Tamil Madhura கதைகள்,தொடர்கள்,ஹஷாஸ்ரீ,Uncategorized ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 69

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 69

69 – மனதை மாற்றிவிட்டாய்

அங்கே கூடியிருந்தவர்கள் ஆதி குடும்பத்தினர், சுந்தர் குடும்பத்தினர், ஈஸ்வரியின் அண்ணன் குடும்பத்தினர். ஈஸ்வரி தனது அண்ணன்களிடம் உதவி கேட்க இந்த பாவத்துக்கு எங்களையும் துணை போக சொல்றியா? என அண்ணிகள் கேட்க அவர்கள் குடும்பம் கைவிரித்துவிட தாத்தா பாட்டி சேகர் இவர்களிடம் கண்டிப்பாக உதவி கிடைக்காது என அவர்களுக்கே தெரிந்த பின்னர் பரமேஸ்வரனிடமும், சுந்தரிடம் கேட்க அவனோ “இருக்கற ஆதாரத்தை எல்லாம் பாத்தீங்கல்ல மா எப்படி அவ வெளில வரமுடியும். வேணும்னா உண்மைய ஒத்துக்க சொல்லுங்க. கொஞ்சம் தண்டனை வேணா குறையலாம். என கூறிவிட அமைதியாகிவிட சோபிக்கும் என்ன செய்வது என்று புரியாமலே இருக்க ஆளாளுக்கு அவளை திட்டி விட்டு நகர்ந்து சென்றனர். ஈஸ்வரியும் தனியாக சென்றுவிட அவளிடம் வந்த திவி “எந்த குடும்பம் நியாயம், தர்மம் பாசம்னு இருக்கும்னு நினச்சியோ அதுவே உனக்கு பிரச்சனை ஆயிடிச்சே சோபி. நாம பண்ண பாவமும், புண்ணியமும் நமக்கு திரும்பிவரும். சொந்த வீட்லையே யாரும் நம்பாம தனியா வாழறது எவ்ளோ கொடுமை அதுவும் தப்பே பண்ணாம.. அந்த வலிய எனக்கு குடுத்த. இப்போ உனக்கு அத நான் திருப்பி குடுத்திட்டேன். என அவள் கூறிய தோரணையில் வருத்தம் இருந்ததா? ஏளனம் இருந்ததா? என கண்டுகொள்ள முடியாமல் இருக்க சோபி அவளது அறையில் சென்று முடங்கினாள்.

அறையினுள் இருந்த திவி குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருக்க அவள் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த ஆதி மெதுவாக “தியா என்னாச்சு? ” என அவள் திரும்பி முறைத்துக்கொண்டே “ஏன் என்னாச்சுன்னு உங்களுக்கு தெரியாதா? உங்க மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க. அவளெல்லாம் ஒரு ஆளுன்னு அவ சொல்றத நீங்க காது குடுத்து கேட்டிட்டு இருக்கீங்க. அவ யாரு உங்கள குறை சொல்றதுக்கு. உங்களுக்கு எங்க போச்சு வாயி? திவி என் வைப் அவளை நல்லா பாத்துக்க எனக்கு தெரியும். என்னைவிட அவளை பத்திரமா பாத்துக்க புரிஞ்சுக்க யாராலயும் முடியாதுனு ஏன் சொல்லல. முன்னாடி எல்லாம் அப்படி தானே குடும்பத்துல, வெளில பாக்கறவன்னு எல்லார்கிட்டயும் இப்டி சொன்னிங்க. அப்போவே அப்டி சொன்னர்வரு இப்போ எதுக்கு அமைதியா அவ பேசுறத வாங்கிகிட்டு இருக்கீங்க? ஒருவேளை நான் உங்க வைப்னு மறந்திடுச்சோ?” என அவள் ஆவேசத்தில் கத்திக்கொண்டிருக்க அவன் அவளையே பார்க்க “நான் கேட்டுட்டு இருக்கேன்ல..எனக்கு வர கோபத்துக்கு…. என் ஆதியா இருந்திருந்தா இந்நேரம் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிருப்பாரு. எல்லாமே எகிறிருக்கும்… அவ பண்ண தப்புக்கு உங்கள திட்டிட்டு இருக்கா. நீங்க வாங்கிட்டு இருக்கீங்க…ஏன் அவளை திருப்ப எதுவும் சொல்லல…” என அவள் இன்னும் கொந்தளிக்க

அவன் அவள் அருகே வந்து அவள் தோளில் சாய்ந்தவாறு முகம் பதித்து அவளை அணைத்துக்கொள்ள, அந்த அணைப்பு அவனுக்கு நான் தேடிய என் இடம் கிடைத்துவிட்டது என நிம்மதியான ஒரு ஆதரவான இடம் தனக்கு இதுவே என உணர்த்தியது. அந்த அணைப்பில் வேகம் இல்லை, இறுக்கம் இல்லை, காமம் இல்லை. அதை இவளும் உணர்ந்ததாலோ என்னவோ அவனது முதுகை வருடிக்கொடுத்து “ஆதி என்னாச்சு மா?” என

அவன் கூறிய வார்த்தை “என் திவி எனக்கு திரும்ப கிடைச்சிட்டா. அவளை நான் இத்தனை நாளா ரொம்ப மிஸ் பண்ணேன்.. இனிமேல் அவ என்னை விட்டு போகமாட்டால்ல? ” என மேலும் இறுக்கிக்கொள்ள திவியும் அவனது பதிலிலும், கேள்வியிலும் தெரிந்த பரிதவிப்பு, இத்தனை நாள் ஏக்கத்தை உணர்ந்து அவனை விலக்கி அவனை நேராக பார்க்க அவன் மீண்டும் அதே கேள்வியை கேட்க அவனது நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்திரையை பத்தித்துவிட்டு “கண்டிப்பா எப்போவுமே போகமாட்டா. நீங்களே போகசொன்னாலும் அவ இல்லாம உங்களால இருக்கமுடியாதுனு உங்களுக்கு புரியவெப்பாளே தவிர நிச்சயமா போகமாட்டா.” என அவள் சொன்ன வார்த்தையில், அதன் உறுதியில் தன்னை மறந்தவன் அவளை ஆவேசமாக இழுத்து நெற்றியில் கண்களில் கன்னத்தில் இதழ் பதித்தவன் இறுதியில் அவளது கண்களை பார்த்து “லவ் யூ தியா” என அவளது இதழை தன் வசமாக்கினான். அவன் விடுவிக்க அவள் மூச்சுவாங்க இவனுக்கு அவளது நிலை கண்டு சிரிப்பு வந்தது. சிரித்த அவனை முறைத்துக்கொண்டே இரு அடிகளை குடுத்து எதுக்குடா இப்படி முரட்டுத்தனமா ஹாண்டில் பண்ற? என அவனும் அவளை பிடித்து கைகளை வளைத்து பின்னாளில் இருந்து இறுக்கிக்கொண்டு பிடித்தபடியே சொன்னான். இதெல்லாம் பனிஷ்மென்ட்டா செல்லம். என் லவ்வை புரிஞ்சுக்காம கொஞ்ச நாள் லூசு மாதிரி சுத்தனத்துக்கு, என்னை டார்ச்சர் பன்ரேங்கிற பேர்ல என் லவ்வ மட்டும் அதிகப்படுத்தி என்னை தனியா ஏங்க வெச்சதுக்கு, சத்தியம் பண்ணி உன்னை நீயே பணையம் வெச்சதுக்கு, அதுக்கப்புறமும் நான் கேக்காம இருந்திருந்தா என்னை அடிச்சவாது உண்மையை சொல்லாம பாவம் பாத்து விட்டு என்னை கொடுமைப்படுத்தினத்துக்கு, எல்லாத்துக்கும் மேல என் மேல இவ்ளோ லவ்வ வெச்சுகிட்டு என்கிட்ட நெருங்காம விலகி இருந்ததுக்கு என அவன் கூறிய ஒவ்வொரு காரணத்தாலும் அவனது காதல் வெளிப்பட இவளும் சிரித்துக்கொண்டே திரும்பி அவனை அணைத்துக்கொண்டாள். “சாரி ஆதி” என

இவனும் “நீ எதுக்குடா சாரி சொல்ற… உன்னை நான் தான் புரிஞ்சுக்கலேல்ல. சாரி” அவன் வருத்தம் கொள்ள

“அப்படி எல்லாம் இல்ல. நீங்க தான் என்னை ரொம்ப சீக்கிரத்துலையே கரெக்ட்டா புரிஞ்சுக்கிட்டிங்க. ஆனா நான் தான் ரொம்ப கொழப்பிவிட்டுடேன். அது உங்க தப்பில்லை.” என இன்னும் அவன் தெளியாமல் மன்னிப்பு கேட்க

அவள் “அச்சோ, என்ன ஆதி நீங்க ஏன் இப்போ செண்டிமெண்ட் சீன் ஓட்டிட்டு இருக்கீங்க…அதான் விடுங்கனு சொல்றேன்ல. எதுக்கு சும்மா சும்மா சாரி சொல்லிட்டு இருக்கீங்க? இனிமேல் இதுக்காக சாரி\ சொன்னிங்கன்னா அப்புறம் பாருங்க ” என முகத்தை சுருக்கிக்கொண்டு இருக்க இவனுக்கு சிரிப்புடன் அவள் தனக்காக பார்க்கிறாள் என எண்ணியவன் அவளை சீண்ட எண்ணி “என்ன பண்றதுடா எனக்கு சாரி சொல்லியே ஆகணும்னு தோணுதே…. எனக்கு கண்ட்ரோல் பண்ணமுடியாதே.. உன்னை நான் கஷ்டப்படுத்துனதுக்கு எந்த பனிஷ்மென்ட்டும் எனக்கு கிடைக்கல. சோ சாரி சொல்லிக்கறேன். ….” என அவள் கோபமாக திரும்பி அவனை காண அவன் சிரிப்பை கண்டதும் “ம்ம்கூம்…சரி அப்போ சாரி வேண்டாம் பனிஷ்மென்ட்டே தரேன்…” அவன் திருதிருவென விழிக்க “எப்போ எல்லாம் நீங்க பண்ணது தப்பு சாரி சொல்லணும்னு தோணுதோ அப்போ எல்லாம் இன்னைக்கு பண்ணமாதிரி வந்து என்னை ஹக் பண்ணிக்கோங்க…என்னை விட்டுட்டு போகவேகூடாது ” என அவனும் வாய்விட்டே சிரித்துவிட்டு “இப்படி ஒரு பனிஷ்மென்ட்னா இன்னும் பெருசா ஏதாவது பண்ணிருக்கலாமே. விட்டுட்டு கொஞ்ச நாள் ஓடிடவா? அப்போ இதைவிட பெரிய பனிஷ்மென்ட் கிடைக்கும்ல. உன் பனிஷ்மென்ட் சூப்பர் செல்லம்ஸ்.” என்று கூறி சில குத்துகளையும் வாங்கிக்கொண்டு “சரி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மொதல்ல வா.”

ஆதி “சொல்லு உனக்கு நான் உன்னை லவ் பன்றேன்னு எப்போ புரிஞ்சது?”

திவி கண்களை சுருக்கி அவனை பார்க்க என்னவென்று வினவிய ஆதியிடம் “இல்ல, எப்போ லவ் வந்ததுன்னு கேப்பிங்கனு பாத்தா எப்போ புரிஞ்சதாம்? கேள்வியை பாரு” என

அவனோ மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “எல்லாம் உனக்கு ஏத்தமாதிரி கேள்வி தான். உனக்கு என்னை எப்போவோ புடிச்சிருச்சு. அது எனக்கு நல்லாவே தெரியும்” என அவள் விழி விரித்து பார்க்க “உனக்கே தெரியாம உன்னோட ஒரு ஒரு செயல்லையும் காட்டிட்டு இருந்த. என்னோட பெரிய பிரச்சனையே நீ என்னை லவ் பண்ணுவியா மாட்டியா? வீட்ல ஒத்துக்குவாங்களா? கல்யாணம் நடக்குமா? இதெல்லாம் இல்லை. நீ என் லவ்வையும், உன் லவ்வையும் எப்போ புரிஞ்சுப்பன்னு தான். மத்தவங்க சொல்லி உன்னை அந்த வழில யோசிக்க வெச்சு லவ் வரலாம் ஆனா உனக்கா தோன்ற மாதிரி இருக்காது. உன் குணத்துக்கு நீயா புரிஞ்சுக்காம ஒரு விஷயம் வந்ததுன்னா பெருசா வேண்டாம்னு சொல்லாம அத ஏத்துக்குவ. ஆனா ரொம்ப குழப்பிக்குவ. அதுக்கு தான் வெயிட் பண்ணேன். இப்போ சொல்லு எப்போ புரிஞ்சது. ”

“‘நீங்க சொல்றதும் சரி தான். அத்தை உங்கள மிஸ் பண்ணவாங்க. உங்கள பத்தி பேசிட்டே இருப்பாங்க. அப்படியே உங்க எல்லா குணமும் மனசுல பதிஞ்சிருச்சு. உங்கள நேர்ல பாத்தபிறகும் கூட அதனால தான் புது ஆள்கிட்ட பழகுற மாதிரி பீலே இல்லை. நீங்க சொல்றமாதிரி எனக்கு உங்கள பிடிச்சிருக்கு போல. அன்னைக்கு உங்களுக்கு பிரச்சனை வரப்போகுதுனு நான் பதறுனது, அன்னைக்கு நைட் நீங்க என்னை ரூம்ல விட்டுட்டு போறதுக்கு முன்னாடி நெத்தில கிஸ் பண்ணிட்டு போனீங்க. எனக்குள்ள ஏதோ ஒரு பீல். என்னன்னு தெரில…அப்புறம் தான் உள்ளே வந்திட்டு தனியா இருந்து யோசிச்சு பாத்தேன். உங்க குணத்துக்கும், என்கிட்ட நீங்க நடந்துக்கிட்டது, பேசுனது எல்லாமே யோசிச்சு பாத்ததும் புரிஞ்சிடிச்சு. அப்புறமும் கூட எனக்கு உங்கள எவ்ளோ புடிக்கும்னு யோசிக்கல. நீங்க ஊருக்கு கிளம்புன அன்னைக்கு, ஊர்ல நான் தனியா இருந்த போதுதான் எனக்கே புரிஞ்சது. நான் உங்கள எவ்ளோ லவ் பண்ணறேன். மிஸ் பன்னேன்னு. இருந்தாலும் நீங்க என்னை ரொம்ப திட்டுவீங்க மொதல எல்லாம். எனக்கு என்ன தப்பு பண்ணோம்னு இப்பிடி மொறச்சிட்டே இருக்காருன்னு தான் தோணும். சரி மன்னிச்சிடலாம்னு பாத்தா சில நேரம் நீங்க என்னை திட்றதே புரியாது. அதனால யோசிச்சிட்டே போய்டுவேன்…ஒருவேளை அதனால கூட லவ் ரேஞ்சுக்கு எல்லாம் நினைக்க தோணலையோ என்னவோ?”

அவனும் ஆமோதித்து “அவளை பார்த்த நாள் நடந்ததது, அவனது மனநிலை இருந்தும் அவளை தவறாக முழுதாக எண்ணாமல் இருக்கலாம்னு நினச்சது, அந்த நேரம் பார்த்து அவள் தோழியிடம் போனில் கூறிய அறிவுரை அதை கேட்டு தவறாக நினைத்தது எல்லாம் கூற”

அவள் சிரித்துக்கொண்டே அன்று ஆபீஸில் நடந்த உரையாடல், அவள் தோழியுடன் பேசியது பற்றி கூறினாள். “எப்பிடி எல்லாம் சூழ்நிலை அமைஞ்சிருக்கு.” என யோசிக்க

அவனும் ஆமோதித்து இருவரின் சீண்டலும், அதற்கான காரணங்களும் பேசி சிரித்துக்கொள்ள இறுதியாக அந்த பேச்சு அவர்கள் நிச்சயதார்த்தம், திருமணம் அதில் நடந்த பிரச்னைகளில் வந்து நின்றது. ஆதி தயங்க திவி விடுங்க ஆதி அத பத்தி எதுக்கு பேசிட்டு… என ஒதுக்க ஆதி “இல்லடா, எனக்கு தெரியணும். இதுவரைக்கும் நாம பேசுனது எல்லாமே சந்தோஷமான விஷயம். அதனால பெருசா பாதிப்பு இல்லை. அது இல்லாட்டியும் நானே கொஞ்ச நாள்ல புரிஞ்சிட்டு இருந்திருப்பேன். ஆனா உன் பீலிங்ஸ், அந்த நேரத்துல நீ என்ன நினைச்சன்னு நான் படிச்சபோது தான் எனக்கு புரிஞ்சது. உண்மையான புரிதல் சந்தோசத்தை புரிஞ்சுக்கறது இல்லை. கஷ்டத்தை, வலியை புரிஞ்சுக்கறது. அது புரிஞ்சுக்கலேன்னாலும் அவங்ககிட்ட இத சொல்லணும், சொன்ன அவங்க புரிஞ்சுப்பாங்கனு ஒரு நம்பிக்கையாவது இருந்திருக்கணும். அந்த நம்பிக்கையை புரிதலை நான் உனக்கு குடுக்கலையோன்னு தோணுச்சு. அதனால தான் இனிமேல் அந்த தப்பை திரும்ப பண்ணகூடாதுன்னு தான் இப்போவே பேசிடலாம்ணு சொல்றேன்.”

“சரிதான் ஆதி, இதுவரைக்கும் அப்படி ஒரே ஆள் வெச்சு அவங்ககிட்ட எல்லாமே சொல்லணும்னு நினைச்சதில்லை. அந்த நேரத்துல யாரு கூட இருக்காங்களோ அவங்ககிட்ட என் சந்தோசத்தை காட்டிடுவேன். வருத்தமாவோ, கோபாமாவோ இருந்தா, சொல்லியும் பிரயோஜனம் இல்லாம இருந்தா ஏதும் பெருசா காட்டிக்க மாட்டேன் பேசாம போய்டுவேன். ஆனா நீங்க என் வாழ்க்கைல வந்த பிறகு எனக்கு எந்த சந்தோஷம்னாலும் சரி, எந்த பிரச்சனை வந்தாலும் சரி உங்ககிட்ட சொல்லணும்னு தான் தோணுச்சு. என்ன அந்த நேரத்துல நேர்ல சொல்லமுடில. சோ மனசுக்குள்ள பேசிக்கிட்டோ, டைரில எழுதி வெச்சோ வெளிப்படுத்தினேன். ஆனா உங்கள நான் எதிர்பார்தேங்கிறது நூறு சதவீதம் உண்மை. அப்டினா அந்த அளவுக்கு நம்பிக்கையை நீங்க எனக்கு குடுத்திருக்கீங்கனு தானே அர்த்தம். அப்புறம் எப்படி உங்கள தப்பு சொல்லுவீங்க?” என

அவன் சிரிக்க “சரி, சொல்லுங்க எப்படி அந்த டைரி எடுத்தீங்க…?”

அவனும் அவளை இழுத்து தன் கை வளைவில் வைத்துக்கொண்டே பேசினான். “அதுக்கு மேடம் தான் காரணம். என் தயாக்காக எழுதறேன், அவர்கிட்ட லவ் சொன்னதும் இதை அவருக்கு குடுத்து அவரை நான் எவ்வளோ மிஸ் பண்ணேன்னு சொல்லுவேன்னு எத்தனை ஹிண்ட் குடுத்திருப்ப.. எல்லாமே ஞாபகம் வந்தது…அதனால தான் டைரி தேடுனேன்.”

“ஆமா அதெல்லாம் கரெக்டா கண்டுபுடிச்சீங்க. உங்களுக்கு வெச்ச பேர மட்டும் கண்டுபிடிக்கல.” என திரும்பிக்கொள்ள

ஆதி “அப்படியில்லைடா தியா. என்னோட விருப்பம், யோசனை எல்லாமே உனக்கு என் லவ், உன் லவ் இரண்டுமே புரியல. அந்த மாதிரி நீ யோசிக்கலேங்கிறது. அதோட பல பிரச்சனை நீயும் ஒளறிட்டே இருக்கே. அதுவும் மத்தவங்ககிட்ட நீயே உன்னை விளையாட்டுக்குனு நினச்சு உண்ணவே கீழ இறக்கிக்கற…. அதனால என்னால உன் விஷயத்தை யோசிக்கமுடில. ஆனா கடைசியா நான் பில்லோவ அப்டி ஒரு இடத்துல கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே உனக்கு நான் தான் எல்லாமேங்கிற மாதிரி சொல்லிட்டே. எனக்கு உன் லவ் இருந்தது. சோ எதுவும் தேவைல்லாம யோசிக்கல. நேரா நீ சொன்னதெலாம் ஞாபகப்படுத்துனா போதும்னு உன் பிரச்சனை என்னனு தெரிஞ்சிடும்னு தோணுச்சு. ஆனா அப்டி ஒரு பில்லோகுள்ள இருக்கும்னு எதிர்பாக்கல. அதுக்கு முன்னாடி கூட அத பாத்திருக்கேன். அப்போ எல்லாம் அத தள்ளிவிட்டிட்டு தான் தேடிருக்கேன். ஆனா நான் அன்னைக்கு குடிச்சிட்டு வந்து பீல் பண்ணதுக்கு அடுத்த நாள் நீ அந்த பில்லோவ மட்டுமே வெச்சிருந்த.. அதனால தான். தோணுச்சு. அத எங்க வாங்குன. அது எங்க ஓபன் இருக்குன்னே தெரில. எல்லாமே ஏதோ, வெல்வட், ஃபெதர் அது மேல ஏதோ டெகரேட் பண்ணி பாக்க நல்லா மொசு மொசுனு இருந்தது. சரி சாப்ட்டா இருக்கறதால வெச்சிருக்கேன்னு நினைச்சுப்பேன். ஆனா அன்னைக்கு தான் அத நல்லா பாக்கணும்னே தோணுச்சு. அப்போதா உள்ள இருந்த போட்டோ, டைரி எல்லாமே கிடைச்சது. அது எங்க வாங்குன?”

“அது உங்களுக்காக நானே செஞ்சது. அந்த போட்டோ நமக்கு வீட்ல எங்கேஜ்மெண்ட் பத்தி பேசுனத்துக்கு அப்புறம் தான் இங்கிருந்து சுட்டிட்டு போய்ட்டேன்” என கண்ணடிக்க அவன் பார்த்துக்கொண்டே இருக்க “அதுக்கப்புறம் தான் நான் டைரி எழுதினது, அத யாருக்கும் தெரியாம பட் சூப்பரான இடத்துல வெக்கணும் அதுவும் நான் நினைக்கும் போதெல்லாம் எடுத்துவெச்சுக்கணும்னு தான் அந்த பில்லோவ நானே செஞ்சேன்.” அவன் அவளை இறுக அணைத்துக்கொண்டு “ரொம்ப கஷ்டப்படுத்திட்டோம்ல. இனிமேல் எப்படி பழையமாதிரி அவங்க எல்லார்கிட்டயும் பேசப்போறியா?” என்ற அவன் கேள்வியில், பேசு என்ற அதிகாரம் இல்லை, உன்னை கஷ்டப்படுத்தீட்டாங்க – அதனால் யாரிடமும் முன்பு போல இருக்காதே என்ற ஆவேசமும், எச்சரிப்பும் கூட அவனிடம் இல்லை. நீ நினைக்கறத எதுவானாலும் சொல்லு என்று இவளது பதிலுக்கு அமைதி காத்தான்.

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 21உள்ளம் குழையுதடி கிளியே – 21

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஹிமா சரத் உறவில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும்  ஜானை கண்டுபிடிக்க வால்டர்  சின்னையன் முயற்சி வெற்றியா தோல்வியா இவற்றிற்கு பதில் இரண்டும்