Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 10

வருகை

10

என்

இதயத்தில்

மெல்லத் திருடனாய்

புகுந்து கொண்டு

கள்ளச் சிரிப்பு சிரிக்கிறாய்

இதயம் பறிபோனதை கூட

இன்பமாய் ரசிக்கிறேன்

நான்…….

 

ஸ்ரீயின் திட்டத்தை நிறைவேற்ற முதற்கட்டமாய் தன்னுடன் வெளியே அழைத்தான் நந்து. அவள் ஏதோ கூற முற்படும் போது நீ ஸ்ரீயின் பி.ஏ என்று தெரியும் இருந்தாலும் முதலிலிருந்தே இங்கு வேலை செய்வதால் இது உனக்கு சுலபமாக இருக்கும் என்று நினைத்தேன், இல்லையேல் மாலதியையே அழைத்து சென்று இருப்பேன், என்று அவள் மறுக்க முடியாதபடி விளக்கம் தந்தான்  நந்து.

அதுவும் சரி தான் இந்த மாலதி புதிதாக நந்துவின் பி. ஏ வாக நியமிக்கபட்டவள் வேலையில் பல சந்தேககங்கள் என்று தன்னிடம் தான் வந்து நிற்பாள்.  ஸ்ரீ தன் வேலையில் எந்த தவறும் கண்டுவிடக்கூடாது என்று மிகவும் கவனமாய் இருப்பாள், மாலதியை பார்த்தால் ஒருபுறம்  கோபமாகவும், மறுபுறம் பாவமாகவும் தோன்றும், இவளும் இந்த ஸ்ரீயை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்று பலமுறை ஸ்ரீ பற்றிய பேச்சுகளை தவிர்த்து இருக்கிறாள் பிரியா. ஏன் தான் இந்த பெண்கள் அவனை”ஈ” யாய் மொய்கின்றனர், என் வாழ்வையே பாலைவனம் போல் உணரவைக்கின்றனர் என்ற ப்ரியாவின் தீவிர சிந்தனையில் குறுக்கிட்டான் நந்து.

 

என்ன பிரியா வரமுடியும் தானே இல்லை ஸ்ரீயிடம் அனுமதி பெறவேண்டுமா என்று சீண்டினான், நான் வேண்டும் என்றால் தொலைபேசியில் அழைத்து தருகிறேன் அனுமதி கேட்கிறாயா? ஸ்ரீ பற்றிய கேள்வியில் தன்னிலை உணர்ந்தவளாய், ஸ்ரீயின் உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு, நீங்கள் சொல்லி உங்கள் தம்பி மறுப்பாரா என்ன? என்று மறு கேள்விகேட்டு தான் வருவதற்கு ஒப்புதல் அளித்தாள், பிரியா.

 

தொழில் முறை சந்திப்பு முடிந்தவுடன், நேரே  அலுவலகம் செல்லாமல் காரை  சற்று  ஓரமாய் நிறுத்தியவன் இங்கு அருகில் என் உறவினர் வீடு உள்ளது, இந்த பக்கம் வந்தால் இங்கு வராமல் செல்லமாட்டேன், கொஞ்சநேரம்  தான் பார்த்ததும் கிளம்பிவிடலாம் என்று அழைத்தான் நந்து, பிரியா மறுப்பு சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே ஏன் என்னோடு வந்தது தெரிந்தால்  ஸ்ரீ கோபித்துக் கொள்வானா பிரியா என்று சிரித்தான், நந்து.  முதலில் இருந்தே நந்துவின் வார்த்தையில் சிறு வேறுபாடு இருந்ததை உணர்ந்தவள் இவருக்கு ஏதேனும் தெரிந்து இ்ருக்குமோ? என்று ஐயம் தோன்றும்முன், நான் கேட்பது புரியவில்லையா? ஏன் இப்படி முழிக்கிறாய்,  ஸ்ரீ ஏதாவது வேலை தந்து இன்னும் முடிக்காமல் இருக்கிறாயா என்ற சந்தேகத்தில் தான் கேட்டேன் என்று அவனே பதிலும் தந்தான் நந்து.   அப்படியெல்லாம்  ஒன்றுமில்லை சார். இது வரை இப்படி யாருடனும் தனியாய் சென்றது இல்லை அதனால் தான் சற்று தயங்கினேன் என்று உளறி கொட்டினாள். அவளின் பதிலைக்கேட்டு நகைத்தவன் சென்றது இல்லையா? நீ சொன்னால் உண்மையாய் தான் இருக்கும், நீயே நம்பிக்கைக்கு உரியவள் தானே பிரியா? என் கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை போகலாமா என்றேன். நந்துவின் பேச்சில் இருந்த வேறுபாடு தற்போது தெளிவாய் புரிந்தது ப்ரியாவிற்கு, இவருக்கு எங்கள்  விபரம் தெரிந்து உள்ளது, ஸ்ரீயின் கீழ் தன்னை பணியில் நியமித்ததன் காரணம் இதுவாக தான்  இருக்கும். ஸ்ரீயின் அண்ணன் தானே வேறு எப்படி இருப்பார் என்று மனதிற்குள் அர்ச்சனை செய்தபடி பதில் கூறினாள் சென்று இருக்கிறேன் சார் ஆனால் அப்படி சென்றதன் விளைவாய் என் வாழ்நாள் முழுவதற்கும் தண்டனை அனுபவிக்கிறேன் என்றாள் ப்ரியா.

 

 

ஸ்ரீக்கு ஏற்ற ஜோடி தான்  என்று மனதில் நினைத்துக்கொண்டு காரை கிளப்பியவன் சில தெருக்கள் கடந்து பெரியவீட்டின் முன் காரை நிறுத்தினான்.   அந்த வீட்டில் இருந்த பெரியவர் நந்துவிற்கு  நல்ல  வரவேற்பு கொடுத்தார். என்னப்பா நந்து மாமா நினைவு இப்போதுதான் வந்ததா? எப்படி இருக்கிறான் உன் தம்பி ஸ்ரீ   அந்த வேலுவின் வேலை தான் இந்த விபத்து, ஆனால் அதுக்கு அவனை வருமான வரி துறையிடம் இப்படி மாட்டிவைத்தானே உன் தம்பி இனி ஸ்ரீராம் என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கி போவார்கள் பார் என்று பெருமைபெசியவர். நானும் மருத்துவமனைக்கு வந்து பார்க்க நினைத்தேன், ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்ததில் இருந்து என்னை பார்க்க வரவில்லையா? இன்னும் கோபமாய் இருக்கிறானோ என்று தயக்கமாக இருந்தது என்று முடித்தார் சோமநாதன். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மாமா, அவன் தான் என்னை இங்கு அனுப்பிவைத்ததே, மாமாவிற்கு இன்னும் என் மேல் கோபம்  போகவில்லை போல அதனால் தான் இன்னும் என்னை வந்து பார்க்கவில்லை என்று வருத்தப்பட்டான் என்று பிரியாவை பார்த்தபடி கூறினான்.  நந்துவின் பதிலில் பெரியவரின் முகம் தெளிவுற்றது, யார் இந்த பெண் பார்க்க சாந்தமாய் லட்சணமாய் உள்ளாள், பெரியவரின் கேள்விக்கு அவரை நிமிர்ந்து பார்த்தவள் அவர் தன்னை ஆராயும் பார்வை பார்த்ததில் சற்று குழப்பம் வந்தது இதே போல் செயலை எங்கோ பார்த்தது போல் ஒரு உறுத்தல்  எங்கு என்று சரியாக  நினைவில்லை ப்ரியாவிற்கு.  பாருங்கள் வந்ததிலிருந்து நாமே பேசிக்கொண்டு இருக்கின்றோம், இது பிரியா ஸ்ரீயின் பி. ஏ. என்று அறிமுகப்படுத்தினான்,நந்து . ஒரு நொடி அவர் கண்களில் சிறு தடுமாற்றம் தோன்றி  மறைந்தது, பார் நீங்கள் வந்து எவ்வளவு நேரம் ஆகின்றது இன்னும் உங்களுக்கு குடிக்க ஒன்றும் தரவில்லை, வேதா என்று குரல் கொடுத்தார். உள்ளருந்து ஒரு பெண்மணி வந்தார் சோமாநாதனின் மனைவி போலும் அவரிடம் இருந்த கனிவு அந்த பெண்மணியிடம் பெயரளவிற்கு கூடயில்லை  ஒரு திமிர் கலந்த அலட்சிய பார்வையை செலுத்தியபடி வந்தவள் நந்துவை கண்டு எப்படி இருக்கீங்க உங்க தம்பி  அம்மா, அப்பா என்று சம்பிராயதத்திற்கு நலம் விசாரித்தவள் பிரியா அங்கு இருப்பதாய் கூட கருதவில்லை ஏன் இவருக்கு தன் மீது இவ்வளவு அலட்சியம் என்று குழம்பினாள் பிரியா. அவள் சிந்தனையை தடை செய்வதுபோல அழுத்தமான காலடிச்சத்தத்துடன் உள்ளே வந்தாள் அஞ்சலி, உள்ளே வரும்போதே நந்துவையும் ப்ரியாவைவும்  கண்டுவிட்டாள் என்பது  ஒரு நொடி தயங்கி  பின் வந்ததில் நன்கு தெரிந்தது. அஞ்சலியை இங்கு எதிர்பார்க்காத பிரியா அதிர்ந்து போனாள் ஆனால் அவளோ பிரியாவை இதற்கு முன் பார்த்ததேயில்லை என்பது போல் நடந்து கொண்டாள், அஞ்சலியை பின் தொடர்ந்து வந்தவனை பார்த்து  நந்து எப்போது டெல்லியில் இருந்து வந்தீர்கள் என்று விசாரித்து கொண்டு இருந்தான். ஏதோ தவறு நடந்துள்ளது என்று குழப்பத்தில் இருந்த பிரியாவை அழைத்த சோமாநாதன் இது என் மகள் அஞ்சலி இது அவள் கணவர் அருண் என்று அறிமுகப் படுத்தினார். இவர் அஞ்சலின் தந்தை அதனால் தான் இவரின் பார்வை தன்னை குழப்பியது என்று எண்ணினாள், அஞ்சலி கணவர் அருண் என்றால், அஞ்சலி ஸ்ரீயை திருமணம் செய்யவில்லையா, அப்படியென்றால் இவள் சொன்னது பொய்யா? ஸ்ரீயும் அஞ்சலியும் ஒன்றாய் அமர்ந்து இருந்த புகைப்படம் காண்பித்தாளே  எங்கள் நிச்சயதார்த்தப் புகைப்படம் என்று கூட சொன்னாள், அவள் தோழிகள் கூட நிச்சயதார்த்ததிற்கு சென்றதாக சொன்னார்கள் எல்லாம் பொய்யா? இவளின் பேச்சை நம்பி எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று கலங்கினாள். ஒரு பொய்யை நம்பி தன் வாழ்வின் சொர்க்கத்தை இழந்துவிட்டோமே என்று வருந்தினாள், இன்றும் அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நன்றாய் நினைவு இருக்கின்றது, உன்னிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்று அவருக்கு தெரியவில்லை. வெளியில் யாருக்கும் சொல்லாமல் இரு வீட்டினர் மட்டுமே இருந்தோம் எங்கு உனக்கு விபரம் தெரிந்தால் வந்து பிரச்சனை செய்வாயோ என்று பயம் ஸ்ரீக்கு, நான் கூட சொன்னேன் பிரியா உன்னை உண்மையாய் காதலிக்கிறாள் என்று, ஆனால் ஸ்ரீக்கு அவரின் அம்மா அப்பா சம்மதம் தான் முக்கியம் என்கிறார். தன் தரம் தாழ்த்த இடத்தில் பெண் எடுக்க சம்மதிக்க மாட்டர்கள் இதை சொன்னால் உனக்கு புரியாது என்கிறார். இப்பொது கூட பார் உன்னிடம்  எப்படி கூறுவது என்று குழப்பத்தில் உள்ளார், கூடிய விரைவில் எனக்கும் ஸ்ரீக்கும் திருமணம், அதனால் எந்த பிரச்சனையும் செய்யாமல் நீயே விலகிவிடு,  நீயாய் விலகுவது போல் இருந்தால் தான் ஸ்ரீயும் எந்த குற்றஉணர்வு இல்லாமல் என்னோடு சந்தோசமாக வாழ முடியுமில்லை உனக்கு துரோகம் செய்ததை எண்ணி காலம் முழுவதும் குற்றவுணர்விலேயே காலத்தை கடத்துவார் என்று உண்மை போல பேசினாள் அஞ்சலி.

 

பழைய நினைவில் மூழ்கியிருந்தவளை நந்து நாம் கிளம்புவோமா? என்ற குரல் சுயநினைவிற்கு அழைத்து வந்தது.  ப்ரியாவின் முக மாற்றத்தை கண்ட நந்துவிற்கு இனி எல்லாம் தெளிவு பெறும் என்ற நம்பிக்கை வந்தது, அனைவரிடமும் விடைபெற்று கிளம்பும் போது அஞ்சலியை பார்த்தவள் அதிர்ந்து போனாள், அப்போது  அஞ்சலி ஏளனம் கலந்த பார்வையில் பிரியாவை பார்த்துக்கொண்டு இருந்தாள். காரில் ஏறியதும் பிரியா கேட்காமலேயே நந்து சில விபரங்கள் சொன்னான். அஞ்சலியும் ஸ்ரீயும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், அஞ்சலிக்கு ஸ்ரீயை திருமணம் செய்வதாய் இருந்தது சோமநாதன் மாமாவின் விருப்பமும் அதுவே, மூன்று வருடங்களுக்கு முன் திருமண பேச்சு வந்தபோது தான் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாக கூறி எல்லாவற்றையும் நிறுத்த சொல்லிவிட்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டான், இப்போதுதான் திருப்பி வந்தான், அப்படியென்றால் உங்கள் தம்பிக்கு திருமணம் என்று இழுத்தவளிடம் நடக்கவில்லை என்று முடித்தான் நந்து. ப்ரியாவின் மனதில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை, இந்த நிமிடமே ஸ்ரீயை காண வேண்டும் என்று உள்ளம் பரப்பரத்தது, அவள் எண்ணத்தை அறிந்தவனாய், இது ஸ்ரீ இருக்கும் மருத்துவமனையில் பார்வையாளர் நேரம் தான் ஸ்ரீயை பார்க்க வருகிறாயா? என்றவனின் முகத்தை நன்றியுடன் பார்த்தாள் பிரியா.

 

ஸ்ரீயின் முன் குற்றவுணர்வுடன் நின்றவளை  கனிவுடன் பார்த்தான் ஸ்ரீ.  இன்னும் ஏதோ குழப்பத்தில் உள்ளதை தெளிவாய் காட்டியது அவள் முகம், விளக்கம் தரும் கடமையுணர்ந்தவனாய் அவளை அருகில் அழைத்தான்.

 

அவனை நெருங்கியவள் முதலில் உச்சி முதல் பாதம் வரை பார்வையில்  அளவெடுத்தவள், சிறு காயங்கள் ஒரு காலில் கட்டு தவிர பெரிய ஆபத்து இல்லை என்று நிம்மதி அடைந்தாள். அடி படாத பக்கமாய் சென்று நின்றவளை,  தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான் ஸ்ரீ, ஹலோ ஸ்ரீ பிரியா இங்கு நானும் இருக்கின்றேன் என்று நினைவு படுத்தினான் நந்து, நாங்கள்  இருக்க சொல்லவில்லையே என்று ஸ்ரீ கூறிட,  நந்துவின் குரலில் பிரியா விலக முயல்வதை கண்டு  இப்போது தான் எல்லாம் தெளிவாகிவிட்டதே இன்னும் என்ன விலகல் என்று மிரட்டினான், நந்து சென்றபின்னும் அங்கு வெகு நேரம் அமைதி நிலவியது, முதலில் பேசியது  ஸ்ரீ தான். ப்ரியாவிற்கு இன்னும் குழப்பம் தெளிவுராத நிலையில் எதுவும் பேச தோன்றமல் அவன் அருகாமை தந்த சுகத்தை அனுபவித்த படி அமைதியாய்,  நடந்த தவறில் பெரும் பகுதி தன்னுடையது என்று உணர்ந்து கண்ணீர் சிந்தினாள்.

 

இன்னும் என்ன அழுகையை நிறுத்தபோகிறாயா இல்லையா என்று கோபம் கொண்டு ஸ்ரீ பேசிட வேகமாய் கன்னத்தில் வழிந்த  கண்ணீரை துடைத்து கொண்டு ஸ்ரீயை நோக்கினாள் அவன் வார்த்தையில் இருந்த கடுமை முகத்திலில்லை மாறாக சிரித்த படி இருந்தான். நடந்ததில் உன் தவறு மட்டும் இல்லை என்னுடைய தவறும் உள்ளது, ஆனால் ஏன் அப்படி பேசினாய் என்று மட்டும் புரியவில்லை என்று பேச்சை துவங்கினான் ஸ்ரீ. இதில் உங்கள் தவறு என்ன நான் தான் யாரோ ஏதோ சொன்னதை கேட்டு உங்களை தவறாக நினைத்து விட்டேன். நான் விலகினால் தான் உங்கள் வாழ்க்கை நிம்மதி யாக இருக்கும் என்று முட்டாள் தனமாய் நினைத்து விட்டேன் என்னை மன்னித்து விடு ஸ்ரீ என்று அன்று நடந்ததை விளக்கினாள்.  அவள் கூறிய அனைத்தையும் கேட்டவன் நான்கு வருடங்களுக்கு முன் நந்து மது திருமணம் தான் நடந்தது, அப்போது எடுத்த புகைப்படமாகத் தான் இருக்கும்.  உன்னை பிரிந்து எனக்கு நிம்மதியா? உனக்கு திருமணம் என்று தீபக் சொன்னதும் எப்படி நொறுங்கி போய்விட்டேன் தெரியுமா? இங்கு யார் முகத்தையும் பார்க்க பிடிக்காமல் இங்கிருந்து சென்றுவிட்டேன். எல்லோரும் இருந்தும் அனாதையாய் உணர்தேன்,  இதில் என் தவறு என்ன தெரியுமா, இதுவரை என்னிடம் கோபமாய் பேசாத நீ அன்று அப்படி நடந்து கொள்ள ஏதேனும் காரணம் இருக்கும் அதை புரிந்து கொள்ளாமல் பிரச்சனை உன்னால் தான் நீ தான் முதலில் வர வேண்டும் என்று தயங்கி நின்றது, என் முதல் தவறு, நீ பேசியது தவறு என்று உனக்கு உணர்த்தி இருக்க வேண்டும், அதை செய்யாமல் நானும் சிறுபிள்ளை போல் உன் மேல் கோபம் கொண்டு இருந்திருக்கக்கூடாது. நீயும் என்னை மன்னித்துவிடு பிரியா இதுவே நான் உன்னிடம் கேட்கும் கடைசி மன்னிப்பாக இருக்கும் என்று சிரித்தான், ஸ்ரீ.

 

அவன் சிரிப்பில் இது வரை பட்ட துன்பம் எல்லாம் காணாமல் போனது. உங்கள் வேலை தானே நந்து சார் என்னை அஞ்சலி  வீட்டிற்கு அழைத்து சென்றது என்று ரகசியாமாய் புன்னகை செய்தாள் பிரியா

 

. வேற என்ன செய்வது தீபக் வந்து சொன்னதும் தான் நீ   நடந்துகொண்டதற்கான காரணம் தெரிந்தது. நான் வேற இனி நீயாக வராமல் வரமாட்டேன் என்று வீரவசனம் வேறு பேசிவிட்டு உன் முன் எப்படி வருவது  அதனால் தான் இந்த திட்டம் நல்லவேளை அஞ்சலியும் டெல்லியில் இருந்து வந்ததாக தெரிந்தது. அவளை கண்டாள் நிச்சயம் ஏதோ தவறு என்று யோசிப்பாய் என்று தெரியும், என் திட்டம் சரியாக வேலை செய்து உன்னை எங்கு சேர்க்கவேண்டுமோ அங்கு சேர்த்தது பார்த்தாயா என்று தன் மார்பில் சாய்ந்து இருந்தவளை சுட்டி காட்டினான், ஸ்ரீ.

 

 

மனதின் குழப்பம் மறைய ஸ்ரீன் கன்னத்தில் இதழ் பதித்தாள் பிரியா.  ம்… எத்தனை நாட்கள் வாரங்கள் வருடங்கள் ஆகிவிட்டன, உன் இதழனைப்பிற்க்கு என்று ஏற்ற இறக்கங்களுடன் கூறி புன்னகைத்தான் ஸ்ரீ.  பொய் முழுபொய் வந்த இரண்டாம் நாள் தாங்கள் என்ன செய்தீர்களாம் என்று அன்று நடந்ததை நினைவுபடுத்தினாள் பிரியா. நான் கூறியது நீயாக தருவது என்று பதில் தந்தான் ஸ்ரீ.  நாங்கள் உள்ளே வரலாமா என்ற அனுமதியுடன் நந்துவை தொடர்ந்து மதி, அவர்கள் குழந்தை சமீ உள்ளே வந்தனர்.

ஸ்ரீயை விட்டு விலகி நின்றவளை நெருங்கி இப்படி ஒரு அழகிகாகத்தான் நீ தவம் இருந்தாய் என்றால் அதில் தவறு இல்லை என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள், மதி  நான் மதி ஸ்ரீயின் தோழி என்று கூறியவளை முறைத்தான் நந்து, உனக்காக உலகையே புரட்டிப் போடுவான் எங்கள் ஸ்ரீ, ஆனால் என் கணவரோ திருமணத்திற்கு பின்பு கூட தன் காதலை சொல்ல தயங்கினார் தெரியுமா என்று தன் கணவன் நந்துவை சீண்டினாள் மதி. இவர்கள் பேச்சின் பொருள் புரியாமல் விழித்த குழந்தையை கண்டு ரசித்துசிரித்தாள் பிரியா. செல்லமாய் ஸ்ரீயின் தோள்களில் சாய்ந்தபடி யார் இவங்க ஸ்ரீப்பா அன்னைக்கு போன்ல அப்பாகிட்ட பேசனுன்னு சொன்னதுக்கு உங்ககிட்ட கொடுத்தாங்களே அந்த பி. ஏ வா? என்று கொஞ்சினாள் ஷமிக்சா.  அவர்களே தான் ஆனால் பி. ஏ இல்லை இனி உன் சித்தி என்று ஸ்ரீயிடமிருந்தது பிள்ளையை பிரித்தெடுத்தாள் மதி.

மதியின் வார்த்தையில் வெட்கத்தில் முகம் சிவந்தவளை நோக்கி கண்ணடித்து சிரித்து மேலும் சிவக்க வைத்தான் அவளுடைய ஸ்ரீ என்னும் ஸ்ரீராம்.  ஏற்கனவே நந்துவின் மூலம் முழுவிபரம் அறிந்ததால் ஸ்ரீயின் பெற்றோர் ஆனந்தத்தில் இருந்தனர். சிறிதும் தாமதிக்காமல் ப்ரியாவின் வீட்ற்கே சென்று சம்மந்தம் பேசி திருமணத்திற்காக நாளும் குறித்துவிட்டனர்.

 

ப்ரியாவின் பெற்றோர்ரோ திருமணமே வேண்டாம் என்று இருந்த மகளின் மனதில் இருந்த மர்மம் புரிய, அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். மருத்துவமனை வாசம் முடிந்து வந்த ஸ்ரீ ஒரு சுப தினத்தில் ப்ரியாவின் கழுத்தில் பொன் தாலி இட்டு தன்னவளாய் ஏற்றான்.

 

 

ஆணாய் நீ

பிறந்தற்க்கு நன்றி….

என்னவன்

ஆனதற்கு நன்றி

என் பெண்மையை

உணர்த்தியதற்க்கு நன்றி….

என் கழுத்தில்

பொன் தாலியிட்டதற்க்கு நன்றி….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: