Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷின் “பிள்ளை அழகில் என்ன பிழையோ!” – கவிதை

பிள்ளை அழகில் என்ன பிழையோ

கொள்ளை கொள்ளும் பிள்ளை
அழகில் என்ன பிழை கண்டாய்
பிஞ்சு அழகில் லகிக்காமல்
பித்தன் போல அதன்
பஞ்சு உடலை சிதைத்தாயே…

பட்டு கன்னம் தீண்டி
மழலை  அழகில்  மயங்காமல்
காமம் கொன்டு
அதன் அங்கம் தீண்டி
பிழைஇழைத்தாயே…

பொக்கை வாய் சிரிப்பில்
உன் சோகம் மறக்காமல்
தேக போதையில்
அதன் புன்னகை பறித்து
பூமியில் புதைத்தாயே…

கள்ளமில்லா  மொழியில்
கருணை பொங்கும் விழியில்
என்ன  காமத்தை உணர்ந்தாய்
கண்கொட்டாமல் கண்டு களிக்கும்
அதன் அழகை   உன் கபட
எண்ணத்தால் அழித்தாயே….

குட்டி விரல் பிடித்து
பட்டு பாதம் பதித்து
எட்டுவைத்து நடக்கும்
தள்ளாடும் நடையில்
என்ன தவறு கண்டாய்
உன்   பருவ தாகம் தீர்க்க
அதன்  அழகனா
குழந்தை  பருவத்தை
குடித்தாயே…

கப்படமில்லா  பிள்ளை  அழகில்
இறைவனை காணாமல்
உன் இச்சை தீர்த்துக்கொள்ள
இம்சை செய்து உன் பிழையால்
பிஞ்சுகளின் வாழ்வை அழித்தாயே…

மலராய் மலர்ந்த முகத்தில்
உறைந்த புன்னகை வாடும் முன்
உன் ஆசை  வேகத்தில்
மலரும் முன் கருகிய
பிஞ்சு மலர்களின்  முகங்கள்
கண்டும் திருந்தாமல்
மீண்டும் மீண்டும் அதே
தவறிழைத்து
பல மலர்களின்
வாழ்வை வதைத்தாயே…

தண்டனை கடுமையானால்
குற்றங்கள் குறையும் என்பதை
மறந்து  கயவனுக்கே காவல் புரியும்
சட்டங்கள் திருத்தினால்
பிஞ்சுகளின் வாழ்வில் நஞ்சாய்
விளையாடும் மிருகங்களால்
இன்னும் பிள்ளை மலர்கள்
கருக்கிடமால் தடுத்திடலாமோ..

என்றும் நட்புடன்….
லதாகணேஷ்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: