Tamil Madhura கதைகள்,காயத்திரியின் 'தேன்மொழி',தொடர்கள் காயத்திரியின் ‘தேன்மொழி’ – 5

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 5

பாகம் 5

வாங்க தம்பி எப்படி இருக்கீங்க “கல்யாணம் பேசுன பொண்ணு காய்ச்சல்னு கிடக்குறா” என சோகத்தோடு சொன்னாள் சீதா….

அதெல்லாம் மருந்து கொடுத்தாச்சு இன்னைக்கே சரியாயிடும் ஆண்ட்டி என ஓரக்கண்ணால் அவளைப்பார்த்து கண்ணடித்தவாறே கூறினான்….இவளுக்கு அவன் பார்வையை கண்டவுடன் உடலெல்லாம் புல்லரித்தது அவள் கைகளை முகத்தை மூடியவாறு மெல்ல சிரித்தாள்.

இவன் உயிர்பெற்றார்போல் புதுக்களிப்புடன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்

 

“என்னை ஏதோ செய்துவிட்டாய்

உன் எதிர்பாராத முத்தம்

உயிரை கயிறாய் திரிக்கின்றதே

ஆழமாய் தந்த முத்தம் ஆழ்மனதை குடையுதடி”

இவன் மனதில் வடிவம் தந்த கவிதையை தன்னவளுக்காக …..தன் மொபைலில் டைரி அப்பில் சேமிக்கிறான்….

 

1மாதத்தில் நிச்சயதார்த்த பத்திரிக்கை…..எல்லோருக்கும் தருகிறார்கள்….கிஷோருக்கு தேனு சாண்டல் கலர் சர்வாணியை தேர்வு செய்கிறாள்….அதில் மேலே  லெப்ட் கார்னரில் மட்டும் மைல்ட் ஒர்க் இருக்கிறது….பிடிச்சிருக்கா மாமு என வீடியோ சாட் செய்கிறாள்….இந்த ஷர்வானியோடு இன்னும் இரண்டை எடுத்து சேர்த்து காட்டுகிறாள்(எல்லாம் காரணமாதான் மேடம் எக்ஸ்ட்ரா 2 மொக்கை டிசைன் எடுத்து வச்சா எப்படியும் அவன் இதுலாம் வேணாம்னூ சொல்வானு நம்பிக்கைதான்)இவனும் அவள் நினைத்தவாறே ஸான்டலை தேர்வு செய்தான்…..

கிஷோர் தன் அம்மாவிடம் சென்று”அம்மா …..தேனுக்கு நான் செலக்ட் பண்ணி புடவை எடுத்துட்டு வாரேன்மா எனக்கேட்க….அங்கு வந்த ஆஷா “என்னடாடாஆஆஆ  பொண்டாட்டிக்கு நீ செலக்ட் பண்ண போறியா….ம்ம்ம்ம் நடத்துடா நீ “என்றவள்

நேரேஅம்மாவிடம் ஓடினாள்…அம்மா பாரும்மா அதுக்குள்ள பொண்டாட்டிக்கு ஐயா தனியா போய் செலக்ட் பண்ணணுமாம் எனக்கத்தியவள் ஜடையை  பிடித்து இழுத்து போடி குள்ளச்சி என்றாள்

இவள் “ஆஆஆஆ….அம்மா இந்த தடிமாடு என்ன அடிக்கிறான்மா எனக்கத்தினாள்”அவன்கிட்ட எதுக்குடி வம்புக்கு போகுற அப்பறம் அம்மா ஆயானு கத்து..நீங்க இரண்டு பேரும் என்னமோ பண்ணுங்க…..நான் போரேன் ஏன்றாள் சுமதி

அவன் தன்னுடைய ஹனிக்கு பிங்க் ஸ்கைப்ளூ கலந்தாற்போல ஓர்க் வைத்த பட்டு எடுக்கிறான்…பின்னர் நகைக்கடை சென்று அவளுக்கு நிச்சயத்தன்று பரிசளிக்க k♥️T என எழுதப்பட்ட மோதிரத்தை தன் வருங்கால மனைவிக்கு ஆர்டர் கொடுக்கிறான்…நிச்சயத்திற்கு ஸ்பெஷல் கிப்ட்டாக தருவதற்கு

இப்பொழுது அவன் மனதில்

 

“நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுதுதேடுது ..ஓ  ..நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் பறக்கிறேன்”

 

என்ற மெல்லிசை கீதம் ஒளிக்கிறது….தனக்கே தனக்கானவளுக்கு தானே தேர்வு செய்த மகிழ்ச்சியில் அவன்….

நிச்சயதார்த்தமும் வந்தது இவன் ஷர்வானியில் ராஜாவைப்போல் காட்சியளித்தான்…..இவளோ தங்கச்சிலையென அழகான ஒப்பனையோடு….நீலமேகம் ரோஜா இதழில் விரிந்ததைப்போல்….அழகுப்பூவாய் பூத்திருந்தாள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 13கபாடபுரம் – 13

13. நெய்தற்பண்   புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு – தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து – யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற்பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஓர் ஒலி ஒற்றுமை இருக்கும் போலும்.

வார்த்தை தவறிவிட்டாய் – 1வார்த்தை தவறிவிட்டாய் – 1

ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன். வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன். நமது கதாநாயகி பானுப்ரியாவை