Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32

32 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

ஆதர்ஷ் அமைதியாக இருந்தான். ” அப்டினா நான்தான் புரிஞ்சுக்காம எல்லாத்தையும் இழந்துட்டேனு சொல்றியா?” என

“இல்லை ஆதவ், எமோஷனல் பீலிங்ஸ் எல்லாருக்குமே பொதுவானதுதான். எல்லா நேரத்துலையும் நம்மளால ப்ராக்டிக்கால ஒத்துவருமா வராதான்னு யோசிச்சு யோசிச்சு பண்ணமுடியாது. சில நேரம் நாம மனசு சொல்றத கேட்டு அவசரத்துல எமோஷனலா முடிவு பண்ணிடறோம், ரியாக்ட்டும் பண்ணிடறோம். அப்போ அத மாத்தமுடியாது. ஆனா அதுக்கப்புறம் நாம ஏன் அப்டி பேசுனோம், பண்ணோம்னு அந்த விஷயத்துல என்ன பிரச்னைனு யோசிச்சு இதுக்குமேல அது நடக்காம பாத்துக்கறது தானே இருக்கற கடைசி வழி. ஆனா அதையும் விட்டுட்டு நான் முடிஞ்சு போனத நினச்சு நானும் பீல் பண்ணுவேன். என்னை பாத்து மத்தவங்களும் பீல் பண்ணட்டும்னா எப்படி? என்னை கண்டுக்கவேண்டாம் நீங்க சந்தோசமா இருன்னு சொல்லலாம் ஆனா அது வாழ்க்கைக்கு எப்படி ஒத்துவரும். நான் எதையோ நினச்சு பீல் பண்ணிட்டு இருந்தா எங்கேடோ கெட்டு போங்கிற மாதிரி விட்டுட்டு நீங்க சந்தோசமா இருப்பிங்களா? அது உங்களால முடியுமா? அதேதானே நம்ம ,மேல பாசம் வெக்கிற எல்லாருக்குமே..” அவன் அனைத்தும் கேட்டுக்கொண்டு ஏனோ அனைத்தும் வடிந்தது போல வறட்சியாக அமர்ந்திருந்தான். அதை காண பிடிக்காமல் இருந்தாலும்

அக்சரா தொடர்ந்து “கடைசியா அப்பாவோட பார்ட்னரால அதுவும் சொத்து பிஸ்னஸ் இதுக்காக தான்  இந்த பிரச்னை எல்லாம்னு தெரிஞ்சும் மொத்த குடும்பத்தையும் கிட்டத்தட்ட இழந்த பிறகு அம்மாவும் எந்த தைரியத்துல மிஞ்சி இருக்கற  உங்கள அந்த பிரச்னைக்குள்ள போக விடுவாங்க. அதனால கூட உங்ககிட்ட அவங்க அப்டி கடைசியா கோபமா பேசிருக்கலாம்ல?”

ஆதர்ஷ் “நான் தான் அவங்கள என்கூட வர சொல்றேனே?”

“எப்படி வருவாங்க.. யோசிச்சு பாருங்க.. உங்க அப்பா அண்ணா எல்லாரும் ஏமாத்தி தப்பான வழில எதுவும் சொத்து சம்பாரிக்கல. கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சத எவனோ அதுவும் அவங்க எல்லாரோட இறப்புக்கும் காரணமானவன் அனுபவிக்கட்டும்னு எப்படி விடமுடியும். ஏன் விடணும்?னு தோணாதா?”

“சரி அதுதான் அப்போ நான் அவனை பாத்துக்கறேன்னு சொன்னேனே. என்னாவது விட்ருக்கணும்ல?”

“அப்போவும் நீங்க தப்பு பண்ண அவங்ககூட சண்டை போடுறேன். அவனுகள பாத்துக்கறேன்னு சொல்றிங்களே தவிர மனசார அந்த சொத்தை பாத்துக்கறேன்னு சொல்லல.. உங்களுக்கு பிடிக்காம அவ்ளோ பிரச்னை இருக்கற வாழ்க்கைல உங்கள ஏன் இழுத்துவிடணும்னு அம்மா நினைச்சிருக்கலாம். ஒருவேளை இதெல்லாம் நேரா சொல்லிருந்தாலும் ஏதோ மத்தவங்களுக்காக தான் சொத்து பிஸ்னஸ் பாத்துக்குவீங்களே தவிர மனசார இது என்னோட கடமைன்னு எடுத்துக்கிட்டு பாத்திருக்கமாட்டீங்க. அப்டி ஒரு மைண்ட்செட்ல தான் இருந்திருக்கிங்க இப்போவும் இருக்கீங்க.”

ஆதர்ஷ் “சோ வாட்? இரண்டுக்கும் என்ன பெருசா வித்தியாசம். என் மைண்ட்செட் எப்படி இருந்தாலும் நான் தானே பாக்கபோறேன். நமக்கு பிடிக்காட்டியும் வேற வழியில்லைனு எவளோ பேர் வேலை பாக்குறாங்க அந்த மாதிரி நானும் இதுதான் எனக்குன்னு நினச்சுக்க வேண்டியாயதுதானே?”

அக்சரா “இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு ஆதவ். அந்த மாதிரி கிடைச்ச வேலைய மட்டும் பாத்துட்டு வரவங்கள கொலை பண்ற அளவுக்கு எதிரிங்க வெச்சுக்கமாட்டாங்க. ஜஸ்ட் பொறாமைல மாட்டிவிடுறது இந்த அளவுக்கு தான் இருக்கும். ஆனா உங்களுக்கு உங்க அப்பா,சித்தி அண்ணா இப்டி எல்லாரோட உயிரும் இதுக்காக தான் போயிருக்கு. உங்க அம்மாவும் நீங்களும் அதுக்கு முன்னாடியே செத்து பொழச்சு வந்திருக்கீங்க. இவளோ பண்ண ஒருத்தருக்கு உங்க உயிரை எடுக்கறதுக்கு தெரியாம இருக்குமா என்ன? அதோட நீங்க வரமாட்டீங்க இனி சொத்தை பாதுக்கமாட்டீங்கனு தைரியத்துல தான் அவன் உங்க சைடு எந்த பிரச்சனையும் வெச்சுக்காம இருக்கான். நீங்க வரமாதிரி தெரிஞ்சிருந்தா உங்களுக்கு பிரச்சனை குடுக்க பாக்கமாட்டானா? அவங்க சொன்னமாதிரி குழந்தைகளை இல்லை குடும்பத்தை வெச்சு பிளாக் மைல் பண்ணமாட்டானா? அப்போ நீங்க வேற வழியில்லாம கடமைக்காக ஒரு வேலையை செய்யும் போது பணம் தானே அப்புறமா சம்பாரிச்சுக்கலாம் எனக்கு பேமிலி போதும்னு எல்லாத்தையும் கொடுத்திட்டு வந்திடுவீங்க. ஆனா அதுவே இது என்னோட உரிமை, இத்தனை பேரோட உழைப்பு எப்டியோ போகட்டும்னு விடமுடியாது அத காப்பாத்தவேண்டிய பொறுப்பும் இருக்குனு நீங்க அதுக்கான ரெஸ்பான்சிபிலிட்டிய மனசார எடுத்துக்கிட்டா அதுக்கான முடிவு வேற மாதிரி இருக்கும் தானே.

 

போற வழில யாரோ ஒரு ஒருத்தருக்கு ஆக்சிடென்ட் நீங்க பாக்கறீங்க ஹெல்ப் பண்ணுவீங்க. அதுல வேகம் இருக்கும். காப்பாத்தணும்னு எண்ணம் இருக்கும். ஆனா அந்த ஆள் வேற யாரோ இல்லாம நானா இருந்தா?” ஆதர்ஷ் திடுமென அவளை பார்க்க அக்சரா “உங்க மனசுக்கு புடிச்ச ஒரு ஆள் உங்க வாழ்க்கையே நான்தான்னு நினைக்கிற என்னை நீங்க காப்பாத்துறதுல வேகம் இல்லை வெறியே இருக்கும். அந்த நேரத்துல வேற எது குறுக்க வந்தாலும் நீங்க அதை எதையுமே கண்டுக்கமாட்டீங்க.. மனசார ஒரு விஷயம் செய்றதுக்கும், கடமைக்குனேன்னு ஒரு விஷயம் செய்றதுக்கு நிறையா வித்தியாசம் இருக்கு…

நீங்க பிஸ்னசையும் பாத்துக்கறேன் பேமிலியும் பாத்துக்கறேன்னு சொல்லிருந்தா, அதுவும் ஆரம்பத்துல இருந்து குடும்பத்துல நடக்கற எல்லா விஷயமும் உங்களுக்கு தெரிஞ்சிருந்தா அம்மா உங்கள மனசார இந்த பிரச்சனையை சால்வ் பண்ணுடான்னு விட்டிருப்பாங்க. ஆனா உங்களுக்கு பிஸ்னஸ், சொத்து இதுலயும் இன்டெரெஸ்ட் இல்லை. இவளோ நாள் அவங்ககூடவே இருந்த அப்பா அண்ணா எல்லாரையுமே ஏமாத்தி அவன் இவளோ தப்பு பண்ணிருக்கும் போது திடிர்னு உள்ள போற நீங்க எந்த அளவுக்கு அவனை ஹாண்டில் பண்ணுவீங்க அதுவும் தொழிலும் பாதிக்காம பண்ண முடியும். அது உங்களால முடியும்னா அத அவங்ககிட்ட காட்டிருக்கணும், இத்தனை நாள் இல்லாம திடிர்னு நான் பாத்துக்கறேன்னு மட்டும் சொன்னா அவங்களுக்கு இத்தனை பேரை இழந்த பயம் கொஞ்சம் கூட இல்லாம எப்படி உடனே சரினு  சொல்லுவாங்க?”

உங்களால முடியும்னு நீங்க தானே காட்டிருக்கணும்.”

ஆதர்ஸ் “ஆமா நான் அங்கேயும் இருக்கக்கூடாது, எல்லாரையும் பத்திரமா பாத்துக்கணும்.. பிஸ்னஸ பிரச்னை இல்லாம காப்பாத்தணும்,  அவனுக்கு தண்டனையும் வாங்கித்தரணும்…..இதுல எனக்கு ஏதாவது ஆகுமோன்னு இவங்க எல்லாரும் பயந்து என்னை விடவே யோசிக்கறாங்க. இந்த அழகுல என்னால இந்த பிரச்சனைய சால்வ் பண்ண முடியும்னு நான் காட்டணும்னா யாருக்கு தெரியாம பிஸ்னஸல எப்படி அவன் குளறுபடி பண்ணி எல்லாத்தையும் எடுத்துகிட்டானோ அதேமாதிரி நானும் தெரியாம இல்லீகலா தான் ஏதாவது பண்ணி பிஸ்னஸ், சொத்து எல்லாத்தையும் காப்பாத்தணும்…”

“பண்ணுங்க.” என அவள் ஒரே வார்த்தையில் முடித்துவிட

ஆதர்ஷ் “என்ன பேசுற நீ, இல்லீகலா பண்றதுக்கு என்னை பாத்தா பிராடு மாதிரி தெரியுதா? பயந்து போயி முதுகுல குத்துறவன் மாதிரி இருக்கா?” என காட்டமாகவே வினவ

அக்சரா சாதாரணமாக “இல்லை ஆதவ், இது எப்படி பிராடு இல்லை பயந்து போறமாதிரி எல்லாம் ஆகும்? ஏன்னா நேரடியா தெரிஞ்சா பேமிலி வெச்சு பிளாக் மைல் பண்ணுவான்னு நீங்க தானே சொல்றிங்க. சோ அவனுக்கு தெரியாமலே உங்க சொத்தை, பிஸ்னஸ காப்பாத்துங்கன்னு சொல்றேன்.  அது எப்படி தப்பாகும்?”

ஆதர்ஷ் “பின்ன அது தப்பில்லாம? அதுவும் இல்லாம எங்க சொத்தை எடுக்க நானே இல்லீகலா வேற வேலை பாக்கணும்னு சொல்றியா? உனக்கு அது தப்பா தெரிலையா?”

அக்சரா ஓர் நொடி அவனை கூர்மையாக பார்த்துவிட்டு “சரி எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்க… நீங்க உங்களுக்கு தேவையான பொருள் எக்ஸாம்பிள் மொபைல் வெச்சுக்கோங்க, பிரண்ட்ஸ் மாதிரி கொஞ்ச நாள் பழக்கம், ஒரு 4 5 பேரு சேந்து ஒண்ணா ஒரு இடத்துல  இருக்கீங்க  உங்ககிட்ட வந்து ஒருத்தர் மொபைல் கேக்கறாங்க ஏதோ ஹெல்ப்புக்காகன்னு  வாங்கிட்டு போறாங்க. ஒரு நாள் யூஸ் பண்ணிட்டு அவங்களோட ரூம்லியே வெச்சிடறாங்க.. உங்களுக்கு மொபைல் தேவைப்படுது. நீங்க அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்லிட்டு எடுப்பிங்களா இல்லை நீங்களாவே அவங்க ரூம்  போயி உங்க மொபைல் எடுத்துக்குவீங்களா?”

ஆதர்ஷ் “அதெப்படி நம்மள எடுக்கறது, கேட்டு வாங்கிட்டு போயிருக்காங்க, திரும்ப வந்தா தேடுவாங்க அதுவுமில்லாம ஒரு மேனர்ஸ் இருக்கில்ல… ஜஸ்ட் ஒரு வார்த்தையாவது நான் எடுத்துக்கறேன் எனக்கு வேணுன்னு சொல்லிட்டு தான் எடுக்கமுடியும்.”

“குட்… அதே விஷயம் கொஞ்சம் மாத்தி கேக்கறேன். உங்க மொபைல்ல காணோம். அங்க இருக்கறவங்ககிட்ட கேக்கறீங்க.. அவங்கவங்க  ரூம்ல செக் பண்ணிட்டு யாருக்கு தெரில நாங்க பாக்கல எடுக்கலேன்னு சொல்லிடறாங்க. நீங்களும் நம்பி விட்டறிங்க. ஆனா தேடிட்டு இருக்கீங்க. நீங்களே ஒரு ரூம்ல எங்கேயோ இருக்கறத பாக்கறீங்க? இப்போ யார்கிட்டேயாவது சொல்லிட்டு பெர்மிஸ்ஸின் வாங்கிட்டு எடுக்கணும்னு நினைப்பிங்களா?”

“இல்லை.. அவங்க தான் யாருமே தெரியாதுனு முன்னாடியே சொல்லிட்டாங்களே, என் திங்ஸ நான் தேடி போயி எடுத்துக்கிட்டேன், இதுல நான் யார்கிட்ட பெர்மிஸ்ஸின் வாங்கணும்., வேணும்னா திருடி வெச்சது யாருனு கண்டுபுடிச்சு நாலு அடி சேத்தி வேணும்னா குடுப்பேன். ஆனா எனக்கு என்ன அவசியம் இருக்கு போயி அவங்ககிட்ட என்னோட பொருளை எடுத்துக்கறேன்னு சொல்லணும்னு…” என

அக்சரா புன்னகையுடன் “அதேதான் நான் இதுலயும் சொல்றேன். உங்க அப்பா அண்ணா உண்மையா சம்பாரிச்சத உங்களுக்கு இனி அடுத்து உங்க குடும்ப வாரிசுகளுக்கு வர வேண்டிய சொத்து நீங்க பாத்துக்க வேண்டிய பிஸ்னஸ் எல்லாத்தையும் யாருக்குமே தெரியாத மாதிரி ஒருத்தன் எடுத்துட்டு போய்ட்டான். இப்போவரைக்கும் யாருனு தெரியாத மாதிரி தான் இருக்கான். அவன்கிட்ட நீங்க ஏன் உண்மை நேர்மை எல்லாம் பாக்கணும். காணாமப்போன உங்க ப்ரொபேர்ட்டியா நீங்க தேடி எடுக்கப்போறிங்க? அத அவன்கிட்ட சொல்லணும்னு அவசியமும் இல்லை, எடுத்துக்கறதுக்கு பெர்மிஸ்ஸினும் தேவையில்லை. அது எப்படி அப்போ தப்பாகும்?. இப்போ இது எப்படி இல்லீகலாகும்?” என வினவ

ஆதர்ஷ் அவளை பார்த்தவன் ஏதோ யோசனையில் இருக்க அக்சரா “உங்க கவலை குழப்பம் எல்லாத்துக்கும் இதுல ஒரு முடிவு இருக்கும் இதுக்கு மேல நீங்க ஆசைப்பட்ட மாதிரி எல்லாமே மாத்தமுடியும்னு தோணுது. என்ன தான் நீங்க யாரும் வேண்டாம்னு சொன்னாலும் அப்போ அப்போ உங்க மனசு எல்லாரையும் எதிர்பாக்கிறது நிஜம், உங்க மனசுல இன்னும் அந்த ஆசை ஏக்கம் இருக்கு. அது நிறைவேறுனா மட்டும் தான் உங்களால ரிலாக்ஸா இருக்கமுடியும்னு எனக்கு தோணுது. இல்லாட்டி எப்போவுமே ஒரு குழப்பம் தயக்கம் இருந்திட்டே இருக்கும். எல்லாரோட சேந்து இருக்கணும்னா பிஸ்னஸ் சொத்து எல்லாமே நீங்க திரும்ப பழையபடி உங்க குடும்பம் மட்டும் மேனேஜ் பண்றமாதிரி கொண்டுவரணும். அது நேரடியா அவன்கிட்ட சண்டைபோட்டு பண்றதுல பேமிலி, மத்தவங்க உயிர்னு நிறையா யோசிக்கவேண்டியது இருக்கும். சோ நீங்க எப்படியாவது பிஸ்னஸ் ப்ரோப்லம் சால்வ் பண்ணிட்டு தப்பு பண்ணவங்களுக்கு தண்டனை வாங்கிக்குடுத்துட்டா அவங்களால எந்த பிரச்னையும் வராதுன்னு காட்டுனா போதுமே அம்மா அண்ணி எல்லாரும் தைரியமா நம்பிக்கையோட உங்ககூட வந்துடுவாங்க. சோ நீங்களும் மனசார தெளிவா  ஆசைப்பட்ட மாதிரி குடும்பத்தோட இருக்கலாம்.. அவ்ளோதானே ப்ரோப்லேம் முடிஞ்சிடும்…” என

அவன் கண்கள் பளிச்சிட “உண்மையாவா? ஆனா எப்படி அதெல்லாம் தெரியாம பண்ணமுடியும்.?”

அக்சரா “எல்லாமே நானே எப்படி சொல்லமுடியும். ஐடியா தான் குடுக்கமுடியும்..எப்படி பண்றதுன்னு நீங்க தான் பிளேன் பண்ணணும்..”

ஆதர்ஷ் திடீரென மீண்டும் பழையபடி யோசனையில் ஆழ்ந்துவிட அக்சரா “என்னாச்சு?”

“இல்லை, மத்ததெல்லாம் ஓகே. ஆனாலும் அப்பா சித்தி கல்யாணம், பெரியப்பா சண்டை போட்டது, அம்மா பீல் பண்ணது, வீட்ல அப்போ நடந்த பிரச்சனை  எல்லாம் பத்தி நீ சொன்ன விஷயமும் கூட இதுஇது ஒருவேளை இப்டி இருக்கலாம்னு தான் சொன்னியே தவிர இதுதான் நடந்ததுன்னு சொல்லலையே. அதுக்கான காரணம் அந்த அளவுக்கு அப்டியே உண்மையா இருக்குமான்னு உடனே ஒத்துக்கமுடில. அப்படியிருக்க அந்த விஷயம் எப்படி ஏத்துக்கறது?” என

அக்சரா “ஒஹ்… இப்டி ஒரு வேளை இருந்திருக்கலாம். இந்த சூழ்நிலைல அவங்க அப்டி ஒரு முடிவு எடுத்திருக்கலாம்னு நல்லவிதமா சொல்றவிஷயத்தை ஏத்துக்கமுடில. ஆனா உங்க மனசு நம்ம அப்பா சித்தி எல்லாம் தப்பு பண்ணமாட்டாங்கனு நம்பிக்கை இருந்தும் வெளில இருக்கறவங்க பாத்து பழகறவங்க இவங்க சொத்துக்காக தான் கல்யாணம் பண்ணிருப்பாங்களோ? இல்லை அவங்களுக்கு புடிச்சுப்போயி கல்யாணம் பண்ணிருப்பாங்களோனு பேசுறத கேக்கற தப்பான கேள்விகளை மட்டும் அப்டியே எந்த சாட்சியும் இல்லாம எல்லாரும் நம்புவீங்க அப்படித்தானே?”

ஆதர்ஷ் “இல்லை அப்டி சொல்லல. ஆனா..” என இழுக்க

அக்சரா “புரியுது… குழப்பத்தோட எதையும் பண்ணாதீங்க. அதுக்கான பதில் சம்மந்தப்பட்டவங்ககிட்ட தான் நீங்க கேக்கணும். அவங்க பேச வரும் போது வேண்டாம்னு நீங்க விலக்கி வெச்சிட்டு வந்த விஷயங்களை நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க. அதுக்கப்புறம் யாரு மேல தப்புனு நீங்க நினைக்கிறிங்களோ அவங்ககிட்ட என்ன எதிர்பாக்கிறீங்க? என்ன பண்ணமுடியும்னு முடிவு பண்றிங்களோ அத பண்ணுங்க.” என்றாள்.

 

அக்சராவை பார்த்த ஆதர்ஷின் முகத்தை கைகளில் ஏந்தி அவன் கண்களை பார்த்து கூறினாள் “எல்லாமே பேசிட்டோம்னு நினைக்கிறேன். நம்ம சில எதிர்பார்ப்புகள் வெச்சுகிட்டு ஒரு விஷயத்தை அதோட பிரச்சனைய பாக்கும்போது இந்த மாதிரி பிரச்சனைகள் வரும். நீங்க இவளோ நாள் பாத்து ஒரு விஷயத்தோட மறுபக்கம் இப்படியும் இருக்கலாம்னு வேற கண்ணோட்டத்துல நான் சொல்லிட்டேன். இப்போ நீங்க இரண்டையும் வெச்சு யோசிச்சு பாருங்க. அதையும் மீறி எல்லாமே தெரிஞ்சுக்கணும்னா யார்கிட்ட கேக்கணுமோ இப்போ கேளுங்க. பதில் சொல்ல எல்லாருமே ஏற்கனவே ரெடியா தான் இருக்காங்க. அதுக்கப்புறம் யோசிச்சு எதை எப்படி பண்ணனும்னு நீங்க முடிவு பண்ணுங்க. இது முழுக்க முழுக்க உங்களோட முடிவாவே இருக்கட்டும். பிஸ்னஸ திருப்பி நீங்க பாத்துக்கறிங்க, அம்மா அண்ணி குழந்தைங்க குடும்பம்னு வாழணும்னு முடிவு பண்ணாலும் எனக்கு ஓகே. இல்லை அவங்கள கன்வின்ஸ் பண்ணி எப்படியாவது கூட்டிட்டு வந்து நாம எல்லாரும் சேந்து இருக்கலாம். சொத்து பிஸ்னஸ் மட்டும் வேண்டாம்னு நினைச்சாலும் ஓகே. இல்லை எனக்கு இப்போவும் மனசு ஏத்துக்கல.. யாருமே வேண்டாம் நீ மட்டும் இப்போமாதிரியே எப்போவுமே என்கூட இருன்னு சொன்னாலும் எனக்கு ஓகே. உங்க முடிவு எதுன்னாலும் யார் என்ன சொன்னாலும் நான் உங்ககூட இருப்பேன். உங்க முடிவுக்கு நான் சப்போர்ட் பண்றேன்.  சோ வேண்டாம்னு சொன்னா நான் பீல் பண்ணுவேன், மத்தவங்க வருத்தப்படுவாங்கனு ஒரு ஒரு தடவையும் அட்ஜஸ்ட் பண்ணிக்க ட்ரை பண்ணி உங்கள நீங்க கஷ்டப்படுத்திகிட்டது போதும். இந்த தடவை எல்லாமே உங்க முடிவு தான். எதுன்னாலும் நான் கேட்கமாட்டேன். இதுதான் நாம இதை பத்தி இவ்ளோதூரம் பேசுறது கடைசியா இருக்கும்.. சோ நீங்க ரிலாக்ஸா உங்களுக்கு என்ன வேணும்னு யோசிச்சு நிம்மதியா முடிவு பண்ணுங்க. எதுன்னாலும் I will be there with you. ஓகே?”

ஆதர்ஷ் புன்னகைக்க அவளும் புன்னகைத்துவிட்டு எழுந்து செல்ல இரண்டடி சென்றதும் சாரா என்றவன் அவள் திரும்பியதும் அணைத்துக்கொண்டான். “தேங்க்ஸ் என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு.” என்று கூறிவிட்டு விடுவித்தான். அவள் உள்ளே சென்றுவிட இவனுக்கு சற்று யோசிக்கவேண்டியது இருந்தது என தனியே வெளியே சென்றுவிட்டான்.

 

 

1 thought on “ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 32”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 09

அம்மாவுக்கு ஒரு தம்பி உண்டு. சுத்த தத்தாரி. நாங்கள் கஷ்டப்பட்ட காலத்திலே கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. நான் மிராசுதாரிடம் சிநேகிதமான பிறகு என்னை அண்டினான். அவன் அந்த உலகத்து ஆசாமி. அவன் மூலம் பணம் அனுப்புவேன். அவன் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அக்காவின்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 25ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 25

உனக்கென நான் 25 அதிகாலை எழுந்து கொண்ட சேவல்கள் அரிசியின் துயிலை தொந்தரவு செய்யவே “காலங்காத்தல கூவி எழுப்பிவிடுறீங்களா இருங்க இன்னைக்கு உங்கள்.” என மறதிற்குள்ளே அறிக்கை விடுத்துவிட்டு தன்மீது கிடந்த போர்வையை இழுத்து போர்த்தி கொண்டாள். அதிகாலையில் உறக்கம் வராமல்

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7

பாகம் – 7 “காற்றெல்லாம் உன் வாசம் உன் வாசங்களை கோர்த்து உணவாய் உண்டு இராட்சனாகிக் கொண்டிருக்கிறேன் …“   அன்று ஸ்வேதாவிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் ஏனோ குமாரை பார்த்த விசயத்தை கடைசி நொடியில் சொல்லாமல் தவிர்த்தாள் ஸ்ருதி. “இன்றைக்கு?”