ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77

77 – மனதை மாற்றிவிட்டாய்

பாட்டி, ஈஸ்வரி, சந்திரா அனைவர்க்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அழத்துவங்க அனைவரும் அவரை சமாதானபடுத்தினர். பின் ஆதியும், திவியையும் அழைத்து திருஷ்டி சுற்றி போட்டுவிட்டு பட்டுப்புடவை வேஷ்டி கொடுத்து கட்ட சொல்லி கோவிலுக்கு சென்று வர சொல்ல அவர்களும் மகிழ்ச்சியுடன் சென்று விட்டு வீடு வந்ததும் மீராவிடம் இருந்து திவிக்கு கால் வர அவள் பேசியதும் ஆதியிடம் சென்று “ஆதி மீரா கூப்பிட்டா, அவ வீட்ல முறைப்பையன்னுக்கு இவளை கட்டிக்குடுக்க கேட்டு பிரச்சனை பண்றங்களாம். இப்போவரைக்கும் அவங்க அப்பாவும் எதுவும் மறுத்து பேசலையாம். அவ பயப்படறா. நம்மள கூப்பிட்றா…” என்றதும் அவனும் ஒரு நொடி யோசித்தவன் சுந்தர்கிட்ட விஷயத்தை மட்டும் சொல்லிவை. இங்க அத்தை பாட்டி அம்மாகிட்ட மட்டும் சொல்லிவெக்க சொல்லு. அதுக்குள்ள நாம இப்போ போலாம். அங்க பேசிட்டு வந்து இங்க பேசலாம்.” என இருவரும் கிளம்பி மீரா வீட்டிற்கு சென்றனர்.

அங்கே பாண்டியன் அவரது தங்கை குடும்பம் தம்பி குடும்பம் என அனைவரும் இருக்க இவர்களை மீராவின் தாய் வரவேற்று அமர சொன்னதும் பாண்டியனும் வரவேற்றார் என்றாலும் ஏதோ குழப்பம் அவரது முகத்தில் தெரிய மற்ற அனைவரும் இவரை ஆதிநாராயணன் பேரன் என்ற முறையில் அவனை பற்றி தெரிந்திருக்க மரியாதை அழித்தனர்.

அவன் ஒரு நிமிடம் அனைவரையும் பார்த்தவன் நேராக பாண்டியனை பார்த்து “எங்க வீட்டு பையன் சுரேந்தர்க்கு உங்க பொண்ணு மீராவை கேக்கலாம்னு இருக்கோம். இரண்டு பேருக்கும் படிப்பு எல்லாமே சமமா இருக்கும். குடும்பமும் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். அதனால தான் தகுதி அது இதுனு எந்த பிரச்னையும் உங்களுக்கும் இருக்காதுன்னு நினைக்கிறேன். அதான் உங்க விரும்பம் தெரிஞ்சதுன்னா வீட்ல பெரியவங்களையும் கூட்டிட்டு வந்து பேசி உறுதி பண்ணிக்கலாம். உங்க விரும்பம் தெரியாம அவங்கள பாவம் சங்கடப்படுத்த கூடாதில்லை. அது அவங்களுக்கும் மரியாதையா இருக்காதே. அதான் உங்க பொண்ணுக்கு உங்களுக்கு எல்லாருக்கும் இதுல சம்மதமா?” என தெளிவாக பாண்டியனுக்கு புரியும்படியாகவும் மற்றவர்களுக்கு ஏதோ பெரியவர்கள் விருப்பத்தோடு பெண் கேட்கிறார்கள் என்பது போலவும் இருக்க ஆதி கேள்வியை கேட்டான்..

இருந்தும் பாண்டியனின் தங்கை குடும்பத்தினர் “பாருங்க, எங்க பையனுக்கு தான் நாங்க கேக்கவந்திருக்கோம். அவன் தான் முறைப்பையன். நாங்க சொந்தத்துல பையன புள்ளைய வெச்சுகிட்டு எப்படி அசல்ல எடுப்போம்” என

திவி “ஓ… அப்டிங்களா? சரி இருக்கட்டும். பொண்ணுனு இருந்தா கேக்கத்தானே செய்வாங்க. இதுல பொண்ணோட விருப்பம், அவளை கட்டிக்கொடுக்கபோறவங்களோட விருப்பம் தானேங்க ரொம்ப முக்கியம். ” என பொறுமையாக சாதரணமாக கேட்க

இவர்களுக்கு எங்கே ஒத்துக்கொண்டு விடுவார்களோ என்ற பயத்தில் “அதெலாம் சரிபடாதுங்க என சாதி பற்றி எல்லாம் பேசி கத்த துவங்க, திவியும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருக்க, ஆதி பாண்டியனிடம் பேச அவரும் ஏதோ தயங்க இறுதியில் பாண்டியனின் தம்பிக்கு மீரா சுந்தர் விஷயம் தெரியும் என்பதால் அவசரப்பட்டு “இங்க பாருங்க தம்பி இதெல்லாம் ஒத்துவராது. உங்களுக்கு வேணா இது காதல் கல்யாணம் எல்லாம் சாதாரணமா இருக்கலாம். அன்னைக்கே அந்த பயல போட்டு தள்ளிருக்க வேண்டியது. உன் பொண்டாட்டி தான் வந்து கெடுதிட்டாப்ல. அண்ணா என்ன இப்டி இன்னும் உக்கார வெச்சு பேசிட்டு இருக்கீங்க. அவங்கள வெளில போக சொல்லுங்க. இந்த புள்ளை நம்ம புள்ளைகிட்ட திரும்ப பேசும்போதே கவனிக்க சொன்னேன். இப்போ பாரு எதுவரைக்கும் வந்திருக்குன்னு.” என அந்த வீட்டு பெண்களும் என்ன காதலிக்கறாங்களா? இந்த புள்ளையும் அதுக்கு உடந்தையா? அதான் இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கியா?” என திவியை பார்த்து கேட்க

அவள் பொறுமையாக “அப்படியெல்லாம் இல்லேங்க, வாழப்போற அவங்களும் ஆசைப்படங்க. அதோட உங்க விருப்பத்தையும் தெரிஞ்சுக்கத்தான் …” என அவள் முடிப்பதற்குள் பாண்டியனின் தம்பி “விருப்பமிலேன்னு தெரிஞ்சுக்கிட்டு நீ ஓடிப்போயி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணியே அப்டி எங்க புள்ளைக்கும் கல்யாணம் பண்ணிவெப்பேனு சொல்லிறியா? அப்டி மட்டும் ஏதாவது ஒன்னு நடந்தது உன்ன உயிரோடவே விடமாட்டேன்.” என அவன் முடிப்பதற்குள் ஆதியின் அடியில் அவன் கீழே விழுந்திருந்தான். அனைவரும் பதறி எழ

ரௌத்திரமூர்த்தியாக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஆதி நின்றிருந்தான்.

“என்னடா ஓவரா பேசுற. என் பொண்டாட்டி மேல கைய வெச்சிருவியா நீ. வெட்டி போட்ருவேன். இனி அவளை பத்தி இங்க யாராவது தப்பா பேசுவீங்க?” என சலசலப்பில் உரையாடிகொண்டிருந்த கூட்டத்தின் பக்கம் திரும்ப அப்டியே அமைதியாயினர்.

“நானும் பொறுமையா எல்லார்கிட்டயும் பேசலாம்னு பாத்தா ரொம்பதான் துள்றீங்க. இங்க பொண்ணு கேட்டு நானும் என் மனைவியும் வந்திருக்கோம். அந்த பொண்ணும் அவளை பெத்தவங்களும் மட்டும் தான் பேசணும். வேற எவனாவது பேசுனீங்க வகுந்துடுவேன்.” என்றவன் திவியிடம் திரும்பி மீராவை கூட்டிட்டு வா” என அவளும் அழைத்துவர “உனக்கு சுரேந்தர் பிடிச்சிருக்கா மா?” என அவள் சம்மதம் தான் ஆனா கல்யாணம் அப்பா அம்மா சம்மதத்தோட தான் அண்ணா நடக்கணும்…இல்லாட்டி நான் இப்டியே இவங்ககூடவே இருந்திடறேன்” என கூற அவளது அம்மாவிடம் கேட்க “எனக்கு சம்மதம் தான் தம்பி எங்க வீட்டுக்காரருக்கும் பிடிக்கணும்ல.” என அவரை பார்க்க அவர் முடிவு கூறாமல் இருக்க கூட்டத்தில் இருந்த மீதி பெரியவர்கள் “அட பாண்டியா ஏன்பா இப்டி முரண்டு புடிக்கற.. புள்ளைக்கும் பையனுக்கும் கூட விருப்பம் தான் போல. உன் பொஞ்சாதிக்கும் சரினு படுது. மாணிக்கம் குடும்பமும் குறை சொல்லமுடியாது. பையனும் பிரச்சனையில்லை. உன் ஒருத்தனோட பிடிவாதத்துல நல்ல சம்பந்தத்தை விட்றாத பா. புள்ளைங்க சந்தோசம் தானே முக்கியம். இப்போவும் உன் பபுள்ளை உன்னை பாத்துகிட்டு தானே இருக்கு. அத ஏன் சங்கடப்படுத்தற.” என ஆளாளுக்கு அறிவுரை கூறி இறுதியில் அவரும் ஓர் முடிவுடன் “உங்க தாத்தாகிட்ட பேசி வந்து பேச சொல்லு பா உறுதி பண்ணிக்கலாம்.” என அனைவரும் மகிழ்ச்சியுடன் கிளம்ப திவி காரில் வரும் போது ஆதியை ஒரு புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டே வர அவனோ இன்னும் கோபம் அடங்காமல் அவளை பார்த்தவன் “சிரிக்காத டி உனக்கென்ன தலையெழுத்தா? இப்படியெல்லாம் பேசுறத கேக்கணும்னு. அங்க அவ்ளோ பேசுறாங்க. உனக்கெங்க போச்சு வாயி. இந்நேரம் என் பழைய திவியா இருந்திருநதா அவளை பத்தி தப்பா பேசுனா எல்லாரும் அடுத்து வாயே தொறக்காம பண்ணிருப்பா. ஆனா நீ இதோ இப்டியே பொறுமையா பேசிட்டு சிரிச்சிட்டே வேடிக்கை பாத்திட்டு இருக்க…” என அவன் கத்திக்கொண்டிருக்க

திவியோ ” வேடிக்கை பாக்கல ஆதி, என் புருஷன் வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு சண்டை போடும்போதும் எப்படி இருந்தாரு தெரியுமா? அவரோட ஒரு வார்த்தைல எல்லாரும் திகைச்சு போயி நின்னது, நீங்க அடிச்சபோது உங்க கோபம் எக்ஸ்பிரஸின் எல்லாமே மாஸ். அதான் சைட் அடிச்சுட்டு இருந்தேன்.” என கண்ணடிக்க

அவனும் கோபம் விடுத்து அவள் சொன்ன விதத்தில் சிரித்துக்கொண்டே வண்டியை ஓரம்கட்டி அவளிடம் திரும்பி “உனக்கு விளையாட்டா போட்ச்சா? ” என கேட்க

அவள் “நோ ஆதி சைட் அடிச்சிட்டு தான் இருந்தேன். என் மேல ப்ரோமிஸ்” என தலை மேல கைவைக்க அவனும் வாய்விட்டு சிரித்துவிட்டு “அங்க என்ன பிரச்சனை நடக்கிது நீ சைட் அடிச்சிட்டு இருந்தேன்னு அசால்ட்டா சொல்ற உன்னை என்னதான் டி செல்லம் பண்றது” என அவள் இரு கன்னம் பற்றி நெற்றியோடு முட்டிவிட்டு வினவ

அவளும் சிரித்துவிட்டு “எனக்கு உண்மையாவே கோபம் வரல ஆதி. எப்படியும் அவங்க பொறுமையா சொன்ன கேக்கபோறதில்லேன்னு தெரிஞ்சிடிச்சு. நீங்க என்னைக்கும் இல்லாம இன்னைக்குனு பாத்து ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கீங்க. இப்டியே போனா எப்போ பேச்சு வார்த்தை முடியறது? அதனால தான் அவங்க என்னை பத்தி லைட்டா திட்ட ஆரம்பிச்சதும் இதுதான் கரெக்ட். இப்டியே என்னை பத்தி கொஞ்ச நேரம் பேசுனா நீங்க டென்ஷன் ஆகிருவிங்கனு எதிர்பார்த்தேன். அதான் அமைதியா இருந்தேன். ஆனா பாவம் அந்த அங்கிள் அடிவாங்குற அளவுக்கு பேசுவருனு நான் எதிர்பாக்கல. அது அவரு பேட் லக்.” என இவனும் “பிராடு வாலு என்னை டென்ஷன் பண்ணி பாக்றதுல உனக்கு அப்டி என்ன டி சந்தோஷம். என்றவன் இருந்தாலும் நினைச்சதை செஞ்சிட்டேல்ல..சந்தோஷமா? ” என அவளும் மேலும் கீழும் வேகமாக தலையாட்ட அவனும் அவளது நெற்றியில் முத்தமிட்ட வண்டியை கிளப்பினான்.

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 57ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 57

உனக்கென நான் 57 ‘ம்ம் அவன் ஆசையா கேட்ட போட்டோவ எடுத்து அவன்கிட்ட குடுத்து புரபோஸ் பன்னிடவேண்டியதுதான்.’ என நினைத்துகொண்டு எடுத்து வைத்தாள். சைக்கிளும் உருன்டது அவளது இதயதுடிப்புபோலவே அந்த மரத்தின் நிழலில் தன் தோழர்களுடன் நின்றுகொண்டு ஜெனியை பார்த்தால்தான் ஆசிக்குக்கு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 59ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 59

உனக்கென நான் 59 விமான பறவையின் இறக்கைகள் வலுவிழந்த காரணத்தினால் அது அந்த நவீன நகரத்தில் இளைப்பாற இறங்கியது. மிகவும் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்த நகரம் அது தமிழ்நாட்டின் தலைமையாக முடிவெடுக்க வேண்டுமல்லவா. மூளையில் நரம்புகளின் வேகத்தைபோல அனைத்து மனிதர்களும் இயங்கிய தருனம்

KSM by Rosei Kajan – 14KSM by Rosei Kajan – 14

அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ…   Download WordPress ThemesDownload Nulled WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload Best WordPress Themes Free DownloadZG93bmxvYWQgbHluZGEgY291cnNlIGZyZWU=download redmi firmwareFree Download WordPress Themesudemy paid course free download