Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 74

74 – மனதை மாற்றிவிட்டாய்

உடனே சுபிக்கிட்ட சொல்லி அவங்க பொண்ண கூப்பிட்டு இன்ட்ரோ குடுன்னு சொன்னேன். மீரா அம்மாகிட்ட கேட்டு அவளை அவளது தோட்டத்தில் சென்று பார்க்க சுபி திவியை மீராவிற்கு அறிமுகப்படுத்தியதும் இருவரும் ஏனோ ஒரு தோழமையுடனே ஐந்து நிமிடம் பொதுவாக பேசியதும் திவி மீராவிடம் தனியாக பேச வேண்டும் என்றாள். சுபிக்கு புரியாவிடினும் சரி என அனு, நந்துவுடன் விளையாட சென்றுவிட்டாள்.

மீராவிடம் திவி கேட்ட முதல் கேள்வி “நீ யாரை லவ் பண்ற? அவங்களுக்கு முதல உன் லவ் பத்தி தெரியுமா?”

முதலில் திவி கேள்வியில் திகைக்க திவியே “உன்னை பாத்ததுல இருந்து ஏனோ பலவருஷம் பழகுன மாதிரி ஒரு எண்ணம். அதுதான் உடனே கேட்டுட்டேன். அண்ட் அதுல கொஞ்சம் பிரச்சனை இருக்கு. அது உனக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும். அதுக்கு முன்னாடி எனக்கு நீ பதில் சொல்லு உங்க அப்பாகிட்ட சொல்றதுக்கு முன்னாடி லவ் பண்றவங்ககிட்ட சொல்லி அவங்க விருப்பத்தை தெரிஞ்சுக்க மாட்டியா?” என அவள் ஆதியை லவ் பண்ணிட்டு அவரு இல்லைன்னு சொல்லிட்டா எப்படி எடுத்துப்பாளோ, இந்த பொண்ணா முடிவு பண்ணிட்டு ஆசையை வளத்துக்கிட்டு வருத்தப்பட போகுதேன்னு உண்மையாகவே ஆதங்கத்துடன் கேட்டாள்.

மீராவும் “எனக்கும் உன்ன பாத்தா அப்டி ஒரு நெருக்கம் வருது. அதனால சொல்றேன். நீ சொன்னதும் உண்மை தான். நான் இன்னும் அவர்கிட்ட சொல்லல. இரண்டு பேரும் ஒரே ஸ்கூல் தான். ஸ்கூல் சீனியர். எங்க அப்பாவுக்கு பயந்தே என்கிட்ட யாரும் நெருங்க மாட்டாங்க இல்லை எனக்கு மட்டும் தனி கவனிப்பு எப்போவும் இருக்கும். ஆனா இவரு அதப்பத்தி எல்லாம் கண்டுக்கமாட்டாரு. எல்லாரையும் ஒரே மாதிரி தான் ட்ரீட் பண்ணுவாரு. எனக்கு ரோட்ல போகும்போது பசங்க பிரச்சனை பண்ணி இவரு தான் வந்து என்னை காப்பாத்துனாரு, ‘சும்மா அழுத்திட்டே இருக்காத, எனக்கு பிடிக்காது. பொண்ணுங்களுக்கு எப்போவுமே தைரியம் அதிகமா இருக்கனும்.. இப்டி பயந்தா எல்லாரும் டீஸ் பண்ணத்தான் செய்வாங்க…அதோட உங்க அப்பாகிட்ட சொன்னா பெரிய பிரச்னையாகிடும். அவனுங்க ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க. சின்ன பசங்க தான். இதோட விட்டிட்டு நீ நார்மலா இருன்னு சொன்னாரு. அப்போ திருப்ப அவனுங்க பிரச்னை பண்ணா என்ன பண்றது?ன்னு கேட்டதுக்கு

இனிமேல் உன்கிட்ட யாரு வந்தாலும் என்னை மீறி தான் வரணும். ஸ்கூல்ல உனக்கு பிரச்னை வராம நான் பாத்துக்கறேன். வீட்ல சொல்லி அவனுங்களோட படிப்பு பாதிக்கவேண்டாம். சரியா? ” என மீராவிற்கு அந்த முதல் வரியிலே மயங்கி நிற்க அப்போதுதான் தனக்கு அவன் மேல் இருந்த காதல் முழுமையாக புரிந்தது. அவரு எனக்காக இருப்பாருனு நினைக்கறதே எனக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கும். அப்புறம் அவருக்கு பிடிச்சதெல்லாம் பாத்து பாத்து மாத்திக்கிட்டேன். காலேஜ்க்கு வேலைக்குனு அவரு வெளியூர் போனதுல இருந்து அப்போ அப்போ தான் பாக்கமுடியுது. இதுல எப்படி நான் லவ் சொல்றது. அதுக்குள்ள அப்பா கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க. நேரா அவங்ககிட்டேயே அதான் சொல்லிட்டேன்.” என மீரா முடிக்க

திவி குழப்பத்துடன் ஆதி இந்த ஊரை விட்டு ஸ்கூல் படிக்கும்போதே போய்ட்டாரே. அப்போ இவை யாரை சொல்றா என வினா எழ அவரு பேரு “சுபி அண்ணா சுரேந்தர் தான் வேற யாரு. அப்போ உனக்கு யாருனு விஷயமே தெரியாம தான் கேட்டியா? ” என இவள் குழம்ப திவி முற்றிலும் தெளிவானாள். அவளுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த தயக்கமும் பறந்துபோக ஏதோ மனநிறைவாக இருக்க அடுத்து அவள் செய்யவேண்டியதை யோசித்துவிட்டு மீராவிடம் அவள் தந்தை பேசியது அனைத்தும் கூற மீராவோ “இப்போ என்ன பண்றது திவி? அவருக்கு என் மேல பாசம். ரொம்ப சாதி கௌரவம்னு பாப்பாரு. விஷயம் சொன்னதும் அப்பா கோபப்படுவாரு தெரியும். ஆனா கொலபண்ற அளவுக்கு யோசிப்பாறா?” என கவலை கொள்ள

திவி “பாரு மீரா இதுக்கு எல்லாம் பீல் பண்ணிட்டு இருந்தா வேலைக்காகாது. இப்போ அப்பாவை கொலபண்ற பிளான் ட்ராப் பண்ற மாதிரி நாம ஏதாவது பண்ணனும். அப்புறம் நீ சுந்தர்கிட்ட சீக்கிரம் லவ் சொல்லி அவங்க வீட்ல இருந்து வந்து பேச சொல்லலாம். உங்க வீட்ல அம்மாவுக்கு விஷயம் தெரியுமா? அவங்களுக்கு ஓகே வா? ”

“ஆஹ்ஹ். ..அம்மாக்கு அதெல்லாம் ப்ரோப்லேம் ‘இல்லேன்னு சொல்லிட்டாங்க. பையன் குணம், குடும்பம் முக்கியம் அதுவும் இவரை பத்தி சொன்னதும் எனக்கு சம்மதம் தான் ஆனா அப்பா ஒத்துக்கமாட்டாரேன்னு அவங்க தான் ரொம்ப கவலைப்பட்டாங்க.” என்றதும் அவளிடம் சில விஷயம் பேசிவிட்டு நேரே மீராவின் வீட்டிற்கு அழைத்துவந்தவள் மீராவின் தாயாரிடமும் நடந்தவற்றை கூற இருவரிடமும் அவரது முக்கிய குணாதிசயங்கள் பற்றி கேட்டுஅறிந்துகொண்டு அவர்களுக்கு சில விஷயம் கூறிவிட்டு மீராவின் அப்பாவிற்காக(பாண்டியன்) காத்திருந்தனர்.

அவர் வீட்டினுள் நுழைந்தவுடன் “அப்பா நான் சொன்னதுக்கு நீங்க எதுமே பதிலே சொல்லலையே?”

“எத பத்தி பேசுற? ”

“அதான் சுரேந்தரை லவ் பண்றத பத்தி.”

“இங்க பாரு எத்தனை தடவை சொன்னாலும் கேட்டாலும் அப்டி ஜாதி மதம் மாத்தி கல்யாணம் பண்றதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன். என மீராவும், அவளது தாயும், அவரது தந்தையோடு பேச்சு கொடுத்து போராடிக்கொண்டிருக்க வாக்குவாதம் முற்றிவிட அவரோ கோபத்தில் ‘நல்லா இரண்டு பேரும் கேட்டுக்கோங்க. எனக்கு கௌரவம் தான் முக்கியம். எங்க வம்சமே தலை நிமிர்ந்து வாழ்ந்த ஊர்ல என்னால வேற ஜாதி பையனுக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறோம்னாலே ஒரு ஒருத்தரும் காதல் கத்திரிக்கா, பொண்ண ஒழுங்கா வளக்களன்னு ஒரு ஒரு விதமா பேச அதை கேட்டு நான் தலைகுனிஞ்சு நிக்கணுமா? நடக்கவே நடக்காது. இதுக்கு மேல என் முடிவை மாத்த யாராவது குறுக்க வந்தீங்கன்னா அந்த பயலை நானே என்கையாலே கொன்றுவேன். அவனை மட்டுமில்ல அந்த குடும்பத்தையே காவு கொடுத்துடுவேன் . ஏற்கனவே ஆளுங்க ரெடியா இருக்காங்க. ” என

திவி”சூப்பர் அங்கிள், செமையா பேசுனீங்க…சண்டை ஊர் பிரச்சனை, கலவரம் எல்லாம் வரணும்னா அங்கிள் நீங்க ஒருத்தர் போதும்.” என உள்ளே வர பாண்டியன் திவியை ஏற இறங்க பார்த்துவிட்டு “யாரு மா நீ? ”

“இவ்ளோ நேரம் ஒரு குடும்பத்துல கொலைவிழும்னு பேசிட்டு இருந்தீங்கள்ல? அந்த வீட்டு பொண்ணு தான் நான். அந்த குடும்பத்துல யாராவது ஒருத்தருக்கு ஏதாவது பிரச்னை வந்ததுனாலும் நீங்க தான் ஜெயிலுக்கு போகணும். இவ்வளவு நேரம் நீங்க பேசுனதெல்லாம் ரெகார்ட் பண்ணிருக்கேன்” என காட்ட அவர் திவியை முறைக்க

“இதுமட்டும் இல்ல அங்கிள் நேத்து நீங்க தோப்புல வெச்சு எப்படி கலவரம் பண்ணலாம்னு நினைச்சிங்க…அதுவும் எனக்கு தெரியும். நீங்க என்னதான் ஊருக்கு நல்லது பண்ணாலும் உங்களுக்கு ஒன்னுன்னதும் எந்த அளவுக்கும் மோசமா போறீங்க. இதே குணம்தான் எல்லாருக்கும், எனக்கும். உண்மை தெரிஞ்சதால என்னவே கொலை பண்ண பிளான் பண்ணிட்டா அதான் ஒரு சேப்டிக்கு என் பிரண்ட்க்கு ஏற்கனவே வீடியோ அனுப்பிச்சிட்டேன். அவனும் போலீஸ் தான்.

எங்களுக்கு பிரச்சினை கொடுத்தா தான் அந்த வீடியோ வெளில வரும். போலீஸ் வீட்டுக்குள்ள வரும். ஊரே இந்த விஷயத்தை பத்தி பேசும். உங்க பொண்ணு தப்பே பண்ணலேன்னாலும் ஆளாளுக்கு தப்பா பேசுவாங்க. எந்த தப்பும் பண்ணாமதான் அவங்க அப்பா கொல பண்ற அளவுக்கு போனாங்களான்னு சொல்லுவாங்க. அப்போ மொத்த கௌரவமும் போகும். உங்க ஆச பொண்ணோட வாழ்க்கை உங்க மானம் மரியாதை எல்லாமே உங்களோட இந்த கோபத்தால வறட்டு பிடிவாதத்தால ஒன்னுமே இல்லாம போய்டும்.”

அவர் அமைதியாக இருக்க திவி பொறுமையாக பேசினாள். அங்கிள் உங்க பொண்ணு லவ் பண்ற விஷயமே சுரேந்தர்க்கு இன்னும் தெரியாது அது உங்களுக்கு தெரியுமா? ” என பாண்டியன் அதிர்ச்சியாகி மீராவை பார்க்க

அவள் “உங்ககிட்ட தான் பா மொதல சொன்னேன். அவருக்கு கூட நான் அவரை விரும்பறது தெரியாது” என அவள் அழ திவி “இப்பவும் மீரா உங்களோட பொண்ணுதான். அவளுக்கு உங்க ஆசிர்வாதம் மட்டுமில்ல உங்க முழு சம்மதம் விருப்பத்தோட தான் இந்த கல்யாணம் நடக்கணும்னு நினைக்கிறா. ஆனா நீங்க அவளுக்கு விருப்பம்னு தெரிஞ்சும் கேவலம் கௌரவம் ஈகோன்னு அதவிடாம உங்க குடும்பத்தையே சங்கடபடுத்த பாக்கிறிங்க. இவ்ளோ நம்பிக்கை வெச்சு உங்கள மதிச்சு சொன்ன உங்க பொண்ண எந்த நிலைமைக்கு தள்ளப்போறிங்கனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. ”

“இப்பவும் உங்க இஷ்டம் தான் அங்கிள். உங்க பொண்ணுகிட்ட பேசுவிங்களோ இல்ல சண்டபோடுவீங்களோ அது எனக்கு பிரச்சினையில்ல ஆனா யார் உயிருக்கும் எதுவும் ஆகக்கூடாது. சொல்லமுடியாது எதுவேணாலும் நடக்கலாம். உங்க பொண்ணு லவ்வ சொல்றாளோ ? சொன்னாலும் சுந்தர் ஒத்துக்கறாரோ என்னவோ ? அதுக்குள்ள சுந்தர்க்கு கல்யாணம் பண்ணலாம். இல்ல உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம், கடைசிக்கு நீங்களே கூட இந்த லவ்க்கு ஓகே சொல்லலாம். பொறுமையா யோசிச்சு பேசி முடிவு பண்ணுங்க அங்கிள். உங்க விருப்பப்படி நல்லதா நடக்கும். உங்க பொண்ணுக்கு நல்லதகுடுக்கணும்னு நினைக்கிறீங்க. தப்பில்ல அதோட அவளுக்கு பிடிச்சத குடுத்தா அவளும் சந்தோஷமா இருப்பாளேன்னு தான் சொல்றேன் அங்கிள்” என்று திவி கிளம்பிவிட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: