Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ராஜி பிரேமாவின் “உன் விழிகளில் தொலைந்த நாள்” – சிறுகதை

உன் விழிகளில் தொலைந்த நாள்

ஏண்டி லீவுக்கு வீட்டுக்கு வந்தா ஒரு வேலையும் பாக்கக்கூடாதுன்னே இருக்கியே…செத்த இந்த பாத்திரத்தை கழுவுனாத்தான் என்ன…எப்ப பாரு அந்த போனையே நோண்டிட்டி இருக்கது…அதில அப்படி என்னதான் இருக்கோ…வழக்கமாய் வாங்கும் வசவு தான் அதுனால பெருசா எதுவும் எடுத்துக்காம அஞ்சு நிமிசத்தில போனை தூக்கி ஓரங்கட்டிட்டு அம்மா சொன்ன வேலையை பாத்து முடிச்சா கயல்…ஏன்னா அப்போ அடுத்த ஒரு மூணு மணி நேரத்துக்காச்சும் திட்டு விழாது…

 

கயல்…நம்ம கதையோட ஹீரோயினுங்க…சோ இன்ட்ரோ கொடுக்கணும்ல… கொடுத்துடலாம்…

 

பெயருக்கேற்ற விழிகள்…அவளோட அழகே அது தான்…சிரிக்கையில் மெலிதாய் விழும் கன்னத்துக்குழி…நவ நாகரீகமாய் எதுவுமே இல்லாமல் சுருக்கமாய் சொன்னால் அரிதாரம் பூசாத திராவிட அழகு அவளது முகம்…

 

வீட்டிற்கு ஒரே பெண்ணாய் செல்லமாய் வளர்ந்தாள்…அம்மாவிடம் திட்டு காது கிழிய கேட்டாலும்…அப்பாவை பார்த்து சிரித்துக்கொண்டே சமாளித்து விடுவாள்…எல்லா பெண்களையும் போல…செல்லம் கொடுத்து வளர்த்ததால ஒரு பக்குவம் இல்ல…பேசாம ஹாஸ்டல் பாத்து சேர்த்துடுங்க…இந்த வார்த்தை அவ வாங்காத நாளே இல்ல…அது கடவுளுக்கு கேட்டதாலோ என்னவோ…காலேஜ்க்கு வெளியூர் போக வேண்டியதாயிற்று…

 

எந்த அம்மா அவள ஹாஸ்டலுக்கு சேருங்கணு சொன்னாங்களோ அவங்க தான் இவ முதல் நாள் ஹாஸ்டல் போறப்போ சிறு பிள்ளையாய் கண்ணீர் வடித்தாள்…இன்றும் பாசம் உள்ளுக்குள் இருந்தாலும் வெளிய காட்டிக்காம அடிக்கடி கடிந்து கொள்வாள் கயலுக்கும் தெரியும் எதுக்கு அம்மா இப்படியெல்லாம் பேசிறாங்கனு…சமயத்தில நினைச்சுப்பா ஒரு வேளை நாம அம்மா ஆகிறப்போ இன்னும் தெளிவா புரியுமோ என்னவோ…

 

 

வீட்டில இருக்கப்போலாம் ஹாஸ்டல சேர்ந்த முதல் நாள் நியாவத்துக்கு வரும்…சாப்பாட்டை செஞ்சுட்டு அம்மா தாங்குவாளே இங்கிட்டு வந்திட்டு நாம நல்லா கூட சாப்பிட முடியாம ஏங்கிட்டு கிடக்கோம்…துவைச்சுப்போட்ட துணியை மடிக்க கூட அலம்பு பண்ணிட்டு சுத்திட்டு திரிஞ்சேன் இங்க வந்திட்டு எல்லா நானே பாக்கிறேன்…இது எல்லாத்துக்கும் மேல எனக்கு ஒண்ணுனா என் அப்பாவும் சரி அம்மாவும் சரி துடிச்சுப்போயிடுவாவோ…

 

ஆனா இங்க வந்ததிலலிருந்து போன் பேசுறப்போ கூட பாத்து தான் பேசுறேன்…லேசா காய்ச்சல்னா கூட 600மைல்க்கு அங்கிட்டு இருக்க குரல தெரிஞ்சிடுது போல…எம்புட்டு உடம்பு சரியிலாட்டியும் சிரிச்சுட்டே சமாளிச்சிருவேன்…என்னால அவுக கவலப்படகூடாதுலடே அதான்…

 

ஒவ்வொரு முறை நான் இங்க வந்திட்டு கிளம்புறப்போலாம் முந்தின அம்மா பக்கத்தில போய் தூங்க்கிடுவேன்…அந்த அரவணைப்புல ஏதோ மந்திரம் மாதிரி சட்டுனு தூக்கம் வந்திடும் அழுதிட்டேனாலும்…

 

சட்டென நிகழ்கால நினைவுக்கு வந்தவளாய் அம்மாவை பார்க்க…போனை நிஜமாகவே ஒரங்கட்டிட்டு அம்மாவுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தாள்…

 

இன்னும் மூணு நாளில கிளம்பணும்…இப்போவே நினைத்து நொந்துக்கொண்டாள்…தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்திலிருந்தும் விலகி பெற்றோருடன் மட்டுமே பேசி கழித்து அழகாய் களித்தாள்…

 

சென்னை…பெரு நகர சிக்கலுக்குள் தினமும் சிக்கி அல்லாடும் கிராமமென்னும் வளர்ந்த நகரம்…திருநெல்வேலியில் தன் வாழ்க்கையை அழகாய் களித்த கயலுக்கு அந்நகரம் பிரமிப்பு மட்டுமல்ல தாமரை இலையில் நழுவி ஓடும் நீரைப்போல ஒட்டாததாகவே இருந்தது…நகரியத்தில் மிச்சமிருக்கும் கலாச்சாரமும் அங்கே காண நேருகையில் உவகையில் சிறிதேனும் மனதை தேற்றிக் கொண்டாள்…

 

விடுதி வாழ்க்கை அழகாய் கழிய ஏதுவாறு உடனிருந்தவர்களும் அமைய…அவர்களின் அன்பில் வீட்டு நினைப்பு அதிகமாய் வராமல் செய்தன…இருந்தாலும் அவளைப் பொருத்தவரை காதல் என்ற விசயத்தில் தெளிவாய் இருந்தாள்…நேசிச்சா உண்மையா நேசிக்கணும்…சும்மா லவ் பண்ணிட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு போறதுக்குப் பேரா காதல்…

 

ஏண்டி நீ யோசிக்கிறதுலாம் சரி தான் ஆனா அதுக்குனு கூட படிக்கிற பசங்கக்கூட சாதரணமாக்கூட பேச மாட்டேங்கிறியே…அவள் தோழி சுபி வினவ…

 

அதுக்கில்லடி கொஞ்சம் பயம் தான்…நான் வளர்ந்த விதம் வேற இங்க எனக்கு எல்லாமே புதுசா தான் இருக்கு…அவங்க என்மேல சாதாரணமா காட்டுற அக்கறையில கூட எனக்கு பயமும் சேர்ந்தே வந்திடுது…பேசணும்னு தோணனும்னா முதல பயம் போனும்ல நம்பிக்கை வரணும்…

 

அதுக்கு நீ பேசுனாத்தாண்டி வரும்…

 

ம்ம்ம் சரி தான் ஆனா ஏனோ அப்படி யார்ட்டயும் பேசக்கூட பிடிக்கல…

 

எப்படியோ போ…உன்க்கிட்டலாம் பேசி ஜெயிக்க முடியுமா…

 

நாட்கள் கடிகார முட்களாய் கழிய…ஒரு நாள் மதிய நேரம் அவள் மட்டும் நடந்து வர…தூரத்தில ஒரு குரல் கேட்க சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்…

 

கயல்…இந்தப் பென் உன்னோடதா மா…

 

இல்லணா…சீனியர் சந்துருவிடம் கூறிவிட்டு விருட்டென நகர்ந்தாள்…

 

கயல் மறுபடியும் யாரோ கூப்பிட…

 

ஹேய் ஒரு நிமிஷம் நில்லு…

 

வார்த்தைகள் வர மறுத்து தொண்டைக்குழியில் விழுங்கியப்படி…கையில் இருந்த வாட்டர்ப்பட்டிலை கெட்டியாய் பிடித்தப்படி…சிறிது தைரியம் வந்தவளாய் சொல்லுங்க…

 

என்னைத் தெரியுதா…கௌதமிடருந்து

 

ம்ம்ம் நம்ம கிளாஸ் தானே பாத்திருக்கேன்…

 

ம்ம்ம் உன்க்கிட்ட ஒண்ணு சொல்லணும்…

 

எனக்கு உன்னய ரொம்ப பிடிக்கும்…உன்னோட செயல்கள் எல்லாம் என்னுள் ஊடுருவி நீ மட்டும் தான் எனக்குள்ள ஆட்சி பண்ணிட்டு இருக்க…ஒரு பிரெண்டா வேணாம் அதுக்கும் மேலயும் நீ எனக்கு வேணும்…நான் மத்த பசங்க மாதிரி இல்ல…எனக்கு உன்னைய நேசிக்கிறேனு சொல்லக்கூட தோணல…உன்கூட என் வாழ்க்கையை பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன்…என் உயிரின் கலந்த ஒருத்தியாய் நீ மட்டுமே இருக்கணும்னு ஆசைப்படுறேன்…

 

அவன் பேச பேச விக்கித்து நின்றாள்…அவன் விழிகளை மட்டுமே நோக்கினாள்…கண்கள் குளமாகியது இவளுக்கு அத்துனை காதலும் அவன் விழியில் மின்ன…

 

இங்க பாரு மது…

 

என்ன அப்படி பாக்கிற எனக்கு நீ மது தான்…அது என்னமோ அந்த பேர் தான் பிடிச்சிருக்கு…இங்க பாருமா

நான் உன்னை எப்போவும் கட்டாயப்படுத்த மாட்டேன் என்னய காதலிக்க சொல்லி…ஆனா நீ என் உற்றவளா வந்த நல்லா இருக்கும்னு மட்டும் மனசார நினைக்கிறேன்…நல்லா யோசிச்சு சொல்லு…

 

சாரி கெளதம் எனக்கு அப்படி ஒரு எண்ணம் என்னைக்குமே வராது…அதுக்காக நான் உங்கள வெறுக்கல…நிச்சயமா ஒரு நல்ல தோழரா மட்டும் பார்ப்பேன்…

 

அதற்கு மேல் எதுவும் கூற விரும்பாதவளாய் அவள் விலகிசெல்ல…இவனும் திரும்பி நடந்தான்…

 

“இருவேறு திசைகள்…இரண்டு மனங்கள்…ஒற்றை காதல்…”

 

அதற்குப்பின் கெளதம் வந்து பேசத்தான் செய்தான்…அவள் கூறியப்படியே அவன் நண்பனாக இருக்கமுற்ப்பட்டாலும் அவன் மனதின் காதல் விடுவதாயில்லை…அவனின் ஆழ்மனதை வெகுவாய் அவள் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தாள்…

 

மது…

 

ஹேய் அப்படி கூப்பிடாத…

 

ஏன் மா…

 

எனக்கு…

 

உனக்கு…

 

வார்த்தைகளை விழுங்கியப்படி பிடிக்கல கூப்பிடாத அவ்ளோதான்…

 

ஒஹோ…செரிங்க மேடம்…கூப்பிடல…

 

உன் மொபைல் நம்பர் குடு…

 

எதுக்கு…

 

எதுக்குனா பேசத்தான்…

 

அதான் இப்ப பேசுறேல போதாதா…

 

ஒருவேளை நீ இங்க இல்லாதப்போ பேசணும்னு தோணுச்சுனா…

 

அதெல்லாம் முடியாது..எனக்கா என்னைக்கு தோணுதோ அன்னைக்குதான் கொடுப்பேன்…இனிமே கேட்காத…

 

ம்ம்ம்…

 

என்னடி மூஞ்சிய உர்ர்னு வச்சிருக்க என்னாச்சு…

 

சுபு இன்னைக்கு அந்த கௌதம் எண்ட்ட என்ன கேட்டான் தெரியுமா…

 

அப்படி என்ன கேட்டான்…அவள் அனைத்தையும் கூறி முடிக்கவும்…

 

அடியே…அவன் எங்கிட்ட எப்போவோ உன் நம்பர வாங்கிட்டான்…எவ்ளோவோ கேட்டப்புறம் தான் கொடுத்தேன்…ஆனாலும் என்ன சொன்னான் தெரியுமா…இத அவளா கொடுக்கிற வரை நான் எதுமே மெசேஜோ காலோ பண்ணமாட்டேனு இருந்தாலும் அவ என்கூட இருக்கானு எப்பவுமே நான் உணரனும் அதான்…

 

இங்கப்பாருடி நீயும் அவனை நேசிக்கிற இது எனக்கும் தெரியும் அவனுக்கும் லைட்டா சந்தேகம் வந்திருக்கும்.  என் முகத்தை பாத்து சொல்லு இல்லனு…முடியாதுல…பிடிக்கலனா பிடிக்கலனு சொல்லிருக்கலாம் …நீ சொல்லிருப்ப…ஆனா பிரெண்டா இருக்கலாம்னு சொன்னப் பாத்தியா அப்போவே தெரியும் நீ அந்த உறவை அதோட அன்பை விட தயாரா இல்லனு…

 

வாழ்க்கையில சில நல்ல மனிதர்களும் இருப்பாங்கடி…நம்பு முதல்ல…ஏதோ சில விசயங்கள் நீ பாத்திருக்கேனா அதே மாதிரி எல்லாரும்  இருப்பாங்கனு நினைக்காத…

 

அவள் பேச பேச எதுவும் கூறாமல் விழித்துப்பார்த்துக் கொண்டே இருந்தாள்…

 

சிறிது நேரத்திலேயே அயர்ந்து தூங்கிவிட்டனர்…

 

விழிகள் மட்டும் உறங்கியவாறு நடிக்க…மனம் விழித்துக்கொள்ளும் வித்தை பெண்களுக்கு கைவந்த கலை…கயலும் அவ்வாறே…தன்னை முதன்முதலாய் நேசிக்கிறேன்…கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்ன ஜீவன் மேல் அளவுகடந்த விருப்பம்…

 

ஆனால் அவளுள்ளே அது காதல் தானா…இல்ல வெறும் Infatuation என தன்னுள்ளே தெளிவுப்படுத்தி விட்டே அவனிடம் கூறவேண்டும் என நினைத்தே கௌதமை முழுவதுமாக விட்டுக்கொடுக்க மனமில்லாமல் பிரெண்டா இருப்போம் என்றாள்…

 

சில காதல்கள் உணர்வுகளில் முக பாவனைகளில் அத்துனையையும் தெளிவுப்படுத்திவிடும்…இவளின் குழப்பம் நிறைந்த புன்னகை அவனுள் பலவித எண்ண அலைகளை கிளப்பி அவனையும் தூங்கவிடாமல் செய்தது…

 

“If You cannot sleep in the midnight…Remember… You May be Awaken in someone’s Dream”

 

இது உண்மைதானோ என யோசித்தவாறே தூங்கியவள்…பொழுது புலர்ந்ததை கூட அறியாமல்…

 

அவளை எழுப்பிய சுபு…அடியே நேரமாகிட்டுடி ஒழுங்கா எந்திரி…இன்னைக்கு அந்த ஒட்டகம் கிளாஸ் அவ்ளோ தான் வெளுத்துக்கட்டிருவாரு மனுஷன்…

 

என்னது அவரு கிளாசா…விழிகள் பெரிசாகி அவள் வினவ…

 

கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர்…

 

மொக்கையாக போய்க்கொண்டிருந்த வகுப்பறையில் இவளை அழகாய் கட்டிப்போட்டது உறக்கம்…சுபு எழுப்புவது கூட தெரியாமல் அயர்ந்து தூங்க…

 

கயல்விழி…

 

அச்சோ இவரு வேற பாத்துட்டாரே…ஒயே எந்திரிடி…என்னடி…அனைவரும் சிரித்தப்படியே அவளைப்பார்க்க…அவனும் தூங்கி வழிந்துக்கொண்டிருந்தான்…

 

என்ன மா கிளாஸ்ல வந்து தூக்கமா…நீங்களெல்லாம் படிக்க வாறீங்களா இல்ல எப்படி…கெட் அவுட் பிரம் மை கிளாஸ்…

 

சிறிது நேரத்திலேயே கௌதமும் சாரிடம் சிக்கி வெளியேற…சுபுக்கு லேசாக சந்தேகம் தலைதூக்கியது…ஒருவேளை இவ நமக்கு தெரியாம நைட் எதுவும் பேசிட்டிருந்தாப்பாளோ…இல்லயே நம்மகூட தானே இருந்தா…சரி இருக்கட்டும் நம்மதான் எதேச்சயா நடந்தத கூட தப்பா எடுக்ககூடாது…

 

கயல் சுபுக்காக ஒரு ஆலமரத்தின் நிழலடியில் உட்கார்ந்து இருக்க…கெளதமும் அங்கு வந்து சேர்ந்தான்…

 

ஆத்தி இவனும் வந்துட்டானா…என்ன செய்ய இப்படி தனியா சிக்கிட்டோமே…சும்மாவே கை கால்லாம் உதறும்…சரி சமாளிச்சுட்டு ஒடிருவோம்…என கயல் நினைத்தவாறே…

 

அவளுக்கு கொஞ்சம் தள்ளி வந்து அமர்ந்தவன்…என்ன கயல் சரியா தூங்கலியா நைட்…

 

ம்ம்ம் ஆமா..

 

ஹேய் ஒரு பிரெண்டா தான் மா கேட்கிறேன்…பயப்படாத…

 

நீங்களும் நைட் தூங்கலியோ…

 

ஆமா…

 

நீண்ட மௌனத்திற்குப்பின் தலைவலிக்கு நான் டீ குடிக்கப்போறேன்…உனக்கு வேணுமா வாங்கிட்டு வரவா…

 

இல்ல அதெல்லாம் வேணா…

 

ஒஹோ…

 

சரி…பாத்து இரு…வரேன்…

 

ம்ம்ம்…

 

பாரேன் தனியா இருக்காளே கூட துணைக்காச்சும் கொஞ்ச நேரம் இருப்போம்னு இல்ல…ஹீக்கும்…ஆமா நான் ஏன் இப்படிலாம் நினைக்கிறேன்…அதான் வேண்டாம்னு சொல்லிட்டோம்ல…ஆமா பட் ஒரு பிரெண்டாவாச்சும் இருக்கலாம்ல…மனம் அவளுடன் சண்டை இட்டுக் கொண்டிருக்கையில்…கையில் டீ கிளாசுடன் வந்து சேர்ந்தான்…

 

இந்தா பிடி…குடி…

 

இல்ல எனக்கு வேணாம்…

 

ஏன் நான் வாங்கி கொடுத்தா குடிக்கமாட்டியா…

 

அப்படிலாம் இல்ல…

 

அப்புறம் என்ன…எந்த உள் நோக்கத்திலயும் இல்ல…நம்பலாம்…

 

அவன் கையிலிருந்து வாங்கிக்கொண்டவள்…சூடு பொறுக்காமல்…கைக்குட்டையை சுற்றிக்கொண்டு சிறு பிள்ளையாய் குடித்தவளின் முகம் பார்த்து ரசித்தவாறே  திரும்பி சிரித்துக்கொண்டான் …

 

குடு நான் போய் குடுத்துக்கிறேன்…

 

ம்ம்ம்

 

நாணம் படர, அவன் சென்றதும் புன்னகைத்தவள்…அவன் சென்ற வழி நோக்கி பெருமூச்சுவிட பார்த்தாள்…

 

சிறிது நேரத்திலே வந்து அமர்ந்துக்கொண்டான்…

 

உரையாடலின் நீளம் சற்றுக்கூட தொடங்க…அவளையும் அறியாமல் மனதில் அச்சம் குடிக்கொண்டது…எங்க நேசிக்க ஆரம்பிச்சிருவேனோ என…

 

சுபு அங்கு வந்து சேர…இவர்களை சேர்த்து வைத்துப்பார்த்தவளுக்கு ஆயிரம் எண்ண அலைகள்…எதையும் காட்டாதவாறே…வர்றீயா போலாம்…

 

ம்ம்ம் வரேண்டி…ஏனோ பிரிய மனமில்லாமல் விலகும் கடைசி சொட்டு மழை நீர்போல அவனை விலகிச்சென்றாள்…விழி நிறைய ஏக்கங்களை புதைத்துக்கொண்டவாறே…

 

பை கௌதம்…

 

ம்ம்ம் பை பை…

 

முகத்தில் எதுவும் காட்டாமல் வந்தவளிடம் கயலும் எதுவும் பேசாமல் விடுதி வரை வந்து சேர்ந்தாள்…

 

ஹேய் இங்க வா…என்னடி அவண்ட்ட பேசிட்டு இருந்த…சும்மா தாண்டி…

 

ஒஹோ…எண்ட்டேயே மறைக்க ஆரம்பிச்சுட்டேள் ல…

 

ஏய் லூசு அதெல்லாம் இல்லடி…நிஜமாவே பெரிசாலாம் ஒண்ணும் பேசல…

 

நடந்த அத்தனையும் விவரித்தவள்…

 

அடப்பாவி…கொஞ்ச கொஞ்சமா நீ உன்னையும் அறியாமல் அவன்க்கிட்ட உன் மனசை கொடுக்கிற என புரிந்துக்கொண்டவள்…

 

ம்ம்ம் நடத்துங்கடி…எப்படியோ நல்லா இருந்தா சரிப்பா…

 

அதற்க்கடுத்த நாளில் இருந்து….இருவரும் சிநேகப்புன்னகை உதிர்க்கத்தொடங்கியதையும்…வகுப்பறை நேரத்திலும் இருவரும் இருவருக்குமே தெரியாமல் ஓரப்பார்வை பார்த்து கொள்வதையும் சுபு அறியாமல் இல்லை…

 

அன்றும் அவ்வாறே அவன் விழிகள் அவள் இருக்கையை தேட அவள் வரவில்லை…சுபு மட்டும் வந்து சேர…ஏன் வரல அவ…என்ன பிரச்சனை…அவளுக்கு என்னாச்சு…யோசித்துக்கொண்டே இருந்தவன்…சிறிது நேரத்திற்க்குப்பின் வகுப்பறையில் இருக்கப்பிடிக்காமல் வெளியேறினான்…

 

இருப்பினும் ஏன் வரலங்கிற விவரம் தெரிய சுபுவிற்க்காக காத்துக்கொண்டிருந்தாள்…வேறு யாரிடம் கேட்டாலும் அவள் அளவிற்கு அவளை அறிந்தவர் யாருமில்லை என அவன் அறிவான்…

 

அதே ஆலமர நிழல்…அன்றலர்ந்த தாமரையாய் முன்னொரு நாளின் நினைவுகளை இட்டு  அந்த ஏகாந்தத்தை அழகாய் நிரப்பிக்கொண்டிருக்க…அவ்வளவு நேரம் அவள் குறித்த கவலை எல்லாம் மாறி நீளப்படர்ந்த புன்னகை அவனை ஆட்கொள்ள ஆண்களுக்கும் வெட்கம் வருமோ என அவன் மனம் அவனை நோக்கி கேள்வி எழுப்ப…அவன் சிரிப்பு மேலும் அவன் முகத்தை அழகாக்கிக்கொண்டிருந்தது…

 

ஆலமரத்தை சுபு கடக்க முற்ப்படுகையில் சிந்தையில் இருந்து விலகி…நிகழ்காலம் வந்தான்…ஹேய் சுபு…

 

சொல்லு கௌதம்… ஏன் கயல் வரல…எதுவும் பிரச்சனையா…

 

அதெல்லாம் ஒண்ணுமில்ல…அவளுக்கு சரியா தூக்கமில்ல…அதனால கண்ணுல பிராப்ளம்…சரியானதும் வந்துடுவா…

 

கண்ணுலயா என்னாச்சு…பதறிய அவன் முகம் புருவம் சுருக்கி வினவ…

 

ஹேய் தூங்கினா சரியாயிடும்னு டாக்டர் சொன்னாங்க சோ நீங்க பயப்படாதீங்க சரியா…அவ நம்பர் தான் இருக்குல்ல…பேசலாம்ல…

 

இல்ல வேணாம்…

 

ம்ம்ம்…சரி நான் ஹாஸ்டலுக்குப்போறேன்…

 

சுபு…ஒரு நிமிசம்…

 

ம்ம்ம் சொல்லுங்க…

 

அவளை பத்திரமா பாத்துக்க…தாய்மை நிறைந்த அவ்விழிகளைப்பார்க்கையில் அவளையும் விழி நனைத்துச்சென்றது…

 

ம்ம்ம் கண்டிப்பா கௌதம்…

 

என்னடி இப்ப பரவாயில்லயா…

 

ம்ம்ம் கொஞ்சம் பரவாயில்லடி…சரி நீ தூங்கு…

 

ஹேய் என்ன யாரும் கேட்டாங்களா…விழிகளில் நிறைந்த ஏக்கம் சூழ அவள் கேட்பதன் அர்த்தம் புரிய இருந்தாலும் எதுவும் காட்டாதவளாய்…

 

ம்ம்ம் நம்ம கீதா மேம் கேட்டாங்க…அப்புறம் அம்மு,கீது,பூவி எல்லோரும் கேட்டாங்கமா…

 

ஒஹோ வேற யாரும் கேட்கலயா…உதட்டை சுழித்தவாறே அவள் கேட்க…

 

அடியே இவ்ளோ பேரை சொல்றேன்…என்ன இப்படி கேட்கிற…அப்ப நீ யார எதிர்ப்பாத்து கேட்கிறனு சொல்லு நான் சொல்றேன்…கண்ணடித்தவாறே அவள் கேட்க…

 

நான் யாரையும் எதிர்ப்பாக்கல பா…

 

ம்ம்ம் நம்பிட்டேன்…

 

சரி நீ தூங்குமா…

 

ம்ம்ம்…

 

ஹேய் லூசு கௌதம் கேட்டான்…

 

அவள் முகம் பார்த்தவள்…அடிப்பாவி…இவ்ளோ நேரம் கண்ணு வலினு சொன்னியேடி இப்போ எவ்ளோ பெருசா விரியுது…கேடி டி…

 

நிஜமா கண்ணு வலிக்குது…நீ அதை விடு…சொல்லு என்ன கேட்டான்…

 

ம்ம்ம் மனசுக்குள்ள இவ்ளோ ஆசைய வச்சிட்டு ஏண்டி நடிக்கிற…நிஜமா சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா நல்லா இருக்கும்…ஆனா உன் பிடிவாதம் தான் எல்லாத்துக்கும் காரணம்…இதுக்குப்பேரு காதலானு இவளுக்கு இன்னும் புரியலயா… இல்ல எப்படி எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கே…

 

சுபு…அவளை உலுக்கியவாறே கயல் கேட்க…சொல்லு அவன் என்னமா கேட்டான்…பரிவாய் கேட்ட கண்களில் ஒளிந்து மறைந்தன ஓராயிரம் கனவுகள்…

 

ஏன் வரல என்னாச்சுனு கேட்டான்…சொன்னேன்…இவ்ளோ அக்கறையா கேட்கிறீங்க…நீங்களே அவளுக்கு கால் பண்ணி கேட்கலாம்லனு சொன்னா…இல்ல வேணாம்னு சொல்லிட்டாரு…

 

ஒஹோ……

 

ம்ம்ம்…

 

நாளைக்கு வந்திருவே ல டி…நீயில்லாம கிளாஸே போரடிக்கு எனக்கு…

 

இத்துனை கணம் அவனை பற்றியே யோசித்து அவளை மறந்துட்டோமே என்பதை அழகாய் நினைவூட்டினாள்…

 

கண்டிப்பா வந்திடுறேண்டி இப்போ பரவாயில்ல…

 

ம்ம்ம்…எனக்கூறிய வாறே அவளை மெலிதாய் அணைத்துக்கொண்டாள் சுபு…மழைக்கு அடைக்கலம் கிடைத்த பறவைப்போல அவளின் மனது அக்கணம் மாறிகனவுகளத்துனையு

மறுநாள்…

 

அடக்கிவைத்த கண்ணீர் மொத்தமாய் சிதறுகையில் எப்படி மனம் இலகுமோ அப்படி இருந்தது கௌதமிற்கு இவளை கண்டதும்…

 

விழிகளால் நலமா என கேட்ட அவனின் நயன மொழியை உதாசீனப்படுத்திவிட்டு மனதிற்க்குள் விம்மி அழுதாள்…ஏன் பேசிருக்கலாம்ல…நான் எதும் நினைச்சுப்பேனு பேசலயா…நான் அவரை தான் நினைக்கிறேன்…ஆனா சொல்ல முடியலயே…சரியா வருமானு தெரியலயே…இவர் வந்ததிலிருந்து என் உலகமே அவர் பற்றியே இருக்கே…என் பிரெண்ட் கூட கூட சரியா பேசி ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கே…படிக்கிறேன் ஆனா ஏதோ…பித்து பிடிச்ச மாதிரி நான் ஏன் இப்படி மாறினேன்…நான் நானாவே இல்லயே…அத்தனையும் யோசித்து மனதோடு விழியையும் நனையச்செய்தவள்…

 

“என் சாளரயோரம் காணும் இயற்க்கைக்கு பேசும் திறன் இருந்தால் என் நிலைமையை உன்னிடம் உரக்க கூறியிருக்கும்…

 

என் தலையணையும் உன்னிடம் காதல்மொழி பறைத்திருக்கும்…மறைக்கப்பட்ட எண்ணிலடங்கா கனவுகளத்துனைம் அறிந்த ஒரே சாட்சியாய் எஞ்சி நிற்பதும் அதுவே…

 

என் விழியோரம் பதுக்கப்பட்ட ஒவ்வொரு கண்ணீருக்கும் தெரியும் உன்மேலான என் பேரன்பை”

 

சரியாய் இரண்டு நாட்களுக்குப்பிறகு…அவளை தேடி பின் தொடர்ந்து சென்றான் கௌதம்…

 

ஹேய் என்க்கிட்ட பேசமாட்டியா…

 

யாரு நானா நீங்களா…

 

நீதான்…நான் தான் பேசினேன்ல…

 

எது இந்த கண்ணால பேசிக்கிட்டது…வாய தொறந்து பேசினா என்ன முத்து உதிர்ந்திருமா…

 

சரி இப்போ பேசுறேன்ல சொல்லு…ஏன் பேசல…

 

நீங்க எனக்கு உடம்பு சரியில்லாதப்போ ஒரு வார்த்தை கேட்டீங்களா…

 

நான் கேட்டேன்மா…சுபு க்கிட்ட…

 

ஒஹோ அப்போ அவக்கிட்டயே பேசிக்கிட வேண்டியதுதானே…

 

என்க்கிட்ட உன் நம்பர் இல்ல அதான்…

 

பொய் தானே சொல்றீங்க…அவ உங்கக்கிட்ட என் நம்பர் கொடுத்தத எப்போவோ சொல்லிட்டா…ஆனால் நான் கொடுத்தா தான் பேசுவேனு சொல்லிட்டீங்களாமே…

 

உண்மைதான்…

 

கால் பண்ணிட்டேன் அதான் என் நம்பர்…சட்டென பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு எடுத்தவன்…என்ன எப்படி தெரியும்னா…உங்களுக்கு மட்டும்தான் வாங்கத்தெரியுமா…

 

ஆனா ஒருவிசயம்…

 

ஹேய் நில்லு என்ன சொல்லுவனு தெரியும்…ஒரு பிரெண்டா தான் கொடுக்கிறேன்.. வேற எதுவுமே இல்ல…அதானே…

 

ககக்கப்போ…

 

சிரித்துக்கொண்டே இருவரும் அவ்விடத்தை விட்டு நகர…தூரப்பறக்கும் பருந்தின் சாட்சியாய் மறைக்கப்பட்ட அக்காதல் அங்கு அரங்கேறியது…

 

கல்லூரியின் இறுதி வருடத்தில் தான் பல காதல்களும் காதலின் முடிவுகளும் அரங்கேறும்…இது எப்படினு பாக்கலாம்…

 

அன்று கல்லூரியின் Farewell Day…என்னலாம் பண்ணலாம்னு தீவிர நினைவலைகள் ஓடிக்கொண்டிருக்க…யாரு தொகுத்து வழங்கலாம் எனவும்…யோகி எழுந்து கயலை பண்ண சொல்லுங்க சார்…எனக்கூற…

 

என்னது நானா…

 

 

ஆமா நீயே பண்ணிடு உனக்கு தான் தமிழ் நல்லா வரும்ல…Saree ல வந்திடுமா நாளைக்கு…

 

அச்சோ சார்…

 

நீதான் பண்ற அவ்ளோதான்…

 

ம்ம்ம் சரிங்க சார்…

 

யோகியை பார்த்து கோவக்கனலாய் தெரித்தவள்…ரூம் பக்கம் வாடி வச்சிக்கிறேன்…எனக்கூறிவிட்டு கௌதம் பக்கம் திரும்பியவள்…அவன் சிரித்துக்கொண்டிருப்பதை பார்தத்தும்…முறைத்துவிட்டு நகர்ந்தாள்…

 

சுபு Saree லயாம் நான் என்னைக்கு அதெல்லாம் கட்டிருக்கேன்…கடவுளே இந்த யோகியால தான் எல்லாம் வரட்டும் இருக்கு…

 

ஹேய் இதுல என்ன இருக்கு…நம்ம காலேஜ்ல நடக்கிற கடைசி விழா…எல்லாரையும் பிரியப்போறோம்…அந்த ஒரு நாள் சந்தோசமா இருப்போம்டி…உண்மைய சொல்லு உனக்கு தொகுத்து வழங்கப்பிடிக்கும்…என்ன முதல் தடவை பண்ற தவறுகள் நடக்கலாம் பட் அது பிரச்சனையில்ல…முயற்சி பண்ணு பாத்துக்கலாம்…

 

ம்ம்ம்ம்ம் சரிடி…நீ சொல்றதால சரி…

 

புலனத்தில் மின்னியது குறுஞ்செய்தி…சுபு எடுத்து அவளிடம் கொடுக்க…என்னடி பேச ஆரம்பிச்சிட்டியா…

 

ஹேய் சும்மா பிரெண்டுடி…

 

ம்ம்ம் இத சொல்லியே ஊர ஏமாத்துங்க…இப்படித்தான் ஆரம்பிக்கும்…முடிவு எங்கனு எனக்கும் தெரியும்டி…

 

ஹேய் அதெல்லாம் ஒண்ணுமில்லடி…

 

என்ன மேடம் நாளைக்கு Sareeல…ம்ம்ம் கலக்குங்க…

 

நானே செம கடுப்பில இருக்கேன் ஓடிரு பாத்துக்கோ…

 

ரைட் விடு…

 

அவள் வரும் வழி நோக்கி ஆவலாய் காத்துக்கொண்டு இருந்தவன்…நீல நிற பட்டுச்செலையில் வதனமென வந்த பதுமையை விட்டு விழி அகல மறுத்தது கௌதமிற்கு…

 

மேடையில் ஏறியவாறே மைக் இருக்கும் இடத்திற்கு சென்றுக்கொண்டாள்…கால் நடுங்குவதை மறைக்கத்தான் என சுபு அறிவாள்…

 

நயன பாசையில் நல்லா இருக்கா என இவள் கேட்க…கண்கள் மூடியப்படியே கன்னக்குழி சிரிக்க…அவன் கூறினான்…இதை இன்னும் இரண்டு விழிகளும் பார்த்து மகிழ்ச்சியடைந்தது…சுபு தான்…

 

அவள் பேசியதை மொத்தமும் வீடியோ எடுக்க தொடங்கினான்…அத்துனை விழாவும் முடிய தொடங்குகையில் மாணவர்கள் சிலரை பேச அழைத்த கல்லூரி முதல்வர் கௌதமும் வந்தான்…

 

அவள் மேடைக்கு கீழே இருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு அவன் பேசியதை விழிக்கொட்டாமல் கேட்டுக்கொண்டாள்…

 

” என்னைய பொறுத்தவரை எங்க அப்பா தாங்க எல்லாமே…வாழ்க்கையில யாருக்கும் பயப்பட மாட்டேன் அவுங்கள தவிர…எங்க அப்பா சொல்றது ஒண்ணு தான் எப்போவுமே எந்த பரீட்சையுமே நல்லா எழுதிருக்கீயானு கேட்க மாட்டாங்க…திருப்தியாய் எழுதிருக்கியானு கேட்பாங்க…நல்லா எழுதலாம்…ஆனா திருப்தியா இருக்கணும்…அது தேர்வா இருந்தாலும் சரி வாழ்க்கையா இருந்தாலும் சரி அவுங்க சொன்னத தாங்க நானும் பின்பற்றுறேன்…

 

அப்புறம் நான் ஆசைப்பட்ட எல்லா விசயமுமே இந்த கல்லூரி எனக்கு கொடுத்திருக்கு…சீக்கிரமே இன்னும் சில விசயங்களும் கிடைச்சிட்டா போதும்…என்னுடய மனசும் திருப்தியாகிடும்…” இவளை நோக்கி கள்ளப்பார்வை பாத்தே சிரித்துக்கொண்டே இவன் இறங்க இவன் தோழர்கள் அத்தனை பேரும் இவனின் உள் நோக்க பேச்சறிந்து சிரிக்க…அதற்குமேல் அங்கு இருக்க விரும்பாதவளாய்…அங்கிருந்து நகர்ந்தாள்…

 

இவள் இருக்குமிடமறிந்து இவளை தேடி வந்தவன்…நல்லா பேசின கயல்…

 

ம்ம்ம்…

 

சரி நான் கிளம்புறேன்…

 

இரவின் நீட்சிப்படரத்துவங்க…இவள் கைப்பேசி சிணுங்கியது…

 

கௌதம்…

 

இவன் எதுக்கு கால் பண்றான்…

 

சரி பேசுவோம்…

 

ம்ம்ம் சொல்லுங்க…

 

ஏன் அப்படி பேசினீங்க…

 

எங்க பேசினத சொல்ற…மேடையிலயா…

 

ஹேய் அது…

 

அது…

 

இங்கப்பாருங்க…நான் சொல்லிட்டேன் உங்கள நான் பிரெண்டா மட்டும் தான் பாக்கிறேன்…

 

ம்ம்ம் தெரியும் மா…

 

அப்புறம் ஏன் அப்படி பேசிட்டு என்னய பாத்து சிரிச்சிட்டு போனீங்க…

 

ஹேய் என் முகமே அப்படித்தான் எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பேன்…

 

அப்படிலாம் தெரியலேயே…ஏதோ குத்தலா சிரிச்சலாப்ல இருந்துச்சு…அப்புறம் உங்க பிரெண்ட்ஸ் வேற கத்தினாங்க…

 

ஹேய் இதெல்லாம் ஒரு மேட்டரா…அவங்களுக்கு வேற வேலையில்ல சும்மா எதாச்சும் சொல்லிட்டு இருப்பாங்க நீ ஒண்ணும் நினைச்சிக்காத…நான் எதுவும் நினைக்கல மா…

 

சுபு வந்து சேர்ந்தாள்…

 

நில்லுடி நான் பேசிட்டு வரேன்…

 

விநோதமாய் அவளைப்பார்த்தப்படியே அறையினுள் நுழைந்தாள்…

 

பக்கத்து ரூமில் உள்ள தோழிகள் வெளியூர் சென்றிருப்பதால் சென்று கதவை தாளிட்டப்படியே அவனிடம் பேசத்தொடங்கினாள்…

 

நேரமாகிட்டே…தூங்கிட்டாளா என அறைக்குச்சென்றவள்…சரி டிஸ்டர்ப் பண்ண வேணாம்…தூங்கிருப்பா…என நினைத்தவாறே தனிமையை உள்வாங்கியப்படியே சுபு அவளின் அறைக்கு வந்து தூங்கத்தொடங்கினாள்…

 

தொடர்ந்த உரையாடல் இரவைப்போலவே நீட்சியாய் பின்தொடர்ந்து அதிகாலை 5 மணியை தொட்டிருந்தது…

 

தூக்கம் வருதுமா…

 

விழுந்து விழுந்து சிரித்தவன்…

 

இப்ப எதுக்கு சிரிக்கிற…

 

சும்மாதான்…விடிஞ்சிட்டுமா…

 

நாளைக்கு நான் ஊருக்குப்போனுமே…

 

ம்ம்ம் அவ்ளோதான் இப்பவே கிளம்பிடு…அப்புறம் தூங்க ஆரம்பிச்சா எழுந்திருக்கமாட்ட…

 

ம்ம்ம் அதுவும் சரிதான்…

 

ஹேய் ஒரு நிமிசம்…கயல்…நான் சொன்னேங்கிறதுக்காக பேசினதுக்கு ரொம்ப நன்றிமா…

 

ஹாஹா…பரவாயில்லமா…

 

பாத்து போயிட்டுவா…பை…

 

கயல் குளித்து கிளம்பி ரெடியாகி சுபுவை எழுப்பி ஹேய் போயிட்டு வரேண்டி…

 

என்னடி அதுக்குள்ள கிளம்பிட்ட…எப்போ தூங்கின எப்போ எந்திரிச்ச…

 

ஹாஹா அதெல்லாம் எப்போவோ…

 

வெயில் வரக் கிளம்பும் பனியைப்போல தன்னைவிட்டு விலகி நிற்கும் அவளின் அருகாமையை வெகுவாய் தேடியது சுபுவின் கண்களில் தெரிவதுகூட கவனிக்க மறந்தவாறே கிளம்பிச்சென்றாள்…

 

அடுத்த வாரம் விடுதியை காலி செய்ய வேண்டி இருப்பதால் இப்போதே பாதி லக்கேஜை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்…

 

ஊருக்கு போய்ட்டு அவள் திரும்பி வரும் அந்த ஒரு நாள் கூட…அவள் வழக்கமாய் வரும் சிவன் கோவிலில் கௌதம் மட்டும் சுற்றிக்கொண்டிருந்தான்…

 

காற்றில் கலந்த சுகந்தமாய் அவள் நினைவுகள் அவளை சூழ்க்கொள்ள  மாலைப்போழுது மேலும் ரம்மியமாய் அவனுக்கு தெரிந்தது…

 

கல்லூரிக்கு வந்த அன்றைக்கு அவளின் பிறந்தநாள் வரவே…அதுவே அவர்கள் பேட்ச் மாணவர்களில் கடைசி பிறந்தநாளாய் மாறவே…விமரிசையாய் எல்லா ஏற்ப்பாடுகளும் செய்யப்பட…

 

கௌதமிற்கு அது மேலும் சிறப்பான நாளாய் மாறும் என எண்ணியவனுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்து இருந்தது…

 

அவளுக்காய் தான் செய்த பிறந்தநாள் பரிசை அவளிடம் நீட்டியவன்…

 

விரித்துப்பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி…

 

அவளின் உருவத்தை அச்சு பிசறாமல் வரைந்தளிந்திருந்தான்…

 

அவள் விழிகளை நீர் நிரப்ப…ஏதும் வார்த்தை அற்றவளாய்…

 

ஒரே ஒரு முறை உங்க கையை மட்டும் பிடிச்சுக்கலாமா…தணிந்த குரலில் அவள் வினவியது…அவனை ஒரு நிமிடம் உலுக்கிச்சென்றது…அவள் சிறு தொடுதல்…சிறு அன்பு…சிறு புன்னகை இதற்க்காக காத்துக்கிடந்த நிமிடங்கள் எல்லாம் ஒரு கணம் அவன் விழி முன் வந்து மறைய…

 

பார்த்துக்கொண்டிருந்த சுபுவிற்கு இவளின் செய்கை புரிப்படாமல் போக அடியே இப்போவாச்சும் சொல்லிடு நீயே சொல்லணும்னு தான் நான் எதுவுமே சொல்லாம வாய மூடிட்டு இருக்கேன் என நினைத்துக்கொண்டாள்…

 

அவன் கைகளை இறுக்கமாய் கோர்த்துக்கொண்டவள்…எதுவும் பேசாமல் நேருக்கு நேர் அவன் விழிகளை ஒரு கணம் பார்த்தவள்…

 

என் வாழ்க்கையில மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இது…என்னைக்குமே பிறந்தநாள் மேல பெரிசா பிடிப்பே இருந்ததில்லை…முதல் முறை இந்த நாளை நேசிக்கிறேன்…ரொம்ப நன்றி…ஆனா இதுக்குமேல என்க்கிட்ட நீங்க பேசாதீங்க…வேணாம்…என் நம்பரை டெலிட் பண்ணிடுங்க…ஏன் எதுக்கு அப்படிலாம் கேட்க வேணாம்…பட் பிளீஸ்…கைகளை விடுத்தப்படியே அவள் விழிகளைத்துடைத்தப்படியே நடக்க…அத்துளிகளெல்லாம் அவள் பெருங்காதலை அவனுக்கு உணர்த்த அவள் மட்டும் ஏன் கூற மறுத்தாளோ என எண்ணியவாறே கனத்த இதயத்துடன் நகர்ந்தான்…

 

 

நாளாக நாளாக  அவனை வேண்டுமென்று தவிர்த்தாள்…

 

அவளின் நிலையை அவனும் உணர அவளை அதற்கு மேல் தொந்தரவு செய்ய இயலாமல் விலகி நின்று அன்பு செலுத்தினான்..

எஞ்சி நின்ற ஒரே சாட்சியாய் இருந்த கல்லூரியின் சாலைகளும்…நான் சொல்வதாய் இருந்தாலும்   அவளின் மனதின் குழப்ப அலைகளில் இருந்து வெளிவந்து அவள் மனதில் தோன்றியதை அவளாய் கூறினால் மட்டுமே அது உணர்வுபூர்வமாய் உண்மையாய் இருக்கும்… என நினைத்த சுபுவும் அதுகுறித்து கூறவில்லை…

 

நாட்கள் வருடங்களாய் கடந்தது…ஒன்றல்ல இரண்டு மூன்றை நெருங்கிக்கொண்டிருக்க…

 

அத்தனை வருடத்திலும் கௌதமிடம் மட்டுமல்ல சுபுவிடமும் பேசுவதை தவிர்த்தாள்…நம்பரில் இருந்து தான் இருக்கும் இடம் முதற்க்கொண்டு அனைத்தும் யாருக்கும் தெரியாதவாறு போய்விட்டாள்…

 

யதேச்சயாய் அவளை பார்க்க நேர்ந்த சுபுவிற்கு அவளின் நிலை கண்டு பேரதிர்ச்சி அடைந்தாள்…

 

இவளைப் பார்த்ததும் தெரியாத மாதிரியே விலகிப்போனவளை பிடித்து பேசத்தொடங்கினாள்…தேக்கி வைத்த நினைவுகள் அதற்கு மேல் அணைப்போட முடியவில்லை…

 

என்னடி ஆச்சு உனக்கு…

 

ஏன் இப்படி இருக்க…

 

ம்ம்ம் ரொம்ப மெலிஞ்சிட்ட…முகமெல்லாம் சோகம் அப்பிட்டிருக்கு…எப்போவுமே சிரிச்சிட்டே கலாய்ச்சிட்டு இருந்தப்பொண்ணு நீ…இப்படி பாக்க எனக்கே கஷ்டமாயிருக்குடி…

 

ம்ம்ம்…

 

நீண்ட மௌனத்திற்குப்பின் பேச தொடங்கினாள்…

 

காலேஜ் முடிஞ்சிப்போனப்புறம்…வீட்டில என்னால இயல்பா இருக்கமுடியல…எப்போவும் இப்ப நீ பாக்கிறேல இப்படித்தான் இருப்பேன்…அவங்களுக்கு நிறைய யோசனை அப்புறம் லவ் எதுமா சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க…உடனே…மாப்பிள்ளை பாத்து சீக்கிரம் கல்யாணம் முடிச்சா சரியாயிடும்னு முடிவு பண்ணாங்க…என்னால முடிஞ்ச அளவு தடுத்தேன்…

 

எதுக்குமே ஒத்துவரல…நான் வேலைக்குப்போணும்னு சொன்னேன்…அப்புறம் ஒரு வழியா…சரி உனக்கு ரெண்டு வருசம் டைம் அதுக்குள்ள நீ ஆசைப்பட்ட வேலைக்குப்போ முடியலாட்டி நாங்க சொல்றத கேட்டாகணும்னு சொல்லிட்டாங்க…

 

சரின்னு எப்படியாச்சும் ஒரு ரெண்டு வருசம் தப்பிக்கலாம்னு நினைச்சுட்டே வேலை தேட ஆரம்பிச்சேன்…அரசுத்தேர்வும் எழுதிட்டே இருந்தேன்…

 

ஆனா நான் எதிர்பாத்தது இன்னொன்னும் தான் எப்படியாச்சும் இந்த டைம்ல கௌதம் எங்க வீட்டுக்கு ஒரு வேலையோட வந்து என்னைய பொண்ணு கேட்டுற மாட்டாரானு…ஆனா நடக்கல…என்னடி முறைக்கிற…நீ லவ் பண்றங்கறதையும் உருப்படியா சொல்லல…அவரு சொன்னதையும் ஏத்துக்கல…அப்புறம் எப்படித்தெரியும் என்ன மைப்போட்டா கண்டுப்பிடிக்க முடியும்னு கேட்கிறீயா…

 

இல்ல உனக்குத் தெரியாத ஒரு விசயம் இருக்கு…என் பர்த்டே முடிஞ்சப்புறம் அன்னைக்கு சாயந்திரம் என்னய வர சொன்னாரு பேசணும்னு…என்னால முடியல…அப்புறம் சரி ஒரு தடவை பேசணும்னு எனக்கும் தோணுச்சு…நாங்க கடைசியா பேசினது அதுதான்…

 

என்னடி சொல்ற…அப்போ மேடமை பார்க்கப்போறேனு சொல்லிட்டுப்போனியே…அது சார் தானோ…

 

ம்ம்ம்ம் எங்கிட்டேயே மறைச்சிட்டேல…

 

என்ன சொன்னாப்டி…அத சொல்லு…

 

எனக்கு கை கால் லாம் நடுங்குது அவர்க்கிட்ட பேசுறப்போ…என்க்கிட்ட அவரு முதன்முதலாய் அவர் காதலை சொன்ன நிமிசம் இப்போ நியாபகம் வந்திட்டுப்போச்சு…அவரு கை நடுங்க…நான் அப்போ தண்ணிலாம் கொடுத்தேன்…மெல்லிய சிரிப்பை உதிர்த்தப்படியே அவள் தொடர்ந்தாள்…

 

 

இன்னைக்கு என்க்கிட்ட water bottle லாம் இல்லமா…சாரினு சொல்லிட்டு பேசினாரு…

 

“நீ சொல்லாட்டியும் நீ என்னைய நேசிக்கிற அது மட்டும் எனக்குத்தெரியும்…

 

கண் எல்லாத்தையுமே காட்டிக்கொடுத்துடும்…அதுக்கு பொய் சொல்லத்தெரியாதுமா…என்னய பாத்ததுமே குழந்தைத்தனமா ஒரு சிரிப்பு வருமே…அதுக்கு பேரு எனக்குத்தெரிஞ்சி காதல் தான்…அவ்ளோ அழகு…

” அன்பே அமிழ்தம் பொழிகிறது உன் சிரிப்பில்”

 

ஓரக்கண்ணால நீ என்னய பாக்கிறத…நான் சார்க்கிட்ட எதுவும் திட்டு வாங்கினா…டக்குனு உன் முகம் வாடிப்போறத…இன்னைக்கு என் கையை பிடிச்சுட்டு ஒரு பார்வை பாத்தியே சத்தியமா செத்துட்டேன்…அது என்னய கேட்குது இன்னுமாடா என் காதல் உனக்குப் புரியலனு…

 

அப்படியே என் கையை பிடிச்சிட்டே இருக்கமாட்டியாடினு சொல்லணும்னு போல தோணுச்சு…நீ என் கையை விட்டுட்டுப் போறப்போ சின்ன பிள்ளை அதன் தாயின் அரவணைப்பை கொஞ்ச நேரம் காணலாட்டியும் தேடும்ல அப்படி இருந்துச்சு…

 

உன் சுகந்தம் இன்னும் என்னுள்ளே இருந்துட்டே இருக்குடி…

 

நீ என்க்கிட்ட எல்லாமே சொல்லணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்…உனக்கு என்னப்பிரச்சனை…வீட்ல ஒத்துக்க மாட்டாங்க…

 

அப்புறம் இது ஒரு வேளை காதல் தானோங்கிற சந்தேகம்…லூசு இதுக்குப்பேரு அப்புறம் என்னதுனு நீயே சொல்லிடு…

 

முடியலல…நான் இல்லாம எப்படி உன்னால இருக்கமுடியாதோ அப்படிதான்…நீ இல்லாம என்னால ஒரு செகண்ட் கூட முடியாதுடி…

 

இங்கப்பாரு இப்போ சொல்றேன் கேட்டுக்க…சரியா ரெண்டு வருசத்துக்கு அப்புறம் உன்னய தேடி வருவேன்…உங்க அப்பாக்கிட்ட உரிமையா வந்து உன்னய கேட்பேன்…கண்டிப்பா ஒரு வேலையோடு வந்துட்டு…அதுவரை உனக்கு கல்யாணம் ஆகாம இருக்கணும் அதான் என் வேண்டுதல்”

 

அவர் பேசிட்டு ஏக்கத்தோட பார்த்த பார்வை இன்னும் என் கண்ண விட்டுப்போலடி…

 

இவ்ளோ நடந்திருக்கா…எனக்கு எதுமே தெரியாம போய்டேடி…அதுக்கப்புறம் நீ எதுமே பேசலயா…

 

இல்லடி பேசிக்கல…

 

அப்புறம் எந்த நம்பிக்கையில அவரு வருவாருனு நம்பிட்டு இருக்க…ஏண்டி இப்படி பைத்தியம் மாதிரி புலம்பிட்டு உன்னையும் காயப்படுத்திட்டு உன்னை நேசிக்கிற அம்மா அப்பாவையும் காயப்படுத்துற…

 

நீலாம் திருந்தவே மாட்ட…என்னமோ பண்ணு…அவன் சொன்னானாம் இவ காத்துட்டு இருக்காளாம் …அட போங்கடி நீங்களும் உன் காதலும்…

 

ஹேய் ஏண்டி இப்படி பேசுற…

 

பின்ன கொஞ்சுவாங்களா…நீ பண்ற வேலைக்கு…

 

இனியாச்சும் ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு அட்லீஸ்ட் அப்பா அம்மாவையுச்சும் சந்தோசப்படுத்துடி…நீ இப்படியே இருக்காத…மாறிக்கடி…

 

வண்டியின் பாரம் இறங்கியதும் லேசாகியதைப்போல அத்துனையும் இறக்கிவைத்துவிட்டு இலகுவான மன நிலையில் இருந்தாள்…

 

ஆறு மாதங்களுக்குப்பின்…

 

நானும் கேட்கணும் நினைச்சேன் அதான் கயலும் வேலைக்குப்போயிட்டு அப்புறம் என்ன…அடுத்து மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணிட வேண்டியது தானே…

 

ம்ம்ம்

 

பாத்துட்டே தான் இருக்கோம்…நம்ம தரகர் ஒரு வரன் சொன்னாப்டி உங்களுக்கு பிடிச்சுதுனா சொல்லுங்க…போட்டோ வாங்கித்தரேன்…

 

அப்படியா வாங்கித்தாங்கோ பாக்கலாம் என கயலின் தந்தை சண்முகம் வினவ…

 

விறுவிறுவென ஏற்பாடுகள் நடக்க…

 

கயலிடம் ஒரு வார்த்தை கேட்க அவள் தந்தை அவளுக்கு போன் செய்ய…

 

அப்பா எனக்கு எது நல்லதுனு உங்களுக்கு தெரியும்…நீங்க பண்ணுங்கப்பா…உங்க விருப்பபடியே…

 

என்னமா போட்டாவாச்சும் பாரேன்…

 

இல்லப்பா பரவாயில்ல…

 

 

பொண்ணுப்பார்க்கும் படலம் நடக்க…

 

மனமெங்கும் அவன் மீதான காதலை விழுங்கியப்படியே…சிலையாய உயிர் மட்டுமே அங்கு இருக்க அனைவரின் முன்பும் நின்றிருந்தாள்…

 

கீழ விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கமா…யாரையும் ஏறிட்டும் பார்க்காமல்…விழுந்து வணங்கிவிட்டு உள்ளே சென்றாள்…

 

மாப்பிள்ளை பொண்ணுக்கிட்ட பேசணுமாம்…என அங்கிருந்த உறவினர் கூற…

 

வீட்டின் பின் பகுதியில் உள்ள தோப்பில் இருவரும் சந்திக்க வைத்தனர்…அப்போதும் தலையை குனிந்தப்படியே…வெறுமையை விழுங்கியப்படி…நின்றருந்தாள்…

 

என்க்கிட்ட பேசமாட்டீங்களா…என்னய பிடிக்கலயா…

 

அப்படிலாம் இல்ல…உங்க கண்ணப்பாத்தா ஏதோ ஒரு பயம்…எங்க நாம ஆசைகள் எல்லாம் நிராசையாகிடுமோங்கிற கவலையோடு யாரு மேலேயோ வெளிக்காட்ட முடியாத ஒரு பயங்கிர கோவமும் இருக்கே…

 

அதெல்லாம் இல்ல…

 

எங்க என் கண்ணப்பாத்து சொல்லு…

 

மது…

 

இங்க பாருடா…

 

என்னது மதுவா…ஹேய்…சட்டென நினைத்தவுடன் வந்த மழைப்போல அவனை பார்த்ததுமே இறுக்கி அணைத்துக்கொண்டாள்…

 

ஹேய் நீயா…

 

நானே தாண்டி என் கண்ணம்மா…

 

எப்படிடா வந்த…இவ்ளோ நாள் எங்கப்போன…நிதம் நிதம் உன்னை தேடி எவ்ளோ அழுதுருப்பேன் தெரியுமா…

 

தெரியும்டி லூசு…

 

சட்டென அவன் அணைப்பில் இருந்து வந்தவள்…என்னது தெரியுமா..

 

தெரிஞ்சும் யேண்டா இப்படி பண்ணுன…

 

மன்னிச்சுடு இது மட்டும் தான் என்னால சொல்லமுடியும்…நிறைய காயப்படுத்திட்டேன்ல…வேணும்னு பண்ணலடி…நான் உன்னய பாக்கவரப்போ உனக்கு தகுதியானவனா என்னய மாத்திக்கணும்…நீ உன் காதலை உணரணும் இன்னும் நல்லா…அது பிரிவின் போது தான் உணர முடியும்…அதான்…

 

நீ என்னய தேடினதும் எல்லாம் தெரியும்…எனக்காக வடிச்ச கண்ணீர் அர்த்தம் ஆகிறது உன் பெத்தவங்க சம்மத்ததோட நான் உன்னய கைப்பிடிக்கிறதுல தான்…

 

யப்பா உங்க அப்பாவை கரெக்ட் பண்றதுக்குள்ள நான் பட்ட பாடு…அப்புறம் அவக்க மனசு மாறினதுக்கும் நீதான் காரணம்…

 

என்னது நானா…

 

ஆமா உங்க அப்பாவுக்கே உன்னோட நிலைமைய பாக்க முடியல…யாருக்கும் தெரியாம சத்தமில்லாம உன் அழுகை உன் மௌனம் எல்லாத்துக்கும்  ஒரு தந்தைக்கும் தாய்க்கும் அர்த்தம் புரியாம இல்ல…யாரோ ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ தினம் தினம் படுற போராட்டத்தை அவங்க பாக்கிறத காட்டிலும் நேசிச்ச உள்ளத்தை கல்யாணம் செஞ்சு வைச்சா நல்லா இருக்கும்னு அவங்களுக்கு புரிய வைச்சேன்…ஆனா நீ போட்டோ கூட பாக்கமாட்டேனு சொல்லிட்டியாம்ல கேடி…

 

ஓய் ஒண்ணு கேட்கலாமா… ஒரு முறை உன் கையை பிடிச்சுக்கவா…

 

அழுது சிவந்த விழிகள்…மகிழ்ச்சியாய் ஒரு கணம் சிவந்தது…பிடிச்சிக்கடா…

 

அழுத்தமாய் அதை பிடித்துக்கொண்டே ஒரு கையால் அவள் கன்னம் வருடி அவள் கைகளை அவன் நெஞ்சில் வைத்துக்கொண்டே பத்திரமா பக்கத்துல வச்சு பாத்துப்பேன் நிச்சயமா உன்னை அழவிடமாட்டேன்…உன்னய விட பத்திரமா உன்னைப்பாத்துப்பேண்டி…

 

அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டப்படியே…அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்…

 

தூரத்திலிருந்து அத்துனை இதயங்களும் பெருமிதம் கொண்டன…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: