சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7

பாகம் – 7

“காற்றெல்லாம் உன் வாசம்

உன் வாசங்களை கோர்த்து

உணவாய் உண்டு

இராட்சனாகிக் கொண்டிருக்கிறேன் …“

 

அன்று ஸ்வேதாவிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் ஏனோ குமாரை பார்த்த விசயத்தை கடைசி நொடியில் சொல்லாமல் தவிர்த்தாள் ஸ்ருதி.

“இன்றைக்கு?”

“இன்றைக்கு… என்ன டீ? எதோ சொல்ல வந்துவிட்டு நிறுத்திவிட்டாய்?”

“ஒன்றுமில்லை”

“இல்லை எதோ ஆரமித்தாய்”

“சரி மறந்துவிட்டது”

“சொல்ல, சொல்ல மறந்துவிட்டதா?”

“ஆமாம்!”

“நல்ல ஒரு டாக்டரை தான் பார்க்க வேண்டும்”

“ஆமாம் உண்மையை சொன்னால் நீ என்னை சும்மா விடுவாயா!” முணுமுணுத்தாள் ஸ்ருதி

“என்ன டீ முணுமுணுப்பு?”

“ஓன்றுமில்லை!”

“நீ அடி வாங்க போகிறாய் பார்த்துகொள்!”

ஸ்ருதி மவுனமாக இருக்க, அந்த பேச்சை மேற்கொண்டு வளர்த்த ஸ்வேதாவிற்கு மனம் வரவில்லை.

“சரி, சரி..அதை விடு என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்?”

“பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறேன்!”

“சரி டி, சீக்கிரம் தூங்கு!” ஸ்வேதா சலனமற்ற மனதுடன் கைபேசியை கீழே வைத்துவிட்டாள்.

ஸ்ருதிக்கு தான் தூங்கம் தொலைந்து போனது. தோழியையும் ஏமாற்ற முடியாமல், தன் மனதையும் கட்டுப் படுத்த முடியாமல் வெகுநேரம் புரண்டு படுத்துவிட்டு உறங்கினாள்.

காலையில் எழும் போதே மனதிற்குள் ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டாள். ஸ்வேதா சொல்வதும் சரிதானே. தெரியாத ஒருவரிடம் பழக வேண்டாம் என்று தானே சொல்கிறாள் !

குமாரை பிடித்திருக்கிறது. அந்த பிடித்தம் காதலாக மாறுமா? என்று காலம் தான் சொல்ல வேண்டும்.

முதலில் குமாரைப் பற்றி விசாரிப்போம் , பிறகு மேற்கொண்டு யோசித்துக் கொள்ளலாம். திடமான முடிவெடுத்தவள், செயல்படுத்தத் தொடங்கினாள்.

தினச்சுடரில் அவள் பார்த்த வேலை அவளுக்கு நன்றாகவே கை கொடுத்தது. இரண்டு நாட்களில் அவனைப் பற்றிய அனைத்து விவரங்களும் அவள் விரல் நுனிக்கு வந்துவிட்டன.

“அம்மா இல்லத்து அரசி, அப்பா சுப்ரவைசர்.எளிமையான அழகான குடும்பம்.  இவன் கோவையில் இருக்க, ஈரோட்டில் அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள். பி.இ கம்பியூட்டர் சயின்ஸ், முடித்து விட்டு ஐடி கம்பெனியில் வேலை.வீட்டிற்கு ஒரே பையன் !”

தவறாக எதுவும் அவனைப் பற்றி சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. அக்மார்க் நல்லப் பையன் என்றே கூறலாம்.

இனி என்ன? இதற்கு மேல் யோசிப்பதற்கு ஸ்ருதிக்கு பயமாக இருந்தது. இதுவரைக்கும் எந்தக் கட்டிலும் சிக்கிக் கொள்ளாலாமல், மிகப் பாதுகாப்பான கூட்டில் இருந்தவளுக்கு..

அந்தக் கூட்டை தாண்டுவதற்கு மிக அதிகமான மனதைரியம் அவளுக்கு தேவைப்பட்டது.

*****************

ஆனால் ஸ்ருதியின் அந்தக் கூட்டை இயல்பாய் உடைத்து அவளுடன் நட்பாய் பழக அசைப்பாட்டான் குமார். ஸ்வேதா அதை எதிர்க்க, ஸ்ருதி நொந்து போனாள்.

குமாரிடம் அந்த விசயத்தை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டாள்

“பதினெட்டு வருட நட்பு குமார். புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறாள்!”

“அப்படியென்றால், அவர்களுடைய மனது சங்கடபடாமல் நடந்துக் கொள்வது மிகவும் முக்கியம் தான்!”

“என்ன  பண்ணுவது?”

“நான் பார்த்து கொள்கிறேன்”

“நிச்சயாமாக?”

“சத்தியாமாக!”

****************

ஸ்ருதி மீது இருந்த கோபத்தில் தனியாக டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாள் ஸ்வேதா!

டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் ஷாப்பிங்கை முடித்துவிட்டு வெளியே வந்தவளை, ஒரு அழகன் இடைமறிக்க திகைப்புடன் நிமிர்ந்தாள்.

“யார் நீங்கள்?” ஸ்வேதாவின் குரலில் எரிச்சலுடன் வந்தது.

“நான் குமார்!” பதமான குரலில் இதமாய் பதிலளிதான் குமார்.

“ஓ!.. உங்களுக்கு என்ன வேண்டும்!” ஸ்வேதாவின் குரலில் துணிக்கிடும் கஞ்சியின் விரைப்பும் சேர்ந்து வந்திருந்தது.

“நான் உங்களுடன் பேச வேண்டும் ?”

“இது தேவையா?” ஸ்வேதாவின் குரலில் சலிப்பு சேர்ந்திருந்தது.

“நூறு சதவிதம்!”

“ சரி வாங்க!”

இருவருமாக பழகடைக்கு சென்று பழச்சாறை அருந்த ஆரமித்தார்கள்

“சொல்லுங்கள், என்ன விசயம்!” ஸ்ருதி நேரடியாக விசயத்திற்கு வந்தாள்

“நான் ஸ்ருதியுடன் நட்பாய் இருக்க ஆசைப்படுகிறேன்!”

“அது ஏற்கனவே தெரிந்தவிசயம் தானே!”

“ஆனால் உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை”

“அதுவும் தெரிந்த விசயம் தானே. எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக இருவரும் பேசாமல் இருந்துவிடுவீர்களா?” ஸ்வேதா பட்டென கேட்டாள்

குமார் மவுனம் சாத்தித்தான்.

“பிறகு என்ன? இந்த விளக்கங்கள் எதற்காக?”

“ஆனால் இருவரும் நிச்சயமாக வருத்தப்படுவோம்!”

ஸ்வேதா இடையிட்டு பேச முயல,

“ஒரு நிமிசம் ஸ்வேதா நான் பேசி முடித்துவிடுகிறேன்.ஒரு நல்ல நட்பென்பது இறைவன் கொடுத்த வரம். நீங்கள் ஸ்ருதிக்கு கிடைத்த வரம்!”

“……..”

“நான் ஸ்ருதியுடன் நட்பாய் பழக விரும்புகிறேன். பின்னாளில் காதலாக மாறலாம்.

இப்பொழுது …. ஒரு பிடித்தம்.. ஒரு நட்பான பிடித்தம். என்னால் எந்த நிலையிலும் உங்கள் தோழியின் தன்மானத்திற்கு இழுக்கு வராது !”

“இதை நான் எப்படி நம்புவது?”

“சில விசயங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியாது.உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள மட்டுதான் முடியும்!”

“இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்?”

“இன்னைக்கு நான் மட்டும் தான்!” குமாரின் குரலில் கிண்டல் வழிந்தது.

“……..”

“தயவு செய்து என்னை நம்புங்கள் ஸ்வேதா!”

“கண்டிப்பாக குமார். ஸ்ருதி எமாந்துவிடக் கூடாது, என்று தான் நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், உங்களை பார்த்தவுடன் அந்த எண்ணம் தப்பு என்று புரிந்து கொண்டேன் !”

“நன்றி ஸ்வேதா!”

ஸ்வேதா இனிமையாய் புன்னகைத்தாள்.

“சரி, பழச்சாறு காலியாகி விட்டது கிளம்பலாமா?”

“கண்டிப்பாக!” ஸ்வேதாவும் எழுந்து கொண்டாள்.

ஸ்ருதியின் வாழ்க்கையில் குமார் வெற்றிகரமான அடியை எடுத்து வைத்தான்.

உன் வாசமாவாள்!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 2மேற்கே செல்லும் விமானங்கள் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் முதல் பதிவு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தப்பு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது. தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் தைரியம் இன்மையால் தப்பு செய்யாதவர்களை நல்லவர்கள் என்று சொல்லிவிட

நிலவு ஒரு பெண்ணாகி – 17நிலவு ஒரு பெண்ணாகி – 17

வணக்கம் தோழமைகளே, அனைவருக்கும் உளம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். துர்காஷ்டமி சமயத்தில் உமைபுரத்தின் ஸ்ரீமேரு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். நிலவு ஒரு பெண்ணாகி – 17 அன்புடன் தமிழ் மதுரா

சித்ராங்கதா – 17சித்ராங்கதா – 17

Chitrangathaa – 17 வணக்கம் பிரெண்ட்ஸ், சரயுவுக்கும் ஜிஷ்ணுவுக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. உங்களது கமெண்ட்ஸ் படித்தேன். உங்களது எண்ணங்களைத் தெரிவித்து நீங்கள் அனுப்பிய முகநூல் மெசேஜ் மற்றும் பர்சனல் மெயில்களுக்கு ஓராயிரம் நன்றி. இந்தக் கதையில் நீங்கள் காட்டும்