Tamil Madhura கதை மதுரம் 2019,சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 2

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 2

 

காற்றெல்லாம் உன் வாசம்!

என் சுவாசத்தில் நிரப்பிக் கொண்டேன்!

என்னில் நிறைந்த உன் சுவாசங்கள்

என் வாழ்வானது என்ன மாயமோ!

“ஸ்ருதி.. ஸ்ருதி..” ஸ்வேதா சத்தமிட்டுக் கொண்டே ஸ்ருதியின் வீட்டிற்குள் சென்றாள்.

“வா.. வா.. ஸ்வேதா” ஸ்ருதி தன் கையில் வாட்சை கட்டிக் கொண்டே தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“கிளம்பிவிட்டாயா, ஐந்து மணியிலிருந்து என்னை போட்டு படுத்தி எடுத்தி கொண்டிருந்தாய் ?”

“கிளம்பிட்டேன் டீ!”

“வாம்மா ஸ்வேதா!” லட்சுமி சமையலறையிலிருந்து புன்னகையுடன் வெளியே வந்தார்.

“எப்படி இருக்கிறீர்கள் அத்தை?”

“ம்.. நன்றாய் இருக்கிறேன் !” லட்சுமி புன்னகையுடன் கூறினார்.

“ஒரு நிமிஷம் ஸ்வேதா ஹான்ட் பேக் எடுத்துவிட்டு வந்து விடுகிறேன்!” ஸ்ருதி உள்ளே சென்றாள்

உள்ளே சென்றவளை பார்த்துவிட்டு,

“அத்தை தப்பித்து விட்டீர்கள், போல!” ஸ்வேதா புன்னகையுடன் வினவினாள்

“தயவு செய்து சத்தமாக பேசி என்னை போட்டு கொடுத்துவிட்டாதே ஸ்வேதா! வீட்டில் அவளுடைய வண்டியை பற்றி பேசியே தொல்லை செய்கிறாள். இன்னும் கூட வந்தேன் என்று வை, நான் அவ்வளவு தான். என் காது வீங்கி வெடித்தே விடும்” லட்சுமி கெஞ்சல் குரலில் கூறினாள்

ஸ்ருதி, ஹாண்ட் பேகை எடுத்துவருவதை பார்த்துவிட்டு, “சரி, சரி பிழைத்து போங்க” என்று கிண்டலாக விட்டுக் கொடுத்தாள் ஸ்ருதி

“வாங்க இரண்டு பேரும் சப்பாத்தி விட்டு கிளம்புங்கள்!” லட்சுமி புன்னகையுடன் அழைக்க, இருவரும் சாப்பாட்டு அறையை நோக்கி சென்றனர்.

ஸ்வேதாவும் அந்த வீட்டிற்கு இன்னொரு பெண் போல தான். அதானால் அன்று அவள் உணவிற்கு வருகிறாள் என்று அவளுக்கு பிடித்த சப்பாத்தியே செய்து இருந்தார்.

அவள் இரசித்து உண்பதை பார்த்து இன்னொரு சப்பாத்தியை ஸ்வேதாவின் தட்டில் வைக்க , ஸ்ருதியின் காதில் புகை வந்தது

பெற்றவர்களின் மீது கோபம் வந்தாள் எப்பொழுதும் அவர்களின் பெயரை கடுப்பாகாக அழைத்து தன் கோபத்தை தணித்துக் கொள்வாள்.

“லட்சுமி!” ஸ்ருதியின் குரலில் சட்டென்று அலாட் ஆன லட்சுமி “என்னம்மா தங்கம்!” என பாசம் வழியும் குரலில் அழைத்தார்.

“கொஞ்சம் என்னையும் கவனிக்கலாம் லட்சுமி” ஸ்ருதியின் குரலில் பொறாமை வழிந்தது.

லட்சுமியும் ஸ்வேதாவும் ஒருவரை ஒருவரைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டார்கள்

“இதோம்மா!” என்று ஸ்ருதியின் தட்டிலும் பறிமாரினார் லட்சுமி.

லட்சுமியும் ஸ்வேதாவும் அடிக்கடி ஸ்ருதியை இப்படி சீண்டி விளையாடுவார்கள்.

செல்ல சண்டைகளுடன், ஒருவழியாக இருவரும் சமையற்கட்டை ஒருவழியாக்கிவிட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள்.

“கிளம்பலாமா ஸ்ருதி!” ஸ்வேதா ஹெல்மெட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

“ம், சரி.”

“சரிம்மா கிளம்புகிறேன்”

“சரியத்தை பை”

“வண்டியை எடுத்தோமா, சாப்பிட்டு விட்டு ஒழுங்காக வீடு வந்து சேர்ந்தோமா என்று இருங்கள். உன் அப்பாவிடம் போராடி வாங்கின வண்டி, நியாபகம் இருக்கட்டும்!” லட்சுமி கண்டிப்பான குரலில் கூறினான்.

“சரி, சரி நீ வேறு புலம்பாதே, ஒழுங்காக வீட்டிற்கு வந்துவிடுவோம்”

இருவரும் ஸ்வேதாவின் இருசக்கர வாகனத்தில் ஸோரூமிற்கு விரைந்தனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`

டூவிலரை ஓட்டிக் கொண்டு வந்தவளிடம் ஸ்ருதி பேச்சுக் கொடுத்தாள்.

“ஸ்வேதா, ஸ்வேதா”

“சொல்லு ஸ்ருதி”

“எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது தெரியுமா?”

“எவ்வளவு சந்தோசமா இருக்கிறது!”

“இங்கேயே நின்று ஓவென்று கத்த வேண்டும் போல் இருக்கிறது!”

“பைத்தியம் என்று சொல்லுவார்கள்!” ஸ்ருதி கடுப்படித்தாள்

“இருந்துவிட்டு போகிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு என் வெஸ்பாவை வாங்கி இருக்கிறேன் தெரியுமா?”

“ம்..”

“she is so cute (ஸி ஸ் ஸோ கியூட்)! ”

“யாரை டி சொல்கிறாய்? ரோட்டில் எதாவது அழகான பெண் போகிறாளா என்ன?” ஸ்வேதா சுற்றும் முற்றும் தேடினாள்

“நான் என் வண்டியை சொன்னேனடி!”

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, கீழே இறங்கி ஸ்வேதா கையெடுத்தே கும்பிட்டுவிட்டாள்.

“தயவு செய்து உனக்கு புண்ணியமாக போகும் ஸ்ருதி, என்னை இப்படி பேசியே கொள்ளாதே!”

“என்னுடைய சந்தோசத்தை ஷேர் செய்தேன்!”

“நல்லா ஷேர் செய்கிறாய். பேசியே எல்லாரையும் ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கிறாய்!”

“கோவிச்சுக்காதடி தங்கம்!” ஸ்ருதி கன்னத்தைப் பிடித்து கொஞ்சினாள்

“ஒரு வண்டி வாங்குவதற்குள் இவள் பண்ணும் அழும்பு இருக்கிறதே” ஸ்வேதா முணுமுணுத்துக் கொண்டே வண்டியை எடுத்தாள்.

ஸ்வேதா வண்டியை கிளப்பும் நேரம் அவளின் கைபேசி அழைக்க வண்டியை மீண்டும் ஓரமாக நிறுத்தினாள். கைப்பேசியை எடுத்து பார்த்தவளின் முகம் மலர்ந்தது.

அழைத்திருந்தது அவளின் அத்தைமகனும் காதலனும் ஆன அபினவ்.

ஸ்வேதாவின் முகம் சூரியனாக மலர கைபேசியுடன் பேச ஆரமித்தாள் இங்கு ஸ்ருதிக்கோ பீபி எகிற ஆரமித்தது.

இதுங்க இரண்டும் எப்பொழுது பேசி முடித்து எப்பொழுது ஷோரூம் சென்று!

ஸ்ருதி நகத்தைக் கடிக்க ஆரமித்தாள், கையிலிருந்த எல்லா நகத்தையும் கடித்து முடித்துவிட்டு கால்விரலை கடிக்கலாமா வேண்டாமா? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.  அப்பொழுதும் அவர்கள் பேசிமுடித்த பாடில்லை.

நேற்று மாலை தானே இருவரும் அவ்வளவு நேரம் பேசினார்கள். என்னமோ பத்து வருடம் ஆன மாதிரி பேசிக் கொள்கிறார்கள். ஸ்ருதி மனதோடு புலம்பிக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கே மேல் அவளுடைய பொறுமை மொத்தமாக் தீர்ந்து போக கைப்பேசியை ஸ்வேதாவிடம் இருந்து பிடிங்கி இருந்தாள் ஸ்ருதி.

ஸ்வேதா அவளை பார்த்து முறைக்க, “சத்தியமா சொல்றேன் இதுக்கு மேல் நீங்க வறுக்கும் கடலையை என்னால் தாங்க முடியாது. தயவு செய்ஞ்சு விட்டுவிடுடி”

அந்த புறம் இருந்து அபினவோ “ஹலோ , ஹலோ” என்று கத்திக் கொண்டிருந்தான்.

அப்பொழுதும் கைப்பேசியை ஸ்வேதாவிடம் கொடுக்காமல் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு தன் காதில் வைத்தாள் ஸ்ருதி.

“ஹலோ அபினவ் டார்லிங் எப்படி இருக்கீங்க?”

ஒரு நொடியில் அவள் குரலைக் கண்டு கொண்ட அபினவ் புன்னகையுடன் ஸ்ருதியுடன் பேச ஆரமித்தான்.

லட்சுமியும் ஸ்வேதாவும் கூட்டு சேர்ந்து கொண்டு ஸ்ருதியை ஓட்டினால், அபினவும் ஸ்ருதியும் சேர்ந்து ஸ்வேதாவை ஒருவழி செய்வார்கள்.

“ஸ்ருதி டார்லிங், எப்படி இருக்க?”

“நல்லாருக்கேன் டார்லிங், நீ எப்படி இருக்க?”

“உன்னை பார்க்காமால், நான் துரும்பாய் இளைத்துவிட்டேன்”

“இதோ பஸ் ஏறிட்டேன் உன்னை பார்க்க!”

“ஐ ம் வெய்ட்டிங்”

இருவரும் மாற்றி மாற்றி வெறுப்பேற்றியதில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஸ்வேதா, ஸருதியிடம் போனை வெடுக்கென்று பிடிங்கி பட்டென்று கைப்பேசியை அணைத்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு சிலவினாடிகள் நின்று கொண்டிருந்தார்கள். பிறகு அது மெல்ல புன்னகையாய் மாறியது.

புன்னை மெல்ல விரிந்து சிரிப்பாய் மாறியது.

சிரித்துக்கொண்டே இரு சக்கர வாகனத்தில் ஏறி ஷோருமை நோக்கி சென்றார்கள்.

உன் வாசமாவாள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 02யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 02

கனவு – 02   வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவை பற்றிக் கவலைப்படாது தனது வேலையைச் செவ்வனே செய்வது இந்த வயிறு ஒன்று தான். தன் சோகத்தில் மூழ்கியிருந்த சஞ்சயனின் வயிறும் தன் கடமையைச் செவ்வனே செய்ய எண்ணி ராகம்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23

  கனவு – 23   அமுல் பேபியாகச் சுருட்டைத் தலையோடு பொக்கைவாய் சிரிப்போடு இருந்த அந்த குழந்தையைப் பார்த்ததும் வைஷாலிக்கு வேறு எதுவும் எண்ணத் தோன்றவில்லை. தான் கருவில் அழித்த சிசு தான் கண் முன் தோன்றியது. தான் செய்த

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2

பாகம் இரண்டு “என்னாச்சு லலிதா, நீ கூப்பிட்டதும் கையும் ஓடலே காலும் ஓடலே!”, என்றபடி ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்த கீதா, தோழியின் முகத்தில் தொடங்கி பாதாதி கேசம் அளந்து பிரச்சினையாக ஒன்றும் தென்படாமல், ரமேஷை கேள்வியாக பார்க்க, ரமேஷோ ஆடித் தள்ளுபடியில்