Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 19

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 19

19 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

மறுநாள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க அக்சரா எப்போவும் போல காபியுடன் வந்தாள். அவள் முகத்தில் தெரிந்த தெளிவு மகிழ்ச்சி கண்டு ரஞ்சித், ஆதவ் இருவரும் தங்களுக்குள் நிம்மதியடைந்தனர். அக்சரா பொதுவாக பேச வம்பிழுக்க என இருந்தாலும் ரஞ்சித், ஆதவ் இருவரும் எதுவும் கூறாமல் இருக்க இறுதியில் அவர்களிடமே அக்சரா கேட்டுவிட்டாள் “என்னாச்சு, உங்க இரண்டுபேருக்கும். ஏன் அமைதியா ஒரு மாதிரி இருக்கீங்க?”

“…………………………………………..”

“என்னாச்சு கேக்கிறேன்ல?”

ஆதர்ஷ் “உனக்கு நான் முக்கியமா? ரஞ்சித் முக்கியமா?”

அக்ஸா இதை கேட்டு சிரிக்க

ரஞ்சித் “சிரிக்க கேட்கல அக்ஸா. பதில் சொல்லு. எங்களுக்கு தெரிஞ்சாகணும்..”

அக்ஸா “என்ன இரண்டுபேருக்கும் போர் அடிக்கிதா? என்கிட்ட வம்பிழுக்கிறீங்களா?”

ரஞ்சித் “நீ அவன் சொல்றததான் கேப்பியாம். அவன் தான் உனக்கு முக்கியமா?” என ஆதர்சை காட்டி கேட்க அக்சரா பதில் கூறும்முன்

ஆதர்ஷ் “நீ அவன் சொல் பேச்சை எப்போவுமே மீறுனதே இல்லையாம்.. அவன் சொன்னது எதுன்னாலும் அப்டியே ஒத்துக்கிவியாம்..அப்டியா?”

அக்சராவிற்கு சங்கடமாக இருக்க “பாருங்க, உங்க இரண்டுபேருக்கும் என்ன பிரச்னை. எனக்கு நீங்க 2பேருமே தான் முக்கியம். அது உங்களுக்குமே தெரியுமே… இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?”

ரஞ்சித் “அது எங்களுக்கு தெரியும், இப்போ அது இல்லை பிரச்சனை. கேட்ட கேள்விக்கு பதில்… அவன் தான் முக்கியமா?”

ஆதவ் “இல்லை உனக்கு ரஞ்சித் முக்கியம்னா அவனுக்கு என்னை பிடிக்கலேன்னு சொன்னா என்னை விட்டுட்டு போய்டுவியா?”

அக்சரா “என்ன பேசுறீங்க 2பேரும்? ஏன் இவ்ளோ சீரியஸா?” என அவள் பதற

ஆதவ் “சாரா, ஜஸ்ட் டெல்  மீ தி அன்சர் (just tell me the answer) யார் முக்கியம்?”

ரஞ்சித் “அக்ஸா, நீ தயங்காம சொல்லு.. நான் பாக்கிற பையன தான் நீ கல்யாணம் பண்ணிக்குவேன்னு..”

ஆதவ் “எப்படியும் அவ நீ கேக்றதுக்கு முடியாதுனு தான் சொல்லப்போறா.. அசிங்கப்படாம இங்க இருந்து கிளம்பி போயி வேலை பாக்கிற வழிய பாரு.”

ரஞ்சித் “டேய் அவன் என் தங்கச்சிடா..” என அவன் சட்டையை பிடிக்க

ஆதவ் “அவன் என் பொண்டாட்டிடா.” என இவனும் அவன் சட்டையை பிடிக்க

அக்சரா இருவரையும் விலக்கி விட்டு “ப்ளீஸ் 2பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க… என்ன பிரச்னை உங்களுக்கு..எதுக்கு சண்டை போடறீங்க?”

ரஞ்சித் “நீ தெளிவான பதில் சொன்னா எங்களுக்குள்ள சண்டை வராது. உனக்கு நான் முக்கியமா அவன் முக்கியமான்னு சொல்லிடு. இன்னொருத்தர் உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டோம்.”

ஆதவ் “அவன் உனக்கு ஒரு பையன் பாத்துவெச்சிருக்கானாம்… அவனை தான் கல்யாணம் பண்ணிக்கணுமாம். அவன் சொன்னா எதுன்னாலும் கேப்பியாம் …உன் பதில்ல தான் சாரா எல்லாமே இருக்கு… நீ சொல்லு.”

அக்ஸா ஏதோ சிறு பிரச்னை என நினைத்தால் இப்டி இருவரும் அடித்துக்கொள்வதை பார்த்தால் என்ன செய்வது என அமைதியாக அமர

ரஞ்சித் “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அக்ஸா”

அக்ஸா “ரஞ்சித் எனக்கு பிரண்ட் மட்டுமில்லை. அண்ணா வெல்விஷர் எல்லாமே..அவன் சொல்றத இதுவரைக்கும் நான் மீறுனதே இல்லை. எனக்கு எப்போவுமே நல்லததான் செய்வான். அவன் என்னை பாதிக்கிற எதுவும் எனக்கு குடுக்கமாட்டான். அவன் என் லைப்ல எப்போவுமே வேணும்.” என ரஞ்சித் பெருமையாக ஆதர்சை பார்த்தான்.

அக்சரா தொடர்ந்து “ஆதவ் எனக்கு ஜஸ்ட் இப்போ பழக்கம் அதனால வந்த பீல்னு மட்டும் தோணல..இதெல்லாம் தாண்டி அவர்தான் எனக்கு எல்லாம்னு என் மனசு எப்போவோ சொல்லிடிச்சு. அவரால என்னை கஷ்டப்படுத்தவே முடியாது. அவ்ளோ நம்பிக்கை அவர்மேல். என்னை எனக்கே தெரியாத அளவுக்கு சந்தோசமா வெச்சுக்க அவரால தான் முடியும். என் பயம், கோபம், கவலை எல்லாத்தையும் மறக்கடிக்க, என்னை நார்மலாக்கி நிம்மதியா சந்தோசமா வெச்சுக்க அவரால மட்டும் தான் முடியும். ஆதவ் தான் என் லைப்.”

“நீங்க இரண்டுபேரும் என் வாழ்க்கைல எவ்ளோ முக்கியம்னு எனக்கு இதுக்கு மேல சொல்ல தெரில. உங்களுக்குள்ள என்ன பிரச்னைன்னு எனக்கு தெரில. ஆதவ்விடம் “உங்கள தவிர என் லைப்ல அந்த இடத்துல வேற யாரும் இருக்கமுடியாது.”

“ரஞ்சித் நீ சொல்றமாதிரி எனக்கு வேற பையன பாத்து கல்யாணம் பிக்ஸ் பண்ணிருந்தா அத நிறுத்திடு. உனக்கு அவரை எப்போ ஓகேன்னு சொல்றியோ நான் அப்போ கல்யாணம் பண்ணிக்கறேன். எனக்காக ஆதவ் வெய்ட் பண்ணுவாரு..ஆனா வேற யாரையும் கண்டிப்பா நினைச்சுக்கூட பாக்காத.”

“இதுதான் பிரச்சனைன்னா இதுதான் என் முடிவு. இதோட இந்த டாபிக்க விட்ருங்க.. ப்ளீஸ் நீங்க இரண்டுபேரும் இனிமேல் சண்டை போடாதீங்க. என்னால தாங்கிக்கமுடில..” என தலை குனிய அவள் கண்களில் இருந்து கண்ணீர் இதோ அதோ என தேங்கி நின்று வெளியே வர பார்க்க அருகே வந்து அமர்ந்த ஆதவ் “ஹே, என்னடி அழுகற… மச்சானுக்கு தெரிஞ்சா அடிப்பானே? டேய் மச்சான். ஏன்டா என் பொண்டாட்டிய அழுகிற வரைக்கும் பயமுறுத்துன?”

ரஞ்சித் “என்னது??, டேய் பிராடு மாப்பிள்ளை, நான் மட்டுமாடா..நீயும் தான இதுல இருந்து ட்ராமா பண்ண?”

அக்ஸா “என்ன ட்ராமாவா?”

ரஞ்சித் “எஸ் டா, அக்ஸா… தங்கச்சிகூட விளையாண்டு ரொம்ப நாள் ஆச்சு. அதோட எப்பவுமே நீதானே இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணி எல்லாரையும் பதறவைப்ப. சோ அதான் சான்ஸ் கிடைச்சதும் நாங்க கொஞ்சம் ட்ரை. ஆக்சுவலி நான் உனக்கு பாத்த மாப்பிள்ளையே இவன் தான் என ஆதர்சை காட்டினான்”

ஆதவ் “சும்மா, ஜாலிக்கு டா சாரா.. நானும், நம்ம கல்யாண வேலைய பாக்க தான் அவனை ஊருக்கு போடா வேலைய பாருடான்னு சொன்னேன். என்ன உங்க அண்ணன் இவ்ளோ ஸ்லொவ இருக்கான்..”

அக்சரா இருவரையும் முறைக்க “எது எதுல விளையாட்றதுன்னு இல்லை… இடியட்ஸ்.” என இருவர் காதையும் பிடித்து திருக பிரியா வாசு இருவரும் பார்த்துக்கொண்டிருக்க “உங்களுக்கு முன்னாடியே விஷயம் தெரியுமா?”

பிரியா “அய்யயோ.. எனக்கில்லைபா.. நான் இப்போதா அவங்கள பாக்கிறேன்..”

வாசு “இல்ல தங்கச்சி… நானே இந்த சண்டையை உண்மைன்னு நம்பி ஷாக்ல இருந்தேன்.” என இருவரும் இங்கே “வலிக்கிது, வலிக்கிது” என கத்த அக்சரா காதை விட்டுவிட்டு நன்றாக திட்ட ஆரம்பித்தாள். திட்டி முடித்து சென்று அவள் அமர்ந்ததும் இருவரும் அவளுக்கு இருபுறமும் வந்தமர்ந்து மன்னிப்பு படலம் வாசிக்க அவர்களை கெஞ்ச வைத்து பின் பரவால்லை என அவளும் சிரித்துவிட்டாள். இருந்தாலும் என்கிட்ட இனிமேல் இப்டி விளையாண்டிங்க அப்புறம் நான் இதைவிட மோசமா பிளான் போட்ருவேன்..

இருவரும் “இல்லை இல்லை. இதுதான் பஸ்ட் அண்ட் லாஸ்ட். இனி பண்ணமாட்டோம்.” என சத்தியம் செய்ய

வாசு, பிரியா “சரி, நீங்க இரண்டுபேரும் எப்போ பேசுனீங்க? எப்படி செட் ஆச்சு. எப்படி இவங்க லவ் விஷயம் தெரிஞ்சது?” என கேட்க

 

முந்தியநாள் உண்டுமுடித்து ரஞ்சித், ஆதர்ஷ் இருவரும் கிளம்பியபிறகு பேசியதை கூறினர்.

[ரஞ்சித் “நேராவே விஷயத்துக்கு வரேன்… அக்சராவும் நீங்களும் விரும்பறீங்க தானே…எனக்கு அக்ஸா பிரண்ட் மட்டுமில்லை தங்கச்சியும் கூட. அக்ஸா ரொம்ப நல்ல பொண்ணு. செம ஷார்ப். ரொம்ப பாசம். சேட்டை. அன்பாலையே எப்படியும் அடுத்தவங்களை இழுத்துடுவா..நான் ரொம்ப மூடி டைப். சொல்லிருப்பாங்களே? எனக்கு அப்பா அம்மா எல்லாரும் இறந்து படிப்பை விட்டுட்டு வேலை பாத்து கடைசில தான் அக்ஸா படுச்ச ஸ்கூல்ல சேந்தேன். யார்கிட்டேயும் நான் பழகவேமாட்டேன். ஒண்ணு பரிதாபமா பாப்பாங்க, இல்லை இவனெல்லாம் ஒரு ஆளான்னு பாப்பாங்க. எனக்கு இரண்டுமே பிடிக்கல. அக்ஸா தான் என்கிட்ட பஸ்ட் வந்து பேசுனா..ஆனா அவ என்கிட்ட படிப்புல விளையாட்டுல இப்டி டவுட் கேட்க, ஹெல்ப் கேக்கத்தான் வருவா. அப்டியே கொஞ்சம் நல்லா பழக ஆரம்பிச்சதும் அவங்க பிரண்ட்ஸ அறிமுகப்படுத்தினா. அதுக்கப்புறம் தான் எனக்கே புரிஞ்சது என்கிட்ட நேரா வந்து பிரண்ட்ன்னு கேட்டாலும் நான் முடியாதுனு போயிருப்பேன். திட்டி சண்டைபோட்டாலும் கண்டுக்கமாட்டேன். ஆனா இந்த வாலு தினமும் ஒரு காரணம் சொல்லி சாதாரணமா பேசி என்னவே ரெகுலரா சாதாரணமா பேசவெச்சுட்டா. அப்புறம் அப்டியே கொஞ்சம் கொஞ்சமா அக்ஸா அவ காங்க் பிரண்ட்ஸ்கூட பழகுனேன். ரொம்ப கிளோஸ்ன்னு பாத்தா அக்ஸாவும், ப்ரியாவும் தான்.. ப்ரியாவும் நல்ல பொண்ணு. அவ வீட்லயும் என்னை அறிமுகப்படுத்துனா..அவங்களும் நல்லவங்க தான் எதுமே சொல்லமாட்டாங்க. ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. உன் வீட்ல இருக்கறமாதிரி பிரீயா இருன்னு சொல்லுவாங்க. என்ன பண்றது அவங்கள குறை சொல்லமுடியாது.. ஆனா அந்த வாசகத்தை கேட்டாலே ஆமால நம்ம வீடு இது இல்லன்னு ஞாபகப்படுத்துற மாதிரி தோணும். பிரண்ட்ஸ், அவங்க பேரெண்ட்ஸ் எல்லாரும் நல்லவங்க தான். அவங்க சொல்ற விஷயத்தை என்னால தான் சாதாரணமா எடுத்துக்கமுடில. ஆனா அக்ஸா டோடல் டிஃபரென்ட்.. எனக்கு இன்னும் நான் அவங்கவீட்டுக்கு முதல் தடவையா போனது ஞாபகம் இருக்கு. அவ என்னை அவங்க வீட்ல அறிமுகப்படுத்தும் போதே “என் அம்மா, என் அப்பான்னு சொல்லல.. அண்ணா இங்க வாயேன்.. அம்மா சொன்னேன்ல ரஞ்சிண்ணாவ கூட்டிட்டு வரேன்னு..இவங்க தான் அது.. அண்ணா இவங்க தான் நம்ம அம்மா, அவரு தான் நம்ம அப்பா, அவங்க நம்ம பாலா மாமா, நந்து மாமா, பார்வதி அத்தை உமா அத்தை.. நம்ம பயில்வான் அனீஸ் குட்டி.. டேய் கண்ணா மாமா பாரு…” என அவ எல்லா சொந்தத்தையும் நம்ம சொந்தம்னு சொல்லித்தான் கூட்டிட்டு போனா.  அவங்களும் அப்டித்தான் என்னை நடத்துவாங்க.

ஏதாவது வீடு பங்க்ஷன் எல்லாம் இருந்தாக்கூட என்னை தனியா இன்வைட் பண்ணவும் மாட்டா. அதேமாதிரி நீயே வான்னு விட்டுட்டு போகமாட்டா. என்னை கூப்பிட்டே எல்லா வேலையும் செய்றதுக்கு போவா. அவளை டென்ஷன் பண்ணா பேர் சொல்லி கூப்டுவா.. இல்லை ரஞ்சிண்ணான்னு கூப்டுவா… ப்ரியாக்கும் எனக்கு எப்போவும் சண்டை வரும். இத்தூனுண்டு வாண்டு இது வந்து எங்களுக்கு பைசல் பண்ணும். எங்க மூணு பேர்ல அக்ஸா தான் சின்னவ…” என அவன் கூற ஆதர்ஷ் குட்டி அக்ஸாவை எண்ணி சிரித்தான்.

