Skip to content

லதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 25

அழகன் 25

 

 

மெல்ல நீ விடும் மூச்சின் ஓசைக்கு

எந்த இசையும் இணையில்லை

நீ உறங்கும் அழகை விட

எந்த ஓவியமும் அழகாய்

ஒளிர்ந்தது இல்லை.

 

“டாக்டர் நேற்று  வந்து அட்மிட் ஆன அகரன் சார் செக்அப் செய்ய விட மாட்டேன் என்கின்றார், அவர் அறைக்குள்ளேயே அனுமதிக்கமாட்டேன் என்கின்றார்”  என்று நர்ஸ் கம்ப்ளென்ட் செய்ய,  “இந்த அகரனின் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் போய் விட்டது நிம்மதியாய் தூங்க கூடவிடாமல்” என்று புலம்பியபடி கடிகாரத்தில் மணியை பார்க்க அது ஆறு என்று காட்டிட கடுப்பானவன் , “ஊருக்குள்ள பத்து பதினஞ்சு பிரின்ட்ஸ்  வைச்சு இருக்குறவன் எல்லாம் நிம்மதியா இருக்கான்,   இவன் ஒருத்தனா வச்சுகிட்டு நான் படுறபாடு”  என்று சூர்யா புலம்பினான்.

 

சூர்யாவின் புலம்பலை கேட்டு சிரித்தபடி  “சார் இப்போது நாங்கள் என்ன செய்வது?” என்று   நர்ஸ் வினவிட,   “அவன் தம்பி ஒருத்தன் குகன் என்று  அங்கு இருப்பான்அவனை  அழைத்து செல்லுங்கள் அவனால் தான் அகரனை சமாளிக்க முடியும்   அவனுக்கு மட்டும் தான் அந்த முரடன்  அடங்குவன் நான் பிறகு வந்து அவனை கவனித்துக்கொள்கின்றேன்” என்று கட்டளையுடன்   அழைப்பை துண்டித்தான் சூர்யா. “என்னங்க இந்த நேரம் ஏதும் கேஸா?” என்ற சந்திரிமாவிடம் “கேஸ் இல்லை லூசு” என்று கடுத்தவன் அவள் முறைப்பை பெற்று கொண்டு    அமைதியாய் படுத்தான் சூர்யா.

 

சுஹீரா அருகில் அமர்ந்து அவள் கை பற்றி  தலை கோதிவிட்டு   உறங்கும் தன்னவளின் அழகில் தன்னை மறந்து  அமர்ந்து இருந்தவன் குகன் குரல் கேட்டு திரும்பினான்  “ஷ்….” என்று வேகமாய் அவன் அருகில்  எழுந்து சென்றவன், “என்ன குகா இந்தநேரம் வந்து  தொந்தரவு செய்துகொண்டு சுஹீ தூங்குவது தெரியவில்லை”, அகரன் சிடுசிடுக்க,    “அண்ணி உறங்குவது இருக்கட்டும் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்ரீர்கள்?,  ஏன்  உங்கள் அறைக்குள் யாரையும் விட மாட்டேன் என்கின்றீர்கள்?”  என்று தூக்கம் கலையாமல் கண்களை தேய்த்து விட்டு கொண்டே வினவினான் குகன்.

 

“நான் என்ன செய்தேன்  செய்தது எல்லாம் இந்த நர்ஸ் தான் அடிக்கடி வந்து என்னை செக்அப் செய்வதாக. சுஹீ உறக்கத்தை கெடுத்து கொண்டு இருக்கின்றார்கள் அதனால் தான் யாரையும் உள்ளே விடாமல் இருக்கின்றேன்”  என்றான் அகரன். “அண்ணா இது அவர்கள் வேலை நேரத்திற்கு உங்களுக்கு வேண்டியதை பார்த்துச்செய்ய வேண்டியது  அவர்கள் கடமை ,  நாளை  சூர்யா சார் வந்து இவர்களை தான்  கேள்வி கேட்பார்? அவர்கள் வேலையை  செய்ய விடுங்கள்”  என்ற  குகன் குரலில் சுஹீரா மெதுவாய் அசைந்திட  “அமைதியாய் பேசு குகா”  என்று அதட்டினான் அகரன்.

 

“அண்ணா  இது ஓவர் அண்ணி தூக்கம் கெடக்கூடாது என்று எங்கள் தூக்கத்தை கெடுக்ககூடாது,   இப்போது அண்ணியை எழுப்பினால்  அவர்களே  உங்களைத்தான் திட்டுவார்கள்” என்று குகன் கூறிக்கொண்டு இருக்கும் போதே,  “என்ன?” என்று கேட்ட படி எழுந்து வந்தவள்,  “என்ன இந்த நேரம்   அகர் உனக்கு ஏதும் வலியில்லையே?” என்று கவலையாய்  வினவினாள் சுஹீரா.

 

“அதெல்லாம்  எனக்கு ஒன்றும் வலி இல்லை எல்லாம்  இந்த மடையன் தான்,  பார்  சத்தமிட்டு உன்னை எழுப்பிவிட்டான்” என்று குகன் பக்கம் ஒரு அடி எடுத்துவைக்க,  இரண்டு  அடி பின் சென்ற குகன், “அண்ணி   இந்த அண்ணனுக்கு  காதல் பைத்தியம் முற்றிவிட்டது,  உங்கள் உறக்கம் களையக்கூடாது என்று யாரையும் இந்த பக்கமே  வரவிடமாட்டேன் என்கின்றார்” என்று வேகமாய் கூறிட,   “வாய்யை மூடு குகா” என்று அகரன்  கூறி முடிக்கும் முன்,  “நீ முதலில் வாய்யை மூடு பகடு நீங்கள் வாருங்கள்”  என்று வெளியில் காத்திருந்த நர்ஸ் உள்ளே அழைத்தவள்  “என்னை எழுப்பி இருக்கலாம் இல்லையா?” என்று சுஹீரா அவர்கள் புறம் திரும்பி வினவினால்.

 

“இரவு இரண்டு முறை வந்து பார்த்தோம்,   ஆனால் சார்தான் எங்களை  உள்ளேயே விடாமல்  பார்வையாலேயே  விரட்டிஅடித்தார், .  இப்போது உங்கள் ஒரு வார்த்தைக்கு இப்படி  அமைதியாய் இருக்கின்றார்” என்று  கூறி  மேலும் சொல்லவந்ததை பாதியில் நிறுத்தி, அகரன் கட்டுகளையும் காயத்தையும்  பார்த்துவிட்டு  ஒன்றும் வலியில்லையே என்றதும் மறுப்பாய் தலையசைத்தான் அகரன்.   தாயின் அதட்டலுக்கு அடங்கி செல்லும் சிறுவன் போல  அமைதியாய் அமர்ந்து  இருந்தவனை பார்த்து தங்களுக்குள் கேலி செய்து சிரித்தபடி  “ஒன்றும் பிரச்சனை இல்லை மேடம் டாக்டர் வந்து மற்ற விபரங்கள் கூறுவார்”  என்று  நகராமல் நிற்க, “போதும் போதும்  உங்கள் வேலை முடிந்தது கிளம்புங்கள்” என்று மிரட்டல் போல் அகரன் கூறிட ,   இருவரும்  ஒருசேர  சஹீராவையும் அகரனையும் கேலியாய் பார்த்து வெளியேறிட,  “உனக்கு மட்டும் தனியாக சொல்ல வேண்டுமா?” என்று குகனையும்   வெளியில் அனுப்ப  முயன்றான் அகரன்.

 

“இந்த மிரட்டல் எல்லாம் மற்றவர்களிடம் மட்டும் தான் அண்ணியை பார்த்தால் அப்படியே  அடங்கிவிட வேண்டியது,  எப்படி இருந்த மனிதன் நீங்கள்!,   உங்களை இந்த காதல் வந்து என்ன பாடுபடுத்துகின்றது இந்த  காதல் எலியை புலியாய் மாற்றுகின்றது புலியை  பூனையாய் மாற்றுகின்றது”  என்று போலியாக அனுதாபப்பட்டபடி குகன் அகரனை கேலி செய்வது போல மியாவ் என்று குகன் செய்கை காட்டிட, “உனக்கு  கொடுக்க வேண்டியதை  கொடுத்து பல நாள் ஆகிவிட்டது அதனால் தான்   என்னிடம் பயம் விட்டுப்போனது” என்று கூறிக்கொண்டே அகரன் சென்று குகன் கையை பற்றி பின்  புறம் திருப்பி விட,  வலி தாங்காமல்  குகனோ   “அண்ணா ப்ளீஸ் வலிகின்றது” என்று கெஞ்ச  துவங்கினான்.

 

அகரன் குகனின் விளையாட்டை பார்த்து சிரித்து கொண்டு இருந்த சுஹீரா  குகன் உண்மையில் வேதனையில் துடிப்பது அறிந்து  “பகடு  குகனை விடு  அவருக்கு உண்மையில் வலிகின்றது” என்று கூறியும்  கேட்கமால் அகரன் குகன் கையை விடாமலிருக்க,  அகரன்   முன் சென்று நின்றவள் “உன்னை  கையை விடு  என்றேன்” என்று மீண்டும் அழுத்தமாய்  கூறிட, குகன் கையை விடுவித்தவன்  “என்னிடம்   பேசும் முன் யோசித்து பேசு குகா!” என்று எச்சரிப்பது போல கூறி கட்டிலில் வந்து அமர்ந்திட  குகன்   முகம் வாடிப்போனது.

 

வேகமாய் வந்து அகரன் முன் நின்றவன் “உங்களை  காயப்படுத்தியிருந்தால் இன்னும் இரண்டு அடி கூட சேர்த்து அடிங்கள் அண்ணா ஆனால்  கோபமாய்  என்னிடம் பேசாமல் மட்டும் இருக்காதீர்கள்” என்று  கெஞ்சலாய்  கேட்க,   நொடியும் தாமதிக்காமல்  குகனை  கட்டி கொண்டான் அகரன்.

 

“உன் மீது கோபம் இல்லை குகா, நீ  எப்போதும் விளையாடுவது தானே என்னை சொல்கின்றாய்  எனக்காவது திருமணம் முடிந்தது  என்  மனைவியிடம் தான் பணிந்து செல்கின்றேன், நீ காதலிக்கும் போதே அதை தானே செய்கின்றாய் ஆமாம் நேற்று வேகமாய் போனாயே அதிகாவிடம் உன் காதலை சொன்னாயா?, இல்லை வழக்கம் போல  கலை அத்தையை பார்த்ததும் ஓடி வந்துவிட்டாயா?” என்று  அகரனும் குகனை கேலி செய்து சிரித்திட ,  இவர்களுக்குள் இருக்கும் அன்பையும்  புரிதலையும் புரிந்துகொள்ள முடியாமல் விலகி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் சுஹீரா.

 

குகன் வெட்கம் கலந்த பாவனையில் நேற்று  வீட்டில் நடந்ததையும் ஈஸ்வர் மற்றும் யமுனா அவர்களின் சம்மதமும் அதற்கு மறுப்பு  கூற முடியாமல் கலையரசி  விலகிச்சென்றதையும் கூறிட,   “அப்படியென்றால் இந்த எலி புலியாகி விட்டது என்று சொல் பார்த்தாயா!,  நீ உன்னையும் சேர்த்து கேலி செய்தது தெரியாமல் கோபப்பட்டுவிட்டேன்” என்று கன்னம் தட்டி “வாழ்த்துகள்  எங்கள் வீட்டு மருமகனே” என்று மீண்டும்  கட்டிபிடித்து தனது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டான் அகரன்.

 

சுஹீரா முகத்தில் குழப்பத்தை கண்டவன் “கூடிய சீக்கிரம் இந்த வாலுப்பையன் எங்கள் வீட்டு மருமகன் ஆகபோகின்றான்,   எங்கள் வீட்டு பெண் அதிகாவை   காதலிக்கின்றார் ஐயா!”  என்று உண்மையை  கூறிட,    சுஹீராவும் உண்மையான  சந்தோஷத்துடன் வாழ்த்துகள் கூறினாள்.

 

“சரி சரி என் கதை இருக்கட்டும் நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுங்கள் இரவு வெகுநேரம் உறங்கவில்லை போல கண்கள் இரண்டும்  சிவந்துள்ளது,   நான் வீடு வரை சென்று குளித்து உடை மாற்றிவருகின்றேன் அண்ணி வீட்டில் இருந்து அவர்களை  அழைத்து செல்ல வரும் முன் வந்து விடுகின்றேன்” என்று குகன் கிளம்பி  சென்றான்.

 

குகன் கிளம்பி சென்றதும் தலையை வேறு புறம் திருப்பி கொண்டு கோபமாய் அமர்ந்து இருந்த அகரன் அருகில் சென்றவள் “என் பகடுவிற்கு என்ன கோபம்?” என்று கொஞ்சலாய் சுஹீரா வினவிட, முகத்தை திருப்பாமலேயே  “உன் உறக்கம் கெடும்  என்று தான்  யாரும் வராமல் பார்த்து கொண்டேன் ஆனால் நீ  என் அன்பை புரிந்து கொள்ளாமல்   கோபப்படுகின்றாய்?” என்று சிடுசிடுத்தான் அகரன்.

 

அகரன் அருகில் வந்து  அமர்ந்தவள் “என் பகடு” என்று செல்லமாய் அவன் தலை முடி கோதிவிட்டு “என் தூக்கம் கெடும் என்று மற்றவர்களுக்கு தொந்தரவு   தருவது  நியாயமா சொல்?” என்றவள் குரலில் சிறு கோபம் கலந்து இருந்த்து. பதில் பேசாமல் அமைதியாய்  இருந்தவன் கரம் பற்றி தனது கரத்தினுள் அடக்கி கொண்டவள், அகரனை சமாதான படுத்தும் வேலையில் இறங்கினாள் “உன் முரட்டுத்தனமான அன்பு தான் என்னை உன் முன் கொண்டு வந்து நிறுத்தியது,   இந்த பிடிவாதாக்காரன் காதல் தான் என்னை கவர்ந்து” என்றிட,  முகம் மெதுவாய் மலர “அப்படியென்றால் இந்த பிடிவாதக்காரா முரடன் பிடிக்கும்?” என்று கண்களில் கூர்மையுடன்  வினவினான் அகரன்.

 

இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்பது போல சுஹீரா புரியாமல் பார்க்க   “என்னை எனக்காகவே பிடித்து உள்ளது என்றாய் இல்லையா?” என்றவன் கண்கள் இன்னும் கூர்மையுற  “அப்படி என்றால்  உனக்கு அரக்கனான அகரனை தானே! பிடித்து உள்ளது பின் ஏன் கோபம்  கொள்கின்றாய்” என்று அகரன் நிறுத்த, “உன் அன்பு காதல் கோபமாம் எதையும் நான் தவறு என்று சொல்லவில்லை,  உன் கோபமும் பிடிவாதவமும்  நியாயமானதாக இருந்தால், அது பிறரை பாதிக்காது நான் பிறர் என்பது,  சம்மந்தமே இல்லாத நபர்களை சொல்கின்றேன், என் மீது உள்ள அன்பில் அவர்கள் வேலையை செய்யவிடாமல் தடுத்தது தவறு தானே?,    நீ செய்த தவறுக்கு அவர்களுக்கு  உன் டாக்டர் பிரின்ட்  தண்டனை தருவார் தானே?  உனக்கு சரி என்று  தோன்றியதை பிறரை பற்றி யோசிக்காமல்  செய்துவிடுகின்றாய் தவறே செய்யாமல்  தண்டனை அனுபவிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா?” என்ற சுஹீரா குரலில் வருத்தம் உணர்ந்து ஒரு நொடி அமைதியாய் இருந்தவன்.

 

“என்னை மன்னித்துவிடு கண்ணம்மா” என்று அவள்  மடியில் தலைவைத்து படுத்துகொண்டவன் வார்த்தைகள் தடுமாற “உன் அப்பா மீது இருந்த கோபத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் உன் வாழ்வை  அழிக்கநினைத்தேன்” என்று கூறியவன்,  “நீ சொன்னது போல ஒருவேலை  எனக்கு உன் மீது காதல் வராமல் போய் இருந்தால் உன் நிலை என்ன?” என்றவன் குரல் அவன் வலியை பிரதிபலித்தது,  அகரன் மனம் படும் வேதனை புரிந்தது இருந்தும் இனி ஒரு முறை  யாரையும் காயப்படுத்தாமலிருக்க இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி தேவை என்று எண்ணியவள், தன் மடியில் படுத்து இருந்தவன் மீதே சாய்ந்து கொண்டு   “பொய்யான காதலை   எண்ணி   இப்படி ஏமாந்தோமே என்று தற்கொலை செய்து கொண்டு இருப்பேன்” என்று சாதாரணமாய்  கூறினாள் சுஹீரா.   அகரன் உடல் அதிர்ந்தது வேகமாய் எழுந்தவன்,  சுஹீராவை  தன்னோடு சேர்த்து அனைத்துக்கொண்டு “உனக்கு   ஒன்று என்றால் அது என்னையும் பாதிக்கும் சுஹீ,  இனி ஒருதரம் இப்படி பேசதே நீ இல்லாமல் நானேதடி…”    என்றவன் குரலில் இருந்த கோபமும்,  அணைப்பில் இருந்த இறுக்கம் அவன் மனநிலையை காட்டிட ,  மெதுவாய் அவன் முதுகை தடவிவிட்டு கொண்டே “கோபப்படுவது மனித இயல்பு   உன் கோபத்தை சரியான வழியில் நியாயமான முறையில் காட்டு”  என்று அகரனை  அமைதி  படுத்தினாள் சுஹீரா.

 

“கோபம் வந்தால் என்ன செய்கின்றேன் என்று எனக்கே தெரியாமல் போய்விடுகின்றது, அதை கட்டுபடுத்த முடியவில்லை “ என்று  அகரன் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவன்  வேதனையாய்  குறைக்கும் வழியரியாமல் அணைப்பை இறுக்கி கொண்டு தோள்களில் முத்தமிட்டு  “என் செல்ல பகடு,  தடுமாறாமல் யோசித்தால்  எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும் உன் கோபத்தை குறைக்கும் வழியும் தெரியும்” என்றாள் சுஹீரா. “என் கோபத்தின் மருந்து நீ தான் இனி கோபமாய் முடிவு எடுக்கும் முன் உன்னை  நினைத்து கொள்கின்றேன் நிச்சயம் தவறான முடிவு எடுக்கமாட்டேன்” என்று  உறுதியாய் கூறினான் அகரன் . சொன்னதை கேட்டு நடக்கும் கணவன் கிடைத்தால் அந்த பெண் தான் உலகத்தின் மகாராணி போல உணர்வாள் சுஹீராவும் அதே மனநிலையில் இருந்தாள்.

 

“உங்கள் பாச பிணைப்பு போராட்டம் முடிந்தால்  நாங்கள் உள்ளே வரலாமா?”  என்று அனுமதி கேட்டுக்கொண்டு  வாயிலில்  நின்று இருந்தாள்  அதிகா.   அவள் குரலில் வேகமாய் விலகி அமர்ந்து கொன்டு  “வா அதிகா” என்று உள்ளே அழைத்தவன். “நீங்களும்  வாருங்கள்  அத்தை” என்று  அதிகா அழைக்க அவள்  பின்னே வந்த யமுனாவை கண்டு முகம்  சிவக்க    “அது வந்து” என்று  தடுமாறத் துவங்கிய மருமகள் அருகில் வந்து “உங்களுக்குள்  எல்லாம் சரியாகிவிட்டது போல”  என்றார் யமுனா.

 

 

“பார்த்தாலே தெரியவில்லையா! அத்தை எல்லாம்  சரியாகி விட்டது” என்று இழுக்க…  “ஆமாம் கரண்  உனக்கு தான் சுஹீரா யார் என்றே மறந்திருந்ததே பின் எப்படி ஒரே நாளில் எல்லாம்   நினைவு வந்து இப்படி   காற்றுக்கு கூட இடம் கொடுக்காமல்” என்று முடிக்காமல் நிறுத்த,  “நீ வாய்யை மூடு வாயாடி.. அவர்களுக்குள் எல்லாம் சரியானதே சந்தோசம் தான்” என்று அதிகா வாய்யை அடைத்தார் யமுனா.  “சுஹீரா இதில் அகரனுக்கும் உனக்கும்  காலை உணவு உள்ளது”  என்றிட, காலை பணிகளை முடித்துக்கொண்டு இருவரும்   சாப்பிட அமர்ந்ததும்,  “அத்தை  கரண்  உண்மையில் சுஹீராவை மறந்துவிட்டான் என்று நீங்கள் நம்புகிண்றீர்களா?” என்று அதிகா  கேள்வியில் அகரனும் சுஹீராவும் திணறிய படி இருக்க,   மெலிதாய் புன்னகை சிந்தியபடி “மயக்கண்ணன்  லீலை எல்லாம் யசோதா அறியாமல் இல்லை,   இருந்தும் அதை ரசிக்க தான் தோன்றுமே தவிர தடுக்க முடியாது” என்று    கூறி சுஹீராவை பார்த்து  சிரித்தார் யமுனா.  அன்னையின் வார்த்தையை புரிந்து கொண்ட அகரன்  தனது சட்டை காலரை தூக்கி விட்டு சிரிக்க அனைவரும் உடன் சேர்ந்து சிரிக்க துவங்கினார்.

 

“இதற்கு இது பதில் இல்லையே!” என்று  அதிகா துவங்கிட,  “நீ கொஞ்ச நேரம் வாய்யை மூடிக்கொண்டு இருக்க மாட்டாயா?” என்றார் யமுனா.   “என்ன செய்தால் இவள் அமைதியாவாள் என்று எனக்கு தெரியும்!” என்ற அகரன், “சுஹீ சொன்னேன் இல்லையா எங்கள் வீட்டுப்பெண், குகன் திருமணம் செய்து கொள்ளப்போகின்றவள்” என்று அகரன் கூறிட, முகத்தில் வெட்கம் படற   “ எங்களை பற்றி பேச கூட நேரம் கிடைத்ததா!” என்று கேலியை விடாமல் தொடர்ந்தாள் அதிகா.  “வா குகா” என்று அகரன் வாசல் பார்த்து அழைத்திட வேகமாய் திரும்பியவள்  அங்கு குகன்  இல்லாமல் ஏமாற்றத்துடன் “பாருங்கள் அத்தை” என்று யமுனைவிடம் முறையிட்டாள்.

 

“இவ்வளவு நேரம் நீ என் மகனை கேலி செய்தாய்?” என்று யமுனாவும்   சேர்ந்து சிரிக்க,  “என் குகன் வரட்டும் எல்லோரையும் ஒரு கைப்பார்க்கின்றேன்”  என்று  முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள் அதிகா.

 

“அம்மா என் திருமண வரவேற்பு முடிந்தவுடன்  இந்த வாயடிக்கும் அந்த வாலுப்பையனுக்கும் முடிச்சுப்போட்டு விடவேண்டியது தான் அப்போது தான்  இது இரண்டும் நம் திசையே வராது” என்று  அகரன் கூறிட , “நீ சொல்வதும் சரி தான்”  என்று ஏற்றார் யமுனா.

 

சுஹீராவை அழைத்து செல்ல சுகன்  வந்திட    அகரனை விட்டு பிரிய மனமில்லாமல் சென்றாள் சுஹீரா.    “கவலை படாதீர்கள் மச்சான் இன்னும் இரு நாட்களில் உங்கள் சுஹீயை உங்களுடன் அனுப்பிவைத்து விடுவோம் அதற்கான  ஏற்பாட்டை துவங்கிவிட்டோம்” என்று இன்பமான செய்தி  கூறி சென்றான், சுகந்தன்.

 

“உன்னால் வீட்டில் கூட நிம்மதியாய் இருக்க முடியவில்லை” என்று கூறிக்கொண்டே. அகரனை மீண்டும் ஒருமுறை  செக்அப் செய்து விட்டு தலைக்கு மேல் கைதூக்கி   “தயவு செய்து மருத்துவமனையை விட்டு கிளம்பு” என்று   காலில் விழாத குறையாய் டிஸ்சார்ஜ்  செய்து அனுப்பிவைத்தான் சூர்யா.

 

அகரன் நாடகமும்  சுஹீராவும் மன்னித்து ஏற்று கொண்டதும்  அறிந்து எல்லாம் நல்ல படியாக நடந்தது என்று  எல்லோர் மனதும் மகிழ்ச்சியில் நிறைந்தது. வீட்டில் பெரியவர்கள் எல்லாம் ஒருமனதாய்  அகரன் சுஹீரா திருமணத்தை மறுபடியும் நடத்திட முடிவு செய்ய அதை மறுத்தான் அகரன். “எனக்கும் சுஹீக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது அதனால் வரவேற்பிற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்” என்று பிடிவாதமாய் முடித்து விட்டான். பெற்றவர்கள் “உங்கள் திருமணத்தை காண விரும்புவதாக” எவ்வளவு எடுத்து கூறியும்  அதை காது கொடுத்து கேட்கமால் “தனது முடிவே இறுதி” என்று  கூறி மறுத்து விட்டான் அகரன்.

 

அகரன் பிடிவாதம் அறிந்து இருந்தவர்கள். அதற்கு மேல் கட்டாயப்படுத்த விரும்பாமல் அரை மனதாய் அதற்கான ஏற்பாட்டினை கவனிக்க துவங்கினானர். திருமணத்திற்கு என்று  செய்த ஏற்பாட்டினை  வரவேற்பு  என்று மாற்றி அமைக்கும் பணியில் குகனும் சுகனும் இறங்கினர்.

 

சுஹீரா அகரன் உடை தேர்வு செய்ய அனைவரும் ஒரு கடையில்  கூடி இருக்க யாருக்கு தேர்வு செய்ய வேண்டுமோ அவளே வராமல்  வீம்பு செய்து கொண்டு இருந்தாள். சுஹீராவை அழைத்து செல்ல  வந்து இருந்தான் அகரன்.  அகரனை  கண்டும் காணாதது போல டிவியில் கவனம் செலுத்தி இருந்தவள் மடியில் உரிமையாய் சென்று  தலை வைத்து படுத்துக்கொண்டவன் “இன்னும் என் செல்லப்பொண்டாடிக்கு கோபம் போகவில்லையா?  கொஞ்சம் ரசகுல்லா சாப்பிட்டால் கோபம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்  முயன்று பார்ப்போமா!” என்று  கூறி இடையில் கை கோர்த்து அகரன் தன் புறம் இழுக்க, “விளையாடாதே  நான் கோபமாய் இருக்கின்றேன்,   எவ்வளவு சொல்லியும் திருமணம் வேண்டாம் என்று  மறுத்துவிட்டாயா  ஏன்?” என்று கோபம் காட்டி விலகி சென்றாள் சுஹீரா.

 

“நீ கோபப்படுவதை பார்த்தால் திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு  உன்னுடன் தவறான  உறவு வைத்து கொள்ள விரும்புவது  போல அல்லவா இருக்கின்றது சுஹீ,  மறக்காதே நமக்கு திருமணம் முடிந்து விட்டது”   என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்  அகரன். “நினைவு இருக்கின்றது நன்றாக நினைவிருக்கின்றது  மிரட்டி பணிய வைத்த திருமணம்” என்று ஏளனமாய் கூறினாள் சுஹீரா.

 

சுஹீராவின் ஏளனம்  அகரனுக்கு அளவில்லா கோபத்தை தந்தது  விலகி சென்றவள் கரம் பற்றி தன் முன் கொண்டு வந்து நிறுத்தியவன்  அவள் கண்களை பார்த்து “உன் அனுமைதியுடன் முழு  சம்மதத்துடன் நடந்த திருமணம்” என்று கோபமாய் கூறினான் அகரன்.

 

அகரன் பற்றி இருந்த இடம் வலிக்க   முகத்தில்  அதை காட்டாமல்   “என் விருப்பம் கேட்டு தான் நடந்தது,  ஆனால் யாருக்கும் தெரியாமல் தானே நடந்தது, என் அப்பா அம்மாவிற்கு என் திருமணத்தை  காணும் ஆசை இருக்காதா?, எனக்கும் என் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கனவு இருக்காதா?.  உன் எண்ணத்தை என் மீது  திணிப்பது நியாயமா?” என்றவள் குரலில் அவளை மீறி அவள் உடல் வலி தெரிந்திட, கையை விடுவித்தவன்,   “உன் கழுத்தில்  தாலி என்பது ஒரு முறைத்தான்  இருக்க வேண்டும்,  அது என் கையால் மட்டுமே இருக்கவேண்டும் அதனால் தான்   மறுமுறை தாலி பிரித்து கோர்க்ககூட அவசியமின்றி  தங்க சங்கிலியில் அணிவித்தேன்  மீண்டும் திருமண ஏற்பாடு என்றால் இதை கழட்டிவிட்டு தானே வேறு அணிவார்கள் உன்னை  பொறுத்தவரை   இந்த தாலி உன் கழுத்தில் ஏறும் போது என்னநினைத்தாயோ   எனக்கு தெரியாது, ஆனால் நான் இதை உன் கழுத்தில் அணியும் போது ஆயிரம் கனவுகளுடன் காலம் முழுவதும்   என்னை உன்னோடு பிணைத்து வைக்கும் ஒரு பந்தமாக தான் கருதினேன் அதனால் தான் வேறு ஒன்று என்பதை என்னால் யோசிக்க முடியவில்லை” என்று  தனது விளக்கத்தை தந்தவன். “இது உன் கழுத்தை விட்டு அகற்றும் போது அதை பார்க்க நான் இந்த உலகத்தில்  இருக்க மாட்டேன்” என்று கனத்த குரலில் கூறினான் அகரன்.

 

அகரன் வரிகள் சுஹீரா  மனதில் பாரத்தை கொடுத்தது    “பைத்தியம் போல  உளராதே விசர்”. என்று அகரன் வாய்யை  தன் கை கொண்டு மூடினாள்.  அகரன் முகம் திருப்பி நிற்க,  அகரன் மறுத்ததற்கு இப்படி ஒரு காரணம்  இருக்கும் என்று  சுஹீரா கொஞ்சமும் யோசிக்கவில்லை ஒரு பெண் தான் தனது தாலி பற்றி இப்படி எல்லாம் சிந்திப்பாள் ஆனால் அதை அகரன் நினைத்தது  வியப்பாய் இருக்க அதைத்தாண்டி தன் மீது அவன் கொண்ட அளவில்லா காதல் அதில்  தெரிய உள்ளம் நிறைந்து எதிரில் இருந்தவன் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவள்,  “ஐ லவ் யூ பகடு” என்று முதல்  முறை தனது காதலை வார்த்தையால் கூறி  “இன்னும் என் பகடுவிற்கு கோபம் குறையவில்லையா?” என்று  சுஹீரா கூறி முடிக்கும் முன்,  அகரன் இரும்பு பிடியில் இன்பமாய் சிறைப்பட்டு இருந்தாள் சுஹீரா.  இடையில் கை கோர்த்து தனது  உடலோடு சேர்த்து இறுக்கி கொண்டவன்

 

சதை கொண்ட

மயக்கம் மறைந்தாலும்

நான் கொண்ட காதல்

சாகும் வரை மாறாது…

 

என்றவன் இதழோடு இதழ்  பொறுத்தி  தனது கவிதை வரிகளுக்கு செயலில் வலுசேர்த்துகொண்டு இருந்தான்,  அகரன்  அன்பில் இருந்த வேகத்தை சமாளிக்க முடியாமல் “போதும் பகடு விடு” என்று செல்லம் கொஞ்சி சுஹீரா  விலகிட, “உன் வெட்கம் அனைத்தையும் மொத்தமாய் மூட்டைக்கட்டி உன் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிடு என்னிடம் வந்த பின் உன்  வெட்கத்திற்கு நீ வேலை கொடுத்தால் வெட்கத்தால்   உனக்கு கிடைக்கும் அளவில்லா அழகில் கிறங்கி என் வேகம் கூடத்தான் செய்யும் ஒரு போதும்  குறையாது” என்று   எச்சரிக்கும் குரலில்   தோள்  வளைவில் மீசை உரச கூறியவன் , சுஹீராவின் சினுங்களில் “என் கண்ணம்மா இப்படி அழகாய் வெட்கப்பட்டு என்னை இம்சை செய்யாதே!”  என்று  காதல் கெஞ்சலில் இறக்கியவன்  மீண்டும் இதழ் தேடி  நிமிர, அகரன் போன் அடித்தது “இதோ கிளம்பிவிட்டோம்”  என்று  விலக மனமில்லாமல் மீண்டும் மீண்டும் இதழ்  தேடி இன்பம் அனுபவித்தவன்,   “இன்னும்  இங்கு உன்னுடன் தனிமையில் இருந்தால் நான் என்னை உன்னிடம் முழுதாய் இழக்க நேரும்” என்று கண்ணால் சிரித்து  கை பிடித்து அழைத்து சென்றான் அகரன்.

 

ஒவ்வொரு புடவையையும் சுஹீரா மீது வைத்து பார்த்தவன் முகம் சுளித்து உதடு குவித்து புருவம் உயர்த்தி என்று  ஒவ்வொரு பாவனையில்  ரசித்து கொண்டு இருந்தவன் இறுதியாய் ஒரு புடவை எடுத்து வைத்து பார்த்துவிட்டு  சுஹீரா மீது வைத்த கண்களை விலக்க முடியாமல் திணறிய படி இது தான் என்று  ஒருவழியாய் தேர்வு செய்து முடித்தான் அகரன்.

 

மகேஸ்வரன் சுபத்ராவிற்கு தேர்வு செய்ய ஈஸ்வர் யமுனா மீது கவனத்தை செலுத்த தனக்கு யாரும் இல்லாமல் தனிமையில் விடப்பட்ட சுகன் பார்வை “அதி உனக்கு இந்த நிறம் பொருத்தமாய் இருக்கும் இதை கட்டி வந்தால் உன்னை விட்டு பார்வையை பிரிக்க முடியாமல் தவித்துப்போவேன்” என்று காதல் வசனம் பேசி அதிகா தோளில் ஒரு புடவையை வைத்து பார்த்து கொண்டு இருந்த    குகன் மற்றும் அதிகா மீது வந்து நின்றது.

 

“நான் மட்டும் தான் ஜோடியில்லாமல் தவிக்கின்றேன் போல  சரி எல்லோரும்  தன்னவளுக்கு   புடவை தேடுகின்றார்கள்,   நாம் வித்தியாசமாய்  புடவை கொண்டு   என்னவளை தேடுவோம்” என்று கூறி நகர்ந்தான் சுகன்.  “பார்த்து நீ தேர்ந்து எடுக்கும்  உன்னவள்  வேறு ஒருவரின் காதல் மனைவியாக  இருந்து விட போகின்றாள்” என்று அகரன் கேலி செய்து  சிரிக்க,  அனைவரும் உடன் சேர்ந்து சிரிக்க துவங்கினார்.

 

“பாருங்கள் அம்மா வழக்கமாய்,  இந்த குட்டிமா தான் என் காலை வருவாள் இன்று மச்சான் அவள் வேலையை செய்கின்றார்” குறைப்பட,  “இனி உன் பாடு திண்டாட்டம் தான் சீக்கிரம் உனக்கு ஒரு துணை தேடிகொள் இல்லை இப்படி தான்” என்றார் சுபத்ரா.

 

“இவர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க  நிரந்தரத்தொல்லையாய்   ஒரு துணை தேட சொல்கிண்றீர்கள்?”  என்று அலுத்து கொண்டான் சுகன். “அது என்னவோ உண்மை தான் மச்சான் எப்போது வெடிக்கும் எப்போது அணைக்கும்  என்று புரியாமல் வரும் பாருங்கள் ஒரு  தவிப்பு அதற்கு   தனிமை கூட  இனிமைதான்” என்று சிரித்தான்  அகரன்.

 

“நேரம் காலம் தெரியாமல் உங்கள் மச்சானுக்காக, உண்மைக்கு குரல் கொடுத்து  உங்கள் மனைவிடம் குரல்வளை மாட்டிவிட்டதே!”  என்று குகன் அனுதாப பட.  “உன் நிலையும் அது தான் பக்கத்தில் அதிகாவை பார் அனாலாய் இருக்கின்றாள்” என்று  அவனையும் விடாமல் கேலி செய்து சிரித்தான் அகரன்.

 

“என்ன சொன்னீர்கள்?” என்று சுஹீரா  கோபமாய் முகம் திருப்பிட,  “பார்த்தாயா மச்சான் இப்போது தான் சொன்னேன் அதற்குள் நிரூபிக்கின்றாள்!” என்று அகரன் கூற,  முகம் திருப்பிக்கொண்டு திரிந்தவளை கெஞ்சியும் கொஞ்சியும்   யாரும்  அறியாமல் சீண்டி தீண்டி ஒருவழியாய்  தனது வழிக்கு  கொண்டு வந்தான் அகரன்.

 

அங்கு குகன் நிலையோ படுமோசம்,  “என் அம்மா மீது  இருந்த பயம் விட்டு போச்சு” என்று  அதிகா முகம் திருப்ப,  “இப்போது எதற்கு உன் அம்மாவை இங்கு இழுகின்றாய்? நல்ல விஷயம் செய்யும் போது  குட்டிசத்தான் பற்றி பேசதே!” என்று குகன் பதிலில் கொதி நிலைக்கே போனவள்,  “என் அம்மா குட்டி சாத்தான் என்றால் நானுமா என்னையும் அப்படி தானே சொல்கின்றாய்?” என்று அதிகா கோபத்தை விடாமல் பிடித்து வைத்து கொண்டாள்.

 

அகரன் வந்து சமாதானம் செய்ய  “அவளை பற்றி பேசாதீர்கள் அண்ணா எப்போது பார்த்தாலும் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு பூச்சாண்டி பயம்காட்டுவது போல அவள் அம்மா பெயரைச் சொல்லி மிரட்டிக்கொண்டே திரிகின்றாள், நான் கிராமத்தான் அவள் அவளுக்கும் அவள் அம்மாவிற்கும் சேர்த்து பேய் ஓட்டுவேன்” என்று வீரப்பாய்  பேசினான் குகன்.

 

சுஹீரா வந்து அதிகாவை சமாதானம் செய்ய முயல  “என் அம்மாவையே இப்படி சொல்பவன் நாளை என்னை சொல்லமாட்டானா?” என்று  எதிர் கேள்வி கேட்க,   இருவர் பேசுவதையும் கேட்டு கொண்டு இருந்த அகரன்.  “அது சரி இப்போதே உங்கள் இருவருக்கும் பொருத்தமில்லை என்று நீங்களே பிரிந்துவிட்டீர்கள் எனக்கு கல்யாண செலவு மிச்சம்” என்று அகரன் சோம்பல் முறித்திட, “நமக்குள் பிரச்சனை வந்தால் நாம் தான் பேசி தீர்த்துக் கொள்ளவேண்டும் அதி செல்லம்  இடையில்  நாட்டாமை பண்ண வருக்கின்றவர்கள் எல்லாம் நம்மை பிரித்துவிட்டு வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள்,  நீ வா செல்லம் மாமா உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்து சமாதானப் படுத்துகின்றேன்,  இங்கு  கெட்ட சக்திகளின் பார்வை அதிகமாகி விட்டது” என்று  அதிகா கைப்பற்றி அழைத்து சென்ற குகன் முதுகில் ஒரு அடி கொடுத்தான் அகரன்.

 

“இவர்களுக்கு பேச வந்தோம் பார் நம்மை சொல்ல வேண்டும்” என்று அகரன் கூற, “ஏனுங்க மாமா அவுங்களுக்கு மட்டும் தான் ஐஸ்கிரீம் வாங்கித்தர தெரியுமா என்ன?,  நீங்க உங்க பவுச காட்டுங்க மாமா!”  என்று சுஹீரா ஏற்ற இறக்கத்துடன் கூறிட,    அவள் அழைத்த விதத்தில் கிறங்கி போனவன் “மாமாக்கு ஐஸ்கிரீம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை அம்மணி,   நீ காருக்குள்ள மட்டும் வா எத்தனை உண்டாலும் சலிக்காத ரசகுல்லா தருகின்றேன்” என்றான் அகரன்.  முகம்  சிவந்த படி     “எப்போதும் அதே நினைவு தான்  இனி உன் அருகில் நிற்பது எனக்கு ஆபத்து” என்று  விலகி சென்று யமுனா பின் மறைந்து நின்று கொண்டாள் சுஹீரா.

 

திருமண வரவேற்பிற்கு என்று ஏற்பாடு செய்யபட்டு இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சுஹீரா நுழையும் நேரம் அவ்விடமே இருளில் முழ்கிட..  பெறும் சலசலப்பு எழுந்தது.   அகரன் மீதும் சுஹீரா மீது மட்டும் ஒளி விழும் படி,  இருக்க அகரன் கையில் மைக்குடன் பேச துவங்கினான்,

உன் கண்களை கண்ட நொடி

இது தான் காதல்  என்று அறிந்தேனடி

என் கனவிலும் நீயே கலந்திட

என் நித்திரை தொலைத்து நித்தமும்

உன்னை நினைத்து உன் வழி வந்தேன்

என் உயிர் காதலை உணர்த்தி

என் வழி உன்னை ஈர்த்தேன் 

 

என்று வரிகளில் தனது காதலை மெழிந்தவன்  மெதுவாய்  சுஹீராவை நோக்கி முன்னேறிய படி “உன்னை கண்ட நொடியில் இருந்து,  உன்னை மட்டுமே நினைத்து வாழும்  உன் காதல்  கணவன் இனி வரும் நாட்களும் இது போலவே இருப்பேன் என்று உனக்கு உறுதி தருகின்றேன், உன்னை தவிர  வேறு  எந்த பெண்னையும் என் சிந்தனையில் கூட தீண்ட மாட்டேன்,   உன் சந்தோஷங்களை இரட்டிப்பாக்குவேன்,   சோகங்கள் உன்னை தீண்டாமல் அரணாய் இருந்து காப்பேன்,  என் இறுதி மூச்சு வரை உனக்கு உறுதுணையாக இருப்பேன்”, என்றவன் சுஹீரா கண்களில் மிளிர்ந்த சந்தோசக்கண்ணீரை துடைத்து விட்டு கள்ளசிரிப்பு சிரித்து,   “நீ உப்பு சப்பு  இல்லாமல் சமைத்து கொடுக்கும் உணவையும்  சுவையோ சுவை என்று ரசித்து உண்பேன்,  நீ  ஷாப்பிங் சென்றால் அமைதியாய் உன்  பைகளை சுமந்து வருவேன்,   நீ செலவழிப்பத்திற்கும் சேர்த்து இருமடங்கு வருமானம் ஈட்டுவேன்”, என்று கூறவும் இடையில் கைவைத்து சுஹீரா முறைக்க காதில் கைவைத்து மன்னிப்பு கேட்டு கொண்டவன்.  “உனக்காக  என்னையே மாற்றி கொண்டு எப்போதும் உன் அன்பில் வாழ்த்திட விருப்புகின்றேன்! என் துணையாய் என் வாழ்வில் இணைவாயா? கண்மணி” என்று அனுமதி கேட்டு கையை நீட்டினான் அகரன்.

 

அவன் கரம் பற்றாமல்  மறுப்பாய் தலையசைத்து “எனக்கு அக்மார்க் அகரன் பிடிக்காதே வழக்கமான கேடி! என் அரக்கனான அழகன் தான் பிடிக்கும்  உன்னை நீ மாற்றி கொள்ளாமலே  இருந்தால் உன் வேண்டுதல் ஏற்கப்படும்” என்று சுஹீரா கூறிட,  வாய்விட்டு சிரித்த படி மாற்றம் நிகழாது என் குணத்திலும் உன் மீதான  அன்பிலும் என்றான் அகரன்.

 

சம்மதமாய் தலையசைத்து அகரன் கைகளை பற்றி கொள்ள  அரங்கம் முழுவதும் வெளிச்சம் பரவியது நடப்பது கனவா ? இல்லை நனவா? என்று புரியாமல்  சந்தோஷத்தில்  கால்கள் தரையில்படாமல் மிதந்துவந்தவள் காது அருகில் குனிந்து “உன் கல்யாணம் பற்றிய கனவினை கொஞ்சமாவது  நிறைவேற்றினேனா? சுஹீ” என்று அகரன்  வினவிட, மனதின் சந்தோசத்தை எல்லாம்  கண்களில் தேக்கிக்கொண்டு “நான் விரும்பியதற்கும் மேல் செய்துவிட்டாய் என் செல்ல பகடு” என்று காதலாய் கூறினாள்  சுஹீரா.

 

“இப்படி காதலாய் பார்த்து கொல்லாதே! உன்னை அணைக்க துடிக்கும் மனதிற்கு  தெரியாது இடம்  பொருள் ஏவல் எல்லாம் நேரம் காலம் அறியாமல் உன்னை அனைத்து ஆசையை தீர்த்துக்கொள்ள  கரங்களுக்கு கட்டளையிட்டு  என்னை கொடுமை செய்கின்றது” என்ற அகரன் குரலில் காதல் கிறக்கம் மிகுந்து இருந்தது.  சுஹீரா கை பற்றிய படியே மேடை வரை அழைத்து வந்தான் அகரன் ,  சுஹீரா மறுத்தும் கேட்கமால் கையில் தூக்கிக்கொண்டு படி ஏறிச்சென்றான்,  சுஹீரா  முகம் வெட்கத்தில் இன்னும் அழகு கூடிப்போனது.

 

வரவேற்புக்கு வந்தவர்களுக்கு  நடப்பது ஒன்றும் விளங்கவில்லை சந்திரன் பரப்பி இருந்த படி  மகேஸ்வரனை பழிவாங்க நடத்தப்பட்ட திருமணம் என்று எண்ணி வந்தவர்களுக்கு  அகரன் செயல் விசித்திரமாய் இருந்தது “சந்திரன் சொன்னது போல இது பழிவாங்க நடத்தப்பட்ட திருமணம் போல இல்லையே உண்மையில் இருவரும் காதலித்து தான் உள்ளார்கள்” என்று  மணமக்கள் பற்றி பேசி கொள்ளத்துவங்கினர்.

 

மேடைக்கு வந்த ஈஸ்வர்   “சந்திரனால் பரப்பபட்ட வதந்தி பொய் என்று நிரூபித்து விட்டாய்! அகரா உனக்கும் சுஹீராவிற்கு இடையில் உள்ள காதலை இனி எல்லோரும் புரிந்து கொள்வார்கள்” என்று கூறி நகர்ந்தார்.

 

குகன் அம்மா மற்றும் தங்கையும் வரவேற்பிற்கு வந்திருக்க லட்சுமி அம்மாளையும்,  தங்கை  அமுதினியையும்  விழுந்துவிழுந்து கவனித்தாள் அதிகா. குகனை அழைத்து  “யார்  இந்த பெண் குகா அத்தை அத்தை என்று எங்கள் பின்னாடியே  சுற்றி வருகின்றாள்?” என்று புரியாமல் வினவ,  “இது அகரன் அண்ணாவின் அத்தை மகள் அம்மா பெயர் அதிகா” என்று அறிமுகம் செய்து வைக்க  அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பண்ணுங்கள் அத்தை என்றாள் அதிகா.    “என்னடா குகா  காலில் விழுகின்றாள்” என்று புரியாமல்  விழிக்க “என்னையும் சேர்த்து ஆசீர்வாதம் பண்ணுங்கள்” என்று குகனும் காலில் விழுந்தான்.

 

“என்ன அம்மா புரியவில்லையா?, அவர்கள் அத்தை என்கின்றார்கள் காலில் விழுகின்றார்கள்” என்று இழுத்த அமுதினி  “இவர்கள் தான் உன் மருமகள் அம்மா உன் மகன் முடிவு செய்து விட்டான்” என்றாள்.  “உன் அண்ணன் காதல் என்று தான்  உயிரை விட்டான் இப்போது நீயும் காதல் என்று வந்து நின்று  எங்கள் தலையில் இடியை இறக்குகின்றாய் உன் தங்கை வாழ்வை யோசித்தாயா?” என்று கவலையுடன்  வினவிட, யமுனாவும், ஈஸ்வரும் அவர்கள் அருகில் வந்து “நீங்கள் கவலைப்படாதீர்கள்  குகன் நல்ல பையன்,  அவன்  தங்கை திருமணத்திற்கு பிறகு தான் தனக்கு திருமணம் என்று தெளிவாய் உள்ளான்,   இருவரும் மனமும் ஒத்துப்போய் விட்டது  அதானல் நாங்களும் சம்மதம் சொல்லி விட்டோம், உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்க  அமைதியாய் இருந்தவர் யோசனையாய் அதிகாவையும், குகனையும் பார்த்தவர்  “வாழ்வில் எப்போதும் சந்தோஷமாய் ஒற்றுமையாய்  இருந்தால் சரி” என்று தனது சம்மதத்தை கூறினார்.

 

“கலை  இது தான் உன் சம்மந்தி” என்று  லட்சுமியை அறிமுகம்  செய்து வைக்க  அவர்களை மேலும்  கீழுமாக பார்த்து “ஆ.. வணக்கம் வணக்கம்” என்று பெயருக்கு அழைத்தவர்,  மகள் அருகில் வந்துபார்த்தாலே கிராமத்துப்பட்டிக்காடு போல் இருக்கின்றார்கள் இப்போது ஒன்றும் கேட்டுப்போகவில்லை, உன் மனதை மாற்றிக்கொள் நல்ல வசதியான இடமாய்  பார்க்கின்றேன்” என்றார்.   “மனிதர்களை அவர்கள் மனதை வைத்து தான் கணிக்கவேண்டும் அம்மா அவர்களிடம் உள்ள பணத்தை  வைத்து இல்லை” என்று  மெதுவாய் அவர் மட்டும் கேட்கும் படி அறிவுறுத்தியவள், அமுதினியின் அருகில் வந்து “என்ன படிக்கின்றாய்?” என்று அக்கறையாய் விசாரித்தாள், அமுதினியும் சகஜமாய் பேசிட  இருவர்க்கும் இடையில்  நட்பு மலர்ந்தது  அதன் பின் அமுதினி கைகோர்த்து கொண்டே எங்கும்  சுற்ற துவங்கினாள், அதிகா.

 

அகரன், சுஹீராவை  வாழ்த்த வந்தர்களில் சந்திரனும்   இருக்க ஒற்றை  புருவம் உயர்த்தி அகரன் ஆச்சர்யம் காட்டிட,   “ நான் ஏதோ புரியாமல் பேசிவிட்டேன் என்  நண்பனுக்கு நீங்கள் கெடுதல் செய்துவிட்டதாக நினைத்து அப்படி நடந்துகொண்டேன்  என்னை மன்னித்து விடுங்கள் அகரன் தம்பி” என்று  கை குலுக்கி வாழ்த்துகள் என்றிட, “அப்படியா மிஸ்டர் சந்திரன் உங்கள் நட்பின் அன்பு  அவ்வளவு ஆழமானது,  ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியது என்னிடம் இல்லை என் மாமாவிடம் என்றான் அகரன்.

 

“நீங்கள் சொன்னால் சரியாய் தான் இருக்கும் தம்பி” என்று இருவரையும் வாழ்த்திவிட்டு  மகேஸ்வரன் அருகில் சென்று “என்னை மன்னித்து விடு மகேஷ்” என்று வேண்டும் குரலில் நிற்க,    “மகிழ்ச்சியான தருணத்தில் எதற்கு மன்னிப்பு என்று பெரியவார்த்தை  எல்லாம்” என்று பெரிய மனிதனாய் பேசினார் மகேஸ்வர்.

 

“என்ன சந்திரா  மன்னிப்பு எல்லாம்” என்று உடன் வந்தவர்  கேட்க,  “இந்த அகரனை பகைத்துக்கொண்டு பிழைக்க முடியாது  அது தெரிந்தால் தான் மகேஸ்வரனை பயன்படுத்தி கொண்டேன்,   ஆனால் கடைசியில் நானே மாட்டிக்கொண்டேன்,   இவனிடம் மோதியதால் இப்போது வருமானவரி சோதனையில் மாட்டிக்கொண்டு படாதபாடுப்பட்டேன்”  என்று பெருமூச்சு விட்டார் சந்திரன்.

 

குகன் மேடைக்கு வந்து கிப்ட் ஒன்றை நீட்டிட ,  ஆர்வமாய் இருவரும் பிரித்து பார்த்தனர் அதில் இரு கண்கள் கோபமாய் முறைப்பது போல இருக்க சுஹீரா புரியாமல் பார்க்க “உனக்கு அன்றே  என் மனம் புரிந்துவிட்டதா?” என்று ஆச்சரியமாய் வினவினான் அகரன்.

 

“அன்றே என்ன நீங்கள்  அண்ணியை பார்த்து  கோவில்பட்டி வீரலட்சுமியும் என்று வருணித்து நல்லவேளை இவள்  பின் எவனும் காதல் என்று சுற்றவில்லை அப்படி மட்டும் எவனுக்காவது இவள் மீது  காதல்  வந்தால் தன் மரணத்திற்கே அறைக்கூவல் விடும் முதல் ஆள் அந்த முட்டாளாய் தான் இருப்பான்!  என்று உங்களை பற்றியே பெருமையாய் பேசி கொண்டு இருந்தீர்கள் பாருங்கள் அன்றே  தெரிந்துவிட்டது  இது இப்படி தான் முடிய போகின்றது” என்று கூறி சிரித்தான்  குகன்.   “என்னை பற்றி என்னவெல்லாம் சொல்லிவிட்டு  அடுத்தநாளே வந்து என்னிடம் வழிந்தாயா? பகடு” என்று  கோபம்காட்டினாள் சுஹீரா.

 

“என்ன நாராதரே  வந்த வேலை முடிந்ததா?” என்று அகரன் கேட்கவும், “சிறப்பாய் முடிந்தது அண்ணா பினிஷிங் டச் ஒன்று மட்டும்” என்றவன் “இந்த கண்களை உங்களை சந்தித்து வந்த,  அடுத்த நாள் வரைந்தார் அண்ணி அன்றே என் அண்ணன் மனதில் நீங்கள் நிறைந்துவீட்டீர்கள்!”  என்று அவனே கோபத்தையும்  குறைக்கும் வழியும் சொல்லி சென்றான் குகன்.

 

“அவன் என்னவோ உளருகின்றான் அவனை நம்பாதே” என்று அசடு வலிந்து அகரன் சிரிக்க இருந்த கொஞ்ச கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.  “என்ன அகி ஹீயை சமாதானம்  செய்ஞ்சுட்டயா ஹீ உன் மேல ரொம்ப கோபமா இருந்தா நீ அவள கள்ளாட்ட பண்ணி ஏமாத்தினயா இனி  ஹீயை அழவச்ச,  லட்டு சாப்பிட்டு பீம் மாதிரி உன்னை தூக்கி  போடுவேன்” என்று பிஞ்சு விரல் நீட்டி சோட்டு எச்சரிக்கை செய்ய, “ஓகே டான் உங்கள் ஹீயை கண்கலங்காமல் பார்த்து கொள்வேன் வெங்காயம் கூட உரிக்க விடமாட்டேன்” என்று சிரியாமல் அகரன் கூறிட,   “சும்மா சோட்டுவை வம்பிழுத்து கொண்டே இருக்காதே” என்று  தூக்கிக்கொண்டு இருவருக்கும் நடுவில் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

 

எல்லோரும் வந்து வாழ்த்து சொல்லி செல்ல இறுதியாக பாடல் ஒலிக்கப்பட அனைவரும் தங்களின்   ஜோடியுடன் ஆட துவங்கினார்,   அகரனும்  வம்படியாய் சுஹீரா கரம்  பற்றி பிறருடன் சேர்ந்து நடனம் ஆடிட ,  குகன் எனக்கு ஆடத்தெரியாது என்று மறுக்க  நான் சொல்லி தருகின்றேன் என்று இழுத்துசென்றாள் அதிகா.  குகனும் அதிகாவும் நடனம் ஆட அவர்களை கவனித்து கொண்டு இருந்த கலையரசிக்கு அதிகா முகத்தில் இருந்த சந்தோசம் நிம்மதியை தந்தது.  “உன்  வாழ்வை நீயே தேடி கொண்டாய் அதில் தான் உனக்கு நிம்மதி என்றால் நான் என்ன சொல்வது” என்று தனக்குள் ஒரு முடிவிற்கு வந்தார் கலையரசி.

 

சுகன்  கவனம் புன்னகையுடன்  சாந்தமான அழகுடன்  நின்று இருந்த அமுதினி பக்கம் சென்றது  “நான் சுகந்தன் சுகன்  என்பார்கள்” என்று தன்னை  அறிமுகம் செய்து கொண்டவன்,  “நீங்கள் குகன்  தங்கை தானே?” என்றிட, “ஆமாம் என் பெயர் அமுதினி” என்று கூச்சத்துடன் கூறினாள் அமுதினி.

 

“என்னுடன்  சேர்ந்து ஆடவருக்கின்ரீர்களா? அம்மு” என்று சுகந்தன் வினவ,  வெட்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மறுப்பாய் தையசைத்து வேறுபுறம் சென்று  நின்று கொண்டாள்,  ஆனால் கண்கள் மட்டும் சுகந்தனை விட்டு அகலாமல் இருக்க இருவரும் பார்வையில் பல ரகசியங்கள் பகிர்ந்து கொள்ள துவங்கினார்.

 

இரவு இருள் சூழ ஏனோ புரியாத நடுக்கம் உடல் எங்கும் பரவியது  அகரனை நன்கு அறிந்தவள் தான் இருந்தும் மனம் படப்படப்பதை தவிர்க்க முடியவில்லை சுஹீராவால்,  “மாப்பிள்ளை மனம் நோகாமல் நடக்க வேண்டும்” என்று சுபத்ரா அறிவுரை வேறு பயத்தை அதிகரித்தது “நான் பார்த்து கொள்கின்றேன்” என்று அதிகா வர அறையை விட்டு வெளியேறினார் சுபத்ரா.

 

அவள் மனதின் போராட்டத்தை புரிந்து கொண்ட அதிகா “உன் பயம் நியாயம் தான் சுஹீரா  கரண் கொஞ்சம்  கொஞ்சம் என்ன நிறையவே முரடன் ஆயிற்றே!” என்று சிரிக்க,  “அதெல்லாம் என் பகடு ஒன்றும் முரடன் இல்லை என் உணர்வுகளுக்கு மதிப்பு தருபவன்” என்று  அகரானுக்காக பரிந்து பேசினாள் சுஹீரா.  “ ஓ உன் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் பகடுவை கண்டு எதற்கு பயம்?” என்று அதிகா  சிரிக்க,  “இது சொன்னால் உனக்கு புரியாது நீ அனுபவிக்கும் போது நானும் அருகில் தானே இருப்பேன்” என்றுவள் குரலில் கேலி இருக்க,  “நான் எல்லாம் குகனை பார்த்துபயப்படுவதா? அது கனவிலும் நடக்காது என்று அழகாய் தலை சிலுப்பி விட்டு அலங்கரிக்க பட்ட தனியறையில்  சுஹீராவை கொண்டு சென்று விட்டு திரும்பினாள் அதிகா.

 

அறையில் அகரன் இல்லாமல் இருக்க சுற்றும்  முற்றும் பார்வையில் தேடியவள்  அறையின் உள்  இருந்த மற்றொரு கதவை திறந்து வெளியில் வந்தவன்,  சுஹீரா  அழகில் அசைவற்று நின்று விட்டான்,  “என் கண்ணம்மா என்று ஆசையாய் நெருங்கி வந்து அவள் நெற்றியில் விழுந்த முடியை கோதிவிட்டவன்,  அவள் முகம் எங்கும் வேர்த்து இருப்பது உணர்ந்து என்னிடம் என்ன பயம் , என் செல்ல பொண்டாட்டி” என்று மென்மையாய் கன்னத்தில் இதழ் ஒற்றியவன் , “என்னுடன் வா” என்று கை பற்றி வெளியில் அழைத்து சென்றான், “எங்கு செல்கின்றோம் “ என்று சுஹீரா பலமுறை கேள்வி கேட்டும் பதில்  சொல்லாமல்  சத்தமின்றி காரில் ஏறி அமர்ந்தவன்.  “யாரும் பார்க்கும் முன் சீக்கிரம் ஏறு சுஹீ யாரும் பார்த்தால் விடமாட்டர்கள்” என்று கூறிட  நடப்பது புரியாமல், ஆனால் அகரன் வார்த்தையை மீற மனம் இல்லாமல் உடன் சென்றாள் சுஹீரா.

 

கார் நேராய் அகரன் பீச் ஹவுஸ் சென்று நிற்க “இப்போது இங்கு எதற்கு பகடு” என்று புரியாமல் வினவ,  அவள் இதழில் விரல் வைத்து  “ஷ்.” என்று உள்ளே அழைத்து சென்றான் அறை முழுவதும் மெழுகுவர்த்தி  ஒளியில் நிறைந்திருக்க   கதவை  மூடி விட்டு வந்தவன்,  “சும்மா சொல்லகூடாது குகன் சிறப்பாய்  ஏற்பாடு செய்து உள்ளான்” என்று மெச்சுதலாய் கூறிய படி தன்னவளை பின்னிருந்து அணைத்தான்.

 

“இங்கு உனக்கு என்னிடம் எந்த பயமும் தயக்கமும் வேண்டாம் சுஹீ” என்றவன் விலகி சென்று மீண்டும் வந்து   கழுத்தில் அன்று அவள் வேண்டாம் என்று விட்டு சென்ற வைர மாலையை அணிவித்து விட்டு தனது கைகளையும் மாலை போல் அவள் தோள்களில் போட்ட படி, “நான் உன் அகரன் உன் விருப்பம் இல்லாமல் உன்னை அணுகமாட்டேன்” என்று மெதுவாய் காது அருகில்  கூறி கழுத்து வளைவில் முத்தமிட்டவன்,  “இங்கு நீயும் நானும் மட்டும் தான் குறுகுறுவென பார்க்கும்  கண்கள் இல்லை, கேலி செய்திடும் வார்த்தையில்லை,  உன் அகரன் மட்டும் உன் அளவில்லா காதலை அனுபவிக்க காத்திருக்கின்றேன்” என்று  இடையில் கை கோர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் தன்னவளை தன் காதல் வசியத்தில் மயக்க துவங்கினான் அகரன்.

 

போதை தரும்

தேகம் உனது

உன்னை தீண்டி

தித்திக்குது என் மனது...

 

என்றவன் மேலும் முன்னேறிட தன்னவனுக்கு   தயக்கமின்றி தன்னை வழங்கிட துவங்கினாள் சுஹீரா.

காலை எழுந்து வந்து பார்த்த பெரியவர்கள் அகரனும் சுஹீராவும்  அறையில் இல்லாமல்  இருக்க முதலில் பயந்தவர்கள் பின் குகன் முன் வந்து நின்று  “இதுவும் உன் அண்ணன் வேலை தானா?” என்றிட, “ செய்வது எல்லாம் அவர் ஆனால் உங்களிடம் வசமாய் மாட்டிக்கொள்வது நான்” என்று  தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான் குகன்.

 

சில மாதங்கள்  கடந்து…

 

“சுஹீரா இங்கு வந்து உன் அண்ணனை என்னவென்று கேள் எந்த பெண்னை பார்த்தாலும் பிடிக்கவில்லை என்கிறான்,  ஏதாவது குறை சொல்லிக்கொண்டேயிருக்கின்றான்” என்று சுபத்ரா அழைக்க நிறைய மாத கர்ப்பிணியான சுஹீரா தனது பானை வயிற்றை தள்ளிக்கொண்டு  மூச்சு வாங்க  வந்து நின்றாள்.

 

சுபத்ரா விலகி சென்றதும் “யார் அது? சுகன்” என்று சுஹீரா வினவிட,     கண்கள்   மின்னிட “உனக்காவது என் நிலை  புரிந்ததே?” என்றவன் அசடு வழிந்த படி,  “அம்மு அமுதினி உன்  திருமண வரவேற்பில் பார்த்தேன் அதில் இருந்து அவள் நியாபகம் மட்டும் தான்” என்று  சுகந்தன் கூறிட, “யாரை  சொல்கின்றாய்   குகன் தங்கையையா?”  என்று ஆச்சர்யமாய் வினவினாள் சுஹீரா.  “ஆமாம்” என்று வெட்கத்துடன் சுகன் தலையாட்ட  “பொறு” என்று சென்று அகரனை அழைத்து வந்து சுகன் முன் நிறுத்தினாள்,  “இப்போது கேள் சுகன் உங்கள் தங்கையை எனக்கு பிடித்து உள்ளது,  திருமணம் செய்து தருவீர்களா?” என்று கேள்  என்றாள்  சுஹீரா.

 

அகரன்  அதிர்ந்து போய் “அமுதினியை விரும்புகின்றாயா! இது எப்போதிருந்து?” என்றவன், சுகன்  “ஆமாம்” என்று தலையாட்டி  தனக்கு காதல் வந்த விதத்தை விவரிக்க,  “இந்த  பூனையும் பால் குடிக்குமா  என்று இருப்பவன் இன்று இந்த போடு போடுகின்றாய் போ” என்று சுகன் முதுகில் தட்டி கேலி  செய்தான் அகரன்.  “போதும் என் அண்ணனை கிண்டல் செய்தது குகனிடம் நீங்கள் தான் பேசி சம்மதம் வாங்க வேண்டும்” என்று மனைவியாய் உத்தரவிட்டாள் சுஹீரா.

 

“குகனிடம் பேசுகின்றேன்,  ஆனால் அவனுக்கோ அமுதினிக்கோ விருப்பம் இல்லை என்று தெரிந்தால்நான் கட்டாய ப்படுத்த மாட்டேன்” என்று கூறி சென்றான் அகரன். “குகன் நம் அமுதினி திருமணம் விஷயம் பற்றி ஏதும் யோசித்தாயா ?” என்று அகரன் வினவிட, “என்ன அண்ணா சொல்வது இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்துக்கொண்டே இருக்கின்றாள்”  என்று குகன் சோகம் காட்டினான்.  “என்ன அவளுமா!” என்று அகரன் ஆச்சர்யமாய் வினவ,  “அவளுமா  என்றால் என்ன அர்த்தம் அண்ணா வேறு யார் அப்படி சொல்கின்றார்கள்” என்று குகன் புரியாமல் வினவிட,  “என் மச்சான் சுகன் தான்”,  என்று அனைத்து விபரம் கூறினான் அகரன்.  சுகன் பற்றி நன்கு தெரியும் எந்த  கெட்டபழக்கமில்லை   நிச்சயம் என் தங்கை நிம்மதியாய் இருப்பாள், ஆனால் அவள் விருப்பம் என்ன என்று தெரியவில்லையே என்று குகன் நிறுத்த, “நீ அமுதினிக்கு போன் செய் நான் கேட்கின்றேன்” என்று அகரன் கூறிட , தயக்கத்துடன் அழைத்தான் குகன்.

 

குகன் அன்னையிடம் “அமுதினிக்கு நல்ல வரன் வந்துள்ளது” என்று விபரம் கூறியவன் அமுதினிடம்  “சம்மதமா?” என்று கேளுங்கள் என்றிட , திருமண பேச்சை எடுத்தாலே ஓடுகின்றாள் நீயே கேள் என்று அமுதினி கையில் போனை திணித்துவிட்டு அருகிலேயே அமர்ந்து இருந்தார் லட்சுமி. அகரன்  சுகந்தன் பெயரை சொன்னதும் முகம் மலர்ந்தவள் பெரியவர்கள் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் என்றவள் குரலும் சந்தோசத்தில் துள்ளியது. இரு வீட்டு பெரியவர்களும் அமர்ந்து பேசி நல்ல நாள் முடிவு  செய்து குகன், அதிகா மற்றும்,  சுகந்தன், அமுதினி திருமணத்தை முடிவு செய்தனர்.

 

திருமண நாள் சுஹீரா கையில்  அவளுக்கும் அகரனுக்கும் உள்ள காதல் அடையாளமாய் மகிழன்  இருந்தான்.

 

சுபவேலை சுப தினத்தில் காதலில்  இணைந்த உள்ளங்கள் வாழ்விலும் இணைத்து வைக்கபட்டனர்.

 

கலையரசி மட்டும்  முகத்தை தூக்கி வைத்து கொண்டே திரிந்தார்.  அகரன், குகன் அதிகா திருமண பரிசாக அதிகா பெயரில் சில சொத்துகளை மாற்றித்தர அதை மறுத்தான் குகன்.  “இது உனக்கு இல்லை குகா எங்கள் வீட்டு பெண்ணிற்கு சேர வேண்டியது” என்று அகரன் கட்டாயப்படுத்த,  “இதை நான் வாங்கி கொண்டால் பணத்திற்காக தான் அதிகாவை விரும்பியதுபோல இருக்கும் அண்ணா” என்று மறுத்தான் குகன்.

 

குகன்  மேலும் மறுத்து கொண்டே இருக்க “வாங்கிகொள்ளுங்கள் மாப்பிள்ளை அகரன்  செய்ய வேண்டிய சீரை செய்யாமல் விடமாட்டான்” என்று கலையரசி கட்டாய படுத்த,  முதல் முறை கலையரசி தன்னை மாப்பிள்ளை  என்றதே நிம்மதியை கொடுக்க  அதிகா விருப்பம் என்றான் குகன்.  “இது எல்லாம் நீயும், மாமாவும் சுயமாய் சம்மதித்த சொத்துகள் கரண் இதில் எனக்கு எந்த பங்கும் இல்லை” என்று அதிகா மறுக்க,  “விபரம் இல்லாமல் பேசதே அதிகா வரும்  செல்வத்தை எட்டி உதைக்க கூடாது” என்று அவள் கையில் வாங்கி திணித்த பின்பே நிம்மதியாய் மூச்சு விட்டார் கலையரசி.

 

பெரிய இடம் மகள் விரும்பி விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக,  இறங்கி வந்து சம்மந்தம் செய்துஉள்ளார் என்று குகன்  உறவுகள் புகழ்ந்து தள்ள   தனக்குள் இருந்த  சிறு நெருடலும் விலகிட  அதன் பின் கொஞ்சம் கர்வமாய்  தலை நிமிர்ந்து மண்டபத்தை சுற்றி வந்தார் கலையரசி.

 

இரவில் சுஹீரா இரு பெண்களையும் அலங்கரிக்க அமுதினி நடுக்கத்துடன் அமர்ந்து இருக்க அதிகாவோ எந்த தயக்கமும் இன்றி தயாராகிக்கொண்டு இருந்தாள்,   “அடி அதி கொஞ்சம் வெட்க படுவது போல நடிக்கவாது செய்” என்று சுஹீரா கேலி செய்திட ,  “எனக்கும் சேர்த்து,  குகன் வெட்கப்பட்டு கொண்டு இருப்பான் “ என்றாள் அதிகா.

 

“அண்ணா ப்ளீஸ் அண்ணா இது எல்லாம் இப்போது எதற்கு எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது” என்று கெஞ்சி கொண்டிருந்தான் குகன்.  “என்ன குகா என் தம்பியாய் இருந்து  கொண்டு இப்படி தயங்குகின்றாய்,  அங்கு பார் நம் மச்சானை எப்படி  டிப்டபாய்  தயாராகி கொண்டு இருக்கின்றார்” என்று ஒருவழியாய் குகனையும் சுகந்தனையும்,  முதல் இரவு அறையில் விட்டு  வந்தான் அகரன்.    இருளில் காதல் உள்ளங்கள்  ஒருவரை ஒருவர் இழந்தும் தொலைத்தும் புது வாழ்வில்  சங்கமித்து இருந்தனர்.

 

“சுஹீ ரசகுல்லா வேண்டுமா?” என்று அகரன் அருகில் வந்து வினவ,  “ஒன்றும் வேண்டாம் ஒழுங்காய் ஓடிவிடு” என்று போலியாக கோபம் காட்டி எச்சரித்தாள் சுஹீரா.  “சுஹீ   எனக்கு அந்த நாள்  நியாபகம்  வந்துவிட்டது கண்ணம்மா” என்று கொஞ்சிக்காரியம் சாதித்து கொண்டான் அகரன்.

 

 

 

 

சில வருடம் கடந்து…

 

பள்ளி விடுமுறை வாண்டுகள் எல்லாம் ஒன்றாய் சுஹீரா வீட்டில் கூடி இருந்தனர், “வேண்டாம் மகி அண்ணா சோட்டு அண்ணாவை நீ ஏதாவது செய்தால்  அம்மாவிற்கு கோபம் வரும்” என்று  கூறிக்கொண்டு இருந்தால் ஆருதிரா,  சுஹீரா அகரன்  செல்ல மகள்.  “அவள் கிடக்கின்றால் நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல் நான் செய்கின்றேன் மகி அண்ணா” என்று வந்தான் நளன் குகன், அதிகாவின் செல்ல மகன்.

 

“யாருக்கும் கஷ்டம் கொடுக்க கூடாது,  என்று அம்மா சொன்னது மறந்து விட்டதா?” என்று மழலை குரலில் ஆருதிரா எச்சரிக்கை செய்ய, “அதற்காக அந்த  சோட்டு என் மதுவை அழவைப்பான் அதை நான் பார்த்து கொண்டு இருக்கவேண்டுமா என் மதுவிற்கு கஷ்டம் கொடுத்தவனை நான் கஷ்டப்படுத்தாமல் விட மாட்டேன்” என்றவன்,   “நளா நீ அவன் உட்காரும் இடத்தில் இந்த முட்களை வைத்துவிடு  நான் எப்படியாவது பேசி இங்கு அழைத்து வந்து இதில்  உட்காரவைத்து விடுகின்றேன் அப்போது தான் அந்த குண்டனுக்கு இனி என் மதுவிடம் மோத தைரியம்  வராது” என்றான் மகிழன்.  “வேணாம் மகி அவனை  விட்டுவிடு அத்தைக்கு  தெரிந்தால்  உன்னை தான் திட்டுவார்கள்,   எனக்கு அழுகை வரும்” என்று மகிழனை சமாதான படுத்த முயன்றாள்,  மதுலிகா சுகன் அமுதினி அழகு மகள்.

 

ஆருதிரா  சொல்லியும் கேட்கமால் மகிழன் திட்டம் தீட்ட நளன் அதற்கு உதவி புரிந்தான், உள்ளே ஓடி சென்ற ஆருதிரா சுஹீராவுடன்  வெளியில் வந்து “பார் அம்மா நான் எவ்வளவு சொல்லியும்  மகி அண்ணனும்  நளன் அண்ணனும் என்  பேச்சை கேட்கவே இல்லை” என்று அவர்கள் திட்டத்தை போட்டு உடைத்திட, “மகி” என்று சுஹீரா அழைக்க,  “என்ன அம்மா” என்று முன் வந்து நின்றான் மகிழன்.  “ஆரு சொல்வது உண்மையா நீ சோட்டு உட்காரும் இடத்தில முட்களை வைக்க ச்சொன்னாயா?” என்று விசாரித்தாள் சுஹீரா.

 

ஆருதிராவை பார்த்து முறைத்து கொண்டே , “ஆமாம் அவன் என் மது கையில் இருந்த  லட்டுவை பிடுங்கி தின்று அவளை அழவைத்துவிட்டான் பதிலுக்கு அவனை அழவைக்காமல் நான் விட மாட்டேன்” என்று திமிராய் பதில் தந்தான் மகிழன். “பாருங்கள் அம்மா இந்த மகிக்கு உள்ள திமிரை” என்று சுபத்ராவிடம் முறையிட்டாள் சுஹீரா. `            “உன் பாடு உன் மகன் பாடு இதில் நான் தலையிட்டு  என்  நிம்மதியை கெடுத்துக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை” என்று கழண்டு கொண்டார் சுபத்ரா..

 

சுஹீரா அகரனை அழைத்தாள் எவ்வளவு வேகமாய்  வரமுடியுமோ அவ்வளவு வேகமாய் வந்து சுஹீரா முன் வந்து  நின்றான் அகரன். “உங்கள் மகன்   செய்த காரியத்தை பாருங்கள்” என்று  நடந்ததை சுஹீரா முறையிட,  “நீ என் இனமடா!” என்று மனதில் சபாஷ் போட்டு கொண்டவன் மகிழன் அருகில் அமர்ந்து “நான் சோட்டுவை அழைத்து கண்டித்துவைக்கின்றேன்,  ஆனால்  நீ செய்ததும் தவறு தான்  மகி ஒழுங்காய்  அம்மாவிடம் மன்னிப்புகேள்” என்றான் அகரன். “சாரி என்று  சொன்னவன் வா நளன் உள்ளே சென்று விளையாடுவோம்” என்று நளன் மதுவை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்  மகிழன்.

 

தங்கள்  அறைக்கு வந்த அகரன் “சின்ன பையன்  தெரியாமல் செய்கின்றான், அதற்கு இவ்வளவு கடுமைவேண்டுமா?”  என்று மனைவியை சமாதானப்படுத்த முயன்றான் அகரன்.  “அப்படியே உன்னை உரித்துவைத்து உள்ளான் பகடு  கோபம் பிடிவாதம் முரட்டுத்தனம்” என்று அடுக்கி கொண்டே போக, “புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்  செல்லப்பொண்டாட்டி” என்று கட்டியனைத்துக் கொண்டான் அகரன்.  “இதில் பெருமையா உனக்கு” என்று விலகிட முயன்றாள் சுஹீரா.

 

கரம் பற்றி இழுத்து  தன் மீது சரித்து கொண்டவன் “நம் குட்டிமா ஆருதிரா, உன்னைப்போல தானே இருக்கின்றாள்  அவள் பெயருக்கு  ஏற்றது போல மிருதுவாக!”  என்றவன், “நீயும்  நானும் சேர்ந்த கலவையாக ஒன்று பெற்று கொள்வோமா?” என்று  அகரன் ரகசியம் பேசி கிசுகிசுக்க.  “அப்பா சாமி ஆளை விடு  உன்னையும் உன் பிள்ளையையும் வைத்து சமாளிப்பதே எனக்கு போதும் போதும் என்றாகிவிடுகின்றது” என்று  சினுங்களாய் கூறிக்கொண்டே மெதுவாய் கணவன் கை அணைவில் தன்னை இழக்க துவங்கினாள் சுஹீரா. ஊடலுடன் கூடல் அங்கு அழகாய்  நிறைவேறியது…

 

 

என்ஆயுள் உள்ள வரை

உன் காதல் வேண்டும்

அது முடியாது என்றால்

உன் காதல் உள்ள வரை

எனக்கு ஆயுள் போதும்

 

இனியெல்லாம் சுகமே சுபமே.

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: