Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 9

 

பாகம் 9

காலையில் கிஷோர் அயர்ந்து தூங்குவதை கண்ணிமைக்காமல் பார்த்த தேனு அவன் நெற்றியில் முத்தம் பதித்தாள் பின் அவன் பிடியிலிருந்து தன்னை விளக்க முயன்றாள்…. “எங்கடி எஸ்கேப் ஆகுற கள்ளி” என அவளை இறுக கட்டியனைத்தான். “மாமு மணியாயிடுச்சு விடுடா என அவன் பிடியை தகர்த்தி குளியலறைக்கு சென்றுகுளித்து விட்டு வந்தாள்”….அனைவரும் எழும் முன்னரே அவள் எழுந்ததால் வசதியாயிற்று….கிட்சன் சென்று பால் காய்ச்சினாள் பின் ஒருவழியாக காபித்தூள் கண்டுபிடித்து காபி போட்டாள் …எல்லோருக்கும் டம்ளரில் ஊற்றி எடுத்தே சென்றாள்….அப்பொழுது எழுந்து வந்த சுமதி என்னமா அதுக்குள்ள எழுந்துட்டியா முகமெல்லாம் சிவந்திருக்கு என அவர்கள் சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியுடன் காபியை எடுத்துக்கொண்டாள்…மத்த எல்லாருக்கும் கொடுமா…கிஷோர்க்கு மட்டும் இனிப்பு கூடுதலா போடுமா அதான் அவனுக்கு பிடிக்கும் என தாய்மையோடு கூறினாள் சுமதி..ஆஷா எழுந்த்ரிடா என இவள் கூப்பிட அண்ணி  “என்ன ம்ம்ம் என நக்கலாய் அவளை விசாரித்தாள்” தேனு வெட்கத்துடன் சிரித்தபடியே  “ஏய் வாலு இப்பதான் காலேஜ் பைனல் இயர் வந்துருக்க அதுக்குளாள எப்படி பேசுற” என அவள் முதுகில் செல்லமாய் அடி வைத்தாள்…அதெல்லாம் எனக்கு தெரியாது அண்ணி எல்லாம் ஓகே ஆய்டுச்சா இல்லையா” என ஆஷா கேட்க….ஐயோ ஆளவிடுமா தாயே என ஓடினாள் தேனு.

கிஷோருக்கு அருகில் சென்றவள் “ஏய் மாமு பிரஷ் பண்ணிட்டு காபி எடுத்துக்கோங்க” என அவனை எழுப்ப அ முயன்றாள்.கிஷோர் போர்வையிலிருந்து முகத்தை திறந்து “ஐயோ கடவுளே இப்படி ஒரு இம்சையை கட்டிவச்சுட்டாங்களே 100 ரூல்ஸ் போடுறாளே …. இந்த மகாராணி சொல்றததான் நான் இனி கேட்கனும் வெளியில கலெக்டர் வீட்ல உங்க புருஷனா லட்சணமா நடந்துக்க ட்ரை பண்றேன்” என்றவனை “ஏய்ய்ய் நான் இம்சையா அப்படியே வச்சுக்கோ காலம் முழுக்க உன்னை இம்சை பண்ண தான் வந்துருக்கேன்”என்றவாறு அவன் கையில் பிரஷ்,குளிக்க டவல் சோப் எல்லாவற்றையும் எடுத்து கொடுத்துவிட்டு நைஸாக அவன் தலைமுடியை இழுக்க …அவன் ஆஆஆஆ வென அலறினான் வலிக்குதுடி விடு என்று அலறியவனை அந்த பயம் இருக்கட்டும் என சொல்லி ரூமை சாத்திவிட்டு கீழே வந்தாள்..கிஷோர் மனதில் ஆபிஸ்க்கு மணியாயிடுச்சு புது இடம் வேறு டைத்திற்கு போகணும் ஈவினிங் வந்து உன்னை கவனிச்சுக்குறேன்டி கள்ளி என முனகிக்கொண்டே கிளம்பலானான்…

அவனுக்காக எல்லாம் பார்த்து பார்த்து சமைத்தான் கிஷோர்க்கு பிடித்த மட்டன் குழம்பு,பட்டர் சிக்கன்,எக் பொடிமாஸ்  எல்லாவற்றையும் தன் அத்தையிடம் கேட்டு அவனுக்காக செய்து அசத்தினாள்.

ஆஷாவும் காலேஜ் கிளம்பி கீழே வந்தாள் அண்ணி சமையல் வாசம் ஆள தூக்குது எனக்கு பிடிச்சதெல்லாம் கேக்குறேன் செஞ்சு தருவீங்களா எனக்கேட்க கண்டிப்பா தரேன்டா என்றாள் தேனு…ஆஷாவை தலையில் குட்டினாள் சுமதி…இனியாச்சும் அண்ணிகிட்ட கத்துக்க …அப்பதான் வரப்போகுற மாப்பிள்ளைக்கு ருசியா சமைக்கலாம் என  செல்லமாய் அதட்ட…போமா அதை அப்புறம் பார்க்கலாம்எனக்கு இப்ப பசிக்குது இப்போ எதாவது வைமா சாப்பிட என்றாள்…உடனே ஆவி பறக்க இட்லி சாம்பார் கேசரியுடன் வந்தாள் தேனுஆஷா உணவை  ஒரு பிடிபிடித்துவிட்டு… அண்ணினா அண்ணிதான் என ஆஷா தேனுவின் கன்னம் கிள்ளிவிட்டு ஓகே பை நான் காலேஜ் கிளம்புரேன் என ஸ்கூட்டியை எடுத்து கிளம்பினாள் ஆஷா.

கிஷோர் உணவு உண்ண உட்கார்ந்தான் தன் ஓரவிழியால் அவளை சைட் அடித்தவாறு  மெய் மறந்தவனாய் கேசரி ல ஹனி போட்டிங்களாமா இப்படி தித்திக்குதே எனக் கேட்டான் …டேய் கிஷோர் கேசரில ஹனிலாம் போடமாட்டோம்டா சுகர் தான் போடுவோம் என சுமதி பதில் அளிக்க …வெட்கத்தில் தேனு நாக்கை கடித்தவாறு  உள்ளே சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள்…கிஷோருக்கு திருமணத்திற்கு போட்ட  விடுப்பு காரணமாக அதிகமான வொர்க் லோட் ஆனது மதியம் வரை ஓரளவு தன் வேலைகளை நெருக்கி முடித்தான்.தேனு வீட்டில் உள்ளவர்கள் பற்றி சுமதியிடம் விசாரித்து அவர்கள் குணங்களையும்,பிடித்தது பிடிக்காதவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.மதிய உணவு வேளை வந்தது கிஷோர் வயிற்றை பசிகிள்ளியது…தன் டிபன் கேரியரை பார்த்தவனுக்கு ஒரே ஆச்சர்யம் எல்லாம் அவனுக்கு பிடித்த ஐட்டங்கள்…எல்லாவற்றையும் ஒரு பிடிபிடித்தான் தன் மனைவி தன்னுடைய அம்மாவைப்போல அருமையாக சமைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தான்…எல்லா விதத்துலயும் என்னைய உன் அடிமையா ஆக்கிட்டியே ஹனி என அவன் வாய்.முனுமுனுக்க அவளுக்கு கால் செய்தான்…தேனு ஆசையாக அந்த மொபைல் எடுக்க “ஹனி என்ன பன்ற என விசாரித்துவிட்டு ….சாப்பாடு ரொம்ப நல்லா இருந்ததுமா வயிறு முட்ட சாப்பிட்டேன் என அவன் கூற இவள் வயிறு நிறைந்தது….உண்மையிலேவா நான் ஒன்னும் செய்யலை அத்தைதான் செஞ்சாங்க…..என்றாள் தேனு…..நடிக்காதடி எனக்கு எங்க அம்மா செய்யுற டேஸ்ட் தெரியாதா……என்றான் கிஷோர்….

ம்ம்ம் ரொம்ப சந்தோஷம்  எப்படியோ கண்டுபிடிச்சுட்டீங்க என சிரித்தாள் தேனு…நைட் இந்த ஹனிபீ ஹனிகிட்ட ஹனி எடுக்க வரும் சோ மல்லிப்பூ அல்வாவோட வாரேன் என இவன்கூற….போடா பொருக்கி என செல்லமாய் சிணுங்கிவிட்டு போங்க மாமு போனை வைங்க என வைத்துவிட்டு கொஞ்ச நேரம் இவன் பேசியதை எண்ணி எண்ணி சிரித்தாள்

 

“என்னோடு நீ உன்னோடு நான்,ஒன்றாகும் நாள்..!என்னோடு நீ உன்னோடு நான்,ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!என்னோடு நீ உன்னோடு நான்,ஒன்றாகும் நாள்..!சொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர;நெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே!இந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை;கை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே!சொல்லாத எண்ணங்கள்,பொல்லாத ஆசைகள்,உன்னாலே சேருதே;பாரம் கூடுதே..!தேடாத தேடல்கள்,காணாத காட்சிகள்,உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!புத்தம் புது வாழ்க்க,என்ன உன்னோட சேர்க்க!என்னோடு நீ உன்னோடு நான்,ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!என்னோடு நீ உன்னோடு நான்,ஒன்றாகும் நாள்..!

 

இந்த பாடலை தன் ப்ளேயரில் போட்டு கிஷோரை எண்ணிய வண்ணம் காதில் ஹெட்செட் வைத்தவாறு தூங்கிப்போனாள்…கிஷோர் சீக்கிரமே வேலைகளை முடித்து தன் புதுமனைவியைக்காணும் ஆவலோடு வீட்டிற்கு வந்தான் …அவள் அயர்ந்து உறங்குவதை பார்த்துவிட்டு பூனை போல் தன் ரூமிற்குள் நுழைந்தவன் ஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்தான் அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்…தேனு தூக்க கலக்கத்தில் ஏன்டா தூங்கும்போது கனவுலையும் என்ன ஹக் பன்ற கிஸ் பண்ற என்று உளறினாள்…இவன் சிரித்துக்கொண்டே எழுந்த்ரிடி லூசு உண்மையிலேயே நான் வந்துட்டேன்டி தங்கம் என சொல்ல ஷாக் ஆகி எழுந்தாள் ….சீக்கிரம் ரெடியாகுடா நம்ம படத்துக்கு போறோம் டிக்கெட்லாம் வாங்கிட்டேன் இந்த பூவை வச்சுட்டு வா என அவன் தற வெட்கத்தோடு வாங்கிக்கொண்டாள்…..பிஸ்தா க்ரீன்வண்ண புடவையில் ஆங்காங்கே ஜரிகை வேலைபாடு பார்க்கவே வானத்து நட்சத்திரம் தரையிறங்கி உலா வந்ததை போல் இருந்தது அவனுக்கு…..தலையை ப்ரி ஹேர் விட்டு பூவை அழகாக வைத்திருந்தாள்….இவன் பொண்டாட்டியை ஜொள்ளு விட்டவாறு படத்துக்கு போகனுமானு தோனுதுடி கண்ணுக்கு லக்சணமா அவ்ளோ அழகா இருக்க….அப்படியேயயயயய  என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்….வேகமா போய்ட்டு வந்து உனக்கு கட்சேரி தான்டி என இவன் சொல்ல…அவன் மார்பில் புதைந்து கொண்டாள்…அவன் அவள் முகத்தை தூக்கி வாடா கிளம்பலாம் வந்து மிச்சம் எல்லாம் என சிரித்துக்கொண்டே அவளைக்கூட்டிக்கொண்டு காரில் ஏறச்சென்றான்…இவள் கார் வேணாம் மாமு பைக் டிரைவ் போலாம் அதான் எனக்கு பிடிக்கும் என தேனு சொன்னாள்….புதுமணத்தம்பதி ஜோடியாய் பைக்கில் படத்திற்கு கிளம்பினார்கள்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: