Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 03

வருகை

3

 

உன்னிடம்

ஏமாந்ததால்

உன் இனம்

அனைவரையும்

வெறுக்கிறேன்

வெறுப்பின் துவக்கம் நீயே!!!

அதை மாற்றும் மருந்தும் நீயே!!!!

 

 

 

தன்னிலை மறந்து எல்லாவற்றையும் உளறியதாலோ  என்னவோ கொஞ்சம் தெளிவாக யோசிக்க துவங்கியது ஸ்ரீயின் மூளை,  எங்கிருந்தாலும் வாழ்க என கூறும் அளவிற்கு இல்லை என்றாலும் அவள் வாழ்வை கெடுக்கும் எண்ணம்  துளியுமில்லை, இருந்தும் சில விஷயங்கள் அவளிடம் கேட்கவேண்டியுள்ளது, முக்கியமாய் கடைசியக அவள் தன்மீது  கூறிய பொல்லாதகுற்றத்தை தெளிவு படுத்தவேண்டும், அதற்கு சரியான விடை கிடைத்த பின்  இனி என்றுமே    அவளை சந்திக்கவே கூடாது, என்ற முடிவோடு தான் அலுவலகம் கிளம்பினான், ஸ்ரீ.

 

தன் வாழ்வில் நிகழப்போகும் மாற்றம் ஏதும்  அறியாமல் அலுவலகத்திற்கு தயாரக கிளம்பி கீழே வந்த ஸ்ரீ,  நேரே நந்துவிடம் சென்று, நான்… நேற்று  என்று எதுவும் சொல்லத் தோன்றாமல்  தன் தவறை எண்ணி குற்றவுணர்வில் வார்த்தை வாராமல் தடுமாறி  அம்மா அப்பாவிற்கு  என்று  இழுத்தான், ஸ்ரீ.

 

தவறு என்று  வருந்திநிற்பவனை மேலும் வருத்த மனமின்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது கவலைப்படாதே, ஆனால் மீண்டும் இந்த தவறு நிகழாமல் பார்த்துக்கொள் என்று சற்று கண்டிப்பு குரலிலேயே அண்ணனாய் அறிவுறுத்தினான்  நந்து. நன்றி அண்ணா அம்மா அப்பாவிடம் சொல்லாமல் இருந்ததற்கு, நான் நேற்று வேறு ஏதேனும் கூறினேனா? என்று ஐயமாய் நிறுத்தினான்  ஸ்ரீ.

 

“ம்…… என்று யோசித்தபடி ஆம் ஏதோ உன்னால் எப்படி முடிந்தது என்று புலம்பிக் கொண்டு இருந்தாய் என்ன முடிந்தது என்ன முடியவில்லை என்று ஒன்றும் விளங்கவில்லை என்று பொய் உரைத்தான் நந்து. ஸ்ரீயின் மனம் லேசானது, பிரியாவை பற்றி தான்  கூறினேன் என்று புரியவில்லை அது வரை நிம்மதி, இல்லை அது வேறு அவளுக்கு புது பிரச்சனை கொடுத்து விடும் என்று நினைத்தபடி, நந்துஉடன் கிளம்பினான், ஸ்ரீ.

 

அவசரப்பட்டு தவறாக நினைத்து பிரிந்துவிடுவது பின் அதை எண்ணி தண்ணீரில் தத்தளிப்பது, கொஞ்சம் பொறுமையாய் நடந்து என்ன என்று விசாரித்தால் போதும் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும் இதை நீ புரிந்துகொள்ள நேரம் நெருங்கிவிட்டது தம்பி தனக்குள் கூறிக்கொண்டன் நந்து.

 

அலுவலகம் வந்ததும், நந்து நேற்று நான் அறிந்த விஷயங்கள் பற்றி எனக்கு சற்று விபரம் தெரிய வேண்டும் உன் “பி. ஏ’வை வர சொல்லுகிறாயா??  என்றான் ஸ்ரீ.

 

உதடுகள் கேலிச்சிரிப்பில் துடிக்க என்ன விஷயம் விபரம் என்று புரியாதது போல கேட்டு, இதை உன்னை நேற்றே பார்க்க சொன்னேன் நம் அலுவலக பணியாளர்கள் பற்றிய விபரம், முதலில் இதை பார், பின்பு யாரிடம் எதை கேட்க வேண்டுமோ கேட்டுக்கொள் என்று அதை ஸ்ரீன் முன் நீட்டினான் நந்து.

 

இது இப்போது எதற்கு எனக்கு சில விபரங்கள் வேண்டும் என்றேனே என்று அதிலேயே குறியாய் நின்றான் ஸ்ரீ.  அப்படி என்ன பெரிய விபரம் நேற்று ஒரு அரைமணிநேரம் இங்கு இருந்த்திருப்பதா  அதற்குள் என்ன சந்தேகம் என்று வேண்டுமென்றே குடைந்தான் நந்து.

 

என்ன சொல்வது என்று விளங்காமல் அது தான் அலுவலக விஷயம் தான் வேறு என்ன விபரம் கேட்பேன் இங்கு வேலை பார்க்க தானே அழைத்து வந்தாய் பின் என்ன எதை கேட்டாலும் ஏன் எதற்கு என்று குடைகின்றாய்  என்று படப்படதான் ஸ்ரீ.

 

ஏன் இவ்வளவு  பதட்டப்படுகிறாய் ஸ்ரீ, இது உன்னிடம் புதிதாக தெரிகிறது ஏதும் பிரச்சனை இல்லையே ஸ்ரீ, எப்போதும் நிதானமாய் யோசிப்பவன் நேற்றியிலிருந்து நீ சரியில்லை இதை முதலில் பார் கொஞ்சம் பதட்டம் குறையும் என்று அவன் கையில் பைலை திணித்தான்  நந்து.

 

வேண்டா வெறுப்பாய் பெற்றுகொண்டவன், இதில் ப்ரியாவின் விபரங்களும் இருக்கும் அல்லவா? என்று ஆவலாய் பிரித்து பார்க்கதுவன்கினான்,  பல பக்கங்கள் ஏனோதானோ  என்று திருப்பியவன் பிரியைவை பற்றிய விபரம் அடங்கிய தாள்களை வெறித்தான் தன்னை அறியாமல் நன்றி நந்து என்று மொழிந்தான் ஸ்ரீ.

 

தம்பியின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை கண்டு மனம் நிறைய அதை வெளிக்கடாமல், எதற்கு நன்றி ஓ உண்மையிலேயே கொஞ்சம் நிம்மதியாக இ்ருக்கின்றதா?  என்று சாதாரணமாய் வினவினான் நந்து.  ஆமாம் என்று கவலை அகன்றவனாய் சிரித்தான் ஸ்ரீ. நீ இப்படி சிரித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று என்று தெரியுமா இப்போது தான் நிம்மதியாக உள்ளது என்றான் நந்து.

 

மிஸ். பிரியா என்ற எழுத்துகளில் தன் விரல்களால் மென்மையாக வருடிய  ஸ்ரீ, எனக்கும் தான் தனக்குள் முனுத்முனுதவன்  நந்து ஏதோ பேசத்துவங்க அவன் புறம் திரும்பினான் ஸ்ரீ.  நம் தொழில் முறை பற்றி உனக்கு தெரியும் தானே நான் வெளியூர் செல்லும் போது அப்பாவிற்கு உதவியாக நீ ஏன்  நம் அலுவலகத்தை கவனித்து கொள்ளக்கூடாது? நீ என்ன சொல்லுகிறாய் என்று கேட்டவன் , பிரியா உள்ளே வர அனுமதி கேட்க அனுமதி அழித்தப்படி தன் தம்பியை நோக்கினான் நந்து.

 

ஸ்ரீ இன் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் நந்துவிற்கு சிரிப்பு வந்தது. நந்துவின் சிரிப்பில் ஏதோ மறைந்து இருப்பதை உணர்ந்த  ஸ்ரீ  தன்னை கட்டுபடுத்திகொண்டு அமைதியானான். வாருங்கள் பிரியா என்ன எல்லாம்  நான் சொன்னபடி தயாரித்து விட்டீர்களா? கொடுங்கள் என்று அவளிடம் இருந்து தாள்களை பெற்றுக்கொண்டவன் உன் பதில் என்ன என்று நீ இன்னும் கூறவில்லையே? என்றான் நந்து. ப்ரியாவின் முகத்தில் பார்வையை பதித்து இருந்தவன் , சரி நீ சொல்லி எதை நான் மறுத்து இருக்கிறேன் உன் உத்தரவுபடியே நடக்க எப்போதும் நான் தயார் தான் என்றான் ஸ்ரீ.

 

பிரியாவும் ஸ்ரீயை தான் வெறித்துத் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் பார்வையை உணர்ந்தவன் என்ன என்று கேலியாய் புருவம் உயர்த்தி வினவினான், ஸ்ரீ.  சட்டென தலையை வேறு புறம் திருப்பி  அவ்வளவு தான் சார் நான் வருகிறேன் என்று கிளம்ப சென்றவளை நிறுத்தினான் நந்து, பிரியா உனக்கு என் தம்பியை தெரியும் தானே? என்ற கேள்வியில் அதிர்ந்து போய் நிற்கையில், அதற்குள் மறந்து விட்டாயா நேற்று தானே அறிமுகப்படுத்தினேன், என்று சிரித்தான் நந்து.

 

அண்ணா சிலரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது என்று ஸ்ரீ,  ப்ரியாவின் பொறுமையை சீண்டி கொண்டு இருந்தான். நினைவு இருக்கிறது சார் என்ற பிரியாவிடம், எல்லாமே வா இல்லை என்று கேள்வியாய் நிறுத்தினான் ஸ்ரீ.
வேண்டுமென்றே  தன்னை சீண்டுபவனை முறைத்துவிட்டு வேறு ஏதும் வேலை உள்ளதா சார் என்றாள், பிரியா.  இதை முதலில் சரி செய்து கொண்டுவாருங்கள் அப்புறம் என்று இழுத்தவன் இதை முடித்த பிறகு சொல்கிறேன் என்று பிரியாவை அனுப்பி வைத்தான் நந்து.

 

பிரியா அறையை விட்டு வெளியேறியதும், ஸ்ரீ.. பிரியா ரொம்ப நல்ல பெண் யாருக்கு கொடுத்து வைத்து உள்ளதோ என்று பெருமூச்சு விட்டான் நந்து. என்ன பெருமூச்சு எல்லாம் பலமாய் உள்ளது, அளவோடு இ்ருக்கட்டும் என்னயிருந்தாலும் என்ற ஸ்ரீ இன் பேச்சில் குறுக்கிட்டு என்னயிருந்தாலும் என்று ஆவலாய் கேட்டான் நந்து.  பெரிய விஷயம் ஒன்றும் இல்லை  என்னயிருந்தாலும் உனக்கு திருமணம் ஆகிவிட்டது உனக்காக மதி இருக்கிறாள் மறந்து விடாதே, அவளுக்கு மட்டும் தெரிந்தால் உன் கதி அதோ கதி தான் என்று கற்பனையில் கண்டதை நினைத்து வாய்விட்டு சிரித்தான், ஸ்ரீ.

 

நீ நினைக்கிற மாதிரி இல்லை இப்போ மதி ரொம்ப மாறிவிட்டாள், என்ற பதிலுக்கும் ஸ்ரீ சிரிக்க சூழ்நிலை இதமாய் மாறி இருந்தது. ஸ்ரீ  இனி நீ இப்படி சிரித்து கொண்டே இருக்க வேண்டும் அது தான் எங்களுக்கு வேண்டும் என்ற நந்தவிடம், நான் நேற்று எல்லாவற்றையும் உளறிவிட்டேன் போல, என்றான் ஸ்ரீ. எல்லாவற்றையும் என்று சொல்ல முடியாது ஆனால் நீ  சொன்னதை வைத்து இதுவாகத்தான் இருக்கும்னு யூகித்தேன், அதுவும் சரியாக இருந்தது என்றான் நந்து. சரிவா நாம் உன் அறைக்கு சென்று பேசுவோம் என்ற நந்துவை பின் தொடர்ந்தான் ஸ்ரீ. இப்போது சொல்லு என்ன ஆயிற்று, என்றான் நந்து. இன்னைக்கு நான் ஒன்னும் போதையில் இல்லை எல்லாவற்றையும் உளருவதற்கு என்று சிரித்தான் ஸ்ரீ.
தம்பி  முதுகில் ஒரு அடி கொடுத்து விட்டு சொன்னால் உனக்கு உதவ முடியும் அதனால் தான் கேட்கிறேன் என்றான் நந்து. எனக்கே தெளிவாக தெரியாததை எப்படி சொல்ல முடியும் நந்து. எனக்கு கொஞ்ச நாள் கொடு நானே நல்ல செய்தி சொல்கிறேன், என்று நழுவினான் ஸ்ரீ. ஏதோ நீ சொல்லவில்லை என்றாலும் தம்பியாய் ஆகிவிட்டாய் அதனால் ஒரு உதவி செய்கிறேன் பிரியாவை உனக்கு  பி. ஏ வாக நியமிக்கிறேன் இந்த உதவியை ஏற்பாய்  தானே என்று கேலியாய் வினவினான்  நந்து.  கரும்பு திண்ண கூலி கேட்பேனா அண்ணா, உன் உதவிக்கு ரொம்ப நன்றி இதை என் உயிர் இருக்கும் வரை மறக்கமாட்டேன், என்றவன் பிரியா உள்ளே வர அவளை கண்களால் கைது செய்ய துவங்கினான், ஸ்ரீ.

 

பிரியா இனி நீ என் தம்பி ஸ்ரீக்கு பி. ஏ, அவனுக்கு வேண்டிய விபரங்களை தெளிவாக கொடு என்று கூறிவிட்டு ஸ்ரீயின் காதில் கொஞ்சம் அலுவலக வேலையும் நடக்கட்டும் என்று கூறிவிட்டு வெளியேறினான் நந்து. முடிந்தால் செய்கின்றேன் இல்லை என் வேலையையும் சேர்த்து நீயே செய்துவிடு தம்பிக்காக அண்ணன் இதுகூட செய்யக்கூடாதா என்ன என்று பதில் தந்து கண்டித்து சிரித்தவனை ஒருவிரல் நீட்டி போலியாய் மிரட்டிவிட்டு சென்றான் நந்து.

 

தனிமையில் தவித்து நின்றவள் அருகில் எழுந்துவந்தவன் என்ன சிங்கத்தின் குகையில் தனியாக சிக்கிக்கொண்டது போல தவிப்பாக இருக்கின்றதா  பிரியா? என்று அவள் கன்னத்தை மெதுவாய் தீண்டினான் ஸ்ரீ. அவன் கைகளை தட்டிவிட்டு இரண்டு எட்டு பின் நகர்ந்தவள்  செய்கையில் சினமுற்று உனக்கு சிங்கம் புலி என்றால் புரியவில்லை, என்று நினைகின்றேன்,  உன் பாசையில்  சொல்வது என்றால் பொறுக்கி, சரி தானே பிரியா வேறு என்ன நம்பிக்கை துரோகி அப்புறம் என்று அவன் அடுக்கி கொண்டிருக்கையிலேயே கதவை  நோக்கி சென்றாள் பிரியா, அவளுக்கு முன் சென்று வழி மறித்து நின்ற ஸ்ரீ,என்ன வேலையில் இருந்து விலகிகொள்வதாக நந்துவிடம் சொல்ல போகிறாயா? காரணம் கேட்டால் என்ன சொல்லுவாய் உங்கள் தம்பி பொறுக்கி அவனுடன்  வேலை பார்க்க முடியாது என்று கூறுவாயா? பிரியா, என்று மேலும் ஏதேதோ  பேசிக்கொண்டே  இருந்த ஸ்ரீயின்  பேச்சில் பொறுமை இழந்தவளாய் கோபமாய் நிமிர்ந்தவளை இழுத்து அணைத்தான் ஸ்ரீ. அவன் தொடுகையில் கோபம் அதிகமாக  என்ன செய்கின்றோம் என்று தெரிந்து தான் செய்கிறீர்களா? என்று சீறினாயவளை  தன் பிடியிலிருந்து விலக்காமல்,  ஓ மறந்து விட்டேன் உனக்கு ஒரு குழந்தை வேறுயிருகின்றது  என்றாய் அல்லவா, திருமணம் ஆகாமல் குழந்தை எப்படி செல்லம், என்றதும், தன்னை பற்றிய உண்மை இவனுக்கு எப்படி தெரிந்தது என்று விழித்தவள் கண்களை விலகாமல் பார்த்தக்கொண்டே  நம் அலுவலகத்தில் பணியாளர் பற்றிய விபரம் அடங்கிய பைலை நீ தானே நேற்று கொடுத்தாய் மறந்துவிட்டதா பிரியா என்று மீண்டும் அவளை தன்புறம் இழுத்தான் ஸ்ரீ.

ஸ்ரீயின் இறுகிய பிடியிலிருந்து விலக முயன்று முடியாமல் போக, ச்சீ… என்னை தொடாதே  உன்னை கண்டாலே அருவருப்பாக உள்ளது என்று தான் மாட்டிக்கொண்டோம் என்றும் இவன் என்ன நம்மை கேட்பது என்ற கோபத்தையும் சேர்த்து  ஸ்ரீயின் மேல் கட்டினாள் பிரியா.  அவள் வார்த்தையில் கோபம் கொண்டு தன்  கைப்பிடியில் இருந்தவளை விலக்கி தள்ளினான் ஸ்ரீ, அவன் தள்ளிய வேகத்தில்  கீழே தடுமாறி விழப்போனவளை மீண்டும் தாங்கி பிடித்த படி ஏன் பிரியா என்னை அப்படி நினைத்தாய் நான் என்ன தவறு செய்தேன் ஏன் என்னை பிரிந்தாய் என்று வலி மிகுந்த குரலில் வினவினான்  ஸ்ரீ.   கண் கலங்கி நின்றவளை கண்டு  விட்டு விலகி சென்று மன்னித்துவிடு என்று தன் இருக்கை நோக்கி சென்று அமர்ந்தான், ஸ்ரீ.

 

 

 

உன் மௌனம்

என்னை கொல்ல…..

என்னை கொள்ளை கொண்டவளே

உன் மௌனம் கலைத்து

என் உயிராவாயா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: