காயத்திரியின் ‘தேன்மொழி’ – 7

பாகம் 7

முகூர்த்த புடவை நல்ல சிகப்பு நிறத்தில் ஜரிகை தங்க நிறத்திலும் நெய்த பட்டினை தன் தாய் தந்தையுடன் சென்று தன்னவளுக்காக தேர்வு செய்தான்….திருமணத்தன்று சர்ப்ரைஸாக பரிசளிக்க அழகான வைரம் பதிக்கப்பட்ட பெண்டன்ட் மற்றும் இயரிங் வாங்கிக்கொண்டான்…..பார்த்து பார்த்து…..ரசித்து ரசித்து அவளுக்காக ஒவ்வொன்றையும் தேர்வு செய்தான்….பின் ரிசப்ஸனிற்கு மயில் போன்ற தன் வருங்கால மனைவிக்கு அதன் நிறம கொண்ட அழகிய வொர்க் சாரியை தேர்வு செய்தான்.

திருமண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது

ராசாத்தி “ஏன் புள்ள தேனு இன்னும் 4நாளுல  கலெக்டர்பொண்டாட்டியாயிடுவ…அப்புறம் எப்படி எங்க நியாபகம்லாம் இருக்குமால…..கல்யாணம் கட்டிகிட்டா நட்புலாம்போயிடும்னு

சொல்லுவாகல்ல …அதுமாறிக்கி நம்ம 4பேரும் பிரிஞ்சுருவோமா”என்றவள் தேம்பி தேம்பி அழுதுவிட்டாள்…அவ்வளவுதான் தேனு,பேச்சி இருவர் கண்ணிலும் கண்ணீர் அவர்களும் கட்டிப்பிடித்து அழுதனர்

 

“நடக்க பழகையிலே

கையூன்றிய நட்பு

கைநழுவி விடுமோ

என்ற ஏக்கத்தில்

கண்களில் கண்ணீர்”

அடிப்பாவிகளா நீங்க அழுதது பத்தாம கல்யாண பொண்ண வேற அழ வைக்கிறீங்க என்று தோழிகளை பார்க்க வந்த சிவமூர்த்தி “ஏண்டி கிருக்கச்சி மாதிரி …அவள் எந்த ஊருக்கு மாற்றலாகி.கலெக்டரோடபோனாலும் …. உன்ன கல்யாணம் கட்டி அடிக்கடி கூட்டி போய் காட்டிட்டு வரேன்டி இது நம்ம சோலைமணி ஐயனார் மேல சத்தியம்”என ராசாத்தி தலையில் செல்லமாய் அடித்தான்.

மறுநாள் மாங்கல்யம் செய்ய நல்லநேரம் பார்த்து கொடுத்தனர்…..இவள் பதுமை போல் தன்னை அளவாக அலங்கரித்து தலைநிறைய பூச்சூடி கல்யாண கலை கட்டிய முகத்தோடு காத்திருந்தாள்.

பந்தல் நட்டு தேனு வீடே விழாக்கோலம் பூண்டது

 

“இதுதானா இதுதானா எதிர்பார்த்த நாளும் இதுதானா?

இவன் தானா இவன் தானா

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்

திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன் இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்

நான் எனக்கான ஒரு பாடல் பாடிகொள்வேன்

இதுதானா இதுதானா எதிர்பார்த்த நாளும் இதுதானா?

இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா? —

 

என்ற பாடலை தன் மொபைலில் கேட்டவாறு …..தன்னவனோடு ஊரார் அறிய அவன் சொந்தமாகப்போகும் நாளை எண்ணி அவனை எண்ணி ஏங்கினாள்.

திருமண நாள் வந்தது கலெக்டர் வீட்டு கல்யாணம் என்பதால் அவர் சொந்த ஊர் சென்னையிலேயே வைத்தனர்.கல்யாணமேடையில் கிஷோர் அவள் நல்வரவுக்காக காத்திருந்தான்…

தேனு தங்கச்சிலையென  மேலும் கல்யாண மெருகில் சற்று கன்னம் உப்பி,முகம் சிவந்து,வெட்கத்தோடு தலைகுனிந்த வண்ணம் மேடையை அடைந்தாள்.

“விழி வாள் கொண்டு

என்னை வெட்டவந்த தங்கதாரகையே

ரத்தக்கரையின்றி மனமோ

நித்தம் துடிக்கிறது

அள்ளிப்பருக உன் காதல் போதும்

உனை கொள்ளையடித்தே

கோடிகாலங்கள் வாழ்ந்திடுவேன் அன்பே!”

என கிஷோர் அவள் அழகில் சொக்கிப்போய் அவளையே பார்த்தான்…

ஆஷா”டேய் அண்ணா ஓவரா ஜொள்ளு விடாத அண்ணி அழகாத்தான் இருக்காங்க…..இப்ப கல்யாணம் நடக்கப்போகுது….மிச்ச ரொமான்ஸ் நம்ம வீட்ல போய் வச்சுக்கோ”என கிகிசுத்தாள்

போடி லூசு என தன் செல்ல தங்கையை மெல்ல காதைத்திருகினான் கிஷோர்.

இவள் அவன் அருகில் அமர்ந்ததும் நாணி புன்முறுவல் பூத்தாள் …அந்த அழகில் இவன் மையில்கற்களை கடந்தான்….

 

மனசுக்கு பிடிச்சவங்க சிரிக்கும்போது நம்மள அறியாம ஒரு சந்தோஷம் வரும்ல அதாங்க இது

 

“பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்

தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

 

உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்

 

உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

 

 

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

 

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

 

கோடு கூட ஓவியத்தின் பாகமே

 

ஊடல் கூட காதல் என்று ஆகுமே”

 

இப்படி அவன் மனம் அவன் காதலியே மனைவியாகப்போகும் தருணம் எண்ணியபடி மகிழ்ந்தான்….

ராமன் தன் ஒரே பெண்ணை கண்முட்ட கண்ணீரோடு தாரைவார்த்து கொடுத்தார்….

கிஷோர் “அங்கிள் அழாதீங்க நான் என்னோட தேனுவ உங்கள விட சந்தோஷமா வச்சுக்குவேன்…உங்களுக்கு பார்கணும்னு தோணுனா உடனே கூட்டிட்டு வந்து காட்டிடறேன்…..” என்று சொல்ல அவர் சற்று ஆறுதலானார்.

கெட்டிமேளம் முழங்க அவள் கழுத்தில் அவன் கைகள் நடுங்கியவாறு எல்லா கடவுளையும் வேண்டியபடி தன் மனைவியை எப்போதும் சந்தோஷமா வச்சுக்கணும் என்ற வேண்டுதலோடு தாலியைக்கட்டினான்.

இவள் தன் ஆசைக்காதலனை அடைந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணீர் பெருக ஆனந்தத்தோடு அவனைப்பார்த்தாள்…

ராசாத்தியை பார்த்து சிவமூர்த்தி கண்ணடித்து அடுத்து நம்ம கல்யாணம் என கண்ஜாடை காட்ட அவள் வெட்கிப்போனாள்…

நல்ல நேரம் பார்த்து மணமக்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்…

ஆஷா ஓடிவந்து “டேய் அண்ணா ஒரு1000 ரூபாய் போடு ஆரத்தி எடுக்குரேன்ல எனக்கேட்க….போடி என்றான்…

சின்னவள் அண்ணியிடம் ஒட்டிக்கொண்டு பாருங்கண்ணி போடமாட்றான் என சொல்ல “ஏங்க அவளுக்கு செய்யாம யாருக்கு செய்யப்போறீங்க” என க்கேட்டாள்…..உடனே தட்டில் 1000 போட்டுவிட்டான்.

ஆஷா செல்லமாக”என் அண்ணினா அண்ணிதான் என கண்ணம் கிள்ளி முத்தம் கொடுத்து  சென்றாள்

இருவரும் வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றனர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

Chitrangatha – 52, Chitrangatha – 53Chitrangatha – 52, Chitrangatha – 53

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. சீதாராம கல்யாணம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுன்னு உங்ககிட்ட இருந்து வந்த செய்திகளைப் படித்தேன். நன்றி நன்றி நன்றி. உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க மனமில்லாமல் இன்னைக்கு இரண்டு பகுதிகளை சேர்த்துத் தருகிறேன். படிங்க ,

Chitrangatha – 25, Chitrangatha – 26Chitrangatha – 25, Chitrangatha – 26

ஹாய் பிரெண்ட்ஸ், சித்ராங்கதாவால் எனக்குக் கிடைத்த நன்மை – தமிழுக்கு சமமாக தெலுகிலும் ஒலிக்கும் கோவக் குரல்கள். வழக்கமாய் திட்டுகள் கோபமூட்ட வேண்டும். ஆனால் உங்களது கோவக் குரல் எனக்கு அன்பு மொழியாகவே கேட்கிறது. இந்த முறை கொஞ்சம் பெரிய பதிவு.