Tamil Madhura கதைகள்,காயத்திரியின் 'தேன்மொழி',தொடர்கள் காயத்திரியின் ‘தேன்மொழி’ – END

காயத்திரியின் ‘தேன்மொழி’ – END

பாகம் 16

கிஷோரின் அன்பில் திளைத்த தேனு தன் உடல்நலத்தை கவனிக்க மறந்தாள் விளைவு திடீரென ஒருநாள் மயங்கி விழுந்தாள் ஐ.சி.யூ வில் அட்மிட் செய்யப்பட்டாள் மூச்சுக்குழாயில் ஏதோ பிரச்சனை என்றார்கள் கிஷோருக்கு உலகமே இருண்டாற்போல இருந்தது .தன்னை அதிகம் நேசிக்க ஒருத்தி இருக்கிறாள்..அவளே அவன் உலகமாகிப்போயிருந்தாள் இந்த நாற்பத்திரெண்டு வருட திருமண வாழ்வில் எல்லாமுமே அவள்தான் நேசிப்பின் ஆழத்தை உணர்த்தியவளும் இவள்தான் தந்தை தாயின் இறப்பிலும் அவள்தான் இவனுடைய ஆறுதல் ,சந்தோஷத்தில் இருக்கும்பொழுது தன்னுடைய மகிழ்ச்சி கண்டு அவளும் மகிழ்ந்தாள்,கோபம்,சண்டை என எத்தனையோ நாட்கள் சென்றிருந்தாலும் என்றும் அவர்களை காதல் பாலம்தான் தாங்கி நின்றது.அவன் நினைவுகள் வாலிப காலத்தை எண்ணிக்கொண்டிருந்தது அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருந்தான்.வெளியே டாக்டர் வந்ததும் ஓடோடி சென்றான் தன்           ஹனிக்கு எதுவும் பிரச்சனை இல்லை என சொல்லமாட்டாரா என்று..டாக்டர்”மிஸ்டர் கிஷோர் உங்க வைஃப்க்கு பல்ஸ் லோவா இருக்கு உங்க பேரைதான் சொல்றாங்க போய் பார்த்துட்டு வந்துடுங்க கண்ணில் கண்ணீர் பொங்க அவளைக்காண சென்றான் இவன் விரல் பட்டதும் அவள் கடைசியாக சிரித்தாள் கிஷோர் அவள் நெற்றியில் தன் இதழ் பதித்தான் முதன்முறையாக கவலையோடு தேனு அவன் கைகள் இறுக பிடித்ததும் அவளை தன் மடியில் கிடத்தினான் அந்நிமிடமே அவள் ஓரவிழிப்பார்வை அவன் முகம் பார்த்து கடைசியாக ஒரு சிறு சிரிப்பை உதிர்த்தது அத்தோடு அவள் மூச்சற்று போனான் ஐயோ தேனு என்ற கிஷோரின் கதறல்தான் மிஞ்சியது .கிஷோரின் குடும்பமே கலங்கி போய் நின்றது தேனுவின் இறப்பால் ஆஷாவாலும் இதனை ஜீரனிக்க இயலவில்லை.தேனுவின் இறுதி காரியங்கள் முடித்ததும் எல்லாம் இழந்தவனாய் இருந்தான் கிஷோர்.மகனும்,மகளும் தங்களோடு வருமாறு கெஞ்சியும் கேட்கவில்லை .மறுபடி பொன்வனத்திற்கே சென்றுவிட்டான் தன்னவள் நினைவுகளோடு வாழ்ந்திட.நாட்கள் உருண்டோடிட கிஷோர் நடைபிணமாக வாழத்தொடங்கினான் தன் குழந்தைகளுக்காகவும், பேரக்குழந்தைகளுக்காகவும் .தேனுவின் நினைவுகள் அவனை வாட்டியெடுக்க மரணப்படுக்கையில் சாய்ந்தான் ஒரு வருடம் படுத்தபடுக்கையாய் இருந்தவன் அவள் நினைவுகளோடு கரைந்தான் மரணத்தின் பிடியில் .கிஷோர் இறந்து ஒருவருடம்  முடிந்தது. அப்சராவும் ,சரணும் தங்கள் குடும்பத்தை பொன்வனத்திற்கு சென்று தன் தாய்,தந்தை வாழ்ந்த வீட்டை பார்க்கச்சென்றனர் மர அலமாரியில் ஒருடைரி பொக்கிஷமே இருந்தது…அப்சராவும் அதன் பக்கங்களை திருப்ப திருப்ப கண்ணீரோடு தன் தந்தை எழுதியதா இது என பெருமூச்சுவிட்டாள் அதன் பின் சரனும் படித்தான் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை மாலை நேரமாகிவிட்டது .அப்சரா அழுதவாறு அப்பா அம்மாவை எப்படி லவ் பண்ணிருக்காரு அலங்க வாழ்ந்த ஒவ்வொரு நாளையும் நிகழ்வையும் அப்படி அழகா எழுதிருக்காரு ரியலி கிரேட் இவருக்குள்ள இத்தனை காதலா வெளிக்காட்டுனதே இல்லையே என பாலாவிடம் கண்ணீர் சிந்தினாள் அப்சரா.சரண் தியாவின் கண்களை நோக்கி என் அப்பா எங்க அம்மாவை லவ் பண்ண மாதிரி எப்போவும் உன்னை லவ் பண்ணுவேன் என்பதுபோல கண்ணீரோடு பார்த்தான் பின் அவள் அருகில் ல் சென்றவன் லவ் யூ தியா என்றான்.இப்பொழுது தியாவின் முகத்திலும் மகிழ்ச்சி.

கதை நெறி:

காதல் என்பது பெண்களைபோல ஆண்களுக்கும் உண்டு சொல்லப்போனால் பெண்களை விட காதல் அதிகம் அவர்களுக்குத்தான் அதை வெளிபடுத்த தெரியாதவர்கள்தான்.கணவனை இழந்த மனைவியை விடவும் மனைவியை இழந்த கணவர்கள்தான் பாவம் எல்லாம் அவ பார்த்துப்பா என இருந்தவர்கள் தங்களுக்குனு ஆதரவில்லாத மாதிரி தவிப்பாங்க.பல சுமைகளை சுமக்க தெரிந்த கணவன் வயோதிகத்தில் தன் அன்பு மனைவி இல்லாவிட்டால் ஆதரவின்றி துவண்டு போவான்.உயிராகவும் உணர்வாகவும் கலந்திருந்த கிஷோர் தேன்மொழி தம்பதி போல எத்தனையோ தம்பதியர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.இளமைக்காதலை விட முதுமைக்காதல் இன்னும் அழகு வாய்ந்ததுதான்

🌻🌻🌻🌻🌻🌻முற்றும்🌻🌻🌻🌻🌻🌻

 

 

1 thought on “காயத்திரியின் ‘தேன்மொழி’ – END”

Leave a Reply to Deebha Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 13

கப்பலின் நங்கூரம் நீரை துளைத்து முன்னேறியது. கதவை திறந்து உள்ளே வந்த கேப்டன் “சார் செரிபியன் தீவுக்கு வந்துவிட்டோம்“ இந்த தருணத்திற்காகவை இத்தனை யுகங்கள் காத்திருந்த செங்கோரன் வம்சம் தன் தெய்வமான அகோரனை மீட்கும் ஆசையில் சிரித்தான் பீட்டர். புதிதாக கப்பல்

ராணி மங்கம்மாள் – 10ராணி மங்கம்மாள் – 10

10. ராஜதந்திரச் சிக்கல்  “கிறிஸ்துவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்” என்றே தொடர்ந்து வாதிட்டனர் கோயில்களை நிர்வகித்து வருபவர்கள். இனிமேல் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டுணர்ந்த ரங்ககிருஷ்ணன், அவர்களைக் கேட்டான்:   “இதே

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 51

51 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அதை பிரித்தவள் உண்மையாகவே மிகவும் மகிழ்ந்தாள். அவளின் விரிந்த விழிகள் அவளது மகிழ்ச்சியை வெளிக்காட்டின.. அக்ஸா “இது இது அவர்கிட்டேயா இருந்தது?” என கேட்க ஆதர்ஷ் “ம்ம்…நீ ஆசைபட்டு எனக்கு முதன்முதலா வாங்கினது..