Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 07

வருகை

7

 

 

 

என் கோபத்தில் உள்ளது

விரோதம் அல்ல

உன் மீது கொண்ட

வினோதமான காதல்….

 

என்னை

மன்னித்துவிடு  என்றேன்

என்னை

மறந்துவிடு என்றாய்

நானும் மறந்தேன்

உன்னையல்ல

உன் காதலால்

என்னை……

 

 

ஸ்ரீ தன் மனதிலிருந்த பாரம் குறைய அவன் முகத்தில் எப்போதும் இயல்பாய் குடியிருக்கும்  புன்னகை கூட எட்டி பார்த்தது, ஆனால் ப்ரியாவின் மனநிலை அதற்கு மாறாக குழப்பத்தில் கலங்கி இருந்தது. அலுவலகம் வந்தவன் ப்ரியாவின் கண்கள் துக்கத்தில் அழுது வீங்கியதையும் அதை மறைக்க அவள் செய்த ஒப்பனையும் கண்டு மனதிற்குள்  சிரித்தான், இன்னும் கொஞ்சநாள் பிரியா பின் உன்னை என்னவளாய் ஏற்றபின் இதுவரை நீ பட்ட அத்தனை  கஷ்டத்தையும்  மறக்கும் அளவிற்கு உன்மேல் அன்பை காட்டுவேன், என்னை விலகியிருக்கும் இந்த பிடிவாதத்திற்கும் சரியான தண்டனை தருவேன், அது என்ன தண்டனை எங்கு என்பது என்முடிவு அதில் நீ தலையிடக்கூடாது, என்று தன மனதினுள் பேசியபடி பார்வையால் அவளை பருகிக் கொண்டு இருந்தான் ஸ்ரீ.

 

.          ஸ்ரீயின் பார்வையை உணர்த்தவள் ஒரு நிமிடம் தன்னிலை மறந்தாள், பின் சுதாரித்து தன் மேல் ஏற்பட்ட கோபத்தையும் ஸ்ரீயின் புறம் திருப்பி, கனல் பார்வை பார்த்தவளை காதல் பார்வை பார்த்தான் ஸ்ரீ. இனி இங்கு இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேற போனவளை ஏதோ தடுத்தது, நகரமுடியாமல்  திரும்பிட, ஸ்ரீயின் கரங்கள் ப்ரியாவின் கரம் பற்றி இருந்தது, தன் கரத்தினை  விடுவித்து கொள்ள முயற்சி செய்து தோற்றவள், கெஞ்சும் பார்வையில் ஸ்ரீயிடம் வேண்டி கொண்டு இருந்தாள் பிரியா.

 

அந்த நேரம் கதவை திறந்து நந்து உள்ளே வந்தான். தப்பிபிழைத்தவளாய் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் பிரியா. தன் அண்ணனை பூஜை வேலை கரடி என்று மனதில் அர்ச்சனை செய்த படி பிரியா சென்ற திசையை நோக்கினான் ஸ்ரீ.

 

தம்பியின் பார்வையை பின் தொடர்ந்து பார்த்த நந்துவிற்கு தவறான நேரத்தில் வந்திருப்பது புரிந்தது, கரடியாய் வந்து விட்டேனோ என்று வினவினான் நந்து. தன் மனதின் வார்த்தையை அப்படியே கூறவும் திணறிப்போனான் ஸ்ரீ, உன்னை போய் அப்படி நினைபேனா நாம் அப்படியா பழகுகிறோம் என்று மழுப்பினான் ஸ்ரீ அவன் இதழ் உரைத்தது பொய் என்று கண்நோரம் புன்னகை கூறியது அதை கண்டுகொண்ட நந்து, என் தம்பியை பற்றி எனக்கு தெரியாத நீ சொன்னதும் நம்பத்தான் ஆசை ஆனால் உன் கண்கள் வேறு சொல்கிறதே,என்றான் நந்து.

 

உனக்கு என் கண்,காது,மூக்கு சொல்லுவது எல்லாம் புரிகிறது, புரிந்துகொள்ள வேண்டியவள் புரிந்தும் புரியாதது போல இருக்கிறாள், என்றான் ஸ்ரீ.  நான் பேசி பார்க்கவா என்ற நந்துவிற்கு, அவளிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்றே புரியவில்லை, நான் சொல்வதை கேட்க கூடாது என்று அவள் காதுகளலோடு மனதையும் சேர்த்து பூட்டி வைத்து உள்ளாள்.  ஏதாவது பேசினால் முறைக்கிறாள், அதை மீறி நெருங்கினால் மனம் உடைந்து அழுது விடுகிறாள். என்ன செய்து என் காதலையும் மனதையும் புரிய வைப்பது என்று புரியவில்லை என்றான் ஸ்ரீ.  பிரியா எதற்காக உன் மீது இவ்வளவு கோபமாய் இருகின்றாள் என்று தெரிந்து கொண்டாயா? அது தெரிந்தால் அவளின் மனதை மாற்ற வசதியாக இருக்கும் என்று தன் யோசனையை கூறினான் நந்து. நாங்கள் பழகிய நாட்களில் எப்போதும் என்னிடம் கோபப்பட்டதே இல்லை இப்போது தோன்றுகிறது ஒரு வேலை எங்களிடையில் சின்ன சின்ன சண்டை வந்து இருந்தால் கூட அவளின் கோபங்கள் புரிந்து இருக்குமோ என்று தோன்றுகிறது, அவளுக்கு பிடிக்காததை செய்தால் முகம் மாறாமல் அவளின் விருப்பமின்மையை கூறுபவள், காரணம் இல்லாமல் இப்படி விலகி இருக்கமாட்டாள், பார்ப்போம் எவ்வளவு நாள் என்னை விட்டு விலகி இருப்பாள் என்று, எங்கிருந்தால் என்று தெரியாமல் வேதனையில் துடித்ததைவிட, தினம் பார்த்துக்கொண்டே விலகிருப்பது தான் ரொம்ப கஷ்டமாய் இருக்கிறது, இதை விட அது பரவாயில்லை என்று தோன்றுகின்றது என்று   வலி மிகுந்த குரலில் கூறினான் ஸ்ரீ.

எங்கள் விஷயத்தை விடு, அதை பேசினால் பேசிக்கொண்டே போகலாம்,  நீ வந்த காரணம் என்ன அதை சொல் புது “ப்ராஜெக்ட் டெண்டர்” தயாரிக்கும் வேலை தானே நான் பார்த்துகொள்கிறேன் என்றவனிடம் அதில் சிறு சிக்கல் அந்த வேலு கொஞ்சம் பிரச்சனை செய்வார் போல் இருக்கு, போன முறை அவருக்கு கிடைக்க வேண்டிய ப்ராஜெக்ட் நாம் எடுத்தோம், இந்த முறையும் அப்படி நடந்தால் நிச்சயம் ஏதாவது செய்வார் அதனால் யோசிக்கிறேன், இம்முறை விலகி விடுவோமா என்றான் நந்து. பிரச்சனை என்று ஒதுங்க ஆரம்பித்தால் நாம் வாழ்நாள் முழுவதும் ஏதும் செய்யாமல் ஒதுங்கியிருக்க  வேண்டியது தான், இம்முறையும் நமக்கே கிடைக்கும் நாம் செய்வோம் நீ கவலை படாதே, இன்னும் இரண்டு வாரம் தானே இருக்கு டெண்டர்  சமர்ப்பிக்க இம்முறை நான் தயார் செய்கிறேன்.

 

பிரியாவை அழைத்து வேண்டிய விபரங்கள் பெற்றுக்கொண்டு தன் பணியை துவங்கினான் ஸ்ரீ. சில நாள் அதிகவேலைபளுவினால் ஸ்ரீக்கு தன் சொந்த விஷயங்களில் முடிவெடுக்க நேரம் இல்லை, ஆனால் அவனின் பணிகளில் உடனிருந்து உதவிய பிரியா மனதில் நெருங்கிகொண்டு இருந்தான், இதை ஸ்ரீ அறியாமல் இல்லை கண்டும்காணாது போல் நடந்து கொண்டான். ஒருநாள் மதிய உணவை தவிர்த்துவிட்டு வேலையில் ஈடுபட்டு இருந்தவனிடம் சாப்பிட வற்புறுத்தினாள் பிரியா இருந்தும் அவன் உண்ணவில்லை என்று அறிந்து, அதன் பின் அவளே அவன்  சாப்பிட்டு முடிக்கும் வரை உடன் இருந்து கவனித்து கொண்டாள். இதை கண்ட நந்து ஸ்ரீயிடம் வினவ நான் நெருங்கினால் விலகி போனாள், நான் விலகி நிற்கையில் விழுந்துவிழுந்து கவனிக்கிறாள், இந்த பெண்களின் மனதை அறிவது  சாத்தியமே இல்லாத ஒன்று என்று சிரித்தான் ஸ்ரீ.

 

பிரியா இன்னும் இரண்டு நாட்கள் சற்று வேலை அதிகமாக இருக்கும். வீடு செல்ல காலதாமதம் ஆகும் வீட்டில் சொல்லி விடு என்று உத்தரவிட்டவன் அவள் யோசனையாய் நிற்பதை கண்டு, உனக்கே தெரியும் இது எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் இதன் விபரம் ரகசியமாய் இருப்பது அவசியம் புரிகிறது தானே என்று அவள் கைகளை பற்றி இதழ் பதித்ததான் ஸ்ரீ.

 

அவன் தொடுகையில் தன்னை மறந்து நின்றவள்  கைகளை பற்றியவன் தன்னோடு சேர்த்து அணைத்துகொண்டான், தன்நிலை உணர்ந்து அவள் விலகிடும் போது  அவளை தடுக்கவும் இல்லை. ப்ரியாவிற்கு தன் மீதே வெறுப்பாய் இருந்தது இன்னொருவளின் கணவனிடம் நான் நடந்துகொள்ளும் முறை தவறு என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாலும் அவளால் இந்த வேலையை விட மனம் இல்லை

 

அவனுடன் வாழும் பாக்கியம் இல்லாவிட்டாலும் அவனை பார்த்துகொண்டாவது இருக்க எண்ணினால் ஆனால் இனியும் தாமதித்தால் அவள் வாழ்வோடு அவன் நிம்மதியும் அழிந்து விடும் இந்த டெண்டர் கிடைத்து ப்ராஜெக்ட் பணி துவங்கியதும், இந்த வேலையை விட்டு ஸ்ரீன் வாழ்வை விட்டு நிரந்தரமாய் விலகி விட வேண்டும் என்று தன் கிழ் உதடுகளை பற்களால் அழுத்திய படி யோசனையில் இருந்தவள்,

 

 

 

உன்னை எத்தனை முறை சொல்வது என்ற ஸ்ரீ யின் கோப வார்த்தையில் சுயநினைவிற்கு வந்தாள். இப்படி செய்யாதே என்று எத்தனை முறை சொல்வது என்று மீண்டும் அவளை தான் கடிந்து கொண்டு இருந்தான், ஸ்ரீ காரணம் புரியாமல் விழித்தவளின் அருகில் வந்து அவள் உதடுகளை பற்றி எனக்கும் கொஞ்சம் மிச்சம்வை என்றான், அதோடு இல்லாமல் அதிக வேலை  தொடர்ந்து டெண்டர் வேலை பார்த்து பார்த்து அழுதுவிட்டது  பக்கத்தில் தியேட்டரில் பேய் படம் ஒடுகின்றதாம் வருகிறாயா என்று அழைத்தான் ஸ்ரீ.

 

அவன் வார்த்தையின் அர்த்தம் உணர்ந்து ப்ரியாவின் கண்களில் கண்ணீர் வந்தது. நான் கிளம்புறேன் எனக்கு நேரம் ஆகின்றது என்று விரைந்து சென்றுவிட்டாள் பிரியா, ஆனால் அவள் நினைவு மட்டும் பின்னோக்கி சென்றது, அவன் காதலுக்கு சம்மதம் சொன்னவள் அதன்பின்  அவன் எங்கு அழைத்தும் வர மறுத்தவளை என் மேல் நம்பிக்கை இல்லையா உன்னை ஒன்றும் யாரும் இல்லா இடத்துக்கு அழைத்து போகவில்லை நிறையபேர் இருக்கும் தியேட்டர்க்கு தான் போகிறோம் என்று ஒருவழியாய் சமாதிக்கவைத்து  அவன் அழைத்து சென்றது பேய் படம், பேய் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பிரியா பயத்தில் ஸ்ரீயை இறுக்கிஅணைத்தபடியிருக்க ஸ்ரீயின் திட்டம் நிறைவேறியது, இடைவெளியிலேயே கிளம்பும்படி பிரியா நச்சரிக்க இருந்தும் முழுப்படமும் பார்த்த பின்னே கிளம்பினான் ஸ்ரீ. ஏன் இப்படி பேய் படத்திற்கு அழைத்து வந்து என்னை கொடுமைபடுத்துகின்றீர்கள் என்று புலம்பியவளிடம், பக்கத்தில் வந்தாலே விலகி ஓடுகிறாய் வேற என்ன செய்வது இன்று நீயே என்னை எத்தனை முறை அணைத்தாய் தெரியுமா? என்று சிரித்தவனிடம் பதில் கூற முடியாமல் கீழ் உதட்டை பற்களால் அழுத்திய படி இருந்தவளை, கீழ் உதட்டை அவள் பற்களிடம் இருந்து விடுதலை தந்து தன் உதடுகளால் சிறைபிடித்தான் ஸ்ரீ. தன் காதலனின் முதல் அனணப்பை அனுபவித்த நாட்களின் நினைவில் கண்ணீர் சிந்தினால் பிரியா.

 

ஸ்ரீயிடம்  இருந்து விலகும் எண்ணம் ப்ரியாவின் மனதில் வலுப்பெற்றது, இனி சிறிதும் தாமதிக்ககூடாது என்ற எண்ணம் வந்தது. எல்லாம் ஸ்ரீக்கு விபத்து நேரும் வரைதான், ஸ்ரீன் விபத்து விபரம் அறிந்தபின் அவனை விட்டு விலகும் எண்ணம் பிரியாவை விட்டு விலகி போனது.

 

சில நேரம்

சிரிக்கிறேன்

உன்னை மறந்து

பல நேரம்

அழுகிறேன்

என்னை மறந்து…..

 

சுகமாய் தோன்றிய

நிமிடங்கள் எல்லாம்

சுமையாய் போனது

உன் பிரிவால்…….

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: