Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 38

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 38

38 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஆதர்ஷ், ரகு, வாசு அனைவரும் வந்து விசாரிக்க ஆதர்ஷ் “ஆண்ட்டி டாக்டர் என்ன சொன்னாரு?”

செல்வத்தின் மனைவி அம்பிகா “ரொம்ப ப்ரெஷர், ஸ்ட்ரெஸ் அதிகம்னு சொல்லறாரு.. எதைப்பத்தியும் போட்டு ரொம்ப குழப்பிக்காம முடிஞ்சளவுக்கு நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காரு. இரண்டு நாளா எதுக்கு தான் அவ்ளோ டென்ஷனோ? நீயே அவருக்கு புத்தி சொல்லு… நான் உங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வரேன்…” என்றுவிட்டு அவர் கீழே வந்துவிட

ஆதர்ஷ் “என்ன அங்கிள் ஏன் இவளோ ஸ்ட்ரெஸ் எடுத்துகிறீங்க? நான் வந்து இன்ச்சார்ஜ் எடுத்துகிட்டத்துக்கு உங்களுக்கு டென்சன் வேலை எல்லாம் குறையத்தானே செய்யணும். உங்களுக்கு ஏன் அதிகமாகுது?” என அவர் கொஞ்சம் படபடப்பாக இருக்க அவனே அருகில் இருந்த தண்ணீர் எடுத்து கொடுத்தான்.

அம்பிகா அறைக்கு வர

ஆதர்ஷ் “இனி எல்லாமே நான் பாத்துக்கறேன் அங்கிள், நீங்க இந்த பணம், சொத்து, பிஸ்னஸ் எல்லாத்தையும் விட்டுட்டு மறந்துட்டு ரிலாக்ஸ இருங்க… அம்பிகாவிடம் அங்கிள பத்திரமா பாத்துக்கோங்க ஆண்ட்டி. என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க. அங்கிளோட ஹெல்த் ரொம்ப முக்கியம். அண்ட் இவங்க என் பிரண்ட்ஸ். வாசு பிஸ்னஸ்ல பார்ட்னர், ரகு அப்பா, அண்ணா, சித்தி ஆக்சிடென்ட் விஷயமா இவர் தான் கேஸ் எடுத்திருக்காரு.”

அம்பிகா “அப்படியா? ரொம்ப நல்லது தம்பி, மகேந்திரன் அண்ணா, அவங்க குடும்பத்துக்கு ஏன் தான் இவளோ பிரச்சனையோ, சீக்கிரம் கண்டிப்பா இதுக்கு யாரு காரணம்னு கண்டுபுடிங்க.. ஆதர்ஷ் வந்திருக்கான்னு தெரிஞ்சதுமே எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது எப்படியும் இனி எல்லா பிரச்சனைக்கும் முடிவு வந்திடும்னு, இவங்க எல்லாரும் ஏதேதோ காரணம் சொன்னாங்க உங்கிட்ட விஷயத்தை சொல்லாததுக்கு… ஆனா எனக்கு எதுவுமே சரினு தோணல. உனக்கு விஷயம் தெரியணும், நீ சீக்கிரம் வரணும்னு நான் வேண்டிட்டே இருந்தேன். அது நடந்திடிச்சு. அவங்க யாருனு கண்டுபுடிக்காம விடாத.. மொத்த குடும்பத்தையும் செதச்ச அவனை சும்மா விடக்கூடாது. எனக்கு அவ்ளோ ஆத்திரமா வருது…” என அவர் கோபமாக இவன் குடும்பத்திற்கு பேச ஆதர்ஷ் அம்பிகாவிடம் வந்து “கண்டிப்பா ஆண்ட்டி, தப்பு பண்ணவங்க எல்லாரையும் கண்டுபுடிச்சு கொண்டுவரேன், என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க…. ரகு இன்னைக்கு விசாரணை ஆரம்பிக்கறதா இருந்தது அங்கிள்கிட்ட பிஸ்னஸ் விஷயமா எந்த மாதிரி போட்டிகள் இருந்தது, எதிரிங்க யாரு எல்லாம் கேக்கவேண்டியது இருந்தது…ஆனா அங்கிள் இப்போ இருக்கற நிலைமைல வேண்டாம்னு நினைக்கிறேன்..”

அம்பிகா “என்னென்னு டீடைல்ஸ் கேக்கிறதுதானே, இப்போவே கேட்கலாமே?” என

ஆதர்ஷ் செல்வத்தை பார்த்து மெலிதான புன்னகையுடன் “வேண்டாம் ஆண்ட்டி அவரு ரொம்ப ரெஸ்ட்லெஸ இருக்காரு….” என்றவன்

“ரகு நீ மத்த இடத்துல இன்வெஸ்டிகாஷன்ஸ் ஸ்டார்ட் பண்ணு, அங்கிள்கிட்ட இன்னைக்கு ஈவ்னிங் இல்லை நாளைக்கு விசாரிச்சா ஓகே தானே…” என

ரகு “ம்ம்…பைன்.. எப்படியும் முன்னாடி என்னென்ன டீடைல்ஸ் கேஸ்ல கலெக்ட் பண்ணிருக்காங்க எல்லாம் பாக்கலாம், வெளில விசாரிச்சுட்டு அப்புறம் அதைவெச்சு இவர்கிட்ட கேட்டுக்கலாம். ஏன்னா கடைசிவரைக்கும் கூட இருந்தாங்கள்ல.. அதான் நெறைய இவங்ககிட்ட இருந்து தெரிஞ்சுக்க சான்ஸ் இருக்கு.” என கூறிவிட்டு அனைவரும் கிளம்பினர்.

 

காரில் வரும்போது வாசு “ஏன்டா அந்த ஆண்ட்டியே சொல்ராங்களே, இப்போவே விசாரிச்சிருக்கலாம்ல…”

ஆதர்ஷ் “நமக்கு விஷயம் என்னனு தெரியாதா என்ன? நாம அவன்கிட்ட இருந்து விஷயத்தை வாங்குறது மட்டும்தான்னா அன்னைக்கே பண்ணிருக்கலாம். ஒண்ணு இவனுக்கு இவளோ ப்ரோப்லேம் அப்டிங்கும்போது இவனுக்கு ஹெல்ப் பண்றவன் வெளில வர சான்ஸ் இருக்கு. இன்னொன்னு இவன் பண்ண பாவத்துக்கு பயந்து பயந்தே சாகணும்.. எல்லார்கிட்டயும் விசாரிக்கறாங்க என்ன ஆகுமோ ஏதோனு கொஞ்சம் கவலை, நம்மகிட்ட நாளைக்கு கேப்பானுங்கங்களே என்ன சொல்றது எப்படி பேசுறது சமாளிக்கப்போறோம்னு நினச்சு ஒரு ஒரு நிமிஷமும் பயந்திட்டு இருப்பான். அதுக்கு தான்.” என்றான்.

 

ரகு “ஏன்டா, அந்த ஆண்ட்டி உண்மையாவே உனக்கு தான் சப்போர்ட் பண்ராங்களா? இல்லை அவங்களுக்கும் இதுல பங்கிருக்குமா?”

 

ஆதர்ஷ் “ஆண்ட்டிக்கு விஷயம் தெரிஞ்சிருக்க சான்ஸ் இல்லைடா… அவங்க எப்போவுமே எங்க எல்லார்கிட்டயும் பாசமா இப்படித்தான் இருப்பாங்க… அதான் அவங்களுக்கு அவ்ளோ கோபம். பாக்கலாம் யாரோன்னு நினச்சு அவனை கண்டுபிடி விடாதேன்னு சொல்ராங்க. அவங்க புருஷன் தான் இதுக்கு காரணம்னு தெரியும் போது என்ன ஆவாங்களோ?” என மூவரும் பேசிக்கொண்டே அடுத்து வேலைகளில் இறங்கினர்.

 

அன்றும் வேலை விசாரணை, விக்ரம் சொன்ன விஷயத்தில் இருந்து கஸ்டோமர்களிடம் பேசி மேலும் பல விஷயம் திரட்ட என சென்றது.

செல்வம் சுத்தமாக எதுவும் முடியாமல் இருக்க சங்கரமூர்த்தி மூலம் விஷயம் அறிந்தவன் விக்னேஷ், வாசு இவர்களை பற்றி விசாரிக்க அவனே அடுத்து ஏற்பாடுகள் செய்தான்.

மறுநாள் செல்வம், சங்கரமூர்த்தியிடம் விசாரணை என பல கேள்விகள் கேட்க அவர்களும் பதில் கூறினர். அனைத்தும் மேலோட்டமான கேள்விகள் ஆனால் குற்றமுள்ள நெஞ்சம் எது கேட்டாலும் தன்னை சுட்டிக்காட்டி கேட்கிறார்களோ என பயந்து பயந்தே பதில் கூறினர். ரகு விசாரித்ததில் இருந்து எதுவும் கண்டுபுடிக்கமுடியவில்லை. சில இடங்களில் பதில் சொல்லாமல் லாக் ஆனாலும் சரி அத விசாரிச்சுக்கறேன் இப்போ அடுத்த கேள்வி என அவன் சென்றுவிட இவர்களுக்கு தான் முள் மேல் இருப்பது போல இருந்தது. அந்த நாள் அவ்வாறே சென்றுவிட இரவு ரகுவிடம் இருந்து கால் வந்தது. “ஹாஸ்பிடல்ல உங்க அண்ணாவுக்கு நினைவு திரும்பினதுக்கு அப்புறம் யாரோ ஒருத்தன் வந்திட்டு போயிருக்கான். கேஸ் விசாரணை இது அதுனு பயந்துட்டு இத்தனை நாள் சொல்லாம இருந்திருக்கான். விசாரிக்கும்போது இவன் முழிச்சிட்டே இருந்தான்னு தனியா கூப்பிட்டு கேக்கும்போது சொல்றான், ஒரு ஆறடில ஒருத்தன் வாட்ட சாட்டமா வந்தான். முகத்தை நல்லா ஞாபகம் இருக்குனு சொல்லமுடியாது… ஆனா பாத்தா கண்டுபுடிச்சிடுவேன்….ஏன்னா ஆளு நடை எல்லாமே ஒரு தினுசா இருந்தது…அவன் வந்திட்டு போனதுக்கு அப்புறம் தான் அந்த சார் இறந்துட்டாருனு சொன்னாங்கனு சொல்றான்… நான் அன்னைக்கு இருந்த சிசிடிவில ஹாஸ்பிடல்ல வந்தவங்க எல்லாமே பாத்தாச்சு, எதுவும் இல்லை…நாளைக்கு நாம டவுட்னு கலெக்ட் பண்ண போட்டோஸ் எல்லாமே வெச்சு வேற விசாரிச்சிட்டு சொல்றேன்…” என

ஆதர்ஷ் “ஓகே டா… ரகு, அந்த ஹாஸ்பிடல் கார் பார்க்கிங் வெளில சிக்னல் அங்க இருக்கற விடீயோஸ் செக் பண்ணி பாரு. ஏன்னா இவளோ யோசிச்சவன் கண்டிப்பா ஹாஸ்பிடல்ல இருக்கற டீடைல்ஸ் அழிச்சிருக்கலாம். ரொம்ப அதைத்தாண்டி திங்க் பண்ணிருப்பான்னு தோணல. தேவையில்லாம அந்தளவுக்கு யாரு விசாரிக்க போறாங்கன்னு விட்ருக்க சான்ஸ் இருக்கு.” என ரகுவும் கரெக்ட் தான்டா. நான் விசாரிச்சிட்டு நாளைக்கு சொல்றேன்” என அவன் போனை வைத்துவிட

 

அடுத்து எடின் கால் செய்து “அல்மோஸ்ட் முடிஞ்சது, இன்னும் எனக்கு கொஞ்சம் விஷயம் தெரியவேண்டியது இருக்கு….நாளைக்கு அத தெரிஞ்சிட்டு நேர்ல நான் வந்து எல்லா விஷயத்தையும் சொல்றேன். நீ எங்க இருப்ப?”

 

ஆதர்ஸ் “நீ வரதுக்கு முன்னாடி சொல்லுடா.. நாம வீட்டுலையே மீட் பண்ணலாம்.” என போனை வைத்துவிட்டான்.

 

மறுநாள் காலையில் இருந்து நிதானமாக அனைத்து வேலைகளையும் செய்தவன் ஏனோ யோசனையிலேயே இருந்தான். மதிய வேளையில் எடின் வருவதாக கூற வாசு, ரகு அனைவரும் வீட்டிற்கு வர சொல்லிவிட்டான். எடின் “ஆதர்ஷ், செல்வம் பத்தின எல்லாமே விசாரிச்சாச்சு… அவனோட குடும்பம் மனைவி ஒருபையன்.. ஏதோ குடும்ப பிரச்சனை அவனோட குணமும் சரி இல்ல யார்கூடவும் ஒட்டாம கொஞ்சம் மூடி டைப்…எதோ பிரச்சனைல அவங்க அம்மாவும் திட்டிட்டாங்க.. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடியே பையன் சண்டைபோட்டுட்டு வெளிநாடு போய்ட்டான்…யார்கூடவும் டச்ல இல்லை.. இப்போ அவரும் அவர் மனைவி மட்டும் தான். ஆல்ரெடி உனக்கு தெரிஞ்ச அவனோட பாக்கிரவுண்ட் தான், இங்க அவனுக்கு ஹெல்ப் பண்ற ஆளுங்க நீங்க எல்லாரும் ஏற்கனவே சொன்னமாதிரி அவனோட பிஏ, கம்பெனில ஒர்க் பண்ற கொஞ்ச பேர் டிரைவர் இந்த மாதிரி அப்போ அப்போ இன்போர்மசன் சொல்றதுக்காக வெச்சிருக்கான். இவர்கள்ல யாருக்கும் முழுசா எல்லாமே தெரியாது அந்த பிஏ மட்டும் தான் டவுட் இருக்கு. மத்தபடி போன் கால் எல்லாமே ட்ராக் பண்ணதுல செல்வம் வீட்ல, இப்போ நான் சொன்ன ஆளுங்களுக்கு, அப்புறம் ஏதோ அப்போப்போ ஒரு பாரின் நம்பர்க்கு கால் போக வர இருக்கு. இத தாண்டி அவனுக்கு தெரிஞ்சவங்க யாருமில்லை… இப்போ நான் சொன்னவிஷயங்களை வெச்சு உங்களால ஏதாவது கெஸ் பண்ண முடியுதா யாருன்னு?” என எடின் நிறுத்திவிட்டு பார்க்க

வாசு, ரகு இருவரும் இதெல்லாம் சாதாரணமா தெரிஞ்சது தானேடா…ஒருவேளை அந்த பாரின் கால்..அதுல தான் டவுட். ஆனா அது யாருனு தெரிலையே?” என எடின் ஆதர்சை பார்க்க

ஆதர்ஷ் ஏதோ நினைவில் இருந்தவன் திடீரென “ருத்ரா?” என

எடின் சிரிப்புடன் “எக்ஸாக்ட்லி… அவனே தான்.”

வாசு,ரகு புரியாமல் விழிக்க எடின் “செல்வத்தோடு பையன் ருத்ரா.. ஆதர்ஷ விட பெரியவன்.. அவன் தான் இதுக்கு எல்லாத்துக்கும் மாஸ்டர் பிளான்…. நல்லா படிச்சிருக்கான்..அறிவு அதிகம் தான்… என்ன அப்போ அப்போ சைக்கோ மாதிரி ஆகிடறான் போல… ஆரம்பத்தில இருந்தே இவன் ஒரு தனி உலகத்துல தான் இருந்திருக்கான். யார்கிட்டேயும் அதிகம் பழக்கம் இல்லை. பிரண்ட்ஸ் இந்தமாதிரி எல்லாம் பெருசா யாரும் இல்ல…வேலைன்னாலும் சரி, பர்சனல் விஷயம்னாலும் சரி அவனுக்கு என்ன தோணுதோ செஞ்சிட்டு போயிட்டே இருப்பான். அப்போ அப்போ வீட்ல சண்டை இந்தமாதிரி எல்லாம் வரதால அவன் பாரின் போறேன்னு போய்ட்டானாம். எப்போவது வீட்ல பேச அதுவும் நல்லாயிருக்கேன்.. என்ன ஏது அவ்ளோதான் …இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவன் இந்தியா வந்திருக்கான்.. ஆனா சென்னையில வீட்ல யாரும் பாக்கல. அவன் வேற எங்க போனான்னு தெரில. அப்போ வந்திட்டு போனதுக்கு அப்புறம் தான் வீட்ல சுத்தமாவே அவங்க அம்மா பேசுறதில்லை. டச்சே இல்லாம போயிடிச்சு.. ஆனா யாருக்கும் தெரியாம செல்வம் அவன்கிட்ட பேசிட்டு இருந்திருக்காரு. ஈவென் சங்கரமூர்த்திக்குகூட மகேந்திரனை பிடிக்காத எதிரின்னு தான் தெரியுமே தவிர ருத்திரா தான்னு தெரியாது. அப்போ போனவன் இப்போ உங்க அப்பா, அண்ணா ஆக்சிடென்ட் அப்போதான் வந்திருக்கான். தெளிவா சொல்லனும்னா உங்க அண்ணா இறந்த அன்னைக்கு முந்தின நாள் தான் வந்திருக்கான். மறுநாள் கிளம்பிட்டான்.” என அனைத்தும் விசாரித்த விபரங்களை காட்டி கூற

வாசு “அவனுக்கு ஆதர்ஷ் மேல அவங்க குடும்பத்து மேல அப்டி என்ன கோபம்?”

எடின் “நிறையா இருக்கு, செல்வம் யோசிச்சமாதிரி கூடவே அவனுக்கு பொறுப்பை குடுக்காம மகேந்திரன் அங்கிள் தான் எல்லா இடத்துலயும் பெரியாளா இருந்தது, சரி செல்வத்துக்கு தான் மேனேஜ்மென்ட் சரியா வரலே ஆனா ருத்திரா அடுத்து அவனுக்கு குடுப்பாங்கனு எதிர்பாத்திருக்கலாம். அது இல்லாம ஆனந்த் அண்ணா வந்ததுல கோபம் வெஞ்சென்ஸ் இருக்கும்.. ஆனா அதுக்கு முன்னாடியே அவனுக்கு உங்க மேல கோபம் இருந்திருக்கு. ஏன்னா ஆதர்ஷ், அவங்க அம்மா போன வண்டியை இடிச்சு ஆக்சிடென்ட் பண்ணது எல்லாம் அவன் தான். அப்போ எல்லாம் அவன் இங்க தான் இருந்திருக்கான். அந்த டிரைவர் வெச்சு தான் இவன் பல வேலை பண்ணிருக்கான். ஆனா இப்போ அந்த டிரைவர் என்ன ஆனான்னு கூட தெரில.. அந்த டிரைவரோட குடும்பத்துல தம்பிகிட்ட தான் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டது இந்த விஷயம். ருத்திராவோட பழைய போட்டோ காமிச்சு விசாரிச்சபோது ஆமா இவரு தான் அப்போ அப்போ வந்து கூட்டிட்டு போவாரு. ஏதோ வண்டி ஓட்டுற வேலை நல்லா பணம் தருவாங்கனு வந்திட்டு தண்ணிய போட்டுட்டு ஒளறிட்டு இருப்பான். ஆனா ஏனோ அவன் போக்கே சரிஇல்லாத மாதிரி இருந்தது. ஏன்னா எங்க அண்ணன் எப்போவுமே தண்ணி அடிச்சிட்டே தான் இருப்பான். இவனை நம்பி எப்படி வண்டி ஓட்டுற வேலை குடுத்தாங்கனு யோசனைய இருக்கும். ஆனா அப்புறம் தான் தெரியவந்தது ஆக்சிடென்ட் பண்ணி உயிரெடுக்கறது தான் இவன் வேலையேன்னு…வீட்ல யாருக்கும் தெரியாது, நான் வெளில விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டது சார்னு” அவன் தம்பி சொன்னான்.

 

ரகுவிற்கு கால் வந்தது.. ஹாஸ்பிடல் வந்த ஆளை ஒரு பார்க்கிங்கில் இருந்து ஒரு வீடியோவில் அடையாளம் கண்டுகொண்டதாக போட்டோ ரகுவிற்கு அனுப்பியிருப்பதாக கூற அவன் அந்த போட்டோவை காட்ட எடின் வைத்திருந்த ருத்திராவின் படம் தான் அது. ஆதர்ஷ் அனைத்தையும் கேட்டுவிட்டு கோபமாக அமர்ந்திருக்க அக்சராவிடம் இருந்து அவனுக்கு கால் வந்தது. அட்டென்ட் செய்ய “ஆதவ், எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  ஒரு கால் வந்தது.” என அவள் நடந்ததை கூறினாள்.

கோவிலுக்கு வந்தவள் கால் வர யாரோ புது நம்பர் என அட்டென்ட் செய்ய “ஹாய் அக்சரா எப்படி இருக்க?”

அக்சரா “நல்லாயிருக்கேன்…ஆனா சாரி நீங்க யாருனு எனக்கு தெரில..நீங்க?” என

“டோன்ட் ஒர்ரி பேபி, இனிமேல் நீ என்கூட தானே இருக்கப்போற.. அதுக்குள்ள என்ன அவசரம்? உன்னை கண்டுபுடிக்க எவளோ டைம் ஆகிடுச்சு.. சீக்கிரம் வந்து உன்னை கூட்டிட்டு வந்துடறேன்..” என

“ஹலோ, முதல யாருனு சொல்லுங்க.. இல்லை போனை வெச்சிட்டு போங்க.. சும்மா ஒளறிட்டு இருக்காதிங்க..”

“சோ சேட்…நீ எனக்கானவன்னு நான் சொல்றது உனக்கு உளறலா தெரியுதா? உனக்கு பின்னாடி  வண்டி ஏதாவது வேகமா வருதா பாரு? ” என அவன் கூறி முடிப்பதற்குள் பைக்கில் படுவேகமாக இவளை இடிக்காத குறையாக ஆனால் மிகவும் அருகில் வந்துசென்றது.. ஒரு நொடி அக்சரா பயந்து நகர

போனில் “என்னாச்சு… பாத்து போ மா.. நான் சொல்றத கேட்டு நடந்தா உனக்கு பிரச்சனை இல்லை.. என்னை கோபப்படுத்தற மாதிரி இனி பேசாத சரியா? ஆனா பயப்படாத.. உன்ன கொலை எல்லாம் பண்ணமாட்டேன். அது மத்தவங்களுக்கு தான்.. நீ எப்போவுமே என்கூடவே இருக்கனும்.. ஆனா எனக்கு பிடிக்காததை பண்ணா கண்டிப்பா தண்டனை இருக்கு….புரிஞ்சுதா? இனிமேல் நீ எப்போவும் என் பார்வைல தான் இருப்ப.. கவனமா இரு.. சி யூ சூன்..”

ஆதர்ஸ் “அவன் பேரு யாரு என்னனு ஏதாவது சொன்னானா?”

அக்சரா “ருத்திரா..” என்றதும் ஆதர்சின் கோபம் பல மடங்காக அவளிடம் இங்கே விசாரித்தது நடந்தவற்றை சுருக்கமாக கூறிவிட்டு “நான் அவனை பாத்துக்கறேன். நீ பயப்படாம இரு.. அவனை இங்க வரவெச்சிட்டு அடுத்து வேலைய பாக்கறேன் ” என்றவன் போனை வைத்துவிட்டு இவர்களிடம் சொல்லிவிட்டு நேராக செல்வம் வீட்டிற்கு சென்றவன் கோபமாக மேலே செல்ல செல்வம் அவன் அறையில் இல்லாமல் போக அனைத்து அறைகளிலும் பார்த்தான்.. அவனின் கோபம் கண்டு பின்னோடு வந்த அம்பிகா அவனிடம் அவரை ஹாஸ்பிடல்ல சேத்திருக்குப்பா.. என்னாச்சு என விசாரிக்கும் முன் கடைசி இருந்த ஒரு அறையை திறந்தான். அதனுள் நுழைந்தவன் அறையில் அக்சராவின் புகைப்படம் பெரிதாக மாட்டிருக்க அதை கண்டவன் அதிர்ச்சியானான்..” அவன் நினைத்தது தன் மேல் உள்ள கோபத்தில் விசாரித்து அக்சராவை தாக்க அவன் ஏதாவது நினைத்திருப்பான் என எண்ணியவன் அதனால் தான் கோபத்தோடு இங்கே வந்தான். ஆனால் இங்கே அக்சராவின் படம் இருப்பதை பார்த்தவனுக்கு அப்போ அக்சரா என் லவர்னு தெரியாம தான் ருத்திரா அவகிட்ட பேசிருக்கான். அப்டின்னா அதுக்கு முன்னாடி எப்படி அவனுக்கு அப்போ அக்சராவை தெரிஞ்சிருக்கும் என புரியாமல் குழம்பினான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 6ராணி மங்கம்மாள் – 6

6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி  ரங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர்பாராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக்கோட்டையிலும் இருந்த படைவீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ

சித்ராங்கதா – 19சித்ராங்கதா – 19

Chitrangatha – 19 ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த அப்டேட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜிஷ்ணு, சரயு இருவரும் தாங்கள் ஒருவரின்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 13யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 13

கனவு – 13   புகைப்படங்களைப் பார்த்து முடித்த சஞ்சயன் பழைய ஞாபகங்களிலிருந்து தன்னை மீட்டெடுத்துத் தனது அலுவலக வேலையைச் செய்து முடித்தவன் தூங்கச் சென்றான். வைஷாலியும் தனது வீட்டில் தூக்கம் வராது பழைய நினைவுகளில் தான் உழன்று கொண்டிருந்தாள்.