Tamil Madhura கதை மதுரம் 2019,சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 5

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 5

பாகம்-5

காற்றெல்லம் உன் வாசம் இப்பதால் தான்
அவன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான!
கலைந்து செல்லும் மேகங்கள் எல்லாம்
அவளிடம் கதை சொல்லிக் கொண்டிருகின்றன!

 

கல்லூரி வந்துவிட, வண்டியை நிறுத்தி விட்டு ஸ்வேதாவும் ஸ்ருதியும் கீழே
இறங்கினர்.

“ஆமாம் உனக்கு காலையில் என்ன கிளாஸ் ஸ்வேதா?”

“மதியானம் வரை பிராக்டிகல்ஸ் தான்”

“ம், சரி” என்றவள் தலையில் தட்டிக் கொண்டாள்.

“ஏன் டீ தலையில் அடித்துக் கொள்கிறாய்?”

“பத்திரிக்கையில் சப் எடிட்டர் வரச் சொன்னார்?”

“எதற்கு?”

“எதோ சர்வே எடுத்து ஆர்டிக்கள் வேண்டுமாம்”

“உனக்கு சர்வே எடுக்கிற வேலை எல்லாம் பிடிக்காதேடீ”

“சப் எடிட்டர் சொல்கிறாரே.. தட்ட முடியாது”

“வண்டி வேண்டுமா? இல்லை ஆட்டோவில் போகிறாயா?”

“வண்டியிலேயே போய் கொள்கிறேன் .சாவியை கொடு”

“காலையிலேயே கிளம்புகிறாயா என்ன?”

“இல்லை டீ காலையில் முக்கியமான கிளாஸ் இருக்கிறது கட் அடிக்க
முடியாது. மதியம் போய் கொள்கிறேன்”

“ம்,சரி.
ஆமாம் எங்கே சர்வே எடுக்கப் போகிறாய்?”

“புரூக்ஸ் பீல்ட் மாலில் எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்”

“நைஸ் சாய்ஸ்”

“லேட்டாச்சு கிளாஸிற்கு கிளம்பலாம்”

“போகலாம்”

இருவரும் தனித்தனியே பிரிந்து தங்கள் கிளாஸிற்கு சென்றனர்.
டூவிலரை பார்க்கிங்கில் போட்டுவிட்டு இறங்கியவள் தினச்சுடர் ஐடி கார்டை
எடுத்து மாட்டிக் கொண்டாள். மாலின் உள்ளே சென்று ஒவ்வொருவரிடமும்
தன் சர்வேக்கான கேள்வியை சொல்லி பதிலை வாங்க ஆரம்பித்தாள்.
அனைத்து வயதினரிடமும் கேள்வியை கேட்க ஆரம்பித்தாள்.
வயதான ஒரு தம்பதியினர் ஆரெம்கேவி யிலிருந்து வெளியே வந்தனர்.
அவர்களிடம் சென்று தன் கேள்வியை கேட்டாள்.

“நான் தினச்சுடர் பத்திரிக்கையில் இருந்து வருகிறேன்”

“சொல்லுங்கள்”

“நான் ஒரு சர்வே எடுக்க வந்துள்ளேன்”

“ஓ!”

“மார்டன் ஆர்ட், டிரெடிசன்ல் ஆர்ட் இரண்டில் உங்களுக்கு எது பிடிக்கும்”
அந்த வயதான தம்பதியினரில்.. பெண்மணி “எனக்கு இரண்டு வகை
ஓவியங்களிலும் ஈடுபாடு இல்லை” என்று புன்னகையுடன் சொல்ல…

“நான் என் மனைவியை பின்பற்றுகிறவன்” என்று அந்த பெண்மணியின்
கணவர் புன்னகையுடன் முடிக்க

“ஓ” என்ற புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றாள் ஸ்ருதி.
பல்வேறு வயதினரிடம் தன் கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றுக்
கொண்டு நகர்ந்து சென்றாள் அவள்.

ஒருவரிடம் கேள்வி கேட்டுவிட்டு நகர்ந்து செல்லும் போது புத்தகக்
கடையிலிருந்து வெளியே வந்த இளைஞனிடம் மோதி நிமிர்ந்தாள் ஸ்ருதி.
ஆண்மையின் கம்பீரம் என்பார்களே அதைப் போல் நிமிர்ந்து நின்றவனை
இரசனையுடன் ஏறிட்டாள் ஸ்ருதி.

“ஸாரி” புன்னகையுடன் மன்னிப்பு கேட்டாள்

“ம்ம்……” என்று கையை மார்பின் குறுக்கே கையை கட்டிக் கொண்டு நின்றான்
ஸ்ருதியோ புருவத்தை உயர்த்தினாள்.

“நான் தான் ஸாரி கேட்டுவிட்டேனே”

“ஸாரி கேட்டுவிட்டால் சைட் அடிக்கலாமா?”

“வாட்”

“இல்லை என்று சொல்ல முடியுமா?”

“ஆமாம் இவர் பெரிய ஹீரோ”

“ஹீரோ மாதிரி இருந்தால் கூட சைட் அடிக்கலாம்”

“ஸ்……. கடவுளே இப்ப என்ன தான் சொல்ல வருகிறீர்கள்”

“நீங்கள் என்னை சைட் அடித்தீர்களா இல்லை…”

“பார்ப்பதற்கு கொஞ்சம் சுமாரா இருக்கிறீர்கள் என்று…”

“சுமாரா…”

“இல்லை ஸ்மார்டா இருக்கிறீர்கள் என்று பார்த்தேன். அது அவ்வளவு பெரிய
குத்தமா”

“சரி பார்த்தீர்கள் இல்லையா? கமெண்ட் கொடுங்கள்”

“ஐயோ பாஸ் தெரியாமல் பார்த்துவிட்டேன். தயவு செய்து விட்டுவிடுங்கள்.”

தன்னை நோக்கி தன் சுட்டு விரலை நீட்டி, “உனக்கிது தேவையா ஸ்ருதி.
இனிமேல் எவனாவது ஸ்மார்டாய் இருந்தால் பார்ப்பாயா.” தன் தலையில்
தானே குட்டிக் கொண்டாள்.

அவளின் செய்கையை பார்த்து அவனின் புன்னகை மேலும் விரிந்தது.

“தினச்சுடரில் வேலை செய்கிறீர்கள் போல..” புன்னகையுடன் வினவினான்.

ஆமாம் ஒரு சர்வே எடுத்து அதை ஆர்ட்டிக்கலாக எழுத வேண்டும்.

“எங்களிடம் எல்லாம் சர்வே எடுக்க மாட்டீர்களா?”

“எடுத்துவிட்டால் போகிறது”

“உங்களுக்கு மார்டன் ஆர்ட் பிடிக்குமா, இல்லை டிரடிசனல் ஆர்ட் பிடிக்குமா?”

தலை தட்டி யோசித்தவன் பதில் சொல்லாமல் திரும்பினான்.

“ஹலோ கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்”

“கேள்வி கேட்கும் உரிமை உங்களுடையது”

“பதில் சொல்லும் உரிமை என்னுடையது”

“அய்யோ கடவுளே முடியலை கண்ணைக்கட்டுது”

“கண்டிப்பாக பதில் வேண்டுமா”

“சொன்னால் பராவாயில்லை”

“இட்லி சாம்பார் தமிழருக்கு பிடிக்குதான். அதற்காக நூடுல்ஸ் பிடிக்காமல்
போகுமா என்ன… சிக்கலாய் இருக்கிறது என்பதற்காக இரசித்து சாப்பிடாமலா
இருக்கப் போகிறோம்”

புன்னகையுடன் பதில் சொல்லிவிட்டு இயல்பாய் பாக்கெட்டில் கையைவிட்டு
நடந்து சென்றான் அவன்.

“ஸ்மார்ட்” மெல்ல முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்
ஸ்ருதி

உன் வாசமாவாள்!!!

1 thought on “சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 5”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 01

  கனவு – 01   தலவாக்கலை இலங்கை வங்கிக் கிளையின் அடகுப் பிரிவு. அச்சிறு அறையில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கொடுத்த சங்கிலியை நகைகளின் தரம் பார்க்கும் உரைகல்லில் தேய்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி.  

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16

16 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மாலையில் பார்க்கில் சந்திப்பதாக அனைவரும் முடிவெடுக்க ஆதர்ஷ் நேராக அங்கே வர வாசுவும் ஏதோ வேலையாக விக்ரமை காண சென்றவன் விக்ரம், சஞ்சு அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கே வரவும் சரியாக இருந்தது. பிரியா, ரஞ்சித்,

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22

  கனவு – 22   சஞ்சயனோடு வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு சஞ்சயனை யார் என்று போய் பார்க்கச் சொன்னாள். ஆனால் அவனோ,   “நீயே போய் பார் வைஷூ…” என்றான்.   “ஏன் நான் போய்