Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 08

வருகை

8

 

 

 

என் இதயத்தில்

உன்னை சிறைவைத்த

குற்றதிற்காகத்தான்

உன் முகத்தை

என்னிடம் காட்டாமல்

செல்கிறாயோ….

 

 

நான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று அழைத்த குழந்தையின் குரல் நிச்சயம் ஸ்ரீயை விட்டு பிரியும் எண்ணத்தை உறுதி செய்தது, ஸ்ரீயின் அறையில் இருந்த போன் அடித்தது இருவரும் இல்லை என்பதால் பிரியாவே அதை எடுத்தாள், கொஞ்சும் குரலில் என் அப்பா அங்கு இருக்கின்றாரா? ப்ளீஸ் அப்பாவிடம் கொடுங்கள் என்று கொஞ்சியது, உன் அப்பா வெளியே சென்றிருக்கின்றார் வந்ததும் சொல்கிறேன் என்றவளுக்கு அழகாய் நன்றி உரைத்து சென்றது. அந்த குரலும் குழந்தையின் மொழியும் பிரியாவை சிந்திக்க வைத்தது. ஒரு அழகான குடும்பத்தை கலைக்க கூடாது என்று முடிவு செய்து கொண்டாள் பிரியா.

 

ஸ்ரீ வந்ததும் அவன்  குழந்தை அழைத்தது கூறினாள், தன் அலைஅலையான கூந்தலை கோதிய படி மீண்டும் குழந்தையை அழைத்தான் ஸ்ரீ.  ஒரு வேலை நாம் தான்  அவனை தவறாக புரிந்துவைத்திருக்கின்றோமோ  என்ற எண்ணத்தில் அவன் பேசுவதை கவனித்தாள், ஹ்ம் கண்டிப்பாக வாங்கி வருகிறேன் என்று உறுதி அளித்தவன் இல்லை என்றால் தோப்புக்கரணம் வேண்டாம் வேண்டாம் அப்பா பாவம்டா என்று குழந்தையின் மிரட்டலுக்கு கொஞ்சி கொண்டு இருந்தான், ஸ்ரீ.

 

இவன் குடும்பம் குழந்தை என்று இருப்பவன், முதல் சந்திப்பிலேயே எத்தனை குழந்தை என்று கேட்டவன்,அவணை போல் தானும் திருமணம் செய்து இருப்பேன் என்ற எண்ணத்தில் வினவியபவன் அது இல்லை என்றதும் அவனை எண்ணி தனிமையில் இருப்பதாய் நினைத்து விட்டான், முதல் காதலை கண்டதும் சற்று தடுமாறி விட்டான் தான் விலகி விட்டால் மீண்டும் இவன் வாழ்வு சீராகிவிடும் என்று தன் முடிவை தீர்மானித்தாள், பிரியா.

 

மனதின் சலனம் நீங்க ஒரே வழி ஸ்ரீயை நிரந்தரமாய் பிரிவது மட்டும் தான், முடிவு எடுத்த பின்னும் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஆனால் தன் முடிவில் தெளிவாய் இருந்தாள். இரவின் இருள் தன் வாழ்விலும் சூழ்ந்ததாய் உணர்ந்தாள் பிரியா.

 

அலுவலகத்தில் ப்ரியாவின் நடவடிக்கை வினோதமாய் இருந்தது, ஸ்ரீயின் கேள்விகளுக்கு ஒரு வரியில் பதில் வந்தது, அவன் முகம் பார்த்து பேசுவதை தவிர்த்தாள், சொல்லும் வேலையை’ செய்து கொடுத்துவிட்டு தாமதிக்காமல் அறையை விட்டு வெளியேறினாள். இந்த ப்ராஜெக்ட் முடியவும் ப்ரியாவிடம் அவள் கோபதிற்காண காரணம் அறிந்து அவள் மனதை மாற்றி, திருமணதிற்கு  அவளின் சம்மதம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு ப்ரியாவின் பாராமுகம் வேடிக்கையாகத்தான் இருந்தது. டெண்டர் பணி முடிந்து ப்ராஜெக்ட் ஸ்ரீயின் குழுவிற்கே வழங்கப்பட்டது, வேலு நேரடியாகவே வந்து ஸ்ரீயை மிரட்டிவிட்டு சென்றான் எதையும் ஸ்ரீ பொருட்படுத்தவில்லை, அவன் நினைவில் எல்லாம் பிரியாவே  நிறைந்து இருந்தாள் அவளிடம் தன் மனதின் எண்ணத்தை எப்படி எடுத்துரைப்பது என்று பலமுறை தனக்குளே ஆலோசித்த படி இருந்தான் ஸ்ரீ.

 

ப்ரியாவை அழைத்து தன்நிலை எடுத்துறைத்தான், ஆனால் பிரியாவோ அவன் சொல்லும் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை, தான் இந்த வேலையை விட்டு விலகுவது பற்றி கூறியவளை, தடுத்து, நாம் ஒருவருக்கொருவர் காதலித்தவர்கள், இன்னும் நமக்குள் அந்த அன்பு மாறாமல் உள்ளது என்பது உனக்கும் தெரியும், இந்த இடைப்பட்ட நான்கு வருடங்களை மறந்து விட்டு நாம் புதியதாய் நம் வாழ்வை துவங்கவோம் என்றவனிடம், தன் மனதில் அவனுக்கு இடமேயில்லை என்று இடியாய் இருந்தது ப்ரியாவின் பதில் இருந்தும் அவள் மனதை மாற்றிவிடும் எண்ணத்தில் அவள் அருகில் சென்று உளறாதே, இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்திருக்கும் உன்னை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை பிரியா, என்று அவள் கரத்தை பற்றினான் ஸ்ரீ. கைகளை விளக்க முயன்று தோற்று போனவள், தன்னை முழுமையாய் இழந்துவிடும் முன் அவனிடம் இருந்து தப்பும் எண்ணத்தில் உங்களுக்கு தேவை என் மனது இல்லை, எலும்பும் தோலும் நிறைத்த இந்த உடம்பு மட்டுமே, அதனால் தான் என் மனதில் நீங்கள் இல்லை என்று தெரிந்த  பின்பும் என்னை தொந்தரவு செய்கின்றீர்கள்  என்று தான் இது  வரை நினைத்துகூட பார்க்காத பழியை ஸ்ரீயின் மேல் சுமத்தினாள், அவள் எய்த வார்த்தை சரியாக இலக்கை தாக்கியது தீ சுட்டார் போல் அவளை விட்டு விலகியவன், உன் முடிவு இது தான் எனும் போது இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன், நீ கூறும் குற்றச்சாட்டு பொய் என்று உன் மனத்திற்கே தெரியும் இருந்தும் அதை ஏற்கும் மனநிலையில் நீ இல்லை, இனி நீயே வரும் வரை நான் காத்திருப்பேன் என்று அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ஸ்ரீ.

 

ப்ரியாவின் வார்த்தையால் ஏற்பட்ட வலியால் தன் நிதானம் இழந்து, எதிரில் வந்த லாரியின் மீது மோதினான். அருகில் உள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டவன்  உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் கால்களில் அடிப்பட்டதால் அவன் சிறிது நாட்கள் மருத்துவமனையிலிருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். நந்துவின் மூலம் விபரம் அறிந்தவள் பதறி போனாள் தன்னால் தான் ஸ்ரீக்கு இந்த நிலை என்று புலம்பியவளை எப்படி தேற்றுவது என்று புரியவில்லை நந்துவிற்கு, ஸ்ரீயின் மீது உள்ள அன்பு இன்னும் குறையவில்லை இருந்தும் ஏன் விலகி நிற்கின்றாள்  என்று தெரிய முயற்ச்சிதான், அவர்கள் வாழ்வில் ஒன்று சேரவேண்டும் என்று உறுதியாய் இருந்தான் நந்து. ப்ரியாவின் அழுகையை கண்டு இது அலுவலகம் பிரியா, உன்னை கட்டுப்படுத்த முயற்சி செய், நீ ஏன் என்னுடன் மருத்துவமனை வரக்கூடாது. உன்னை பார்த்தால் அவன் மிகவும் சந்தோசப்படுவன் என்றான் நந்து. நான் எப்படி அங்கு வருவது அங்கு அவர் குடும்பம் இருக்கும் என்று அலுவலகத்துக்கு விடுப்பு கூறிவிட்டு  வெளியேறினாள் . தன் கால் போனபோக்கில் சென்றவளை தடுத்து நிறுத்தியது ஒரு குரல், தீபக் அண்ணா எப்படி  இருக்கின்றீர்கள். என்று நலம் விசாரிதவள்  குரலில் இருந்த துயரம் உணர்ந்தவன்  என்னவென்று விபரம் விசாரிக்க, நடந்ததை கூறினாள், பிரியா.  எந்த மருத்துவமனை என்று விபரம் அறிந்து கொண்டு பிரியாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு தீபக் சென்றது ஸ்ரீ அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு தான். வரவேற்பில் அறை விபரம் அறிந்து சென்றவனை கண்ட ஸ்ரீ மிகவும் மகிழ்ந்து போனான், பின் தீபக் கேள்வியில் என்ன உளருகிறாய் என்றவன்  வாய்விட்டு சிரித்தபடி உனக்கும் உன் தங்கை போல பைத்தியம் பிடித்துவிட்டதா, எனக்கு கல்யாணமா, என்றன் ஸ்ரீ.

 

அந்த நேரம் உள்ளே வந்த நந்து, அருகில் ஒருவன் இருப்பதை கூட நினைக்காமல் உனக்கும் ப்ரியாவிற்கும் என்ன பிரச்சனை அதை சொன்னால் தான் என்னால் உங்கள் திருமண விசயத்தில் முடுவு எடுக்க முடியும் என்று அண்ணனாய் வினவினான், நந்து.

 

எங்கள் திருமண முடிவு என்னிடம் மட்டுமில்லை  அண்ணா, கண்னை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பேன் என்று அடம்பிடிப்பவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது, அவளுக்கு என்மீது காதலில்லை இதை இத்தோடு விட்டுவிடு என்று வறண்ட குரலில் கூறிவனிடம் உன்மீது காதலில்லாமல் தான் உன் விபத்து செய்தி  கேள்விப்பட்டு அலுவலகம் என்றும் பாராமல் கதறி அழுதாளா என்று பிரியவிற்கு ஆதரவாக பேசினான் நந்து. அவனை விரத்தியாக பார்த்த ஸ்ரீ இது அவளே என்னிடம் கூறியது நந்து என்று வலிமிகுந்த குரலில் கூறினான்.

 

இருவரும் இப்படி சின்ன குழந்தை போல் அடம்பிடித்தால் எப்படி என்று அலுத்து கொண்டான் நந்து. ஸ்ரீ யின் பிடிவாதத்திற்கு பிரியா காரணம் என்றால் ப்ரியாவின் பிடிவாதத்திற்கு யார் காரணம் என்று எனக்கு தெரியும் அது அஞ்சலி என்று ரகசியம் உடைத்தான் தீபக். அண்னன் தம்பி இருவரும் புரியாமல் நின்றனர், பின் அஞ்சலி என்ன செய்தாள் என்று ஸ்ரீயும், நம் சோமநாதன் மாமா மகள் அஞ்சலியை பற்றியா சொல்கிறாய் என்று நந்துவும் வினவ, நடந்தவற்றை விளக்கினான் தீபக்.

 

தீபக் கூறியதை கேட்டு இருவரும் திகைக்கையில் முதலில் தெளிந்தவன் ஸ்ரீ தான், இனி கவலை இல்லை என்ன கோபம் என்று புரியாமல் இருந்தது, இனி இதை சரி செய்துவிடலாம் என்று நம்பிக்கை வந்துவிட்டது. முதலில் அவள் நினைப்பது தவறு என்று புரிய வைக்க வேண்டும் என்று தன் திட்டத்தை விளக்கினான் ஸ்ரீ.

 

என் இதயத்தை

உனக்கும்

உன் இதயத்தை

எனக்கும்

மாற்றிபொருத்தினால்

மட்டுமே

தெரியும் உனக்கு

அங்கு நீ மட்டும் இருந்தது……

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: