Tamil Madhura என்னை உன்னுள் கண்டெடுத்தேன்,கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 04

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 04

4 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்

 

“ஆதர்ஷ், இந்தா கார் சாவி, இப்போ இருந்து நீயே யூஸ் பண்ணிக்கோ.”

அவன் மறுக்க இவரோ “நீயே யோசி, நீதான் எல்லாமே மேனேஜ் பண்ணபோற, எப்படியும் வெளில போக வர வேலை இருக்கும். ஒண்ணு ஒண்ணுக்கும் வண்டி புக் பண்ணியா போக முடியும்.அதோட மூர்த்திக்கும் சில நேரம் நான் வேலை வெச்சு அனுப்பிச்சிடுவேன். அவனையும் நீ எதிர்பார்க்ககூடாதில்லை அதுக்கு தான். உனக்கு தான் டிரைவிங் தெரியும்ல நீயே இத வெச்சுக்கோ, இது உனக்குன்னு நீ எடுத்துக்காத, இந்த போஸ்டிங்கள இருக்கற யாருக்குனாலும் நான் இத செஞ்சுதானே ஆகணும். எல்லாத்துக்கும் மேல என் பையன் மாதிரின்னு சொல்லிருக்கேன் இத கூடவா செய்யமாட்டேன். ” என அனைத்தும் பேசி ஒருவழியாக அவனை ஒப்புக்கொள்ள செய்துவிட்டு வேலையை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு  மூவரும் பேசிக்கொண்டே வெளியே வந்தனர்.

“சரி, நான் அப்டியே கிளம்பறேன்” என  மூர்த்தியை அழைத்தவர் “அப்புறம் ஆதர்ஷ், சிந்து ஸ்கூல் முடிஞ்சதும் சஞ்சீவ் குட்டிய பாக்கணும்னு சொன்னதால அவ நம்ம வீட்ல தான் தனத்தோட இருக்கா.  நீ வேலை முடிச்சு நேரா வீட்டுக்கு போய்டு. நானும் தனம் கொஞ்சம் வெளில போகவேண்டியது இருக்கு. அதோட குழந்தைகளை கூட்டிட்டு கோவிலுக்கு போகணும்னு தனம் சொன்னா. அதனால அவங்க இரண்டு பேரையும் நானே கொண்டு வந்து வீட்டுக்கு விட்டறேன். உனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே? பக்கத்துல தான் ஒரு 15நிமிஷம் தான் தூரம் வரும்.”

அவன் சற்று தயங்கிவிட்டு “சரிப்பா, நீங்க கூட்டிட்டு போய்ட்டு வாங்க” என்றான். அவரும் புன்னகைத்துவிட்டு அக்சராவிடம் திரும்பி “என்னம்மா, அனிஷ், ரானேஷ் இரண்டுபேரையும் கூட்டிட்டு போகவா?”

“ஐயோ அங்கிள், அவனுங்கள வேண்டாம், அடங்கமாட்டானுங்க….நாளைக்கு ஸ்கூல் வேற இருக்கு. ஹோம்ஒர்க் பண்ணாம மட்டம் தட்டிடுவாங்க. வீக்கெண்ட்ஸ் கூட கூட்டிட்டு போயிட்டு எவளோ நேரம்னாலும் விட்றலாம் அங்கிள்… நீங்க அவங்கள கூட்டிட்டு போயிட்டு வாங்க.” அவரும் சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு

“மூர்த்தி போலாமா? கொஞ்சம் வெளில போகணும்..” எனவும்  மூர்த்தி சற்று தயங்கிவிட்டு “ஐயா, அக்சராமாவ கூட்டிட்டு போயி வீட்ல விடனுங்களே? ..” என இழுக்க

“ஓஹ்.. ஆதர்ஷ் .” என அவர் கூற வரும்முன்

ஆதர்ஷ் “ஒண்ணும் ப்ரோப்லேம் இல்ல பா, நான் வேணா கூட்டிட்டு போய்ட்றேன்.”

அக்சரா “பரவால்ல அங்கிள், எதுக்கு சிரமம், நான் அப்டியே நடந்து போயிடுறேன். நடந்து போயி ரொம்ப நாள் ஆச்சு.என்ன ஒரு நாப்பது நிமிஷம் அவ்ளோதானே…”

ஜெயேந்திரன் “நோ, நோ… அப்படியெல்லாம் தனியா அதுவும் சாயந்தரம் நேரம் இஸ் நாட் சேஃப்  புல்லா எஸ்டேட், செடி, மரம்னு பூச்சி ஏதாவது வந்திட்டா, ஆண்ட்டிக்கு தெரிஞ்சது அவ்ளோதான்….நீ ஆதர்ஸோட போ.” என்றுவிட்டு அவர் சென்றுவிட

அவர்களும் சிறிது நேரத்தில் கிளம்ப தயாராகினர். காரில் அவள் ஏறும் வரை அமைதியாக தன் கோபத்தை காத்தவன் வண்டி கிளம்பியதும் பொரிய ஆரம்பித்துவிட்டான்.

 

ஆதர்ஷ் “லுக் நீ ரொம்ப ஓவரா சீன் போடற அளவுக்கு ஒண்ணுமில்ல, என்ன அவரு முன்னாடி நல்லவ மாதிரி ரியாக்ட் பண்றியா? கூட வரதுக்கு அவ்ளோ யோசிக்கற? உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? பெரிய அழகின்னா?”  என வினவ

 

அக்சரா “நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல. அங்கிள் முன்னாடி சீன் போட வேண்டிய அவசியமும் எனக்கில்லை. யாரோ ஒருத்தரோட சம்பந்தமே இல்லாம கூப்பிட்டதும்  கிளம்பி போய்ட முடியுமா?”

“ஓஹோ, அப்போ யாரோ ஒருத்தர பத்தி சம்பந்தமே இல்லாம வெளில விசாரிக்கிறது, தெரியாதவங்கிட்ட பேசுறது  மட்டும் சரியா?” என ஏளனமாக கேட்க அவளுக்கு காலையில் நடந்ததை குறிப்பிடுகிறான் என்பது புரிய

அவளும் “நல்லா கேட்டுக்கோங்க, காலைல உங்கள பத்தி எதுவும் நானா யார்கிட்டேயும் கேட்கல, அங்கிள் இன்னைக்கு ஆபீஸ் வரத பத்தி தனம் ஆண்ட்டி சொன்னாங்க, அதுதான் எப்போன்னு கேட்டேன். அப்போதான் மூர்த்தி அண்ணா அவராதான் சொன்னாரு சிந்துக்கு ஸ்கூல் சேத்திரது, உங்களையும் கூட்டிட்டு அப்புறமா வருவாங்கன்னு எல்லாமே சொன்னாரு…, என்ன இருந்தாலும் இனிமேல் இங்க மேனேஜ்மென்ட் எல்லாம் உங்க பொறுப்பு தான். அதனால தான் வெல்கம் பண்ணேன். நீங்களும் ரொம்ப பெரிய மன்மதன், ஆணழகன்னு நினைச்சுக்காதீங்க. உங்க இடத்துக்கு யார் வந்தாலும் நான் பேசிருப்பேன், இன்வெய்ட் பண்ணிருப்பேன்…நானா உங்கள பத்தி விசாரிப்பேன், உங்ககிட்ட வந்து நிப்பேனு ரொம்ப எதிர்பாக்காதிங்க.. அது உங்ககிட்ட மட்டுமில்ல யார்கிட்டேயும்  நடக்காது…” என பொறுமையாக ஆனால் அழுத்தமாக கூறிவிட்டு அவள் திரும்பிக்கொள்ள அவளின் இந்த செயல் அவனுக்கு கோபம் வர அவளை விடக்கூடாது என அவனும்

“யார்கிட்டேயும் ஹெல்ப்ன்னு நிக்கமாட்டியா? இப்போ மேடம் என்கூட என் வண்டில தானே வந்திட்டு இருக்கீங்க.. அதுகூட மறந்திடுச்சா?”

 

அவளும் புன்னகைத்துவிட்டு “சாரி சார் நீங்க தான் ஒரு விஷயத்தை மறந்துட்டிங்க…நான் மூர்த்தி அண்ணா கூட தான் போறதா இருந்தது. உங்களுக்கு அங்கிள் அவர் வந்த காரை குடுத்திட்டு மூர்த்தி அண்ணாவை கூட்டிட்டு போறதால

என்னை உங்ககூட போகசொன்னாரு, அண்ட் அவரு சொல்றதுக்கு முன்னாடியே நீங்க தான் கூட்டிட்டு போறேன்னு வேற சொன்னிங்க. அதனால நானா உங்க யார்கிட்டேயும் வந்து ஹெல்ப்னு நிக்கல.”

 

“அப்டினா மூர்த்தி அண்ணாவை உனக்கு டிரைவரா யூஸ் பண்றது? மத்த ஸ்டாப் யாருக்காவது அந்த கன்ஸஸன் இருக்கா என்ன?.. அது மட்டும் எந்த லிஸ்ட்ல சேரும்?”

“சார் நான் உங்க ஸ்டாப், ஆபீஸ் வரணுமா? வேண்டாமான்னு தான் நீங்க முடிவு பண்ணலாம், அதுல  தான் கேள்வி கேட்கலாமே தவிர நான் எப்படி வரேன், யார்கூட வரேன்னு எல்லாம் உங்களுக்கு தேவையில்லேனு நினைக்கிறேன். அதோட மூர்த்தி அண்ணாகிட்ட சொல்லி என்னை கூட்டிட்டு போற வேலைய குடுத்தது ஜெயேந்திரன் அங்கிள் தான்.. நான் வேண்டாம்னு சொல்லியும் அவரு கேட்கல. இப்போ நீங்க தானே எல்லாம் சோ நீங்களே அவர்கிட்ட சொல்லி கார் அனுப்பவேண்டாம்னு சொல்லிடுங்க. ஒருவேளை அவரும் ஆண்ட்டியும் ஓகேன்னு சொல்லிட்டாங்கன்னா தென் எப்படி வரணும்னு நான் பாத்துக்கறேன். முன்னாடியே சொன்னிங்கன்னா எனக்கு அடுத்த எப்படி வரதுனு பிளான் பண்ண வசதியா இருக்கும்… சோ அதுவும் நானா யார்கிட்டேயும் எனக்காகன்னு கேட்கல, அதுக்கும் நான் பொறுப்பாக முடியாது. எனக்கும் மேனர்ஸ் தெரியும். மத்தவங்க ஒன்னு தரேன்னு சொன்னதும் உடனே தலையாட்டிட்டு நிக்க மாட்டேன். அதேமாதிரி எப்படியும் நான் வரதுக்கு வேற அரேஞ்சமென்ட்ஸ் பண்ணனும்.. அதையும் நான் அவங்ககிட்ட தான் கேக்கணும். என் வேலை பிஏ சோ அங்கிள் கூடவேதான் நான் இருக்கனும்.. கரெக்ட்டா டைம் சொல்லி என்னால வேற வண்டி ரெடி பண்ண முடியாது, தனியா நடந்தோ, வேற வண்டி நான் வாங்கியோ போறேன்னு சொன்னா  அவங்க பாதுகாப்பு வயசு பொண்ணு தனியா போகவேண்டாம்னு அவ்ளோ சொல்ராங்க., அவங்க அவ்ளோ சொல்லியும் மனச சங்கடப்படுத்தற மாதிரி ரொம்பவும் சீன் வேண்டாம்னு ஒத்துக்கிட்டேன்… ” என்று முடித்தாள்.

 

“அப்போ மனச சங்கடப்படுத்த வேண்டாம்னு பாக்கிறவ இப்போ ஜெயேந்திரன் அப்பா கேட்டாரில்ல அனிஷ்,ரானேஷ கோவிலுக்கு கூட அனுப்ப சொல்லி… ஏன் அனுப்பல… அவங்களும் குழந்தைங்களோட இருக்க ஆசைப்படறாங்கனு உனக்கு புரிஞ்சும் ஏன் வேண்டாம்னு மூஞ்சில அடிச்சமாதிரி சொன்ன? அப்போ அவரு சங்கடப்படமாட்டாரா?”

 

அவள் அவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு பதில் கூறினாள்..”கண்டிப்பா சங்கடப்படமாட்டாரு.. நான் ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு அவருக்கு தெரியும்.. அனீஸ், ரானேஷ் இரண்டு பேரும் மூர்த்தி அண்ணா பையன் குமாரோட தான் எப்போவுமே இருப்பானுங்க… எல்லாரும் ஒரே ஏரியால வேற இருக்கோம். ஒண்ணாவே இருக்கற அவங்கள்ல குமார மட்டும் விட்டுட்டு கூட்டிட்டு போனா அது நல்லவா இருக்கும்.குழந்தைங்க மனசுல அது தேவையில்லாம ஒரு குறையா நின்றும். அங்க மூர்த்தி அண்ணா இருந்தாங்க… அவருக்கு  அனிஷ், ரானேஷ் மட்டும் போய்ட்டா ஏன் என்னை அனுப்பமாட்டேங்கிறீங்கன்னு  நம்ம பையன் கேப்பானேன்னு ஒரு உறுத்தல் இருக்கும். அங்கிள் குமார்ர கூட்டிட்டு போக தயங்கமாட்டாரு. ஆனா மூர்த்தி அண்ணாவும், மகா அக்காவும் ரொம்பவே தயங்குவாங்க. ஏன்னா அவங்க இதே ஊரு, என்ன வேலை பாக்ராங்கனு எல்லாருக்கும் தெரியும். குழந்தையை கூட்டிட்டு போயி யாராவது கேக்கும்போது அறிமுகப்படுத்திவெட்சா டிரைவர் பையனுக்கு வந்த வாழ்வ பாருப்பான்னு சட்டுனு யோசிக்காம சொல்லிடறாங்க. அதுல இருந்து குமார நான் இல்லாம இவங்களோட தனியா அனுப்பறதில்ல.. நான் போனா குழந்தைங்க எல்லாரும் நான் தான் கூட்டிட்டு போனேனு சொல்லிடுவேன்.  அதனால தான் நான் எப்போவுமே வெளில கூட்டிட்டு போனா மூணு பேரையும் ஒண்ணா தான் கூட்டிட்டு போவேன்.இல்லாட்டி வீகெண்ட்ஸ் தான். ” என அவள் விளக்கம் கூறி முடிக்கவும் வீடு வரவும் சரியாக இருக்க அவள் இறங்கி சுற்றிவந்து “இனிமேலாவது விஷயம் முழுசா தெரியாம பேசாதீங்க சார்… ஏன்னா நீங்க எல்லாமே சரியா முடிவெடுப்பீங்கன்னு நம்பி கூட்டிட்டு வந்திருக்காங்க. இப்டி அவரசப்பட்டு, மத்தவங்க பேச்ச கேட்டு நீங்களா ஒரு யூகத்துல எல்லாரும் தப்பா நினைச்சு பேசிட்டிருந்தா அது உங்களுக்கு நல்லதில்லைன்னு தோணுது.” என கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

 

அவள் கூறியது என்னவோ இப்டி நீங்க தேவையில்லாம எல்லாரையும் தப்பா நினச்சா அது உங்க கேரக்டர் பத்தி எல்லாரும் தப்பா சொல்லிடுவாங்க. அதனால யோசிச்சு முடிவெடுங்க, யாரு எப்படின்னு பாத்து முடிவு பண்ணுங்கன்னு அர்த்தத்தில். “ ஆனால் அவனுக்கோ ஆரம்பத்தில் இருந்து அவளை எது கூறினாலும் அவள் பதில் சொல்லிக்கொண்டே இருக்க அதில் இவனது கோபம் துளிர்த்தாலும் ஏனோ அவள் எதையும் யோசியாமல் காரணமில்லாமல் செய்யவில்லை என்பதில் மனதில் ஒரு நிம்மதி படர்ந்தது. இருந்தும் அவனது ஈகோ விட்டுகுடுக்க மனமில்லாமல் தான் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டது அனைத்தும். இறுதியில் அவளை தவறாக எண்ணிவிட்டோமோ என யோசித்துமுடிப்பதற்குள் அவள் இறுதியாக கூறிய வார்த்தை “மத்தவங்க பேச்ச கேட்டு நீங்களா ஒரு யூகத்துல எல்லாரும் தப்பா நினைச்சு பேசிட்டிருந்தா அது உங்களுக்கு நல்லதில்லைன்னு தோணுது” னு சொன்னதை இவளுக்கு எவ்வளோ திமிரு இருந்தா மிரட்டிட்டு போவா? என தவறாக புரிந்துகொண்டு  நல்லதில்லைனு சொன்னா என்ன அர்த்தம் ஜெயேந்திரன் அப்பாகிட்ட சொல்லுவேன்னா? பாத்துக்கலாம், யாருக்காகவும் நான் பயந்துட்டு என்னை மாத்திக்கவும் மாட்டேன், அப்டி அவளை அட்ஜஸ்ட் பன்னிட்டு இங்க இருக்கணும்னா வேலையே வேண்டாம்னு சொல்லிட்டு போய்டுவேன். எல்லாத்துக்கும் பதில் வெச்சிருக்கோம்னு திமிரு, நம்மள யாரும் குறை சொல்லமாட்டாங்கன்னு ஓவர் கான்பிடென்ட் அத முதல இல்லேன்னு ஆக்குறேன்.. என இத்தனை நேரம் அவன் மனதினுள் ரசித்த தைரியமா எதுவும் பேசுறா, கரெக்டா யோசிச்சு பண்ணறா என நல்லவிதமாக பெருமையாக நினைத்ததையே இறுதி வார்த்தையில் அவளது மொத்தமும் மீண்டும் கோபமாக உருப்பெற்றது… ”

 

அவர்களின் பேச்சும் வார்த்தைகளும் அவர்களுக்கிடையே விளையாடியதா?இல்லை விதி விளையாடியதா? என கடவுளுக்கே வெளிச்சம்.

வீட்டினுள் நுழைந்தவள் முதலில் குறுக்கும் நெடுக்கும் ஒரு ஐந்து நிமிடம் நடந்துவிட்டு “இப்போ அவருக்கு என்னதான் பிரச்சனை, நான் அவரை என்ன பண்ணேன். என்கிட்ட மட்டும் இப்டி எரிஞ்சு விழுந்திட்டு என்ன பண்ணாலும் தப்புன்னு சொல்லிட்டு இதெல்லாம் பண்ற அளவுக்கு என் மேல என்ன கோபம்? மத்தவங்ககிட்ட எல்லாம் கரெக்ட்டா தானே இருக்காரு .. நார்மலா தான் பேசுறாரு…” என யோசித்தவள்

“ஒருவேளை அந்த விக்னேஷ் வீணாப்போனவன் ஏதாவது என்னை பத்தி சொன்னதால அப்டி நடந்துக்கறாரா?”

“ச்ச,ச்சா …வேற ஒருத்தன் பேச்ச கேட்டு அப்டியே நம்பி பேசுறவர் மாதிரி தெரிலையே?” என்னவோ எதுன்னாலும் பாத்துக்கலாம். என அவளுக்குள்ளே முடிவெடுத்துக்கொள்ள அனிஷ், ரானேஷ், குமார் அனைவரும் கத்திகொண்டே ஓடிவந்தனர். குழந்தைகளை பார்த்ததும் மற்றதை இவள் தூக்கி எறிந்துவிட்டு அவர்களோட விளையாட பேச துவங்க, அந்த நேரம் அவளது தோழி ப்ரியாவிடம் இருந்து அழைப்பு வர அதை எடுத்த அனிஷ் அவளிடம் பேசிவிட்டு “பிரியா ஆண்ட்டி எப்போ வரீங்க, இந்த அக்ஸா எங்களை உயிரை வாங்குறா…என்ன பிரண்ட்ட வளத்தி வெச்சுஇருக்கீங்க.. சொல்ற பேச்சை கேக்கமாட்டேன்கிறா, ஒழுங்கா வேலை செய்றதில்லை.. ஸ்வீட்ஸ் சாப்பிடாம நான், ரானேஷ், குமார் எல்லாம் பீலிங்ஸ்ல இருக்கோம். வேணா அவன்கிட்ட கேளுங்களேன். என சிறுசும் “ஆமா ஆண்ட்டி அக்ஸா மோசம், சேட்டை ரொம்ப்ப்ப பண்ரா… ” என அது ஸ்டைலில் கைவிரித்து சொல்லு வீடியோ காலில் பார்த்துக்கொண்டிருந்த பிரியாவிற்கு சிரிப்பு வர அக்சராவோ “டேய் போதும் போங்கடா.. அவ என் பிரண்ட்… போட்டு குடுக்கிற வேலைய விட்டுட்டு வேற நல்ல வேலை இருந்தா பாரு போ.”

அவனுங்களும் பழிப்பு காட்டிவிட்டு “ஆண்ட்டி உண்மையா சொன்னதால தான் திட்டுறா… நீங்க சும்மா விடாதீங்க அவளை.” என கத்திகொண்டே வாண்டுகள் வெளியேறிவிட அக்சராவும் சிரித்துக்கொண்டே அவளிடம் பேச ஆரம்பித்தாள்.

இந்த வாரம் நடந்த அனைத்தும் அவள் கூறிமுடிக்க முதலில் பிரியா “யாருடி  பேர் கேட்டா கூட அவ்ளோ சீன் போடறது? ரொம்ப ஓவரா இருக்கே?”

அக்சரா “எனக்கு அதெல்லாம் பெரியவிஷயமா தெரில.. அது அவங்களோட பிரைவசி..”

“ஏய் இந்த காலத்துல பொண்ணுங்ககிட்ட பேச, பொண்ணுங்க போன் நம்பர் வாங்கன்னு ஒரு ஒருத்தனும் எப்படி இருக்கானுங்க. இவன்கிட்ட ஒரு பொண்ணா வந்து பேசுனா சந்தோசமா ஏத்துக்கவேண்டியதுதானே.. ஆனா இப்டி இருக்கறவனுங்க தான் ரொம்ப பண்ணுவானுங்க… நீ தான் பிரைவசி அது இதுங்கற…”

“ச்ச..ச்சா… அப்டியில்லைடி இப்போ நம்மகிட்ட ஒருத்தர் பேரோ, போன் நம்பரோ கேட்டா உடனே தூக்கிக்குடுத்திடுவோமா? அது மட்டும் நம்மளோட பிரைவசின்னு சொல்றோம். அதேமாதிரிதானே பசங்களுக்கும். எனக்கு அதுல பிரச்சனைன்னு சொல்லல. ஆனா சம்பந்தமே இல்லாம ஒருத்தர்கிட்ட ஏன் இவ்ளோ கோபப்படணும். எல்லார்கிட்டேயும் அப்டி அவரு இருந்திருந்தா சரி அது அவரோட இயல்புன்னு நினைச்சிருப்பேன். பட் மத்தவங்ககிட்ட எல்லாம் சாதாரணமா இருந்திட்டு நம்மகிட்ட மட்டும் காரணமே இல்லாம ஒருத்தர் விலகுறாங்கன்னா தான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு…” என்றாள் அக்சரா

“ம்ம்…புரியுது… ஆனா யாரோ அப்டி நினைச்சிட்டு போறாங்கன்னு விட்று. நீ ஏன் போட்டு இவ்ளோ கொழப்பிக்கற? ஏய் வேற ஏதாவது?” என பிரியா சந்தேகமாக வினவ

“அடி பைத்தியக்காரி ஆரம்பிச்சிட்டியா?… இங்க பாரு இனிமேல் தினமும் இரண்டுபேரும் ஒரே இடத்துல தான் வேலை பாக்க போறோம், பக்கத்து வீடுன்னு இங்கேயும் அவங்கள தான் பாக்கணும். அப்டி இருக்கறதுல மூஞ்சை தூக்கிவெச்சுட்டு இருந்தா நல்லவாயிருக்கும்… அதுக்காக தான் சங்கடமா இருக்குனு சொன்னேன். நீ என்னை சந்தேகப்படுற அளவுக்கு எல்லாம் எதுவுமில்லை…போதுமா?” எனவும்

ப்ரியாவும் சிரித்துவிட்டு “சரி, சரி எப்படியும் அடுத்த வாரம் லீவு…நான் அங்க வரேன்… அதுவரைக்கும் சமத்து புள்ளையா இரு. இல்லை என்னோட தளபதிங்க இருக்கானுங்க.. பாத்துக்கோ….” என மிரட்ட

அக்சரா “யாரு அந்த நண்டு, சுண்டுவுமா? சரி,சரி… எனக்கு ஒரு டவுட் அப்டினா நீ வரவரைக்கும் சமத்தா இருந்திட்டு அப்புறமா என்னவேணாலும் பண்ணலாமா?” என அவள் கேள்வியே வில்லத்தனமான இருக்க ஒரு நொடி யோசித்துவிட்டு பிரியா “ஒய்….ஒழுங்கா இரு.. வந்து கவனிச்சுக்கறேன்..” என சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட அவளும் சிரித்துக்கொண்டே குட்டிஸ்களிடம் சென்று பிரியா வர போகிறாள் எனவும் அவர்கள் மகிழ்ச்சியில் மீண்டும் குதித்தனர்.

சிந்துவும், சஞ்சீவும் அந்நேரம் வந்து இறங்க அனைவருடனும் சற்று பேசிவிட்டு தனம், ஜெயேந்திரன் கிளம்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 17கபாடபுரம் – 17

17. வலிய எயினன் வரவேற்பு   அந்தி மயங்குகிற வேளையில் – எதிரே தொடுவானமும் கடற்பரப்பும் சந்திக்கிற விளிம்பில் கருங்கோடு போல் ஒரு வரைவு தெரிந்தது. அருகில் நெருங்க நெருங்க, மரங்களின் வடிவமும் மலையும் மெல்லத் தெரியலாயின. தூரதிருஷ்டிக் கண்ணாடி பதித்த

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16

கனவு – 16   சஞ்சயனும் வைஷாலியும் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். வைஷாலி வீட்டின் முன்னே சஞ்சயன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் வைஷாலி எதுவுமே பேசாது இறங்கிக் கீழே சென்றாள். அவளை அந்த மனனிலையில் தனியாக

உள்ளம் குழையுதடி கிளியே – 1உள்ளம் குழையுதடி கிளியே – 1

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க…. ‘உள்ளம் குழையுதடி கிளியே’ வாயிலாக உங்களை சந்திக்க வந்துவிட்டேன். ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட முடிவுக்குத் தள்ளும்  ஆற்றல் சூழ்நிலைக்கு மட்டுமே உண்டு. நாம் படிப்பாகட்டும், உத்யோகமாகட்டும் நாம் ஆசைபட்டது  ஒன்றாக இருக்கக் கூடும் ஆனால்