Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதை மதுரம் 2019,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16

16 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

மாலையில் பார்க்கில் சந்திப்பதாக அனைவரும் முடிவெடுக்க ஆதர்ஷ் நேராக அங்கே வர வாசுவும் ஏதோ வேலையாக விக்ரமை காண சென்றவன் விக்ரம், சஞ்சு அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கே வரவும் சரியாக இருந்தது. பிரியா, ரஞ்சித், குழந்தைகளுடன் வர அக்சராவை பற்றி விசாரிக்க அவள் வரவில்லை தலைவலி, கொஞ்சம்  தூங்குனா சரியாகிடும்னு வீட்டில் இருக்கிறாள் என்று கூற அனைவரும் ஒப்புக்கொள்ள குழந்தைகள் விளையாட சென்றதும் ப்ரியாவிடம் திரும்பியவன் “இப்போ சொல்லு பிரியா.. ஏன் அவ வரல? என அவன் தெளிவாக கேட்க வாசு “அதான் உடம்பு முடிலேனு சொல்றால்ல. நீ கொஞ்ச நஞ்சமா அந்த புள்ளைய வேலை வாங்குற… பாவம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்டா. ”

ஆதர்ஷ் “அது உண்மையில்லை… யாராவது ஒருத்தர் கூட இருந்தாலே அவ ஹாப்பியா பீல் பண்ணுவ. அவங்கக்கூட இருக்க ஆசைப்படுவா.. இன்னைக்கு இங்க பிரண்ட்ஸ், அண்ணா, குழந்தைங்கன்னு இத்தனை பேரு இருந்தும் அவ சும்மா ரீசன் சொல்லிட்டு வீட்ல இருக்கமாட்டா. .. முடிலேன்னா கூட வந்திருப்பா. நாம தான் ஹாஸ்பிடல்கே கூட்டிட்டு போக அவகூட சண்டைபோடறமாதிரி இருந்திருக்கும். அவளுக்கு வெறும் தலைவலி மட்டும்  பிரச்னையில்லை. சொல்லு பிரியா என்னாச்சு அவளுக்கு. இல்லை நானே போயி பாக்கவா?” என பிரியா  ரஞ்சித்தை பார்க்க அவன் நகர்ந்து சென்று தனியாக அமர்ந்துகொண்டான்.

சஞ்சு “பிரியா அப்போ ஆதர்ஷ் சொல்றமாதிரி ஏதாவது ப்ரொப்லெமா? நாம வேணும்னா வீட்டுக்கு போயி அவளை பாக்கலாமா?”

பிரியா “ப்ரோப்லேம் தான்.. ஆனா அக்ஸா கொஞ்சம் தனியா இருக்கணும்னு பீல் பண்ரா. அவளை விட்டர்லாம். வீட்டுக்கு போகவேண்டாம்.”

விக்ரம் “என்னாச்சு, என்ன ப்ரோப்லேம்? ஏன் ரஞ்சித் வேற தனியா போய்ட்டான்?”

பிரியா “அக்சராக்கும், ரஞ்சனுக்கும் சண்டை. அதான்..” அனைவரும் புரியாமல் விழிக்க அவளே தொடர்ந்து “ரஞ்சித் அக்ஷ்ராகிட்ட கேட்டான். அவங்க அம்மா அப்பா மாமா அத்தைனு குடும்பத்துல எல்லாரும் இறந்து இரண்டாவது வருஷம் ஆகப்போகுது. இன்னும் அவங்களுக்கு ஒரு தடவை கூட திதி பண்ணல. சாமி கும்படல. இந்த தடவை பண்ணனும்னு ரஞ்சித் சொன்னான். அக்ஷ்ரா அதுக்கு முடியாதுனு சொல்லிட்டா. அதுல தான் ப்ரோப்லேம். இரண்டுபேருக்கும் அப்டியே வாக்குவாதம் வந்திடுச்சு. இப்டி இருக்காங்க. இதே பிரச்னைனால தான் ரஞ்சித் அக்சராகிட்ட பேசாமலே இருந்தான்.”

சஞ்சனா “இறந்தவர்களுக்கு சாமி கும்படறது எல்லாரும் பண்றதுதானே.. இதுல அக்சராவுக்கு என்ன பிரச்சனை. ரஞ்சித் சொல்றது சரிதானே .. ”

விக்ரம் “எல்லாரும் எப்படி இறந்தாங்க..? இதுல எதுக்கு ரஞ்சித்கூட பிரச்சனை வந்தது. அவன் அக்சரா மேல எவ்ளோ அக்கறையா இருக்கான்னு நமக்கு தெரியும். அக்சராவே இத என்கிட்ட சொல்லிருக்கா. அப்படியிருக்க எப்படி இவ்ளோ காலம் அவன் அக்ஸாகிட்ட பேசாம இருந்தான். அக்ஸா ஏன் ரஞ்சித் சொல்றத கேக்கமாட்டேங்கிறா?”

வாசு “ஒருவேளை அக்சராவுக்கு அவங்க குடும்பத்துல யாரையும் பிடிக்காதா? அவளுக்கு என்னதான் பிரச்சனை?” என அனைவரும் கேள்வி கேட்க பிரியா மெலிதாக புன்னைகைத்துவிட்டு “அவளுக்கு குடும்பம் மட்டுமில்லை, பிரண்ட்ஸ், பழகுறவங்கன்னு எல்லாரையுமே பிடிக்கும். யாருகிட்டேயும் முகம் சுளிக்கவே மாட்டா. அவ்ளோ நல்லா பழகுவா. ரொம்ப பாசமா இருப்பா. நல்ல வாயாடி. கிட்டத்தட்ட இங்க இருக்கறமாதிரி தான். ஆனா முன்னெல்லாம் இதைவிடவே ரொம்ப அதிகமா அட்டச்மெண்ட்  இருக்கும். அவகூட இருந்தாலே அவளோ சந்தோசமா இருக்கும். எல்லாரும் அதவிரும்புவாங்க. அவ குடும்பத்துலையும் அவ தான் செல்லம். அவ அம்மா(கனகவல்லி) அப்பா(ஆனந்தராஜ்), தாய்மாமாங்க இரண்டுபேர்(பாலகுமார், நந்தகுமார்) இதுதான் அவ குடும்பம். சாதாரண ரொம்ப பாசமான மிடில் கிளாஸ் பேமிலி…

இவ பிறந்தத அவங்க குடும்பமே அப்படி கொண்டாடுனாங்களாம். எங்க அம்மா சொல்லுவாங்க. அக்ஸா குழந்தைல பண்ண நிறைய விஷயம் ரொம்ப அழகா இருக்கும். சுவாரஸ்யமாவும் இருக்கும். அதனாலையே கதை கேக்கற மாதிரி கேப்போம். நான் அவங்க பக்கத்து வீடு தான். எங்க அம்மா அப்பா எல்லாருமே கூட நல்லா பழகுவாங்க. எங்க வீட்லையும் கூட அவதான் செல்லம். அக்சராவோட அம்மாகிட்ட வெளில பழகுறவங்க எல்லாரும் சொல்லுவாங்களாம். “எல்லாமே உன் தம்பிங்களுக்கு கல்யாணம் ஆகுறவரைக்கும் தான் இவ்ளோ பாசமா உன் புள்ளைய பாத்துக்குவானுங்க.. அப்புறம் அவனவன் குடும்பத்தை பாத்துகிட்டு போய்டுவாங்கன்னு.” அவங்கம்மா சிரிச்சிட்டே போய்டுவாங்களாம்.

அக்ஸாகிட்டேயும் விளையாட்டுக்கு சொல்லுவாங்களாம் “டி அக்சரா உங்க மாமனுங்க கல்யாணம் கட்டிக்கிட்டு அத்தையை கூட்டிட்டு வரவரைக்கும் தான். அப்புறமா அவங்க புள்ளைங்கள தான் பாப்பாங்க… அதனால இப்போவே என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ.. அப்புறம் அவங்க போனதுக்கு அப்புறம் கஷ்டம்ன்னு”

அதுக்கு அக்ஸா சொல்லுவாளாம் “இல்லை பாட்டி. எங்க அம்மா அப்பா 2 மாமாக்கும் நான் தான் செல்லம். வர அத்தையையும் நான் பிரண்ட் புடிச்சிடுவேன் அப்புறம் ஏன் அவங்க எங்களை விட்டு போகப்போறாங்க, நாங்க எல்லாருமே ஒன்னாதான் இருப்போம்னு.” சொல்லிட்டு ஓடிடுவாளாம். விளையாட்டுக்கு சொல்லறான்னு எல்லாருமே சிரிச்சிட்டு விட்டுட்டாங்க.

இந்த மாதிரி நிறையா தடவ நடந்திருக்கு. பெரியவங்க விளையாட்டுக்கு, வம்பிழுக்கனு நிறையா சொல்லிட்டே இருப்பாங்க. அவளும் சளைக்காம  பதில் சொல்லிட்டு சிரிச்சிட்டே போய்டுவா.

ஆனா இவ பெரிய மாமாக்கு பொண்ணு பாத்து முடிவு பண்ணாங்க பார்வதி அவங்க பேரு. முடிவு பண்ணிட்டு ஒரு நாள்  வீட்ல பெரியவங்க எல்லாரும் பேசும்போது கூட்டத்துல “நாள் தேதி என்னென்ன சீர் எல்லாமே இங்கேயே பேசிமுடிச்சிடனும். பின்னாடி பிரச்சனை வரக்கூடாது பாருங்க. யாருக்காவது ஏதாவது கேக்கனும்னா பேசணும்னா சொல்லுங்க.  என்ன மாப்பிளை நீங்க பொண்ணுகிட்ட தனியா பேசணுமா?.. சபைல பேசவேண்டியது நாங்க பேசி முடிச்சிடறோம் பா. நீங்க அப்புறம் பேசிக்கோங்க என அங்கே சிரிப்பலை பிறக்க 10 வயதான அக்சரா “நேரா பொண்ணோட அப்பாகிட்டேயே போயி “தாத்தா, நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு” கல்யாண பொண்ண கைகாட்டி சொன்னாளாம். பேச சொல்லிட்டு என்ன சாக்லேட், பொம்மைன்னு கேப்பான்னு நினைச்சிருப்பாங்க போல… ஆனா இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?

அக்ஸா “நீங்க தான் எங்க வீட்டுக்கு வரபோறீங்களா? எனக்கு அத்தையாவா?”

பார்வதி “ஆமாடா குட்டி. ஏன்?” என கன்னம் தொட

அக்ஸா “உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? நீங்க எப்போவுமே என்கூட பிரண்ட்டா இருப்பிங்களா?” என கேட்க சிரிப்புடன் பார்வதி அவளை மடியில் உக்கார வைத்துக்கொண்டு “ஏன்மா, உனக்கு அத்தை வேணாமா? பிரண்ட் தான் பிடிக்குமா?” என கேட்க

அக்ஸா “அப்படியில்லை, அத்தை வந்தா என்னை திட்டுவாங்களாம். அத்தை வந்தா என் மாமா என்னை கண்டுக்கமாட்டாங்களாம். என்கூட விளையாடமாட்டாங்களாம். அத்தை என்கூட சண்டை போடுவாங்களாம்..என்னை விட்டுட்டு மாமாவை தனியா கூட்டிட்டு போய்டுவாங்களாம். அத்தையா இருந்தாத்தானே சண்டைபோடுவாங்க ஆனா என் பிரண்ட்ஸ் யாருமே என்கூட சண்டைபோடமாட்டாங்க. நீங்க எனக்கு பிராண்டாகிட்டா நீங்களும் என்கூட சண்டைபோடமாட்டீங்க, மாமாவை எங்களை விட்டு கூட்டிட்டு போகமாட்டீங்கள்ள? அதான் கேக்கறேன்.” என

பார்வதி “உனக்கு உங்க மாமாவை ரொம்ப பிடிக்குமா? இதில்லாம வேறே என்னென்ன சொன்னாங்க?”

