Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 41

 

41 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

சிறிது நேரத்தில் ஆதர்ஷ் வந்துவிட இருவரும் அமைதியாக புன்னகைக்க ஆதர்ஷ் “விக்ரம் எல்லாரும் எப்போ கிளம்புனாங்க? அமைதியா போய்ட்டானா?”

அக்சரா ” ஒரு மணி  பக்கம் இருக்கும்… அமைதியாவா? நேத்து நீங்க வந்து கூட்டிட்டு போறிங்கனு சொன்னதுல இருந்து இப்போவரைக்கும் நிறுத்தல. இதுல சஞ்சுவ வேற கிண்டல் பண்ண கூட்டு சேத்திக்கறது…”

ஆதர்ஷ் சிரிக்க “சரி எல்லாமே பாக் பண்ணிடேல்ல? நாம எப்போ கிளம்பலாம்?”

அக்சரா ” எல்லாமே ரெடி… நாம சாப்பிட்டு அப்புறம் அப்டியே கிளம்பலாம்..”

பின் இருவரும் சாப்பிடும் போது வீட்டில் அனைவரை பற்றியும், அவர்கள் கிண்டல் செய்தது பற்றியும்  பேசிக்கொண்டே உண்டு முடித்தனர். வண்டியில் போகும்போது ஆதர்ஷ் “சாரா நான் உன்னை மட்டும் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். நீ அதப்பத்தி ஏன்னு கேக்கவேயில்லை.”

அக்சரா “என்ன அங்க எல்லாரையும் நம்ம மேரேஜ் இல்லை எங்கேஜ்மெண்ட் எதாவது ரெடி பண்ண சொல்லிருப்பிங்க.. சஸ்பென்ஸ் சர்ப்ரைஸ் குடுக்க என்ன இப்டி கூட்டிட்டு போறிங்களா?”

ஆதர்ஷ் ஆச்சரியமாக பார்க்க “ஹே பிராடு இத உனக்கு யாரு சொன்னது?”

அக்சரா சிரித்துவிட்டு “உங்கள பாத்தாலே தெரியுது. இதுல வேற யாராவது வந்து சொல்லனுமா என்ன?”

ஆதர்ஷ் “அதெப்படி பாத்தா தெரியும்?”

சாரா “அது அப்டித்தான் தெரியும். எப்படினு நான் உங்களுக்கு இப்போ சொல்லமாட்டேன். எனக்கு நீங்க உண்மையாவே நான் ஆச்சரியப்படுற மாதிரி ஒரு சர்ப்ரைஸ் எப்போ குடுக்கறீங்களோ அப்போ சொல்றேன். ஆனா என் வாழ்நாள் அப்டி ஒரு சம்பவம் நடக்குமா?ம்ம்….” என அலுத்துக்கொள்ள

ஆதர்ஷ் “நான் என்ன பண்ணட்டும், நீ இவளோ என்னை புரிஞ்சிகிட்டு இருந்திருக்க வேண்டாம்.. நான் என்ன பண்ணாலும் நீ எப்படியாவது அத கெஸ் பண்ணிடற இல்லாட்டி என்கிட்ட இருந்தே விஷயத்தை வாங்கிடற.. ”

சாரா “அதையும் தாண்டி நீங்க தான் எனக்கு மறக்க முடியாத அடலீஸ்ட் அந்த நேரத்துக்கு நான் என்னை மறந்து சந்தோசப்படுற அளவுக்கு எனக்கு ஏதாவது சர்ப்ரைஸ் குடுக்கணும்.. ”

ஆதர்ஷ் “கஷ்டம் தான்.. பாக்கலாம்… எனக்கு அவ்ளோ திறமை இருக்கானு தெரில மேடம்.. பட் ட்ரை மை பெஸ்ட்..” என

இவளும் சிரித்துவிட்டு “சரி சரி மன்னிச்சுட்டேன். சொல்லுங்க இப்போ என்ன நடக்கபோகுது?”

ஆதர்ஸ் “இப்போதைக்கு ஜஸ்ட் ரிங் சேன்ஜ் பண்ணிட்டு எங்கேஜ்மெண்ட்.. மேரேஜ் நீ வந்த அப்புறம் உனக்கு புடிச்ச மாதிரி எல்லாமே கேட்டுட்டு பண்ணிக்கலாம்னு சொல்லிட்டேன்.” என

அக்சரா மெலிதான புன்னகையுடன் பூரிப்பில் திளைக்க அதை காட்டாமல்  சன்னல் புறம் திரும்ப ஆதர்ஷ் “நம்ம இஷ்டப்படி செய்யணும் பிடிச்சதை செய்யணும்னு பாக்குறானே ச்ச.. செம பா அப்டினு நீ பெருமைபடுறத எனக்கு தெரியுது.. பரவால்லை மறைக்கணும்னு அவசியம் இல்லை.”

சாரா “ஆச தான். அவ்ளோ எல்லாம் இல்லை. பரவால்லை பையன் பாத்து பொறுப்ப பண்ரானேன்னு நினச்சேன்.. சோ கொஞ்சம் கம்மியாவே சார் பெருமைபட்டுக்கலாம்.. ரொம்ப அதிகம் எல்லாம் வேண்டாம்..” என அவனும் “பெருமைய ஒத்துக்கமாட்டீங்களே?” என சிரிக்க அவளும் சிரித்தாள்.

இருவரும் சென்னை வந்து சேர்ந்ததும் ஆதர்ஷ் “சாரா, நான் வண்டியை நிறுத்திட்டு வரேன். நீ போயி அம்மாவை பாரு” என்றான்.

அக்சரா உள்ளே செல்ல அவள் இவன் அம்மாவை தேட ஹாலில் வந்தது அக்சராவின் அம்மா கனகவல்லி. ஆச்சரியமா? அதிசயமா என ஒன்றும் புரியாமல் அவள் இருக்க அவளது இரு மாமா அத்தைகளும் பாலகுமார் – பார்வதி, நந்தகுமார்-உமா, உடன் அவளது தந்தை ஆனந்தராஜ் மட்டும் கையில் பிடியுடன் இருக்க அவள் திகைப்புடன் அப்படியே சிலையென நின்றாள். ஆதர்ஷ் அவளருகில் வந்தவன் அவளை தட்டி சுயநினைவுக்கு கொண்டு வந்தவன் அவர்களிடம் செல்ல சொல்லி கை நீட்ட மகிழ்வுடன் சென்றாள். அனைவரும் தங்களின் அன்பில் திளைக்க, ஆதர்ஷ், அவர்களின் குடும்பம், வாசு, பிரியா என நண்பர்கள் உட்பட எல்லோரும் மகிழ்ந்தனர்.

அக்சரா “அம்மா, அத்தை எல்லாரும் எப்படி இருக்கீங்க? எப்படி இவளோ நாள் எங்க இருந்திங்க மாமா ?, அப்பாக்கு என்னாச்சு, ஏன் கால்ல இப்படி?  எல்லாரும் இங்க எப்படி வந்திங்க? குழந்தைங்கள பாத்திங்களா?” என அவள் ஆர்வத்தில் கேள்வி கணைகளை தொடுக்க அவளின் செயலில் அனைவரும் சிரிக்க அவளது அம்மா, “இரு இரு கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ.. நாங்க எல்லாரும் நல்லா தான் இருக்கோம். அப்பாவுக்கு ஆக்சிடெண்ட்ல  வலது கால் இப்படி அடிபட்டிருச்சு.. அதுக்கு இயற்கை வைத்தியத்துல டிரீட்மென்ட் எடுக்க சொன்னாங்க. அதுல ஓரளவுக்கு சரியாக வாய்ப்பிருக்குனு. அதனால அங்கேயே ஒரு ஹோம்ல தங்கிட்டோம்.”

அக்சரா “ஆனா ஏன் வீட்டுக்கு வரல? எங்ககிட்ட சொல்லல..” என அக்சராவின் உமா “அது… வீட்டுக்குஉன்  மாமா மட்டும் வந்து பாத்தாரு.. நீங்க அங்க இல்லை. எங்க போயிருக்கீங்கனு சரியா தெரிலேனு சொல்லிட்டாங்க போல. இவளோ நாள் சில பிரச்சனைனால  உங்களை வெளிப்படையா தேட முடியாம போயிடிச்சுடா.” என

அவள் இன்னமும் புரியாமல் விழிக்க அவளது பாலகுமார் “உனக்கு ஆரம்பத்துல இருந்து நடந்ததை சொல்றோம் வந்து உட்காரு வா.” என அழைத்து சென்று அனைத்தையும் கூறினர்.

அக்சராவின் குடும்பம் கோவிலுக்கு சென்றது, அங்கிருந்து அவளது அப்பாவின் சொந்தமான தங்கை அம்பிகாவின் வீட்டிற்க்கு சென்றது அங்கே ருத்திரா அக்சராவை பிடித்திருக்கிறது என பிரச்சனை செய்தது அங்கே நடந்த வாக்குவாதம், இறுதியில் அக்ஸாவின் மாமா ருத்திராவை அடித்தது, அம்பிகா ருத்திராவுடன்  அங்கிருந்து கிளம்பிச்சென்றதுவரை கூறினார்.

அக்சரா “அதான் அவங்க பையன கூட்டிட்டு கிளம்பிட்டாங்களே.. அப்புறம் என்ன பிரச்சனை?”

அவளது அத்தை பார்வதி ” எல்லாம் உன் மாமன்களோட  அவசரத்தால வந்தது.. அவனை கோபத்துல அடிச்சதால வந்த வினை. அம்பிகா அக்கா அவங்க பையன கூப்பிட்டு கிளம்புனதுக்கு அப்புறம் எங்களை இருந்திட்டு சாய்ங்காலம் தான் கிளம்பசொன்னாங்க. அங்க இருந்த வேலைகாரவங்க ஒருத்தர்கிட்டேயும் வாட்ச்மேன்கிட்டேயும் எங்களுக்கு வேணும்கிறதா செஞ்சுக்குடுக்க சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ஆனா அந்த வாட்ச்மேன்கிட்ட ருத்திரா போகும்போது ஏதோ பேசிட்டு போயிருக்கான். இத உங்க அப்பா மட்டும் தான் பாத்திருக்காரு. அவருக்கு ஏதோ சரியாபடல. அந்த பிரச்சனைல அண்ணிக்கு(அக்ஸாவின் அம்மா) கொஞ்சம் படபடப்பா வந்திடுச்சு. அதனால எங்களுக்கு வேற வழி இல்லை, உடனே கிளம்பமுடில  அண்ணாவும் (ஆனந்தராஜ்) எங்ககிட்ட எதையும் சொல்லி இன்னும் பயமுறுத்த வேண்டாம்னு விட்டுட்டாரு. கொஞ்ச நேரம் அவங்க வீட்ல இருந்திட்டு கிளம்பிட்டோம்.”

 

அன்று நிகழ்ந்தது :  

அனைவரும் கிளம்பி வண்டி தெருமுனை திரும்பியதும் ஆனந்தராஜ் கண்ணாடியை வீட்டுல டேபிள்ல வெச்சுட்டேன். இங்கேயே வெயிட் பண்ணுங்க எடுத்திட்டு வரேன்னுஅவரு மட்டும் மறுபடியும் செல்ல. அந்த வாட்ச்மேன் யாருக்கோ கால் செய்து அவங்க கிளம்பிட்டாங்கன்னு என வண்டி எண் முதற்கொண்டு யாருக்கோ தகவல் கூறுவதை கேட்டுவிட்டு திரும்பிவிட திரும்பி வந்து வண்டியில் ஏறியவரிடம் நந்தகுமார் என்ன மாமா அதுக்குள்ள வந்தீட்டீங்க, கண்ணாடி எடுத்தாச்சா?”

ஆனந்தராஜ் இல்லா நந்தா, பேண்ட் பாக்கெட்ல தான் வெச்சிருந்திருக்கேன் கவனிக்கல..” என அவர் ஏதோ யோசனையில் இருக்க கனகவல்லி சரி ஆகிடும்ங்க.. நீங்க எதையும் கொழப்பிக்காதீங்க. அந்த கடவுள் பாத்துப்பாருநம்ம புள்ளைக்கு எந்த பிரச்சனையும் வராது.” என்றதும்

பாலா அக்சராவிற்கு கால் செய்து பேச அனைவரும் அவளுடன் பத்திரமா இரு நாங்க நாளைக்கு வந்துடுவோம், ஜாக்கிரதை குழந்தைகளை பாத்துக்கோ என மாறி மாறி கூற அக்ஸா குழந்தைகளுடன் வெளியே சென்று அவர்களுடன் விளையாடிக்கொண்டே பேசியதால் இவர்களின் பதட்டம் பயம் அவளால் உணரமுடியாமல் பதில் கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள். ஆனந்தராஜ்  என்ன நினைத்தாரோ

நந்தா, வண்டிய கோவிலுக்கு விடுப்பா, ஏதோ மனசு சரி இல்லை. இன்னொருதடவை கோவிலுக்கு போயிட்டு அப்புறம் கிளம்பலாம்.” என முதலில் கோவிலுக்கு சென்றனர். பின்னால் வண்டி ஏதோ பின்தொடர்வது போல உணர்ந்தவர் கோவிலுக்கு வந்ததும் அங்கேயே அனைவரும் சற்று நேரம் அமர்ந்திருக்க ஆனந்தராஜ் தனியே சென்று நின்றார்.  பாலகுமார் மாமா, என்னாச்சு ஏன் இங்க நின்னுகிட்டு இருக்கீங்க?” என

அவர் தான் டிரைவர் பேசியதை கேட்டதையும், பின்னால் வண்டி ஏதோ பின்தொடர்வது போல தோன்றுகிறது எனவும் கூறினர். அதை கேட்டு தான் சென்று பார்ப்பதாக பாலா கூற அவரை தடுத்தவர் இருவரும் வெளியே சென்று பார்க்க சந்தேகிக்கும் படியாக எந்த வண்டியும் நிற்கவில்லை. ஏதோ கூச்சல் கேட்க விசாரித்தவர்கள்  ஏதோ லாரி டிரைவர் தண்ணி அடித்துவிட்டு ஆட்டோ டிரைவரிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக கூற இவர்களும் சாதாரணமாக நினைத்துவிட்டு உள்ளே சென்றனர். இருந்தும் மனதில் ஏதோ சஞ்சலம் இருக்க ஆனந்தராஜ் இன்னும் ஏதோ மாதிரி இருக்கு பா. பேசாம இன்னைக்கு நாம வெளில ஹோட்டல் ஏதாவது பாத்து தங்கிட்டு நாளைக்கு காலைல போலாமா?” என வினவ அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

சரி நீங்க எல்லாரும் இங்க இருங்க.. பக்கத்துல எங்க ஹோட்டல் இருக்குனு முதல விசாரிச்சிட்டு வரோம். அப்புறம் போயிக்கலாம்என ஆனந்தராஜ் மற்றும் பாலா இருவர் மட்டும் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே விசாரிக்க சென்றனர். சண்டையில் இருந்த டிரைவர் இவர்களின் வண்டியை மட்டுமே அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்ததால் வண்டியை திடீரென காணவில்லை என பதறியவன் ஆட்டோ டிரைவர் கத்துவதை கவனியாது வேகமாக வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றான். ஒரு திருப்பத்தில் அவர்களின் வண்டியை கண்டவன் உள்ளே அனைவரும் இருக்கிறார்களா இல்லையா என எதையும் கவனியாது வண்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான். பக்கத்தில் ஹோட்டல் இருக்கிறதா என விசாரித்துவிட்டு வர வெளியே சென்ற பாலாவை அழைக்க கதவை திருக்கும் நிலையில் வைத்திருந்த வண்டியின் உள்ளே இருந்த ஆனந்தராஜ் வண்டியில் ஏதோ மோதிவிட அதிர்வில் வெளியே விழுந்துவிட  வண்டி சிறிது பள்ளத்தாக்கில் சரிந்து கீழே உருண்டு விழுந்தது. விழுந்த வேகத்தில் மற்றொரு வண்டி அவரின் காலில் ஏறியது.

தூரத்தில் சென்ற  அந்த லாரி டிரைவர் சற்று தூரம் வேகமாக சென்று கண்ணாடி வழியே வண்டி பள்ளத்தில் விழுந்ததை மட்டும் பார்த்திருக்க அவர்கள் குடும்பத்துடன் இறந்துவிட்டனர் என ருத்திராவிடம் கூறிவிட்டான்.

ஆனால் இங்கே உண்மையில் அடிபட்டது அக்ஸாவின் தந்தைக்கு மட்டுமே. அதோடு பேலன்ஸ் இல்லாமல் காலில் வண்டி ஏற்றியவர் உடனே அவரை ஹாஸ்பிடல் அழைத்துச்செல்ல உதவினார். நந்தாவிற்கு கால் செய்து நடந்தவற்றை சுருக்கமாக கூறிவிட்டு ஹாஸ்பிடல் அழைத்து வர சொன்னனர். வந்தவர்கள் மிகவும் அழுது புலம்ப உதவிய ஐம்பது வயதை ஒட்டிய அந்த நபர் சந்திரன்  வேறு ஏதோ பிரச்சனை என யூகித்தவர் என்னவென்று விசாரிக்க தங்களின் பிரச்சனையை கூறினர். அவர் கொஞ்சம் பெரிய ஆள் என்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி ருத்திராவை பற்றியும், அவர்களின் குடும்பம் பற்றியும் விசாரித்து கூறினார். இதனிடையில் ருத்திரா இவர்கள் இறக்கவில்லை என அங்கே விசாரிப்பது, தேடுவது என அனைத்தும் அவர் காதிற்கு எட்ட இவர்களை ஒரு வாரம் தனது பாதுகாப்பில் வைத்திருந்தார். இப்போதைக்கு அவர்களில் யாரேனும் வெளியில் சென்றால் உயிர்க்கு ஆபத்து என்றவர் அவர்களை கொஞ்சம் பிரச்சனை அடங்கட்டும் என காத்திருக்க சொன்னார். அனைவரும் அக்ஸா  மற்றும் குழந்தைகள் பற்றி கவலை கொள்ள அவரோ இல்ல, இந்த நேரத்தில நீங்க உங்க பொண்ணை பாக்க போறது உங்களுக்கும் நல்லதில்லை, அவளுக்கும் நல்லதிலை. உங்களை வெச்சு அவளை பிடிச்சுட்டா என்ன பண்றதுன்னு யோசிங்க.. இல்ல எனக்கு ஒரு 4 நாள் டைம் குடுங்க, உங்க பொண்ணுகிட்ட நீங்க நல்லா இருக்கீங்கன்னு விஷயத்தை மட்டும் இப்போதைக்கு கொண்டு போயி சேத்திடலாம், அதுக்குள்ள இவனுக்கு ஒரு முடிவு கட்டலேன்னா இவனை அடக்கிறது கஷ்டம். இவனுக்கு எதுவும் பண்ணாம நாம ரிஸ்க் எடுத்தா ரொம்ப கஷ்டம் பொண்ணு விஷயத்துல யோசிச்சு முடிவு பண்ணனும். அப்புறம் அவசரத்துல நாமளே காட்டிக்கொடுத்த மாதிரி ஆகிடக்கூடாது என்றவர், வேணும்னா இன்னைக்கு அங்க அவ என்ன பண்றா எப்படி இருக்காங்க எல்லாம் விசாரிச்சு சொல்றேன் என கூறினார்.  

அதேபோல 3 நாட்கள் இவர்களின் இழப்பை எண்ணி அக்ஸா வீட்டில் வருத்தத்தில் இருக்க அனைவரும் வரப்போக என இருந்தது. மறுநாள் வீடு பூட்டியிருந்தது. யாரும் காணவில்லை எங்கே சென்றார்கள் தெரியவில்லை என தெரியவந்தது. பிரச்சனை இருக்காது ஆனால் எங்கே சென்றனர் என்ன என்பது யாருக்குமே தெரியாமல் இருந்துவிட்டது. வெளியே வயசுப்பொண்ணு பற்றி விசாரிப்பது முக்கியமாக இந்த நேரத்தில் விசாரிப்பது அவங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூற அதுவே இவர்களும் நல்லது என எண்ணினர். அதோடு அப்டி விசாரித்தால் ருத்திராவிற்கும் தெரியவந்துவிடும் என எண்ணி யாரும் வெளிப்படையாக விசாரிக்கவில்லை. ருத்திரா அவனது அப்பா இருவரும் இவர்களின் ஆக்சிடென்ட் பற்றி அந்த நபர்கள் எங்கே சென்றார்கள் என்பது பற்றி விசாரித்தனர். இருந்தும்  சந்திரன் அவர்களுக்கு எந்த தெளிவான தகவலும் செல்லாமல் பார்த்துக்கொண்டார். இதனிடையில் அக்ஸாவின் தந்தைக்கு காலில் பலமான அடிபட்டிருக்க சந்திரனும் இவர்கள் யாரு என்ன என வெளியே விபரம் தெரியவண்ணம் வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டார். சிகிச்சைக்கும் உதவினார். ஆனால் குணமாவது கடினம் என கூற இறுதியில் விசாரித்து சித்தா போன்ற இயற்கை மருத்தவம் எடுத்து பார்க்கலாம். ஒருவேளை காலின் பலம் கூடுவதற்கு வாய்ப்புள்ளது என இறுதியாக இவர்களை கேரளா செல்ல முடிவானது. தனக்கு தெரிந்த பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைத்தார். அவர் இவ்வளவு உதவி செய்ததே மிகவும் பாராட்டுதற்குரியது என அனைவரும் நன்றி கூறினார்.

 

பாலா சந்திரன் சார், எங்களுக்கு இந்த கொல்லிமலை பக்கத்துல ஏன் சுத்துவட்டாரத்துல, அத தாண்டி இருக்கற இடத்துல கூட யாருமே தெரியாது, ஒருவேளை நாங்க வெளில போயி எங்க உயிர்க்கு ஆபத்துனா கூட யாருக்குமே தெரிஞ்சிருக்காது. ஆனா நீங்க எங்களுக்கு ரொம்ப உதவி பண்ணிருக்கீங்க. இத நாங்க எப்போவுமே மறக்கமாட்டோம். எங்க மாமாவை காப்பாத்துனது, பணம், டிரீட்மென்ட், தங்கவெச்சு இவளோ பாதுகாப்பா பாத்துக்கிட்டது, இப்போவும் எங்க மாமாவோட டிரீட்மென்ட்க்கு கேரளா அனுப்பிவைக்க, எங்களுக்கு வேலை எல்லாத்துக்கும் என்ன கைம்மாறு பண்ணப்போறோம்னே தெரில சார்.?”

சந்திரன் விடுப்பா, எல்லாரும் வாழற ஒரு வாழ்கைல ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா இருந்திட்டு போறது தானே நிம்மதி. எத எடுத்திட்டு போகப்போறோம். எனக்கு குடும்பம் குழந்தைங்கனு யாரும் பெருசா இல்லை. இருக்கறவங்க பழகறவங்க பாதி பேர் பணம் செல்வாக்கு அந்தஸ்து இதை வெச்சு தான் எடை போடுறாங்க.. உண்மையா பாசமான உறவு கிடைக்கிறதே இந்த காலத்துல கஷ்டமா இருக்கு. அதனாலையோ என்னவோ உங்கள எல்லாரையும் பாதத்துல ரொம்ப சந்தோசம். நாம சந்திப்பு வேணும்னா ஒரு விபத்துல இருந்து வந்திருக்கலாம். ஆனா அக்கா மாமா தானே அவங்களுக்கு பிரச்சனைன்னா நாம ஏன் இருக்கனும்னு நினைக்காம எவ்ளோ தூரம் கூடவே இருக்கீங்க, அத விட வீட்டுக்கு வந்த மருமகளுங்க கூட நம்ம புள்ளைங்கள பாக்கணும்னு இவங்க பிரச்சனை எதுக்குனு நினைக்காம இவளோ தூரம் உங்ககூடவே இருக்கறது, எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு ஆசைபடுறது எல்லாமே பாக்கும் போது நமக்கும் குடும்பம் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமேன்னு ஒரு ஆசை வருது. எனக்கு ஒரு பிடிப்பு இருக்கறமாதிரி எண்ணம். இதுக்கு எல்லாம் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்;  உண்மையாவே உங்க எல்லாரையும் விட பார்வதி, உமாக்கு தான் பெரிய மனசு உங்க புள்ளைங்கள விட புருஷன் குடும்பத்தை பாத்துகிறதுல கொஞ்சம் கூட முகம் சுளிக்கவே இல்லை.. என அவர்கள் இருவரும் சங்கோஜத்துடன் எங்களை விட எங்க புள்ளைங்கள அக்ஸா நல்லா பாத்துப்பாங்க சார், எனவும் பெண் பார்க்க வரும்போது அக்ஸா வாங்கிய சத்தியம் பற்றி கூறி அப்போவே இது என் குடும்பம் எப்போவும் பிரிக்கமாட்டேன்னு அவளுக்கு சத்தியம் பண்ணிட்டோம். அதோட அவளும் எங்க புள்ளைங்கள பாத்துப்பேன்னு சொல்லிட்டா. அவதான் எங்களுக்கு முத பொண்ணு. என கூற ஒரு சின்ன பொண்ணு அவளோட கள்ளம் கபடமில்லாத எண்ணமும், அவளுக்காக பாத்து பாத்து செய்ற குடும்பமும் என சந்திரனுக்கு கேட்கவே ஆச்சரியமாக மகிழ்வாக இருந்தது. மனதார வாழ்த்திவிட்டு கண்டிப்பா எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும்.. நீங்க அங்க ஜாக்கிரதையா இருங்க.. நானும் விசாரிக்கறேன். பாக்கலாம் சீக்கிரம் எல்லாமே சரி ஆகிடும் என அனுப்பிவைத்தார்.” அவ்வப்போது அவரிடம் பேசுவது, என நல்ல ஒரு உறவு சந்திரனுடன் ஏற்பட்டது. அவரும் அக்சராவை பற்றி இல்லை இவர்களின் குடும்பம் பற்றி யாரேனும் விசாரிக்கிறார்களா என கவனித்துக்கொண்டே இருந்தார். அந்த விபத்து முடிந்து ஒரு மாதம் ருத்திரா மற்றும் செல்வம் இவர்களை பற்றி வெளியே விசாரித்தது தான் அதன் பின் எதுவும் இல்லை என்றானது. ருத்திரா பாரின் சென்றுவிட்டான் என தெரியவந்தது. ஆனால் அதன் பின் கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து இப்போது யாரோ விசாரிக்கிறார்கள் என தெரியவந்ததும் சந்திரன் யாரு என்னவென்று பார்த்து பின் எடின் பற்றியும், ஆதர்ஷ் பற்றியும் தெரியவர அவர்களிடம் நேரில் அழைத்து பேசினார். விசாரித்துவிட்டு பிரச்சனை இல்லை என தெரிந்ததும், அவர் அக்ஸாவின் பெற்றோர்கள் இருக்கும் இடத்தை பற்றி கூற ஆதர்ஷ் சந்திரன் அனைவரும் நேரில் சென்று அவர்களிடம் பேசி அழைத்துவந்தனர்.

 

என அனைத்தும் கூறி  முடிக்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது. எத்தனை துன்பங்கள் என எண்ணி அதோடு அவளது தந்தையை நினைத்து வருந்த அனைவரும் அவளிடம் “அதெல்லாம் நீ கவலைப்பட எதுவும் இல்லை. முதல இருந்ததுக்கு இப்போ ஸ்டிக் வெச்சு நடக்கற அளவுக்கு வந்திருக்கு. அதனால இப்டியே டிரீட்மென்ட் எடுத்தா இன்னும் சீக்கிரம் சரியாக வாய்ப்பிருக்குனு சொல்லிட்டாங்க என அதோடு அத்தைகள் இருவரும் உன் செலெக்ஷன் சூப்பர், என அவளது அம்மா அப்பா அனைவரும் “ஆமா மா, எல்லாமே நல்லதுக்குனு நினைச்சுக்கோ, இந்த பிரச்சனை எல்லாம் வராம இருந்திருந்தா இப்டி ஒருத்தர உனக்கு மாப்பிளையா கிடைச்சிருப்பாரான்னு தெரில, எங்க எல்லாருக்கும் மனப்பூர்வமான சம்மதம், நாங்க போயி இனி கல்யாண வேலை எல்லாம் பாக்கிறோம் என பெருமையாக சொல்லிவிட்டு செல்ல  மகிழ்ச்சியில் அவள் கண்களில் நீர் தேங்க ஆதர்ஷ் அவளிடம் வந்து “மேடம், கதை கேட்டுட்டீங்களா? எனக்கு தெரிஞ்சளவுக்கு இந்த சர்ப்ரைஸ் குடுத்திட்டேன். இது ஓகேவா? என அவன் கிண்டல் செய்ய அவள் மகிழ்ச்சியில் அவனை கட்டிக்கொண்டு “லவ் யூ ஆதவ் ” என முதன்முறையாக அனைவரின் முன்னிலையிலும் தன் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்த அவனும் அணைத்துக்கொண்டான். இளையோர் பட்டாளம் அனைவரும் கிண்டல் செய்ய அவள் அதை பொருட்படுத்தாமல் அப்டித்தான் ப்ரொபோஸ் பண்ணுவேன் என கூற அனைவரும் இன்னும் கிண்டல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 8ராணி மங்கம்மாள் – 8

8. பாதிரியார் வந்தார் இரகுநாத சேதுபதியின் அந்த வார்த்தை வித்தகம் ரங்ககிருஷ்ணனை மெல்லத் தளரச் செய்திருந்தது. பேச்சிலேயே எதிரியை வீழ்ச்சியடையச் செய்யும் அந்தக் கிழச் சிங்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான் அவன். போரிலும் வெல்ல முடியாமல், பேச்சிலும் வெல்ல முடியாமல் சேதுபதியிடம்

உள்ளம் குழையுதடி கிளியே – 23உள்ளம் குழையுதடி கிளியே – 23

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தோழமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  இந்த பகுதியில் சரத் ஹிமாவின் மனநிலை பற்றி சொல்லியிருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. உள்ளம் குழையுதடி கிளியே – 23 அன்புடன்,

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 21

21 – மனதை மாற்றிவிட்டாய் திவியோ “என்னதான் இருந்தாலும் நான் அவர்கிட்ட அப்படி பேசிருக்கக்கூடாது. ச்ச… சரியான லூசு திவி நீ…. உண்மையாவே அவரு பாவம் தான்… அத்தை சொல்லி வந்தாரோ இல்ல இவரா வந்தாரோ எனக்காக தானே வந்தாரு. அப்போகூட