Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 10

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 10

10 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

மறுநாள் பள்ளியில் விழா போட்டிகள் இருந்தது. அதற்கு அனைவரும் தயாராகினர். பிரியா,சிந்து,அனீஸ், ரானேஷ்,குமார், வாசு அனைவரும் முன்னே செல்ல ஆதர்ஷ் சில வேலைகளை கவனித்துவிட்டு அந்த நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிட்டான். வந்தவனுக்கு அக்சரா அருகில் மட்டுமே இடமிருக்க அங்கே அமர்ந்தான். சிந்து, அனீஸ் வந்து “ஹப்பாடி, அண்ணா எங்க லேட்டா வருவீங்களோனு நினச்சேன். நல்லவேளை. கரெக்ட் டைம்.”, “ஆமா அங்கிள், அடுத்து டிபேட் தான். நான் சிந்து அக்கா எல்லாருமே ஒரே டீம் தான்.” என குதூகலமாக சொல்ல அவனும் ஆல் தி பெஸ்ட் சொல்லி இருவரையும் அனுப்பினான்.

 

மைக்கில் ஒருவர் பேச ஆரம்பிக்க ” எல்லாருக்கும் வணக்கம்., எப்போவுமே ஸ்கூல்ல ஸ்டுடென்ட்ஸ்க்கு மட்டும் போட்டி அதுக்கு பரிசளிப்பு விழா அப்புறம் பேரன்ட்ஸ்க்கு சும்மா இரண்டு விளையாட்டுனு எப்போவுமே பண்றத இந்த தடவ கொஞ்சம் மாத்தி பண்ணலாமேன்னு தான் இந்த புது முயற்சி.

அடுத்ததா இங்க நடக்கபோறது ஒரு டிபேட்.. கொஞ்ச நேரத்துக்கு இது விவாத மேடையா இருக்கப்போகுது.

தலைப்பு என்னன்னா

“பேரெண்ட்ஸ், டீச்சர்ஸ், பொதுவா பெரியவங்க, ஸ்டுடென்ட்ஸ அவங்க மனச புரிஞ்சுக்கறதில்லையா? இல்ல ஸ்டுடென்ட்ஸ், பெரியவங்க சொல்றத சரியா புரிஞ்சுக்கறதில்லையா?”

பெரியவங்க தான்னு சொல்ல கொஞ்ச பேரு, சின்னவங்க தான்னு சொல்ல கொஞ்ச பேருன்னு நாங்க 6 டு 10த் வரைக்கும் இருக்கற ஸ்டூடெண்ட்ஸ்ல செலக்ட் பண்ணிட்டோம். அவங்க கலந்துக்குவாங்க. அதோட இங்க இருக்கற பேரெண்ட்ஸ், டீச்சர்ஸ் கூட இவங்களோட கலந்துக்கலாம். எந்த டீம்ல வேணாலும் சேரலாம். அதிகபட்சம் ஒரு டீம்ல பத்து பேரு கலந்துக்கலாம்.  இங்க பேரெண்ட்ஸ் ஆகட்டும் ஸ்டுடென்ட்ஸ் ஆகட்டும் அவங்க ரெகுலரா நடக்கற நிகழ்வுகளை சொல்லலாம், அவங்களோட அனுபவங்களை பத்தி, வீட்ல சின்னவங்க என்ன மாதிரி நடந்துக்கறீங்க அது எந்த வகைல பேரெண்ட்ஸ கஷ்டப்படுத்துது அதோட சின்னவங்க என்ன மாதிரி பாதிப்புக்கு உள்ளாகுறாங்க. அத அவங்க எப்படி எடுத்துக்கறாங்க அப்டி தெரிஞ்சுக்கிட்ட அறிவியல் பூர்வமான எல்லா விஷயங்களை பத்தியும் பேசலாம். சோ இன்னும் 10 நிமிஷம் டைம் விருப்பப்படறவங்க முன்னாடி வாங்க.” என கூறிவிட அடுத்து சிறு சலசலப்புக்கு பின் இரண்டு குழுவாக பிரிந்து விவாதத்திற்கு தயாராகினர்.

 

மீண்டும் அந்த ஆசிரியர் ” ரொம்ப சூப்பர். அணிகள் தயாராகிவிட்டது. ஸ்டுடென்ட்ஸ் மனச தான் பெரியவங்க புரிஞ்சுக்கல என இருக்கும் அணி ரெட் (red ) டீம்.

பெரியவங்க சொல்ற நல்லத குழந்தைங்க புரிஞ்சுக்கல கேட்கமாட்டேங்கிறாங்க என இருக்கும் அணி ஆரஞ்சு (orange) டீம். அங்க பெரியவர்களும் அதிகம் இருக்காங்க. அதோட டீச்சர், ஸ்டுடென்ட்ஸும் இருக்காங்க.

இதுல ஸ்டுடென்ட்ஸ் ஆல்ரெடி பிரிப்பர்ட்டா இருக்காங்க. என்ன ரெட் டீம் வின் பண்ணிடுவீங்களா?”

“சார், நாங்க சொல்ல போறது கதையல்ல நிஜம்.. சோ நாங்க தான் வின்னிங் ” என ஒரு மாணவன் சினிமா பாணியில் சொல்ல அனைவரும் கைதட்டி அவர்களை ஊக்கப்படுத்தினர்.

 

முதலில் வீட்டில் ஆரம்பிக்கும் சின்ன சின்ன நிகழ்வுகள் ஆரம்பித்து “நாம படுற கஷ்டத்தை புரிஞ்சுக்காம விளையாட்டுத்தனமா வேணும்னே ஸ்கூல் கிளம்பும்போது லேட் பண்றது, தூங்குறது, படிக்காம ஹோம் ஒர்க் பண்ணாம காலைல வந்து மறந்துட்டேனு டென்ஷன் பண்றது என பட்டியலோட ஒரு அணி அதற்கான நிகழ்வுகள் குழந்தைகள் செய்யும் சேட்டைகளோடு கூற அதேபோல்

“எப்போவுமே பிரீயா விடாம ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க. வெளில போயி விளையாண்டா வெளில போகாத, மண்ணுல ரோட்ல நோ, வெயில்ல நோ, மழைல நோ, காலைல படி, சாயங்காலம் டியூஷன்னு காரணம் சொல்லி விளையாடாதன்னு திட்டி உள்ள கூட்டிட்டு வராங்க. வீட்ல வந்து வீடியோ கேம்ஸ் விளையாண்டா கண்ணு போய்டும் காது போய்டும் இதுலையே இருக்கியேன்னு அதுக்கும் திட்டு.. கூட இருக்கறவங்களோட வம்பிழுத்து விளையாண்டா அண்ணா, அக்காவா இருந்து சண்டை போட்டு பெரியவ தானே நீ விட்டுகுடுக்கமாட்டேயானு கேக்கறாங்க.. தம்பி தங்கச்சின்னா சின்னத்துலையே நீ இவளோ அடம்பன்றன்னு அதுவும் அடக்கிறீங்க… நாங்க எப்போ தான் விளையாடறது, சண்டை போடறது, வம்பிழுக்கறதுன்னு ஒரு டைம் டேபிள் குடுங்கப்பா என அவன் கவுண்டமணி பாணியில் சொல்லவும் அனைவரும் சிரிக்க தொடங்கினர்.

 

இவ்வாறாக இரு அணிகளும் நடந்த நிகழ்வுகளை  குறைகளாக கூறிக்கொண்டு நகைச்சுவையாக நிகழ சிறிது நேரத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு ஒருவரும் தங்களின் பக்கம் இருக்கும் நியாயம் பற்றி, பெரியவர்கள் தாங்கள் படும் துன்பங்கள் பற்றியும், கூறும் அறிவுரையை தவறாக புரிந்துகொள்வது சங்கடமாக உள்ளது என கூறினார் பெரியோர் இருக்கும் அணி (Orange டீம்).

 

அதை ஒப்புக்கொண்ட எதிரணியும் (Red டீம்) “எங்களுக்கு நீங்க பண்ற அட்வைஸ நாங்க கேக்கக்கூடாதுனு நினைக்கல. ஆனா எல்லாமே திட்டி சொல்லும் போது, கம்பேர் பண்ணும் போது எங்கனால முடியாதோன்னு ஒரு எண்ணம் எங்களுக்கே வருது.. நம்ம குடும்பம், பேரெண்ட்ஸ் டீச்சர்ஸ் இவங்க தான் எங்களுக்கு சப்போர்ட், ஹெல்ப்னு நினச்சா ஆனா நீங்களே எங்களை நம்பாம இப்டி பேசி கஷ்டப்படுத்துறீங்க. எங்களை எங்கரேஜ் (encourage) பண்ண வேண்டிய நீங்க தான் முதலை டிஸ்கேரேஜ் (discourage) பண்றீங்க. அதுதான் பிடிக்கல.” இதை கவனித்து அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் தலையசைப்புடன் இருந்தனர்.

 

Orange டீம் : அதையும் உங்க நல்லதுக்கு தான் நாங்க சொல்றோம். கம்பேர் பண்ணா நீங்க இன்னும் நல்லா பண்ணுவீங்கன்னுதான் அப்டி சொல்றோம். மத்தபடி நம்பாம இல்லை. அதுக்காக நாங்க உங்கள கஷ்டப்படுத்தறோம்னு ஆகிடுமா?

 

Red டீம் :  அப்டின்னா ஆபீஸ்ல உங்கள மத்தவங்களோட கம்பேர் பண்ணறாங்க. அவன் தான் டார்கெட் அச்சீவ் பண்ணிருக்கான் நீ என்ன பண்ணேன்னு மேனேஜர் கேக்கறாரு புலம்பும் போதும் இதே மாதிரி எடுத்துக்கவேண்டியதுதானே. நம்ம நல்லதுக்கு தான் சொல்லறாங்க. அப்போ மட்டும் ஏன் அவங்கள திட்டுறீங்க. என்றதும் ஸ்டுடென்ட்ஸ் பக்கம் இருந்தே கிளாப்ஸ் வந்தது.

 

Orange டீம் : மேனேஜர் எல்லாம் நம்ம குடும்பம் கிடையாது. அவங்களுக்கு ஒர்க் பத்தி தான் யோசிப்பாங்க. அவங்களுக்கு நாம அந்த இடத்துல இல்லாட்டியும் கவலை இருக்காது வேற ஆள் அதை செய்வாங்க..  நாங்க பேசுறது பேமிலி பத்தி குடும்பம் தான் கவலைப்படும் அப்போ அவங்க கம்பேர் பண்றத நல்லதுக்கு எடுத்துக்கலாமே.?

 

Red டீம் : அப்போ நம்ம பாட்டி அவங்க உங்க மாமியார் தானே. அவங்க பேசுறது கம்பேர் பண்றது பத்தியும் அப்டியே நல்லவிதமா எடுத்துக்கலாமே. அவங்க நம்ம குடும்பம் தானே. பெரியவங்க தானே சொல்ராங்க. அந்த வீட்டு மருமகளை பாரு அந்த வேலை செய்றா. இந்த வேலை செய்றான்னு சொல்லும் போது மட்டும் ஏன் கோவப்படறீங்க. நல்லவிதமா எடுத்துக்காம ஏன் என்னை கம்பேர் பண்ண வேண்டாம்னு உங்க அம்மாகிட்ட  சொல்லிவைங்கன்னு அப்பாகிட்ட கத்துறீங்க. என ஒருவன் எழுந்து சொன்னதும் அனைவரும் சிரிக்கவே தொடங்கிவிட்டனர்.

 

கூட்டத்தில் இருந்து ஒருவர் ” உங்க பையன் நேரம் பார்த்து போட்டு குடுத்துட்டானே. ?” என சிரிக்க

இவரும் சிரித்துக்கொண்டே “அவன் கேக்கறது சரிதானே. ஒண்ணு அந்த விஷயத்தை அதேமாதிரி புரிஞ்சுக்கணும். இல்லை அது தப்புன்னா அந்த பழக்கத்தையே விட்டர்னும். என் மனசுல இருக்கறத அவன் பேசுறான். பேசட்டும். கேட்டா டிபேட்க்காகன்னு சொல்லிடலாம். ” என இருவரும் சிரித்தனர்.

 

இப்படியாக சிறுவர்களின் அணியின் பேச்சு அவர்கள் கூறும் விதம் அவர்களே முன்னே இருக்க இறுதியில் சிந்து பேச பெரியவர்கள் டீமில் இருந்து ஒரு பெண்மணி “இப்டி எல்லாம் குறை சொல்றதால தான் நீ இப்டி அம்மா அப்பா இல்லாம இருக்க. ” என்றதும் அனைவரும் சங்கடமாக உணர அனீஸ் எழுந்து “பாருங்க, இங்க பேசுனத்துக்கு, கேள்விகளுக்கு  பதில் சொல்லுங்க. அதைவிட்டுட்டு எங்களுக்கு அம்மா அப்பா இல்லேங்கிறது டாபிக்கை நீங்க வேற பக்கம் மாத்துற மாதிரித்தான்.”

 

அந்த பெண்மணி “ஓ..உனக்கு அம்மா அப்பா இல்லையா. பாரு எல்லாம் ஒரே டீம்ல சரியாதான் சேந்திருக்கிங்க. ஆண்டவனும் இடம் பாத்துதான் அளந்துவெச்சுஇருக்கான். உங்க பேரெண்ட்ஸ் கூட இருந்திருந்தா இன்னும் என்னவெல்லாம் குறை சொல்லிருப்பிங்களோ? அதுவுமில்லாம இதும் டாபிக் ரிலேட் தான் தம்பி. உங்களுக்கு அவங்க கூட இருந்திருந்தா அந்த பாசம் அவங்க சொல்ற காரணம் விளக்கமா சொல்லிருப்பாங்க.புரிஞ்சிருக்கும். பாவம் உங்களுக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே. அதனால தான் பெரியவங்க சொல்றது தப்புனு இப்டி புரியாம பேசுறீங்கன்னு சொல்றேன்” என முடித்தார்.

 

இதை பார்த்துக்கொண்டிருந்த ஆதர்ஷ் அக்சராவிடம் “இதுக்கு தான் அவளை போக வேண்டாம்னு சொன்னேன். இப்போ பாரு என்னாச்சுன்னு. சிந்துவை எங்கரேஜ் பண்றதா நினச்சு நீ பண்ணிருக்கற வேலைய பாரு.” என கத்தியதும் ப்ரியாவும்,வாசுவும் சங்கடமாக பார்க்க

வாசு “டேய் டென்ஷன் ஆகாதடா.”

ஆதர்ஷ்  “விடுடா. சிந்து சின்ன விஷயத்துக்கே அப்டி பீல் பண்ணுவா. இனி இதுவே பெரிய விஷயம்னு பொலம்பிட்டே இருக்க போறா. இந்த டாபிக் கேட்டதுமே அதனால தான் நான் வேண்டாம்னு சொன்னேன். கேட்டாத்தானே?” என அக்சராவை பார்க்க அவள் கோபமாக எழுந்து செல்ல

 

அந்த அரங்கத்தில் இருந்து அனைவரும் விவாதம் திசை மாறி வேறு இடம் போவது போல உணர அனைவரும் அமைதியாக இருக்க சிந்து அழுதுகொண்டே அங்கிருந்து ஓடிவர பாதியில் அவளை வந்து தடுத்த அக்சரா அவளை கையோடு பிடித்துக்கொண்டு மீண்டும் அங்கேயே சென்று அவர்கள் முன்னிலையில் “அழாத சிந்து.. இப்போ எதுக்கு அழுகுற. நம்ம அம்மா, அப்பா இறந்துட்டாங்கனு இப்போதான் உனக்கு தெரியுமா? இல்லையே. உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்தை தானே சொன்னாங்க. அதுக்கு ஏன் நீ பீல் பண்ணனும். என்று  சிந்துவை அமர சொல்லிவிட்டு அவர்களிடம் திரும்பிய அக்சரா ” சொல்லுங்க மேடம், இங்க இந்த போட்டில பங்கெடுத்துக்கணும்னா அம்மா அப்பா இருக்கணும்னு ஏதாவது பாண்ட்ல கையெழுத்து வாங்கிட்டா உள்ள அனுப்பிச்சாங்க. பின்ன அத ஒரு காரணமா சொல்றிங்க. சரி அம்மா அப்பா இல்ல. அதனால நீ அத பத்தி பேசக்கூடாது. அதைத்தானே அவகிட்ட சொன்னிங்க ..அதாவது ஒரு விஷயத்துல எக்ஸ்பீரியன்ஸ் ஆகாம, அதப்பத்தி பேசக்கூடாதுன்னா இங்க யாருமே பாதி விஷயத்துக்கு மேல வாயே தொறக்ககூடாதில்ல. எல்லாமே நாமளா அனுபவப்பட்டு பேசணும்னா இந்த ஒரு ஜென்மம் பத்தாது. உலகத்துல அவளோ விஷயம் இருக்கு. நீங்க செய்திகள் பாக்கும் போது கொலை கொள்ளை நடக்கிறது, பொண்ணுங்களுக்கு வர பிரச்சனை இந்த மாதிரி நிறையா விஷயம் பத்தி பேசுறீங்க பேசிருப்பிங்க. அது எல்லாமே நீங்க முன்னாடியே அனுபவப்பட்டுட்டீங்களா என்ன? அப்போ அதுக்கெல்லாம் நீங்க தகுதியான ஆள் இல்லேனு சொல்லிட முடியுமா?. எல்லாமே பாத்து தானே தெரிஞ்சுக்கிட்டிங்க. அப்புறம் அந்த வாதம் எப்படி சரியாகும்.”

“சரி நாம இப்போ டாபிக்க்குள்ள வருவோம். அம்மா அப்பா கூட இருந்திருந்தா அவங்களுக்கு புரிஞ்சிருக்கும். அப்போவும் பாவம் அவங்க பேரெண்ட்ஸ குறை சொல்லியே கொடுமைப்படுத்துவாங்கன்னு சொல்றிங்க. ஒரு சந்தேகம் உங்க அம்மா அப்பா இருக்காங்களா மேடம்?”

“என்ன?”

“இல்ல, உங்க அம்மா அப்பா இருக்காங்களா? இங்க இருக்காங்களா?”

“அம்மா இல்லை நான் காலேஜ் படிக்கும்போதே இறந்துட்டாங்க. அப்பா இங்கதான் இருக்காரு ” எனவும் அவர் எழுந்து நிற்க

“ரொம்ப நல்லது.. நீங்க எப்படி அவங்க இறந்ததும் எல்லாமே முடிஞ்சதுனு அதுக்கப்புறம் வாழ்க்கையே வாழாம விட்டுட்டீங்களா? இல்லை உங்க அப்பா என் மனைவி இறந்துட்டான்னு பீல் பண்ணிட்டு உங்களுக்கு அடுத்து செய்ய வேண்டியதை செய்யமா விட்டுட்டாரா?”

இல்லை என மறுப்பாக தலையசைக்க

“குட் … அப்போ இறந்தவங்கள நினைச்சுட்டு மட்டுமே இருந்தா வாழ்க்கை போகாதுன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கு. அப்டின்னா உங்க அப்பாவுக்கு இல்லை உங்களுக்கு உங்க அம்மா மேல பாசமில்லைன்னு ஆகிடுமா? அவங்க இறந்ததை பத்தி பீல் பண்ணாம அடுத்தடுத்து லைப் பாக்கறீங்க. குழந்தைங்க குடும்பம்னு சந்தோஷமா இருக்கீங்க. அப்டினா உங்க அம்மாவை உங்களுக்கு பிடிக்காத?”

“அதெப்படி… அடுத்து வாழ்க்கையை அதுக்குன்னு பாக்காம இருக்கமுடியுமா. இறந்தவர்களுக்காக பீல் பண்றோம் சரி. அதுமட்டுமே பண்ணா அடுத்து குடும்பத்தை யாரு பாக்கிறது.”

“சூப்பர். அதேதான் நானும் கேக்கறேன். இறந்தவங்க இறந்துட்டாங்க. அதுக்காக அடுத்து எதையுமே பாக்காம மூலைல முடங்கி கெடக்கணும்னு யாருமே சொல்லலையே. சொல்ற நீங்க கூட அப்டி இல்லையே. என்ன ஒன்னு உங்களுக்கு ஒரு அளவுக்கு வயசு, பக்குவம்  வந்த அப்புறம் அந்த பிரச்சனைய பாக்கறீங்க. அவங்க முன்னாடியே பாத்துட்டாங்க. அதுல அவங்க தப்பு என்ன இருக்கு. நீங்க மட்டும் பீல் பண்ணாம உங்க அம்மாவை பத்தி யோசிக்காம அடுத்து லைப் பாப்பிங்க. அவங்க அப்டி இருக்கக்கூடாதா? என்ன மேடம் இது நியாயம்.

எங்க கூட எங்க பேரெண்ட்ஸ் இல்லேன்னாலும் அவங்க எங்களுக்கு சொல்லிகுடுத்த விஷயங்கள் நல்ல பழக்கவழக்கங்கள் எங்க மனசுல இருக்கு. அவங்க இருந்தாலும் இல்லாட்டியும் அவங்க சொன்னமாதிரி வாழ்ந்து காட்றதுல தான் உண்மையான பெருமையே அவங்களுக்கு போயி சேரும். அத இப்போவரைக்கும் எங்க குழந்தைங்க மீறலை. இதுக்கு மேலையும் அப்டித்தான்.

பெரியவங்க நீங்க சொல்ற விஷயம் சரிதான். ஆனா குழந்தைங்களுக்கு சொல்ற விதம் தான் தப்புன்னு சொல்ராங்க. ஏதாவது பிரச்சனைன்னா எங்ககிட்ட சொல்லணும்னு சொல்றிங்க. ஆனா  அவங்களுக்கு ஒரு பிரச்சனை அதுவும் நம்மகிட்டேயேன்னு சொன்னா அத மாத்திக்க முடில. சரி பண்ணிக்க முடில. அப்புறம் எப்படி வெளில இருந்து வர பிரச்சனைய சரி பண்ணபோறீங்க. ஒருவேளை குழந்தைங்க தப்பா புரிஞ்சுக்கிட்டா நாம தானே அத அவங்களுக்கு புடிச்ச மாதிரி சொல்லி புரியவெக்கணும் அந்த விஷயம் நமக்கு தானே தெரிஞ்சிருக்கணும். எல்லார் மாதிரி அட்வைஸ் பண்ணிட்டு போறதுக்கு குடுமபம், பெரியவங்க பெத்தவங்கனு நாம எதுக்கு. அவங்கள புரிஞ்சுக்கறதுக்கு தானே. அவங்களுக்கு எடுத்து சொல்லி புரியவெக்கத்தானே தவிர அதட்டி சொல்லி இல்லை. அந்த வேலைய சொசைட்டி பாத்துக்கும்.

அப்போ அவங்க சொன்னாங்களே. மேனேஜர் சொல்றதும், வீட்ல இருக்கற ஆளுங்க சொல்றதும் ஒன்னு இல்லைனு.அதேதான் அப்போ குழந்தைங்களுக்கு அதட்டி சொல்றத  அட்வைஸ் பண்றத எல்லாருமே தான் பண்ணுவாங்க. பேரெண்ட்ஸ் பேமிலின்னு வேறுபடுத்தி காட்டற விஷயமே குழந்தைங்களை புரிஞ்சுகிட்டு அவங்களுக்கு பிடிச்சமாதிரி  விஷயத்தை சொல்ற விதத்துல தானே.

எல்லா குழந்தைகளையும் கம்பேர் பண்ணி பேசி தான் முன்னாடி கொண்டு வரணும்னு இல்லை. மத்த பசங்க பண்ற நல்ல விஷயங்களை நீங்க பாராட்டுங்க. உங்க குழந்தைங்க முன்னாடி பெருமையா பேசுங்க. ஆனா அதோட நிறுத்திடுங்க. அவன் சூப்பரா பண்ரான்லன்னு சொல்லிட்டு இந்த மாதிரி எல்லாம் நீ ஏதாவது பண்றியான்னு கேக்கறீங்க பாரு. அதுதான் தப்பு.

ஒரு கட்டத்துக்கு மேல குழந்தைங்களுக்கே தோணும் கேப்பாங்க. நீங்க ஏன் அவனையே பெருமையா பேசுறீங்கன்னு..?

அவன் பண்ற விஷயம் நல்லதா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு. சோ அதான் அவனை புகழ்ந்து பேசுறேன்னு மட்டும் சொல்லுங்க.

அடுத்து இந்த மாதிரி அப்போ நான் பண்ணா நம்ம பேமிலிக்குபிடிக்கும்லன்னு நம்ம குழந்தைகளுக்கே தோணும். அத நாம சொல்லணும்னு இல்லை. ”

 

“அப்போ அவங்களுக்கு எதுவுமே சொல்லித்தர கூடாது.. எல்லாமே அவங்களுக்கே தெரியும்னு சொல்றிங்களா?” என ஒருவர் கேட்க

அக்சரா புன்னகையுடன் “அதுக்கு அது அர்த்தமில்லை. அவங்கள நீங்க புரிஞ்சுகிட்டு உங்கள அவங்களுக்கு புரியவெய்ங்க அதுவும் அவங்களுக்கு பிடிச்சமாதிரி. அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் அவங்க செய்வாங்க.”

“அதெப்படி நடக்கும்..?”

 

அக்ஸா “சிம்பிள். நமக்கு ஒரு டீச்சர் பிடிச்சிருந்தா அவங்க சப்ஜெக்ட்ல ரொம்ப அதிகமா கவனம் செலுத்தி படிப்போம். ஏன்னா அவங்ககிட்ட நல்ல பேர் எடுக்கணும். அதுல 100 பெர்சென்ட் வாங்க முடியாட்டியும் பெயில் ஆகாம பாத்துப்பாங்கள்ல. அந்த விஷயம் தான் இதுலயும் சொல்றேன். ”

 

“அவங்கள திட்டி ஒரு விஷயம் சொன்னாலும் படிக்க வெட்ச்சாலும், வெளில நாங்க விட்டுகுடுக்காம என் பசங்க நல்ல மார்க் எடுத்திருக்காங்கனு தானே சொல்லுவோம். எங்களுக்கு பாசமில்லாம இருக்குமா அப்போ?” என ஒருவர் கேட்க

அக்ஸா “அப்டின்னா, குழந்தைங்க உங்ககிட்ட அடம்பண்ணி ஒன்னு வாங்கிட்டு போனாலும், ஸ்கூல்ல அவனோட பிரண்ட்ஸ்கிட்ட என் அப்பா வாங்கித்தந்தது, என் அம்மா செஞ்சு தந்ததுனு உங்கள பத்தி பெருமையா விட்டுகுடுக்காம தானே  பேசுறாங்க. அவங்க அப்போ பாசமில்லாமலா பேசுவாங்க? நீங்க பண்றமாதிரி அதே விஷயம் தானே அவங்களும் பன்றாங்க.” என்றதும் ஸ்டுடென்ட்ஸ் ஹேவென்று கத்த

 

அக்சரா “நீங்க விஷயத்தை திட்டி சொல்லி அதுக்கு பின்னாடி காரணம் சொல்லி புரியவெக்க பாக்கறீங்க. ஆனா நான் சொல்லறது முதல  உங்கள புரியவெச்சுட்டா நீங்க காரணம் கூட சொல்லவேண்டியது இல்லை. நீங்க விஷயத்தை சொன்னாலே அவங்க செய்வாங்க. குழந்தைங்க மனசு அந்த மாதிரி. நமக்காக ஒருத்தர் யோசிக்கறாங்க, ஒன்னு பண்ணறாங்கன்னா அவங்க தான் முக்கியம்னு நினைப்பாங்க. அவங்க இவ்ளோ நேரம் ஆர்கியூ பண்ணதே அதுக்குதான். நீங்க பண்ற விஷயம் எது அவங்கள பாதிக்கிதுன்னு தான் சொன்னாங்களே தவிர உங்களையே தப்பு, பேரெண்ட்ஸ வேண்டாம்னு சொல்லல. அவங்க மனச புரிஞ்சுக்கோங்கன்னு தான் சொல்ராங்க. ஆனா அத பத்தி பேசுனதுக்கே நீங்க அப்பா அம்மா இல்லேனு எமோஷனல் பீலிங்ஸ் குடுத்து ரொம்ப நல்லா அழகா அவங்கள ட்ரீட் பண்ணிட்டீங்க. குழந்தைக மனசையும், அவங்க சொல்ல வரதையும்  பெரியவங்க புரிஞ்சுக்கலன்னு அவங்க சொன்ன விஷயத்தை எல்லாமே தாண்டி ஒரு ப்ரூப் நீங்க காட்டிட்டீங்க. உங்களோட இந்த அவசரம், அதுல வர பேச்சு தான் கஷ்டப்படுதுன்னு அவங்க சொல்ராங்க. அப்போ ஒரு பையன் சொன்னானே வெளில போகாத, மழைல போகாத, அடுச்சுக்காத,விளையாடாதனு ஒரு ஒரு விஷயம் எங்களுக்கு ஒரு டைம் டேபிள் குடுங்கன்னு கேட்டான்.அதுதான் நிஜம், அப்டித்தான் இருக்கு.. முதல பெரியவங்க நமக்கு ஒரு விஷயத்துல கிளாரிட்டி இருக்கனும். அதே இல்லாம நினச்ச நேரத்துக்கு அவங்களுக்கு ஒரு அட்வைஸ் குடுத்தா அவங்களும் என்ன பண்ணுவாங்க.?

குழந்தைங்ககிட்ட நாம சின்ன சின்ன விசயத்துல தோத்து அவங்கள வாழ்க்கைல ஜெயிக்கவெக்கிறது தான் பேரெண்ட்ஸ்கு கிடைக்கற மிகப்பெரிய வெற்றி. அவங்க அவங்களுக்கே புரியாம உங்கள பெருமைப்படுத்திட்டு இருப்பாங்க. அவங்கள அவங்க வழில போக விட்டு நீங்க கூட இருந்து கைடு பண்ணுங்க. உங்க வழில அவங்கள கூட்டிட்டு வர பாக்காதிங்கனு சொல்றேன்.இனிமேலாவது புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன். ” என்றவள்

 

தலைமை ஆசிரியரிடம் திரும்பி “இங்க நீங்க பண்ண விஷயத்தோட நோக்கம் ரொம்ப சரியானது. ஆனா ஒரே ஒரு குறை குழந்தைகளுக்கு செலெக்ஷன் வெச்சு சூஸ் பண்ணாமாதிரி பெரியவங்களுக்கு பண்ணிருக்கலாம்.” என்றவள் அவரும் அதை ஆமோதித்து புன்னகைக்க எழுந்துவந்து “சாரி பார் ட்ரபிள்.”

சிந்துவிடம் திரும்பி டோன்ட் ஒர்ரி சிந்து. தைரியமா இருக்கனும். நம்மகிட்ட ஒன்னு இல்லேனு மத்தவங்க அதை குறையா சொன்னாலும் நீ அதை குறைன்னு ஏத்துகாத வரைக்கும் அது உன்ன பாதிக்காது.” என்றவரிடம் நன்றி கூறிவிட்டு அக்சரா சிந்து, அனீஸை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.பிரியா, வாசு,ஆதர்ஷ் எழுந்து செல்ல அதற்குள் ஒரு சிறுமி வந்து சிந்துவிடம் “சிந்து,சாரி டி, எங்க அம்மா அப்டி பேசிட்டாங்க. உனக்கு எனக்கு கிளாஸ்ல இருக்கற காம்பெடிஷன் பத்தி சொல்லிட்டு உன்னை பத்தி சொல்லும் போது எல்லாமே சொல்லிட்டேன். ஆனா அம்மா இப்டி பேசுவாங்கனு நினைக்கல. சாரி ..”

சிந்து “ஹே,ரோஸி… அதனால என்ன.. விடு.நான் ஏதும் தப்பா எடுத்துக்கல.”

ரோஸி அக்சராவிடம் திரும்பி “சாரி ஆண்ட்டி. அவ அழுதது எனக்கே கஷ்டமா போயிடிச்சு. இனிமேல் என் அம்மாகிட்ட எதுவுமே சொல்லமாட்டேன்.” என அவள் கோபமாக கூற அவள் செய்கையில் சிரித்த அக்சரா அவளிடம் “நீ சொன்னது தப்பில்ல டா. ஆனா முழுசா சொல்லாம இருந்தது தான் தப்பு.”

“இல்லையே.எங்க அம்மாகிட்ட நான் எல்லாமே சொன்னேனே..”

“அப்டியா. உனக்கு சிந்துவை பிடிக்காதா?”

“அது பிடிக்காதுன்னு இல்லை. இவை எனக்கு போட்டியா வரதால இவளை முந்த முடிலேன்னு கொஞ்சம் கோபம். அதுனால எங்களுக்கு குட்டி குட்டி சண்டை வரும்.”

“சரி, உங்க அம்மாகிட்ட இவளை பத்தி இப்போ என்கிட்ட சொன்னமாதிரியேவா சொன்ன?”

“இல்ல.அப்போ கோபத்துல சொல்லும் போது அவளை புடிக்கல. அவ இரிடேட் பண்ரா அந்த மாதிரி தான் சொன்னேன்.”

“பாத்தியா. அதைத்தான் சொல்றேன். உனக்கு இவகூட வெறும் போட்டிதான்னு சொல்லிருந்தா உங்க அம்மாவே உனக்கு கரெக்டா அட்வைஸ் பண்ணிருப்பாங்க. இங்கேயும் இப்டி பேசிருக்கமாட்டாங்க. நீ கொஞ்ச கொஞ்சமா அவளை பத்தி கம்பளைண்ட் மட்டுமே பண்ணிட்டு இப்போ இதுதான் அந்த பொண்ணுன்னு காட்டுனதும் இவ தான் நம்ம பொண்ணுகிட்ட பிரச்சனை பண்ணவளானு தானே நினைப்பாங்க. டிபேட் டாபிக் அந்த மாதிரி அமைஞ்சு அதுல பெரியவங்க நம்மள இந்த குழந்தைங்க புரிஞ்சுக்கலையேன்னு ஒரு எமோஷன்ல சட்டுனு அப்டி சொல்லிட்டாங்க. அதனாலதான் அவளை ஹர்ட் பண்ணனும்னு இப்பிடி பேசிட்டாங்க. சோ ஒரு விஷயத்தை நீ அவங்ககிட்ட ஷேர் பண்ணா முழுசா அத பத்தி என்ன நினைக்கிறியோ சொல்லிடு. அப்புறம் அவங்க உன்னை சரியா கைட் பண்ணுவாங்க. சரியா?” என்றதும்

“ஓகே ஆண்ட்டி, சாரி அண்ட் தேங்க்ஸ்.” என முத்தமிட்டு விட்டு சென்றுவிட்டாள்.

இதை பார்த்த பிரியா வாசு சிரித்துக்கொண்டே வண்டியில் ஏற ஆதர்ஸை பார்த்ததும் முகம் மீண்டும் சுருங்க அவள் வண்டியில் சென்று ஏறினாள். அவளின் கண்களில் தெரிந்த கோபம் ஆதர்ஷ்க்கு புரிந்தது. அமைதியாக வண்டியை எடுத்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே -5உள்ளம் குழையுதடி கிளியே -5

ஹாய் பிரெண்ட்ஸ், புத்தாண்டு அருமையாகக் கொண்டாடி இருப்பிங்கன்னு நம்புறேன். எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தோழிகளுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இந்தப் புத்தாண்டு மிகச் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இனி தைப் பொங்கல் வேலைகளில் அனைவரும் பிசியாகிவிடுவோம். அதற்கு நடுவில்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 13ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 13

13 – மனதை மாற்றிவிட்டாய் காரிலிருந்து கோபமாக வெளிவந்த ஆதி அவளை அடிக்க போனவன் அவள் பயந்த விழிகளையும், நடுங்கிய கைகளையும் பார்த்தவன் “ச்சா…” என்றுவிட்டு காரை ஸ்டார்ட் செய்து உள்ளே கொண்டுவந்து நிறுத்தினான். பின்பு திவியிடம் சென்றவன் அவள் கை

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59

59 – மனதை மாற்றிவிட்டாய் அர்ஜுனுக்கு தப்பு செஞ்சவங்களை நம்புறாங்க. வீட்டில அவங்க பேசறத சொல்றத கேட்கிறாங்க. ஆனா இதுவரைக்கும் திவினால இவங்க யாருக்கும் பிரச்சினை வரலன்னு தெரிஞ்சும் அவள நம்பாம சொல்லவரதகூட கேட்காம இப்படி நடந்துக்கிறாங்களே. எல்லாருக்கும் அதிகபட்ச கோபமே