அக்ஸா “ம்ம்.. எனக்கு எங்க மாமாவை ரொம்ப பிடிக்கும். பாலா மாமா, நந்து மாமா இரண்டுபேரும் எப்போப்பாரு சண்டை தான் .. உறுன்னு இருப்பாங்க. ஆனா எனக்கு ஏதாவது கேட்டாலோ, என்கிட்ட இருக்கும்போதோ இரண்டுபேரும் ரொம்ப ஜாலியா இருப்பாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. என்னை பாசமா பாத்துப்பாங்க. சாப்பாடு ஊட்டி விடுவாங்க. காதருகில் அம்மாக்கு தெரியாம வெளில ஊர் சுத்த கூட்டிட்டு போவாங்க என ரகசியம் போல சொல்ல அதை கேட்டு அனைவரும் புன்னகைக்க  நிறையா பொம்மை, ட்ரெஸ்ஸ்னு கேட்டதெல்லாம் வாங்கி தருவாங்க, ஒரு மாமா பாட்டு பாடி தூங்க வெப்பாங்க, ஒரு மாமா கதை சொல்லி தூங்க வைப்பாங்க. எனக்கு எங்க அம்மா அப்பா பாலா மாமா, நந்து மாமா எல்லாருமே ரொம்ப பிடிக்கும். அவங்க எல்லார்கூடவும் எப்போவும் ஒன்னாவே இருக்கணும்னு ஆசை.  ஆனா அத்தை வந்தா இதெல்லாம் கிடைக்காதுனு சொன்னாங்க என பாவமாக முகத்தை தொங்கப்போட்டு கூறிவிட்டு “நான் இனிமேல் மாமாகிட்ட சாக்லேட், டிரஸ், பொம்மைன்னு வாங்கி தர கேக்க மாட்டேன். ரொம்ப செலவு வெக்கமாட்டேன். எனக்கு தினமும் சாப்பாடு ஊட்ட சொல்லி கேட்கமாட்டேன். வெளில கூட்டிட்டு போக சொல்லி டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். நான் ஏதாவது தப்பு பண்ணா, சேட்டை பண்ணா நீங்க என்னை கூப்பிட்டு சொன்னா கேட்டுப்பேன், அடப்பண்ணி சண்டை போடமாட்டேன். சமத்தா உங்ககூட சொன்ன பேச்சு கேட்டு இருப்பேன். நீங்களும் எங்க வீட்டுக்கு வந்துடுங்க. ஜாலியா இருக்கும். ஆனா நீங்க மாமாவை தனியா கூட்டிட்டு போகமாட்டீங்கல்ல. நான் நீங்க என்னை சொன்னாலும் செய்றேன். நாம எல்லாரும் எப்போவுமே ஒரே வீட்ல இருக்கலாமா? எப்போவுமே என் பிரண்டா இருப்பிங்கனு எனக்கு ப்ரோமிஸ் பண்ணுவீங்களா?? பிலீஸ்ஸ்ஸ்…..” என குழந்தை மொழியில் களங்கமில்லாம அவள் கேட்ட அந்த கேள்வி அவள் குடும்பத்தை எத்தனை தூரம் நேசிக்கிறாள் என அனைவர்க்கும் எடுத்து காட்டியது..

பார்வதி “கண்டிப்பா, உன்கூட பிரண்டா இருக்கேன். நீ இவளோ நாள் எப்படி இருந்தியோ அதேமாதிரி எல்லார்கூடவும் விளையாடலாம், நாங்களே தினமும் சாப்பாடு ஊட்டிவிடறோம், உன்னை வெளில கூட்டிட்டுப்போறோம், எப்போவுமே அங்க இருந்து யாரையும் தனியா பிரிச்சு கூட்டிட்டு போகமாட்டேன் ப்ரோமிஸ்.” ஓகே வா? என

அக்ஸா அவளை கழுத்தோடு கட்டிக்கொண்டு “தேங்க்ஸ் அத்தை..” என கன்னத்தில் முத்தமிட்டு விட்டு நேராக அவள் மாமாவிடம் சென்று “மாமா அத்தை ரொம்ப ஸ்வீட். எனக்கு டபுள் ஓகே.”

பார்வதியின் தந்தையிடம் திரும்பி “தாத்தா, அத்தையை ரொம்ப பிடிச்சிருக்கு. ப்ளீஸ் இப்போவே எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் .” என அனைவரும் அதை கேட்டு சிரித்தனர். கூட்டத்தில் இருந்த ஒரு பாட்டியிடம் “பாட்டி, பாத்திங்களா எங்க அத்தைய நான் பிரண்ட் புடிச்சிட்டேன். இனி எங்க வீட்ல இருந்து யாருமே தனியா போகமாட்டாங்களே. எல்லாருமே ஒண்ணாவே இருப்போமே.” என அந்த பாட்டியும் சிரித்துவிட்டு “அது சரி டி, புள்ளை பொறந்துட்டா அவங்க புள்ளைய தானே பாப்பாங்க என்ன பண்ணுவியாம்?” என அந்த பாட்டி விளையாட்டுக்கு கேட்க அனைவரும் அவரை அறிந்ததால் யாரும் அப்பாட்டியை தவறாக எண்ணவில்லை. இந்த குட்டி என்ன பதில் சொல்ல போகிறது என்பதிலே குறியாக இருந்தனர்.

அக்சா “இல்ல, அப்போவுமே என்ன தான் எல்லாருமே பாத்துக்குவாங்க. நான் தான் எல்லாருக்கும் செல்லம்.” என

பாட்டி “அதெப்படி, சின்னபுள்ளைங்களுக்கு தான் விபரம் தெரியாதுன்னு கூடவே இருந்து பாத்துக்குவாங்க, உன்னவே பாத்துகிட்டு இருந்தா ஆச்சா?” என

ஒரு நிமிடம் யோசித்தவள் “அப்போ சரி பாட்டி, இவங்க எல்லாரையும் விட சின்னவ நான் என்னை இவங்க பாத்துக்கட்டும். பொறக்கப்போற குட்டி தம்பி என்னை விட சின்னவன் தானே. அவனை நான் பாத்துக்கறேன். அவனுக்கு எல்லாமே நானே செய்றேன். எப்போவுமே கூடவே வெச்சுக்குவேன். பத்திரமா பாத்துக்குவேன். அப்போவுமே நாங்க ஒரே வீட்ல இருப்போமே ” என கூற அந்த பாட்டி “அப்டி சொல்லுடி என் சக்ரகட்டி, இந்தாம்மா கனகா, என் பேத்திக்கு சுத்திப்போடு. என்ன பிரச்சனை வந்தாலும் குடும்பத்தை பிரியக்கூடாதுன்னு எவளோ குறியா இருக்கா. இவ மனசுபோலவே எல்லாமே அமையும்.” என த்ரிஷ்டிகழித்துவிட்டு அனைவரும் புறப்பட்டனர். கல்யாணம் நல்லபடியாவே நடந்தது.

நாளாக நாளாக பழக்கத்துல அக்ஸாவோட சின்ன மாமாவும் பார்வதி அத்தையோட தங்கச்சியும்(உமா)  லவ் பண்ணாங்க. மூத்த பொண்ண வாழ்க்கை நல்லா இருக்குனு பாத்து பெரியவங்களும் இதே குடும்பம் பிரச்சனை இருக்காதுன்னு இரண்டாவது பொண்ணையும் கல்யாணம் பண்ணி குடுத்திட்டாங்க. ஊரே அவங்கள பாத்து பொறாமை பட்டுச்சுனு கூட சொல்லலாம். அக்ஸாவும் சொன்ன மாதிரியே தான் அவங்களுக்கு குழந்தை பிறந்ததும் இவதான் பாத்துக்கிட்டா. பெரிய மாமா பையன் அனீஸ் கண்ணன், சின்ன மாமா பையன் ரானேஷ் கண்ணன். அவங்க இரண்டுபேரும் பிறந்து பேர் வெச்சதுல இருந்து எல்லாமே இவ தான் பாத்துக்கிட்டா.. வீட்லையுமே இவ தான் எப்போவுமே செல்லம். இவளுக்கு குழந்தைங்க தான் உலகம். நான் அக்ஸா ஒண்ணாவே படிச்சு வளந்தோம். படிப்பு, விளையாட்டுன்னு எதுல கலந்துக்கிட்டாலும் அவ கண்டிப்பா ஜெய்ச்சிடுவா.. ஸ்கூல் ஸ்டேட் ரேங்க், காலேஜ் டாப்பர். எல்லாமே பஸ்ட்டா வருவா. ஆனா அவளுக்கு எது பிடிச்சிருக்கோ, எது தேவையோ அதுல தான் கலந்துக்குவா. சும்மா எல்லாத்துக்குமே போகமாட்டா. எல்லாருமே சொல்லுவாங்க “நீ போனா எக்ஸாம் கிளீயர் பண்ணிடுவ. கவர்ன்மெண்ட் எக்ஸாம் எழுதினாலே போதும் உனக்கு வேலை வந்திடும். சும்மா எழுதிவிடுன்னு.” முடியாதுனு சொல்லுவா..”எக்ஸாம்ஸ் எழுதறது, இண்ட்டர்வியூ அட்டென்ட் பண்றது, போட்டில கலந்துக்கறதுனு எல்லாமே சும்மாவது  பண்ணுன்னு எல்லாருமே புஷ் பண்ணுவாங்க.. ஆனா அவ செய்யமாட்டா”

ஏன்னு கேட்டா “இல்லடி, எனக்கு இந்த எக்ஸாம் எழுதல, போட்டில கலந்துகல அப்டினா ஏதாவது லாஸ் வரப்போகுதா என்ன? கிடையாது. ஆனா அந்த வேலை தேவைப்படறவங்க, அந்த போட்டில கலந்துக்கிட்டதான் அடுத்த ஸ்டேட்ஜ்க்கு போகமுடியும் அதுதான் லட்சியம்னு வாழறவங்களுக்கு இது பிரச்னையாகாதா சொல்லு? அந்த தப்ப நான் பண்ணமாட்டேனு சொல்றேன்.”

“அதெப்படி டி, நீ ஒருத்தி போட்டிக்கு வரதால அவங்க லைப்ல பெரிய பிரச்சனை மாதிரி சொல்ற?”

அக்ஸா “அப்டி இல்லடி, யோசிச்சு பாரு இப்போ இருக்கற நிலமைல கவர்ன்மெண்ட் எக்ஸாம் எழுதறவங்க எத்தனை பேருக்கு பாயிண்ட் 1 2 ல எல்லாம் டிஃபரென்ட் வருது. இல்லை எவ்ளோ பேர் ஒரே மார்க்ல இருப்பாங்க. அப்டி பாக்கும்போது கடைசில செலக்ட் பண்ணும்போது அடுத்து இதேதான் எக்ஸ்ட்ரா ஏதாவது நாலெட்ஜ் இருக்கா? இல்லை ஸ்பெஷல இந்த மாதிரி ஸ்போர்ட்ஸ் கோட்டா, டாப்பர் வகைல சூஸ் பண்ணலாம். ஆனா எனக்கு அந்த வேலைக்கு போற ஐடியா இல்ல. நான் இல்லாம இருந்திருந்தா உண்மையா தேவையிருக்கற ஒருத்தருக்கு அது போகும்ல.? நம்ம பிரண்ட்ஸ் கூட இருக்கறவங்களே எத்தனை பேர் பொலம்புறாங்க அத நாம பாக்கிறோம்ல. இவளோ ட்ரை பண்ணேன். ஆனா பாயிண்ட்ல போயிடிச்சு. சாதி அடிப்படையா வெச்சு எத்தனை ஸ்கூல், காலேஜ், இவ்ளோ ஏன் கவர்ன்மெண்ட் வேலை கூட மாறுது. ஆனா உண்மையா பாத்தா அவனுக்கு அது தேவையே இருக்காது. அவங்க அம்மா அப்பா எல்லாரும் நல்லவேலைல இல்ல ஏதாவது ஒரு சோர்ஸ் இருக்கும். இவங்க இந்த வேலைக்கு ஆசைபட்டுக்கூட வந்திருக்கமாட்டாங்க. செட்டில்டு இல்ல பெர்மனெண்ட் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக பிடிக்காம ஏனோ தானோனு அதுவும் பணத்தேவை இதெல்லாம் கூட இல்லாம சும்மா வேலை வாங்கிட்டு உக்காந்துட்டு போறவங்க எத்தனை பேர் இருகாங்க. இப்போ அவனுக்கு அந்த வேலை வேணாம்னு பாதில தூக்கி போட்டுட்டு போலாம். அப்போ அந்த இடத்துல இருக்கற வேலைய யாரு பாப்பாங்க. இனி அடுத்து எக்ஸாம் வெச்சு கொண்டு வர வரைக்கும் யாருமில்லாம இருக்கனும் இல்ல காச வாங்கிட்டோ இல்ல ரெகமெண்டஷன்லையோ வேற ஒரு ஆள அப்பாயிண்ட் பண்ணுவாங்க. காசு குடுத்து வேலை வாங்குறதால தான் அந்த காச திருப்பி எடுக்க அவன் லஞ்சமா வாங்குறான். இது எல்லாத்துலையுமே முக்கியமா பாதிக்கப்படுறது தகுதி இருந்தும் தேவை இருந்தும் வேலை கிடைக்காம வெளில போனவன் தானே.  அவனுக்கு வேலை கிடைக்காம போனதுக்கு யாரு காரணம், இந்த மாதிரி எனக்கு எல்லாமே தெரியும்னு பில்டப்ல போயி வேலைய வாங்கிட்டு ஆனா பாதில வந்தட்ர அறிவாளிங்க தானே. இதுனால கவர்ன்மென்ட்ல வேலையும் கெடும். வேலை இல்லாம இன்னொருத்தனுக்கு பிரச்சனையும் வரும். அந்த தப்ப நான் பண்ணமாட்டேன். எனக்கு தேவையும் இல்லை. அதே வேலையை ஒருவேளை ஆசைப்பட்டு வாங்கிருந்தா அவன் ஏனோ தானோன்னு வேலைய விட்டுட்டு போகமாட்டான். நமக்கு அது லட்சியம், இல்ல மனசார பிடிக்கிது, தேவை இருக்குன்னா அது வேற..அதுல குறை சொல்ல முடியாது. ஆனா நமக்கு ஒரு விஷயம் அறிவு இருக்கு. தெரியும்ங்கிறத காட்றத்துக்காக எல்லாம் சும்மா போயி எதையும் பண்ணமுடியாது. அதுவும் என்னைப்பொறுத்தவரைக்கும் தப்பு தான்.”

 

“ஆமா நீ இத பண்ணாட்டி வேற யாருமே பண்ணமாட்டாங்களா? என்னமோ உலகத்தை திருத்த வந்துட்டா?” என தோழி ஒருத்தி கூற

அக்ஸா மெலிதாக சிரித்துக்கொண்டே “உனக்கு அண்ணா இருக்காங்கள்ல? போன வாரம் உங்க அண்ணாவோட காலேஜ்ல ஏதோ ஒரு பொண்ணை லவ் பண்ணி ஏமாத்தி தப்பு பண்ணிட்டு ஒருத்தன் விட்டுட்டு போய்ட்டான்னு நியூஸ் பத்தி  பேசிட்டு இருந்தபோது சொன்னியே.. உங்க அண்ணா வயசு தான் அவனுக்கும் இருக்கும்ல?.. ”

அவள் ஆமாம் என்பது போல தலையசைத்தாள். அக்ஸா “உங்க அண்ணாவும் அந்த மாதிரி தானே?” என அவள் கோபமாக “அக்ஸா வார்த்தையை அளந்து பேசு. என் அண்ணா அப்டி இல்ல. ”

அக்ஸா கூலாக எழுந்து நின்று “அவசியம் இல்லாட்டி என்ன சும்மா அப்டி ஏதாவது பொண்ணுகிட்ட ட்ரை பண்ண சொல்லு. அவங்க காலேஜ்ல, அவங்க பிரண்ட்ஸ் எல்லாருமே அப்படித்தானே இருக்காங்க. உங்க அண்ணா ஒருத்தர் சரியான எல்லாமே மாறிட போகுதா என்ன?”

“போதும்.. என் அண்ணனுக்கு அந்த அவசியம் இல்ல. அவன் அப்படிப்பட்ட கேரக்டரும் இல்லை. ஊர்ல எவனோ எப்டியோ இருந்தா அதுக்கு என் அண்ணாவும் அப்டி இருக்கணும்னு அவசியம் என்ன இருக்கு.  நீயே இந்த மாதிரி தப்ப என்கரேஜ் பண்ணுவ போல. இதே மாதிரி எல்லா பசங்ககிட்டேயும் சொன்னோம்னா அடுத்த நம்மள மாதிரி எந்த பொண்ணுங்களுமே வெளில தலை காட்டகூட முடியாது.” என அவள் கோபமாக கத்த

அக்சரா “இதைத்தான் ஜெயா நானும் சொல்றேன். ஊர்ல தப்பு பன்றாங்க. நான் ஒருத்தி சரியான ஊர் மாறிட போகுதான்னு யோசிக்காம நாம முதல சரியா இருப்போம்னு ஒரு ஒருத்தரும் யோசிச்சாலே பாதி பிரச்னை இல்லை கிட்டத்தட்ட முழு பிரச்சனையுமே தீந்திடும். யோசிச்சு பாரு உனக்கே புரியும். அண்ணாவை வெச்சு பேசுனது தப்பு தான். சாரி. ஆனா உனக்கு புரியவெக்கத்தான் அப்டி சொன்னேன். புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன்.” என அவள் விலகி சென்றாள். அவள் தோழியும் அமைதியாகிவிட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

காதல் வரம் யாசித்தேன் – final partகாதல் வரம் யாசித்தேன் – final part

ஹாய் பிரெண்ட்ஸ், ‘காதல் வரம் யாசித்தேன்’  கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் கருத்துக்களைப் பதித்து என்னை ஊக்குவித்த  தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ராணி இதழில் தொடர்கதையாக வெளி வந்த காதல் வரத்தை சில தோழிகள் கேட்டுக் கொண்டதற்காக ப்ளாகில் அப்படியே பதிவுகளாகத்

Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க.  போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி.  விஷ்ணுவுக்கு விருப்பத்தோடு சப்போர்ட் பண்ணும் நீங்க சரயு தந்த தண்டனையையும் மறுக்கல. இந்தக் கதையை ஆரம்பிக்கும் போதே நான் சொல்லியிருந்தேன். சித்ரங்கதாவில் நாம் கதாபாத்திரங்களுடன் சேர்ந்தே பயணிப்போம்ன்னு.

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2

பாகம் இரண்டு “என்னாச்சு லலிதா, நீ கூப்பிட்டதும் கையும் ஓடலே காலும் ஓடலே!”, என்றபடி ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்த கீதா, தோழியின் முகத்தில் தொடங்கி பாதாதி கேசம் அளந்து பிரச்சினையாக ஒன்றும் தென்படாமல், ரமேஷை கேள்வியாக பார்க்க, ரமேஷோ ஆடித் தள்ளுபடியில்