மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41

41

நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டான் மாதவன், “சுஜி அன்னைக்கு அந்தக் கொலுசு விஷயத்துல என்ன மன்னிப்பியா?”

“நீங்க வேணும்னு செஞ்சு இருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அப்பறம் அனிதா பத்தியும் நானும் ரோஸியும் பேசினோம்” தானும் ரோஸியும் பேசியதைச் சொன்னாள்.

“நிஜம் தான் சுஜி. நான் வேணுன்னே செய்யல. அனிதா பத்தி அப்பறமா பேசலாம். ராகேஷ ஒரு பொண்ணு கூட நெருக்கமா ஒரு ரெண்டு தடவ பார்த்து இருக்கேன். என் பிரெண்ட் ஒருத்தன் ராகேஷ் ஒரு பொண்ண லவ் பண்ணுறான் பேரு என்னமோ விஜிங்குற மாதிரி சொன்னான். நான் சரியாய் கவனிக்கல. உன்கூட மறுபடியும் அந்த நகை கடைல பார்த்தேன். அதுவும் அவன் மோதரத்தை உன் விரல்ல இருந்து கழட்டுறான். கால்ல கொலுசு போட்டு விடுறான். நான் என்ன நெனச்சேன்னா, அவன் உன்ன ஏமாத்துறான். அது தெரியாம நீ அவன நம்பிட்டன்னு. கண்டிப்பா அவன லவ் தான் பண்ணுறேன்னு முடிவே பண்ணிட்டேன். உன் கிட்ட விசாரிக்காம எப்படி நான் நெனைக்கலாம். கமலம் ஆன்ட்டி சொன்ன மாதிரி அது என் தப்புதானே. அனிதாவுக்கு நான் ஒரு அழகான பொண்ணு கிட்ட அக்கறையா பேசுனதும் ஒரே குறுகுறுப்பு, பொறாமை. நான் வேற அவ கூட பேசுவேனே தவிர, அவ குணம் கொஞ்சம் கூட எனக்கு பிடிக்காது. நீ விக்கியோட பேசுறத அவளும் பார்த்தா. நான் கோவப்படவும், அவளுக்கு ரொம்ப சந்தேகம். அத்தைய வேற பாத்து இருக்காளா… நான் எந்த அளவு உனக்கு நெருக்கம்னு தெரிஞ்சுக்குற குறுக்கு புத்தி… உங்க வீட்டுக்கு போகணும்னு ஒரே தொந்தரவு. எனக்கோ நீ வீட்டுக்கு வந்துட்டியான்னு பார்க்க ஆசை. வீட்டுக்கு இன்னும் வரலைன்னதும் ஒரே ஆத்திரம். அத நல்லா யூஸ் பண்ணிட்ட அனிதா உன்னைப் பத்தி கண்ணா பின்னான்னு சொல்ல, அன்னைக்கு சீக்கிரமா வந்த உன்னோட அப்பா கேட்டுட்டாரு. அப்பறம் என்னென்னமோ நடந்தது. அனிதாவ வீட்டுல கொண்டு போய் விட்டதுதான். அவ மேல எனக்கு பயங்கர கோவம். அதுனால பேசவே இல்லை.”

சற்று இடைவேளை விட்டவன், “அன்னைக்கு என்ன ஒரு பார்வை பார்த்த பாரு. என்னால அத மறக்கவே முடியாது. சின்ன வயசுல நாகரத்தினம் அத்தை அவங்க தோழிகிட்ட விக்கி பத்தி சொன்னப்ப பார்த்ததைவிட ஒரு பத்து மடங்கு அதிக துக்கம். எப்படி இந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்கப் போறோம்னு இருந்தது கண்ணம்மா”

அவனைக் கனிவாகப் பார்த்தவள், “மனசுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பத்தி இனிமே பேச வேண்டாம். சரியா” என்றாள்.

காதலுடன் சுஜியைப் பார்த்தவன், “இப்படி பார்த்தா நான் என்ன செய்வேன் சுஜி…

கதைகளைப் பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயுரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே

“பாடினது போதும். அடுத்ததுக்குப் போவோம். ஆமா திடீருன்னு ஒரு நாள் வந்து அதிதி வாசல்ல நின்னு என்னைய காபி குடிக்க கூப்பிட்டிங்களே என்னமோ அப்பத்தான் நான் அதிதில படிக்குறது தெரியுற மாதிரி”

“முன்னாடியே நீ அதிதில சேர்ந்து, மூர்த்தி அங்கிள் காலேஜ்ல விட்டுட்டு வந்த வரை அங்கேயே இருந்தேன். அப்பறம் சென்னைல வந்து வேலைல ஜாயின் பண்ணேன். உன்னோட பிறந்தநாள் அன்னைக்கு மட்டும் மினி கிட்ட கிப்ட கொடுத்துட்டு பக்கத்துல பார்க்குல உட்கார்ந்தது தேவி தரிசனம் பார்த்துட்டு வந்துடுவேன்.

கொடைக்கானல்ல உன்னைப் பார்த்தது எதிர்பாராததுதான். அனிதாவ விஷ் பண்ணிட்டுப் போக வந்தா, நீ அந்த ரூமுக்கு வருவேன்னு நான் நெனைக்கவே இல்லை. ஆனா நீ என்னடான்னா அனிதாவோட தேனிலவு கொண்டாட வந்துருக்கறதா நெனச்சுட்ட.

உன்னைப் பார்த்ததும் என்னால உன்னைப் பார்க்காம இனிமே இருக்க முடியாதுன்னு தெரிஞ்சுடுச்சு. அம்மா வேற என் மேல ரொம்பக் கோவமா இருந்திங்க. அதுதான் அத்தை கிட்ட நீ இருக்குற இடத்தைச் சொல்லிடுவேன்னு மெரட்டி காபி ஷாப் கூட்டிட்டுப் போனேன்.

அப்பறம் பஹரிகா ஆரம்பிக்குறதுக்கு அதிதில தான் கான்ட்ராக்ட் போடணும்னு நான்தான் அப்பாகிட்ட சொல்லி அவர சம்மதிக்க வச்சேன். கொஞ்சம் கொஞ்சமா உன் மனச நெருங்குறதுக்கு இது ஒரு வழின்னு நெனச்சேன். அது சரிதான். அதுக்கு மேல உங்க நிறுவனத்துல இருந்த நம்பிக்கை உணவுத் திருவிழா நல்லபடியா நடக்கும்னு சொல்லுச்சு. என் கூட பேசக் கூட உனக்குப் பிடிக்கலேன்னாலும், கடமையால என்னோட பேசுன. ஏதோ அப்பப்ப காயத்துக்கு மருந்து போடுறது, ஸ்பெஷலா கண் முழுச்சு கேக் செய்யுறது அப்படின்னு பீட்சால வர சிக்கன் டாப்பிங் மாதிரி, அங்கொன்னும் இங்கொன்னுமா சில நம்பிக்கை தர விஷயங்கள் நடந்தது. அதுனால மனசு விட்டுப் போகாம இருந்தேன்.

நான் நம்ம பிரச்சனைகள் எதைப் பத்தியும் பேசாமலேயே, நான் செஞ்சதா நீ நெனச்சுட்டு இருந்த என் தப்புகளுக்கு விளக்கம் எதுவும் தராமலேயே, என் மேல உன்னோட உள்மனசுல இருந்த பிரியம் தண்ணிக்குள்ள பொத்திவச்ச தாமரைப்பூ கையை எடுத்தா எப்படி மேல வருமோ, அது மாதிரி மேல வந்துடுச்சு

சற்று வெட்கப்பட்டாலும் காரியத்திலே கண்ணாக சுஜி, “ஆமா உங்க அம்மா அப்பாக்கு எப்படி இந்த விஷயம் தெரியும். அதிதில நான் படிக்குறது தெரிஞ்சுமா நீங்க அங்க வர்றத கண்டுக்காம இருந்தாங்க?” என்று வினவினாள்.

“அந்த கூத்த ஏன் கேட்குற? அப்பாவுக்கு நீ அங்க படிக்குற விஷயமே தெரியாது. எங்கேயோ சொந்தக்காரங்க ஊருல தங்கிப் படிக்குறதா நெனச்சுட்டு இருந்துருக்கார். உன் கழுத்துல என் செயின் பார்த்ததும் நமக்குள்ள என்னமோ விஷயம்னு ஊகிச்சுகிட்டு கேசவன கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னாங்க. அன்னைக்குத்தான் நீ மும்பை போகப் போறேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு. நம்ம என்னடானா U.S. போற வாய்ப்ப விட்டுட்டு இவ பின்னாடி சுத்திட்டு இருக்கோம், இவ கொஞ்சம் கூட சலனமே இல்லாம மும்பை போறேன்னு சொல்லுறான்னு. அன்னைக்கு ரொம்ப அழகா வேற இருந்து தொலைச்ச. ராத்திரி நேரம், யாரும் இல்ல, சிலு சிலுன்னு காத்து அதுதான் நான் கொஞ்சம் தடுமாறிட்டேன். அப்பறம்…”

“போதும் போதும் விஷயத்தை மட்டும் சொல்லுங்க”

“ராட்சஷி, ஒரு ரொமாண்டிக் பேச்சு பேச விடாதே”

“அதெல்லாம் அப்பறம். நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லாம நோ ரொமான்ஸ்.”

“எனக்கு நீ லஞ்சம் தராம நான் ஒண்ணும் சொல்ல முடியாது.”

“நேத்து பூரா என்கிட்ட நீ ஊருக்குப் போனா என்ன செய்வேன்னு பொய் சொல்லியே காரியத்தைச் சாதிச்சுட்டிங்க. இன்னைக்கு அது நடக்காது மாதவா. நீ இப்ப சொல்லலேன்னா இறங்குனவுடனே உங்க பிரெண்ட் யார் வீட்டுலயாவது போய் தங்கிக்கோ.”

“நீ செஞ்சாலும் செய்வம்மா. சரி சொல்லுறேன். என்கிட்ட அன்னைக்கு கோவமா பேசுனியா. கேசவன் கிட்ட பொலம்பி தள்ளிட்டேன். அவன் நீ நிஜம்மாவே என்ன வெறுக்கிறியான்னு டெஸ்ட் பண்ண, என்னைய உன்னைப் பார்க்க வேண்டான்னு சொல்லிட்டான். அப்பறம் அதிதில உனக்கு போட்ட கான்ட்ராக்ட் கேன்சல் பண்ணா எங்களுக்கு தொழில் முறைல நல்லது இல்ல. நல்ல வேலையா உனக்கு அந்த சமயத்துல U.Sல இடம் கிடைச்சது. ஆனா எயிட் கொஞ்சம் கம்மி. சோ, நாங்க இந்த பொண்ணுக்கு ஸ்பொன்சர் பண்ணுறோம்னு சொல்லிட்டோம். அதிதிலையும் சரின்னு சொல்லிட்டாங்க. நீ விசா வேலைல பிஸியா இருந்தப்ப நானும் என் மேனேஜர் கிட்ட கெஞ்சி கூத்தாடி, San Joseல ஆரம்பிச்ச ப்ராஜெக்ட்டுக்கு மாறிட்டேன். இங்க இல்லைன்னாலும் U.S வந்தப்பரமா உன்னைப் பார்த்துக்கலாம்னு நெனச்சேன். ஆனா, அதுக்குள்ள பஹரிகாவுக்கு வந்த குட்டிம்மா என்னைப் பார்க்காம தவிச்சுப் போய்ட்டிங்கலாமே. கேசவன் சொன்னான். சரி கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு உன்னை கன்வின்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணோம்”

விமானப் பணிப்பெண் கொண்டு வந்து கொடுத்த ஆப்பிள் ஜூசை ஒரு மிடறு குடித்து விட்டு தொடர்ந்தான் மாது. “இந்த மினி என்னைய லவ் பண்ணுறதா சொன்ன விஷயம் எனக்கே அதிர்ச்சி தான். அவ வீட்டுக்கு வரப்ப எல்லாம் விக்கி கிட்ட பேசிகிட்டே இருப்பா. விக்கி ஊருக்குப் போற வாரம் அம்மா எட்டிக் கூட பாக்க மாட்டாங்க. அத வச்சு விக்கி மேல அவளுக்கு ரொம்ப ஆசைன்னு எனக்குத் தெரிஞ்சது. விக்கிக்கும் மினியப் பிடிக்கும். ஆனா ரொம்ப தயக்கம் ஜாஸ்தி இதயம் படத்துல வர்ற முரளி மாதிரி. நான் சினிமா பாக்குற மாதிரி அவங்கள வேடிக்கை பாக்க, நீ என்னடான்ன மினி என்ன லவ் பண்ணுறான்னு சொல்லுற. பட், அதுல ஒரு பெரிய சந்தோஷம்”

“என்ன மினியே நம்மள லவ் பண்ணுறாலேன்னா?”

“ச்சி… போ அவ எனக்கும் ஒரு பிரெண்ட் தான் ஆனா என்ன ரெட்ட வாலு. உன்கிட்ட நான் பயந்துட்டே என்ன கல்யாணம் பண்ணிக்க புடிக்கலியான்னு கேட்டேன். உண்மைலேயே பிடிக்கலன்னா ஆமாம்னு சொல்லி இருப்ப. ஆனா நீ மினியக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ட. உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு அப்பயே எனக்குத் தெரிஞ்சு போச்சு. இருந்தாலும் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிட்டேன்னா மும்பை போற கான்ட்ராக்ட்க்கு அதிதில சம்மதிச்ச மாதிரி. அதுனால மினி கிட்ட சுருக்கமா நடந்தத சொல்லி உன் கிட்ட பேச சொன்னேன்”

தனது சந்தேகத்தைக் கேட்டு விட வேண்டியதுதான் என்று நினைத்த சுஜி,
“உங்களுக்குப் பணத்தாசை கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா ஏன் எங்க அப்பாகிட்ட இருந்து அந்த நிலப் பத்திரத்தை வாங்குனிங்க?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3

அத்தியாயம் – 3 “அப்பா, சரயு ஆன்ட்டிய முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?” சந்தனா சந்தோஷத்தில் கூவினாள். “சரயு, சிறு வயதிலிருந்தே என் மனதிற்கு நெருக்கமான தோழி. அப்படித்தானே சரயு” என்றான். ஆமாம் என ஆமோதித்தாள் சரயு. “நேரமாகிவிட்டதே. வீட்டில கணவர்…?” என