ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – END

78 – மனதை மாற்றிவிட்டாய்

வீட்டில் வந்து சுந்தர், மீரா விஷயமும் பேசி தாத்தாவிடம் சம்மதம் வாங்கிவிட அடுத்தடுத்து அனைத்தும் துரிதமாக நடந்தேறியது. மதனின் பெற்றோர்கள் வந்ததும் அடுத்த ஒரு வாரத்தில் கோவிலில் திருமணம் என்று முடிவானது. சுந்தர் மீரா திருமணம் மீராவின் வீட்டினர் ஒரே பெண் கல்யாணத்தை சிறப்பாக பண்ண வேண்டும் என கேட்டுக்கொண்டதால் ஒரு மூன்று மாதம் தள்ளி வைக்கபட்டது.

சுந்தர் ஆதியிடம் அவனாகவே வந்து பேசினான். “சாரி டா ஆதி, சின்ன வயசுல இருந்து உன்கூட அண்ணன் தம்பியா பழகிட்டு சொந்தமாவும் சரி, பிராண்டாவும் சரி நல்லா பேசிட்டு திடிர்னு உனக்கு எல்லாமே ஸ்பெஷல பண்ராங்கன்னு நானே முடிவு பண்ணிட்டு உன்னை ஒதுக்கிட்டு தேவையில்லாம விட்டு விலகிட்டேன். என்னை மன்னிச்சுடு டா… குடும்பத்துல உன்னை விட மூத்தவன் முறைல ஒரு அண்ணன் மாதிரி கூட நான் உனக்கு எதுவும் செய்யல. ஒரு பிரண்டா உன் பிரச்னைல கூடவும் சப்போர்டிவ இல்லை. ஆனா இது இரண்டுமே நீ எனக்கு பண்ணிட்ட..உன்னை நான் எப்போவுமே புரிஞ்சுக்கவேயில்லைல.” என வருந்த

ஆதி “அதெல்லாம் இல்லடா, நானும் தான் உன்னை புரிஞ்சுக்கல. எனக்கு உன் மேல ரொம்ப கோபம் தான்.. திவிக்காக தான் உன் மேரேஜ்க்கே பேச வந்தேன். அப்படி பாத்தா நானும் தான் உன்னை புரிஞ்சுக்கல. மத்தவங்க என்னை ஸ்பெசல ட்ரீட் பண்ணும் போது வேண்டாம்னு நான் மறுக்கல. அதே சமயம் அத நான் எதிர்பார்க்கவும் இல்லை. அதனால நீ எதுக்காக என்னை விட்டு விலகுறேன்னு புரியாமலே நானும் விட்டுட்டேன். அது நாளாக ஒரு ஈகோவா கூட மாறிடுச்சு போல. நீ பேசுனா பேசலாம்னு விட்டுட்டேன். நானாவது உன்கிட்ட ஏன் டா என்கிட்ட பேசலன்னு அப்போவே கேட்டிருந்தா இத்தனை வருஷம் நாம பிரிஞ்சிருந்திருக்க தேவையில்லை.” என

சுந்தரும் “நடந்தது போகட்டும் விடுடா. இனி பழைய மாதிரியே நாம இருப்போம். ஆனா உண்மையாவே உனக்கு திவி கிடைச்சது அதிர்ஷ்டமா? அவளுக்கு நீ கிடைச்சது அதிர்ஷ்டாமன்னு சொல்ல தெரில. உனக்காக உன் குடும்பத்துக்காகன்னு அவ எல்லாமே பாக்ரா. அவளுக்காக அவ விருப்பதுக்காகன்னு உனக்கு பிடிக்காததையும் நீ செய்ற, உன்னோட கோபம் பிடிவாதம் எல்லாமே விட்டுட்டு அவளுக்காக நீ எல்லாமே செய்ற. இரண்டு பேரோட லவ் என்றவன் பெருமூச்சுடன் நான் அவளை லவ் பண்ணேன்னு நினச்சேன் டா. அதான் அந்த மாதிரி கிறுக்குத்தனம் எல்லாம் பண்ணிட்டேன். ஆனா இப்போ உங்க இரண்டு பேரையும் பாக்கும் போது புரியுது உங்கள்ள ஒருத்தர் வேற ஒருத்தரோட கல்யாணம் பன்னிருந்தாலும் என்னாலையே இப்போ நினச்சு பாக்கமுடில. என்னையே மறந்து நானே பிரே பண்ணிட்டேன் தெரியுமா? நீங்க இரண்டுபேரும் இதேமாதிரி எப்போவும் சந்தோசமா இருக்கணும்னு. உங்களுக்கு என்மேல கோபமே வரலையா?” என்றதும் ஆதியும் வாய்விட்டு சிரித்துவிட்டு சுந்தரின் தோளில் கைபோட்டு “சரி வா, அதுக்கு தான் என் தங்கச்சி மீரா உனக்கு பேசாம அலைய விட்டு பனிஷ்மென்ட் குடுத்தாளே பத்தலியா? வேணா இன்னும் கொஞ்சம்? ” என

சுந்தர் “டேய் டேய்..போதும். ஏற்கனவே அவ அப்போ அப்போ பாருங்க ஆதி அண்ணாவை நீங்க அவருக்கு பிரச்சனை பண்ணியும் இப்போ அவரால தான் உங்களுக்கு ஆசைப்பட்ட பொண்ணோட கல்யாணமே நடக்கிதுன்னு ஒரே ஆதி திவி புராணம் தான். உனக்கு பூஜ பண்ணாததுதான் பாக்கி. இதுல இப்போ பேசுனது அவ காதுல கீது விழுந்தட போகுது. இப்போதான் ஓரளவுக்கு பேசி வந்திருக்க. திரும்ப ஞாபகப்படுத்தி சூன்யம் வெச்சுடாத ராசா போ… ” என சிரித்துக்கொண்டே வர திவி மீரா இருவரும் வந்து “என்ன உங்க இரண்டு பேருக்கும் இங்க சிரிப்பு. அங்க கல்யாண வேலை எவ்ளோ இருக்கு. வாங்க அங்க…” என கத்திவிட்டு செல்ல அமைதியாக இருவரும் சென்று வேலைகளை பார்க்க மதன் சோபி திருமணம் அதோடு அபி அரவிந்தின் இரண்டாவது குழந்தைக்கும் கோவிலிலே பெயர் வைத்துவிடலாம் என அனைவரும் பரபரப்புடன் இருக்க ஐயர் நாத்தனாரை கூப்பிட்டு இந்த தாம்பூலத்தை தர சொல்லுங்கோ என சோபி மீராவிடம் ஏதோ கூற அவளும் சிரித்துக்கொண்டே திவியை அழைத்துவர அனைவரும் ஆச்சரியமாக பார்க்க சோபியே திவியிடம் “எங்க போற…மத்த வேலை எல்லாம் அவங்க பாத்துக்கிட்டும். நீ தான் துணை பொண்ணா கூடவே இருக்கனும். நாத்தனாரா இருந்து தாலி கட்டி முடிக்கற வரைக்கும் நீதான் கூட இருந்து பாக்கணும் வா.. இந்த கல்யாணத்துல முக்கியமா நீதான் இருக்கனும்” என கூற இத்தனை நாள் பெரிதாக சண்டையிட்டு கொள்ளவில்லை எனினும் சோபி மன்னிப்பு கேட்கவில்லை, திவியும் மன்னித்துவிட்டேன் என கூறவில்லை எனினும் அவளுக்கு சோபியின் திருமணத்தில் இப்டி ஒரு இடம் கொடுத்து என்ன இடத்தில வைத்திருக்கிறாள் என காட்டிவிட்டாள். பின் அனைத்தும் மகிழ்ச்சியுடன் நிகழ்ந்தேற அனைவரும் சற்று அமர்ந்து பேசிக்கொண்டிருக்க “சோபி திவிய கூப்பிடுவா இந்த அளவுக்கு அவளை முன்னாடி வெச்சு கல்யாணம் பண்ண நினைப்பான்னு யாருமே நினைக்கல. எப்படி மதன் ?” என அவனிடம் விசாரிக்க

மதனுக்கும் அதில் எதிர்பாரா மகிழ்ச்சியே. அவனிடம் ஒரு முறை மட்டுமே திவியை பற்றி கேட்க அவன் மதன், திவி நட்பு முதல் சோபியை பிடித்துள்ளது என கூறிய போது அவள் சோபியை பற்றி கூறியது. என அனைத்தும் கூறினான். அப்போது சோபியிடம் ” உண்மையாவே நீ முழுசா நீ பண்ண பிரச்சனைய சொன்ன அளவுக்குக்கூட உன்னை பத்தி தப்பா திவி சொல்லிகல. அதே சமயம் நீ சூப்பர். ரொம்ப நல்ல பொண்ணு அப்டி இப்டினு பொய்யும் சொல்லல. அவளுக்கு கொஞ்சம் ஆடம்பரமா இருக்கணும்னு ஆசை. அதொட அவளை யாராவது தப்பா பேசுனா அவளுக்கு பிரச்னை பண்ணா இவளும் திரும்ப பழிவாங்குறானு பிரச்சனை பண்ணுவ. பிடிவாதம் கொஞ்சம் அதிகம்னு நீங்க எல்லாரும் சோபிய பத்தி பில்ட்டப் பண்ணதையே சாதாரணமா ஏதோ அதுவும் ஒரு பழக்கம்ன்னு இருக்றதமாதிரி தான் திவி என்கிட்ட சொன்ன. அதுக்கு மேல நீ நேர்ல பாத்து உனக்கு ஓகேவான்னு தெரிஞ்சுக்கோனு சொல்லிட்டா. பிரச்சனையையும் உன் மேல இருந்த குறைய அவ பெருசு பண்ணாம இருந்ததே நான் உன்ன தேடி வர ஒரு காரணம்னே கூட சொல்லலாம்.” என்றவன் ஆதியிடம் திரும்பி “அதோட நானே தயங்குன போதும் கூட திவி சொன்னா ‘மதன் மனசார உனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு முடிவு பண்ணிட்டேன்னா கண்டிப்பா அந்த லவ் உன்னை அவகிட்ட சேத்திவெக்கும். அதோட அவகிட்ட இருக்கற சின்ன குறையும் மறச்சிடும். எல்லாத்துக்கும் மேல உன் காதலே அவளை உனக்கு பிடிச்சவளா மாத்தி கொண்டுவரும். அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள் என் ஆதி தான். நான் சொத்துக்காக ஆசைப்பட்டேனு தெரிஞ்சும் அப்டி சொல்லியும் அது உண்மையா பொய்யான்னு புரிலேன்னாலும் அந்த சொத்து பணத்தை விட என் காதல் பெருசுனு என் தியாவுக்கு நிரூபிப்பேன்னு சொன்னவரு. அவரோட லவ்ல அப்டி ஒரு உறுதி, அவரோட காதல்ல இருந்த ஆழம் அதைத்தாண்டி என்னால எதையுமே யோசிக்கவிடாம பண்ணிடுச்சு. அவ்ளோ காதலோட அவரு என்கிட்ட எத சொன்னாலும் செய்யணும் கேக்கணும்னு தோணும். கிட்டத்தட்ட நான் முழுசா அவர்கிட்ட அடங்கிட்டேன். என் வாழ்க்கைல மிகப்பெரிய வெற்றியே அவர்கிட்ட நான் அடங்கி சந்தோசமா தோத்துப்போறதுதான்னு சொன்னா… ” என்று மதன் கூறியதும் அங்கிருந்த அனைவரும் ஓவென கத்த திவி வீட்டிற்கு அம்மாவுடன் சென்றிருக்க அங்கே இல்லாததால் ஆதிக்கு ஏனோ மனம் தாளவில்லை அவளை உடனே பார்க்கவேண்டுமென தோன்ற அனைவரிடமும் சிரித்துக்கொண்டே நகர அடுத்து சிறிது நேரத்தில் குழந்தைக்கு பெயர் வைக்க அனைவரும் அங்கே கூடிட ஆதியின் அருகில் திவி வந்து நிற்க “ஏன் டி இவ்ளோ நேரம்?”

“எல்லாம் எடுத்திட்டு வரணும்ல. குழந்தைக்கு துணி வேற வேணும்னு சொல்லிட்டாங்க” என அவள் பாவமாக பார்க்க “சரி சரி விடு.” என்றதும் அவளும் என்ன பெயர் என்று எதிர்பார்க்க “விருக்க்ஷாந்தினி ” என்றதும் திவி திகைத்து ஆதியை பார்க்க அனைவரும் திவியை பார்த்தனர். அவளுக்கு என்னவோ போல இருக்க ஆதியின் கையை இறுக பற்றிக்கொண்டாள். அங்கிருந்து நகர்ந்துபோக அனைவரும் பெயர் கூப்பிட்டுவிட்டு அவளிடம் குழந்தையை கொண்டு வந்தவர்கள் ஆதி அவளிடம் “தியா மா அங்க பாரு.” என திருப்பி காட்ட அபி திவியிடம் “நீ ஆசைப்பட்ட பேரு அவளுக்கு வெச்சாச்சு.. இப்போவும் மனசார சொல்றேன். உன்னை மாதிரியே நீதான் வளத்தனும். ” என குழந்தையை நீட்ட திவி ஆதியை பார்க்க “இவளை எங்க எல்லாரையும் விட ரொம்ப எதிர்பார்த்தது நீ..வாங்கிக்கோ.” என்றதும் அவள் முழுமனதுடன் முதன்முறையாக அந்த பிஞ்சு குழந்தையை கையில் ஏந்தினாள். அதன் பிறகு அந்த நாள் முழுவதும் குழந்தையை அவள் இறக்கவேயில்லை.

அன்று ஆதியும் திவியும் இரவு தனிமையில் பேசிக்கொள்ளும் போது இருவருக்கும் வார்த்தைகள் தேவையற்று போயிருந்தது. ஆதி சுந்தர் கூறியது, மதன் கூறியது என அனைத்தும் சொல்லிவிட்டு “என்னை உனக்கு அவ்வளோ பிடிக்குமா டி குட்டிமா ?” என்றதும் அவளும் அவனது கழுத்தை சுற்றி மாலையாக கைகளை கோர்த்துக்கொண்டு “ஏன் உங்கள விடவா, என்னை பத்தி ஒரு வார்த்தை யாராவது பேசுனாலும் சும்மா இருக்கீங்களா என்ன?

நான் அன்னைக்கு கோவிலுக்கு போயிருந்த போது வீட்ல எல்லாரும் “எங்க அம்மா அப்பா எல்லாரும் வந்தும் திவிகிட்ட சொல்லி பழைய மாதிரி எங்க எல்லார்கிட்டேயும் பேச சொல்லுன்னு உங்ககிட்ட சொல்லியும், மத்தவங்கள மன்னிக்கறா, இவங்க பெத்தவங்க தானே, வளத்துனவங்க தானே ஒருவார்த்தை கோபத்துல சொல்லிட்டா அதுக்காக மன்னிக்க கூடாதா? இருந்தாலும் இவ்வளோ கோபம் ஆகாதுன்னு அவங்க சொல்லிட்டாங்களாம். அதுக்கு சார் எப்படி கொந்தளிசீங்க. சுபி சொன்னா.” என அவனும் அன்றைய நினைவில் சிரிக்க

ஆதி கூறியது “அதேதான் நானும் சொல்றேன். மத்தவங்க அவளை புரிஞ்சுக்காம இருக்கலாம். ஆனா அவளை பெத்தவங்க வளத்துனவங்க எப்படி அவளை பத்தி தப்பா நினைசீங்க. மகாவிடம் திரும்பி அத்தை ஒரே வார்த்தை தான் ஆனா என்ன வார்த்தைன்னு ஞாபகம் இருக்கா அவ தப்பே பன்னிருந்தாலும் “பொண்ணு செத்திட்டான்னு ஒரு நிமிசத்துல சொல்லிடீங்கல்ல.” இங்க இருக்கற எல்லார்கிட்டயும் தான் கேக்கறேன். என்னைவிட நீங்க எல்லாருமே அவளை கூட இருந்து பாத்து வளத்துனவங்க தானே. ஓரு வீடியோ போதும்ல உங்க பொண்ண தப்பா நினைக்க. கேட்டா அவ பொய் சொல்லுவா? நடிப்பா விளையாட்டு தனமா ஏதாவது பண்ணுவா. அதுனால அப்டி நினைச்சோம்னு சொல்றிங்க. ஆனா எனக்கு புரியல. அதோட சேத்தி எல்லாருமே சொன்ன விஷயம் அதுல ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு அந்த நேரத்துல உங்க எல்லாருக்கும் அது மட்டும் மறந்துபோயிடிச்சுல. நான் அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். உண்மை தான். ஆனா அதுக்கு காரணம் நீங்க எல்லாரும் தான். நாளுக்கு நாள் அவமேல இருக்கற கோபத்தை அதிகப்படுத்திட்டே இருந்தீங்க. இதுல தயாங்கிற பேர்ல வந்த பிரச்சனை வேற. அத அக்கா மாமா எல்லாரும் கேட்டுட்டு போனது. இல்லாட்டி நானும் அப்டி அவசரத்துல கல்யாணம் பன்னிருக்கமாட்டேன். அவமேல கோபம்னு வந்ததும் எவ்ளோ திட்டு என்னென்ன பேச்சு.. அத்தனை நாள் அவ பண்ண விஷயமே உங்க எல்லாருக்கும் அதுக்கப்புறம் தப்பா தெறிஞ்சிடுச்சுல்ல. இதெலாம் பண்ணிட்டு அவகிட்ட பேச சொல்லி என்னை வேற கேக்கறிங்க. நானா இருந்திருந்தா இந்நேரம் உங்ககூட இருக்கணுமான்னு யோசிச்சிருப்பேன்.. அவ ஒரு வார்த்தைகூட உங்ககிட்ட அத பத்தி கேக்காம இதுக்குமேல லைப்ப பாத்திட்டு போலாம்னு இருந்துட்டா.. நான் சொன்னா என் தியா கேட்பா தான். ஆனா அவளை சங்கப்படுத்தற எந்த விஷயத்தையும் நான் அவளுக்கு கொடுக்கமாட்டேன். அவ உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்கணும்னு நான் நினைக்கறேன். நீங்க யாரும் அவகிட்ட மன்னிப்பும் கேட்க வேண்டாம். அவ உங்ககிட்ட பழையமாதிரி இருக்கவும் வேண்டாம். அத நானே நம்பலை. அவகிட்ட அப்புறம் எப்படி சொல்லுவேன். எல்லாரும் அளவா பேசிட்டு இனிமேல் வர லைப்ல சந்தோசமா இருங்க. அப்டி இருந்த இப்போ இருக்கற மாதிரியேவாது அவளும் உங்ககிட்ட ரொம்ப இல்லேன்னாலும் சந்தோசமா சாதாரணமா சிரிச்சு பேசிட்டிருக்கா. திரும்ப யாராவது இன்னைக்கு என்கிட்ட பேசுன மாதிரி அவகிட்ட பேசி அவ சங்கடப்பட்டானு தெரிஞ்சது யோசிக்கக்கூட மாட்டேன். அவளை கூப்பிட்டு நான் பாட்டுக்கு போய்டுவேன்.” என்று கூறவும் அனைவரும் அமைதியாகினர்.

அதை எண்ணி பார்த்து இருவரும் சிரித்துக்கொள்ள “பாப்பாவுக்கு நான் வெச்ச பேரை மட்டும் ஏன் அவங்ககிட்ட சொன்னிங்க.”

ஆதி “அது நமக்கு கோபம் மத்தவங்க மேல. பாப்பா மேல இல்லேல. அதுனால தான். அதுவும் நீ சொன்னியே. அவ விருட்சமா அன்பு, பாசம், படிப்பு, வீரம்ன்னு எல்லாத்துலையுமே வளரனும். நந்து குட்டிக்கு வெச்ச மாதிரி இவளுக்கும் நந்தினி பேர் வெக்கலாம். அப்போ இரண்டும் சேத்தி வெச்சா நல்லா இருக்கும்ல. ஆனா எல்லாமே இப்போ போய்டிச்சுலன்னு நீ சொல்லிட்டு போகும்போது எனக்கு அவ்ளோ கஷ்டமாயிருந்தது. அதுவும் அக்கா மாமாவும் உன்னை பத்தி இன்னும் நீ குழந்தையை தூக்கலன்னு சொல்லிட்டே இருந்ததால தான் அத அவங்ககிட்ட சொன்னேன்.” என்றான்.

ஆதிக்கு திவியிடம் ஒரு கேள்வி இருந்தது. “தியா நீ ஏன் என்னை தயான்னு கூப்பிடவேயில்லை?” என்று இத்தனை நாள் இருந்த கேள்வியை கேட்டுவிட்டான்.

இவளும் தயங்கி “அது பெருசா எதுவுமில்லை. விளையாட்டோ, உண்மையவோ நான் வெச்ச அந்த பேரால எவ்வளோ குழப்பம், முக்கியமா உங்களையே அது கஷ்டப்படுத்திடுச்சே. அதுனால தான் அத அப்டியே விட்டுட்டேன்.”

ஆதியோ “இல்லடா குட்டிமா நீ என்னை அப்டியே கூப்பிடேன்.” என

இவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது “அது கொஞ்சம் உறுத்தலாவே இருக்கே ஆதி, நீங்க ஏன் இப்டி அடம் பண்றீங்க?” என

“சரி காரணம் என்னனு சொல்றேன்.. பட் நீ அப்டி தான் கூப்பிடனும் ஓகேவா” என அவளை ஒப்புக்கொள்ள செய்துவிட்டு கூறினான்.

“நீ அந்த பேரை சொல்லும் போது அப்படி ஒரு காதல் உன் கண்ணுல. மொதல்ல அத பாத்து அது வெறும் பேரு தான், இல்ல நந்து, சூரியனை சொன்னமாதிரி ஏதாவது இருக்கும்னு நினைச்சாலும் நான் கோபப்பட்டேன். ஏன்னா உன் காதல் எனக்கே எனக்கு வேணும்னு தோணுச்சு. அப்புறம் நீ ஒரு ஒரு தடவையும் அத சொல்லி சீண்டி விளையாடும்போதும் அதே அளவு காதலை பாக்கும் போது உன் முகத்துல வர சந்தோசம் பாக்கும் போது ஒரு கட்டத்துல மேல எனக்கு அந்த பேர் மேல ஒரு பொறாமையே வந்ததுன்னு கூட சொல்லலாம். அது நானா இருக்கக்கூடாதான்னு ஒரு ஏக்கம். கடைசில அது நான்னு தெரிஞ்சதும் எப்படி இருந்தது தெரியுமா? அந்த நிமிச சந்தோஷத்துக்கு அளவே இல்ல என் தியா எனக்கு வேணும்கிற காதலை மொத தடவையா அதுவும் நான் பாத்து பொறாமைப்பட்ட ஒரு பேரை சொல்லி என்கிட்ட சொன்னா. . ஆனா அத நீ என்கிட்ட சொன்ன நிமிஷம் என் மடில மயங்கி விழுந்து ரொம்ப நான் உடைஞ்சுபோன நிமிஷமும் அதுதான். எனக்கு உயிரே இல்ல. அதுக்கப்புறம் ஒரு ஒரு நாளும் உங்கிட்ட இருந்து அந்த பேரை சொல்லி கூப்பிடுவியான்னு எதிர்பார்ப்பேன். ச்ச்ச்…நடக்கவேயில்ல. அதனால நானே கேட்டுட்டேன்.” என கூறிமுடிக்க அவளும் சிரித்துக்கொண்டு அணைத்துக்கொண்டாள்.

“i love you so much dhayaa.” அவனும் அணைத்துக்கொண்டே “சரி உனக்கு ஆதி பிடிக்குமா? ராஜா பிடிக்குமா? தயா பிடிக்குமா?”

“மூணு பேருமே பிடிக்கும். ராஜா பாசமா செல்லமா சொன்ன பேச்ச கேக்கும்போது பிடிக்கும். தயா லவ் இந்த கொஞ்சல்ஸ் இதெல்லாம் இருக்கும்போது பிடிக்கும். மீதி சேட்டை, சண்டை, வம்பிழுக்கறது, பேசுறது, கோபம், அடிதடி எல்லாத்துலயும் ஆதியை பிடிக்கும்” என அவன் இவனது ஒவ்வொரு செய்கையும் ரசித்து சொன்ன விதத்தில் அவளை கட்டியணைத்துக்கொண்டு “உன்கூட இன்னும் கொஞ்ச நாள் ஜாலியா லவ் பண்ணி என்ஜோய் பண்ணனும்னு தான் பேபி அப்புறம் பிளான் பண்ணாலும்னு யோசிச்சேன் ஏன்னா குழந்தை வந்திட்டா அதைத்தான் முதல பாப்பாங்களாம். அது அம்மா அப்பா இரண்டுபேருமே தான். ஆனா இப்போ அது பிளான் பண்ணாலும் எனக்கு உன்மேல இருக்கற லவ் உனக்கு என் மேல இருக்கறத பாக்கும் போது எப்படி இருந்தாலும் எனக்கு நீ உனக்கு நான் தான் பஸ்ட்னு புரிஞ்சிடிச்சு. ” என்று அவளை தூக்கியவன் நிலவிடம் விடைபெற்று தங்கள் உலகத்துக்கு சென்றுவிட்டனர்.

********************************** சுபம் *************************************

 

 

1 thought on “ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – END”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

KSM by Rosei Kajan – 11KSM by Rosei Kajan – 11

  அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ…     Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadPremium WordPress Themes DownloadDownload Premium WordPress Themes Freeudemy free downloaddownload mobile firmwareDownload Premium WordPress Themes

வேந்தர் மரபு- 59வேந்தர் மரபு- 59

வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு 59அடுத்த அத்தியாயம் உங்களுக்காக   Download Best WordPress Themes Free DownloadFree Download WordPress ThemesDownload WordPress Themes FreeDownload Premium WordPress Themes Freelynda course free downloaddownload karbonn firmwareFree Download

அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05அறிஞர் அண்ணாவின் “குமாஸ்தாவின் பெண்” 05

திகிலோடு கலந்த காதல் என்னை மேலும் அதிகமாக வதைக்கத் தொடங்கிற்று. எங்கள் குடும்பக் கஷ்டமோ அதிகரித்துக் கொண்டே வந்தது. வீட்டின் மேல் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி கட்டத் தவறி விட்டார் அப்பா. அவர் என்ன செய்வார்? இல்லாத குறைதான். வட்டியைச் செலுத்தும்படி