Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 02

வருகை

2

 

என் கண்களில் விழுந்தவளே

காதல் தந்தவளே

கவிதையாய் வடிக்கிறேன்

என் காதல் நினைவுகளை

கண்ணீரால் அழிக்கின்றேன்

அதன் சுவடுகளை….

 

 

ப்ரியாவிற்கு திருமணம் நடந்து இருக்கும் என்று ஸ்ரீ எதிர்பார்த்தது தான் ஆனால் அதை நேரில் பார்த்த பிறகு அவனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தானிருக்கும்  மன நிலையில் வீடு செல்ல மனமில்லாமல் கார் போன திசையில் சென்றுகொண்டிருந்தான் ஸ்ரீ.

 

. மாலை வீடு திரும்பிய நந்துவிடம் ஸ்ரீ எங்கே என பார்வதி  கேட்ட போது தான் ஸ்ரீ இன்னும் வீடு வரவில்லை என்கின்ற விஷயம்  நந்துவிற்கே தெரிந்தது. அவன் கொஞ்சம் வெளிவேலை இருப்பதாக சொன்னான் அம்மா அதற்கு தான் சென்றிருப்பான், வந்திடுவான்  பயப்படாதீர்கள்,என்று  அம்மாவிற்கு ஆறுதல் சொன்ன நந்து, நான் இதோ வந்துவிடுகிறேன் என்று தானும்  வெளியே கிளம்ப தயாரானான்.  என்ன என்று கேள்வியாய் பார்த்த  மனைவியை மட்டும் தனியே அழைத்து  காலையில் இருந்து அவன் சரியாக இல்லை ஏதோ குழப்பத்தில்  கவலையாய் இருந்தது போலவே இருந்தது, கடைசியாக பார்த்த போது கூட கண் கலங்கிருந்தது  போல தெரிந்தது,  ஸ்ரீ எங்கு என்று  நான் பார்க்கிறேன் நீ அம்மாவை பார்த்துக்கொள் ஏதாவது குழப்பிக்கொண்டு  கவலை கொள்ள போகின்றார்கள் என்று மனைவிடம் மட்டும் உண்மையை கூறிவிட்டு தன் தம்பியை தேடி புறப்பட்டான், நந்து.

 

ஸ்ரீயை தேடி எங்கு சொல்வது என்ற குழப்பம் ஒரு பக்கம் பிரியாவை சந்தித்த பிறகு தான் இந்த மாற்றமே ஒருவேலை அவள் காதலித்ததாக கூறிய பெண் சாயலில் இ்ருப்பாளோ? இல்லை அவளை நினைவு படுத்தும் எதாவது நடவடிக்கை இவளிடம் இருந்து இ்ருக்குமோ? சரி ஏதுவாக இருந்தால் என்ன இனி நடப்பதை பார்ப்போம் என்று காரில் ஏறி ஸ்ரீ யை “செல் போன்”இல் தொடர்பு கொண்டான், “சுவிட்ச் ஆப்” என்று வந்தது பதட்டத்துடன் கார் எடுத்து வழக்கமாக ஸ்ரீ செல்லும் இடங்களுக்கு தேடி சென்றான்.

 

வந்ததில் இருந்து வழக்கமாக செல்லும் இடங்களில் அவன் கிடைக்கவில்லை வேறு எங்கு தேடுவது என்ற வருத்தத்தில் சோர்வுடன் காருக்கு திரும்புகையில், எதிரே பிரியா வருவதை கண்டவன் மனதின் சோர்வு முகத்தில் தெரியாமல் மறைத்துக்கொண்டு புன்னகை செய்தான் நந்து.

 

என்ன சார் இங்கே? என்றவளுக்கு  அது ஒன்றும் இல்லை சும்மா தான் பிரியா நீ என்ன இங்கே? என்றான் நந்து. இந்த கோவிலுக்கு  அடிக்கடி வருவது என் வழக்கம் அதனால் தான், என்றவள் தனக்கு அருகில் இருந்தவர்களை காட்டி, இது என் அக்கா இது அவள் கணவர் இந்த குட்டி அவர்களின் பிள்ளை பெயர் வருணி, என்று அறிமுப்படுத்திவிட்டு எதிரில் இருந்த கோவிலை சுட்டிகாட்டி, இது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் சார், நீங்களும் வாருங்கள் என்று அழைத்தாள் பிரியா.  ஸ்ரீ யும் இந்த கோவிலுக்கு வருவான் தானே  இங்கு பார்க்கவில்லையே ஒருவேளை அவன் உள்ளே இருந்தால் என்று யோசித்தபடி  அவர்களுடன் நடக்க துவங்கினான் நந்து.

கோவில் பிரகாரத்தை ஒருமுறை சுற்றிய படி ஸ்ரீ யை தேடியவனின் கண்களில் பிரியாவின் வாடிய முகம் தென்பட்டது. இவளும் ஏன் ஸ்ரீயை பார்த்ததிலிருந்து  கவலை படிந்த  முகத்தோடு இருக்க வேண்டும் என்று  புரியாமல்  குழப்பமாய் அவள் முகம் பார்த்துகொண்டு நின்ற போது  சிந்தனையை களைக்கும் விதமாய் அவன் செல் அழைத்தது,  எடுத்து பேசியவன் ஒரு முக்கியமான வேலை  நான் அவசரமாக செல்ல வேண்டும் வருகிறேன், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று மற்றவர்களிடம் கூறிவிட்டு பிரியாவிடம் திரும்பினால் அவள் யாரையோ தேடுவது போல  இருக்க, அவள் பார்வை சென்ற திசையை தானும் கவனித்துவிட்டு யாருமே இல்லை என்று அவள் புறம் திரும்பினால்  அவளும்  தான் தேடியது கிடைக்கவில்லை என்று கலங்கிய விழியுடன் இருந்தாள், இவள் யாரை தேடுகின்றாள் என்று யோசித்தவனை போன்        அழைப்பு அதற்கு மேல் சிந்திக்கவிடாமல் இழுத்தது  ஸ்ரீ எண்ணம் வரவும் வேகமாய்  பிரியாவிடமும்  சொல்லிக்கொண்டு கிளம்பினான், நந்து.

 

வேகமாய்  காருக்கு வந்தவன் உடனே மனைவியை அழைத்து விபரம் கூறிவிட்டு அம்மா அப்பாவிடம் இதை சொல்லாதே தாங்கிக்கொள்ளமாட்டார்கள், பழைய நண்பர்களை பார்க்க சென்றுள்ளான் வர தாமதம் ஆகும் அவனுக்காக காத்திருக்கவேண்டாம் என்றும் கூறிவிடு, என்றவன் தாமதிக்காமல் தங்கள் விருந்தினர்  பங்களாவிற்கு சென்றான் நந்து.

 

நான் எவ்ளோ சொல்லியும் தம்பி கேட்கலை  பெரியதம்பி,  இன்னும் வாங்கியாரா சொன்னாங்க அதான் உங்ககிட்ட சேதி சொல்லணும்னு தோணுச்சு உடனே செல்லிப்புட்டேனுக, தம்பி மாடி அறைல இ்ருக்காங்க, நான் வாசல் கிட்ட போறேன் என்று கூறிவிட்டு நகர்ந்தான் தோட்டக்காரன் முத்தையா. மாடி அறைக்கு தம்பியை நாடி சென்றான் நந்து. முழுவதும் குடித்துவிட்டுத் தன்னிலை உணராதவனாய் புலம்பிக் கொண்டு இருந்தான், ஸ்ரீ.  அவனை எழுப்பி வீட்டிற்கு அழைத்து வந்தான் நந்து. ஸ்ரீ  அவனின் பழைய நண்பர்களை காண சென்றதாக கூறியதால் பார்வதியும் நாதனும் கவலையகன்று  உறங்கச்சென்றனர், சத்தம் எழுப்பாமல் மதியும் நந்துவும் ஸ்ரீ யை அழைத்துச் சென்று அவன் அறையில் படுக்கவைத்தனர். அப்போதும் அவனது புலம்பல் ஓயவில்லை, உன்னை மறக்க முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன், நீ திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாய் நிற்கின்றாய்,  உன்னால் எப்படி முடிந்தது, இவ்வளவு தான் நாம் கொண்ட காதலா,  மூன்று வருடத்தில் இப்படி மாறிவவிட்டாய்,  இதை பார்க்கத்தான் இங்கு வந்தேனா இதற்கு நான் உன்னை  சந்திக்காமல் இருந்து இருக்கலாம், என்று தன் வேதனை தாங்காமல் தன்னை மறந்து தனது மனதின் பாரத்தை இறக்கிகொண்டிருந்தான் ஸ்ரீ.  ஏன் என்னை ஏமாற்றினாய் ஏன் என்னை பிரிந்தாய்,  புலம்பிகொண்டு இருந்தவன் அப்படியே அசந்து உறங்க துவங்கினான் ஸ்ரீ.

 

ஸ்ரீயின் குழப்பத்திற்கும், இந்த குடிக்கும் காரணம்  புரியாமல் விழித்த மதியிடம் ,எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது, ஸ்ரீ கூறினானே தன்னை புரிந்துகொள்ளமால் பிரிந்து சென்றவள், அந்த பிரியா நம் அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறாள், அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நினைக்கிறான் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி எல்லாம் சரியாகிவிடும், அதுவாக சரியாகவில்லை என்றால் இழுத்துபிடித்து சரிசெய்யவேண்டியது தான் என்று கவலை அகன்று மனம் நிறைந்த புன்னகை செய்தான் நந்து,   அவன் புன்னகை தொற்றிக்கொண்டது போல மதியும்  மென்னகை பூத்தாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: