Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

பிள்ளையார் சுழி – புத்தாண்டு வாழ்த்துக்கள்

கொழுக்கட்டை சுண்டல் அவல்பொரி கேட்கும் குளக்கரைப் பிள்ளையார் பற்றிய கதையின் வித்யாசமான கோணம் ஒன்றை சமீபத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

நம் அனைவருக்கும் கணபதியின் கதை அநேகமாகத் தெரிந்திருக்கும். அதைக் கேட்கும் போது சில வினாக்கள் தோன்றுவது இயல்பே. அது எப்படி சிவன் தனது மகனை வதம் செய்வார்? ஏன் யானை முகத்தைப் பொருத்தவேண்டும் அதற்கு அவரது மனித முகத்தையே பொருத்தி இருக்கலாமே… இதெல்லாம் எனக்கும் தோன்றிய கேள்விகள்தான். ஆனால் அதற்கான விடைகள் சிக்சாக் புதிரைப் போல எல்லா இடத்திலும் நிரம்பி இருக்கிறது எப்போது வேண்டுமானாலும் புதிரின் ஒரு பகுதிக்கான விடை உங்களது கைகளில் சிக்கும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன்.

சிவபெருமானின் வேலை அழித்தல், உருமாற்றுதல். சக்தி – இனப்பெருக்கத்துக்கு வழிபடும் கடவுள். அவளது மனதிலிருக்கும் ஈகோ இதனை அகங்காரம் என்று கூட நாம் பொருளாகக் கொள்ளலாம் சேர்ந்து உருவானவர் தான் பிள்ளையார்.

சிவபெருமான் அந்த அகங்காரத்தை அழித்து, அறிவொளியைத் தந்ததைத் தான் தலையைக் கொய்தார் என்று சொல்கின்றனர்.

பாலூட்டிகளில் யானைக்குத்தான் பெரிய மூளை. மனிதனின் மூளை எடை 1.34கிலோ என்றால் யானையினது 5.99 கிலோகிராம். மண்டை பெருசாக இருந்தால் போதுமா அதுனுள் இருக்கும் நியூரான்கள்? கண்டிப்பாக மனிதனை விட(86 பில்லியன்கள்) யானை மூளையின் நியூரான்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் (257 பில்லியன்கள்).

இத்தகைய ஆற்றல் மிக்க மூளையால் தான் அவற்றால் ஒவ்வொன்றையும் நினைவு வைத்துக் கொள்ளவும், தனது வாழ்நாளில் கற்றுக் கொண்டதை தனது சந்ததியினருக்குப் பகிரவும், நுகர்ந்தே சுற்றுப் புறத்தைக் கணிக்கவும், குரலை நினைவு வைத்திருக்கவும் முடிகிறது.

ஒரு சிறு உதாரணம் ஆப்ரிக்க காடுகளில் பல வருடங்களுக்குப் பின் வந்த கடுமையான பஞ்சத்தின் போது முன்னொரு காலத்தில் இது போன்ற சூழ்நிலையில் இதே யானைக் கூட்டம் அடைக்கலம் அடைந்த நீர்நிலையை நினைவு வைத்து வயதான யானைகள் தங்கள் கூட்டத்தினை வழி நடத்தி சென்றன என்பது ஆச்சிரியம் தரும் செய்தி.

மூளையில் இருக்கும் முடிச்சினை போன்ற வடிவம் தான் நினைவாற்றலை நிர்ணயிக்கும் என்று சொல்கிறார்கள். அது யானைக்கு மிகவும் அதிகம். இயற்கை அவ்வாறு உருவாக்கியதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இந்த அற்புத உயிரினத்தைப் நாம் அறிந்தது மிக சொற்பம்தான். ஆனால் அறியாத பல விஷயங்களை வல்லுனர்கள் கண்டறிய முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர்.

ஆக யானையின் மூளை என்பது அறிவாற்றலைக் குறிக்கும். அகங்காரத்தை அழித்து அறிவாக அதனை உருமாற்றம் சிவன் செய்து தனது கணங்களையே வழிநடத்தி செல்லும் பொறுப்பினைக் கொடுத்தான். வழி நடத்துபவன் விக்கினங்களை ஆராய்ந்து, தீமையினை விலக்கி தனது கூட்டத்தினருக்கு வழி காண்பிக்க வேண்டும். இதுக்கு பொருத்தமானவர் நமது வேழமுகத்தான் தானே.

பிள்ளையார் சுழி போட்டு இந்த வருடத்தை மகிழ்ச்சியாகத் தொடங்குவோம். இந்தப் புத்தாண்டில் நமது விக்கினங்களையும், வாழ்க்கைத் தடைகளையும் அகற்றி, ஆயுள் ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்த பாதையில் நமது விக்னேஸ்வரர் வழிநடத்தி செல்ல உளமாறப் பிரார்த்திக்கிறேன்.

தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: