Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 73

73 – மனதை மாற்றிவிட்டாய்

பின் தாத்தா மாமா என ஒவ்வொருவராக வர அவர்களால் எதுவும் பேச முடியாமல் போக திவி மற்றவர்களிடமும் தன் நண்பன் என கூறி அவன் பெயர் வேலை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்தினாள். அனைவருக்கும் அவனது வேலை பற்றி கூறியதும் சோபி விஷயத்தோடு ஒப்பிட்டு சிறு சந்தேகம் எழ, இருப்பினும் எதுவும் அதைப்பற்றி கேட்காமல் சாதாரணமாகவே உபசரித்தனர்.

மதன் ஏதோ பேச நினைக்க அதை புரிந்து கொண்டு ஆதி “திவி நீ குடிக்க ஏதாவது கொண்டு வா…நாங்க வெளியே இருக்கோம். சாய்ங்கால நேரம் வெளில கிளைமேட் சூப்பரா இருக்கும்” என அழைத்து வந்து விட்டு “இப்போ சொல்லுங்க மதன்.”

அவனும் “எனக்கு சோபிய பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் ஆசப்படறேன். சோபிக்கும், உங்க எல்லாருக்கும் ஓகேன்னா எங்க வீட்டில நான் கூட்டிட்டு வந்து பேசறன்.”

ஆதி “ஒருவேளை எங்க வீட்லையே ஒத்துக்கலேன்னா?”

மதன் “இங்கேயே தங்கி முதல உங்க எல்லாரையும் ஒத்துக்க வெச்சிட்டு அப்புறம் எங்க வீட்ல கூட்டிட்டு வருவேன்.” எனஆதி புன்னகைக்க திவி அங்கு வந்தாள். பிறகு சற்று நேரம் பேசிவிட்டு இரவு உணவுக்கு பின் மதன் “என் பிரண்ட் வீடு இங்க பக்கத்துல இருக்கு நான் அங்கேயே தங்கிக்கறேன்” என அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டான்.

திவி அவனிடம் “எப்போ பாஸ் சோபிகிட்ட என்கொய்ரி ஆரம்பிக்க போறீங்க” என சிரித்து கொண்டே கேட்க அவனும் “நாளைக்கு” என்றான். “ஆல் தி பெஸ்ட்” என வாழ்த்திவிட்டு அனுப்பிவிட்டாள்.

“எதுக்கு?” என ஆதி வினவ அப்புறம் சொல்றேன் என்றுவிட்டு மீரா கிளம்ப திவி “தனியா போகவேண்டாம் அம்மா சொன்னாங்க” என்று சுந்தரை அழைத்து “ப்ளீஸ் அவ வீடு வரைக்கும் கூட போயி விட்டுட்டு வரீங்களா” என்றதும் சரி என வேகமாக கிளம்பினான். மீராவும் எதுவும் கூறாமல் ஆனால் முறைத்துக்கொண்டே கிளம்பினாள்.

அறையில் திவி நுழைய அவளை பின்னல் இருந்து அணைத்துக்கொண்டு கைக்குள் கொண்டு வந்தவன் “என்னடி காலைல இருந்து ரொம்ப சீன் போடற…கூப்பிடா வரமாட்டியா?” என அவள் கன்னம் கடிக்க அவளோ கையை மட்டும் உயர்த்தி ஆதியின் தலையில் செல்லமாக தட்டி விட்டு

“எனக்கு எவ்வளவு வேலை இருந்தது தெரியமா?” என

ஆதி “ஓ … நல்லா தெரியுமே ஏதாவது பிராடு வேலை பண்ணி ஒருஒருத்தரையா மாட்டி விட்டு பதற வெச்சிட்டு இருக்க. இது ஒரு வேலை இதுக்காக என்னை நீ பாக்க வரலேன்னு வேற காரணம் சொல்றியா?” என்று கடித்த கன்னத்தில் இதழ் பதித்து “இன்னைக்கு எனக்கு எத்தனை தடவ உனக்கு சாரி சொல்லணும்னு இருந்தது தெரியுமா?” என்று அவளை இறுக அணைக்க இவளும் சிரித்துக்கொண்டே அவனுக்குள் அடங்கினாள். இருந்தும் “நமக்கு ஒன்னு வேணும்னா நாம தான் அதுக்கான வேலைய செய்யணும். சும்மா வரும் வரும்னா எப்படி வரும்?…நீங்க பொறுப்பில்லாம இருந்ததுக்கு என்ன ஏன் குறைசொல்ரீங்க?” என அவனை சீண்ட அவளை விலக்கி ஒரு நொடி பார்த்து “அடிப்பாவி என்னவே குறை சொல்றியா? ” என அவளை தூக்கிக்கொண்டு “இனி எனக்கு வேணும்கிறதா நானே பாத்துக்கறேன்.” என அவன் படுக்கையில் கிடத்த இவளோ “ஆதி, எதுன்னாலும் யோசிச்சு பண்ணனும். திவி பாப்பா பாவம்ல எனக்கு ரொம்ப வேலை. டையர்டு வேற. இப்படி ஹார்ஸ் ஆஹ் ஹாண்டில் பண்ணக்கூடாது.” என அவள் கூறிமுடிக்கும் முன் அவளது இதழை சிறை செய்திருந்தான். அவளோ தன்னிலை மறந்து பனியாய் உருகிக்கொண்டிருக்க ஆதியின் வேகத்தில் செயலில் தன் ஒவ்வொரு அணுவும் செயலிழக்க கண்டவள் மூச்சுவிடவும் மறந்து மயங்கிக்கிடக்க வெகு நேரம் கழித்து அவளது இதழை சிறை செய்தவனே அவளது மூச்சுக்கும் வழி செய்தான். அவன் விலகியும் அவள் கண் திறவாமல் மயங்கிக்கிடந்த நிலையை கண்டவன் அவளது கண்களின் மேல் இதழ் பதித்து அழைக்க விழி விரித்து அவனை கண்டபின்னே மூச்சுவிட அவன் சிரிக்க அவள் முகம் செம்மையுற, வார்த்தை வராமல் விழி தாழ்த்திக்கொள்ள “ஹே என்னடி முகம் இப்டி மாறுது? இப்போ எதுவும் பேசமாட்டியா?” என அவள் கன்னம் சூடேற, உடலோடு உதடும் சிறிது நடுங்க அவனுக்குள் புதைந்துகொள்ள அவனை அணைக்க சென்றவளின் எண்ணத்தின் வேகம் பாவம் அவளது துவண்ட கைகளுக்கு இல்லாமல் போக அவளை புரிந்துகொண்டவன் இழுத்து தன் மேல் போட்டுகொண்டு இறுகி அணைத்துக்கொள்ள அவனது இதயத்தினுள் இளவரசியாய் வாழ்பவள் அவனது இதயத்தின் மேல் தலை வைத்து தனது அத்தனை சக்தியும் வடிந்த நிலையில் அவனுக்குள் அடங்கிவிடவே துடிக்க அவளது முதுகையும், தலையையும் வருடிவிட்டவன் அவளை ஆசுவாசப்படுத்தினான்.

அவளை சகஜ நிலைக்கு கொண்டுவர எண்ணியவன் “டேய் தியா, பேசும்போது திவி பாப்பான்னு சொன்னியே? எனக்கு தெரியமா நம்ம பாப்பா எப்படி வந்தது. அந்த காலத்துல பாத்தாலே குழந்தை பிறக்கும்னு சொல்லுவாங்களே? அந்த மாதிரியா?” என

அவளும் “நான் என்னதான் சொன்னேன்.” என சிணுங்க அவனும் “என்னது நீ பாப்பாவ? அப்போ நம்ம குழந்தைய என்னனு கூப்பிடறது?”

அவளும் அவனை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டு “குழந்தைக்கு பேர் வெப்போம்ல? அத கூப்பிட்டுக்கலாம்…இல்ல குட்டி ஆதி, குட்டி திவி கூப்பிட்டுக்கலாம். ..பட் உங்களுக்கு 1st நானே இருந்துக்கறேனே…” என அவனும் சிரித்துக்கொண்டே “சரி, ஆனா குட்டிமா… உன்கிட்ட ஒன்னு கேக்கணும் டா. .”

“ம்ம், சொல்லுங்க”

” கொழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமா? ” என அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ஆமா ஆதி, எனக்கு ரொம்ப பிடிக்கும். குட்டிஸ் எப்போவுமே சூப்பர் தான். அவங்க எல்லாருக்கும் கிடைச்ச கிப்ட்.” என அவள் உணர்ச்சிவேகத்தில் கூற

ஆதி “உனக்கு சீக்கிரம் குட்டி ஆதியோ, திவியோ வேணுமா? கொஞ்சம் தள்ளிபோட்டுக்கலாமா?” என அவன் அமைதியாக கேட்க அவனை கண்டவள் “உங்களுக்கு எப்போ வேணுமோ அப்போதான் எனக்கு வேணும்.” என ஆதி “ஹே எனக்காக சொல்லக்கூடாது, உன்னோட இஷ்டம் என்னனு சொல்லு. எனக்கும் குழந்தைங்கன்னா பிடிக்கும். சோ நீ வேற எந்த மாதிரியும் எடுத்துக்காத.”

“ஐயோ ஆதி, அப்படியெல்லாம் இல்லை. நான் உண்மையைத்தான் சொல்றேன். உங்களுக்கு எப்போ வேணுமோ அப்போவே எனக்கும் ஓகே.”

“ஓஒ. ..அப்போ இப்போவே எனக்கு ஓகே சொன்னா? ”

“யா. ..எனக்கும் ஓகே. ..”

“சரி, அஞ்சுவருஷம் கழிச்சுன்னு சொன்னா?”

“ம்ம்ம். .. அதுக்கும் ஓகே..”

“அதுக்குள்ள உன்னை நிறையா பேர் கேள்வி கேப்பாங்களே?”

“அத நான் பாத்துக்கறேன். நீங்க ஏன் பீல் பண்றீங்க? ”

“சரி, நான் ஏன் இப்போ வேணாம்னு சொன்னேன்னு கூட கேக்கமாட்டியா? ”

“என்கிட்ட சொல்லலாம்னு நீங்க நினைக்கிற எந்த விஷயத்தையும் உள்ளுக்குளேயே வெச்சிருக்கமாட்டீங்க. ஒருவேளை சொல்லாம இருந்தாலும் கண்டிப்பா என்கிட்ட மறைக்கணும்னு இல்லை, அது அப்போதைக்கு எனக்கு தெரியவேண்டாம்னு நினைச்சிருப்பீங்க. சோ நான் அதுக்கெல்லாம் யோசிக்கவே மாட்டேன். ஏன்னா நீங்க என்னை அவ்ளோ லவ் பண்றீங்க….அதுக்கு முன்னாடி வேற எது எனக்கு கிடைச்சாலும், கிடைக்காட்டியும் கவலை இல்லை…” என அவள் உறுதியாக கூற அவனுக்குமே ஆச்சரியமாகவும், அளவில்லா மகிழ்ச்சியும் சேர “லவ் யூ டி செல்லம்.” என அணைத்துக்கொண்டான்.

“சரி, மதனுக்கு எதுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்ன? ”

திவி “அதுவா நான் மதனோட பிரண்ட்னு சோபிக்கு தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவா மதனை அக்சப்ட் பண்ணுவாளான்னு தெரில. அதுக்கு தான் அவன்கிட்ட சொல்லாதேன்னு சொன்னேன். அவன் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டான். ”

ஆதி “ஓ…சரி மதன்க்கு சோபி பத்தி எல்லாமே தெரியுமா ஐ மீன் அவ ப்ராப்லம் பண்ணது எல்லாமே.”

திவி “ம்ம்.. தெரியும்.. தப்பு பண்ணவங்க மாறவே கூடாதா என்ன? …

நான், மதன் எல்லாமே கூட இருக்கறவங்க யாராவது தப்பு பண்ணா அவங்களா மாறி வரட்டும்னு விடற ஆளுங்க இல்லை. அதுக்கான சூழ்நிலைய நாங்களே உருவாக்கி அவங்களுக்கு புரியவெச்சிட்டு கூட சேத்திக்குவோம்… சோபி விஷயத்துலையும் அதே தான்.. ஆனா எந்த அளவுக்குன்னு ஒர்க்கவுட் ஆகும்னு தெரில…”

ஆதி “அவ மாறுவான்னு நினைக்கிறியா?”

திவி “100% ஆமான்னு சொல்லமுடியாது. மாறுனா இன்னும் நல்லா இருக்கும். இல்லாட்டி இப்போ அவளுக்கு வந்த பிரச்சினைல அவ கொஞ்சம் ஆடி போய்த்தான் இருக்கா. சோ இதுக்கு மேல பிரச்சினை பண்ண ரொம்பவே யோசிப்பா…”

“ம்ம்..அவ மேல உனக்கு கோபம் இல்லையா?…அவ பண்ணத எல்லாம் மறந்திட்டியா?”

திவி “அதெப்படி இல்லாம இருக்கும்? இப்ப மட்டும் இல்ல எப்பவும் அத மறக்கமாட்டேன் ஆனா அதுக்காக அவ வாழ்க்கைல எந்த சந்தோஷமும் அனுபவிக்க கூடாதுன்னு நினைக்கற அளவுக்கு சாடிஸ்ட் இல்ல… அவ பணம் தான் முக்கியம்னு நினைக்கிறா அவ்ளோதானே யாருக்கு தான் அந்த ஆச இல்ல சொல்லுங்க.. என்ன சோபி ஓபனா சொல்லிட்டா மத்தவங்க சொல்றதில்ல…. அதுல அவ கொஞ்சம் ரொம்பவே ஆழமா போய்ட்டா. அதான் எனக்கு அவ உருவாக்குன பிரச்சனை, அவ எந்த விஷயத்தில எனக்கு பிரச்சினை குடுத்தாலோ அதே மாதிரி விஷயம் தான் அவளுக்கு இப்போ பிரச்சினையா திருப்பி கொடுத்துட்டேன். அதுக்கான பதிலடி தண்டனை தான் இப்போ அவ பீல் பண்றது.. இதுக்கு மேல அவ தப்பு பண்ணா அதுக்கும் அவகிட்ட நான் சண்டை போடுவேன்… ஆனா அது வேற இது வேற.. வேணும்னா இப்டி வெச்சுக்கலாமே… என்ன இருந்தாலும் நம்ம குடும்பத்துல இருக்கற ஒரு ஆள். அவங்க மட்டும் கஷ்டப்பட்டா பாத்துகிட்டு நிம்மதியாவா இருக்கமுடியும்..அவளை ஆரம்பத்துல இருந்து கவனிக்காம அப்டியே ரூடா விட்டுட்டு திடீர்னு மாறனும்னா எப்படி… கொஞ்சம் கொஞ்சம் ஷாக் குடுத்து மாத்துவோம்…”

“என்னவோ இவ்வளவு நம்பிக்கையோட இருக்க பாப்போம்…சரி நீ ஏன் மீராவை சுந்தர்கிட்ட பேச வெக்க, கூட அனுப்ப எல்லாம் சான்ஸ் கொண்டுவர… அவளே இன்ட்ரெஸ்ட் இல்லாத மாதிரி இருக்காள்ள? ”

“ம்க்கும். …யாரு அவளா.. நீங்க வேற ஆதி, ஸ்கூல்ல இருந்து லவ்… அவ அதெல்லாம் எதிர்பார்ப்பா… சுந்தர்க்கும் ஓகே தான். ..என்ன இரண்டுபேருக்கும் கொஞ்சம் முட்டிக்கிச்சு. ஒருவகைல என்ன வெச்சு தான் அந்த சண்டைனே வெச்சுக்கோங்களே அண்ட் நாம லவ்லையும் அவங்களோட ஒரு ஹெல்ப் இருக்கு. அதனால தான் நானே அத சரி பண்ண பாக்கறேன்”

“என்ன சொல்ற நீ? ஸ்கூல்ல இருந்தா? மீராவா? இரண்டுபேரும் லவ் பண்றங்கன்னா அப்புறம் ஏன் அவன் அந்த வீடியோ அனுப்பிச்சு பிரச்னை பண்ணான்? அவங்க லவ் உனக்கு எப்படி தெரிஞ்சது? யாரு சொன்னது? அவங்க லவ்ல உன்னை வெச்சு எங்க இருந்து ப்ரோப்லேம் வந்தது.? நம்ம லவ்க்கு என்ன ஹெல்ப் பண்ணாங்க?” என அவன் விடாமல் கேள்வி கணைகளை தொடுக்க

“அய்யோ ஆதி பொறுமையா… கொஞ்சம் ரிலாக்ஸ். எல்லாமே உங்ககிட்ட சொல்றேன். எதுல இருந்து சொல்லலாம்? ” என யோசித்து

“சரி சொல்றேன். போன தடவை நாம ஊருக்கு வந்தபோது நான் நைட் தோப்புக்குள்ள போனேன். அங்க இரண்டு பேர் பேசிட்டு இருந்தாங்க. அவங்க பொண்ணு நம்ம வீட்ல இருக்கற பையனை லவ் பண்றத பத்தி அதனால அவனை கொலைபண்றதை பத்தி பேசுனாங்கன்னு சொன்னேனா?”

“ஆமா”

“நான் அத உங்ககிட்ட சொல்லி அத நீங்க தான்னு நினச்சு ரொம்ப பதறினேன். அன்னைக்கு எனக்கே தெரியாம எனக்கு உங்களை எவ்ளோ புடிக்கும்னு எல்லாம் சொன்னேன். அப்புறம் வீட்டுக்கு வந்துட்டு நீங்க எனக்கு நெத்தில கிஸ் பண்ணிட்டு குட் நைட் சொல்லிட்டு போனீங்களா? எனக்கு அதுக்கப்புறம் என்னவோ ஆயிடிச்சு. அத ரசிச்சேனே? சந்தோஷப்பட்டேன்? என்ன நடந்ததுன்னே எனக்கு தெரில.”

அவன் அன்றைய நினைவில் மெலிதாக புன்னகைத்துக்கொண்டே மீண்டும் அவளைஅணைத்து அதே போல் நெற்றியில் முத்தமிட அப்டியே இறங்கி கண்ணில் என முன்னேற திவி “ஆதி, ப்ளீஸ் அப்புறம் எனக்கு ப்லொ வராது. இப்படியெல்லாம் நீங்க பண்ணா எனக்கு பேச்சே வராது. நோ கதை ” என மெதுவாக கூற அவனும் அவளை விடுத்து நெற்றியோடு முட்டிவிட்டு “சரி, இப்போ சொல்லு, ஊர்ல நம்ம வீட்டுக்கு போயி மொத்தமா கவனிச்சுக்கறேன்.” என அவளும் சிரித்துவிட்டு

“அன்னைக்கு ராத்திரி தான் எனக்கு புரிஞ்சது உங்கள நான் லவ் பன்றேன்னு. ஏதோ ரொம்ப சந்தோசமா இருந்தது. ஆனா எனக்கு உங்கள பாக்கவே கூச்சமா இருந்தது. அதனால தான் அதுக்கு அடுத்த நாள் உங்க கண்ணுல படமா ஓடிட்டேன். ஆனாலும் அந்த கொலை பண்ற விஷயம் எனக்கு உறுத்தலாவே இருந்தது. நீங்க வேலையா இருந்தீங்க. அதோட சேத்தி எந்த அளவுக்கு நான் சொன்னதை சீரியஸ எடுத்தீங்கன்னு தெரில. சோ நானே முடிஞ்சளவுக்கு கண்டுபுடிக்கலாம்னு தான். சுபி, அனு, நந்துவை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டேன். கோவில் விசேஷம். எப்படியும் ஊர்ல முக்கியமான ஆளுங்க எல்லாம் வருவாங்க. எனக்கு அந்த இரண்டுபேரோட முகம் ஞாபகத்துல இருந்தது. அதனால அங்க பாக்க முடியுதான்னு கவனிச்சேன். ஒன்னும் வேலைக்காவல. அப்புறம் சுபிக்கிட்ட சொல்லி உங்க ஊர்ல படிச்ச பொண்ணுங்க பெரிய இடத்து பொண்ணுங்க எல்லாம் பழக்கம் இருக்கா அவங்க எல்லாம் நல்லா பழகுவாங்களா?ன்னு கேட்டு விசாரிச்சு பாத்தேன். ஊரை சுத்தி பாக்கலாம்னு சொல்லி யாராவது மாற்றங்களான்னு பாத்தேன். மதியம் வரைக்கும் எதுவும் கிடைக்கல. அப்போதான் உங்ககிட்ட கால் பண்ணி பேசிட்டு உங்க ப்ரண்ட் போலீஸ் கிட்ட சொல்லுங்கன்னு சொல்லிட்டு வெச்சுட்டேன். அப்புறம் தான் அந்த வழியா மீரா அவங்க அம்மா பாத்து கூப்பிட்டாங்க. சுபி பேசிட்டு என்னையும் அறிமுகப்படுத்துனா. நந்து பக்கத்துல விளையாடிட்டு பால் தூக்கி எறிஞ்சான். என் மேல பட்டு நெறையா மண்ணாகிடுச்சு. அவங்க வீட்ல வாஷ் பண்ணிக்க சொல்லி உள்ள கூப்பிட்டாங்க. அப்புறம் காபி கொண்டுவரேன்னு போய்ட்டாங்க. ஹால்ல அவங்க குடும்ப போட்டோல பாத்தா கொலை பண்ண சொன்னவர் அதுல இருந்தாரு.

 

 

 

 

 

 

 

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: