சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10

பாகம் – 10

வெறும் கூடாக என்னை விட்டு சென்றவளே

எப்படி இந்த வெற்று உடலோடு வாழ்வேனடி …

காற்றெல்லாம் இருக்கும் உன் சுவாசத்தை எல்லாம்

என்னிடம் ஒப்படைத்து விடு ..

சுவாசித்து உயிர் கொள்ளபார்க்கிறேன்.

பிரணவிற்கு தன் காதில் விழுந்த செய்தியை நம்பவே முடியவில்லை. கைப்பேசியில் தன் மாமாவின் கதறலை நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

வெகுநேரம் கைப்பேசியை காதில் வைத்துக் கொண்டு இடி விழுந்தார் போல் நின்று கொண்டிருந்த மகனின் முன் வந்து அவனை மெல்ல உழுக்கினார் அவனின் தாய் ரூபவதி.

சட்டென்று உணர்வு வந்த பிரணவ் தன் தாயை கட்டிக் கொண்டு கதறி தீர்த்துவிட்டான். மெல்ல மகனின் மூலம் விசயத்தை உள்வாங்கிக் கொண்ட பிரணவின் தாய் ரூபவதியோ மயங்கிச் சரிந்தார்.

அவரின் சொந்த அண்ணன் மகள் தான் ஸ்வேதா. தன் அண்ணின் மகளின் மீது உயிரையே வைத்திருந்தவர், தன் உயிர் நிலையையே தாக்கிய செய்தியை தாளமுடியாமல் மயங்கி விழுந்தார்.

************************

ஸ்வேதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் பிரணவ்.

அவளோ ஆழ்ந்த அமைதியுடன் மீளா துயிலில் இருந்தாள்.

‘என்னை விட்டு போக உனக்கு எப்படி மனசு வந்தது டீ!’ கண்ணாடி பேழையில் வைத்திருந்தவளை தொட்டு அணைக்க முடியாமல் பரிதவிப்புடன் பார்த்து கொண்டிருந்தான். நிலையில்லாமல் அவன் கைகள் கண்ணாடி பேழையை தடவிக் கொண்டிருந்தது.

ஸ்வேதாவின் குடும்பமும் அவனின் அன்னையும் அங்கு கதறிக் கொண்டிருந்தார்கள்.

எதுவுமே அவன் செவியை எட்டவே இல்லை.அவனுக்குத் தெரிந்ததெல்லாம், அவனுடைய ஸ்வேதா இனி அவனுக்கு இல்லை என்பதுதான்.

அவன் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது. ஸ்வேதாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். தலையெல்லாம் கட்டு போட பட்டிருக்க, முகம் மட்டும் தெரிந்தது.

அவளுக்கு அடிப்பட்ட பொழுது எப்படி துடித்தாளோ.

‘அடி பட்டப்ப ரொம்ப வழிச்சதா என் தங்கம்!’ மனதோடு ஸ்வேதாவிடம் பேசினான்.

ஊட்டிக்கு ஸ்வேதா அடிக்கடி வருவாள். அப்படி வரும் பொழுது ஒரு முறை தோட்டத்திலிருந்த தேனி அவளை கொட்டி விட இரவெல்லாம் துடித்தாள்.

‘ஒரு தேனி கொட்டினதுக்கே அந்ததுடிப்பு துடிச்சயேடி. இன்னிக்கு வழி தாங்க முடியாமல் எப்படியெல்லாம் துடிச்சயோ!’

அவனுடைய நெஞ்சம் இற்றுவிடும் போல் வழித்தது.அப்படி இற்று விட்டால் கூட பரவாயில்லை என்று பரிதவித்தான் அவன்.

‘ஸ்வேதா! ஸ்வேதா .. என் ஸ்வேதா!’

‘ஒவ்வொரு நிமிடமும் இந்த நரகவேதனையுடன் தான் கழியுமா?’ எதிர் காலத்தை நினைப்பதற்கு கூட தெம்பின்றி அமர்ந்திருந்தான் அவன்.

அவனுடைய நெஞ்சம் ஸ்வேதாவின் நினைவுகளுடன் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

சின்ன சிறு சிறுமியாக, பதின் வயது தோழியாக, கன்னிப் பருவத்தில் காதலியாக… அவன் ஊனோடு உறைந்துவிட்டவளை தேடித் தவித்தான் அவன்.

“எழுந்து திரும்பவும் வந்துவிடுடி. என் கண்ணுக் இல்லை… நெஞ்சுக்குள் வைத்துக் கொள்வேன்!” தாளவே முடியாமல் கதறினான் பிரணவ்.

கடைசி நிமிட சடங்குகளுக்காக அவளுடைய உடல் கண்ணாடி பேழையிலிருந்து எடுக்க உறவினர்கள் முயற்சிக்க, விரைந்து எழுந்து அவளுடைய உடலை கட்டிப்பிடித்துகொண்டு கொடுக்க முடியாது என்று அழுந்து அமர்ந்துவிட பல பேர் சேர்ந்து அவனை பிரித்தெடுக்க முயற்சிக்க, அவனோ கல்லாய் தன் காதலியை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

எவ்வளவு நேரம் தான் அப்படிவிட்டு விட முடியும். ரூபவதி அவனின் தோளைத் தொட்டார்.

அவன் மெல்ல நிமிர்ந்து அவனுடைய தாயை பார்த்தான். அவனுடைய உதடுகள் துடிக்க, கண்களில் கண்ணீர் பெருக அமந்திருந்தான்.

“என் சாமி .. எற்கனவே அடிப்பட்டு நொந்து போன உடம்புப்பா! தயவு செய்ஞ்சு கொடுத்துடுப்பா.. சடங்கு எல்லாம் பண்ணணும் ப்பா!” ரூபவதி கெஞ்சினார்.

“அம்மா இது ஸ்வேதா ம்மா! அவளைப் போய் உடம்புன்னு சொல்லுறீங்களே ம்மா..அம்மா!” அவன் பெருக் குரலெடுத்து கத்த..

“தப்புதான்யா.. நம்ம ஸ்வேதாவை நல்ல படியாக வழிய வேண்டாம்மா?”

அவனோ கல்லாய் அமர்ந்திருக்க..

“உன் காலில் விழுகிறேன் தங்கம், ஸ்வேதாவை குடுத்திடுப்பா!” ரூபவதி கையெடுத்த கும்பிட, மனதே இல்லாமல் ஸ்வேதாவை விட்டு நகர்ந்து தொய்ந்து போய் அமர்ந்தான்.

முடிந்தது முடிந்தது தான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் திரும்புவதில்லை. விரக்கத்தியுடன் அவன் எழுந்து சென்றான்.

சடங்கள் நடந்து கொண்டிருக்க, அவனோ கண்ணெடுக்காமல் ஸ்வேதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். இனி வாழ் நாளில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதே. ஒரு வினாடியையும் வீணடிக்க விரும்பவில்லை அவன்.

“இனி ஒரு பிறவி உனக்கு வேண்டாமடீ. நீ பிறவி எடுக்க வேண்டாம், இப்படி பாதியில் விட்டுச் சென்று என்னை போல் ஒருவன் பைத்தியம் ஆகவும் வேண்டாம்!” மனதோடு கரைந்து தீர்த்தான்.

வாய்க்கரிசி போட அவனை அழைக்க, நகர மறுத்த காலை கடினப்பட்டு நகர்த்தி மெதுவாக அவளிடம் சென்றான்.

வாய்க்கரிசி அள்ளி மெதுவாக வைத்தவன், ‘உன் மாமன் உனக்கு கடைசி அரிசி போட்டுவிட்டேன் டீ தங்கம், உன்னை வழியனுப்பி வைக்கிறேன்’ என்றவன் தாளமுடியாமல் அவள் நெற்றியில் சிறிய முத்தத்தை வைத்தான்.

‘உயிரோடு இருந்திருந்தால் சிலிர்த்து கொண்டு நின்றிருப்பாள். என்னை எப்படி முத்தமிடலாம் என்று சண்டைக்கு வந்திருப்பாள்’

‘ஆனால் பிணத்திற்கு என்ன தெரியும், ஆம் என்னவள் பிணமாகிவிட்டாள். என்னை நடைப்பிணமாக்கிவிட்டு அவள் பிணமாய் செல்கிறாள்.’

அடைத்துக் கொண்ட நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.

ஸ்வேதாவின் உடலை மின் மயானதிற்குள்ளே எரியுட்ட எடுத்து செல்ல, அவனோ நடப்பதற்கு கூட தெம்பில்லாமல் அங்கேயே மண்டியிட்டுவிட்டான்.

பிரித்து கொண்டுசென்றுவிட்டார்கள் என் ஸ்வேதாவை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள்.

‘என்னிடம் அவளை கொடுத்துவிடுங்களேன்…’ அவன் துக்கம் தாளாமல் கதறிக் கொண்டே இருந்தான்.

உன் வாசமாவாள்..

 

 

 

 

 

 

1 thought on “சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 59ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 59

உனக்கென நான் 59 விமான பறவையின் இறக்கைகள் வலுவிழந்த காரணத்தினால் அது அந்த நவீன நகரத்தில் இளைப்பாற இறங்கியது. மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த நகரம் அது தமிழ்நாட்டின் தலைமையாக முடிவெடுக்க வேண்டுமல்லவா. மூளையில் நரம்புகளின் வேகத்தைபோல அனைத்து மனிதர்களும் இயங்கிய தருனம்

வார்த்தை தவறிவிட்டாய் – 6வார்த்தை தவறிவிட்டாய் – 6

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதி உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்திருக்கும். கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் மற்றும் எனக்கனுப்பிய மெயில் இவற்றின் வாயிலாக உங்க கருத்தினை தெரிந்துக் கொண்டேன். நீங்க ஊகிச்சது சரியான்னு இந்தப்பகுதியைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. உங்களது கமெண்ட்ஸ் மற்றும் அலசல்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 14ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 14

14 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஜெயேந்திரனின் வீட்டில் அனைவரும் பேச முதலில் பூக்கள் கண்காட்சிக்கும், காட்டேஜில்  தேவையான ஏற்பாடுகள் செய்வதாகவும், அடுத்து சம்மர் முடித்து ஜூனில் திருமணம் என கூற விக்ரம் அப்போது ப்ராஜெக்ட் என கூற பின் மீண்டும்