Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 24

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 24

24 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

கேந்திரனுக்கு பிஸ்னஸ், பைரவிக்கு அவங்க அப்பா அம்மா தங்கச்சி கல்யாணி என குடும்பத்துடன் இணைந்தது, ஆனந்த்க்கு தம்பி மேல் இருந்த பாசம், அதோட தான் காணாத பல சொந்தங்கள் கிடைத்தது, வெங்கட்ராமன் தனக்கான அடுத்து வாரிசு என தாங்க, ஜெயேந்திரன், தனம் இருவருக்கும் இவன் வந்து சென்றதும் தான் தங்களுக்கு குழந்தை பிறந்தது என அனைவர்க்கும் ஆதர்ஷ் செல்லப்பிள்ளை அதோடு அவனை இளவரசனாக கொண்டாடினர்.

 

ஜெயேந்திரன், “எங்க சொந்தக்கார பையன் ஒருத்தன் செல்வம். எங்களுக்கு தம்பி முறை ஆகுது. அவனை நான் தான் மகேந்திரன்கிட்ட சொல்லி ஏதாவது ஹெல்ப் பண்ண சொன்னேன். கொஞ்ச வருஷம் அவன் கூட இருந்து நல்லா வேலை பாத்தேன். அதோட மகேந்திரனுக்கு நம்பிக்கையான ஆள் வேணும்னு அவனே எல்லா உதவியும் பண்ணி மகேந்திரன் ஆரம்பிச்ச க்ரானைட் செராமிக்ஸ் பிஸ்னஸ்ல பார்ட்னர் ஆஹ் சேத்துக்கிட்டான். பணம் மகேந்திரன் தான் போட்டான். இருந்தாலும் அவனுக்கு 15% பார்ட்னெர்ஷிப் குடுத்து வெச்சிருந்தான். ஆனந்த்க்கு  ஒரு வருஷம் பின்னாடி தான் செல்வம்க்கு பையன் பொறந்தான். எல்லாமே நல்லபடியாதான் போய்ட்டு இருந்தது.

ஆனந்துக்கும் ஆதர்ஷ்க்கும் 7 வருஷம் வித்தியாசம்.

அதனாலோ என்னவோ ஆனந்த் ஆதர்ஷ்க்கு அண்ணனா இருந்ததை விட ஒரு நல்ல பிரண்டா, வெல்விஷரா, ஒரு அப்பா பையனை வெச்சுக்கற மாதிரி தான் பாத்துக்குவான். ஆதர்ஷ் தான் முத குழந்தைனே சொல்லுவான்.

ஆதர்ஷ்க்கு அவங்க அப்பத்தான் ரோல்மாடல், ஹீரோ. அவங்க அப்பா அடுத்து அண்ணா என்ன சொன்னாலும் அப்டியே செய்வான். அவ்ளோ நம்பிக்கை.

அம்மா எப்போவுமே செல்லம் தான். ஆதர்ஷ் தான் உலகமேன்னு நினைக்கிற அளவுக்கு. அதைவிட அவன் சித்தி கல்யாணி இவனுக்காக என்னவேணாலும் செய்வேன்னு சொல்ற அளவுக்கு. ஆதர்ஷ்க்கும் அவன் சித்தின்னா அவ்ளோ இஷ்டம். அம்மாக்கு நிகரா அவளை நடுத்துனான். எங்களுக்கும் அவன் தான் எப்போவுமே முதல் பையன். அவங்க அம்மா வழி தாத்தா பாட்டிக்கும் சரி, அப்பா வழி தாத்தாவுக்கும் சரி அவன் தான் செல்ல பேரன். அவ்ளோ பாசமா இருந்தான்.

 

எப்போவது செல்லும் போது ஜெயேந்திரனுக்கும் மகேந்திரனுக்கும் வீட்டில் ஏதேனும் சண்டை வந்தால் இருவரும் முகத்தை திருப்பி கொண்டு செல்வது இறங்கி வராமல் பேசாமல் இருக்க ஆதர்ஷ் புரியாமல்  கேட்டான்.

“பெரியப்பா ஒரு டவுட், நீங்களும் அப்பாவும் ஏன் சண்டை போட்டீங்க?”

“ஜெயேந்திரன், உங்க அப்பா நல்லதுக்குனு தான் சொல்றேன். புதுசா ஆரம்பிக்கிற பிஸ்னஸ் நமக்கு தெரியாது. கொஞ்சம் பொறுமையா இரு. விசாரிச்சிட்டு ஸ்டார்ட் பண்ணலாம். அவசரப்படாதேன்னு சொன்னா அவன் கேக்கமாட்டேன்கிறான்.”

மகேந்திரனிடம் திரும்பி “ஏன் பா கேக்கமாட்டேங்கிறீங்க?”

“கேக்கக்கூடாதுனு இல்லைடா கண்ணா, ஆனா நான் தான் சொல்றேன்ல, பாத்துக்கறேன் எல்லாமே விசாரிச்சுட்டேன், நம்பிக்கையோட பண்ணலாம்னு. சின்னதா கார்மெண்ட்ஸ் ஆரம்பிக்க போறோம். நல்லாவந்தா தொடர்ந்து பண்ணுவோம், இல்லைட்டி விட்டர்லாம். இதுக்கு எதுக்கு இவரு இப்டி கத்தணும்? அவருக்கு பிரச்சனை நான் இதை அவங்களுக்காக முக்கியமா அண்ணி பேர்ல ஒரு சொத்து இருக்கட்டும்னு ஆரம்பிக்கறதால தான். பைரவி பேர்லையும்  கூட தான் ஷார் இருக்கு. அது இவனுங்க பெருசானதும் அப்டியே அவங்களுக்கு போய்டும். எப்போவுமே வீட்டு பொண்ணுங்க பேர்ல இருக்கற ஷேர் அதுல இருந்து வர பணத்தை அவங்க யூஸ் பண்ணலாம். ஆனா சொத்தை அவங்க எடுத்துக்க முடியாது. அதேமாதிரி நாம எல்லாரும் தான் பாத்துக்கறோம் மைண்டைன் பண்றோம்னு சொன்னாலும் லேடீஸ் இவங்க கையேழுத்து இல்லாம விக்க எல்லாம் முடியாது. அப்போதான் வீட்ல இருக்கற லேடீஸ்க்கு ஒரு பாதுகாப்பு இருக்கும், தான் யார்கிட்டேயும் போயி நிக்கனும்னு அவசியமிலேன்னு தன்னம்பிக்கை வரும். நமக்கு அவங்களுக்கு தெரியாம சொத்தை அழிக்கமுடியாது எதுவும் பண்ணமுடியாதுனு ஒரு நினைப்பு இருக்கு. அதனால தான் அண்ணி பேர்ல ஒன்னு ஆரம்பிக்கலாம்னு சொல்றேன். உங்கிட்ட ஒன்னும் நான் பணம் கேட்கல..”

ஜெயேந்திரன் “டேய் மடையன் மாதிரி பேசாத.. உனக்கு ஏதாவது லாஸ் பிரச்னைன்னா நான் பாக்காம வேற யாருடா பாப்பாங்க? அதுவுமில்லாம உனக்கு இருக்கற வேலைல இதுவுமா? உடம்பை பாருடா என்ற அக்கறைல தானே சொல்றேன். அதுக்கு எனக்கு எல்லாம் தெரியும், நீங்க அட்வைஸ் பண்ணாதிங்கனு சொல்லுவியா?” என இருவரும் மீண்டும் சண்டையிட்டு கொள்ள

குட்டி ஆதர்ஷ் “ஐயோ, நிறுத்துங்க… மறுபடியும் ஆரம்பிக்காதீங்க. என்னோட டவுட் அதுல இல்ல.”

“வேற?”

“அப்பாவும் உங்களுக்காக பாக்கறாரு.. உங்களுக்கு உங்க அண்ணா முக்கியம்.?”

மகேந்திரன் “ஆமா.”

ஆதர்ஷ் “நீங்களும் அப்பாவுக்காக பாக்கறீங்க. தம்பி தான் முக்கியமா?”

ஜெயேந்திரன் “ஆமா”

ஆதர்ஷ் “ஆர்கியூ பண்ண வரைக்கும் சரி. சண்டை போட்டு இரண்டுநாளா பேசாம இருக்கீங்களே. அப்போ உங்களுக்கு சண்டை தானே முக்கியம். தம்பி முக்கியம், இல்லை அண்ணா முக்கியம்னு நினைச்சிருந்தா நீங்க இரண்டுபேரும் பேசிருப்பிங்க தானே.  அதான் டவுட். உங்க இரண்டுபேருக்கும் சண்டை முக்கியமா, அண்ணா தம்பி முக்கியமா? எனக்கு இப்போ பதில் சொல்லுங்க ” என அவன் புரியாமல் கேட்க பெரியவர்கள் அனைவரும் வாயடைத்துப்போயினர்.

சற்று பொறுத்து ஜெயேந்திரன் “சாரி டா குட்டி. நீ கேக்கறது சரிதான்.இனிமேல் இப்டி பண்ணல.ஒழுங்கா பேசுறோம். சரியா?”

ஆதர்ஷ் “ஓகே. தேங்க்ஸ்.” என இருவருக்கும்  முத்தமிட்டு விட்டு சென்றுவிட்டான்.

பெரியவர்கள் தான் ‘ பிரச்னை ஆரம்பிக்கும்போது அவங்களுக்காக என பேச ஆரம்பித்து சண்டையில் முடியும்போது அந்த மனிதர்களையே யார்மீது கொண்ட அக்கறையினால் பேச வந்தோம் என்பதை மறந்து அவர்களிடமே நாம் ஒதுக்கம் காட்டுவது. இதில் எது சரி, எது உண்மை அந்த மனிதர்கள் முக்கியம் என்பதா? அந்த பிரச்சனை முக்கியம் என்பதா? எவ்ளோ அழகா புரியாம கேள்வி கேக்றேன்னு நமக்கு புரியவெச்சுட்டான் ‘என எண்ணிக்கொண்டே சென்றனர்.

 

ஜெயேந்திரன், மகேந்திரன் “பாத்திங்களா? எங்க பையன் எப்படி புத்திசாலியா இருக்கான். நீங்களும் தான் இத்தனை நாளா இருக்கீங்க. பிரச்சனைய தீத்துவெக்கணும்னு தோணுச்சா?” என மனைவிமார்களை சீண்ட

தனம் “அப்டியே, நாங்க சொல்றத நீங்க எல்லாரும் கேட்டுட்டாளாம்..”

பைரவி “அதானே. அதோட ஆதர்ஷ்கிட்ட சொல்லி உங்க அப்பாவும், பெரியப்பாவும் சண்டை போட்டு பேசாம இருக்காங்க நீ போயி பேசுனு அனுப்பிச்சு வெச்சதே நாங்க தான்.”

 

மகேந்திரன் “அனுப்பிச்சது நீங்க தான்னாலும் பேசுனது சந்தேகம் கேட்டதெல்லாம் ஆதர்ஷ் தானே. அதுல உங்களுக்கு என்ன பெருமை? போங்க போயி வேலைய பாருங்க ” என சீண்ட

கல்யாணி “அதேதான் நாங்களும் கேக்கறோம். கேள்வி கேட்டது பிரச்சனைய தீத்துவெச்சது அவன் தானே. இதுல என்ன உங்க இரண்டுபேருக்கும் என் பையன்னு பெருமை வேற. நீங்களே சண்டை தானே போட்டீங்க. போங்க போயி வேலைய பாருங்க மாமா” என அவர் கூறியதை திருப்பி கூற அவளை அடிக்க துரத்த ஜெயேந்திரன் “டேய் டேய், விடுடா சின்ன பொண்ணு தானே.”

மகேந்திரன் “யாரு இவளா? அட நீ வேற அண்ணா… பாக்க தான் அப்டி… ஆனா பண்ற வேலை, சேட்டை  எல்லாம் ஜாஸ்தி தான். இந்நேரம் கல்யாணம் பண்ணிருந்தா குழந்தை பிறந்திருக்குமாம்…அத்தை சொல்லிட்டே இருக்காங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிவெக்கணும்னு.. ஆனா இவளை கட்டிக்க தான் ஆளே கிடைக்கமாட்டேங்கிறானுங்க. கிடைச்சாலும் இவள பத்தி தெரிஞ்சதும் ஓடிடுவானுங்க போல.”

கல்யாணி “ஹா ஹா ஹா. மாமா இதுக்கு ஒரே வழி, நீங்களே என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க. என்னை பத்தியும் உங்களுக்கு தெரியும். நானும் இந்த வீட்டை உங்களை ஆதர்ஷ் எல்லாரையும் விட்டு போகவேண்டாம். முக்கியமா நம்ம சொத்தும் நம்மகிட்டேயே இருக்கும்ல. வெளில இருந்து ஒருத்தன் வந்தா அவனுக்கு வேற பங்கு தரணும்ல.. யோசிங்க பிஸ்னஸ் மேன்.”  என

மகேந்திரன் “அட ஆமா, இதுகூட நல்ல ஐடியாவா தான் இருக்கு. எனக்கு டபுள் ஓகே. உங்க அக்காவை கட்டுனதுக்கு இலவசமா நீயும் வரேங்கிற அதோட சொத்தும். எனக்கு என்ன கசக்குமா? வா இப்போவே உங்க அக்காகிட்ட பெர்மிஸ்ஸின் வாங்கு.” என

பைரவி இருவரையும் அடிக்க துரத்த வீடே கோலாகலமாக இருந்தது.

 

ஆதர்ஷ்ன் பிறந்தநாள் விழா அன்று அனைவரும் கூடியிருக்க ஆளாளுக்கு கிப்ட் குடுக்க ஆனந்திடம் “அண்ணா நீ நான் கேக்றத செய்வ தானே.”

ஆனந்த் “கண்டிப்பாடா. நீ தான் எனக்கு பஸ்ட் அண்ட் பெஸ்ட். சோ கண்டிப்பா நீ என்ன கேட்டாலும் செய்வேன்.”

ஆதர்ஷ் “பாத்திங்களா? நான் சொன்னேன்ல. அண்ணா நான் சொன்னா கேப்பாங்கன்னு”

மகேந்திரன் “அது அவனுக்கும் பிடிச்சதால, அவன் சரினு சொல்லிருப்பான். அவன் வேண்டாம்னு சொல்ற விஷயத்தை கூட உனக்காக பண்ணா அப்போ ஒத்துக்கலாம்.” என சீண்ட

ஆதர்ஷ் ஆனந்திடம் “அண்ணா, பாரு எப்படி சொல்ராங்கனு. நீ எனக்கு ப்ரோமிஸ் பண்ணு.”

ஆனந்த் “கண்டிப்பாடா. என்ன விஷயம்னு சொல்லு.”

ஆதர்ஷ் “நீ கல்யாணம் பண்ணிக்குவேன்னு ப்ரோமிஸ் பண்ணு.” ஒரு நிமிடம் அதிர்ச்சியான ஆனந்த் “என்ன டா, திடிர்னு இப்டி கேக்கற?”

“அப்போ நீ ப்ரோமிஸ் பண்ணமாட்டியா? என முகம் வாட ஆனந்த் “ஆதர்ஷ் இங்க பாரு, வேற ஏதாவது கேளுடா.. அண்ணா கண்டிப்பா பண்றேன்.”

ஆதர்ஷ் யோசித்துவிட்டு “சரி, ஏன் கல்யாணம் பண்ணிக்கமாட்டேனு உண்மையான ரீசன் சொல்லு. இங்க. இப்போவே.” என ஆனந்த் சிறிது சங்கடமாக உணர்ந்தாலும் “நான் இந்த வீட்டு பையன் இல்லை. மகேந்திரன், பைரவியை காட்டி இவங்க உன்னோட அப்பா அம்மா. ஆனா இந்த வீட்ல யாரும் அப்டி நடத்துறதில்ல. ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க. புதுசா ஒரு குடும்பம், உறவு எல்லாம் வரும் போது இதெல்லாம் தெரிஞ்சா பின்னாடி நிறையா கேள்விகள் பிரச்சனைகள் வரும். உங்களைவிட்டு பிரிஞ்சு போறது எல்லாம் என்னால முடியாத காரியம். எனக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்க. அதுபோதும்.”

ஆதர்ஷ் “அந்த அம்மா அப்பாவை நீ பாத்திருக்கியா அண்ணா? அவங்க சொன்னாங்களா?”

இல்லை என ஆனந்த தலையசைக்க “அப்போ உனக்கு யாரு சொன்னது…. எப்படி தெரிஞ்சது?”

“இப்போ இதெல்லாம் எதுக்குடா?”

“அண்ணா, நீ சொல்லிருக்க மேரேஜ் தவிர வேற கேளு செய்றேன்னு… எனக்கு கரெக்டா பதில் சொல்லு. என் டவுட்ட தீத்துவை…”

மகேந்திரன், பைரவி, ஜெயேந்திரன், தனம், கல்யாணி, குட்டி விக்ரம், பாட்டி, தாத்தா (பைரவியின் அம்மா, அப்பா) என அனைவரும் அங்கே இருக்க எல்லாரும் இவர்கள் உரையாடலை கவனித்துக்கொண்டிருக்க

ஆனந்த் பெருமூச்சுடன் “சரி கேளு.”

ஆதர்ஷ் “இந்த விஷயம் உனக்கு எப்படி அண்ணா தெரிஞ்சது.”

“உன்னோட 2ண்ட் பெர்த்திடே அப்போ வீட்ல எல்லாரும் ஈவினிங் பங்க்ஷன்ல பிஸியா இருந்தாங்க. நான் அப்பாவை கூப்பிட அவரு ரூம்க்கு போனேன். அப்போ செல்வம் அங்கிள் அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தாரு.

‘சும்மா ஏதோ ஒரு மூலைல பிறந்த பையனுக்கு வாழ்வ பாரேன். அவங்க அம்மா அப்பா இறந்து உங்ககிட்ட கிடைச்சு அவன் ராஜா மாதிரி வாழணும்னு அவன் தலைல எழுதிருக்கு. உங்களுக்கு உண்மையாவே பெரிய மனசு அண்ணா. ஆனாலும் பின்னாடி எதுவும் பிரச்சனை எல்லாம் வராதுல? ஆதர்ஷ் பெருசாகி ஆனந்த் தன்னோட சொந்த அண்ணா இல்லேனு தெரிஞ்சு சொத்து பிரச்சனை, இல்ல ஆனந்த்க்கு கல்யாணம் ஆகி அவங்க வர குடும்பத்துல இருந்து பேச்சை கேட்டுட்டு இவன் மாறுறது எல்லாம் எப்படினு யோசிங்க அண்ணா..” என

மகேந்திரன் “செல்வம், ஒண்ணாவே பொறந்து வளந்தாலும் பின்னாடி சண்டை போட்டு பிரிஞ்சு போற அண்ணன் தம்பிய நாம பாக்கறதில்லையா? பழக்கத்துலனால அண்ணன் தம்பியா உதவி பண்றவங்களும் இருகாங்க. அத எல்லாம் நாம இப்போவே முடிவு பண்ணமுடியாது. அதோட எனக்கு என் இரண்டு பசங்க மேலையும் நம்பிக்கை இருக்கு. அவனுங்க ஒண்ணாதான் இருப்பாங்க. முக்கியமா ஆனந்த்  ஆதர்ஷ முதல் பையன் மாதிரி பாத்துக்குவான். ஆதர்ஸும் ஆனந்தனை எனக்கு சமமான ஒரு இடத்துல வெச்சிருக்கான். அடுத்தபடியான இடத்துல கூட இல்ல. சமமா. புரியும்னு நினைக்கிறேன். அதனால என் 2பசங்கள பத்தி நீ கவலைப்படாத.  அவனுங்க பாத்துக்குவானுங்க.”

சுதாரித்த செல்வம் “ஐயோ அண்ணா, நான் பிரியணும்னு எல்லாம் சொல்லல. உலக நடப்பை தான் சொன்னேன். தப்பாயிருந்தா மன்னிச்சிருங்க.” என அவரது தோளில் தட்டி “விடு செல்வம், நான் தப்பா நினைக்கல. நீ மனசுல இருக்கறத பட்டுனு கேட்டற. ஆனா குழந்தைங்க முன்னாடி மத்தவங்க முன்னாடி எல்லாம் இப்டி கேக்காத, சொல்லாத. முக்கியமா ஆனந்த் என் பையன் தான். அந்த நினைப்பு தான் எப்போவும் மனசுல இருக்கனும்.” என கூறிவிட்டு நகர்ந்தார்.’

என கூறிய ஆனந்த் “அப்போதான் தெரிஞ்சது, அப்புறம் ஒரு நாள் அம்மா அப்பாகிட்ட இதப்பத்தி நேராவும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.  அவங்களும் ஆமான்னு சொன்னாங்க.. ஆனா அவங்க யாரும் என்னை ஒதுக்கல. நல்லாத்தான் பாத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் என்னால தான் அவங்ககூட முதல இருந்தமாதிரி இருக்கமுடில.” என வருத்தம்கொள்ள

ஆதர்ஷ் “அண்ணா, அந்த அம்மா அப்பா அவங்க சொந்தக்கரவங்க யாராவது உன்னை வந்து கூட்டிட்டு போவாங்கன்னு யோசிக்கிறியா? அதுக்கு தான் பீல் பண்றியா?”

ஆனந்த் மெலிதாக புன்னகைத்துவிட்டு “அப்படியெல்லாம் இல்லடா. அவங்க இரண்டுபேரும் இறந்துட்டாங்க. யாரும் எனக்காக வரமாட்டாங்க. எனக்கு சொந்தம்னு யாரும் இல்லை, தெரியவும் தெரியாது.”

ஆதர்ஷ் “அப்போ உனக்கு என்ன பிரச்சனை. அத அப்டியே விட்ரு. எப்போவும் போல இரு. இவங்க தான் நம்ம அப்பா அம்மா, நம்ம தாத்தா பாட்டி, பெரியம்மா பெரியப்பா. இதுதானே நம்ம சொந்தம். எல்லாருக்கும் மேல நான் உன் தம்பி இங்க இருக்கேன்ல. அப்புறம் ஏன் நீ யாருமிலேன்னு சொல்ற என அவன் கட்டிலின் மேல் எழுந்து நின்று இடுப்பில் கைவைத்து வினவ அனைவரும் இதை கண்டு இறுக்கம் தளர்ந்து சிரித்தனர்.

ஆனந்த் சிரித்துவிட்டு அவனை அருகில் இழுத்து “எல்லாம் சரிதான்.. நீதான் என் தம்பி. நான் இங்க இருந்து உங்க எல்லாருக்கும் வேணும்கிறத ஒரு வேலைக்காரனா இருந்து எல்லாமே செய்றேன். எனக்கு அதுவே போதும். அதுதான் சந்தோஷமே.”

ஆதர்ஷ் தலையில் அடித்துக்கொண்டு “நீயே எல்லா வேலையும் செய், எல்லாருக்கும் செய் யாரு வேணாம்னு சொன்னது. அத நீ இந்த வீட்டு பையனா என் அண்ணவாவே இருந்தே செய்யலாமே. எதுக்கு பாவம் வேலைகாரங்க வேலைய  இழுக்குற. அப்புறம் அப்பா அவங்கள வேலைய விட்டு நிறுத்திடபோறாரு..” என ஆனந்த் வாய்விட்டு சிரித்துவிட்டு ஆதர்ஷ மடியில் உட்காரவைத்துக்கொண்டு “சேட்டைடா உனக்கு..”

ஆதர்ஷ் “எனக்கு ஒன்னும் சேட்டை இல்லை. உனக்கு தான் அண்ணா. சொன்னபேட்ச்ச கேக்கமாட்டேன்கிற. சொல்லித்தந்தத மறந்துட்ட.” என அனைவரும் விழிக்க

ஆதர்ஷ் தொடர்ந்து “பின்ன, நீ தானே சொல்லிருக்க, அப்பா அம்மா சொல்றத கேக்கணும்னு. நம்ம அப்பா அம்மா நாம இரண்டுபேரும் அவங்க பசங்கனு தானே சொல்ராங்க. நீ ஏன் இப்டி உளறிட்டு அவங்கள கஷ்டப்படுத்துற. பாரு மம்மி பீல் பண்ராங்க.”

ஆனந்துக்கும் வருத்தமாக இருக்க “சரிடா இனிமேல் இந்த வீட்டு பையன் இல்லேனு சொல்லமாட்டேன். ஓகே வா?”

ஆதர்ஷ் “சொல்லமாட்டேனு மட்டும் சொல்ற…அப்போ நினைப்பியா? நினைக்கவே கூடாது. நீதான் எனக்கு அண்ணா. யாருக்காகவும் என்னை விட்டுட்டு எப்போவுமே போகக்கூடாது. இதுதான் நம்ம வீடு ஓகே வா?”

ஆனந்தும் மனபாரம் நீங்க மகிழ்வுடன் தலையசைத்தான்.

பைரவியிடம் சென்று “அம்மா, சாரி மா.”

“பேசாதடா… எப்டியோ உனக்கு விஷயம் தெரிஞ்சிடிச்சு. அவ்ளோதானே தவிர நாங்க யாராவது உன்னை வெளியாள் மாதிரி நடத்துனோமா. இந்த 3 வருசமா எவ்ளோ ஒதுங்கி ஒதுங்கி போற. அப்டி என்னடா உனக்கு நான் குறை வெச்சேன். இங்க பாரு. உன்னை பெத்தது வேணா என் பிரண்ட் உன் அம்மாவா இருக்கலாம். ஆனா அவ உன்னை பாக்கிறதுக்குள்ள அவன் புருஷன் இறந்துட்டான்னு விஷயம் கேள்விப்பட்டதும் இறந்துபோய்ட்டா. உன்ன முதல கைல வாங்குனதுல இருந்து வளத்துன வரைக்கும் எல்லாமே நான்தானே பண்ணேன். திடிர்னு எப்பிடிடா இப்டி விலகிப்போவ? வெளில இருக்கறவங்க ஆயிரம் சொல்லுவாங்க. உனக்கு என்கிட்ட பிரச்னைன்னா என்னை தானே கேக்கணும். நீ காலேஜ் தான் போயிருக்க. நீ வளந்துட்ட. அவ்ளோதானே தவிர எப்போவும் என் பையன் தான். இனிமேல் இதை மறந்த அப்புறம் மொத்தமா இந்த அம்மாவை நீ மறந்திட வேண்டியதுதான்.” என கண்ணீர் சிந்த ஆனந்த் தான் செய்த தவறை எண்ணி வருத்தம் கொண்டான்.

“ப்ளீஸ் மா, அப்டி சொல்லாத. நீதான் எனக்கு எப்போவுமே அம்மா. இனிமேல் நான் யார் என்ன சொன்னாலும் பீல் பண்ணமாட்டேன். நீங்க எல்லாரும் என் மேல இவளோ பாசமா இருந்தும் நான் ஒதுங்கி போயி உங்களை கஷ்டப்படுத்திட்டேன். மன்னிச்சிரு மா.ப்ளீஸ்.”

கல்யாணியும் “சரிசரி விடு டா.. இனிமேல் நீயா எதுவும் மனசுல போட்டு கொழப்பிக்காத… ” என அனைவரும் அவனை அரவணைக்க உண்மையாகவே ஆதர்சால தன் குடும்பம் மனதளவில் மீண்டும் தனக்கு கிடைத்துவிட்டதென எண்ணி அவனிடம் சென்று மண்டியிட்டு “தேங்க்ஸ் டா.” என கட்டிக்கொள்ள அவனும் கட்டிக்கொண்டு  “எனக்கு தேங்க்ஸ் வேணாம். அண்ணி தான் வேணும்.” என மீண்டும் அவன் முதலில் இருந்து ஆரம்பிக்க ஆனந்த் “டேய் மறுபடியுமா?”

“ஆமா, நீ என்ன சொன்ன அண்ணா. நான் இந்த வீட்டு பையன் இல்லை. நான் கல்யாணம் பண்ணிட்டு வந்து அவங்க ஏதாவது சொன்னாங்க இல்லை இந்த வீட்டை விட்டு பிரியறது எல்லாம் முடியாதுனு. இப்போதான் அது எல்லாம் பேசி தீத்துட்டோமே. நீயும் அத பத்தி நினைக்கமாட்டேனு சொல்லிட்டே. அப்புறம் என்ன.?” என படு நியாயமாக பேச ஆனந்த் அனைவரையும் பாவமாக பார்க்க அவர்கள் இவனை எப்டியோ சமாளி என விட்டுவிட ஆனந்த் இறுதியில் “சரிடா. கல்யாணம் பண்றேன்…”

“எப்போ.?”

“டேய், இப்போதான்டா. நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கேன். கொஞ்சம் இன்னும் படிச்சிட்டு ஜாப் எல்லாம் பாத்து என்னோட இந்த அழகான பாமிலிக்கு வேணும்னுகிறத கொஞ்சம் நானே செஞ்சிட்டு அப்புறம் பண்ணிக்கறேன். ஒரு 4 வருஷம் போகட்டும் சரியா?” என

ஆதர்ஷ் ” அண்ணா, யோசிச்சு பாத்த நீ சொல்றதும் நியாயமா தான் இருக்கு. சரி அப்புறமா கல்யாணம் பண்ணிக்கோ. என பெரிய மனிதன் தோரணையில் சொல்ல ” அனைவரும் சிரித்தனர்.

ஆனந்த் “சரி, எனக்கு கல்யாணம் பண்ணணுன்னு உனக்கு யாரு சொன்னது.”

ஆதர்ஷ் விழிக்க

தனம், கல்யாணி, பைரவி அனைவரும் “நாங்க தான் டா. நீ என்னமோ சாமியார போறவன் மாதிரி இருக்க. வாழ்க்கையே வெறுத்தமாதிரி. உன் பிரண்ட்ஸ்கிட்ட ஏதாவது லவ் கிவ்னு கேட்டு பாத்த அட நீங்க வேற அவன் வாழ்க்கைல நான் கல்யாணமே பண்ணிக்கமாட்டேன்னு முடிவுல இருக்கான். முதல அத மாத்துங்கனு ஒரு லிஸ்ட்டே உன்னை பத்தி கம்பளைண்ட் சொல்றனுங்க. அதுதான் ஆதர்ஸகிட்ட சொல்லி உன்கிட்ட கல்யாணத்துக்கு ப்ரோமிஸ் வாங்க சொன்னோம். அவன்கிட்ட நீ சொன்னதை மீறமாட்டேன்னு தெரியும். எப்படி எங்க பிளான் ?” என

ஆனந்த் அனைவரும் தன் மேல் கொண்ட அன்பை எண்ணி மகிழ

ஆதர்ஷ் “எனக்கு இன்னொரு டவுட்… ”

ஜெயேந்திரன் “இப்போ என்னடா?”

“எதுக்கு கல்யாணம் பண்ராங்க? பண்ணாட்டி என்ன ஆகும்?” என கேட்க இப்பொது விழிப்பது அனைவரின் முறையாயிற்று. ஒரு 10 வயது சிறுவனிடம் அவனுக்கு புரியும் வகையில் எப்படி சொல்வது என திண்டாடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் வரம் யாசித்தேன் – 2காதல் வரம் யாசித்தேன் – 2

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட, விருப்பம் தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இனி இரண்டாவது பகுதி உங்களுக்காக. [scribd id=274858235 key=key-jUSAoH52InQBC0rczoel mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

Chitrangatha – 52, Chitrangatha – 53Chitrangatha – 52, Chitrangatha – 53

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. சீதாராம கல்யாணம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுன்னு உங்ககிட்ட இருந்து வந்த செய்திகளைப் படித்தேன். நன்றி நன்றி நன்றி. உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க மனமில்லாமல் இன்னைக்கு இரண்டு பகுதிகளை சேர்த்துத் தருகிறேன். படிங்க ,

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 33ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 33

33 – மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரி மதி தனியாக அறையினுள் இருப்பதை உணர்ந்து நேராக சென்று பேசலானாள். “என்ன சந்திரா? எப்போப்பாரு வேலையே செஞ்சுகிட்டு இருக்க. ரெஸ்ட் எடுக்கலையா? ” “இல்ல அண்ணி, நிச்சயம் வேலை வேற இருக்கில்ல… நான்தானே பாக்கணும்.”