“இது எல்லாமே பண்ணும்போது அவ வெறும் 7த் தான். எனக்கே ஆச்சரியமா இருக்கும். இந்த வாண்டுகிட்ட மட்டும் நாம ஏன் அடங்கி போறோம்னு… ஆனா அவ தெளிவா பிளான் பண்ணி பண்ணுவா. முன்னாடியே அவ பிரண்ட்ஸ விட்டு ஒரு விஷயத்தை நான் எப்படி எல்லாம் வேண்டாம்னு ஒதுக்கறேன்னு பாத்துக்குவா.. அப்புறம் வேற வழியே இல்லாத மாதிரி அந்த விஷயத்தை எனக்கு செஞ்சிடுவா… பிராடு.. எக்ஸாம்பிள் என்கூட அவ பழகுனது …  எல்லாமே பின்னாடி பிரியா சொல்லி தான் தெரியும். அவகிட்ட கேட்டா தெரில அண்ணா, ஏனோ உங்கூட எப்போவும் பேசணும், இருக்கணும்னு தோணும். இதை நேரா சொன்னா நீ கேக்கமாட்ட அதான் இப்டி பிளான் போட்டேன்னு சொல்லிட்டு போய்டுவா.

அப்புறம் அப்டியே ஸ்கூல், காலேஜ்,வேலை இப்போ இங்க வரைக்கும்…எந்த சூழ்நிலையிலும் அவளுக்கு எந்த பிரச்னையும் வரவிடமாட்டேன். எனக்கு என்னோட மொத்த பேமிலி, பிரண்ட், தங்கச்சி, எங்க செல்ல பொண்ணு எல்லாமே அவதான். அவளை கஷ்டப்படுத்துற எதுமே அவபக்கத்துல நெருங்ககூட விடமாட்டேன். அதுக்கு காரணமானவங்க யாரா இருந்தாலும் நான் உயிரோடவே விடமாட்டேன்..அதேமாதிரி அவ ,ஆசைப்பட்டது கண்டிப்பா நடக்கணும். அதப்பாத்து சந்தோசப்படற முதல் ஆள் நானா தான் இருப்பேன். அக்ஸா எனக்கு அவ்ளோ முக்கியம்.

எனக்கு உண்மையாவே அவங்க அப்பா அம்மா எல்லாரும் இறந்து அவ என்கூட வரமாட்டேன்னு சொல்றவரைக்கும்  அது என் குடும்பம்னு ஒரு பீல் தான் இருந்தது. அதுல தான் ஒரு சின்ன ப்ரோப்லேம். மத்தபடி அவளுக்கு எப்போ எது தேவைன்னாலும் நான் கண்டிப்பா அங்க இருப்பேன்.

அவளை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?”

ஆதர்ஷ் “ஆமா… அவதான் எனக்கு எல்லாமேங்கிற அளவுக்கு பிடிக்கும்.”

“எதனால? எந்தளவுக்கு?”

“எதனாலன்னு கேட்டா வெளிப்படையா சொல்ல நிறையா காரணம் இருக்கலாம்.. எனக்கே தெரியாத எனக்கு பிடிக்காத தப்பை செஞ்சா அதை அதட்டி சொல்றது, எனக்கு பிடிச்ச ஆனாலும் நான் தயங்குற எல்லாமே எனக்கே தெரியாம செய்ய வெக்கிறது, எனக்குள்ள இருந்து என்னை அழகா ஆட்சி செய்றது எல்லாமே.. என்னை மறந்து சிரிக்கவெச்சது, என்னை நிம்மதியா தூங்க வெச்சது, என்னவே எனக்கே திரும்பி பாக்கவெச்சது எல்லாமே அவகூட இருக்கும்போது மட்டும் தான். எல்லாத்துக்கு மேல என்னோட எல்லா குழப்பத்தையும், தயக்கத்தையும், கோபத்தியும் அவகூட இருக்கும்போது தான் நான்

சாதாரணமா ஹாண்டில் பண்றேன். இல்லாட்டி அதுதான் என்னை ஹாண்டில் பண்ணும். என்னை என்னைவிட அழகா அடக்குற வித்தை அவகிட்ட தான் இருக்கு.

எந்தளவுக்குனு கேட்டா ‘சில கடமைகள் இருக்கு அதுக்காக வாழணும்னு நினச்சவன் நான். அவ்ளோ குழப்பங்கள், பிரச்சனை எல்லாமே..அதைத்தாண்டி பெருசா எதுவும் யோசிக்கல, ஆசைப்படல. ஆனா அவளை நான் சந்தோசமா வெச்சுக்கணும், அத நான் தினமும் பாத்து ரசிக்கணும்ங்கிறதுக்காகவே நான் எந்த குழப்பமும் தயங்கமும் இல்லாம  வாழணும்னு ஆசைப்பட்டேன் அவ்ளோ பிடிக்கும். என்னோட காதலி, மனைவி மட்டுமில்லை என்னோட அம்மா, பிரண்ட், முதல் குழந்தை, என்னோட ஸ்வீட் ராட்சஷி எல்லாமே அவதாங்கிற அளவுக்கு பிடிக்கும்.” என

ரஞ்சித் புன்னகைக்க ஆதர்ஷ் “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

அவன் தலையசைக்க ஆதர்ஷ் “என் சாராவ நான் எப்போவும் கஷ்டப்படுத்தக்கூடாது. ஆனா என்னோட குழப்பம், கோவம், என்னோட கடந்த கால வாழ்கை என்னை மீறி என்னோட உணர்ச்சிகளை வெளில காட்டி அவளை கஷ்டப்படுத்திடுவேனோன்னு மட்டும் தான் பயமா இருக்கு. அப்டி ஒருவேளை நான் நடந்துக்கிட்டா நீங்க சொன்னதை செய்யணும். அவளுக்கு பிரச்சனை குடுக்கிற யாரா இருந்தாலும் உயிரோட விடமாட்டேனு சொன்னிங்கள்ள? அத பண்ணனும் அது நானாவே இருந்தாலும் எனக்கு அந்த தண்டனை கிடைக்கணும்.  என் சாராவை காயப்படுத்துற எதையுமே என்னால அவகிட்ட நெருங்கவிடமுடியாது.” என கூற ரஞ்சித் திகைப்புடன் அவனை பார்த்தான்.

 

பின் அவன் தோளில் கைபோட்டு “உன்னை கொன்னுட்டு அப்புறம் அக்ஸாகிட்ட யாரு பதில் சொல்றது? கவலைப்படாத ஆதர்ஷ், நீ அவளை கண்டிப்பா கஷ்டப்படுத்தமாட்ட.. அதையும் மீறி ஒருவேளை ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணா அக்ஸாகிட்டேயே சொல்லி பனிஷ் பண்ண சொல்லிடலாம். ஏன்னா உன்னை ஏதாவது பண்ணாலும் முத ஆளா பீல் பண்றது அவளாத்தான் இருக்கும் கோபப்படுறதும் அவளாதான் இருக்கும். நீ உன் மனசை போட்டு குழப்பிக்காம என் தங்கச்சிய சந்தோசமா வெச்சுக்கோ. உனக்கு என்ன பிரச்சனையோ அவகிட்ட சொல்லு. அவ உன் கூட எப்போவுமே இருப்பா. ” ]

 

இதுவரை கூறிமுடித்த ரஞ்சித் “இப்டி ஒருத்தனை தேடுனாலும் நான் கண்டுபிடிச்சிருக்கமாட்டேன்பா. அக்ஸா எப்போவுமே உன் செலெக்ஷன் மாஸ் தான்.. என அவள் வெட்கம் கொள்ள “எனக்கு மாப்பிள்ளை ட்ரிபிள் ஓகே. எப்போ கல்யாணம்னு பேசி சொல்லுங்க.. உடனே பண்ணிடலாம்.” என அவள் ஆதவ் தோளில் சாய்ந்துகொள்ள சிரிப்புடன் “சரிண்ணா உனக்கு எப்படி தெரிஞ்சது?”

ரஞ்சித் “அதெல்லாம் நீ அவரை சாப்பிடும் போது விழுந்து விழுந்து கவனிக்கிற விதம், அவரும் நீயும் பாக்கிற அழகுலையே தெரியுதே… அதுவுமில்லாம நான் உன்னை சின்னதுல இருந்து பாத்துட்டு வரேன்..எனக்கு புரியாதா?” என அவளும் சிரித்துக்கொண்டே அவன் தோளில் சாய்ந்துகொள்ள “அப்போ உனக்கு இங்க வேற யார் மேலையும் டவுட் வரலையா ரஞ்சிண்ணா?” என ப்ரியாவை பார்த்து கேட்க

ரஞ்சித் “அதுவா, ரொம்ப நாளா இங்க ஒன்னு தேவையில்லாம சாப்பிட்டுட்டு சுத்திட்டு இருக்கு. அந்த மந்தி ஏதோ யாருக்கோ செய்வினை வெச்சமாதிரி தோணுது..” என்றான்.

ப்ரியா “ஓய்..யாரு, அதெல்லாம் ஒன்னுமில்லையே….” என கெத்தாக கூற

ரஞ்சித் வாசுவிடம் “என்ன வாசு, அப்போ கிரேட் எஸ்கேப்பா?”

வாசுவும் மகிழ்ச்சியாக “உண்மையாவா?, தேங்க்ஸ் ப்ரோ..தெரியாம மாட்டிகிட்டேன்.எப்பிடிடா தப்பிக்கறதுன்னு இருந்தேன். ஆண்டவனா பாத்து உங்களை அனுப்பிச்சு வெச்சுட்டான்.” என அவள் அனைவரையும் முறைக்க ரஞ்சித் எழுந்து வந்து அவளது தலையில் தட்டி “என்ன மேடம் பயங்கர கோபமா?” அவள் முகத்தை திருப்பிக்கொள்ள அவன் சிரித்துக்கொண்டே “ஏய், அறிவாளி வாசுகிட்டேயும் நேத்தே பேசிட்டேன்.. ” என அவள் விழியகல பார்க்க வாசுவிடம் அழைத்துசென்றவன் “என்னோட பஸ்ட் தங்கச்சி பிரியா.. எப்போவுமே அவளை பத்திரமா பாத்துக்கோங்க. ரொம்ப நல்ல பொண்ணு. அவ பட்ட கஷ்டம் போதும்.. இனிமேல் எதுக்கும் பீல் பண்ணக்கூடாது.” பிரியா கண் கலங்க ரஞ்சனை பார்க்க என அவன் ப்ரியாவின் கையை பிடித்து வாசுவிடம் தர அதை பற்றியவன் “ஒருவேளை அப்டி பீல் பண்ணா?” என வாசு எழுப்பிய கேள்விக்கு

ஆதர்ஷ், “அப்புறம் நீ பீல் பண்றமாதிரி ஆகிடும்.”

அக்ஸா “நீங்க தான் அப்புறம் பீல் பண்ணனும்.”

ரஞ்சித் “அவகிட்ட இருந்து தப்பிக்க உன் நிலைமை மோசமாயிடும்.” என மூவரும் ஒரே அர்த்தமுள்ள பதிலை வேறு வேறு வகையில் கூற வாசு திருதிருவென விழிக்க அனைவரும் சிரித்தனர்.

அக்ஸா “ப்ரியாதான் உன் பஸ்ட் தங்கச்சின்னா அப்போ நானு?” என கண்கள் சுருக்கி கேட்க ரஞ்சித் “பிரியா பெரியவ தானே, சோ அவ பஸ்ட் சிஸ்டர், நீ எப்போவும் என்னோட பெஸ்ட் சிஸ்டர்..” என, குழந்தைகளும் அங்கே வர அனைவரும் பேசி மகிழ்ந்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02

அவன் ஒரு தாசில்தாரிடம் சமயற்காரனாய் இருந்தவன் என்பது முன்னரே கூறப்பட்டதல்லவா, அந்தத் தாசில்தார் அதற்குஒரு வருஷ காலத்திற்குமுன் ஒரு மாதகாலம் ரஜா எடுத்துக்கொண்டு தமது சொந்த ஊராகிய மைசூருக்குப் போயிருந்தார். அப்போது அந்த சமயற்காரனும் அவருடன் கூட மைசூருக்குப் போயிருந் தான்.

உள்ளம் குழையுதடி கிளியே – 20உள்ளம் குழையுதடி கிளியே – 20

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவில் நக்ஷதிராவின் தகிடுதத்ததை உணர்ந்த சரத்தின் மனநிலை என்னவாக இருக்கும். அதிலிருந்து அவனால் மீண்டு வர முடிந்ததா பார்ப்போமா… உள்ளம் குழையுதடி கிளியே –

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22

உனக்கென நான் 22 மடியின் மீது ஏறிகொண்டு பிரியாவோ “அம்ம” என்று இவளை அழைக்க உணர்ச்சிமிகுந்தவளாய் பிரியாவை தூக்கி முத்தமிட்டாள் பின் அனைத்துகொண்டாள். பின் மீண்டும் டைரியை (அல்ல) நினைவுகளை புரட்டினாள். சந்துருவின் அருகில் வந்த அரிசியோ “டேய் சந்துரு ஓடுடா”