Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

லதாகணேஷ் ‘நீங்காமல் வருவாயா’ – 01

1.நீங்காமல் வருவாயா….

 

வருகை

1

        

 

எப்போதும்

உன் நினைவுகள்

என்னை துரத்த….

ஓடி ஒழிய இடம்

தேடினேன்

உன் இதயத்தில்……

 

அழகாய் விடிந்த காலைபொழுது அந்த வீட்டில்  மகிழ்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்திருந்து,   என்ன அம்மா முன்று வருடங்களாக, வீட்டிற்கே வராதவன் இப்பொது தான் வருகிறான் அவனுக்கு பிடித்த சமையல் செய்ய சொன்னால் இன்னும் ரெடியாகவில்லை என்கிறீர்களே, சரி சரி சீக்கிரம் ரெடி பண்ணுங்கள்  நான் அவனை நேரிலேயே சென்று அழைத்து வரப்போகிறேன் , என்று பரபரத்தப்படி இருந்தான், நந்தகுமார்.

 

உனக்கு மட்டும் தான் அவன் மீது பாசம் போல துள்ளிக்கொண்டு இருக்கின்றாய்,  எங்களுக்கும் தான் அவனை பார்க்க ஆசையாய் உள்ளது, அவனுக்கு பிடித்தஉணவு பிடித்தவிதத்தில் செய்ய வேண்டாமா எத்தனை வருடம் கழித்து என் கையால் சாப்பிடப்போகின்றான்,   எல்லாம் நானே பார்த்துபார்த்து செய்து கொண்டிருகின்றேன் நேரம் பிடிக்க தான் செய்யும்,  நீ சென்று அவனுடன் திரும்பி   வருமுன் எல்லாம் தயாராக இருக்கும் என்று மீண்டும் தன்  வேலையில் மூழ்கினர் பார்வதி.

 

நேரம் பிடிப்பது இருக்கட்டும் பதட்டத்தில் பாத்திரத்தை பிடிக்கவைத்துவிடாதீர்கள் என்று கேலி செய்த மூத்த மகனை கையில் இருந்த கரண்டியை தூக்கிகாட்டி மிரட்டி அழகாய் சிரித்த அன்னையை கொஞ்சநேரம் ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றான் நந்து.

 

காரை ஓட்டி சென்றவன் மனதில் ஆயரம் எண்ணங்கள் வந்து போனது அம்மா இப்படி  சிரிக்க பார்த்து எத்தனை நாட்களானது, கடைசியாக  அவர்களின் செல்ல மகன் ஊரைவிட்டு செல்வதற்கு முன் மனம்விட்டு சிரித்தது, இப்படி எல்லோரையம் கஷ்டப்படுதிக்கொண்டு தானும் கஷ்டப்பட்டு பிரிந்திருக்க அவசியம் என்ன வந்தது என்று தன் தம்பி மீது வந்த சிறு கோபத்தை தன் காரை முந்திக்கொண்டு விரைந்து சென்ற கார் டிரைவர் மீது திருப்பி வேகமாய் கார் ஹொரன் செய்தான், கொஞ்சம் மனம் அமைதிக்கு திரும்பவும் மீண்டும் பழைய நினைவில் முழ்கினான், நந்து. மூன்று வருடங்களாக, இந்த வீட்டைவிட்டு ஊரைவிட்டு, பாசமாய் வளர்த்த பெற்றோரை பிரிந்து  ஏன்தான் சென்றான் ஸ்ரீராம் இதற்கு மட்டும் பதிலே இல்லை அவனை கேட்டாலும் எதையும் கேட்காதே என்கிறான், அப்படி என்ன நடந்தது அவன் வாழ்வில் எப்போதும் ஸ்ரீராம்   கண்களில் நிறைந்திருக்கும்  சிரிப்பு, குறும்புகள் கொண்ட குழந்தைத்தனம், வார்த்தைக்கு வார்த்தை போரிடும் துடுக்கான பேச்சு எதுவுமே தற்போது அவனிடம் இல்லை என்பது எப்போதாவது அவனை பார்க்க போகும் நந்துவிற்கு மட்டுமே தெரியும் இங்கு வந்தால் பழையபடி  மாறிவிடுவான், சமீ குட்டி புன்னகை எல்லாவற்றையும் மாற்றும், என்ற நம்பிக்கையில் இருந்தான் நந்து.

 

அவன்  என்ன ஓட்டத்தை தடை செய்தது போல் ஏர்போர்ட் வந்தது, ஆவலாய் காத்திருந்தவனிடம்  உதட்டை தாண்டாத புன்னகை மட்டும் செலுத்தியபடி நந்து  அருகில் வந்தான் ஸ்ரீராம்.

 

மூன்று ஆண்டுகளில் ஒரு மனிதன் இவ்வளவு முதிர்ச்சி பெறமுடியுமா? அந்த அளவிற்கு ஸ்ரீயின்  தோற்றம் இருந்தது, சற்று இறுகிய முகமும் புன்னகை என்பது பெயரளவில் முகத்தில் நின்றது, ஏனோ அவன் கல்லூரி நாட்களின் முகம் நந்து மனக்கண் முன் தோன்றி மனதை மேலும் பாதித்தது. மனதில் உண்டான வலியை மறைக்க  தெரியாமல் ஸ்ரீயிடம் நேரடியாக  கேட்டுவிட்டான், நந்து.  உன் வாழ்வில் என்னதான்  நடந்தது ஏன் இப்படி  மாறிவிட்டாய்  உன்னை  இந்த கோலத்தில் பார்த்தால் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும் நீ இப்படி நடந்துகொள்வது வருத்தமாய் இருக்கின்றது ஸ்ரீ என்று வேதனை மிகுந்தகுரலில் வினவினான் நந்து.

 

தன் வருத்தம் கண்டும் மௌனம் களைக்காமல்  சிலையென அமர்ந்திருந்த தம்பி முகத்தை கோபமாய் பார்த்து  ஸ்ரீ தயவுசெய்து உனக்கு நடந்தது என்ன என்று என்னிடம்  மட்டுமாவது சொல், என்னால் எதுவும், செய்ய முடியுமா என்று பார்க்கின்றேன், இப்படி உன்னகுள்ளேயே மூடிமறைத்து எங்களையும் சேர்த்து வதைகத்தே என்று கோபத்தை அடக்கியகுரலில் கேட்டவன்  முகத்தை உணர்ச்சிகள் துடைத்த பார்வை பார்த்தவன், எனக்கு என்ன நடந்துவிட்டது என்று இப்படி புலம்பிதள்ளுகின்றாய் உன் முன் நன்றாக தானே இருகின்றேன் என்று பதில் தந்துவிட்டு மீண்டும்  பாதையை வெறிக்க துவங்கினான் ஸ்ரீராம்.

 

நன்றாக இருகின்றாயா, இங்கிருந்து சென்றதிலிருந்து உன் அழகு முகத்தை கண்ணாடிக்கு காட்டியதே இல்லையா? நீ பார்க்க எப்படி இருக்கிறாய் தெரியுமா எனக்கு மூத்தவன் போல் இருக்கிறாய்  இன்னும் இரண்டு வருடம் கழித்துவந்திருந்தால் எனக்கு தாத்தா மாதரி இருப்பாய் என்று  வருத்த குரலில் கூறிய நந்துவிற்கு,  கசந்த புன்னகையை பதிலாக தந்துவிட்டு  சமீ குட்டி எப்படி இருக்கிறாள் மதி நலமா என்று பட்டும்படாமல் பேசினான் ஸ்ரீ.  நான் என்ன பேசிக்கொண்டு இருக்கிறேன் நீ என்ன கேட்கிறாய் சலிப்புடன் நந்து கேள்விக்கு  நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லவில்லையே?  என்று  கேள்வியையே பதிலாய் திருப்பினான்  ஸ்ரீ.

எல்லோரும் நலம் என்ற பதிலுடன் நந்து, ஸ்ரீயின் பதிலுக்கு காத்திருக்க நத்துவிற்கு  ஸ்ரீயின் மௌனமே பதிலாய் இருந்தது. இனி இவனே வாய்திறந்து சொன்னால் தவிர விசயம் தெரியாது என்று அதற்கு மேல் குடைந்து கேள்விகேட்காமல் அமைதியானான் நந்து.

 

வெகு நாட்களுக்கு பிறகு தன் மகனை சந்திக்கும் பார்வதி, நாதனுக்கும் சற்று அதிகமாகவே ஏமாற்றத்தை தந்தது ஸ்ரீயின் முகமும், அந்நியமான நடவடிக்கையும்,  வீட்டில் நுழையும் போதே இருக்கும் அமைதியை விரட்டியடிக்கும் இயல்பான  கலகலப்பு   பேச்சும், சோகத்தில் இ்ருப்பவரையும் சோகம் மறந்து மனம்விட்டு சிரிக்க வைக்கும் குறும்பான பேச்சும்  அவனிடம் இல்லை,  முகத்தில் ஏற்பட்டிருந்த முதிர்ச்சி, பொலிவிழந்த கண்களும்  பெற்றோர் மனதை மேலும் நோகடித்தது. ஒருவன் தன் இயல்பிலிருந்து மாறும் அளவிற்கு அவன் வாழ்வில் என்ன நடந்திருக்கும்  என்று அனைவரும் குழம்பி நிற்க தானே முன்வந்து நடந்ததை கூறினான் ஸ்ரீ ராம்.

 

தன் வாழ்வில் நடந்ததை சுருக்கமாய் விலகியவனை விழியகலாமல் பார்த்தபடி  எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்களுக்கு அவன் கூறிய செய்தியில் திருமணம் வேண்டாம் என்றும் இனியும் ஒரு பெண்ணை நம்பி தன் வாழ்வை ஒப்படைக்க தயார் இல்லை என்பதும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. பெற்றோர் வேறு கவலையில் இருக்க நந்தகுமார் சற்று தெளிவுற்றான், காதல் தோல்வியில் துவல்வது  சகஜம் தான் அதற்காக இப்படியே வாழவேண்டிய அவசியமில்லை, காலம் மாறும்போது மனமும் மாறும், மாற்றம் நிகழும்போது  மீண்டும் காதலும் மலரும் என்று  நம்பிக்கை கொண்டான், இந்த அளவிற்கு நந்து நம்பிக்கை கொள்வதற்கு காரணம் உண்டு தன்  தம்பியான ஸ்ரீயை பற்றியும் அவனது நடவடிக்கை பற்றியும் கொஞ்சமேனும் அறிந்தவன் நந்தகுமார் அவன் அறிந்த வரையில் ஸ்ரீக்கு பெண்கள் என்றால் இவ்வளவு வெறுப்பு இருந்தது இல்லை அவன் குழுவில் பெண் தோழிகளும் உண்டு அதனால் நிச்சயம் மாற்றம் நிகழும் என்று உறுதியாய் எண்ணினான் நந்து. எனவே தம்பி சொன்ன செய்தி  அவ்வளவு பயப்படும் படியாக நந்துவிற்கு படவில்லை ஆனால் ஸ்ரீ இன் பிடிவாதம் அறிந்ததால் அது எளிதில் சாத்தியம் இல்லை  எண்ணியதை விட கொஞ்சம் அதிகமாகவே காலம் பிடிக்கும் என்று மட்டும் எண்ணினான் நந்து.

 

தன் பொழுதுகள் முழுவதையும் வீட்டிலேயே கழித்த ஸ்ரீயிடம் வந்து நந்துவும் நாதனும் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர். நீங்கள் சொல்வதும் சரிதான் எவ்வளவு நேரம் தான் இந்த சமீ குட்டியுடன் விளையாடுவது, அவளுக்கு நானும் எனக்கு அவளும் அலுத்துவிடுமுன் ஏதாவது செய்யவேண்டும் என்று நானே நினைத்துக்கொண்டே இருந்தேன் நீங்களே கேட்டுவிடீர்கள் சற்று பொறுங்கள்  இதோ வருகின்றேன் என்று எழுந்து  உள்ளே சென்று கையில் சில கவர்களை எடுத்து வந்தான் ஸ்ரீ.

 

இவன் என்ன செய்யபோகின்றான் என்று புரியாமல் தந்தையும் மகனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அவர்கள் முகமாற்றத்தை கவனியாதவன் போல அண்ணா இது வேலைக்கான கடிதங்கள் கூடிய விரைவில் வேலையில்  சேரும்படி  கூறியிருகின்றார்கள், நீயும் அப்பாவும் ஒரு முறை பார்த்து விட்டால் பதிலுக்கு மெயில் செய்துவிடுவேன் என்று சாதாரணமாய் கூறி கொண்டு இருந்தான் ஸ்ரீ.   இந்த பேச்சு நடந்தது வீட்டின் முன் அறை என்பதால் அனைவரின் கவனும் அங்கு இருக்க மற்றவர்  காதுகளிலும் ஸ்ரீயின் வார்த்தை  விழுந்தது. எல்லோரும் மலைத்து போய்  நிற்க ஸ்ரீ தொடர்ந்து பேசினான்  என்ன நான் கேட்டதற்கு பதிலே இல்லை இதில் சில ஆர்டர்கள்  தற்போது புதிதாக துவங்கப்பட்ட நிறுவனங்கள் என்று நினைக்கின்றேன் எனக்கு பரிச்சயமானது  போல தெரியவில்லை அதனால் தான் உங்களிடம் அபிப்பிராயம் கேட்கிறேன் என்று கூறிக்கொண்டு இருந்தவனை இடைமறித்த மதி என்ன  பேசுகின்றோம் என்று புரிந்துதான்  பேசுகின்றாயா ஸ்ரீ, நம்மிடமே அத்தனை நிறுவனங்கள்  இருக்கு நீ வெளியில் சென்று வேலை பார்ப்பதா? இது உன்னைக்கே சரியாய் படுகின்றதா? என்று சற்று கோபமாய் வினவினாள் மதி நந்துவின் மனைவி.

 

எல்லாம் புரிந்து தான் பேசுகின்றேன், பலமுறை யோசித்தும் இது தான் சரியான முடிவென்று தோன்றுகின்றது, என்றான் ஸ்ரீ. என்ன யோசித்தாய் இது தான் நீ யோசித்த இலட்ச்சணமா என்று கோபம் குறையாமல் சிடுசிடுத்தாள் மதி.

 

என் யோசனை தவறென்றால், நீயே உன் அறிவாளி மூளையை கசக்கி  யோசித்து பார் நான் என்ன சொல்லவருகின்றேன் என்று தெளிவாய் புரியும், இந்த நிறுவங்களை  எல்லாம் அப்பாவும் அண்ணனும் நல்லபடியாக நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள் இடையில் நான் எதற்கு நந்தி போல உள்ளே ஒரு நந்திருந்தால் போதும் அது நந்து நந்தியாகவே இருக்கட்டும் என்று பதில் தந்தான் ஸ்ரீ.

 

ஸ்ரீ குரலில் பழைய குதூகலமில்லை என்றாலும் கலகலப்பாய் பேச முயன்றதே பெரும்நிம்மதியாய் உணர்ந்து நாதன் மகன் முகன் பார்த்து நிற்க தந்தையை திரும்பி  ஒரு பார்வை பார்த்துவிட்டு, நீ என்ன சொல்லுகிறாய் அண்ணா எப்படியும் அப்பாவின் முடிவு என்ன என்று  தெரிந்துவிட்டது  என்று தன் தந்தையின் முகத்தில் இருந்து அவர் மனதை படித்தவன் போல தன் தமயன் முடிவை கேட்டான் ஸ்ரீ.

 

ஒரு முடிவு எடுத்தால் அதில் இருந்து எளிதில் மாற்ற முடியாது என்று ஸ்ரீயின் குணம் அறிந்த  நந்து அவன் போக்கிலேயே விட்டுப்பிடிக்க  நினைத்து, உன் விருப்பம்  எப்படியோ அது படியே செய், உன்னை கட்டாயப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை, அப்படியே கட்டாயப்படுத்தினாலும் அதை நீ கேட்க போவதில்லை என்று தெரிந்த பின்பும்  வீணாய் அதையேன் முயன்றுகொண்டு என்று ஸ்ரீ கொடுத்த  கவர்களில் இருந்து ஒன்றை எடுத்து அவன்  முன் நீட்டியவன்,  இதோ இந்த நிறுவனம் பிரபலம் ஆனது நல்ல பெயர் உள்ளது இதற்கே பதில் எழுது என்றான், நந்து.  ஆனால்   ஒரு வேண்டுகோள், வேண்டுகோள் என்பதைவிட நிபந்தனை என்றே வைத்துக்கொள், நீ வெளியில் சென்று வேலை பார்க்கும் முன் ,  நம் அலுவலகத்திற்கு  சில நாள் வர வேண்டும் அங்கு வந்து நம் தொழில் முறைகளையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றான் நந்து.

 

நீ ஒருவனவது என் விருப்பத்திற்கு மதிப்பு தந்து ஒப்புக்கொண்டாய் அதனால் உன் விருபத்திற்கு  நானும் மதிப்பு அளிக்கிறேன்  எப்போது வருவது என்று தன் சம்மதத்தை தெரிவித்தான் ஸ்ரீ.

 

கணவனின் எண்ணம் புரியப்பெற்றவாய் நாளையே செல்லுங்கள் ஸ்ரீ நாளை புதன் கிழமை, நல்ல நாள் அதனால் என்று மதி முடிப்பதற்குள், நீயும் எப்படி இப்படி மாறினாய்  அம்மாவை போல நல்ல நாள் அது இது என்று  சிரித்தவன் உன் கணவனுக்கு அளித்த மதிப்பை அவன் சரிபாதி உனக்கும் தரவேண்டும் தானே அதானல் உன் விருப்பப்படியே  நாளையே செல்கிறேன் என்று கூறி சமீயை தூக்கிக்கொண்டு தோட்டத்தில் விளையாட சென்றுவிட்டான் ஸ்ரீ.

 

என்னடா அவன்தான் வெளிவேலைக்கு போகின்றேன்  என்று புரியாமல் பிடிவாதம் பிடித்தால் ,  வேண்டாம் என்று தடுக்கமால் நீயும் சரி என்கிறாய், இதில்  ஒரு நிபந்தனை வேறு  நம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று, வரவர இந்த வீட்டில் நடப்பது  ஒன்றுமே புரியவில்லை என்று  அழுத்துகொண்டார் பார்வதி.

 

தன் கணவன் மனதை படித்தவள், அத்தை நம் ஸ்ரீ ஒரு வேலையில் இறங்கிவிட்டால் அவ்வளவு எளிதில் பின்வாங்க மாட்டார் அதனால்  தான் உங்கள் பெரிய மகன் இப்படி  ஒரு திட்டமிட்டுள்ளார் என்று தான் புரிந்துகொண்டதை தன் அத்தைக்கும் புரியவைக்க முயன்றாள்  மதி.

 

தான் சொல்லாமலேயே தன் என்னத்தை புரிந்துகொண்ட மனைவியை மெச்சுவது போல பார்த்தபடி, மதி சொல்வது சரிதான் அம்மா எல்லாம் சரியாக நடக்கும், நம் ஸ்ரீ மனமும் மாறும்  நம்பிக்கையோடு இருங்கள் என்று தன்  அன்னையை தேற்றிவிட்டு,  மனைவியின் காதருகில் குனிந்து  என்னை நன்கு அறிந்து  வைத்துள்ளாய் இதற்கு பரிசு தரவேண்டுமே என்று காதல் பார்வையில்   கிசுகிசுதான், நந்து.   அத்தை இருப்பது தெரியவில்லை,என்ன பார்வை  என்று பொய்யாய் கோபம் காட்டி கண்ணால் சிரித்து வெட்கத்துடன் உள்ளே சென்றவளை ரசித்துவிட்டு  ஸ்ரீயிடம் சென்றான் நந்து.

 

தோட்டத்தில் சமீ குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த தன் தம்பியை நெருங்கி நீ நாளை காலை தயாராக இரு ஸ்ரீ என்றான் நந்து.  ஒரு நிமிடம் நந்து நீ நினைப்பது போல என் முடிவு அவ்வளவு எளிதில் மாறிடாது இதை மட்டும் புரிந்துகொள் என்றான் ஸ்ரீ. தம்பின் புத்திசாலித்தனம் தெரிந்ததால் ஒன்றும் கூறாமல் சிரித்த படி மகளிடம் உனக்கு ரொம்ப “போர்” அடிக்குதடா செல்லம் அடுத்த வருடம் உனக்கு நிறைய ” பிரன்ட்ஸ்” கிடைப்பார்கள் என்று பேச்சை மாற்றினான் நந்து.

 

தந்தையின் சொல் பாட்டி சொன்னதை நினைவு படுத்த எனக்கு தம்பி பாப்பா வேண்டும் என்றாள் மகள். தம்பியும், பாப்பாவுமா போச்சுடா    யார் உன்னிடம் இப்படி சொன்னது என்று கேட்ட தந்தையிடம், அப்பா அம்மா கிட்ட “போர்” அடிக்குது விளையாட தம்பி பாப்பா கேளுன்னு பாட்டி தான் சொன்னாங்க என்றாள் மகள் வெகுளியாய்.  நானும் தான் உன் அம்மாவிடம் கேட்கிறேன் என்று ஏக்கப்பெருமூச்சு விட்ட அண்ணனை பார்த்து, உன்னை விட உன் மகள் புத்திசாலி இரண்டுமே வேண்டுமாம், பார்த்து ஏதாவது கடையில் வங்கிக்கொடு என்று அடம்பிடிக்கும் முன் ஏற்பாடு செய் என்றான் ஸ்ரீ.  சரி பார்ப்போம் அங்கு எப்படி என்று,  நீயும் திருமணம் முடிந்தது  அடுத்தடுத்து வாரிசு தர போகிறாயா இல்லையா? என்று கேலி செய்த நந்து  ஸ்ரீயின் முகம் வேதனையில் சுருங்கிட அவனிடம் உண்டான  மாறுதலை கண்டும் காணாதது போல்  சரி “குட் நைட்” மறந்துவிடாதே காலையில் தயாராக இரு என்று நகர்ந்தான் நந்து.

 

நந்துவின் வார்த்தைகள் ஸ்ரீனுள் புதைந்த பழைய நினைவுகளை  எழுப்பியது, நமக்கு திருமணம் முடிந்து ரெண்டு வருடம் கழித்துதான் குழந்தை என்றதற்கு வெட்கத்துடன் தலைகுனிந்து   ஏன் என்று கேட்டவளிடம், இளமையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ரகசிய புன்னகை செய்து அவள் கையை பற்றி அழுத்தியவனுக்கு  பதிலாய் வெட்கத்தில் சிவந்தவளின் முகம் கண்முன் தோன்றி இம்சித்தது.  இங்கு வந்ததில் இருந்து அவள் நினைவுகள் அதிகம் துரத்துவது  உணர்ந்தான் ஸ்ரீ. ஒரு சில நாட்களில் எப்படி மாறிவிட்டாள்  இப்போது யாரோடு வாழ்கிறாளோ என்ற எண்ணத்தில்  துவண்டு போனவன், தன்னால் ஏன் அவளை முழுதாய் வெறுக்க முடியவில்லை, இன்னும் முட்டாள் தனமாய் திரும்பி வரமாட்டாளா என்று ஏங்கியே ஏன் என்னையே வதைத்துக்கொள்கின்றேன் புரியாமல்  என்று யோசித்தபடி வெகுநேரம் உலவிவிட்டு கால்கள் ஓய்வு கேட்டு கெஞ்சவும்  உறங்கசென்றான், ஸ்ரீ.

 

மறுநாள் காலை விடியல் அவனுக்குள் சொல்லமுடியாத  பல  உணர்வுகளை  கொடுத்தது, இன்பமும் துன்பமும் நெருங்கி வருவதாய் உணர்ந்தான் ஸ்ரீ.   சரியாக அலுவலக செல்லும் நேரம் கீழே வந்தவன் பார்வதி வற்புறுத்தலினால்  உண்டேன் என்ற பெயருக்கு  இரண்டு வாய் உண்டுவிட்டு தந்தை தமையனை பின் தொடர்ந்தான் ஸ்ரீ.

 

புதிதாய் உள்ளே நுழைந்தவனை பார்த்து குறுகுறுத்த விழிகளை பொருட்படுத்தாது நேரே அலுவலக அறைக்கு சென்றவர்கள், அலுவலகத்தின் பணியாளர்களை அறிமுகம் செய்திட நந்து விரும்பிய போது,  வேண்டாம் என்று மறுத்துவிட்டு நான் இங்கு வரப்போவது கொஞ்சநாள் இதில்  எதுக்கு இந்த “பார்மாலிட்டிக்ஸ்” என்று காரணமும் சொன்னான் ஸ்ரீ.    ஏனோ மனதில் சிறு உறுத்தலை உணர்ந்து, புரியாத ஒன்றை எண்ணி நேரம் செல்வதை தவிர்க்க, மற்றதை பார்ப்போமா என்று நந்துவின் அறைக்குள் சென்றான் ஸ்ரீ, அலுவலக விபரங்கள் அடங்கிய “பைல்கள்” எடுத்துவரும்படி உதரவிட்டவன், ஸ்ரீயிடம் திரும்பி பதில் எழுதிவிட்டயா? என்றான் நந்து.

 

இன்றுதான் எழுதவேண்டும் என்றவனிடம் அலுவலக பைல்களை நீட்டியது இரு கரங்கள். கரங்களா? வெண்டைபிஞ்சுகளா? என்று  எண்ணம் தோன்றியதும் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்த ஸ்ரீக்கு  அதிர்ச்சி ஆச்சர்யம் மகிழ்ச்சி எல்லாம் கலந்த கலவையான உணர்வினை உணர்ந்தான்.

.

சற்று நேரத்தில் உலகத்தையே சுற்றி வந்ததுபோல் இருந்தது, இது சந்தோச சுற்றலா அல்லது என்று யோசிக்கும் முன் இவள் பிரியா என் “.பி ஏ”  அறிமுகம் செய்துவைத்தான்  நந்து. தன் கண்களையும், காதுகளையும் நம்பமுடியாதவன் போல மீண்டும் ஒரு முறை தனக்கு முன் நின்றிருந்தவளை  வெறித்து நோக்கினான் ஸ்ரீ. நிஜமாய் தன் முன் நிற்பது பிரியாவே தான் எவளை தனக்கு எல்லாம் என்று எண்ணியிருந்தானோ  அவளே தான். எவளை மறக்க முடியாமல் இங்கிருந்து ஓடி ஒழிந்துதானோ  அவளை மீண்டும் இங்கு சந்தித்ததில் பேசமுடியாமல் வாயடைத்து  நின்றான் ஸ்ரீ.

 

பிரியா இவன் என் தம்பி ஸ்ரீராம் தன் தம்பியை அறிமுகம் செய்துவைத்தான்  நந்து. இதற்குமுன் பார்த்து பழக்கமே இல்லாதது போல்  புதியவனை பார்ப்பது போல பார்த்து கரம்குவித்து வணக்கம் என்றாள் பிரியா.

 

உன் நினைவுகள்

என் உணர்வோடு விளையாட

நீ என் வாழ்வோடு

விளையாடுகிறாய்!!!!

 

என்று மனதில் எண்ணியபடி பதிலுக்கு  கரம் குவித்தான் ஸ்ரீ. இங்கு நடப்பதை கவனித்த நந்து ஸ்ரீயின் அதிர்ச்சியையும் ப்ரியாவின் அலட்சியத்தையும் கண்டும் காணாது போல், பிரியா ஸ்ரீயை நம் அலுவலக கணக்கு பைல்கள் இருக்கும்  அறைக்கு அழைத்து சென்று  அதற்கான விளக்கம் கொடு என்று பணிந்துவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தான் நந்து.

 

மறுப்பேதும் கூறாமல் அவள் முன்னே செல்ல ஸ்ரீ அவளை பின்தொடர்ந்தான், பைல் அறைக்கு அழைத்து சென்றவள் இது சென்ற ஆண்டு கணக்குகள் அடங்கியது  என்று கூறி கொண்டிருந்தவளை  உணர்ச்சிகள் துடைத்த வெற்றுகுரலில் எத்தனை குழந்தைகள் பிரியா என்றான் ஸ்ரீ.  அவன் எதுவுமே பேசாதது  போன்று  சற்றும் சலனமின்றி  மீண்டும் பைல்களை பற்றி கூறத் தொடங்கினாள் பிரியா, நான் உன்னிடம் தான் கேட்கிறேன் என்றான் ஸ்ரீ, சற்று அழுத்தமாக.   உங்களுக்கு அலுவலக கணக்கு பற்றி விளக்கம் அளிக்கத்தான் உத்தரவு, என் குடும்ப விபரம் பேசிட  இல்லை என்று கூறிய பிரியாவை நெருங்கிய ஸ்ரீ உன் குடும்ப விபரம் எனக்கு முக்கியம் தான் பிரியா என்றான் சற்று கடுமையாக.  அந்த அறையில் ஒரு புறம் சுவரும் மறுபுறம் ஸ்ரீயும் வழியை மறைத்தபடி இருந்தது அவன் அழுத்தமான குரலில் உணர்த்தவள் சற்று மிரண்டு பின்வாங்கியபடி யோசித்தாள். நீ விலகிவிட்டால் ஸ்ரீ நிச்சயம் என்னிடம் வந்துவிடுவான், நீ தான் நந்தியாய்  எங்களுக்கு  நடுவில் இருக்கிறாய் என்றவளின் குரல் காதில் ஒலித்தது, அப்படியென்றால் நிச்சயம்  இவனுக்கு   திருமணம்  முடிந்திருக்கும், இவன் வாழ்கையில் வேறு பெண்ணுக்கு இடம் கொடுத்துவிட்டு நல்லவன் போல இவன்  என்ன என்னை கேள்வி  கேட்பது என்று கோபமாய் நினைதுகொண்டிருன்தவள் தன் பதிலுக்காக ஸ்ரீ காத்திருப்பது  புரிந்து,  வேகமாய் ஒன்று என்று பதில் தந்துவிட்டு இன்னும் வேறு ஏதும் விளக்கம் வேண்டுமா? என்று சிடுசிடுத்தாள் பிரியா.

 

ஏற்கனவே எதிர்பார்த்த பதில் தான் எனினும்  அவள் கூறி கேட்டிட மனம் கசந்தது, ஏதும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறியவன் நேராக நந்துவிடம் சென்று எனக்கு வெளியில்  கொஞ்சம் வேலை உள்ளது  நான் கிளம்புறேன் என்று கூறி விட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறி சென்றான் ஸ்ரீ.

 

அலுவலக நேரம் முடிந்து பிரியா வரும் வரை  காத்து கொண்டு இருந்தவன், அவளை கண்டதும் பின் தொடரத்தொடங்கினான். சில மணி நேரத்தில் ஒரு வீட்டின் முன் நின்ற பிரியா கதவை திறந்து உள்ளே நுழைகையில்  ஒரு குழந்தை அவள் கால்களை கட்டிக்கொண்டு அன்பாய் சிரித்ததையும், குழந்தையை தொடர்ந்து ஒரு ஆணும் அவளுடன் பேசியபடி உள்ளே செல்வதை கண்டான். ஏதோ தன் கை நழுவி சென்றது போலவும், காத்திருந்த காலம் அனுபவித்த வலியை விட அதிகமான வலியை உணர்ந்தான் ஸ்ரீ ராம்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: