ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72

72 – மனதை மாற்றிவிட்டாய்

அனைவரும் கல்யாண வேளையில் மூழ்கிவிட யாரும் சோபியை கவனிக்கவில்லை. திவி தாத்தா பாட்டியிடம் மட்டும் ஆதியிடம் கூறிய விஷயங்களை கூறிவிட்டு “என்ன தப்பு பன்னிருந்தாலும் நம்ம பேத்தி தான்னு நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு தான் உங்ககிட்ட இத சொல்லிருக்கேன். அவ திருத்தணும்னு ஆசை இருந்தா இத யாருகிட்டேயும் சொல்லாதீங்க. சொல்லமாடீங்கனு நம்புறேன்.இல்லை இப்டி பொய் சொல்லி பயமுறுத்தி இதெல்லாம் பண்ணணுமான்னு யோசிக்கிறீங்களா?” என கேள்வியாக பார்க்க அவர்கள் தெளிவடைந்தனர்.

தாத்தா ” கண்டிப்பா இல்லடா மா, இத நாங்க எப்பவோ கவனிச்சு பன்னிருக்கணும். இப்போ நீ பண்ற. நல்லவிஷயத்துக்கு தானே, நீ என்ன பண்ணனும்னு சொல்லு. அதுபடியே பண்ணிடலாம். எங்க பேத்தி அந்த பிரச்சனைல இருந்து மட்டுமில்லை இனிமேல் எந்த பிரச்னையும் வராத அளவுக்கு திருந்திடனும், வாழ்க்கையை புரிஞ்சுக்கணும். இப்போவது அதுக்கான வேலைய நாங்க பண்றோம்.”

திவி “அவளை அப்போ அப்போ நீங்க கொஞ்சம் சத்தம்போடுங்க. ஆனா அவளை வெறுக்கற அளவுக்கு இல்லை. கொஞ்சம் பீல் பண்ணி அவ வாழ்க்கையே அவளே கெடுத்துகிட்டங்கிற மாதிரி, அப்போதான் ரொம்ப கோபமா இல்லாம கொஞ்சமாவது இந்த பாசத்தை நாம மிஸ் பண்ணிட்டோமேன்னு அவ யோசிப்பா. அதே சமயம் பாட்டி ஈஸ்வரி ஆண்ட்டியையும் நீங்க விடாதீங்க. அவங்கள நல்லாவே திட்டுங்க. அவங்கநாள தான் அவங்க பொண்ணு வாழ்க்கை இப்பிடி கேள்விக்குறியா இருக்குனு அவங்க நினச்சு பயந்து வருத்தப்படணும். அப்போதான் அவங்க அடங்குவாங்க. முக்கியமா அம்மாவையும், பொண்ணையும் பேசவேவிடக்கூடாது. அனு, சுபி, அம்மு, அபி அண்ணி எல்லாரும் பாத்துக்குவாங்க தான். இருந்தாலும் நீங்க சோபிய கண்காணிச்சிட்டே இருங்க. அவளுக்கு வேணும்க்கிறதையும் நீங்க பாத்துக்கோங்க. அவ ரொம்ப பீல் பண்ணி தற்கொலை பண்ணிக்கவும் போகக்கூடாது. அதனால அவளை கவனமாவும் பாத்துக்கணும், ஒரு நாள் இரண்டு நாள் அதுக்குள்ள என்கொய்ரி வரும் அப்போ அவளுக்கு விஷயம் தெரிஞ்சுடும்.. அதுக்குள்ள அவளை யோசிக்கவெச்சாதான்.” என இன்னும் சில பல விஷயங்கள் கூறிவிட்டு திவி வெளியேறினாள்.

பின் அனைவரும் ஆளாளுக்கு வேலை பார்த்துக்கொண்டே பெண்கள் சலசலக்க அங்கே வந்த ஆதியும், சுந்தரும் ஒரே இடத்தில் வைத்தகண் வாங்காமல் காதல் பார்வை பார்க்க அவர்களை கண்ட சுபி சிரித்துக்கொண்டே கண்டும் காணாததுபோல திவியிடமும், மீராவிடம் கூற அவர்களை நிமிர்ந்து பார்த்தவர்களில் ஆதியை கண்டதும் அதிகாலை பகலவனை கண்ட பனிநிலவாய் நாணத்தில் தன்னை மறைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருந்தாள் திவி.

சுந்தரை கண்டதும் சுட்டெரிக்கும் சூரியனை பார்த்து முகம் சுருக்கி விலகிக்கொள்ள எழுந்து சென்றுவிட்டாள் மீரா. சுந்தரின் முகம் வாட அங்கிருந்து நகர்ந்துவிட்டான். இதை கண்ட அனுவும், சுபியும் திவியை அழைக்க கனவுலகத்தில் இருந்து வெளிவந்தவள் மீராவை அழைக்க போக அவள் வர மறுக்க அவளிடம் ஏதோ பேசி சரி செய்து அழைத்துவந்தாள். உள்ளே போகலாம் என்று பார்த்தாள் சேகரும், தாத்தாவும் அவனிடம் கணக்குவழக்கு பார்த்து சில பொருட்கள் வாங்க இன்னும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அதனால் அவன் அங்கேயே இருக்கவேண்டியதாகிவிட்டது. ஆனால் அவனது கவனம் இங்கில்லை என்பதை அறிந்தான் ஆதி. இருந்தும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. திவி மீராவிடம் ஜூஸ் குடுத்து தனக்கு வேலை இருப்பதாக கூறி அனைவர்க்கும் கொடுக்க சொல்ல அவளும் மறுக்காமல் அனைவர்க்கும் குடுக்க இவள் வரும்போதே சுந்தர் எழுந்து போன் பேசப்போவது போல பாவனை செய்துவிட்டு சன்னல் அருகில் சென்றுவிட மீராவும் கண்டுக்காதது போல வேலை மிச்சம் என சுந்தருக்கு கொடுக்காமல் திரும்ப திவி கொஞ்சம் கூட பாரபட்சமே பார்க்காமல் அனைவர் முன்னிலையிலும் “மீரா சுந்தருக்கு குடுக்க மறந்துட்ட பாரு.. அவரு சன்னல்கிட்ட நிக்கறாரு. என்ன சுந்தர் அவ தான் குடுத்திட்டு இருக்கால்ல, நீங்க அங்க போயி மறைஞ்சு நின்னா அவளுக்கு எப்படி தெரியும். மொதல்ல ஜூஸ் குடிச்சிட்டு அப்புறம் போன் பேசுங்க. வெளில வேற தாத்தா உங்கள அனுப்பணும்னு சொன்னாரு… லஞ்ச் ரெடியாக இன்னும் டைம் ஆகும். சோ இப்போதைக்கு ஜூஸ் தான்.. மீரா அவருக்கும் குடுத்திட்டு வா.” என அவள் கூறிவிட்டு அடுத்து உள்ளே சென்றுவிட்டாள்.

சுந்தர், மீரா இருவருக்கும் தர்மசங்கடமாக போய்விட்டது. மீரா மனதில் இப்டி எல்லார் முன்னாடியுமா கத்துவா? இப்போ குடுக்காம எப்படி போறது என திவிக்கு அர்ச்சனை செய்துவிட்டு சுந்தரிடம் நடந்தாள். சுந்தரோ மீராவின் ஒதுக்கம் கவலை என்றிருப்பினும் அவளை காண ஆவல் இருந்ததால் திவி ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பை எண்ணி அவளுக்கு நன்றி கூறினான். இருந்தாலும் முறைத்துக்கொண்டே வரும் மீராவை கண்டவன் எதுவும் பேசாமல் விலகவும் முடியாமல் அப்டியே நின்றான். அவனின் நிலை கண்டவள் இப்போ எடுக்கப்போறியா? இல்லை போய்டவா? என பின் சிரித்திக்கொண்டே ஜூஸ் மட்டும் எடுத்துக்கொண்டான்.

“என்ன சிரிப்பு வேண்டிகெடக்கு உனக்கு?”

“சும்மாதான்…இல்லை ..இப்போ இப்டி பொண்டாட்டி மாதிரி மிரட்டி குடுக்கறியே.. இதுவே முழுசா உரிமை இருந்த எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன். ” என்றதும் அவளுக்கு அவன் தன்னை மனைவி என்றதில் மகிழ்ச்சியாக இருப்பினும் வெளியே காட்டிக்கொள்ளாமல்

“என்ன கொழுப்பா? நீ பண்ணி வெச்ச வேலைக்கு அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல்.” என்றதும் அவன் முகம் வாட அவன் அமைதியக நகர்ந்து விட்டான். மீராவுக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது…ரொம்ப திட்டிடமோ என எண்ணியவள் அவனுக்கு

இது தேவைதான்.. கொஞ்ச நாள் அனுபவிக்கட்டும். என இவளும் உள்ளே சென்றுவிட்டாள்.

பாட்டி சென்று சோபிக்கு சாப்பாடு கொடுக்க அவள் பாட்டி நான் அந்த மாதிரி பண்ணல, நம்ம வீட்டில யாரும் பணம் தரலேன்னு வெளில யார்கிட்டவாது கேட்கலாம்னு பணம் மட்டும் தான் கேட்டு வாங்க போனேன் என கூறிக்கொண்டு இருக்க பாட்டியும் முதலில் கோபமாக ஆரம்பித்து சரி நீ கடத்தல் இந்தமாதிரி வேலை செய்யலேன்னே இருந்தாலும் உனக்கு அப்படி என்ன பணத்தேவை. அந்த பணம்னு இல்ல எந்த பணத்தயாவது  நீ உருப்படியா ஒரு விஷயத்துக்காவது செலவு பண்ணிருப்பியா ? அப்படி சொத்து சேத்தி வெச்சோ ஆடம்பரமா இருந்தோ அம்மாவும் மகளும் அப்படி என்னதான் சாதிச்சிங்க. இப்போ உன்ன யாரு ஜெயிலுக்கு போகாம காப்பாத்தறது. எல்லா ஆதாரமும் தெளிவா காட்டுது. என் பேத்தி செலவு பண்ரா பிடிக்கலேன்னா கோபமா நடந்துக்குவா இதுவரைக்கும் தான் நான் நினைச்சது. ஆனா நீ குடும்பத்துல இருக்கறவஙகளுக்கே பிரச்சினை குடுத்து பலிவாங்கற அளவுக்கு போவேன்னு யாரும் எதிர்பார்க்கல. அந்த உண்மை தெரிஞ்சு தாத்தா எவ்வளவு கோபப்பட்டாங்க தெரியுமா..இதுக்குமேல பணம் தரவேண்டாம். நாம யாரும் அவகிட்ட பேசவேணாம் நீ அதுக்கப்புறம் திருந்திடுவேன்னு பேசி தான் உங்கள வீட்ல இருக்கவே ஒத்துகிட்டாங்க.. ஆனா நீ என்ன பண்ணிவெச்சிருக்க. உன்ன சத்தம்போட்டாலும் மத்தவங்க யாரும் குறை சொல்லிடகூடாதுன்னு தான் இருந்தோம். தாத்தா உன்ன திட்டுனாலும் வெளில யார்கிட்டயும் விட்டுக்குடுத்ததேயில்ல. இப்போ உன்ன ஊரே குறை சொல்லி நம்ம குடும்பமே தலை குனியற மாதிரி வந்து நிக்கற. என்ன பண்ணமுடியும் சொல்லு. என அவரும் அழுது புலம்பிக்கொணடே சாப்பாடு ஊட்ட அவள் அமைதியாக சாப்பிட்டு விட்டு பாட்டியிடம் கேட்டு அழுதுகொண்டே அவர் மடியில் படுத்துக்கொண்டாள்.

மாலையில் யாரோ ஒருவர் வர சுந்தர் அவரை அழைத்து விசாரிக்க திவியை பார்க்க வந்ததாக கூற அவன் உள்ளே அழைத்துவந்தான். வருவது யாரென கண்டுகொண்ட திவி மகிழ்ச்சியுடன் சென்று “ஹே மதன், வா வா வா. ..எப்படி இருக்க? இப்போ வரேன்னு சொல்லவேயில்லை…ரூட் தெரிஞ்சதா? சொல்லிருக்கலாம்ல யாராவது அனுப்பிச்சு கூட்டிட்டு வரசொலிருக்கலாம். எப்போ கிளம்புனா? ஊர்ல அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க? ” என

அவனோ “கொஞ்சம் மூச்சு வாங்குமா. நீ திருந்தவேமாட்டேயா? எவ்வளோ கேள்வி?”

அவளோ அவனை முதுகில் அடித்துவிட்டு “நான் திருந்தறஅளவுக்கு என்னடா பண்ணேன்? உன்ன இரு. ..” என ஆதியை அழைத்து அறிமுகம் செய்துவைத்தாள்.

“மதன், இவரு என் ஹஸ்பண்ட் ஆதி, அவரு ஆதியோட கசின் சுந்தர் அவரோட செகண்ட் சிஸ்டர்க்கு தான் இப்போ கல்யாணம்.” என அவர்கள் கைகுலுக்கி கொள்ள

“இவன் மதன், என் ஸ்கூல் பிரண்ட், டிடெக்ட்டிவ் ஏஜெண்சி வெச்சு ரன் பண்ணிட்டு இருக்கான். ரொம்ப நல்லவன் ஆனா கொஞ்சம்னு சொன்னா போதும். ரொம்ப சேட்டை, மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பு. பொண்ணுங்ககிட்ட அதிகம் பேசவேமாட்டான். college co-ed ல படிச்சா இவனை கடத்திட்டு போய்டுவாங்கன்னு இவனுக்கா ஒரு எண்ணம், வேணும்னே வேற ஹாஸ்டல், காலேஜ், கோர்ஸ் எல்லாமே மாத்திட்டு போனான். சீன்.. பட் என்னோட பெஸ்ட் பிரண்ட்.” என அவர்களும் சிரித்துவிட்டு

“திவி பில்ட்டப் பண்ற அளவுக்கு எல்லாம் இல்லைங்க. அது வேற விஷயம்…ஒரே காலேஜ் போலாம்னு சொல்லி வேற மாறிட்டதால இப்டி சொல்லிட்டு இருக்கா..நீங்க எதுவும் பெருசா எடுத்துக்காதீங்க ” என அவன் எப்படி அழைப்பது என தடுமாற “ஜஸ்ட் ஆதின்னே கூப்பிடுங்க” என ஆதி கூற திவி “ஆமா இரண்டுபேருக்கும் பெருசா ஏஜ் டிப்ரெண்ட் இருக்காது… நான் எதுவும் அடிக்கமாட்டேன், பயப்படாம சும்மா பேர் சொல்லியே அவரை கூப்பிட்டுக்கோ..இப்போ இது ஒரு விஷயமா?” என வினவ இருவரும் அவளை ஒருசேர திவியை முறைக்க “பேசவேவிடமாட்டேயா? ” என ஆதியும் “அடங்கமாட்டியா? நீ” என மதனும் கேட்க அவள் சிரித்துவிட்டு “அப்புறம் நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல. அதுக்குள்ள பேர் பிரச்சனை வந்திடிச்சா? எனக்கு பதில் சொல்லு ” என

அவனும் “சரி சரி, நான் நல்லா இருக்கேன். அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்க, உன்னை கேட்டதா சொல்லச்சொன்னாங்க, சொல்லாம கொஞ்சம் சர்ப்ரைஸ் தரலாம்னு தான் வந்தேன். என் வேலைக்கு திறமைக்கு ரூட் கண்டுபுடிக்கறதா கஷ்டம்? கேஸ் விஷயமா ஊருக்கு போயிட்டு நேரா நேத்து கிளம்பி ஈவினிங்கே இங்க வந்துட்டேன் .” என

திவி “என்ன நேத்து ஈவினிங் ஆஹ், அதுவும் இங்கேயா? அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லல, பேசல? எங்க போன இன்னைக்கு.” என கேட்க

“நேத்து நான் இத்தனை வருஷம் கழிச்சு பிரண்ட பாக்கபோறோம், சந்தோசமா சர்ப்ரைஸ் தரலாம்னு வந்தா எனக்கு தான் ஷாக். இங்க வந்து பாத்தா ஒரு ஆக்ஷன் சீன் ஓடிட்டு இருந்தது. வந்தவன் அப்டியே யு டர்ன் எடுத்து ஊருக்கு கிளம்பி வீட்டுக்கு போயிட்டு அம்மா அப்பா எல்லாரையும் கடைசியா பாத்திட்டு சொல்லிட்டு மனதைரியதோட திரும்ப வந்திருக்கேன்.”

“ஆக்ஷன் சீனா?” என்ன சொல்ற” என திவி குழம்பிப்போய் கேட்க மதனின் செயலை கண்ட சுந்தர் நேத்து நடந்ததை சரியாக யூகித்து “நீ சோபனாவை அடிச்சத சொல்றாங்கன்னு நினைக்கிறேன்?” என மதனை பார்க்க “ரொம்ப கரெக்ட் மச்… சுந்தர், கரெக்ட்டா சொன்னீங்க. இன்னும் இந்த ரவுடி தனத்தை இவ விடாம இருக்கா, எப்படி ஆதி சமாளிக்கிறீங்க? புடிச்சு கட்டிபோடுங்க.” என குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆதி சிரித்துக்கொண்டே “சமாளிக்க கொஞ்சம் கஷ்டம் தான்”, இருந்தும் விட்டுக்கொடுக்காமல் “பட் பரவால்லை கட்டியெல்லாம் போடவேண்டாம். சொன்னா கேட்டுப்பா” என ஆதி கூற திவி மெலிதாக புன்னகைக்க “ஆனா திவி நீ நேத்து பண்ண அதிரடில பாரு வீட்டுக்கு வந்தவன் பாவம் பயந்து ஓடிட்டான்.” என

மதனை முறைத்து கொண்டே மேல இருந்து கீழ் வரை பார்த்த திவி “நீ பாவமா?, என்ன கட்டிப்போட சொன்னேல்ல? சரி நல்லா யோசிச்சு சொல்லு என்னை கட்டிபோட்டரலாமா?” என அவள் கேட்ட தினுஷில் ஆதி சுந்தர் இருவருக்கும் புரிந்துவிட்டது மதன் திவியிடம் ஏதோ வசமாக சிக்கிக்கொண்டான் என பார்த்துக்கொண்டே இருக்க மதனும் அதற்குள் யோசித்துவிட்டு “சரி, சரி, அதெல்லாம் வேண்டாம் பிரண்டா போய்ட்ட, விடு, மன்னிச்சிடறேன் ” என அவள் மீண்டும் “எது, நீ என்னை மன்னிக்கிறியா?” என மிரட்டுவது போல பேச ஆதி “ஹே போதும்மா, ஏற்கனவே பாவம் நேத்தே பயந்து போயிட்டு இப்போதான் வந்திருக்கான். அதுக்குள்ள…” என

திவி “யாரு இவனா? என்றவள் மதனிடம் திரும்பி உண்மைய சொல்லு நீ பயந்து ஓடுனியா? இல்ல உன் ஆளு அடிவாங்குனத பாக்கமுடியாம பீல் பண்ணிட்டு வர கிளம்பிபோய்ட்டியா? ” என மதன் மீதி இருவரை திகைப்போடு பார்க்க ஆதியும், சுந்தரும் ஒரு சேர “என்ன ஆளா? ” என மதனை நோக்க அவன் திவியை தடுக்க தவித்துக்கொண்டிருக்க அவளோ இவனை கண்டுகொள்ளாமல் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் வரவில்லை என்றறிந்த பின்னர் ஆதி, சுந்தரிடம் மட்டும் விஷயம் கூறினாள். “ஆமா, மதன் சோபனாவை லவ் பன்றான், நான் இவன்கிட்ட அவளை பத்தி சொல்றதுக்கு முன்னாடி போட்டோ அனுப்பிச்சேன். கால் பண்ணலாம்னு பாத்தா அப்போ யாரோ கூப்பிட்டாங்க. வேலை வேற. சோ உடனே கிளம்பிபோய்ட்டேன். அப்புறம் அடுத்த நாள் தான் இவனை கூப்பிட்டு கொஞ்சம் விஷயத்தை சொல்லி அவளை கண்காணிக்க சொல்றேன். சார் என்கிட்டேயே நேத்து நீ அனுப்பிச்ச போட்டோ பாத்தத்துல இருந்தே எனக்கு பிடிச்சிருந்தது. லவ் பண்றேன். நீ ஏதாவது பண்ணுனு டார்ச்சர் வேற. அதனால தான் மேடம அடிச்சதும் உங்களுக்கு பீலிங் வந்திடுச்சோ.” என இருவர் முன்னிலையிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்டி விஷயத்தை உடைத்த திவியை மதன் மனதிலேயே சபிப்பதா? இல்லை இப்போ இவர்களுக்கு பதில் கூற வேண்டுமா என குழம்பமாக இருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

73 – மனதை மாற்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாரோ இவன் என் காதலன் – 2யாரோ இவன் என் காதலன் – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி இரண்டாவது பகுதி. முன்பே சொன்னது போல முன்னோட்டமாக இரண்டு பகுதிகள் மட்டும் காதலர் தினத்திற்காகப் பதிவிட்டேன். விறுவிறுப்பும் பரபரப்பும் காதலும் நிறைந்த கதை இது. உங்களை

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 5கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 5

ரம்யாவும் விஷ்ணுவும் அந்த சாலையில் நடந்துவர தென்றல் அவர்களை தொட்டுபார்த்து இது கனவா இல்லை நிஜமா என உறுதிபடுத்தி சென்றது. “விஷ்ணு தம்பி சலாம் மலேக்கும்“ என அவர்களின் இடதுபுறத்தில் இருந்து ஒரு குரல். இது பாய்தான் என்பது குரலால் அறிந்தான்.

KSM by Rosei Kajan – 16KSM by Rosei Kajan – 16

  அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… Download Best WordPress Themes Free DownloadDownload Premium WordPress Themes FreeDownload WordPress ThemesDownload Best WordPress Themes Free Downloadfree download udemy paid coursedownload mobile firmwareDownload WordPress