Advertisements

லதாகணேஷின் ‘என் காதல் வானிலே நிலவு நீயடி’ – குறுநாவல்


என் காதல் வானிலே நிலவு நீயடி…..

 

உன்னை காணவே..

கூடாது என்றிருந்தேன்

நானடி….      

மீண்டும் உன்னை கண்டதும்

என் எண்ணம் மறந்து..

என்னை மறந்து

மீண்டும் காதலானேன்

ஏனடி….

 

 

எல்லோருக்கும் வணக்கம்  இவன் என் மகன்  மித்திரன்  இனி இந்த நிறுவனத்தை வழி  நடத்த போவது மித்திரன் தான் , இத்தனை நாட்களாக உங்கள்  ஆதரவு தந்து  என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவரும்  இனி மித்ரனுடன் கரம் கோர்த்து  செயல் புரிந்திட,  உங்களை  அன்புடன் கேட்டு கொள்கிறேன் என்று தனது உரையை முடித்து   அமர்ந்தார்  கேசவ் என்ற கேசவமூர்த்தி அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர்.

 

தனக்கான முன்னுரை வழங்கப்பட்டதும்  மிடுக்காய் எழுந்து நின்ற மித்திரன்  முன் வந்து தனது உரையை   துவங்கினான்.    இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள்  என்ன வேலை செய்தீர்கள் என்று எனக்கு தெரியாது அதை பற்றி  கவலையும் இல்லை இனி என்னிடம் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பதை பொறுத்து தான்,  என் செயல்பாடுகளும் இருக்கும்   சொன்ன பணிகள் சொன்ன நேரத்தில் முடிந்து இருக்கவேண்டும், கால தாமதம் என்பது  என்னை பொறுத்தவரை  சோம்பேறிகளின்  வார்த்தை,  என்று மித்திரன் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவசரமாய் அனுமதி கேட்டு  உள்ளே நுழைந்தாள், மதிநிலா.

 

ஒரு நொடி  இருவரும் தங்களிருக்கும் சூழ்நிலை  மறந்து  ஒருவரை ஒருவர்  பார்த்து கொண்டனர்.   என் நிலா என்று உள்ளம் துள்ள, ஆவலாய் நோக்கியவன்  அவள் முகம் பயத்தில் உறைந்து இருப்பதை  கண்டு, மனம்  பழையதை அசைபோட  இவள்  இங்கு என்ன செய்கின்றாள் என்று  மித்திரன் முகத்தில் கடுமை பரவியது  இவன் தான்  புது முதலாளியா என்று மதிநிலா முகத்தில் அச்சம் குடி கொண்டது.

 

அலட்சியமாய் தலையசைத்து உள்ளே வர அனுமதி தந்தவன் அவள் வந்து இருப்பிடத்தில் அமரும் வரை  பார்வையில் தொடர்ந்தான்,  எதையும் மன்னிக்கும் அளவிற்கு நான் நல்லவன் இல்லை,  செய்த தவறுக்கு தண்டனை தவறாமல் என்னிடம் இருந்து கிடைக்கும்  என்றவன் ஒற்றை  புருவம் ஏறி இறங்க  புரிகின்றதா என்று எச்சரிக்கும் தோரணையில்  கூறினான், மித்திரன். போதும்  மித்திரா வந்த முதல் நாளிலேயே எல்லோரையும் மிரட்டதே என்று கேலி போல கேசவ்  எச்சரிக்கை செய்ய, போலியான  புன்னகையை முகத்தில் நிறுத்தி அனைவரையும் பார்த்து   புன்னகைத்தவன்  மதி முகம் காணும் போது மட்டும் வெளிப்படையாகவே முறைத்தான்.

மித்திரன் பார்வையில் இருந்த  கோபம்,  மதியை மூச்சு திணற வைத்தது  இவன் இன்னும் எதையும் மறக்கவில்லை போல, என்று பயம் தோன்றவும்  மனம் மெதுவாய்   நீ என்ன தவறு செய்தாய் அவனை பார்த்து பயம் கொள்வதற்கு  தவறு செய்தவனே  தயங்காமல் முன் நிற்கின்றான் என்று நினைவுறுத்த ஒரு தலை சிலுப்பளுடன்  அவன் பார்வையை அலட்சியம் செய்தாள், மதிநிலா.

 

அனைவரும் சென்று அவர்கள் வேலையை  பார்க்கும்படி உத்தரவு வர அலுவலக  கணக்காளர் முன்  நின்று இருந்தாள் மதி,  அவரின் உதவியாளர் முதலாளி வந்த முதல் நாளே தாமதமாக வந்து திட்டு வாங்கியதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை  இது தான் உனக்கு  கீழ் உள்ள ஆட்களை வழிநடத்தும் லட்சணமா என்று மித்திரனிடம்  வாங்கிகட்டி கொண்டு வந்த கோபத்தை மொத்தமாய், மதியிடம் இறக்கி வைத்தார்.

 

எப்போதும் அலுவலக  நேரத்திற்கு முன்பே வந்து உன் வேலையை சரியாய்  செய்யும் பெண் இன்று மட்டும் உனக்கு என்ன வந்தது,  என்று கோபமாய் கேட்டு கொண்டு இருக்கும் போதே,  மித்திரன் மதியை அழைத்ததாக  பியூன் வந்து  சொன்னதும் தனது வசை மொழிகளை நிறுத்தி கொண்டு  போ மிச்சத்தை அவர் கொடுப்பார் என்று அனுப்பி வைத்தார்  தலைமை கணக்கர்.

 

மனத்தில் அச்சம் குடி கொள்ள,  மித்திரன் என்று ஒளிர்ந்த பெயர் பலகையை ஒரு முறை வெறித்து பார்த்தவள்,  ஹனுமா  என் செல்ல  வானரமே  இப்போது மட்டும் நீ என்னை காப்பாற்றிவிட்டால்  உனக்கு இரண்டு   வாழைப்பழம் வைத்து பூஜை செய்கின்றேன் அதை உன் தம்பி வானரம் எதற்காவது  கொடுத்து விடுகின்றேன்,காலை வாராமல் காப்பாற்றி விட்டுவிடு, உன் சேட்டையை காட்டிவிடாதே, என்று  மனதில் தனது இஷ்ட தெய்வமான ஆஞ்சினேயருக்கு மனு போட்டவள், மெதுவாய் கதவை தட்டி உள்ளே வர அனுமதி கேட்டாள், அனுமதி கிடைக்கவும்  உள்ளே நுழைந்தவளை, மதிநிலா.. M. Com…  என்று அவளின் பெயரையும் பட்டத்தையும் அழுத்தமாய் உச்சரித்தவன்,  யாரை வாழ்வில் சந்திக்கவே கூடாது என்று உன் ஹனுமனிடம் வேண்டினாயோ அவனே இன்று உன் முதலாளியாய் இருப்பது அதிர்ச்சியாய் இருக்கின்றதா மதிநிலா என்று ஏளனமாய் உதட்டை சுளித்து ஒரு வேலைக்கு வரும் அளவிற்கு உன் தகுதியை உயர்த்தி கொண்டாய் போல, உன் லட்சியம் எல்லாம் நிறைவேற துவங்கி விட்டதா என்றிட, இதுவரை பிடித்து வைத்து இருந்த பொறுமையும் அவனிடம் உண்டான பயமும்,  அவன் ஏளனம் கண்டு ஒதுங்கி கொள்ள, அவளின் இயல்பான குணம் தலைக்காட்டியது ஆமாம் அதில்  உங்களுக்கு என்ன  வயிற்றெருச்சல்  ஏன் உங்கள் தயவுவில்லாமல், எப்படி படித்தேன் என்று பார்க்கின்றீர்களா?  எனக்கும் சொந்தமாய் மூளை உள்ளது, என்று கூறி தலை சிலுப்பி நின்றவளை  கண்டு  கோபம் அதிகமாக, மூளை மட்டுமா உள்ளது திமிர், கொழுப்பு, அகங்காரம் எல்லாமும் மொத்தமாய் உன்னிடம் தான் உள்ளது என்று மித்திரன் பதில் கொடுக்க என்னை பற்றி கூறும் முன் உன் முகத்தை போய் கண்ணாடியில் பார் மித்து அண்ணா  நீ சொன்ன சர்வ லட்சணங்களும் உன் முகத்தில் தான் தாண்டவம் ஆடுகின்றது என்று வெடுக்கென பதில் தந்தாள், நிலா.

 

மதியின் மித்து அண்ணா என்ற அழைப்பில், மித்திரன் கோபம் கொதிநிலைக்கே சென்றது என்னை அண்ணா என்று அழைக்காதே, நான் என்ன உன் உடன் பிறந்தவனா  இல்லை உறவா இந்த நிறுவனத்தின் முதலாளி நீ என்னிடம்  வேலை பார்க்கும் பணியாள், உன் இடம் அறிந்து அந்த எல்லைக்குள் இருப்பது தான் உனக்கு நல்லது, இனி என்னை பெயர் சொல்லியோ முறைவைத்தோ   அழைத்தாய் என்றால்  நான் பொல்லாதவன் ஆகி விடுவேன் என்று மித்திரன் எச்சரிக்க, புதியதாய் தான் மாற வேண்டுமா என்ன ஏற்கனவே அப்படி தானே என்று  தனக்குள் முணுமுணுத்தாள் நிலா, என்ன  என்று மித்திரன் வினவவும் உத்தரவு ஐயா என்று வாயில் கைவைத்து கூறியவளை கண்டு இது வரை இருந்த கோபம் மறந்து, நீ இன்னும் மாறவே இல்லை நிலா,என்றவன் குரலில் கோபத்திற்கு பதில் சொல்ல முடியாத அளவு மென்மை இருந்தது.

 

 

மித்திரன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவள், ஆனால் நீ மாறி இருந்தால்  நன்றாக இருக்கும் மித்து என்று மனதில் நினைத்து கொண்டாள், மித்திரன் பார்வை மேலிருந்து   கீழ் வரை தன்னை அளவிடுவது கண்டு  உடல் கூச நான் கிளம்பலாமா சார் என்று  வினவியவள் குரல்  நடுக்கத்தில் தடுமாற,  என்னை பார்த்தால் பயமாக இருக்கின்றதா மதிநிலா என்றவன், அவன் இடத்தை விட்டு எழுந்து வரவும்   இவ்வளவு நேரம் பேசிய  துடுக்கு தனம் மறைந்து அவளை மீறி கால்கள்  இரண்டு எட்டு பின் எடுத்துவைக்க  அதை கவனித்தவன் அப்படியே நின்று, தீபக்  எப்படி இருக்கின்றான்,  கல்லூரி நாட்களுக்கு பின்  சந்திக்கவேயில்லை  என்று அக்கறையாய்  வினவினான் மித்திரன்.  தீபக் அண்ணன் வெளிநாட்டில் வேலைகிடைத்து சென்றுவிட்டார்  என்று பதில் தந்தவள், அதன் பின் கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்தாள் மதி,  அவள் முகத்தை கவனித்து கொண்டே இருந்தவன், அதில் தெரிந்த பயம் தயக்கம் கண்டு  என்னிடம் என்ன தயக்கம் நிலா  நான் உன் மித்து இல்லையா என்று கேட்க துடித்த மனதை கட்டுப்படுத்தி கொண்டு    சரி நீ கிளம்பு  என்றவன் குரலில்  வெறுமையே  நிறைந்து இருந்தது.

 

 

அவள் சென்றதும்   தனது  இடத்தில் சென்று அமர்ந்தவன்   எவ்வளவு அழகாய் இருக்கின்றாய் நிலா, குழந்தை தனமான  முகம் இன்று குமரி உருவம் கொண்டு   வயதிற்கு ஏற்ற வளங்கள்  நிறைந்த  உன் அழகு என்னை நிலைகுலைய செய்யுதடி.  உன்னை என் வாழ்நாளில் மீண்டும் சந்திக்கவே கூடாது என்று நினைத்து இருந்தேன், விதி உன்னை என் முன் கொண்டு வந்து நிறுத்தி, என் உறுதியை உருக்குலைய செய்கின்றது, நிலா.

 

தொலைவில் இருந்தாலே

உன் நினைவுகளால்

என்னை தொல்லை செய்பவள்

நீ..

அருகில் இருந்தால் உன்னிடம்

என்னை தொலைக்க துவங்கிவிடுவேன்

நான்

 

அதன் பின் என்னுள் எழும் காதல் அலைகள் உன்னை தொட்டுவிட தூண்டும், வேண்டாம் மித்திரா ஒரு முறை  நெருங்கி அனுபவித்தது போதாதா  இயன்ற அளவு அவளை தொலைவில் வைத்திடு  அது தான் உனக்கு நல்லது, என்று மூளை கட்டளையிட  அது காதல் என்னவென்று  அறியாத வயது ஒருவேலை இப்போது என்னை பற்றிய அபிப்பிராயம் மாறியிருந்தால் என்று மனம் வாதிட்டது. தனிமையில் வெகு நேரம், தனக்குள்லேயே  வாதம் புரிந்து தனது முதல் காதல்  நினைவில்  மூழ்கிபோனான், மித்திரன்.

 

மித்திரன் அறையில் இருந்து வந்தவள் முகம் வெளிரி போய் இருக்க, மித்திரன் நன்றாக திட்டி அனுப்பியதாய் நினைத்து அருகில் வந்து ஆறுதல் கூறினர், உடன் பணிபுரிந்தவர்கள்.   மித்திரன் கோபமாய் பேசி இருந்தால் கூட  மதியை  இந்த அளவிற்கு பாதித்து இருக்காது  இயல்பாய் பேச முயன்றது என்னவோ போல அவனை அந்நியனாய்  காட்ட அதுவே இம்சையாய் இருந்தது.

 

மனம் மித்திரன்  கல்லூரி தோற்றத்தையும் இப்போது உள்ள உருவத்தையும் ஒப்பிட்டு பார்க்க விளைந்தது, அப்போதும் நல்ல உயரம் தான் ஆனால் கொஞ்சம் ஒல்லியாக, அளவாய் வளர்ந்த மீசை   இளமை குறும்பு நிறைந்த முகம் அலைபாயும் கண்கள் ஆனால் இப்போது வந்திருக்கும் மித்திரன் முற்றிலும் மாறி ஆண்மைக்கே உறுத்தான மிடுக்கான தோற்றம் அடர்ந்த மீசை, என்னை நெருங்க முயச்சிக்காதே  என்று எச்சரிக்கும் முக பாவம்,  அடுத்தவர் மனம் படிக்கும் கூர்மையான கண்கள், என்று எண்ணிக்கொண்டே சென்றவள்   எல்லாம் மாறி விட்டது அதே போல உன் தவறான எண்ணமும் மாறி இருக்க வேண்டும் மித்து அண்ணா என்று மனதில்   தன் மனதிற்கு மிகவும் நெருக்கமான மித்துவிடம் முறையிட்டு கொண்டு இருந்தாள், மதிநிலா.

 

வேலை நேரம் முடிந்து அவரவர் வீடு நோக்கி செல்ல மித்திரன்  நிலாவை பின் தொடர்ந்து சென்றான்,   தெருமுனை வருகையில்   தனது காரை நிறுத்தி பார்த்து கொண்டு இருந்தவன் அவள் வீட்டின் வாசல் திறந்து  உள்ளே செல்வதை கவனித்து விட்டு   இதழில் புன்னகை சூடிக் கொண்டு தனது வீடு நோக்கி நகர்ந்தான்.

 

வீட்டில் நுழைந்ததும் வாலையாட்டிகொண்டு ஓடி வந்த பைரவ்  பார்த்து என் மணமும் உன்னை போல் மகிழ்வில் தான் துள்ளுகின்றது பைரவ் என்றவன்,  இன்று நான் யாரை பார்த்தேன் தெரியுமா நிலா….. என் நிலா என்று மென்மையாய் அவள் பெயரை உச்சரித்தவன் உனக்கு நியாபகம் இருக்கின்றாதா பைரவ்,  அவளால் தான் நீ இங்கு இருக்கின்றாய் என்று கூறிக்கொண்டே…

 

கல்யாண தேன் நிலா காய்சாத பால்நிலா

நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா ஆ……

 

மனதிற்கு பிடித்த பாடல் வரிகளை  பாடிக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்த  மித்திரனை கண்டு, என்ன அண்ணா இன்று  வழக்கமான சோக கீதம் மீட்டமால் சந்தோசமாய் பாடுகின்றாய் அதுவும் ”கல்யாண தேன் நிலா  சரியில்லையே தப்பாச்சே”என்று கேலி செய்த தங்கையையும் வழக்கத்திற்கு மாறாக தலையில் கொட்டி அழவைக்காமல் செல்லமாய் கன்னம் கிள்ளிவிட்டு போய் அம்மாவிடம் காபி கொண்டுவரச் சொல் வாயாடி  என்றான், மித்திரன்.

 

அம்மா இங்கு வந்து பாருங்கள்  உங்கள் செல்ல மகனுக்கு யாரோ செய்வனை வைத்து விட்டார்கள் போல நான் கிண்டல் செய்தும் என்னை அடிக்காமல் சிரிக்கின்றான், என்று கத்திக்கொண்டே உள்ளே செல்ல திரும்பினாள்,  மிருதனா.

 

கையில்  மாலை  சிற்றுண்டி  கொண்டுவந்த தேவி, ஏய் பொறுமை மீரு என்று அதட்டியபடி  கொண்டு வந்ததை  மித்திரனிடம் கொடுத்து விட்டு  என்ன மித்திரா  அலுவலகத்தில் முதல் நாள் எப்படி இருந்தது என்று அக்கறையாய் வினவ ரொம்ப ரொம்ப…..   நன்றாக இருந்தது என்று கூறிய மகனை விசித்திரமாய் பார்த்தார்  தேவி,  இருக்காதா பின்னே அப்பா ஆரம்பித்த தொழில் இதில் நான் புதிதாய் சாதிக்க என்ன இருக்கிறது என்று இத்தனை   நாள்  மறுத்து கொண்டு இருந்தவனை, கட்டாயபடுத்தி அனுப்பிவைத்தது  தேவி தான்,  முன்பு  மறுத்தவன்  இன்று  மாற்றி பேசுகின்றான் என்றால் வியப்பாய் தானே இருக்கும்.

 

இத்தனைக்கும் மித்திரன் ஒரு முடிவு எடுத்தால் அதை  எளிதில் மாற்றி கொள்பவன் இல்லை  வேறு எத்தனை  யோசனை  செய்தாலும்,  மீண்டும் அவன்   எடுத்த முடிவில் தான் வந்து நிற்பவன்,  பிள்ளை  குணம் அறியாத  அன்னை உண்டோ! இருவரும் தன்னை  வினோதமாய் பார்ப்பது புரிந்து கையில் இருந்ததை ஒரே மடக்கில்  குடித்து முடித்து விட்டு நான் என் அறைக்கு செல்கின்றேன் என்று கூறி பைரவ் பின் தொடர தனது அறைக்கு சென்று கதவை மூடியவன் தனது  மனதின்  கதவு திறந்து, அங்கு நிறைந்து இருந்த நிலாவின் முதல் சந்திப்பை எண்ணிப்பார்க்க துவங்கினான், மித்திரன்.

 

ஐந்து வருடங்களுக்கு முன் கல்லுரியில்  இறுதி ஆண்டு படித்து கொண்டு இருந்தான், யார் வீட்டிற்கும் செல்ல விரும்பாத மித்திரன்,  பைக் ஓட்டி  கீழே விழுந்து காலில் காயம் பட்டு கிடந்த தனது கல்லூரி தோழன் தீபக்கை பத்திரமாய் வீட்டில் விடவேண்டிய  கட்டாயத்தில்  அன்று  தீபக் வீடுவரை சென்றான்.

 

வாசலில் நுழையும் போதே தீபக்கின் அம்மா கங்கா குரல் வாசல் வரை கேட்டது, அறிவு இருக்கா உனக்கு பக்கத்து தெருவில்  பசும் பால் வாங்கி வர சொன்னால் வரும் வழியில் நாயை பார்த்தேன் பேயை பார்த்தேன் அதற்கு கொடுத்து  விட்டேன் என்று கதை அளந்து கொண்டு இருக்கின்றாய் என்று கத்த, அவருக்கு தூபம் போடுவது போல தீபக் தங்கை பேசினாள் “இவள் சொல்லும் கதையை நீங்கள் நம்புகின்றீர்களா” எனக்கு என்னவோ இவள் தான்  வரும் வழியில் குடித்து விட்டு பழியை நாய் மீது  போடுகின்றாள் என்று நினைக்கின்றேன் என்றாள்,  நந்தனா.

 

அய்யோ.. நந்தாஅக்கா உண்மையில்  நாய்குட்டிக்கு தான் கொடுத்தேன், பாவம் அதை யாரோ அடிச்சுட்டாங்க போல கண்ணெல்லாம் கண்ணீர் அது அம்மா கூட பக்கத்துல இல்லை தெரியுமா என்று அப்பாவியாய் பதில் தந்து கொண்டு இருந்தால், மதிநிலா.

 

அம்மா என்று தீபக் உள்ளே நுழையவும், அவன் காலில் காயம் கண்டு அப்போதைக்கு அந்த பிரச்சனையை முடித்து வைத்துவிட்டு, தீபக்கிடம் ஓடி வந்து என்ன நடந்தது என்று விசாரித்து விட்டு கைத்தாங்களாய்  அவன் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்து விட்டு அவனை கவனிக்க துவங்கினார்.

 

கங்கா  தனது செல்ல மகனை கவனிப்பதில் முழு கவனத்தையும்  செலுத்திட, நந்தனா பார்வை மட்டும் அவ்வப்போது தன்னை தொடர, அங்கு நிற்க தயங்கியபடி, அறையை விட்டு வெளியேறிய மித்திரன். பூஜை அறையில் கண்ணீருடன்  வேண்டிக்கொண்டு இருந்த மதிநிலாவின். கண்ணீரை கண்டு மனம் துடிக்க அவளிடம் சென்று,  தேறுதல் சொல்ல  நினைத்து அவளை நோக்கி சென்றான்.

 

மதி அருகில் சென்றதும் அவள் முணுமுணுப்பு தெளிவாய் காதில் விழுந்தது அந்த நாய்க்குட்டி பாவம், ஹனுமா.. அதுக்கு அம்மா கூட பக்கத்துல இல்லை,  என்னை மாதிரியே ஆனால்  எனக்காவது சாப்பாடு போட, ஒரு சித்தி கொடுத்த அதுக்கு அதுவும் இல்லை பாரு தீபக் அண்ணாவிற்கு அடி பட்டதும் பத்திரமாய் பார்த்துக் கொள்ள சித்தி இருக்காங்க அது மாதிரி தானே, அந்த நாய்குட்டிக்கும் வலிக்கும் அதுக்கு யாரும் இல்லையே என்று  அவள் வயதிற்கு ஏற்ற முதிர்ச்சியோ பக்குவமோ இல்லாமல் குழந்தை போல வேண்டுதல் வைத்து கொண்டு இருந்தாள், மதிநிலா.

 

ஏய்! மதி முட்டாளே வந்தவர்களுக்கு  குடிக்க எதுவும் கொடு என்று  ஏவல்குரல் கேட்டு கண்விழித்தவள்  மித்திரன் நிற்பதை கண்டு,  வெகுளித்தனமான புன்னகை சிந்தி உங்களுக்கு காபி பிடிக்குமா டீ பிடிக்குமா அண்ணா, என்று தலையாட்டி வினவிட  குழந்தை தனமான அழகில் ஈர்க்க பட்டவன்.

 

எனக்கு எதுவும் வேண்டாம்  உன் பெயர் என்ன?  என்ன படிக்கின்றாய் என்றான்  மித்திரன். நான் மதிநிலா அண்ணா பிளஸ்டு படிக்கின்றேன் நீங்கள் தீபக் அண்ணா கூட படிக்கின்ரறீர்களா  என்றவள்,  இருங்கள் உங்களுக்கு குடிக்க காபி கொண்டு வருகின்றேன் என்று உள்ளே சென்றாள்.

 

அவள் பேச்சும், செயலும் அதிகம் வெளி உலகம் அறிந்திடாத அவளின் அறியாமையை காட்டியது.  அதன் பின் அவள் கொண்டு வந்த காபியை குடித்து விட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, கிளம்பிச்சென்றான்.  செல்லும் வழியில் ஒரு குட்டி நாய்,  காலில் காயத்துடன் நடக்க முடியாமல் செல்வதை கண்டவன் இது தான் அந்த பெண் சொன்ன நாய்க்குட்டி போல என்று  அதை தூக்கி தனது பைக் முன் வைத்துக்கொண்டு,  மருத்துவமனைக்கு சென்று அதன் காயத்திற்கு மருந்திட்டு தன்னுடனே வைத்து கொண்டான் மித்திரன்.

 

இது நடந்து இரு  தினங்கள் இருக்க, தீபக்கும் கல்லூரிக்கு வராமல்  இருந்தான், மதிநிலாவை காணும் ஆவல்  மித்திரனை தீபக் வீட்ற்க்கு அழைத்து சென்றது. தீபக் ஹாலில் டீவியில் மூழ்கி இருக்க அவன் அருகில்  நின்று கெஞ்சி கொண்டு இருந்தால், மதிநிலா.

 

“அண்ணா ப்ளீஸ் அண்ணா” இந்த கணக்கு மட்டும் சொல்லி கொடுங்கள் ஒன்றுமேபுரியவில்லை  என்று விட்டால் அழுதுவிடுவாள் போல, கெஞ்சி கொண்டு இருக்க,   “போ முட்டாள்” எப்போதும் எதையாவது தூக்கி கொண்டு, இதை சொல்லிக்கொடு அதை சொல்லிக்கொடு என்று  எரிச்சல் பட்டு கொண்டு இருந்தான், தீபக்.

 

மித்திரனை கண்டதும் வா மித்திரா என்று வரவேற்றவன்,   போய் சாப்பிட கொண்டுவா என்றிட, அப்பதான் சொல்லி தருவீங்களா அண்ணா என்றாள், மதிநிலா. “ம்… பார்ப்போம் பார்ப்போம்” என்று அனுப்பி வைத்தான்  தீபக்.

 

மித்திரனுக்கு மதிநிலா பற்றி அறிய  ஆவல் எழுந்தது, மெதுவாய் தீபக்கிடம் பேச்சு கொடுக்க துவங்கினான். “இது யார்” என்று வினவ,  “அது ஒரு அனாதை” அம்மா  பாவப்பட்டு வீட்டில் இருக்க இடம் படிப்பு கொடுத்து  வளர்த்து கொண்டு  இருக்கின்றார்கள்.  நான்கு ஐந்து வருடமாக இங்கு தான் இருக்கின்றாள்,என்றான் தீபக்.

 

உனக்கு நெருங்கிய சொந்தம் போல அண்ணா என்று அழைக்கின்றாள் என்று மேலும் விசாரணையை தொடர்ந்தான், மித்திரன்.  நெருங்கியது என்று இல்லை, அம்மாவின் தூரத்து சொந்தம் கிராமத்தில் இருந்தார்கள், இவள்  அம்மா அப்பா காதல் திருமானமாம்! சொந்த பந்தம் யாரும் சேர்த்துக்கொள்ள வில்லை,  எங்கேயோ போனபோது,  விபத்தில் இருவரும் காலி, இது மட்டும் பிழைத்து வந்து எங்கள் உயிரை எடுக்கின்றது,  என்று சலித்துக்கொள்ள மித்ரனுக்கு மதிநிலா மீது இரக்கமும், அவளை இழிவாக பேசிய தீபக் மீது அளவில்லா கோபமும் வந்தது டீவியில் கவனமாய் இருந்த தீபக், மித்திரனின்  முக மாற்றத்தை கவனிக்காமல் போனான், இது கோபத்தை காட்டும் இடமும் இல்லை, நேரமும் இல்லை  என்று புரிந்து தன்னை அடக்கி கொண்டு அமைதியாய்  இருந்தவன்,  மதிநிலா வருவதை கண்டு முகத்தை சீர் செய்து கொண்டு நிலா உனக்கு என்ன சந்தேகம் என்னிடம் கேள்  நான் சொல்லி தருகின்றேன்  என்று அழைக்க,

உண்மையாகவா அண்ணா என்று முகம் மலர்ந்தவள், “தேங்க்ஸ் அண்ணா” என்று வேகமாய் சென்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து மித்திரன் முன்  மண்டிட்டு  அமர்ந்தாள்  நிலா.  கீழே குனிந்து  நிலாவின் முகம் பார்த்தவன்,  அவள்  செயல்கள்  வெகுளித்தனமாய்  குழந்தை போல காட்டினாலும்,  அவள் உடல் அங்கங்கள் வயதிற்கு ஏற்ற  செழுமைகள் கொண்டு இவள் குழந்தை அல்ல  குமரி என்று சொல்லாமல் சொன்னது.  தனது வயதிற்கு  ஏற்ற படி  மித்திரன் மனம் சலனப்பட,  அது  தவறு என்று உணர்ந்தவன்  வேறு புறம் திரும்பிக்கொன்டு  நீயும் மேலே ஏறி உட்கார்  நிலா என்று தடுமாறிய படி கூறினான், மித்திரன்

 

அவன் குரலில் உண்டான மாற்றத்தையும்  முக திருப்பலையும் கூட உணராமல் மேலே உட்கார்ந்தால் சித்தி திட்டுவார்கள் அண்ணா  என்று நிலா  வருத்தமாய் கூறிட.

 

மித்திரனும் கீழ்  இறங்கி அமர்ந்து கொண்டு சொல்லி தர துவங்கினான்,  டேய் மித்ரா இவளுக்கு எல்லாம் இரக்கம் காட்டி சொல்லித்தர  துவங்கினாய் என்றால், உன்னை விடாமல் தொந்தரவு தான் செய்வாள் ஆரம்பத்தில் நானும் பாவப்பட்டு இவளிடம்  நன்றாக தான் நடந்து கொண்டேன்,  ஆனால் இவள்  இங்கு ஒரு வேலைக்காரி என்பதை மறந்து “அண்ணா அண்ணா” என்று உரிமை  கொண்டாட துவங்கினாள் “அதனால் தான்  துரத்தி அடிக்க துவங்கினேன்  என்று தீபக் கூறிட”

 

முகம் வாடி  “சாரி அண்ணா என்று எழுந்து செல்லமுயன்ற  மதியின் கை பற்றி அமர்த்தியவன் அப்படி இவள் வந்து என்னை தொந்தரவு செய்தால்  அதை நான் சந்தோசமாக தான் எடுத்து கொள்வேன்” என்று பதில் தந்து விட்டு  உனக்கு என்ன சந்தேகம் கேள் என்று  ஒவ்ஒன்றாய் சொல்லித் தர துவங்கினான்  மித்திரன் அதற்கு மேல் உன் இஷ்டம் என்று மீண்டும் டீவியில் கவனத்தை செலுத்தினான், தீபக்.

 

நேரம் கிடைக்கும் போது எல்லாம், மித்திரன் தீபக் வீட்ற்கு சென்று நிலாவின்  பாடத்தில் உள்ள சந்தேகங்களை சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தான், அப்போது நந்தனா  கல்லுரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தாள். மிருத்தன் வரும் போது  வீட்டில் இருந்தால் அவளும்  எதையாவது. தூக்கி கொண்டு சந்தேகம் கேட்கின்றேன் என்று வந்து  நிலாவுடன்  அமர்ந்து விடுவாள், அப்படி வந்தாளென்றால் நிலாவிற்கு ஏதாவது வேலை சொல்லி படிக்க விடாமல்   தொந்தரவு செய்து கொண்டே இருப்பாள். கங்கா வேலை சொல்லி  நிலா விலகி செல்லும் நேரம் வேண்டும் என்றே சந்தேகம் கேட்பது போல,  அருகில் வந்து  நெருக்கத்தை  உண்டாக்க முயல்வாள்.

 

நந்தனா செயலில் முகம் சுருங்க நிலா எழுந்து செல்லும் போது  அவளை  கண்டிப்புடன் தடுத்து விட்டு, “ நந்தனா… அவளுக்கு தேர்வு  நெருங்குகின்றது நீ கல்லூரி வரை வந்து விட்டாய், நிலாவும்  நன்றாக படித்து உன்னை போல முன்னேற வேண்டாமா” என்று புகழ்வது  போல அவளின் செயலை மறைமுகமாய்  தடுத்து நிறுத்தினான், மித்திரன்.

 

 

அதன் பின் மித்திரன் வருகை, அதிகரிக்க துவங்கியது யார் வீட்டிற்கும் அதிகம் செல்லாத   மித்திரன்  நடவடிக்கை தீபக்கை யோசிக்க வைத்தது, ஒரு வேலை நந்தனவிற்காக வருக்கின்றானா என்று சிறு சந்தேகம் வர, எது எப்படி இருந்தால் என்ன “ கல்லூரியில் ஒரு கெத்துடன் சுற்றி திரியும் மித்திரன்” தன்னிடம்  நெருங்கி பழகுவது  தனக்கும் அந்த தகுதி கிடைத்து விட்டதாக எண்ணி, அமைதியாய் இருந்தான், தீபக்.

 

 

மித்ரனை பார்த்தாலே தெரியும் அவன் வசதியும்,  பிறரை கவரும்  தோரணையான நிமிர்வும், அவன் வருகையை தடுக்கும் என்னத்தை கங்காவிற்கு தரவில்லை,  நந்தனாவிற்கு நல்ல வாழ்கை அமைந்தால் அதுவே போதும் என்று மித்திரன் வரவை ஆதரிக்கவே  செய்தார், மித்திரன் வந்ததும் மொட்டை மாடிக்கு நந்தனா, நிலா இருவரும் தங்கள் பாட புத்தகங்களை  எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவர்.

 

தனது அழகில் கர்வம் கொண்ட நந்தனாவோ மித்திரன் தனக்காக  தான் வருகின்றான் என்று முழுமையாய் நம்ப துவங்கினாள்,  முதல் நாள் பார்த்த போது  விலகி சென்றவன் இன்று தானே நெருங்கி வருவது எண்ணி மகிழ்ந்தவளாய், ஒவ்வொரு நாளும் மித்திரனை எதிர்பார்க்கவே செய்தாள், நந்தனா.

 

ஒவ்வொரும் வேறு எண்ணத்தில் இருக்க,  “மித்திரன் கவனம் எல்லாம் நிலாவின் மீதே இருந்தது” முதலில் அவள் குழந்தை தனத்தில் ஈர்க்க பட்டு இரக்கமாய் பார்த்து கொண்டு இருந்தவனுக்கு,  அவளுடன் உண்டான நெருக்கம்,  வயதிற்கு ஏற்ற வேலையை காட்டிட  காதலாய் உருமாறியது. பள்ளி படித்து கொண்டு இருக்கும் பெண்ணிடம் சென்று காதல் என்று சொல்ல மித்ரனின் பக்குவப்பட்ட மனம் தடுத்தது, அவளும் கொஞ்சம் வளர்ந்து உலக அறிவு பெறும் வரை தனது காதலை மறைத்து வைக்க முடிவு செய்தான்

 

 

ஒரு நாள் நிலா மட்டும் இருக்க, நந்தனா தோழியை பார்க்க வெளியில் சென்று இருந்தாள்  புத்தகத்தில் பார்வையை பாதித்து புரியாத  ஆங்கில வரிகளுக்கு விளக்கம் கேட்டு, அதை  குறித்து கொண்டு இருந்தாள், நிலா.

 

“அந்த  நாய்குட்டியை அதன் பின் பார்த்தாயா நிலா”  என்று மித்திரன் கேள்வியாய் நிறுத்த,  உதட்டை சுளித்து இல்லை என்று மறுப்பாய் தலையாட்டினாள் நிலா.  பாவம்  வலியோடு  இருந்தது என்றவள், ஆனால்  ஹனுமன் “என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார் தெரியுமா” யாரோ ஒருத்தர் அவர் பைக்கில் தூக்கி கொண்டு போனதாக பக்கத்து டீக்கடைக்கார அண்ணா சொன்னார்.

 

இப்போது தான்  ஹனுமனுக்கு நான் சொன்னது கேட்க துவங்கி உள்ளது  இனி  பாருங்கள் என் வேண்டுதல் ஒவ்ஒன்றாய் நிறைவேற்றி விடுவார்,  என்று  வெகுளியாய் பதில் தந்தாள், நிலா.

 

“நீ என்ன கேட்டு அவர் செய்யவில்லை”  என்று கேலி போல் மித்திரன் வினவ…

 

நிறைய கேட்டு நடக்கவே இல்லை, மித்து அண்ணா அப்பாவிற்கு விவசாயம் பண்ண மழை வேணும், அம்மாக்கு ஆப்ரேஷன் பண்ண பணம் வேணும், அப்பா, அம்மா  மேல கோபமா  இருக்குற மாமா  என்கூட பேசணும், என்னை வந்து ஊருக்கே கூட்டிட்டு போகணும்,. என்றவள் ஒரு நொடி தயங்கி கண்ணில் நீர் திரையிட “எனக்கு.. இங்க இருக்க பயமா இருக்கு அம்மா அப்பா என்கிட்டவே   திரும்பி  வந்திட வேண்டும்”  என்று நிறைய அவர் நிறைவேற்றவே இல்லை என்றவள், கண்ணீரை துடைத்து கொண்டே இனி பாருங்கள்  அனுமனுக்கு காது கேட்க தொடங்கிவிட்டது இனி  நான் கேட்டதை  எல்லாம் எனக்கு தருவார்  என்று  கூறியவள்  குரலில் இருந்த குழந்தை தனமான நம்பிக்கையும்  மித்திரனையும் கலங்க வைத்தது.

 

கனத்த மனதுடன்,   நிலாவின் நிறைவேறாத ஆசையை கேட்டு கொண்டு இருந்தவன் .இனி . நிலாவின் ஆசையை நிறைவேற்றுவது   தனது கடமை என்ற எண்ணம் வலுப்பெற்றது

வேறு  என்னென்ன மனு போட்டு வைத்து உள்ளாய் உன் ஹனுமனிடம்  என்று ஆர்வமாய் வினவினான் மித்திரன்.

 

“பெருசா ஒன்றும் இல்லை அண்ணா”    “பசி எடுத்ததும் சாப்பிடணும், புது டிரஸ்   எனக்கென்றே எடுத்து, முதன் முதலில் நான் தான் போட வேண்டும்  நல்லா படித்து வேலைக்கு போய்”  என்னை மாதிரி அப்பா அம்மா இல்லாமல்  இருக்கின்றவர்களையும் படிக்க வைக்கணும்  அவ்வளவு தான் என்று  வெகுளியாய் சிரித்தவளை,   அள்ளி அணைத்து கொண்டு”  இனி உன் கனவை எல்லாம் நான் நிறைவேற்றி தருகின்றேன், என்னுடனே வந்து விடுகின்றாயா” என்று கேட்க துடித்த மனதை கட்டுப்படுத்தி கொண்டு நிலா கைகளை  பற்றி தனது கைக்குள் வைத்து கொண்டவன், இனி உனக்கு எல்லமுமாய் நான் இருப்பேன் என்று செயலில் உணர்த்த முயன்றான்,  மித்திரன்.

 

என்ன அண்ணா, என்று புரியாமல் விலகி அமர்ந்தவள் தலையில் கைவைத்து செல்லமாய் ஆட்டி விட்டவன் “இனிமேல் என்னை அண்ணா என்று அழைக்காதே” மித்து என்று மட்டும் சொல், என்று சிரித்தான் மித்திரன்.

 

வயதில் மூத்தவங்களை பெயரை சொல்லி அழைக்க கூடாது அண்ணா தப்பு அம்மா சொல்லி இருக்காங்க என்றவள், மூக்கை பிடித்து  இழுத்து “அப்படியென்றால் மித்து மாமா” என்று கூப்பிடு என்று கண்ணால் சிரித்தான், மித்திரன்.

 

போங்க அண்ணா உங்களுக்கு எப்போதும் விளையாட்டு தான்  இந்த கணக்கு விடை  சரியாய் வரவே இல்லை என்று புத்தகத்தை  நீட்டிட, “கணக்குக்கு மட்டுமா விடை தெரியவில்லை என்  காதலுக்கும்  தான் விடை தெரியாமல் தவிக்கின்றேன்” என்று தனக்குள் கூறிக் கொண்டு  நிலாவின் சந்தேகங்களை தீர்க்க துவங்கினான், மித்திரன்.

 

மித்து வந்து ரொம்ப நேரம் ஆனதா,என்று கொஞ்சும் குரலில்   என்னை காணாமல் தவித்து போய் இருப்பீர்கள் என்று  மிருத்தன் அருகில்  அமர்ந்தாள்,   நந்தனா.  ஏய் உன்னை அம்மா இரவு  உணவு ரெடி பண்ண சொன்னார்கள் போய் அந்த வேலையை பார்  வீணாய் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு  என்று நிலாவை  அங்கிருந்து அகற்றியவள், மித்ரனின் அருகில் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டு “மித்து மாமா” என்று அழைத்து கன்னம் தொட்டு திரும்பியவள்,  “அந்த பட்டிக்காட்டிடம் என்ன பேச்சு, என்னிடம் பேசுங்கள்  இனிக்க இனிக்க காதல் கதை  பேசுவோம்” என்று  மித்திரன் கை பற்றி தனது கன்னத்தில் வைத்து அழுத்தி கொண்டவள், காதலாய் பார்க்க,  கையை வேகமாய் உருவிக் கொண்டு  என்ன உளருக்கின்றாய்   நான்  “உன் அண்ணனின் நண்பன் என்னை நீ அண்ணா என்று தான் அழைக்க வேண்டும்” என்று கட்டளை  போல் கர்ஜித்தவன்,   “இனி ஒரு முறை  இது போல் பேசிக்கொண்டு என்னிடம்  நெருங்க முயலாதே”, எல்லா நேரமும் நான் பொறுமையாய் சொல்லிக்கொண்டு இருக்க மாட்டேன் என்று எச்சரித்தவன், அவ்விடம் விட்டு நகர முயல  அவன் பாதையை  மறித்த படி உளறவில்லை, மித்து மாமா  “நான் உங்களை காதலிக்கின்றேன்.. உங்களை கண்ட நாளில் இருந்து உங்களை மட்டுமே நினைத்து கொண்டு இருக்கின்றேன்” என்றிட,    பைத்தியமா நீ.. என் நண்பனின் தங்கை எனக்கும் தங்கை போல தான்  வழியை விட்டு விலகு  என்றான்  மித்திரன்.

 

நான் தங்கை போல என்றால் “அந்த மதிநிலா  என்ன முறையாம்” அவளுக்கும் தீபக் அண்ணன் தானே,  அப்படியென்றால் நானும் நிலவும் ஒரே மாதிரி தானே என்று ஏளனமாய்  வினவினாள், நந்தனா.

 

“எனக்கு  நீயும்  நிலாவும் ஒன்று இல்லை என்றுமே என் நிலாவின்  இடத்தை  வேறு யாருக்கும் கொடுக்கவும் மாட்டேன்”   என்று உறுதியாய் பதில் தந்தான் மித்திரன். தன்னை விடுத்து ஒருவன் வேறு பெண்ணை பார்ப்பதா அதுவும்  தனக்கு கீழ் உள்ள வேலைக்காரியை என்று கோபம் தலைக்கு ஏற, உனக்கு என்ன பைத்தியமா “அப்படி அந்த நிலாவிடம் என்ன உள்ளது என்று இப்படி மயங்குகின்றாய், நீ காதலை சொன்னால்  புரிந்து கொள்ள கூட தெரியாத முட்டாள்”  என்றவள் அதனால் நீ உன் முடிவை மாற்றிக்கொண்டு என்னை காதலித்து விடு என்று மீண்டும் நெருங்க முயல அருவருப்பாய் முகம் சுருங்கியவன்,  “ நீ பேசவில்லை உன் வயதும் திமிரும் பேச வைக்கின்றது”  என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய நந்தனா விழியில் இருந்து கண்ணீர் வரவும், கோபத்தை அடக்கி கொண்டு,  வயது கோளாறு அதானல் தான் இப்படி நடந்து கொண்டாய்,  “இங்கு  நடந்ததை  மறந்து விடு  நானும் யாரிடமும் சொல்ல மாட்டேன்  நீயும் சொல்லாதே” வெளியில் தெரிந்தால் உனக்கு தான் அவமானம்  என்றவன், நந்தனாவை சுற்றி கொண்டு வெளியேறி சென்றான்.

 

நந்தனா நடந்துகொண்ட முறையில் மீண்டும்  அங்கு  சென்று அவள்  முன் நின்றால் அவளுக்கு தர்மசங்கடமாய்  இருக்கும்,  அவளுக்கும் தன்னையும் அன்று நடந்ததையும்  மறக்க அவகாசம் வேண்டும் என்று  சில தினங்கள் தீபக் வீடு செல்வதை தவிர்த்தான் மித்திரன்.

 

தீபாவளி சமயம், புது துணி எடுக்க கடைக்கு சென்றவனுக்கு, நிலாவின் ஆசை நினைவு வர  அவளுக்கும் புது துணி எடுத்து கொடுக்க எண்ணம் வந்தது  “நிலாவுக்கு பொருத்தமான நிறத்தில் தனக்கு பிடித்த  விதத்தில்” உடை தேர்வு  செய்தான் மித்திரன்.  அளவு சரியாய் இருக்குமா இல்லையா என்று கூட அப்போது மித்திரன் யோசிக்கவில்லை, அதை உடனே நிலாவின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று ஆவலாய்  தனது தயக்கத்தை மீறி  நிலாவை தேடி சென்றான், மித்திரன்.

 

கதவை முழுதாய் திறக்காமல்,  வீட்டில் யாரும் இல்லை எல்லோரும்  வெளியில் சென்றுள்ளதாக பதில் தந்தவளிடம், “ நான் பார்க்க வந்த நீ இருக்கின்றாய்,  வேறு யார் வேண்டும்   எனக்கு”  என்று  கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்ற மித்திரன்.

 

நிலாவின் கையில் துணிப்பையை கொடுக்க, அதை பிரித்து கூட பார்க்காமல்  அமைதியாய்  நின்று இருந்தவள், மௌனம்  புதிதாய் புதிராய் இருக்க,  அவனே அதை பிரித்து அவள் தோள் மீது வைத்து காட்டி “நன்றாக இருக்கின்றதா” நிலா.. உனக்காக தான்  வாங்கினேன், உன் நிறத்திற்கு  பொருத்தமாய் இருக்கிறது,பார்.  இதை “நீ உன் சரியான அளவிற்கு  தைத்து  போட்டு கொண்டு தேவதை போல என் முன் நின்றாய் என்றால்  அன்று  முழுவதும் உன்னை ரசித்து கொண்டே இருப்பேன்” என்று  தன்னை மறந்து கிறக்கமாய் கூறியவன் காதலாய் பார்த்திட,  அறிமுகம் இல்லாத புது  மனிதரை பார்ப்பது போல  அந்நியமாய் பார்த்த நிலா   விலகி நின்று, எனக்கு செய்வதற்கு என் சித்தி குடும்பம் இருக்கிறது “நீங்கள் யார்  எனக்கு”  என்று கோபமாய் கத்தினாள், நிலா.

 

ஷ்  கத்தாதே நிலா யாரும் பார்த்தால் தவறாக நினைப்பார்கள்,  என்னாயிற்று “உனக்கு… ஏன் இவ்வளவு கோபம்,  என்னையே   யார்  என்கின்றாய் உன் மித்து நிலா”  பாடம்  சொல்லிக்கொடுக்க வரவில்லை என்று கோபமா, சரி விடு இனி தவறாமல் வந்து உனக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றேன், என்று அவள் தோள்களில் கை போட்டு கொண்டு  மித்திரன் சமாதான படுத்த முயல,  “கையை எடுங்கள் உங்களை எல்லாம்   நண்பன் என்று நம்பி வீட்ற்குள் விட்டார் பாருங்கள்”  தீபக் அண்ணா அவர் நம்பிக்கை வீணடித்து “உங்கள் கேடு கெட்ட புத்தியை காட்டி விடீர்களே”,  ஒழுங்காய் இங்கிருந்து வெளியில் போங்கள், என்று கோபமாய் நிலா  பேசிட,

என்ன நடக்கின்றது என்று புரியாமல்,   குழம்பிபோனான், மித்திரன்.

 

எப்போதும் சாதுவாய்,  வெகுளியாய் பேசும் தனது நிலா இன்று கோபமாய் பார்ப்பதை தாங்கி கொள்ள முடியாமல், “நிலா.. நீ என்னை தவறாக புரிந்து கொண்டாய் கண்ணம்மா”, நான் உன்னை காதலிக்கின்றேன்,  இது என் காதலை சொல்ல சரியான தருணம் இல்லை என்று தான் அமைதியாய் இருந்தேன்,   என்று  தன்னை  விளக்கி கொண்டே நெருங்கி அவள்  கன்னத்தை இரு கைகள் கொண்டு பற்றி கொண்டவன்,  “என் காதல் நிஜம்டா நிலா” என்று கண்களில் காதலை நிறைத்து கொண்டு ஏக்கமாய் பார்த்திட,  நீ ஒருவன் மட்டும் தான் என்னிடம் உண்மையான அன்புடன் பழகுகின்றாய்  என்று சந்தோசமாய் இருந்தேன், “ கடைசியில் நீயும் சுயநலமாய் தானே நடித்து இருக்கின்றாய்”,  இனி  எனக்கு என்று  யாருமே இல்லையே யார் என்னிடம் அக்கறையாய் பேசுவார்கள், யார் எனக்கு பாடம் சொல்லி தருவார்கள் மித்து அண்ணா என்று  தன்னை மீறி விரக்தியாய் புலம்பினாள், நிலா.

 

நிலா  “ நான் இருக்கின்றேன், உனக்கு என்றுமே நான் இருப்பேன்” என்றவன்,  அண்ணா என்று மட்டும் அழைக்காதே….. அதை என்னால் தாங்க முடியவில்லை  “நான் உனக்கு  அப்பா,அம்மா, தோழன்,  எல்லாமுமாக நான் இருக்கின்றேன்”,  அண்ணன் என்று மட்டும் சொல்லி என் காதலை தவிர்க்காதே, என்னால் அதை தாங்கி கொள்ள முடியாது என்று உணர்ச்சிவசப்பட்டு  பேசிக்கொண்டே, அவள் இதழில்  இதழ் ஒற்றி  முத்தமிட்டவனை தனது பலம் முழுவதையும் திரட்டி, தள்ளியவள் “கேட்க ஆள்  இல்லை அனாதை  என்று தானே, என்னிடம் அத்துமீற பார்கின்றாயா, காதல் என்று  கதை சொல்லி என்னை ஏமாற்ற பார்கின்றாயா”.,என்று ஆற்றமையுடன் வினவினாள் நிலா.

 

வெறுமையாய் சிரித்தவன்,  “எல்லாவற்றையும் இழந்து  இருப்பவர்களுக்கு, உண்மையாக அன்பு காட்டினால் அது கூட நடிப்பாய் தான் தெரியும் போல”, என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல்  வெளியேறி சென்றான்.  அதன் பின் இயன்ற அளவு, தீபக் வீட்ற்கு செல்வதை தவிர்த்தவன் நிலாவை காண முடியாமல்,  தவிக்க துவங்கினான்  நிலா பால் வாங்க வெளியில்  செல்லும் நேரம்  வழியில் பார்த்து பேச முயல்வான், ஆனால் நிலாவோ கண்டும் காணாமல்  விலகி சென்று விடுவாள், வெளி இடத்தில் மற்றவர்கள்  ஏதாவது நினைப்பார்கள் என்று தயங்குகின்றாள் என்று சில முறை முயன்று பார்த்து அவள் விலகி செல்வதை தாங்க முடியாமல்  வழிமறித்து பேச முயன்றான், மித்திரன்.

 

கொஞ்சம் நான் பேசுவதை காது கொடுத்து கேள் நிலா, “அந்த வீட்டில் யாருக்குமே உன் மீது அக்கறை இல்லை, மதிப்பு  இல்லாத இடத்தில் நீ இருக்க வேண்டாம்” என்னுடன்  வந்து விடு     நீ விரும்பியதை படி, நான் படிக்க வைக்கின்றேன்,  என் வீட்டில் யாரும் உன்னிடம் மரியாதை குறைவாக நடக்க மாட்டார்கள்.  நீ ராணி மாதிரி இருக்கலாம், என்று  அவள் கை பற்றி மனதில் உள்ளதை  மறைக்காமல் கூறிக்கொண்டே சென்றான், மித்திரன்.

 

முதலில் என் கையை விடுங்கள்    “என்ன பேசுகின்றோம் என்று புரிந்து தான்   பேசுகிண்றீர்களா”  என்  சொந்த பந்தங்களை விட்டு,  எந்த நம்பிக்கையில் உங்களுடன் வருவது  “நீங்கள் யார் எனக்கு, உங்களை பார்த்தாலே பயமாய் இருக்கின்றது, எந்தளவிற்கு உங்களிடம் பாதுகாப்பை உணர்த்தேனா,  அதை விட பல மடங்கு  இப்போது  பயத்தை உணர்கின்றேன்”, என்று  கையை விலக்கி கொண்டவள்  இனியும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்,  இனி என் வாழ்நாளில் உங்களை சந்திக்காமல் இருப்பது தான்” என் முதல் வேண்டுதலாக இருக்கும்”  என்று  நிலா பேசிக்கொண்டு இருக்கும் போதே….” ஒரு பொண்ணு தனியா போக கூடாது  உடனே வம்பு செய்ய வந்து விடுவார்கள்” என்று இருவர்  மித்திரனை நெருங்க, அதை கண்டும் காணாமல் அங்கிருந்து  விலகி சென்று விட்டால், நிலா.

 

உனக்கு என்ன மனதில் ஹீரோ என்று நினைப்பா, என்று  மித்திரன் சட்டையில் கை வைக்க,  அருகில் இருந்த கடைக்காரர் “அட விடுங்கப்பா இந்த பையனை பார்த்தால் வம்பு செய்பவன் போலவா இருக்கிறது”  அந்த  பெண்  வந்து காப்பாற்றுங்கள் என்று உங்களிடம் வந்து நின்றாளா, என்று  நியாயம் பேசி  “ நீ போ தம்பி நீ பேசியதை நான்  கேட்டுக்கொண்டு தான் இருந்தேன்”  மதி  பொண்ணு  நல்ல குணம் தான் கொஞ்சம் நன்றி உணர்ச்சி அதிகம்  அதான் அவர்கள் அவளுக்கு செய்யும் கெடுதல் அவள் கண்ணுக்கு தெரியவில்லை, ஒரு நாள் உன் மனம் புரிந்து கொள்வாள்  என்று அக்கறையாய் பேசியபடி… கசங்கி இருந்த சட்டையை சரி செய்து விட்டு  சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்.  ஆனால் மித்திரனுக்கு மனம் ஆறவில்லை இருவர் வந்து  தனது சட்டையை பிடித்து அடிக்க வரும் போதும். கண்டும் காணாமல் சென்றாள் என்றாள், “எனக்கு என்ன நடந்தாலும் அவளுக்கு கவலையில்லை”  என்று   வருத்தம்  நிலாவின் மீது கோபமாய் மாறியது,  பிடிக்கவில்லை என்றால்  சொல்ல வேண்டியது தானே  அதை விடுத்து ஏதோ  பொறுக்கியை பார்ப்பது போல அவமான படுத்துவது  மித்திரன் தன்மானத்தை  உசுப்பியது.   அவளை உண்மையாய் காதலித்ததுக்கு  தனக்கு கிடைத்த அவமரியாதை எண்ணி துடித்து போனவன், அதன் பின் அவளை சந்திக்க  நினைத்தது இல்லை.  எங்கு இங்கேயே  இருந்தால், தனது தன்மானத்தை விட அவள் மீது உள்ள காதல் வென்று விடுமோ  என்ற பயமே… அவனை இந்த ஊரை விட்டு குடும்பத்தை விட்டு   வெகு தூரம் பிரித்து சென்றது.

 

 

இரண்டு  வருடம் தனது மேல் படிப்பை மும்பையில்  தொடர்ந்தவன்,  ஒருவருடம் தேவி கேசவ் அழைத்தும் வராமல் தவிர்த்தவன், வற்புறுத்தல் அதிகமாக      இரண்டு வருடங்களாக தான்  தனது வீட்டில் இருப்பது… சொந்த ஊருக்கு வந்ததில் இருந்து, நிவாவின் நினைவு அதிகம்  துரத்த துவங்கியது,  அவளை எண்ணியே  அடிக்கடி   கலங்கி அமைதி வேண்டி  தனது அறையில் ஒதுங்கி விடுவான், இல்லை.. மொட்டை மாடியில் நின்று  “வான் நிலவை பார்த்து… தன் காதல் நிலாவை எண்ணி  கொண்டு இருப்பான்”.  யாரை மறக்க இத்தனை நாள் போராடி கொண்டு இருந்தானோ அவளை இன்று கண்டதும்,  நீறு பூத்த நெருப்பாய் கோபத்தை தாண்டி காதல் உணர்வுகள் வெளிவர,   இத்தனை நாள்  நிலாவின் மீது குற்றம் சுமத்தி கொண்டு இருந்த   மனம்  இன்று அவள் பக்கத்து நியாத்தை அலசிப்பார்க்க துவங்கியது.

 

குடும்பத்தை..  இழந்து கஷ்டத்தில் இருந்தவளுக்கு ஆதரவாய் இருக்கும் அவள் உறவுகளை நம்புவாளா இல்லை, பழகி சில நாட்களே ஆன  உன்னை நம்புவாளா,  அவள்  இருக்கும் சுழலில் காதலை எங்கு உணர்வாள்  அதற்கான வயதும், பக்குவமும் இல்லாமல் இரண்டும் கெட்டான் வயதில் இருந்தவள் “ நீ காதல் என்று சொன்னதும் உன் கை கோர்த்து ஓடி வந்து விட இது என்ன சினிமாவா”  பல முறை அவளை குழந்தை  என்று எண்ணிய உனக்கு, அந்த குழந்தையிடம் போய் “காதலிக்கின்றேன் என்று யாரும்  இல்லாத நேரத்தில் முத்தமிட்டால்” உன்னை தவறாக எண்ணாமல் வேறு என்ன நினைப்பாள். அவள் “உன் மீது வைத்து இருந்த நம்பிக்கையையும், அன்பையும் நீ தான் நேரம் காலம் இல்லாமல் உன் காதலை சொல்லி உடைத்து எரிந்தாய்” என்று மனம்  தனது  மித்திரன் தவறுகளை அடுக்க   அதில் இருந்த  உண்மை புரிந்து  அமைதியாய் யோசிக்க துவங்கினான், மித்திரன்.

 

என் தவறு தான்  அவளுக்கு சரியான வயதும் பக்குவமும் வரும் வரை  காத்திருக்க வேண்டும் என்று எடுத்த முடிவை மறந்து  நடந்து கொண்டது தவறு தான் இப்போது அவளுக்கு  காதலிக்கும் வயது வந்து விட்டது தானே  அன்று நடந்து கொண்ட முறைக்கு   மன்னிப்பு கேட்டுவிட்டு,  “என் மனதை கூறி திருமணம் செய்து கொள்ள கேட்டால் சம்மதிப்பாளா,” என்று காதல் மனம்  ஏக்கமாய் எண்ணத் துவங்கியது.  இம்முறையேனும் அவள் மனம் அறிந்து அதன் படி நடந்து  கொள்ள வேண்டும் என்று தீர்மானம் எடுத்த பின் தான்  மித்திரனால்  நிம்மதியாய் இருக்க, முடிந்தது.

 

நிலாவிற்கு தன் மீது உள்ள தவறான, அபிப்பிராயத்தை மாற்றி தனது காதலை புரிய வைக்க  வேண்டும் என்று மித்திரன் தீர்மானம் எடுத்து இருக்க   நிலாவோ மித்திரனை விட்டு விலகி விடும் முடிவில் தனது வேலையை விட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு இருந்தாள்.  நிலா வீட்டில் நுழையும் வரை,   வேலையை விட வேண்டும் என்ற தனது முடிவில்  தெளிவாய் இருந்தவள், வாசலில் கால் வைத்ததும் அந்த முடிவு ஆட்டம் காண துவங்கியது கிடைத்து இருக்கும் இந்த வேலையையும் விட்டு விட்டால், மீண்டும் இங்கு ஒரு வாய் உண்பது கூட நரகம் ஆகிவிடுமே வீட்டு  வேலை  செய்ய வைத்து வேலைக்காரி போல நடத்தினால் கூட  தாங்கி கொள்ளலாம், கொத்தடிமை போல நடத்துவது தான்  அவளால்  சகித்து கொள்ள முடியவில்லை.

 

அதுவும்… “ஒருநாள் வீடு சுத்தம் செய்யும் போது பார்த்த பத்திரங்கள் அவளை எண்ணத்தை முற்றிலும் மாற்றியது”   எந்த பிரதிபலனும் இல்லாமல், தான் தன்னை  வளர்கின்றார்கள் என்று  இருந்த நன்றி உணர்ச்சி  மடிந்து, அவர்களின் லாபம் என்னவென்று புரிந்து கொள்ள முடிந்தது, இருந்தும் இவர்களை பகைத்து கொண்டு எங்கு செல்வது. இந்த காலத்தில், ஒரு பெண்ணால்  தனியாய் வாழ முடியுமா என்ற பயம் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட வைத்தது  ஆனாலும் ஒரு நாள்  இருவேளை  உணவு என்பதே கடினம் தான்  பாதி நாள் அது கூட கிடைக்காது,  இந்த வேதனை தீர  வேண்டும் என்றால்   “தன்னால் இயன்றதை, உழைத்து கொடுத்தால் தான்  ஒரு வாய் உணவு கூட உறுத்தல் இல்லாமல்..  உண்ண முடியும்” என்று பெறும் போராட்டத்திற்கு பின் தான்  இந்த வேலைக்கு வந்தது  இதையும் விட்டால் மீண்டும் “இங்கு ஒரு அடிமை வாழ்க்கைதான்” என்ற  எண்ணம்  அவள்  முடிவை மாற்றி அமைத்தது.

 

அம்மா… “இதோ வந்து விட்டாள் மதி முட்டாள்” ஏய்  வேலை முடிந்து வருவதற்கு இவ்வளவு நேரமா  வேலைக்கு தான் போய் வருகின்றாயா இல்லை ஊர் சுற்றிவிட்டு  வருகின்றாயா  என்று வழக்கம் போல நந்தனா குத்தலாய் பேச, பள்ளியில் படித்து கொண்டு இருந்த பழைய நிலாவாய்  இருந்தால்,  வெகுளித்தனமான பதில்  கூறிக்கொண்டு அங்கேயே நின்று இருப்பாள். ஆனால்..  இப்போது இருக்கும் நிலா ஒரு  பார்வை பார்த்து விட்டு.. உங்களுக்கு  டீ  தானே வேண்டும் இதோ கொண்டு வருகின்றேன் என்று   உள்ளே சென்று டீ கப்புடன் வந்தவள் நந்தனா கையில் கொடுத்து விட்டு,.  அவளுக்கு என்று கொடுக்க பட்டு இருந்த ஸ்டோர் ரூம்யின்  உள்ளே சென்று மறைந்தவள்,  மித்திரன் பற்றிய  எண்ணத்தில்  முழ்கினாள், இப்போது தான் கொஞ்சமா கொஞ்சமாய் அவன்  நினைவில்  இருந்து மீண்டு விட்டதாய் நினைத்து கொண்டு இருக்கின்றேன், அதற்குள் இப்படி முன் வந்து நின்று மறந்தாதாய் நினைத்த நினைவுகளையும் நினைவுபடுத்தி  மரண வலி தருகின்றான்.

 

மித்திரனை  பற்றி நந்தனாவிடம் சொல்லலாமா  வேண்டாம் வேண்டாம் இப்போது தான்  “அவளுக்கு  பிடித்தது போல ஒருவர்  உண்மை காதலுடன் வந்து இருக்கின்றார்” இப்போது போய். மித்திரனை பற்றி கூறி,  அவளுக்கு மனவேதனை கொடுக்க வேண்டாம். இன்றொரு நல்ல வேலை கிடைத்ததும் இந்த வேலையை விட்டுவிடலாம் அதன் பின் மித்திரன் தொந்தரவு இல்லை  ஆனால் இன்று அவன் நடந்து கொண்டது பார்த்தால் நந்தா அக்கா சொன்னது போல. கெட்டவன் போல இல்லையே,   அது சரி… என்று தான் “அவன் சுயரூபத்தை காட்டி இருக்கின்றான்…  முதலில் நல்லவன் போல  நடித்து..  பின் அவன் கேவலமான புத்தியை  காட்டுவான்”.  அவன் மீது தனக்குள் இருக்கும்   சிறு சலனத்தை  கூட அவனிடம் காட்ட கூடாது அவனுக்கு மட்டும் தெரியவந்தால்  இன்னும்  நெருங்க முயல்வான்   என்று மீண்டும் மித்திரனை தவறாக  நினைத்தவள், இனி மித்திரனை பற்றி நினைக்க  கூடாது என்ற முடிவுடன் தனது வேலையை கவனிக்க  துவங்கினாள் நிலா.

 

இன்றும் வேலைக்கு தாமதமாய்  வந்து நின்றவளை  “உன் மனதில் என்ன நினைத்து கொண்டு இப்படி நடந்து கொள்கின்றாய்” நீ தாமதமாய் வந்து சாரிடம்  என்னை  மாட்டிவிடுகின்றாய்,  என்று கோபமாய் கத்திக்கொண்டு இருக்கும் போதே  ஆபீஸ் பாய் வந்து மதிநிலாவை மித்திரன் சார் வரச் சொன்னார் என்று சொல்லி செல்ல, போ போய்…   நேற்று போல இன்றும்  வாங்கிகட்டிக்கொண்டு வா,  என்று  அனுப்பிவைத்தார்.

 

குட் மார்னிங் சார்,  என்று  உள்ளே வந்த  நிலாவை கண்களால்  வருடியவன் மெதுவாய் புன்னகை செய்து,   நீ இன்னும் வரவில்லை  என்றதும்” என்னை கண்டு பயந்து வேலையை விட்டுவிட்டாயோ” என்று நினைத்தேன், மீண்டும் உன்னை பார்த்ததும் தான் .நிம்மதியாய் இருக்கிறது.   ஏன்  தாமதம் நிலா, இது உன் பழக்கம் இல்லையே  ஏதும் பிரச்சனையா என்று அக்கறையாய் மித்திரன் வினவ, இந்த அக்கறை பேச்சில் தானே உன் காரியம் சாதிக்க நினைக்கின்றாய்,  என்று மனதில் கருவிகொண்டவள், என் பிரச்சனை சொல்ல நீங்கள் எனக்கு யார் சார்  உங்கள் வேலை என்ன அதை மட்டும் கவனியுங்கள், என்று குத்தலாய் பதில் தந்தவளை, எழுந்து வந்து  தோளில் கை போட்டு  தன்  அருகில்  கொண்டு வந்தவன் “ நிலா..  நான்.. செய்தது தவறு தான்  அது  அன்று உன்னிடம் என் காதல் பற்றி பேச..  உனக்கு சரியான வயதும் இல்லை பக்குவமும் இல்லை,  என் அவசரத்தால்  என்னை   தவறாக நினைக்காதே என் காதல் நிஜம் நிலா “இத்தனை வருடம் உன்னை  மறக்க முடியாமல் உன்  நினைவில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்” என்று  தனது  காதலை  புரிய வைக்க முயன்றான், மித்திரன்.

 

விரக்தியாய் புன்னகை சிந்திய படி  அவன் கைகளை  விலக்கி விட்டு “பாலும் கல்லும் பார்க்க.. ஒன்று போல தான்  இருக்கும்”  மித்திரன் சார் பருகும் போது தான்  குணம் புரியும் என்று என் அம்மா சொல்வார்கள்,  ஒருவரின்.. வெளித் தோற்றத்தை  வைத்து அவர் குணத்தையும் முடிவு செய்ய கூடாது என்பது தான் அதன் அர்த்தம் அதை  இத்தனை வருடங்களில்  நன்றாகவே  கற்றுக்கொண்டேன் சார். அதானல் இன்னும் என்னை  பழைய   நிலா என்று நினைத்து  உங்கள் தலைசிறந்த  நடிப்பை  என்னிடம்  முயலாதீர்கள் அது இந்த மதிநிலாவிடம்  நடக்காது சார்,   வேலை விஷயம் என்றால் சொல்லுங்கள்    மற்ற பழைய கதை பேசி என் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று  வெளியேறி சென்றாள், நிலா.

 

வேலை விஷயம் தானே என்று சிரித்த படி  சென்றவன்….

 

பாலும் கல்லும் வண்ணம்

ஒன்று தான் பெண்னே

பருகும் போது தான்..

பாலின் குணம் புரியும்

என்னிடம் பழகிப்பார்

என் பால்மனம் புரியும்

 

என்று கவிதை எழுதி வைத்தவன் அதை ஒரு பைலியில் வைத்து அதை மதிநிலாவிடம் கொடுக்க சொல்லி ஆபீஸ் பாயிடம் கொடுத்து, இதை மதியிடம் கொடுத்து விட்டு நிச்சயம் பார்த்து பதில் வேண்டும் என்று நான் சொன்னதக  சொல் என்று கட்டளையுடன் அனுப்பிவைத்தான், மித்திரன்.

 

மித்திரன் வரிகளை பிரித்து படித்தவள் முகம் சுருங்க,” ஏன்  மித்து என்னை தொந்தரவு செய்கின்றாய் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் என் வாழ்கை அல்லவா வீணாய் போகும் என்று தனக்குள் புலம்பி கொண்டு காகிதத்தை  கசக்கி எறிந்து விட்டு தனது அலுவல் வேலையில் முழ்கினாள், நிலா.

 

அதன் பின் மித்திரன் முன் செல்வதை தவிர்த்து வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினாள் நிலா…

 

நேற்று போல இன்றும் நிலாவை பின் தொடர்ந்து சென்றவன், பஸ் ஏறாமல் தயங்கி நிற்பது கண்டு  சிறிது நேரம் பொருத்திருந்து பார்த்தவன்,  பின் தனது காரை ஓரமாய் நிறுத்தி விட்டு     நிலாவின் அருகில் சென்று என்ன என்று வினவினான்.

 

ஏய் யார் நீ என் ரூட்டுல வர வழிய விடு என்று மித்திரன்  மீது கை  வைத்து  தள்ளியவன் என்ன ஆள் கூட்டி வந்தால் பயந்து விடுவோமா  யார் உன் அண்ணனா என்று   வம்பு செய்தவன் வினவிட  நிலாவின் பதில் என்ன என்று அறிய கண்ணில் ஆர்வத்தை தேக்கி வைத்து கொண்டு மித்திரன் காத்திருக்க.

 

இல்லை என்று மறுப்பாய் தலையசைத்தவள் என் முதலாளி என்று பதில் வர  காற்று போன பலூனாய் முகம் சுருங்கியவன் “நல்லவேளை அண்ணன் என்று  அழைக்க வில்லை “  அதை நினைத்து ஆறுதல் அடைய வேண்டியது தான் என்று  தன்னையே. தேற்றி கொண்டவன்  யார் இது நிலா. என்றான்..

 

சிறிது நேரம் யோசித்து விட்டு பின் தயக்கமாய் இவன்  கொஞ்ச  நாட்களாக தொந்தரவு செய்கின்றான்  ஒருநாள்…  பஸ்சில் வரும் போது காதலிக்கின்றேன் என்று வம்பு செய்ய துவங்கி விட்டான் அதானல்  தான்.  எப்போதும் வரும் நேரத்தை தவர விட்டு பின் வரும் பஸ்ஸில் வந்தேன், இன்று.. இங்கேயே வந்து நின்றுவிட்டான்   “எனக்கு பயமாய் இருக்கிறது மித்து..  பதில் சொல் என்று ரொம்ப  தொந்தரவு செய்கின்றான்” என்று உணர்ச்சி வேகத்தில் மித்ரனை அண்ணண்  என்றதை  விடுத்து மித்து என்று  கூறியவளை, காதலாய்  பார்த்தவன்,   “இப்படி பயந்து கொண்டே இருந்தால் உன் பயத்தை பயன் படுத்தி பலரும் காரியம் சாதிக்க தான் செய்வார்கள்”  என்று மித்திரன்  கை சட்டையை மடக்கி விட..  ஏதும் பிரச்சனை வேண்டாம் மித்து அவனை பார்த்தால் ரவுடி மாதிரி இருக்கிறது,  என்று நிலா தயங்க..

 

இந்த மித்திரனுக்குள் இருக்கும் ரௌடியை நீ பார்த்தது இல்லையே கெட்ட பையன் இந்த மித்திரன் என்று சிரித்தவனை அது தான்   எனக்கு தெரியுமே என்று  பதில் தந்து கண்களால் சிரித்தாள் நிலா, ஒரு நொடி தன்னை மறந்து தன்னவளை ரசித்தவன்,  தலையை உலுக்கி கொண்டு மாமா பைட் மூடில் இருக்கின்றேன் செல்லம் டைவேர்ட் பண்ணாதே என்று  தங்கள் முன் நின்று இருந்தவனிடம் திரும்பி, அவள் நடந்து கொள்வதில் உனக்கு புரிய வேண்டாம் அவளுக்கு உன்னை பிடிக்கவில்லை என்று  பின் எதற்கு வம்பு செய்கின்றாய் ஒழுங்காய் ஒதுங்கி சென்று விடு  இல்லை கம்பி எண்ண வேண்டி வரும் என்று மித்திரன்  மிரட்ட, அதை சொல்ல நீ யார்.. இன்று உன்னுடன்  வந்து தப்பித்து கொண்டாள் என்றுமே என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது   என்னைக்காவது.. என் கையில் தனியாய் சிக்குவாய்.. அன்று மொத்தமாய் உன்னை கவனித்து கொள்கின்றேன், என்று பதிலுக்கு நிலாவை மிரட்டியவன் சட்டையை பற்றினான் மித்திரன் “இன்று இல்லை என்றுமே என் நிலாவின் துணையாய் நான் இருப்பேன்  அவள்   நிழலை கூட பிறர் தொட அனுமதிக்க மாட்டேன்”, இனி ஒரு முறை என் நிலாவிடம் நீ வம்பு செய்வது தெரிந்தால்  அது தான் உனக்கு  கடைசி நாள். என்று அடக்கிய குரலில் கர்ஜித்தவன், குரலில் கொலை வெறி கோபம் இருக்க… சத்தம் இல்லாமல் விலகி சென்றான்  வம்பு செய்தவன்.

 

ஒரு பெண்னிற்கு பிரச்சனை என்றால் இப்படி தான் வேடிக்கை பார்ப்பீர்களா, உங்கள் வீட்டு பெண்ணாய் இருந்தாலும் இப்படி தான் ஒதுங்கி நிற்பீர்களா, என்று சுற்றி இருந்தவர்களை  கேள்வி கேட்டவன் நீ வா நான் உன்னை காரில் விட்டு விடுகின்றேன் என்று அழைத்தான் மித்திரன்.

 

வேண்டாம்  என்று மறுப்பாய் தலை அசைத்து விட்டு   ரொம்ப நன்றி சார் அவனிடம் சொன்ன பதில் தான் “உங்களுக்கும்… விலகி செய்வதில் என் விருப்பம்மின்மையை புரிந்து.. நீங்களும் விலகி கொண்டால்.. நல்லது” என்று.  அடுத்து வந்த  பஸ்சில் ஏறி சென்றாள் நிலா.

 

சரியான.. பிடிவாதக்காரி. என் பிட்டை எனக்கே போட்டுவிட்டு போகின்றாய் என்று  அவள் செயலை ரசித்து விட்டு.  காரில் ஏறி பின் தொடர்ந்தான், மித்திரன்.

 

வீட்டின் கதவை திறந்தவள்  திரும்பி பார்த்திட மித்திரன்  கார் நிற்பதை கண்டு என் மீது இந்த அளவிற்கு அக்கறையாய் இருப்பவன் எப்படி நந்தனாவிடம் மோசமாய் நடந்திருப்பான்  நந்தனா அக்கா சொன்னது உண்மை என்றால்  இது நடிப்பா  எந்த மித்திரனை நம்புவது என்று குழம்பி போனாள்.. நிலா.

 

வழக்கமான தனது பணிகளை முடித்து கொண்டு அடுப்படியில் இரவு உணவிற்கான சமையல் வேலை  செய்து கொண்டு இருந்தவளை பின்னிருந்து இடையோடு சேர்த்து கட்டி அணைத்தான்,  சித்தேஷ்   நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள போகின்றவன்.

 

மிரண்டு போய். விலகி சென்றவள் என்ன சித்தேஷ் மாமா… என்று பயத்துடன் வினவ என்ன நிலா,  பயந்துவிட்டாயா  சும்மா விளையாடினேன் என்று மீண்டும் நெருங்கி, அவள் கன்னம் தீண்ட முயல ஒரு அடி பின் நகர்ந்தவள் அக்கா வீட்டில் இல்லை   மாமா என்று தடுமாற்றத்துடன் கூறினாள் நிலா.

 

உன் அக்கா இல்லாத போது தானே உன்னோடு விளையாட முடியும் நிலா, என்று வக்கிரமாய் சிரித்து விட்டு மீண்டும் முன்னேற அருகில் கிடந்த கத்தியை  கையில் எடுத்து மிரட்டிய படி  வீட்டை விட்டு  வெளியில் அனுப்பிவிட்டு,  கதவை  மூடிவிட்டு தனது இடத்தில வந்து கண்ணீர் சிந்த துவங்கினாள்  நிலா…

 

அன்று மித்திரன்.. இன்று.. இந்த சித்தேஷ்  எனக்கு என்று யாரும் இல்லை என்ற தைரியத்தில் தானே  இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று ,கலங்கி போனாள்,  நிலா..

 

வெளியில் சென்று  இருந்த நந்தனா வரவும்  வேகமாய்  அவள் முன் சென்றவள்,  நந்தா அக்கா.  நீங்கள் காதலிக்கும் சித்தேஷ் நல்லவர் இல்லை என்று இன்று அவன் தன்னிடம் நடந்து கொண்ட முறையை கூறிட.  நீ சொல்வதை நான் ஏன் நம்பவேண்டும்…  என்று சாதாரணமாய் நந்தனா. வினவ, அக்கா நான் உங்கள் தங்கை உங்களுக்கு கெடுதல் செய்வேனா,  உண்மையில் அவன்  நல்லவன் இல்லை அக்கா.. அன்று மித்திரன்  உங்களிடம் நடந்து கொண்டது போல தான் இன்று இவர் என்னிடம் நடந்து கொண்டார்,  இருவருமே கெட்டவர்கள் தான் அக்கா என்று அழுத்தமாய் நிலா கூறிட.

 

மித்திரன் போலவா..  மித்திரன் என்று ஏளனமாய்  சிரித்தவள்  இப்போது  உன் திட்டம் புரிகின்றது    அன்று  உன்னையும் மித்திரனையும் பிரித்த என் திட்டத்தை  என்னிடமே திரும்பி செய்ய பார்கின்றாயா,  நீ சொல்லும் கதையை நம்ப நான்  ஒன்றும் நீ இல்லை, மதி இல்லாத முட்டாளே…

 

என்ன நந்தா அக்கா செல்கின்றீர்கள்  என்ன திட்டம் என்று  புரியாமல் தடுமாறிய படி.. கேட்டாள் நிலா, என்ன திட்டம்  சித்தேஷ் என்னை காதலிப்பது உனக்கு பிடிக்க வில்லை. உனக்கு இது போல் வசதியான வாழ்கை கிடைக்கவில்லை என்ற பொறாமையில்    உன்னிடம் தவறாக நடக்க முயன்றான்,  என்று பொய் சொல்லி  என்னையும் சித்துவையும்  பிரிக்க பார்கின்றாய் என்று கோபமாய் கத்தினாள், நந்தனா.

 

என்ன நந்துமா என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தார், கங்கா. இவளை பார் அம்மா பாவப்பட்டு  இருக்க இடம் கொடுத்தால்  என் வாழ்க்கையை கெடுக்க பார்க்கின்றாள், அன்று நான் காதலித்த.. மித்ரானை.. மயக்கி இவளை தான் காதலிக்கின்றேன் என்று அவன் வாயாலேயே சொல்ல வைத்தாள். இன்று என்னிடமே  சித்து பற்றி தவறாக. சொல்லி. இவரிடமும் இருந்து என்னை பிரிக்க பார்க்கின்றாள்  என்று கோபமாய் , முறையிட.   நந்தனா வாயில் இருந்து வந்த உண்மையை கேட்டு அதிர்ந்து  போய் மித்திரன் என்னை காதலித்தாரா  என்று குழப்பமாய் கேட்க.

 

ஆமாம்டி… அவன் அப்படி தான் சொன்னான் வேலைக்கார நாயே  நீ கெட்ட கேட்டிற்கு.. மித்திரன் போல பணக்காரன் கேட்கின்றதா  நான் காதலிப்பதை சொல்லியும், என் நிலா இடத்தில் யாரையும் நினைக்க மாட்டேன் என்று வசனம் பேசினான்..   எப்படி உன்னை வைத்தே அவனை விரட்டி அடித்தேன் என்று  தனது வெற்றியை எண்ணி கர்வமாய் சிரித்தாள் நந்தனா.

 

.          அம்மா இனி இவள் ஒரு நிமிடம் கூட  இந்த வீட்டில் இருக்க கூடாது… என்று நந்தனா. கூறியதும் பாவம் பார்த்து வீட்டில்  இருக்க இடம் கொடுத்தால் என் பெண்ணின் வாழ்வையே அழிக்க பார்கின்றாயா? ஒழுங்காய் இருந்து நாங்கள்  பார்க்கும் பையனை கட்டிக்கொண்டு இங்கேயே கிட ரொம்ப பேசினால் இருக்க இடம் இல்லாமல் நடு ரோட்டில் தான் நிற்பாய், என்று கங்காவும்  மகளுக்கு சாதகமாய் பேசிட.

 

என்ன நடந்திருக்கும் என்று யூகித்த நிலாவிற்கு  இன்று மித்திரன் சொன்ன  பயந்து கொண்டே இருந்தால்,  உன் பயத்தை பயன் படுத்தி பலரும் காரியம் சாதிக்க தான் செய்வார்கள், என்ற  வார்த்தை நினைவு வந்து புது தைரியத்தை கொடுத்தது இது வரை அடக்கி வைத்து இருந்த கோபம் எல்லாம் வெளிவர பாவம் பார்த்தா இல்லை என் பேரில் உள்ள பத்திரங்களை பார்த்த நீங்கள் பார்த்து வைக்கும் பையனை  கட்டிகொண்டாள் தானே நீங்கள் நீட்டும் இடத்தில கையெழுத்து போடுவான்,  அப்போது தானே என் பெயரில் இருக்கும் நிலங்கள், உங்கள் பெயருக்கு மாற்ற முடியும்.. என்று இது வரை அவர்கள் மறைத்து வைத்திருந்த.. ரகசியத்தை.. போட்டு உடைத்தாள்  நிலா.

 

உண்மை வெளிப்பட்ட அதிர்ச்சியில் பேயறைந்தது போல கங்கா நிற்க,  நீ திருமணம் செய்து கொள்ள போகின்றவன் நல்லவன் இல்லை,. உன்னை போல நல்வரை கெட்டவனாக நான் சித்தரிக்கவும்  இல்லை, இத்தனை நாள்.. உன்னை அக்கா என்று எண்ணி வளர்ந்தளால் அக்கறையில் சொல்கின்றேன், அதற்கு மேல் உன் விருப்பம் என்றவள். இனி நான் இங்கு இருக்க போவது இல்லை என்று தனது முடிவை கூறிட எல்லாம் வேலை பார்க்கும் திமிர் நாலு காசு சம்பாதிக்க துவங்கிவிட்டாய் இல்லையா, அந்த திமிர்..அதானல் தான்.  வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று நினைத்தேன், ஆனால் இந்த மனிதர்  எங்கு கேட்கின்றார் என்று அருகில் இருந்த தன் கணவன் மீது கோபத்தை காட்டினார் கங்கா. இனி நீ வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியேறி பார்.. உன் காலை உடைத்து விடுவேன், என்று மிரட்டல் விடுக்க.

 

கொஞ்சமும் மிரளாமல் நித்தினமாய்… என்னை தடுக்க நீங்கள் யார்  என் அப்பா அம்மா வா இல்லையே, உங்கள் வீட்டு வேலைக்காரி தானே நான், செய்து கொண்டு இருக்கும் வேலை பிடிக்காமல் என் வேலையை விட்டு, என்னை சுற்றி நீங்கள் போட்டு வைத்து இருக்கும் வேலியை விட்டு வெளியேற போகின்றேன் . என்னை தடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை அதை மீறி என்னை தடுக்க முயன்றாள் என்று கையில் இருந்த போனை தூக்கி காட்டி போலீசில் புகார் செய்வேன் என்று பதிலுக்கு மிரட்டி விட்டு தாமதிக்காமல்   கங்கா, நந்தனா..  கோபமாய் தடுத்தும் கேட்கமால்  வீட்டை விட்டு வெளியேறினாள்,  நிலா.

 

தனது மனது கஷ்டத்தை  எல்லாம்  கூறும்  தனது விருப்பமான, ஹனுமன் கோவிலில் சென்று அமர்ந்தவள், கண்ணீரை கூட துடைக்க மனம் இன்றி அன்று நடந்ததை நினைவு கூர்ந்தாள்.

 

கங்கா அழைப்பதாய் வந்து நந்தனா கூறியதும் கீழே சென்ற நிலா.. இரவு உணவிற்கு வேண்டியதை தாயர் செய்ய துவங்கினாள். இதற்கு மேல் படிக்க  முடியாது என்று தனது புத்தகங்களை எடுக்க சென்றவள்,  மித்ரனின்  குரல்  கேட்டு புரியாமல் ஒதுங்கி நின்றாள்,மித்திரன் சென்றதும் நந்தனாவிடம் வந்து என்ன நடந்தது என்று கேட்க  முதலில் தயங்கியவள். மித்து அண்ணா  இங்கு  நடந்ததை மறந்து விடு, நானும் யாரிடமும் சொல்ல மாட்டேன்,நீயும் சொல்லாதே…வெளியில் தெரிந்தால் உனக்கு தான் அவமானம்  என்று ஏன் சொல்லி சென்றார் என்றதும், நிலாவிற்கு நடந்தது.. எதுவும் முழுதாய் தெரியாது என்பதை புரிந்து கொண்ட நந்தனா. அவள் சொன்னது போல தனது திட்டத்தை செயல் படுத்தி கொண்டாள், கண்ணீர் சிந்திய படி இந்த மித்திரன் நல்லவன், இல்லை  மதி… எப்போதும் என்னிடம் பாசமாய் பேசுவார் அதை வைத்து அண்ணனின் நண்பன் தானே என்று நானும் சகஜமாய் பழகினேன். கொஞ்ச நாட்களாக நீ இல்லாத நேரம் என்னிடம் அநாகரிகமாய் பேசினார். அண்ணன் என்று அழைக்காதே மாமா என்று சொல் என்று கட்டாய படுத்தினார் உன்னை காதலிக்கின்றேன் அந்த உரிமையில் தான் இப்படி நடந்து கொள்கின்றேன்,  என்று  என்று…  என்னிடம் என்று  கூற முடியாமல்.. தயங்குவது போல நிறுத்தி.. நிலாவின்.. முக மாற்றத்தை கவனித்தாள்  நந்தனா.

 

இல்லை அக்கா மித்து அண்ணன் அப்படிபட்டவர் இல்லை அக்கா.. என்று நிலா மித்திரனுக்காக வாதிட,  நம்பாதே. நிலா இந்த காலத்தில் உறவுகளையே நம்ப முடிவது இல்லை பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் தனது வக்கிரத்தை தீர்த்து கொள்ள வதைத்து கொள்கின்றார்கள்.  எனக்கு ஒன்று என்றால் கேட்க ஆள் இருந்ததும்,  என்னையே மிரட்டி விட்டு செல்கின்றான். உனக்கு என்று யாரும் இல்லை, உன்னை என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என்ற தைரியம் அவனை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்று மிரட்டலாய் எச்சரித்தவள்,  அடுத்து வந்த நாட்களில் மித்திரன் வராமல் இருக்க  கொஞ்சம் கொஞ்சமாய் மித்திரன் மீது வெறுப்பை வளர்த்து விட்டாள் நந்தனா.

 

அவள் சொன்னது போலவே  அடுத்து வந்த மித்ரனும் காதலிப்பதை கூறி நெருங்கிட நந்தனா, சொன்னது உண்மை என்று முழு மனதாய் நம்ப துவங்கினாள் நிலா.  தன் மீது உண்மையான அன்பு வைத்து உள்ளான் என்று   நம்பி இருந்த நம்பிக்கை  பொய்யாய் போக இருமடங்கு கோபத்தை வளர்த்து கொண்டாள் நிலா, மித்திரன் வந்ததையும் அவன் கொடுத்து சென்ற உடையையும் மறைக்காமல் நந்தனாவிடம் காட்டினாள்  உன் ஏழ்மையை பயன் படுத்தி உன் மனதில் ஆசையை தூண்டிவிட்டு அவன் எண்ணத்தை நிறைவேற்ற பார்க்கின்றான்,என்று கூறி உடையை  நந்தனா கிழித்து எரிந்ததும் கூட நினைவு வந்து வதைக்க துவங்கியது.

 

அன்று நடந்ததையும்  நந்தனா பேச்சை கேட்டு உண்மையாய் காதலித்த மித்ரானை ஒதுக்கி தள்ளியதும்   எண்ணி  மனம் வருந்தினாள், நிலா.

 

அழாதே நிலா   என்று குரல் கேட்டு  நிமிந்தாள் அங்கு மோகன்  நிலாவின் சித்தப்பா  நின்று இருந்தார், இதுவும் நல்லது என்று நினைத்து கொள் அந்த நரகத்தில் இருந்து விடுதலை கிடைத்தது என்று  நிம்மதியாய் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் பார்த்து சேர்ந்து உன் வாழ்க்கையை பார்த்துகொள் என்றவரை விசித்திரமாய் பார்த்தாள் நிலா. இந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து  தனக்காக ஒருவார்த்தை பேசாதவர், இன்று வழிய வந்து பேசுவதை பார்த்து புரியாமல் விழிக்க.

 

என்னமா எப்போதும் பேசாதவர் இன்று உனக்காக பேசுகின்றேன் என்று பார்கின்றாயா உனக்கு நடக்கும் கொடுமையை தட்டி கேட்க நினைப்பேன்  ஆனால் உன் சித்தியை எதிர்த்து பேச தைரியம் இன்றி அமைதியாய் இருந்து விடுவேன் இன்று நடந்தது எல்லாம் பார்த்து கொண்டு தான் இருந்தேன் கடவுளாய் பார்த்து  உனக்கு ஒரு நல்ல வாழ்கை கொடுத்ததை கூட பொறுத்து கொள்ள முடியாமல், கெடுத்து விட்டார்களே இனி நீ எங்கு செல்வாய் என்று வேதனையாய் பேசினார் மோகன்.

 

இல்லை எனக்கு என்று முடிவு செய்த வாழ்வை. யாராலும் தட்டி பறிக்க முடியாது சித்தப்பா என்று  தீர்வு கண்ட நிம்மதியில் கூறியவள் தனது அலுவலகத்திற்கு அழைத்து மித்திரன்.. வீட்டு முகவரியை பெற்று கொண்டு என் வாழ்வு  என்ன என்று முடிவு செய்து விட்டேன் சித்தப்பா எனக்கு ஆட்டோவிற்கு மட்டும் பணம் கொடுங்கள்,  என்று கண்ணனீரை துடைத்து கொண்டு மித்திரனை தேடி கிளம்பினாள் நிலா.

 

ஏதோ ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவள்  மித்திரன் வீட்டை நெருங்கவும் எந்த முகத்தை வைத்துகொண்டு அவன்  முன் செல்வது என்று தயங்கிய நின்றால்  இன்று மாலை கூட. தனக்கு உதவியதை மறந்து கோபமாய் பேசிவிட்டு வந்தேன் அதையெல்லாம்  நினைத்து  என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டால் என்று கவலை கொள்ள மித்திரன் என்ன முடிவு செய்தாலும் சரி தான் நடந்து கொண்ட முறைக்கு.. விளக்கம் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளே சென்றாள்.. நிலா…

 

வாசலில் இருந்த பைரவ் வாலை ஆட்டிக்கொண்டு நிலாவை  மோப்பம் பிடித்து அடையாளம் கண்டு கொண்டு   இரு கால்களை  தூக்கி எக்கு போட்டு தனது நன்றியை காட்டியது பைரவ் குரல் கேட்டு வந்த மித்ரனின் தங்கை மிருதனா, யாரையும் உள்ளே விடாத பைரவ் நிலாவை  தெரிந்தது போல் வாலை ஆட்டி வரவேற்பு தர வாருங்கள்.. வாருங்கள்… எங்கள் வீட்டு பெரிய மனிதனே அனுமதி தந்துவிட்டான் உள்ளே  வாருங்கள் என்று உள்ளே அழைத்து சென்றவள் ஹாலில் இருந்த சோபாவில் அமர வைத்து விட்டு யார் நீங்கள் யாரை பார்க்க வேண்டும் என்று வரிசையாய் கேள்விகளை அடுக்கிட,  என் பெயர் நிலா நான் மித்திரன் சாரை பார்க்க வேண்டும் என்றதும் கண்கள் விரிய, நீங்கள் தான் நிலவா என்று அம்மா என்று அழைத்த படி உள்ளே  சென்றாள் மீரு.

 

வா.. மதி என்ன  இந்த நேரம்,  நேரம் காலம் இல்லாமல் வேலை வாங்குகின்றானா இந்த பையன் வரட்டும் கேட்கிறேன் என்று வரவேற்பாய்  புன்னகை சிந்தினார், கேசவ்…

 

உள்ளே சென்ற மிருதனா தேவியுடன்  வந்தால் அம்மா இவர்கள் தான் நிலா காதில் கூறிட வா தேவி.. உன் பையன் செய்யும் வேலையை பார் நேரம் காலம் இல்லாமல் மதியை வேலை வாங்குகின்றான் என்றவர் இது மதி.. நம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என்று அறிமுகம் செய்திட   என்னிடம் நிலா என்றார்கள் என்று மிருதனா புரியாமல் நிறுத்த குனிந்திருந்த  தலை நிமிராமல் என்னை மித்திரன்.. நிலா என்று தான் அழைப்பார் “ என் முழு பெயர் மதிநிலா” எனவும் தேவிக்கு  ஏதோ புரிவது போல இருந்தது, மீரு  நீ நிலாவை அண்ணனிடம் அழைத்து செல் என்று கூறியவர், அவர்கள் சென்றதும் தன் கணவர் புறம் திரும்பி,  “உங்கள் மகனின்,  நிலா பாடல்களின் நாயகி வந்து விட்டாள்”,  என்று சிரிக்க.. கேசவிற்கும் எல்லாம் புரிய துவங்கியது.

 

நிலாவே வா.. செல்லாதே வா..

என்னாளும் உன் பொன்வானம் நான்

எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

 

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை

முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை

தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

 

 

மாடியில்  நிலவின் ஒளியில்  பாடல் ஒலியில் தன்னை மறந்து..  நின்று இருந்தான் மித்திரன்…

 

ஹுக்கும்… “உன் நிலா  உன் அருகில் வந்து விட்டது கண்னை திற”, என்று மீரு கேலிக்கு  வாய்யை மூடு வாயாடி,  கொஞ்சம் என்னை தனியாய் இருக்க விடு என்று மித்திரன், கூறிட.

சரி சரி… நான் கிளம்புகின்றேன் நீ உன் தனிமையில் இனிமை காண் “ நீங்கள் வாருங்கள் மதிநிலா.. அண்ணன், பேசும் மனநிலையில் இல்லையாம்” என்றதும், மதிநிலா என்ற பெயரை கேட்டு வேகமாய், கண் திறந்து திரும்பியவன் நிலா,என்று ஆச்சர்யமாய்!நிற்க.

 

கனவு இல்லை.. அண்ணா உன் நிலவே தான்,” உன் சோக கீதத்தில் இருந்து எங்களை மீட்க வந்த  நிலவு…..”,என்று நீண்ட விளக்கம் தர. நீ கொஞ்சம் இடத்தை காலி செய்கின்றாயா  என்றான் மித்திரன்.  நீ நடத்து நடத்து இப்போது என்னை பார்த்தால், அதிகப்படி உருப்படி போல தான்.. தெரியும்.. என்று மிருதனா செல்லவும்.  நிலாவின் அருகில் வந்த.. மித்திரன், என்ன நிலா..  அவன் மீண்டும் வம்பு செய்கின்றானா”,  என்று அக்கறையாய் வினவ. நிலா.. கை கூப்பி ,”என்னை மன்னித்து விடுங்கள்.. மித்திரன்… உங்கள் அன்பை  புரிந்து கொள்ளாமல்.. உங்களை காயப்படுத்திவிட்டேன்” என்று கண்ணீர் சிந்தினாள்.

 

தன்னவள்.. கண்ணீரை கண்டு துடித்து போனவன், கன்னம் தொட்டு துடைத்து விட்டு நிலா..  என்று மெதுவாய், அழைத்து… நான் உன்னை அனைத்து கொள்ளலாமா” என்று அனுமதி கேட்க,  தலை நிமிராமல் சம்மதமாய் தலையாட்டிட,   தன்னோடு சேர்த்து இறுக அனைத்து கொண்டவன் “நிலா..  என்னை காயப்படுத்தும் உரிமை உனக்கு உள்ளது, ஆனால் என் மீது பாசமாய் இருந்தவள்.. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று கூட கேட்க மனம் இல்லாமல்.. நடந்து கொண்டது தான்.. கொஞ்சம் வருத்தமாய் இருந்தது”, என்று மனதை மறைக்காமல் தன் சந்தேகத்தை வினவினான்.  தான் அப்படி நடந்து கொண்டதற்கான காரணத்தையும்  இன்று வீட்டில் நடந்ததையும், மறைக்காமல் நிலா கூறிட .  மித்திரன்  அணைப்பு இறுக…

“என் நிலா மீது கைவைக்க, அவனுக்கு எவ்வளவு தைரியம்” என்று கோபம் குறையாமல்..  மித்திரன், கூறினான்.

 

மெதுவாய் அவன் முதுகை தடவி கொடுத்த படி,  “ கெட்டதிலும் ஒரு நன்மை தானே நடந்து உள்ளது மித்தூ இல்லை என்றால்  எனக்கு உண்மை தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லையே”, பின் எப்படி நமக்குள்.. இந்த புரிதல் வந்திருக்கும் என்றிட… நீ ரொம்பவே மாறிவிட்டாய் நிலா. உன் குழந்தை தனம்.. எல்லாம்  குறைந்து பக்குவமாய் நடந்து கொள்கின்றாய்..   என்றவன் குரலில் பெருமிதம் இருந்தது….

 

எல்லாம் நீங்கள் தந்த பக்குவம் தான் மித்து   “நீங்கள் சித்தி குடும்பத்தை பற்றி சொன்னதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை புரிந்து கொள்ள துவங்கினேன்” என் தாத்தா சொத்து  ஓன்று  என்  பெயரில் உள்ளது,  எனக்கு திருமணம் முடிந்து  என் கணவரும் சேர்ந்து கையெழுத்து போட்டால் தான் அந்த நிலத்தை விற்க முடியும், “என் அப்பா அம்மா காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்கள் மீது இருந்த கோபம் என் மீது இருந்த பாசம் மாமா மீது இருந்த பயம் அவரை  இப்படி முடிவு எடுக்க வைத்திருக்க வேண்டும்”   எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர்கள் என்னை வளர்க்கவில்லை என்ற உண்மை  என்னை பக்குவப்படுத்திவிட்டது மித்து  என்றாள்,  நிலா.

 

என் மீது உனக்கு ஒன்றும் கோபம் இல்லையே கண்ணம்மா என்று மித்ரனின் உருகல் வரிகளில் வசீகரிக்க பட்டவள்.. மறுப்பாய் தலை அசைத்து, “ மனதில் உள்ளதை வெளிப்படையாக கூற துவங்கினாள்”   உங்களிடம் கோபமாய் பேசிவிட்டு  எத்தனை நாள் தனிமையில் அழுது இருப்பேன் தெரியுமா, “நீங்கள்  தப்பானவர் இல்லை  என்று எனக்குள்  வாதிட்டு  அதற்கான ஆதாரம் கிடைக்காமல் வாடி போவேன் அப்போது அது காதல் என்று புரியவில்லை  நான் கல்லூரியில் படிக்கும்  போது தான் யார் வந்து நெருங்கி பேசினாலும் அக்கறையாய் நடந்து கொண்டாலும் உங்கள் நியாபகம் வரும் அப்போது தான் எனக்கு  புரிந்தது “காதல் என்றே புரியாமல்.. உங்களை நான் காதலித்து இருந்தது”. எனக்கு என்று கிடைத்த ஒரு உறவையும்.. இழந்து விட்டோம், எதிர்காலம் இல்லாத கனவு என்று என்னையே கட்டுப்படித்திக் கொண்டேன் அதை விட. நந்தனா வார்த்தையை வேறு நம்பி  உங்களை தவறாக வேறு நினைத்து கொண்டு இருந்தேன்  என்று அதற்கு மேல் விளக்கம் தருவதற்குள்,  போதும் நிலா…    விளக்கம் தருகின்றேன் என்று உன்னை நீயே வதைத்து கொள்ளாதே,” நீ வருந்தினால்.. அது எனக்கும் வருத்தம் தரும்” என்று அழைத்து சென்று அங்கிருந்த ஊஞ்சலில் அமர்த்தியவன் தானும்  நெருங்கி அமர்ந்து கொண்டு, “நீ என்னை வெறுக்க இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை நிலா” தெரிந்து இருந்தால் அப்போதே… உன் சந்தேகத்தை தீர்த்து  வைத்து இருப்பேன் என்றான், மித்திரன்.

 

நீங்கள் சொல்லி இருந்தாலும் அப்போது  இருந்த நிலா நம்பியிருப்பாளா என்பது சந்தேகம் தான் “ஏன் நேற்று வரை  உங்கள் விளக்கம் கேட்கும் எண்ணம் வரவே இல்லையே” இன்று அவர்கள் வாயாலேயே  உண்மை சொல்ல வைத்து உங்கள் காதலை புரியவைத்த ஹனுமனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றாள்  நிலா.

 

நன்றி தானே “காலம் முழுவதும் சொல்லலாம், என் வாழ்வையே திருப்பி கொடுத்து உள்ளார் இல்லையா”, என்று கவலை மறந்து மித்திரன், சிரித்திட…  ஆமாம் உங்கள் தங்கைக்கு எப்படி என்னை தெரியும் என்று சந்தேகமாய் வினவினாள், நிலா.  உன்னை தெரியாது  ஆனால் பெயரை நன்றாக தெரியும் என்றிட புரியாமல் பார்த்தவள் மூக்கில் ஒரு விரல் கொண்டு தொட்டுவிட்டு  இப்போது கேட்டாயே அது போல்  “நான் தனிமையில் இருந்தால்.. உன் நினைவில் நிலா பாடல்கள் தான் கேட்டு கொண்டே இருப்பேன்” அதை வைத்து.. சரியாய் கணித்து இருப்பாள்  என்றவன், நிலா இத்தனை நாள் பிரிவிற்கு சேர்த்து ஒரே ஒரு என்று இழுத்தவன்… நான் மாட்டேன் பா.. என்று நிலா மறுக்கவும்  முகம் வாட திரும்பியவன், “நான் தர மாட்டேன்.. நீ தந்தால்.. மறுக்க மாட்டேன்”, என்று வேகமாய் கூறி முடிக்க, அடுத்த நொடி.. மித்திரன், பிடியில் இருந்தவள் இதழ்முத்தம் பெற்றுக் கொண்டு கண்மூடி மித்திரன் காதலை அனுபவிக்க துவங்கி  இருந்தாள் நிலா.

 

பொறுத்தது போதுமென்று

பொங்கி எழுந்துவிட்டேன்….

சேர்த்து வைத்த

மொத்தகாதலையும்

உன் இதழில் பதித்துவிட்டேன்…..

 

பைரவ் சத்தம் கேட்டு விலக மனம் இல்லாமல் விலகி அமர்ந்தவர்கள் நடுவில் ஏறி அமர்ந்த பைரவ் மீண்டும் நிலாவை கொஞ்சிட… இதற்கு எப்படி என்னை தெரியும்… என்று புரியாமல் வினவினாள் நிலா. “நாய்..மிகவும்  நன்றி உள்ளது நிலா ஒரு முறை உதவி பெற்றாலும் நம்மை என்றுமே மறக்காது”, நம் வாசம் வைத்தே நம்மை கண்டு கொள்ளும் உன்னால் தான் அவன் இங்கு இருப்பதை அவன் மறப்பான என்ன என்று மித்திரன் கூறி முடிக்கும் முன் அப்படியென்றால் பைக்கில் தூக்கி சென்றது, என்று நிலா முடிக்கும் முன் நானே தான் என்றான் மித்திரன். “  எனக்கு தான்  நன்றி சொல்ல வேண்டும் நீ. ஹனுமனுக்கு இல்லை”, என்று காலரை தூக்கி விட்டு கொள்ள, “ உங்களை அனுப்பியது.அனுமன் தானே..அவருக்கு தான் என் நன்றி உங்ளுக்கு  ஒன்றும் இல்லை. மித்து அண்…”.. என்று நிலா முடிப்பதற்குள் அவள் வாய்யை அடைந்தவன்,  “நீ நன்றி கூட சொல்ல வேண்டாம் தயவு செய்து அண்ணன் என்று சொல்லி கொடுமை  செய்யாதே”, என்று கெஞ்சலாய் நிறுத்த,  கண்களால் சிரித்து  அவன் கையை விலக்கி விட்டு, மித்து அன்பே.. என்று சொல்ல வந்தேன்பா..  என்றாள் நிலா.

 

நாங்கள் வரலாமா என்று குரல் கேட்டு… இருவரும் திரும்ப அங்கு மித்திரன் குடும்பம் மொத்தமும் நின்று இருந்தது,  “அனுமதி வழங்கப்பட்டது”, என்று மித்திரன் பதில் தர  நிலா எழுந்து நின்றாள். “சரியான.. கேடிடா..நீ முதல் நாளே என்னாவோ கோபமாய் இருப்பது போல பேசினாய், அதற்குள் பணிந்து விட்டாயே”,  என்று கேசவ் கேலி செய்ய  “என்ன செய்ய அப்பா..  பரம்பரை வழக்கம்  தந்தை வழியே என் வழி” என்று சிரித்தான்,  மித்திரன்.

 

உன் அப்பா கேலி செய்தால் அவரை சொல் மறைமுகமாய் என்னை ஏன் தாக்குகின்றாய் என்று தேவி குறைப்பட… “அட மக்கு அம்மா  மறைமுகமாக இல்லை நேரடியாகவே உங்கள் சர்வாதிகாரத்தை தான் தாக்கி கூறுகின்றான் உங்கள் அருமை புதல்வன்” என்று அவள் பங்கிற்கு கேலி செய்தாள், மீரு.

 

தனது குடும்பத்தை இழந்த பின்..  வெகு நாட்கள் கழித்து ஒரு குடும்ப சுழலில் நின்று இருந்தவள்   ஒருவரை ஒருவர் வயது வித்தியாசம் இல்லாமல் கேலி செய்து சிரிப்பதை. கண்டு மனம் நிறைய.. இனி இந்த கூட்டில் தானும் வாழ போகின்றோம் என்று மகிழ்வில் மனம் நிறைந்து சந்தோசக் கண்ணீர் வடித்தாள் நிலா… வந்த முதல் நாளே என் மருமகளை அழவைத்து பார்கின்றேர்களே என்று ஆதரவாய் தேவி அணைத்திட  அவர்  தோள்களில் சாய்ந்து கொண்டு இப்படி ஒரு அழகான குடும்பத்தை எனக்கு தந்ததற்கு நன்றி மித்து என்றாள் நிலா.

 

அடுத்து வந்த முகூர்த்தில்… மித்திரன் மதிநிலா  … திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது….

 

சில வருடங்கள் கடந்து

 

மித்து.. “இன்று உங்கள் மகன்  செய்யும் குறும்பு  தாங்க முடியவில்லை ஒரு இடத்தில நிற்க மாட்டேன் என்கின்றான்! எதிலாவது ஏறுவது, இறங்குவது,  குதிப்பது என்று குரங்கு சேட்டை  செய்து கொண்டே இருக்கின்றான்,  என்று நிலா புலம்ப…

 

“நீ யாரிடம் யாரை போல்  பிள்ளை  வேண்டும் என்று வேண்டிக்கொண்டாய்”  என்று மித்திரன் முடிப்பதற்குள் கட்டிலில் குதித்து கொண்டு இருந்த  உதித்..  அனுமனிடம் என்று  வேகமாய் பதில் தந்தான்,  “குதிக்காதே வானரமே”  “நீ திட்டாதே வானரத்தின் அம்மாவே” என்று கூறி வேகமாய் ஓடி சென்று தந்தை பின் ஒழிந்தான் உதித்.  நிலா..  துரத்தி வரவும்…. அப்பா, அம்மாவை விடாதீர்கள்.. பிடித்து வைத்து கொள்ளுங்கள்.. என்று வேகமாய் அறையை விட்டு வெளியேறினான், என்னை விடுங்கள் மித்து “வரவர அவனுக்கு வாய் நீண்டு விட்டது எல்லாம் நீங்கள் தரும் செல்லம்” என்று   துரத்தி செல்ல முயன்றவளை தனது கை வலையத்திற்குள் கொண்டு வந்தவன், என் மகன் சொல்லிவிட்டான்… உன்னை விடக்  கூடாது என்று… எப்போதாவது தான் அவனே வாய்ப்பு அமைத்து கொடுக்கின்றான், அதை கைநழுவ விடுவேனா என்ன என்றவன் தன் காதல் மனைவியை… கட்டியணைத்து.. காதல் புரிய துவங்கினான்,மித்திரன்.

 

இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.. என்று நிலா அலுத்துக் கொள்ள  “வேறு எதில் குறைவைத்தேன்” , என் கண்மணிக்கு என்று விடாமல்  வினவினான் மித்திரன்.

 

“நமது, டிரஸ்ட்  மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட  பாடம் எடுத்து படிக்க, சில… கல்லூரி நிறுவனித்திடம் பேச வேண்டும் என்றேன்” நீங்கள் இதோ வருகின்றேன் அதோ வருகின்றேன் என்று இழுத்து அடிக்கின்ரீர்கள், என்று நிலா அலுத்து கொள்ள… அவள் நெற்றியில் முட்டி கொண்டு  நான் செய்திருப்பது அறிந்தால்  நீ எனக்கு என்ன தருவாய் என்று ஆவலாய் இதழை பார்த்தவன் அது நீங்கள் சொல்வதை பொறுத்து  என்றாள், நிலா…

 

கல்வி அமைச்சரை சந்தித்து… அவரின் சிபாரிசியில் சில பெரிய கல்லூரியில் நமது  ட்ரெஸ்ட் மாணவர்களுக்கு சீட் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன், அது மட்டும் இல்லை நமது டிரஸ்ட் ஆண்டுவிழாவிற்கு  சிறப்பு விருத்தினராய் அழைப்பு விடுத்து உள்ளேன் அதானல் பலரிடம் இருந்தும் நமது டிரஸ்டக்கு தேவையான உதவி கிடைக்கும் என்றவன் “எங்கு எனக்கானதை கொடுப்பார்களாம்” என்று இதழ் குவித்து அழைத்தான் மித்திரன்.   “என்று நீங்கள் கேட்டு நான்.. கொடுத்து உள்ளேன்.. நீங்கள் தருவதை தானே..மறுக்காமல். வாங்கிக்கொண்டே இருக்கின்றேன்”, என்றதும் இதழோடு இதழ் பொறுத்தி  தனக்கு கிடைத்த சம்மத்திற்கான உரிமையை முழுமையாய் எடுத்து கொண்டான் மித்திரன்.

 

நிலாவின்  சித்தி குடும்பத்தில் இருந்து..   அவள்  தாத்தா நிலா பெயரில் எழுதி வைத்துள்ள  சொத்து பத்திரத்தை  மீட்டவர்கள்  இந்த பணம் இல்லாமல் பணத்தை பிரட்ட முடியாமல் தானே  தனது பெற்றோர்கள் இறந்தார்கள்  தங்களுக்கு தேவையான நேரத்தில் உதவாத பணத்தை உண்மையில் உதவி தேவை படுபவர்களுக்குள் கொடுத்திட  முடிவு எடுத்து  நிலம் விற்று வந்த பணம் முழுவதையும் ஆதரவற்ற குழந்தைகள் படிப்பு செலவிற்கு கொடுத்து விட்டு நிலாவின் ஆசை படி  அவள் அம்மா அப்பா பெயரை இணைத்து வேலுநாயகி என்று  ஓரு டிரஸ்ட் ஆரம்பித்து  இன்னும் பல மாணவர்கள் படிப்பதற்கு தன்னால் ஆன உதவி செய்து கொண்டு இருக்கின்றாள்.. மதிநிலா.. தனது..மனைவி முயற்சி அனைத்திற்கும் நல்ல கணவனாய்  பக்கப்பலமாய்  இருந்து  உதவி செய்து கொண்டு இருக்கின்றான் மித்திரன் இதுவரை சில நூறு பிள்ளைகளின். படிப்பு செலவை மதிநிலாவின் வேலுநாயகி  டிரஸ்ட்  ஏற்றுஉள்ளது

 

எத்தனை.. தடைகள்…  வந்தாலும் .. சூழ்ச்சிகள் சூழ்ந்தாலும்.. உண்மை காதல்  அதை தாண்டி…  வாழ்வில் இணைந்து.. காதலை என்றுமே வீழாமல் வாழ வைக்கும்…

 

மித்திரன்…..காதல் வானில்… என்றும் மறையாத நிலவாய் நிறைந்து விட்டாள்.. மதிநிலா….

 

வெற்று பாறையாய்

இருந்தேன் நானடா….

காதல் உளி கொண்டு

சிலையென வடித்தாய்

நீயடா…..

 

 

 

இனி எல்லாம் சுபமே சுகமே…..

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: