Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 06

வருகை

6

 

 

 

 

 

 

முதல் முறை பார்த்தபோதே

முடிவு செய்துவிட்டேன்

என் வாழ்க்கையை

நீ தான் முடிவு செய்யபோகிறாய்

என்று……

 

நீ

பார்த்த பார்வையால்

பற்றிக்கொண்டு தீக்குச்சி

நான்

எரிந்து கொண்டே இருப்பேன்

திருப்பி வந்து

நீ அணைக்கும் வரை……

 

என்றும் உணராத   புது உணர்வில் இருந்தான் ஸ்ரீ. அவன் மனதை முழுதாய் நிறைந்து இருந்தாள் பிரியா.  அன்று மாலை வீடு சென்றவன் வெகுநேரம் தனிமையில் இருந்தான். ஒரு அமைதியான முகம் இப்படி தன் மனதில் புயலை ஏற்படுத்தும்  என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.   அப்போதுதான்  நந்துவிற்கு திருமணம் ஆன புதிது என்பதால் அவர்கள் ஊடல் வார்த்தைகளும் கூடல் கொஞ்சல் மொழிகளும்  காற்றில் கலந்து அவன் செவிகளில் விழ மீண்டும் அவள் நினைவில் ஆழ்ந்தான் ஸ்ரீ அவளுடன் தான் இப்படி கொஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும் என்று கற்பனை கோட்டை கட்டி கொண்டு இருந்த ஸ்ரீயை நந்துவின் குரல் நிகழ்வுக்கு கொண்டுவந்தது. என்ன பிரச்சனை எண்றவனிடம் நீயே உன் ஆருயிர் தோழியிடமே கேள் என்றான் நந்து.

 

என் தோழியிடம் இருக்கட்டும் முதலில் உன் தரப்பை சொல் என்று நீதிபதியாய் நின்று அவர்கள் பிரச்னையை தீர்க்க முற்பட்டான் ஸ்ரீ. சரி நானே சொல்கிறேன் கடற்கரைக்கு போகவேண்டும் என்று  சொன்னாள்  அழைத்துக்கொண்டு  போனேன். அங்க ஒரு பெண்  என்னை  பார்த்து சிரித்தாள்  நானும் பதிலுக்கு சிரித்தேன், இது தப்புன்னு சண்டை போடுகின்றாள், அங்கு  ஆரம்பித்தவள்  இன்னும் முடித்தபாடியில்லை என்று புலம்பினான் நந்து, பின்னே என்ன ஸ்ரீ அந்த பெண் முன்பே தெரிந்தவர்களா என்றால் இல்லை என்கிறார், ஆனால் பார்த்து சிரிக்கிறார் நீயே சொல் இது சரியா? நான் உடன் இருக்கும் போதே சிரிக்கிறார் என்றால் நான் இல்லை என்றால் அப்பப்பா…. நினைக்கவே பயமாக உள்ளது என்று  எதிர் வாதம் செய்தாள், மதி.

 

மதி  சொல்லுவதும் சரிதானே அண்ணா நீ முதலில் அவளிடம் மன்னிப்பு கேள் என்றான் ஸ்ரீ,  தம்பி சொன்னபடி மனைவியிடம் மன்னிப்பு கேட்டவன் தம்பியை நோக்கி கண்சிமிட்டினான்,  அவன் செய்கையின் அர்த்தம் புரிந்தவன் மதியை நோக்கி, நீ செய்ததும் தவறு தான் மதி நந்துவை விட நீ செய்ததே மிக பெரிய தவறு, தனிமை விரும்பி சென்ற இடத்தில உன் மனநிலையும் கெடுத்துக் கொண்டு, அவன் நிம்மதியையும் கெடுத்துவிட்டாய், நந்து மீது நீ கொண்டது உண்மையான காதல் என்றால் அவன் மீது உனக்கு சந்தேகமோ கோபமோ வர வேண்டிய அவசியம் இல்லை. முதலில் உன் நந்துவை நன்கு புரிந்துகொள்ள முயற்சி செய், நல்ல நண்பனாய் சொல்கிறேன் நீயும் சில பெண்களை போல் சந்தேகம் எனும் வலையில் விழுந்து உன் வாழ்வை வீணாக்கி விடாதே என்று அறிவுரை கூறினான் ஸ்ரீ.

 

நந்துவும் மதியும் சற்றே சமாதானம் ஆனார்கள் நீ சொல்வதும் உண்மைதான் ஸ்ரீ என்று தலையாட்டி விட்டு தன் அறைக்கு சென்றாள் மதி. ரொம்ப நன்றி ஸ்ரீ நீ இல்லை என்றால் என் கதி அதோ கதி தான், கொஞ்ச நேரத்தில் பத்திரகாளி அவதாரம்  எடுத்துவிட்டாள் தெரியுமா? என்று  நந்துவின் பாவனையில் சிரித்தவன் மதியை பற்றி தான்  உனக்கு தெரியுமே நந்து சிறுவயதில் இருந்தே அப்படித்தான் தனக்குரிய பொருள் தனக்கு மட்டுமே என்று எண்ணுபவள் அவள் மனநிலையை கொஞ்சம் புரிந்து நடந்துகொள்ள முயற்சிசெய் என்று அறிவுருத்தினான் ஸ்ரீ. மதியின் குடும்பமும் நந்துவின் குடும்பமும் நண்பர்கள், இருவரின் தந்தையும் தொழில் முறை என்றால் தாய்மார்கள் வேறு விதம் அண்ணா அண்ணி என்ற உறவுமுறையில் பழகிவந்தனர்.  ஸ்ரீயும் மதியும் ஒரே  வயது என்பதால் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள், பின்னர் நந்து தொழில் ஈடுபடவும் அவன் தொழிலில் ஏற்படுத்திய வளர்ச்சியை கண்டே மதியின் தந்தை மகளை நந்துக்கு மணமுடிக்க விரும்பினார். இதில் மதிக்கும் மனப்பூர்வமான சம்மதம் என்று தெரிந்தவுடன் நந்து மறுப்பேதும் கூறாமல் மதியை தன்னவளாய் ஏற்றுக்கொண்டான். உண்மையில் மதி நந்துவை ஒருதலையாய் காதலித்தது ஸ்ரீ அறிந்த விஷயம்,  அவள் வெளியில் சொல்லாத காரணத்தால் அவனும் யாரிடமும் சொன்னதில்லை, அதைப்போல நந்துவும் மதியை விரும்பியது பிறகு தான் தெரிந்தது. நம் காதலும் இப்படி எந்தவித பிரச்சனை இல்லாமல் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், என்று மீண்டும் மனம் ப்ரியாவின் நினைவில் வந்து நின்றது, எல்லா பெண்களை போல நீயும் இருப்பாயா? இல்லை நீ விதியாசமானவளா? உன்னை முழுதாய் அறியும் ஆவல் கூடிக்கொண்டே இருக்கின்றதே என்று தனக்குள் புலம்ப துவங்கினான் ஸ்ரீ.

 

மறுநாள் அவளை சந்திக்கும் ஆவலில் சென்றவனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. அவளின் பெயர் மட்டுமே தெரியும் வேறு எந்த விபரமும் அறியவில்லை. தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை நண்பர்களிடம் இருந்து மறைக்க முயன்றான், பின்னே என்ன செய்வான் இதே நண்பர்களிடம் கண்டதும் காதல் என்பது பொய் கட்டு கதை என்று வாதம்  செய்து விட்டு, எனக்கு அவளை கண்டதும் காதல் என்றால் அவர்கள் செய்யும் கேலிக்கு அளவே இ்ருக்காது,  முதலில் அவளை முழுமையாய் அறிய வேண்டும், அவள் மனதில் இடம் பெற வேண்டும் அதற்கு உண்டான வழிகளில் ஈடுபடுவோம் என்று அதன் பணியில் இறங்கினான் ஸ்ரீ.

 

ஏனோ பிரியாவை சந்திப்பதே அபூர்வமாய் தோன்றியது  ஸ்ரீக்கு. ஒருமுறை வகுப்புகளை கடந்து செல்லும் போது ஏதோ எழுதியபடி இருந்தவளை , கண்டு ஒருநிமிடம் தன்னை மறந்து நின்றவன் , பின் சுதாரித்து  எந்த ஆண்டு என்ன பிரிவு என்று கவனித்து விட்டு நகர்ந்தான். அதன் பிறகு அவளை முழுமையை அறிய விரும்பினான் அவளுக்கு பிடித்தது பிடிக்காதது, அடிக்கடி செல்லும் இடம் எல்லாம் தெரிந்து கொண்டான், இருந்தும் அவளை நெருங்க முயலவில்லை, அவளை பின் தொடரும்போதே  அவனை பார்த்துவிட்டால் புலியை கண்ட புள்ளி மானாய் ஓடுபவளை எங்கு நெறுங்குவது.  காதலும் கர்ப்பமும் மறைக்க முடியாது என்பது உண்மையே, நகமும் சதையுமாய் பின்னி பிணைத்திருந்த நண்பர்களுக்கு ஸ்ரீயின் மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்த நேராகவே ஸ்ரீயிடம் விசாரித்தனர், ஏதும் இல்லை என்றாலும் நம்பாமல் குடைந்ததால்  மறைக்காமல் உண்மை சொன்னான், ஸ்ரீ.

 

என்னவென்று தெரியவில்லை அவளை பார்த்தாலே  சந்தோசமாக இருக்கிறது, ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும் நரகத்தில் இருப்பது போல வேதனை தாங்கமுடியவில்லை, உண்மையிலே பிரியா ரொம்ப வித்தியாசமானவள்டா, சில நேரங்களில் நெருங்கிவருவது போல்  இருக்கின்றது  சில நேரங்களில் விலகி தெரிகின்றாள்?  பிரியா ஆள் மட்டும் இல்லை அவள் குணமும் அழகுடா!! என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லி கொண்டே இருந்தவனை வினோத் தடுத்தான் சரி சொல்லு அப்படி என்ன அவளிடம் வித்தியாசத்தை பார்த்தாய் சொல்   நாங்களும்  கேட்கிறோம் என்றவனை முறைதான் ஸ்ரீ. சரி விடுடா அவனை பற்றி தான் தெரியுமே நீ சொல்லு என்று மேலும் விபரம் கேட்க துவங்கினான் விக்னேஷ்.

 

ஸ்ரீ ப்ரியாவவை பற்றி பேச துவங்கினான், குனிந்த தலை நிமிராமல் நடக்கிறாள், அடக்கமாய்  பேசுகின்றாள், தேவை இல்லாமல் பசங்க கூட பேசுவது இல்லை, இந்த காலத்து பெண்  மாதிரியே இல்லைடா “she is something different” என்றவனை பாதியில் நிறுத்தி  போதும் போதும் அவள் புராணத்தை நிறுத்து, பிடித்திருந்தால்  போய் அவளிடம் சொல்லு அதை விட்டுவிட்டு இங்கே வந்து அவள் இப்படி அப்படியென்று  எங்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு  இருக்கின்றாய்  என்று கிண்டல் செய்தான் தியாகு. பிரியாவிடம் சொல்வது எல்லாம் என் பிரச்சனை இல்லை, ஒரு வேளை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அடுத்து பார்க்க கூட கஷ்டமா இருக்கும் அதனால் தான் யோசிக்கிறேன், என்று தன் தயக்கத்தின் காரணத்தை கூறினான் ஸ்ரீ.

 

 

நீ இப்படியே பார்த்து கொண்டிரு வேற எவனாவது அவளை கொத்திக் கொண்டு போக போகிறான் அதையும் பார்த்துக் கொண்டே இருப்பாய் என்றான் வினோத். இந்த தீபக் வேற உன் ஆள் பின்னாடியே தான் சுற்றிக்கொண்டு இருக்கிறான் ஜாக்கிரதை, என்றான் விக்கி. அவர்களை எரிக்கும் பார்வை பார்த்தான் ஸ்ரீ. நானும் பார்த்து இருகின்றேன் அவளுக்கு தீபக் மேல் எல்லாம் காதல் இல்லை என்றான் ஸ்ரீ, உன்மேலும் இல்லை என்று முடித்தான் வினோத்.  இதற்கு தான் நான் உங்களிடம் சொல்லவில்லை, என்று கத்தினான் ஸ்ரீ. இந்த அஞ்சலி உன்னை சுத்திசுத்தி வருகிறாள், அவளை திரும்பிக்கூட பார்க்கமாட்டேன் என்கின்றாய் , இவளுக்கு  போய் இப்படி உருகுகிறாய் என்றவன் ஸ்ரீ முறைப்பதை கண்டு சரி சரி  அது உன் விருப்பம் இதோ தீபக் வருகிறான் அவனிடமே கேட்டுவிடு பிரியைவை பற்றி இன்னும் நிறைய விபரங்கள் கிடைக்கும் என்று இரட்டை பொருள் தரும் விதத்தில் கூறினான் வினோத்.

 

தீபக் என்று அழைக்கும் முன்னே அவன் தங்கள் புறம் நோக்கி வருவதை கண்டு நிறுத்தினான் தியாகு.  ஸ்ரீ  உன்னிடம் சற்று தனியாக பேச வேண்டும் என்று அழைத்தான் தீபக். நண்பர்களின் கூட்டத்தை விட்டு தனியாக சென்றவுடன், நான் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துகொள்ளதே நீயே சற்று யோசித்து பார் உனக்கே சரி எது தவறு எது புரியும் என்று பீடிகையுடன் பேச துவங்கினான் தீபக். நீ நினைக்கிற மாதிரி பெண்ணில்லை பிரியா, அன்று ஏதோ ராக்கிங்க்காக தான் அப்படி நடந்து கொண்டாள். அவளை மன்னித்து விடு, பாவம் ரொம்ப பயப்படுகிறாள் என்று கூறிக்கொண்டே சென்றவனை நிறுத்தினான் ஸ்ரீ.  நீ சொல்லுவது என்னவென்று புரியவில்லை, முடிந்தால் தெளிவாக சொல்லு இல்லை விட்டுவிடு ஏன் வீண் முயற்சி செய்கிறாய் தீபக் என்று சிரித்தான் ஸ்ரீ. அது வந்து நீ கொஞ்ச நாட்களாக பிரியாவை பற்றிய விபரங்கள் சேகரிக்கின்றாயே அதை பற்றி தான் கூற வந்தேன், நீ அவளை பின் தொடர்வது அவள் செல்லும் கோவில்களில் சந்திப்பது இது போன்ற செயல்களால் ரொம்ப பயபடுகிறாள், இதை நீ நிறுத்த வேண்டும் அதை கூறத்தான் வந்தேன், வந்த வேலை முடிந்தது என்று நகர்ந்தவனை நிறுத்தினான் ஸ்ரீ. இதை பிரியா தான் என்னிடம் சொல்ல சொன்னாளா, என்று ஒரு மாதிரி குரலில் வினவினான் ஸ்ரீ , தீபக்யின் இல்லை என்ற பதிலில் நிம்மதி உற்றவன் உனக்கும் ப்ரியாவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேள்வியாய் நிறுத்தினான். எங்களுக்குள் ஒன்றும் இல்லை என்பது உனக்கே தெரியும் அவள் என்னை அண்ணா என்று அழைப்பதும் தெரியும், பேச்சை மாற்ற முயற்சி செய்யாதே  ஸ்ரீ,  கொஞ்ச நாட்களாகவே பிரியா சரியாக இல்லை என்ன என்று விசாரித்தேன் ஒன்றும் இல்லை என்று சொல்ல மறுத்துவிட்டாள், ஒரு நாள் உன்னை பற்றி விசாரித்தாள் என்ன என்றதற்கு பிறகு தான் எல்லாம்   சொன்னாள் அவள் குழம்பி தவிக்கிறாள், பயபடுகிறாள், அதனால் தான் உன்னிடம் கூறவந்தேன் என்று முடித்தான் தீபக்.

 

சாரி மச்சான் எந்த அண்ணனுக்கும் தன் தங்கை பின்னாடி ஒருத்தன்  சுற்றினால், கோபம் வருவது நியாயம் தான், ஒரு நண்பனாய்  நான் சொல்வதையும் கேட்டுக்கொள் எனக்கு பிரியாவை பிடித்திருக்கின்றது அவளை பிடித்த அளவிற்கு இந்த உலகத்தில் வேறு எந்த பெண்ணையும் பிடித்தது இல்லை ,என் வாழ்நாள் முழுவதும் அவளுடன் வாழ நினைக்கிறன், நான் தவறான எண்ணத்தில் அவளை நெருங்கவில்லை மச்சான்,  அவள் சம்மதத்துடன் இரு வீட்டின் பெரியோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், உன் தங்கைக்கும் என்னை பிடித்திருக்கின்றது அதை நான் அவள் கண்களில் பார்த்திருகின்றேன், இருந்தும் அதை மறுக்கிறாள் சரியான பிடிவாதக்காரி தான்  உன் தங்கை என்று சிரித்தான் ஸ்ரீ.

 

 

ஸ்ரீயின் வார்த்தையில் ஏதோ முரண்பாடு உள்ளதை உணர்ந்தான் தீபக். அதை வெளிப்படையாக கேட்கவும் செய்தான், நீயும் அஞ்சலியும் காதலிப்பதாகவும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சொல்கின்றாகள் என்றான் தீபக். யார் சொன்னது அஞ்சலி என் நல்ல தோழி, எங்கள் உறவுப்பெண் அதை தவிர வேறு ஒன்றும் இல்லை நீ சொல்வதை பார்த்தால் நீயே திருமணத்தை முடித்துவிட்டு தான் வேறு வேலை பார்ப்பாய் போல என்று சிரித்தான் ஸ்ரீ.

 

இதை நானாக சொல்லவில்லை ஸ்ரீ அஞ்சலியே இப்படிதான் சொல்லிக்கொண்டிருக்கிறாள் அவள் பெற்றோர்க்கு சம்மதம் உனக்கு சம்மதம், உன் குடும்பத்தில் அனைவர்க்கும் மகிழ்ச்சி அது இது என்று கூறிக்கொண்டு இருந்தவனை இடையில் நிறுத்தினான், ஸ்ரீ. நீ சொல்வது போல் அவளுக்கு என்னை திருமணம் செய்ய ஆசை இருக்கலாம் அதற்கு நான் என்ன செய்வது, எனக்கு பிரியாவை தவிர வேறு எந்த பெண்ணிடமும் அப்படி ஒரு எண்ணம் தோன்றவில்லை, நீயும் குழம்பி உன் தங்கையையும் குழப்பி விடாதே என்றான் ஸ்ரீ.

 

பிரியா ரொம்ப நல்ல பெண் ஸ்ரீ, அவள் வாழ்வில் சந்தோசமாக இருக்க வேண்டும், என் தங்கை அவள் சந்தோசமாக இருந்தால் அதுவே போதும் எனக்கு. நீ முதலில் ப்ரியாவிடம் உன் காதலை வெளிப்படுத்து, அது வரை உன்னை பார்த்தால் பயப்படாதான் செய்வாள். பின் தொடர்ந்தது போதும் இனி ஒன்றாக செல்வதற்கு ஏற்பாடு செய் என்று தன் ஒப்புதலை தந்தான் தீபக்.

 

ஸ்ரீ என்ன செய்கிறாய், எவ்வளவு நேரம் கதவை தட்டுவது, என்று ஸ்ரீயின் சிந்தனையின் நடுவே நுழைந்தது நந்துவின் குரல். என்ன அண்ணா எதற்காக இப்படி கத்துகின்றாய்  என்று அறையை விட்டு வெளியே வந்தான் ஸ்ரீ. நேரம் என்ன தெரியுமா? பசிக்க வில்லையா உனக்காக தான் கீழே எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள், நீ கனவில் மிதந்து கொண்டு இருக்கிறாயா? ‘ சரி சரி சாப்பிட வா. இந்த அறையில் என்ன செய்கிறாய் தூசியாய் இருக்கும் நாளை சுத்தம் செய்ய சொல்கிறேன், இப்பொது சாப்பிடவா என்று அழைத்து சென்றான் நந்து. ஏதும் பேசாமல் தன் உணவை முடித்து விட்டு மீண்டும் தன் அறைக்கு சென்றுவிட்ட ஸ்ரீ  ஏனோ மனதின் பாரம் சற்று இறங்கியதாய் உணர்ந்தான், அப்படியே உறங்கி போனான்.

 

மறுநாள் அலுவலகத்தில் பிரியாவை சந்தித்தவனின் முழு பாரமும் இறங்கிப்போனது. முகமெல்லாம் சோர்ந்து போய் பழைய நினைவில் இருந்து தன்னை மீட்க அவளுடம் பெரும்பாடுபடுகின்றாள் என்று தெளிவாக தெரிந்தது.

 

 

 

உன் ஒவ்வொரு நொடியிலும்

என் உயிர் துடிக்கும்

உன் ஒவ்வொரு அசைவிலும்

என் உள்ளம் துள்ளும்

உனக்காகவே துடிக்கும்

என் மனது

மறந்தும் மறந்துவிடாதே

அது உனது என்று….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: