சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9

பாகம் – 9

நினைவுகளின் சுகங்கள் என்னை தாலாட்டும்  

நொடிகளில் எல்லாம்

காற்றில் உன் வாசங்கள்

என்னை தழுவிச் செல்கின்றன !!!

**********************************

ஸ்ருதியின் கோபமுகத்தை பார்த்து கொண்டே குமார் புன்னகையுடன் வழி சொல்லிக் கொடுத்தான்.

“பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு! அவ்வளவுதான் பிரச்சனை முடிந்தது!” இயல்பாய் புன்னகைத்தான்.

ஸ்ருதி அவன் முகத்தையே ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏப்படி எல்லா விசய்த்தையும் இவ்வளவு இயல்பாய் கையால் முடிகிறது!

“பெண் என்றால் பத்து பேர் பெண் கேட்பார்கள், நான்கு பேர் வீட்டில் வந்து பார்பார்கள். நமக்கு எது நல்லது என்பது முடிவு செய்து, நாம் தான் வீட்டில் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்!” குமார் அமைதியான குரலில் எடுத்து சொன்னான்.

ஸ்ருதி புன்னகையுடன் தலையசைத்து கேட்டுக் கொண்டாள். ச்சே நாம் இவ்வளவு பதட்டப்படிடுக்க தேவையேயில்லை புன்னகையுடன் தன் தலையில் தட்டிக் கொண்டாள்.

அதைப் பார்த்து குமாரின் முகத்தில் புன்னகை வந்தது.

“உன்னோடு பேசிக் கொண்டு ஒரு முக்கியமான விசயத்தை சொல்லாமல் விட்டு விட்டேன் பார்!”

“ஏன்ன விசயம்?”

“நான் ஒரு ஆறு மாதம் வேலை விசயமாக வெளிநாடு செல்கிறேன்!”

“ஓ!” ஸ்ருதி முகம் வாடி விட்டது. அவனை பார்க்க முடியாதே.

இருந்தாலும் இது அவனின் முன்னேற்றம் சம்பந்த பட்ட விசயமல்லவா, அதானல் மறு நொடியே அவளின் முகம் மலர்ந்து விட்டது. மனதார வாழ்த்தி அவனை வழி அனுப்பி வைத்தாள்!

************************************************

குமார் வெளி நாட்டிற்கு சென்றுவிட, ஸ்ருதியும் படிப்பு முடித்துவிட்டு தினசுடரில் முழுநேரமாக வேலை செய்ய ஆரமித்தாள்!

ஸ்வேதாவிற்கு திருமணம் செய்யலாம் என்று வீட்டில் எல்லாரும் ஏகமனதாக முடிவெடுத்ததால், ஆறேழு மாதங்கள் வீட்டில் இருக்கிறேன். பிறகு பிரணவுடன் மல்லுகட்டுகிறேன் என்று சொல்லிவிட.. அவர்கள் விட்டில் கல்யாணப் பேச்சை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் டூவிலர் இல்லாமல் ஸ்ருதியால் சாமாளிக்க முடியாமல் போக, வீட்டில் போர் கொடி தூக்க ஆரமித்தாள் ஸ்ருதி. ஸ்வேதா உதவினாள் தான் , இருந்தாலும் கல்யாண கனவுடன் சுற்றி திரிபவளை அடிக்கடி தொல்லை செய்ய அவளுக்கு மனம் வரவில்லை.

“மாட்டேன், மாட்டேன், சாப்பிட மாட்டேன்” ஸ்ருதி போர் கொடி உயர்த்தினாள்

“ஏன் டீ இப்படி படுத்துகிறாய்” லட்சுமி வெறியானார்

“நானா படுத்துகிறேன்? மோகனாவை எனக்கு டூவிலர் வாங்கிக் கொடுக்க சொல்லு, நான் ஓழுங்காக சாப்பிடுகிறேன்”

“உன் அப்பாவிடம், யார் திட்டு வாங்குவது?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது!”

“சாப்பிட்டால் சாப்பிடு, சாப்பிடாவிட்டால் போடி” லட்சுமி வெற்றிகரமாக பின்வாங்கினார்

மோகனசுந்தரம் வந்து சாப்பிட அழைத்தார்

“சாப்பிட வா தங்கம்!”

“முடியாதுப்பா!”

“உன் நல்லதிற்கு தானே சொல்கிறேன்!”

“என் நல்லதிற்கு தானே நானும் கேட்கிறேன்!”

“பிலீஸ் ப்பா!”

மோகனசுந்தரம் எவ்வளவோ சமாளித்துப் பார்க்க.. அவருடைய பருப்பும் ஒன்றும் ஸ்ருதியிடம் வேகவில்லை

ஒருவழியாய் அவரும் டூவிலர் வாங்க சம்மதம் கொடுக்க, ஆசையுடன் அவள் வெஸ்பாவை தேர்ந்தெடுத்தாள்.

*******************************

“ஸ்வேதா” என்ற அலறலுடன் கண்விழித்தாள் ஸ்ருதி.

அவளை சுற்றி அவளுடைய அப்பா, அம்மா என இருவரும் நிற்க காலையில் அவளுடன் இருந்த ஸ்வேதாவை மட்டும் காணவில்லை.

அது இன்று தானா இல்லை.. எத்தனை நாளாக மயங்கிக் கிடக்கிறாள்.. அவளுக்கு புரியவில்லை.

சுற்றி இருந்தவர்களிடம் கேட்பதற்கு அவளுக்கு எந்த கேள்வியும் இருக்கவில்லை. சுற்றி சுற்றி மலங்க மலங்க பார்த்து கொண்டிருந்தாள்.

“ஸ்ருதி!” ஸ்ருதியின் தந்தை மெதுவாய் அழைக்க..

“அப்பா!!!” என்று கதற ஆரமித்தாள் ஸ்ருதி “அப்பா நீங்கள் படித்து படித்து சொன்னீர்களே… நான் கேட்கவில்லை!.”

“அதெல்லாம் ஒன்றும் இல்லையடா!” மோகன சுந்தரம் உடைந்த குரலில் பேசினார். கடைசிவரை வேண்டாம் என்று நின்று இருக்க வேண்டுமோ! குற்ற உணர்வில் அவர் வெந்து கொண்டிருந்தார். தன் மகளை போன்றே பாசம் வைத்திருந்த ஸ்வேதாவின் இழப்பை அவரால் தாங்க முடியவில்லை.

“ஸ்ருதி இங்கே பாரும்மா!” ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியை சமாதானப்படுத்த முன்றார். எந்த சமாதானமும் ஸ்ருதியை எட்டவில்லை.

“ஸ்வேதா என் கண்முன்னாலேயே இறந்துவிட்டாள்… என்னால் தாங்க முடியவில்லையே… ஸ்வேதா… ஸ்வேதா…” ஸ்ருதிவிடாமல் கதறினாள்.

அவளை சுற்றி இருந்தவர்கள் அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்று டாக்டரை அழைத்தார்கள்.

டாக்டர் வந்து தூக்க மாத்திரை மருந்தை ஏற்றினார்.

ஸ்ருதியின் விழிகள் தூக்கத்தை தழுவின. இனி தன்னால் வாழ்நாள் ஸ்வேதாவின் இரத்தம் தோய்ந்த உடலின் நியாபகம் வராமல் தூங்க முடியுமா? உள்ளத்தின் துடிதுடிப்புடன் கண் உறங்கினாள் ஸ்ருதி.

உன் வாசமாவாள்!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

Chitrangatha – 43,44Chitrangatha – 43,44

ஹலோ ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்கும் நன்றி. இந்த வாரம் பல மெசேஜ்கள் மற்றும் மெயிலில் உங்களது கருத்துக்களைப் படித்தேன். எப்படி கதை போகலாம்னு டிஸ்கஸ் பண்ணிருந்திங்க. ஜிஷ்ணுவுக்காக ப்ரே பண்ணும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அப்படியே

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46

46 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி இரண்டுபேரும் சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா சரி அது எப்போ எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, லவ் அட் பஸ்ட் சைட்டா, என்ன நடந்ததுனு எங்களுக்கு முதல இருந்து சொல்லு” என

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 15ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 15

15 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் விடிந்ததும் ஆதர்ஷ் அவளை எண்ணிக்கொண்டே சிரிப்புடனே புரண்டு படுக்க வெளியே சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்தவன் மணி ஆறே கால் என காட்ட என் செல்லம் எந்திரிச்சுட்டாளா? என்றவன் வெளியே வந்து அவள் துவைக்க