ யோசிச்சிட்டு இருக்க? முதல நீ கூலா ரிலாக்ஸாகிட்டு என்ன வேணுமோ கேளு இல்லை சொல்லு. எதுக்கு இந்த பதட்டம்.. நான்தான் உன்கூடவே இருக்கேனே..ஏதாவது ப்ரோப்லேமா உனக்கு பிடிக்காததை ஏதாவது நடந்ததா?” என்றான்.

அவள் புன்னகையுடன் “இல்லை ஆதவ்.. இன்னைக்கு எப்போவும் இல்லாத ஒரு பிறந்தநாளா தான் அமைஞ்சது. எல்லாமே எனக்கு பிடிச்சது மட்டுமே தான் என்னை சுத்தி இருந்தது. எனக்கு கிடைச்சது. ஆனா இன்னும் ஏதோ இந்த நாள் முழுமை அடையாத மாதிரி ஒரு பீல்…” என அவள் நேராக அவனை பார்த்து கூறினள்.

அவன் “ம்ஹூம்… ஏன் அப்டி தோணுது?” என இன்னும் அவன் கை வளைவில் வைத்துகொண்டே வினவ

அக்ஸா “தெரில… நிறையா கேள்வி உள்ள இருக்கு.. பதில் தெரில..எனக்கே தெளிவா தெரியாத பல விஷயங்கள் நீங்க செஞ்சீங்க.. அது எனக்கு பிடிச்சிருக்குனு நான் முழு மனசோட ஏத்துக்கிட்டேன். இன்னும் சொல்லப்போனா ஏனோ மனசு முழுக்க ஒரு சந்தோசம் இருந்தது. ஆனா அதுவே மத்தவங்க செய்றேன்னு சொன்னாலோ, செஞ்சிருந்தாலோ நான் அத ஒரு விஷயமா எடுத்துக்கல இல்ல  அத ஏத்துக்கல. அது ஏன்னு எனக்கே புரியல. அந்த அச்சு பேர் நீங்க கூப்பிட்டது கூட.. ஏதோ எல்லாமே கனவுல நடந்த மாதிரி இருக்கு. ஏதோ நிறையா படம் பாத்து கெட்டு போய்ட்டேனு நினைக்கிறேன்.. இவளோ யோசிச்சா ட்ராமாட்டிக்கா தான் இருக்கும். ஆனா இன்னைக்கு எனக்கு கிடைச்சா எல்லா விசயமுமே ஏன் சின்ன சின்ன விஷயம் கூட ஏதோ முன் ஜென்மத்துல உங்ககிட்ட நான் கேட்ட மாதிரி தோணுது அதான் யோசிச்சிட்டு இருந்தேன்….” என அவன் அவளை இமைக்காமல் பார்க்க அக்ஸா “சாதாரணமா நடந்த எல்லாத்தையும் ரொம்ப சிங்க் பண்ணி பைத்தியம் மாதிரி உளறேனோ?” என அவள் சிரிக்க அவனும் சிரித்தான்.

இறுதியாக அவன் கண்களை பார்த்து “ஆதவ், நான் உங்க வாழ்க்கையில இப்போதான் வந்தேனா? உங்களுக்கு அந்த மாதிரி எதுவுமே தோணலையா?” என்று கேட்க

இதற்கு மேல் தாங்காது என நினைத்தவன் பெருமூச்சுடன் அவளை விட்டு விலகியவன் அவளிடம் வந்து “நீ சொல்றது நிஜம் தான். கனவு இல்ல.. முன் ஜென்மத்துல நடக்கல. இதே ஜென்மத்துல தான் இந்து குட்டி அச்சு என் வாழ்க்கைல எப்பவோ வந்துட்டா.. அந்த குட்டி அச்சுவும் சரி, இந்த வளந்த சாராவும் சரி எப்படித்தான் என்மேல இவளோ பாசத்தை காட்ராலோனு தினந்தினமும் ஆச்சரியப்பட்டுட்டு இருக்கேன். அந்த விசயத்துல இரண்டுபேருக்கும் வித்தியாசமே இல்ல.” என்றான்.

அக்ஸா “அப்போ நாம இதுக்கு முன்னாடியே மீட் பண்ணிருக்கோமா? எப்போ எப்படி எனக்கு சரியா ஞாபகமே இல்ல..” என எக்ஸைட் ஆனவள் அடுத்த நொடியே “நான் தான் உங்கள மறந்துட்டேனா? ஏன் எப்படி?” என வருத்தம் கொள்ள அதை தாங்காமல் “ஓ… என் செல்லம் ஏன் இப்டி முகம் உம்முனு ஆகுது.. யாரு சொன்னது நீ என்னை மறந்துட்டேனு…உனக்கு எல்லா கதையும் சொல்றேன் வா..” என அழைத்து சென்று அமர வைத்து அவளிடம் அனைத்தும் கூறினான்.

குலதெய்வம் கோவில் விசேஷம் என்று கொல்லிமலைக்கு அக்ஸாவை அம்பிகாவுடன் முன்னாடியே அனுப்பி வைத்தனர். வேலை இருப்பதால் கோவையில் இருந்து விசேஷம் அன்று அதிகாலை மற்ற அனைவரும் வருவதாக கூறிவிட்டனர். அம்பிகாவுக்கு பெண் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம் அதோடு குட்டியாக நல்ல அமுல் பேபி மாதிரி இருக்கும் அக்ஸாவிடம் “குட்டி பாப்பு, அத்தை கூட ஊருக்கு வரிங்களா?” என கேட்டதும் அவள் சரி சொன்னது தான் மாயம் உடனே அள்ளிக்கொண்டு வந்துவிட்டாள்.” செல்வம் வேலை என்று வரமுடியாது என முன்னாடியே கூறிவிட ருத்திராவும் எனக்கு வர இன்டெரெஸ்ட் இல்லை நான் அப்பாகூட இருக்கேன் என்று கூறிவிட அம்பிகா தான் மட்டும் தனியாக இருக்க வேண்டுமென யோசிக்க ஆதர்ஷிடம் கேட்டு அவன் வந்தா கொண்டு வந்து விட்டுட்டு போறிங்களா அண்ணா கோவில் விசேஷம், ஜாலியா இருக்கலாம் என கேட்டதும் பைரவி, மகேந்திரன் இருவரும் அவனிடம் கேட்க அவனும் ஓகே என்றான். தனியாக இருக்க என்னவோ போல் உள்ளது என அக்ஸாவின் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு அவளையும் அழைத்து வர வரும் வழியில் தான் கூறினர். ஆதர்ஷ் வருவதாக. அம்பிகாவிற்கு மேலும் சந்தோசம் கொல்லிமலையில் இவர்கள் வீட்டிற்கு செல்ல அங்கே ஏற்கனவே ருத்திரா இருந்தான். அம்பிகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்னடா ருத்திரா, அப்பா கூட தான் இருப்பேன். வரமாட்டேன்னு சொன்ன? வந்திருக்க?” என கேட்க

ருத்திரா “அப்பா ஏதோ மீட்டிங் ட்ரிப் போகணுமாம்.. என்னை கூப்பிட்டாரு.. வரலன்னு சொன்னேன் சரினு இங்க அனுப்பிச்சி வெச்சிட்டாரு.” என்றான். யூகேஜி படிக்கும் அந்த குட்டி வாண்டு நன்கு வளந்த பையனின் முன் நின்று “ஹாய், என் பேரு அட்சரா தேவி.. உங்க பேரு என்ன?” என நிற்க எதுவும் கூறாமல் அவன் செல்ல அக்ஸா “ஹல்லோ… கேக்கறேன்ல பதில் சொல்லுங்க… உங்க ஸ்கூல்ல கேள்வி கேட்டா மதிச்சு பதில் சொல்லணும்னு சொல்லிகுடுக்கலையா?” என  தன் முழங்கால் உயரம் மட்டுமே இருக்கும் அவள் தன்னிடம் சரிக்கு சரியாக நிற்க அம்பிகாவை முறைக்க அவரோ “என்ன ஏன்டா முறைக்கிற? சின்ன புள்ளன்னாலும் எவ்ளோ அழகா பேசுற, மரியாதையா கேக்குறா? நீயே பதில் சொல்லு.” என அவன் அவளை குனிந்து பார்க்க “எனக்கு உங்கள இப்டி பாத்து கழுத்து வலிக்கிது இங்க கீழ வாங்க” என முகம் சுருக்கி சொல்ல அவனுக்கு ஊரில் இருந்து ஆதர்ஷ் வருவதாக சொன்னதால் வந்த கோபத்தில் கடுகடுவென இருக்க இந்த வாண்டு வேற இம்சை பண்ணுதே என்று நினைத்தவன் மத்தபடி அவளிடம் கோபம் கொள்ள முடியாமல் அவள் கேட்டபடி அவள் முன் மண்டியிட்டு அமர “இப்போ சொல்லுங்க. உங்க நேம் என்ன?” என அக்ஸா கேட்க

அவனும் பெருமூச்சுடன் அவளிடம் “ருத்திரா..” என்றதும் அவன் தோளில் தட்டி “குட் பாய்…நீங்க எந்த ஸ்டாண்டர்ட் படிக்கிறிங்க?”

“8த், நீ?”

“நான் யூகேஜி. படிக்கிறேன்” என பெருமையாக சொல்ல உண்மையில் அதை கண்டு சிரிப்பு வர அதை அடக்கியவன் அவளிடம் “சரி, இவங்க யாரு? இவங்ககூட வந்திருக்க? அம்மா அப்பா எல்லாரும் எங்க?”

அக்ஸா “இவங்க அம்பிகா அத்தை. எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்குமே. இங்க கோவில்ல பங்க்சன் இருக்குனு சொன்னாங்க. அம்மா அப்பா பாலா மாமா நந்தா மாமா எல்லாரும் 2 டேஸ் கழிச்சு வருவாங்க. நான் அத்தைக்கூட ஜாலியா முன்னாடியே வந்துட்டேனே..” என கண்களை உருட்டி அந்த குழந்தையின் மொழியில் கதை சொல்ல அதை ரசித்தவன் “இங்க உனக்கு போர் அடிக்காதா?”

அவள் தொடர்ந்து “அத்தை கோவிலுக்கு, ஷாப்பிங், பார்க் எல்லாமே கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காங்களே… இங்க என்கூட விளையாட ஒரு மாமா வரதா அத்தை சொன்னாங்களே? நான் அவங்க கூட விளையாடுவேனே…அது யாரு? நீங்க என்கூட விளையாடுவீங்களா?.” என

ருத்திரா தான் வருவது அம்மாவுக்கு தெரியாது என்பதால் அம்பிகாவை புரியாமல் பார்க்க அவரோ அக்ஸா பேசும் அழகை ரசித்துக்கொண்டிருந்தவள் ருத்திராவிடம் “ஆதர்ஷ் வரான்ல அவனை பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன். என்றதும் அவனுக்கு கோபம் வந்தது. அக்ஸாவிடம் திரும்பி அது இந்த மாமா இல்லடா மா.. இன்னொரு மாமா வருவாங்க..” என

அக்ஸா “ஓ…அப்போ இவங்க யாரு எனக்கு?”

அம்பிகா “இவங்களும் உனக்கு மாமா தான்” என

அக்ஸா வாய் திறக்கும் முன் ருத்திரா “ம்ச்ச்… என்னை மாமா எல்லாம் கூப்பிடாத.. பேர் சொல்லியே கூப்பிடு. புரிஞ்சுதா?” என்று கத்திவிட்டு செல்ல

குட்டி அக்ஸா புரியாமல் விழிக்க அம்பிகா “டேய் உனக்கு என்னடா ஆச்சு… சின்ன புள்ளைகிட்ட போயி இப்டி கத்துற.. அவ பாரு பயந்துட்டா..” என அக்ஸா அம்பிகாவின் பின்னால் மறைந்துகொண்டாள்.

ருத்திராவிற்கு முதலில் ஆதர்ஷ் பற்றி பேச அதுவும் அக்ஸா அவனை பற்றி தான் கேட்டாள் என தெரிந்ததும் கோபத்தில் கத்திவிட்டான்.. ஆனால் அவனுக்குமே புரிந்தது சின்ன பெண். அவளுக்கு என்ன தெரியும்.. பாசமா பேச வந்தா ச்ச.. திட்டிட்டேனே..” என எண்ணியவன் பின் அறையை விட்டு வெளியே வந்தான். அவள் ஹாலில் அம்பிகா மற்றும் வேலை செய்பவர்களை சுற்றி அமர வைத்து கதை கூறிக்கொண்டு இருக்க இவனும் சிரித்துவிட்டு அங்கேயே நிற்க அவனை பார்த்ததும் “ஹாய்..” என்றவள் அவனை எப்படி கூப்பிடுவது என தெரியாமல் அப்டியே விட்டவள் “உங்களுக்கு கதை சொல்லனுமா? இங்க வந்து உட்காருங்க..” என அவனும் சிரித்துக்கொண்டே ஆனால் அவளிடம் காட்டாமல் கொஞ்சம் வம்பிழுக்க எண்ணி “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. நான் இங்கேயே உட்காந்துக்கறேன்.. கதை சொல்றதுன்னா சத்தம் வராம சொல்லணும். நான் புக் படிக்க போறேன். டிஸ்டர்ப் பண்ணக்கூடாது சரியா?” என

அவளும் சட்டென்று முகம் வாட ஆனால் வேகமாக தலை ஆட்டினாள். அம்பிகா “இவன் ஒருத்தன்.. எப்போ பாரு புள்ளைகிட்ட கடுகடுன்னு… நீ சொல்லுடா மா” என்றாள் அக்ஸா கிளுக் என சிரித்துவிட்டு ருத்திரா முறைத்ததும் கப் சுப் என்று வாயை மூடிக்கொண்டாள்.

ருத்திராவிற்கு அவளது செய்கை சிரிப்பை தூண்ட அன்று மாலை வரை அவள் அனைவரிடமும் பேச யாருடனாவது விளையாட, எதையாவது செய்ய என துறுதுறுவென சுற்றிக்கொண்டே இருந்தாள். அவ்வப்போது ருத்திராவிடம் பேச ஆனால் அவனை மாமா என்றோ பெயர் சொல்லியோ அழைக்கவேயில்லை.. ருத்திரா அதை கண்டுகொண்டவன் “இத்துனூண்டு இருந்திட்டு என்னமா ரோசம் வருது இவளுக்கு..” என்றவன் பாக்கலாம் எவளோ நேரத்துக்குன்னு” என்று அடுத்து வேலையை பார்க்க சென்றான். ஆனால் ஒன்றை செய்யாதே என்றால் செய்யமாட்டாள். உடன் விளையாடினால் நன்றாக விளையாடுவாள். ஆனால் ஏதோ பார்த்து பார்த்து அவள் தன்னுடன் இருப்பது போல உணர்ந்தான். அது பெரியவன் என்பதாலா இல்லை சில நேரம் அவளிடம் கோபம் கொள்கிறேன் என்பதாலா என்று பிரித்து பார்க்கமுடியவில்லை. ஆனால் பிறருடன் விளையாடுவது பேசுவது போல தன்னுடன் அவள் சகஜமாக இல்லை என்று அறிந்துகொண்டான். சரி சின்ன பொண்ணு தானே. வந்ததும் திட்டுனா அவளும் என்ன பண்ணுவா… கொஞ்ச நேரம் போகட்டும்.. அப்புறம் சாதாரணமா பேசிக்கலாம்.. ஆனா ரொம்ப சேட்டை பண்றாளே. வாலு..” என்றவன் அமைதியாக சென்றுவிட்டான். அனைத்தும் மாலை ஆதர்ஷ் வரும்வரை மட்டுமே..

மாலை  மகேந்திரன், ஆதர்ஷ்  இருவரும் வந்ததும் அம்பிகா சென்று அவர்களை வரவேற்றாள். மகேந்திரன் “நல்லவேளை மா, நீ இவனை இரண்டு நாள் பாத்துக்கோ. பிஸ்னஸ் மீட்டிங் வேற இருக்கு. செல்வம் சொல்லிருப்பானே.. ஆனந்த்க்கு வேற பரீட்சை இருக்கு. இவன் அங்க இருந்தா உனக்கே தெரியுமே.. எல்லாரையும் சும்மா விடுவாங்குற.. ஏதாவது கேட்டுட்டே சுத்திட்டு இருப்பான். நானும் இல்லை. சமாளிக்கிறது கஷ்டம்.. அதான் நீ கூப்பிட்டதும் கொண்டு வந்து விடலாம்னு பாத்தா சார் நோ சொல்லிட்டாரு..அப்புறம் தான் நீ குட்டி பாப்பா இருக்கு விளையாடலாம்னு சொன்னதுக்கு அப்புறம் தான் ஓகே சொன்னான்.” என அம்பிகா சிரித்துக்கொண்டே “விடுங்க அண்ணா நான் பாத்துக்கறேன். எல்லாம் சின்ன பசங்க தானே.. விளையாட செட் சேந்திட்டா போதும்…” என ஆதர்சை அழைக்க வந்தவன் ஆமா ஆண்ட்டி குட்டி பாப்பு இருக்கான்னு  சொன்னிங்களே எங்க.. நான் போயி அவளை பாக்குறேன்..” என ஆர்வமாக கேட்க தோட்டத்துல விளையாடிட்டு இருந்தா..”

அம்பிகா “அக்ஸா குட்டி யாரு வந்திருக்காங்க பாரு.. கேட்டுட்டே இருந்தியே..” என அழைக்க அவளும் ஓடிவர தடுக்கி விழுந்துவிட அனைவரும் ஹே பாத்து என ஆதர்ஷ் ஓடி சென்று மற்றவர்கள் வருவதற்குள் அவளை தூக்கிவிட்டவன் அவனை பார்த்து வாய் பிதுக்கி கையில் காலில் பட்டிருந்த சேறு காட்டி அவள் அழதயாராக “ஒண்ணுமில்ல.. நாம வாஷ் பண்ணிக்கலாம்.. நான் ஹெல்ப் பண்றேன்.. அழக்கூடாது சரியா?” என அவளும் முழித்துவிட்டு “ம்ம்…” என்று அமைதியாகினாள். அம்பிகா, மகேந்திரன் வந்தவர்கள் பார்த்து சிரித்துவிட அக்ஸா மீண்டும் ஆதர்சை பாவமாக பார்க்க அவனோ “அப்பா, பாப்பா பாவம்.. அவளை பாத்து சிரிக்காதிங்க. அப்புறம் எனக்கு கோபம் வரும்.. அவளுக்கு வாஷ் பண்ணனும்.. ஹெல்ப் பண்ணுங்க.” என கிட்டத்தட்ட மிரட்டும் தோணியில் சொல்ல சிரித்த அனைவரும் அமைதியாகிவிட “சரி, சரி ஹெல்ப் பண்றோம் வா.” என தண்ணீரை எடுத்து அவளுக்கு சுத்தம் செய்துவிட்டு மகேந்திரனும் சற்று நேரம் ஆவலுடன் இருந்து பேசிவிட்டு எப்டியோ செட் ஆகிடுச்சுங்க. இனி அதுங்க பாட்டுக்கு விளையாடும்.. என்று விட்டு அவர் கிளம்பி சென்றார். இவர்களை ஹாலில் விட்டுவிட்டு அனைவரும் வேலை பார்க்க  இருவரும் அங்கேயே சுற்றிக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

Chitrangatha – 56Chitrangatha – 56

ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. இந்த முறை சிறு இடைவெளியில் உங்களை சந்திக்க வந்துட்டேன். உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. போன பதிவுக்கு ஜிஷ்ணு மீதான  உங்களோட ஆதங்கத்தை கொட்டியிருந்திங்க. இந்தப் பதிவு அதற்கு பதில் சொல்லுமான்னு பார்க்கலாம். இனி பதிவுக்கு போகலாமா

உள்ளம் குழையுதடி கிளியே -4உள்ளம் குழையுதடி கிளியே -4

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு தந்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களைப் போல நானும் பண்டிகைக் கால வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். கிடைக்கும் இடைவேளைகளில் அப்டேட்ஸ் தந்து விடுகிறேன். இன்று ஹிமாவின் கடந்தகாலம் சரத்துக்கு மட்டுமில்லை உங்களுக்கும் சிறு ஆச்சிரியத்தைத் தரலாம்.