Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 36

36 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

அன்று மாலை வாசு ஆதர்ஷின் வீட்டிற்கு வந்துவிட அவர்கள் இருவரும் அறைக்கு சென்றனர். வாசு விசாரிக்க காலை நடந்தவற்றை அவனிடம் கூறினான் ஆதர்ஷ். இரு ரகு வரேன்னு சொல்லிருக்கான். அவனும் வந்தபிறகு என்ன பண்ணனும்னு சொல்றேன் என அவன் ஏதோ கால் வர பால்கனி சென்று பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது நண்பன் வந்துவிட வாசு “வாடா, அசிஸ்டன்ட் கமிசினர் எப்படி இருக்க?” என ரகு “பாருடா, நியூம் இங்க தான் இருக்கியா? நல்லா இருக்கேன் மச்சான். நீ எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன்டா… என்ன முரட்டு தீனி போல தங்கச்சிகிட்ட சொல்லி இனிமேல் கஞ்சி தான் தரசொல்லணும்.”

ரகு “அவ பண்ற சமையலுக்கு கஞ்சி ஓகே டா.. ப்ளீஸ் டா ரெகமண்ட் பண்ணி ஏதாவது செஞ்சுவிடு… நீ எந்த சிக்னல்ல மாட்டுனாலும் நான் ஹெல்ப் பண்றேன்..”

வாசு “அடப்பாவி, சிம்பிள்லா ஆஃபர் குடுக்கறியே?”

ரகு “இந்த வேலைக்கு அவ்ளோதான் ஆஃபர் கொடுக்கமுடியும்…சரி ஆதர்ஷ் எங்க?” என

வாசு “ஏதோ போன் வந்ததுடா, பேசிட்டு இருக்கான். என்று நடந்த அனைத்தையும் அவனுக்கு கூறினான்..” ஆதர்ஷ் வந்துவிட இருவரும் பொதுவான நலவிசாரிப்புகளுக்கு பின் “இப்போதான்டா வாசு எல்லாத்தையும் சொன்னான்.. அவனுங்கள சும்மா விடக்கூடாதுடா..சொல்லு என்ன பண்ணலாம்?”

ஆதர்ஷ் தன் திட்டத்தை அவர்களிடம் கூறினான். அவனுங்கள பாலோ பண்றது, அவனை ட்ராக் பண்ற வேலைய யாருகிட்ட கொடுக்கலாம்னு இருக்க? நம்ம காலேஜ்ல கூடபடிச்சானே எடின், அவங்க அப்பாகூட ஆர்மில இருந்தாரே…ஞாபகம் இருக்கா?”

வாசு “ஆமா, அவன் உன்னோட ஜெராக்ஸ் ஆச்சே..”

ரகு “டேய் இவனாவது பரவால்ல.. படிப்பு ஸ்போர்ட்ஸ், அப்போ அப்போ நம்மள பாப்பான்.. அவன் படிப்பு படிப்பு மட்டும் தான்..  ஏதாவது தேடிட்டு கண்டுபுடிச்சிட்டுனு இருப்பான்…இப்போ என்ன பண்ரான்?”

ஆதர்ஷ் “சிபிஐ ஆகணும்னு அவன் எய்ம்.. இப்போ கொஞ்ச நாளைக்கு சும்மா ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்ட்கிட்ட ஒர்க் பண்ணிட்டு இருக்கான்…”

ரகு “சரியான ஆள் தான்டா அவன்… அவன் கண்டிப்பா எல்லாமே பிரிச்சு மேஞ்சுடுவான்… அவன்கிட்டேயே செல்வத்தை பத்தின டீடைல்ஸ் அண்ட் அவனுக்கு பின்னாடி யாரு இருக்காங்கனு கண்டுபுடிக்க சொல்லலாம்… நானும் அந்த ஆக்சிடென்ட் ரிலேட்டடா கேஸ் என்ன மாதிரி இருக்கு, யாரு இங்க இருந்து ஹெல்ப் பண்ணறாங்கனு ஆஃபீஸியலா மூவ் பண்றேன்.. ஹாஸ்பிடல் எல்லா இடத்துலயும் நான் விசாரிக்கறேன்..”

வாசு “உனக்கு பிஏ வேணும்னு கேட்ட சரி, விக்னேஷ் தான் வேணும்னு ஏன் சொல்ற? அவன் சரி வருவானா?”

ஆதர்ஷ் “கண்டிப்பா அவன்தான் சரிவருவான்.. ஏன்னா நான் இருக்கற இடத்துல அவனுங்க எந்த மூவ் பண்ணவும் யோசிப்பானுங்க.. அதனால நான் இல்லாத நேரத்துல அங்க கண்காணிக்க அதேமாதிரி எனக்கு நம்பிக்கையான ஆளும் வேணும். அதேசமயம் பிரச்சனைக்கும் பயப்படாம அட்லீஸ்ட் மாத்தி பேசி சமாளிக்காவது தெரியனும். அது அவன்கிட்ட நிறையாவே இருக்கும்.”

வாசு “ஆமாமா, உனக்கும் அக்சராவுக்கும் இடையிலேயே இதேமாதிரி உண்மைய பேசுறேன்னு சண்டைபோடவெச்சவனாச்சே…” என கிண்டல் செய்ய

ஆதர்ஷ் மெலிதாக புன்னகைத்தான். “விக்னேஷ்க்கு எப்படியாவது முதலாளி மனசுல இடம் புடிச்சு பெரிய இடத்துக்கு வரணும். அதுதான் அவன் டார்கெட். அதுக்காக ரொம்ப வேலை பாப்பான்.. மத்தபடி அறிவு, படிப்பு எல்லா வகைலையும் அவன் குறைச்சு சொல்லமுடியாது.. இன்பாக்ட் அவனை கூபிட்டுக்கலாம்னு சொன்னதே சாரா தான். எனக்கும் யோசிச்சுப்பாத்தா அதுதான் சரினு பட்டது… விக்னேஷ்க்கிட்ட, ஈஸ்வர் அங்கிள்கிட்ட சொல்லிட்டியா? எப்போ வரான்?”

வாசு “நாளைக்கு காலைல வந்திடுவான்.”

சாந்தி வந்து “தம்பி கீழ செல்வம், அவரோட பிஏ வந்திருக்காங்க..” என்றாள்.

ஆதர்ஷ் “வரோம். நீங்க போங்க” என்றான்.

 

செல்வம், சங்கரமூர்த்தி இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டே மேலே பார்க்க ஆதர்ஷ், வாசு, ரகு மூவரும் இறங்கி வந்தனர். முகத்தில் கோபம், கடுமை, அதோடு அவர்களின் உடல் வாகு அனைத்தும் பார்த்து பயந்து சங்கரமூர்த்தி “என்ன சார், ஒரு ஒருத்தனும் இப்டி இருக்கானுங்க. பேசாம மெயில் அனுப்பிச்சு விட்டுட்டு அமைதியா  இருந்திருக்கலாம். அவன் என்ன பண்ரான்னு நோட்டம் விட்ட மாதிரி இருக்கும்னு கூட்டிட்டு வந்திட்டிங்க. அந்த ஆதர்ஷ் மட்டுமே சமாளிக்க முடியாது. இவனுங்க யாரு புதுசா?”

செல்வம் “கொஞ்சம் பேசாம இருய்யா.. விசாரிப்போம்.” என்றவன் அவர்கள் மூவரும் வந்து சோபாவில் அமர்ந்ததும் ஆதர்ஷ் “சொல்லுங்க அங்கிள்.”

செல்வம் “இல்லை ஆதர்ஷ், காலைல ஆபீஸ் டீடைல்ஸ் கேட்டியே..அதான் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்.”

“ஓஒ… குடுங்க அங்கிள். தேங்க்ஸ்.” என்று நிதானமாக அவன் ஒரு ஒரு பக்கத்தையும் புரட்ட, செல்வத்திற்கு பொறுக்க முடியாமல் “ஆதர்ஷ், இவங்க எல்லாம்? ” என இழுக்க

ஆதர்ஸ் “சாரி நான் அறிமுகப்படுத்த மறந்துட்டேன். இவன் என் பிரண்ட் வாசு, இங்க என்கூடதான் இருக்கப்போறான். ஆக்சிடென்ட் கேஸ் விஷயம்  அண்ட் பிஸ்னஸ் எல்லாத்தையும் என்கூடவே இருந்து பாத்துக்குவான். இவன் என் பிரண்ட் ரகு, அசிட்டேன்ட் கமிஷனர் காலைல சொன்னேனே… அண்ட் இவரு பேரு செல்வம், அப்பாவோட பிஸ்னஸ்ல பார்ட்னர் அங்கிள். 10% ஷேர் இல்லையா அங்கிள்? அவன் தலை ஆட்ட, இத்தனை வருசமும் அப்பா கூடவே தான் இருந்தாரு. இப்போ அப்பா இறந்ததுல என்னை விட பாவம் அவருக்கு தான் சங்கடம்  தலைவலி அதிகம் இல்லையா அங்கிள்?” என கேட்க அவனுக்கு ஏதோ குத்தி பேசுவது போல இருக்க தலை மட்டும் அசைத்தான்.

ரகு செல்வத்திடம் “பொதுப்படையான விஷயம் பற்றி விசாரித்தான். எப்படி மகேந்திரன்  பழக்கம், எப்போ இருந்து? எதிரிங்க தெரிஞ்சு யாரு, அவங்களுக்கு பிரச்சனை குடுத்தது இதுவரைக்கும் யாரெல்லாம் என்பதை விசாரிக்க நடுவில் அவரது பிஏ சங்கரமூர்த்தியிடமும் விசாரிக்க ஒரு 5 6 கேள்விக்குள் இருவருக்கும் வேர்த்து விறுவிறுக்க சங்கரமூர்த்தி “என்னங்க எங்களை ஏதோ குற்றவாளி மாதிரி கேக்கறீங்க?”

ரகு கூலாக “நான் போலீஸ் ஆச்சே… எல்லா பக்கத்துல இருந்தும் விசாரிக்கணும்…இதெல்லாம் நாளைக்கு ஆஃபீசியல கேஸ் இன்ச்சார்ஜ் எடுத்த பிறகு இன்னும் டீடைல விசாரிச்சுக்கறேன்.” என்றதும் இருவருக்கும் தலை வலிப்பது போல இருக்க

வெளியில் கத்திகொண்டே யாரோ ஒருவன் இன்னொருவனை அடித்து இழுத்து வந்தான்…. ஆதர்ஷ் “ராஜு என்னாச்சு?”

ஆதர்சிடம் “சார், இவன் நம்ம வீட்டை சுத்தி சுத்தி பாத்துட்டே இருந்தான்.. சந்தேகமா இருக்குனு கூப்பிட்டு விசாரிச்சா ஏனோ தானோனு பதில் சொன்னான். அதான் இரண்டு தட்டு தட்டிட்டேன்.” என்றான்.

சங்கரமூர்த்தி “ஏதோ இரண்டுதட்டுக்கே பல்லு விழுந்திடிச்சு…” என எச்சிலை விழுங்கினான்.

ராஜு “கேட்டா யாரோ செல்வம் அவரு அனுப்பன ஆள் புதுசா யாராவது வீட்டுக்கு வந்தா சொல்ல சொன்னாருனு சொல்றான்.”

ஆதர்ஷ், வாசு, ரகு அனைவரும் செல்வத்தை பார்க்க செல்வம் “அது, அது ஒன்னும்மில்ல ஆதர்ஷ், பிஸ்னஸ் ப்ரோப்லேம், எதிரிங்க எந்த வழில பிரச்சனை குடுப்பாங்கன்னு தெரியதில்ல..அதனால நமக்கு நம்பிக்கையான ஆள் ஒருத்தனை வீட்டை கண்காணிக்க வெச்சா ஏதாவது ப்ரச்சனைன்னா உடனே தெரிஞ்சிடும்ல அதுக்குதான். உங்க அம்மா அண்ணியை பாதுகாப்பா பாத்துக்க தான்.” என

 

ஆதர்ஷ் “உண்மைதான் அங்கிள், நீங்களும்  சரியா தான் யோசிச்சிருக்கீங்க.. ஆனா பாருங்க நானும் அதே வேளைக்கு தான் ராஜுவ வெச்சிருக்கேன்.”

சங்கரமூர்த்தி “எதுக்கு தம்பி ஒரே வேலைக்கு இரண்டு ஆள்.?” என அவன் முடிப்பதற்குள்

ஆதர்ஸ் “கரெக்ட் இனிமேல் உங்க ஆளுங்க எங்க இருந்தாலும் கிளம்பிட சொல்லுங்க…இல்லாட்டி அவனுங்களுக்கும் இதே நிலைமை தான்.” செல்வம் “என்ன..எங்க ஆளா? என்ன சொல்ற?” என பதற

ஆதர்ஷ் “ஐயோ அங்கிள் பதறாதீங்க, இந்த மாதிரி எங்களுக்கு முன்னாடி யோசிச்சு கண்காணிக்க பாவம் நீங்க ஒரு ஆள ஆபீஸ்ல கடைல வீட்ல வெச்சிருந்தா போக சொல்லிடுங்கனு சொல்லவரேன். ஏன்னா நீங்க பாவம் பாக்கலாம். ஆனா என்கிட்ட அது இருக்காது. என் ஆளுங்களும் அப்டி இருக்கமாட்டாங்க. ராஜு மாதிரியே இன்னும் சிலர் எங்க எப்படி வேணாலும் சுத்திட்டு இருக்கலாம். எல்லாரும் எனக்கு வேலை செய்றவங்க.. சில சமயம் என்னவே கூட பாலோ பண்ணுவாங்க. அதனால சந்தேகப்படுறமாதிரி கண்ணுல யாராவது சிக்கிட்டாங்க அடிச்சுட்டு தான் அடுத்த பேச்சே… அதுக்காக சொன்னேன்… ராஜு… இவனை டீடைல்ஸ் வாங்கிட்டு அனுப்பிச்சி விட்று.. சங்கரமூர்த்தி அங்கிள நாளைக்கு கூட்டிட்டு போயி குவாரி பக்கத்துல ஒரு குடோன் இருக்கும். அத பாத்து வெச்சுக்கோ. எவன் மேலையாவது சந்தேகம் வந்தது, பிரச்சனை பண்ணா அங்க தூக்கிட்டு வந்திடு. அங்க வெச்சு விசாரிச்சுக்கலாம்.” என சங்கரமூர்த்தி திருதிருவென விழிக்க மனதினுள் செல்வத்தை சபிக்க ஆதர்ஷ் “என்ன சங்கர் அங்கிள், பேசாம மெயில் அனுப்பிச்சிருக்கலாம், ஏன்டா இங்க வந்தோம்னு இருக்கா? கூட்டிட்டு வந்த செல்வம் அங்கிள திட்டிட்டு இருக்கீங்க போல?”

“ஆ… அதெப்படி தம்பி உங்களுக்கு தெரியும்?” என வாசு, ரகு இருவரும் சிரித்துவிட்டு

“உங்க ரியாக்ஷன் அந்தமாதிரி… முகத்தில அவ்ளோ பயம் இருக்கு..”

ஆதர்ஷ் “நான் சொன்னமாதிரி நாளைக்கு ஆபீஸ் வந்துடறேன்.. வாசு, ரகு, ராஜுவை காட்டி  இவங்கள்ல யாரு என்ன கேட்டாலும் நீங்க இரண்டுபேரும் கூட இருந்து பாத்து ஹெல்ப் பண்ணிக்கோங்க… அப்பா அண்ணாவை கொன்னவனை கண்டுபுடிக்கற வரைக்கும் இப்படித்தான் இருக்கும். என்ன சங்கர் அங்கிள் வேற ஏதாவது சந்தேகம் இருக்கா?”

சங்கரமூர்த்தி “அதுவந்து, காலைல நான் வந்ததை எப்படி கண்டுபுடிச்சீங்க தம்பி, மறைஞ்சு தானே நின்னேன். எட்டிக்கூட பாக்கலையே?”

ஆதர்ஷ் புன்னகைத்துவிட்டு “நீங்க என் கண்ணுல படக்கூடாதுனு எனக்கு முன்னாடி இருந்த கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சிங்க சரி, ஆனா பதட்டத்துல உங்களுக்கு முன்னாடி இருந்த காரை பாக்க மறந்துட்டிங்க.. அதுல நீங்க நின்னதுல இருந்து உங்க ரியாக்ஷன் எல்லாமே தெரிஞ்சதே. புதுசா சர்வீஸ் பண்ண கார் வேலை. நல்லா பளபளன்னு இருக்கா… வந்த உடனே உங்களுக்கு வினை வெச்சிடிச்சு.. இல்லையா அங்கிள். “என சங்கர் சற்று தயங்க

ஆதர்ஷ் “தப்பு பண்ற எல்லாருமே அப்டித்தான், நிதானம் இல்லாம பண்ணும்போது ஈசியா மாட்டிக்குவாங்க…” என்றான் செல்வத்தை பார்த்துக்கொண்டே செல்வம் “சரி, நாங்க கிளம்புறோம்” என ஓடாத குறையாக வெளியேறினான்.

ராஜு “சார், எனக்கு ஒரு சந்தேகம், இவனை ஓங்கி அடிச்சாலே எல்லா விஷயத்தையும் சொல்லிடமாட்டானா? எதுக்காக இவளோ பயமுறுத்தி?”

ரகு “ராஜு சொல்றது சரி, இவனுக்கு எதுக்கு இவளோ சீன்? அவனையே அடுச்சு அப்ரூவர் ஆக்கிட்டு வாக்குமூலம் வாங்கிட்டு உள்ள தள்ளிடலாமே?”

ஆதர்ஷ் “2 காரணம் இருக்கு… ஒண்ணு இத்தனை வருஷம் நம்ப வெச்சு ஏமாத்தி எல்லாத்தையும் செஞ்சிருக்கானுங்க.. அவனுங்க சாதாரணமா உடனே சாகுறது, தண்டனை அனுபவிக்கிறது எல்லாம் பத்தாது.. இன்னொன்னு இவனுக்கு யாரு அந்த அளவுக்கு கரெக்டா சொல்லி ஹெல்ப் பண்ராங்கனு தெரியணும். ஏன்னா இப்போ செல்வம் மேல நமக்கு சந்தேகம் வந்திடிச்சுனு தெரிஞ்சாலே அடுத்து அவங்க சுதாரிச்சுடுவாங்க. அப்புறம் இத்தனை வருஷம் நடந்த கதை தான். நம்ம கூடவே இருந்து யாரு பிரச்சனை பண்ராங்கனு தெரியாமலே போனமாதிரி இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு நடக்கும். எனக்கு இந்த பிரச்சனைய இதோட முடிக்கணும்னு பாக்கறேன்… சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு தெரிஞ்சிடும். எடின்கிட்ட பேசிருக்கேன்… அவன் இந்த வாரத்துக்குள்ள விசாரிச்சு சொல்லிடுவான்… இவங்களுக்கு பின்னாடி யாரு ஹெல்ப் பண்ராங்கனு தெரிஞ்சா போதும், அடுத்து நான் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்..”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: