மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 24

24

ப்பாடி இனிமேல் தொல்லை தரமாட்டான் என்று சுஜி நினைத்தது பொய் என்பதை நிரூபிக்குமாறு கல்லூரிக்கே இவளைத் தேடி வந்து நின்றான் மாதவன்.
என்ன வேணும் என்று கேட்டால், என் ஐத்த மகதான் வேணும் என்று வம்பிழுத்தான்.

“சுஜி உன்கிட்ட முக்கியமா ஒண்ணு பேசணும்.”

“இங்கப் பாருங்க எதுக்காக திரும்பத் திரும்ப வந்து என்னைத் தொந்திரவு பண்ணுறிங்க? உங்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. இனிமே என்னைத் தேடி வராதிங்க.”

“சரி நான் உன்னத் தேடி வர மாட்டேன். ஆனா நீ ஒரு தடவ என்னைத் தேடி வந்தாலும், இந்த கண்டிஷன அப்பறம் ஃபாலோவ் பண்ண மாட்டேன். டீல்” என்றான் மாதவன்.

“சரி. நானாவது உங்களைத் தேடுறதாவது. அது கனவுலதான் நடக்கும்.”

“அப்படியா, கனவுலத் தேடுனாலும் அப்பறம் நீ மீறிட்டதா தான் அர்த்தம்.”

“சரி கனவுல கூட தேடமாட்டேன். கிளம்புறேன். குட்பை.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் சுஜி.  

அவளுக்குத் தெரியாது வெகு விரைவில் அவளது வார்த்தையை அவளே மீறப் போகிறாள் என்று.

ழனி கூப்பிட்டு அனுப்பியதாக சொல்லவும், சுஜியும், பிரசன்னாவும் அவரது அறைக்குச் சென்றார்கள்.

“குட்மார்னிங் சார்.”

“குட்மார்னிங். மீட் Mr. மாதவன். சாரோட புது ப்ராஜெக்ட் நம்மதான் பண்ணப் போறோம். அதப் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் உங்கள வரச் சொன்னேன்.”

அதன்பின் நடந்த உரையாடலின் மூலம், மாதவன் குடும்பம் ‘பஹரிகா’ என்ற பல்பொருள் அங்காடி ஒன்று தொடங்கப் போவதாகவும், அதனை விளம்பரப் படுத்தும் பொருட்டு சித்திரைப் பொருட்காட்சியை ஒட்டி ஒரு உணவுத் திருவிழா நடத்தப் போவதாகவும், அதனை தங்களது கல்லூரி செய்ய இருப்பதாகவும் சுஜிக்குத் தெரிய வந்தது. சுஜி வகுப்பினர் இறுதி ஆண்டு படிப்பதால், இதனையே தங்கள் ப்ராஜெக்டாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு சுஜியையும், பிரசன்னாவையும் பொறுப்பாகப் போட்டு இருந்தனர்.

“மிஸ்டர் மாதவன் உணவு சம்மந்தப்பட்ட மெனு எல்லாம் சுஜி நல்லாப் பண்ணுவாங்க. அவங்க ஹெல்ப் வாங்கிக்கலாம். மத்த விஷயம் எல்லாம் பிரசன்னா பார்த்துக்குவார்” என்று மாதவனிடம் சொன்னவர் சுஜியிடமும், பிரசன்னாவிடமும் இதைப் பற்றி மற்ற தோழர்களிடமும் கலந்துரையாடி விட்டு, தெளிவான ரிப்போர்ட் உடன் இரண்டு நாளில் வருமாறு உத்தரவிட்டார்.

மாணவர்களுக்கு மிகுந்த சந்தோஷம். இதை போல் ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது மிகக்கடினம் என்று சுஜியும் உணர்ந்திருந்தாள். அதனால் சொந்த பிரச்சனையை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, மெனு தயாரிப்பதில் முனைந்தாள்.

“இதை நம்மால் செய்ய முடியுமா?”

“கண்டிப்பாக முடியும். நம்ம காலேஜ்ல ப்ராக்டிகலா வொர்க் பண்ணி எல்லோருக்கும் அனுபவம் இருப்பதால, நல்ல படியா செய்வோம்னு நம்பிக்கை இருக்கு. என்ன அளவு தான் நம்ம வழக்கமா செய்யுறதா விடப் பத்து மடங்கு அதிகம். அதனால தோராயமான அளவுன்னு இல்லாம, சரியான அளவு பொருட்களை அளந்து போடணும். இப்பயே மெனுவ தயார் செஞ்சுட்டு தினமும் குறைந்த அளவுல சமைச்சு கரெக்ட் பண்ணுவோம். கடைசில ஒரு நாள் நம்ம காலேஜ் அளவுல மாடல் உணவுத் திருவிழா கொண்டாடுவோம். இது நமக்கு நிஜமான உணவுத்திருவிழா நாளன்னைக்கு ரொம்ப உதவியா இருக்கும்”

சுஜியின் வார்த்தைகள் அனைவருக்கும் ஒரு உந்துதலைக் கொடுத்தது.

ரண்டு நாட்கள் போனதும், மெனுவைத் தயார் செய்து பழனியப்பனின் திருத்தங்களுக்குப் பிறகு, மாதவனைச் சந்திக்க சென்றனர் சுஜியும், பிரசன்னாவும். பார்த்தியா சுஜி குட்டி என்னைத் தேடி நீயா வந்த பாரு என்றது மாதவனின் கள்ளச் சிரிப்பு.

“வாங்க” என்று வரவேற்று உட்கார வைத்த மாதவன், பிரசன்னா கவனிக்காதபோது, சுஜியைப் பார்த்துக் கண்ணடித்தான்.

“என்ன சுஜி… என்னைத் தே…டி நீங்களே வந்து இருக்கீங்க?”

தேடி என்ற வார்த்தைக்கு அவன் தேவை இல்லாமல் கொடுத்த அழுத்தத்தைப் பார்த்துப் பல்லைக் கடித்த சுஜி, “பழனி சார் தான் அனுப்பிச்சாரு”

“யார் அனுப்பினா என்ன சுஜி? நீ எதுக்கு வந்திருக்கன்னு சொல்லு”.

“மெனுவைக் காட்டி உங்க அப்ரூவலை வாங்கிட்டு வரச் சொன்னாரு”.

“முதல்ல விருந்தோம்பல். என்ன சாப்பிடுறிங்க?” என்று கேட்டுவிட்டு மூன்று குளிர்பானம் வரவழைத்தான்.

“சுஜி உனக்கு மாங்கோதானே பிடிக்கும்?” என்று கேள்வி வேறு.

“என்ன சார், சுஜிய முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா? மாங்கோ ஜூஸ் தான் சுஜிக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு வச்சு இருக்கீங்க” என்ற பிரசன்னாவின் கேள்விக்குப் பதிலாக சுஜி, “தெரிஞ்சவர்தான் ரொம்…ப தூரத்து சொந்தம்” என்றாள்.

உன் மனசுக்கு, இப்ப நான் ரொம்ப தூரத்து சொந்தம் தான். ஆனால் சீக்கிரம் கிட்ட வந்துடுவேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் மாதவன்.

“அதென்ன சார் பஹரிகான்னு ஒரு பேரு?” என்றான் பிரசன்னா.

“பஹரிகானா கிரேக்க மொழில ஸ்பைசெஸ்னு அர்த்தம். கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமேன்னு வச்சது.”

மெனு மற்றும் அதனைத் தயாரிக்க தாங்கள் எடுத்திருக்கும் முயற்சி எல்லாம் சொன்னதும் மாதவனுக்கு மிகவும் திருப்தி.

“எல்லா உணவுக்கும் எங்களது பொருள்களையே எடுத்துக்கோங்க. அப்பறம் வாரம் ஒரு ஒரு உணவா தயார் பண்ணி உங்க காலேஜ்லையே எக்ஸ்பிரிமெண்ட் பண்ணிப்பாருங்க. இனிமே நீங்க இங்க வர வேணாம். தினமும் ஈவினிங் நானே அங்க வரேன். அப்ப டிஸ்கஸ் பண்ணலாம்”.

சரி என்று சொல்லிவிட்டு ஓடியே வந்து விட்டாள் சுஜி. இந்த முறை அவனைப் பார்க்க போனபோதே தெரிந்தவர் யாரும் இருக்கக் கூடாது என்று பயந்தபடியே தான் சென்றாள். நல்ல வேளையாக தெரிந்தவர்கள் கண்ணில் படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 16நிலவு ஒரு பெண்ணாகி – 16

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை இருவருடன் சேர்ந்து நாமும் காட்டுவழியில் பயணிக்கலாமா? நிலவு ஒரு பெண்ணாகி – 16 அன்புடன் தமிழ் மதுரா.

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 55ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 55

55- மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரியும் சோபியும் வீட்டிற்கு வர அமைதியாக அவர்களுடன் அமர்ந்து பேச யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டுஇருந்தனர். பாட்டியும் அபியை அழைத்து உடல்நலம் பற்றி விசாரித்துவிட்டு இரு நாட்களின் திவிபுராணம்

கபாடபுரம் – 3கபாடபுரம் – 3

3. தேர்க்கோட்டம்   பேரப் பிள்ளையாண்டான் வரப் போகிறான் என்ற மகிழ்ச்சியினாலும் ஆவலினாலும் அந்த அகாலத்திலும் உறங்காதபடி விழித்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர். தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் பார்த்து வணங்கி நலம் கேட்டறிந்த சுவட்டோடு, அவனிடம் நிறையப்