Tamil Madhura கதை மதுரம் 2019,சுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 1

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 1

வணக்கம் தோழமைகளே

‘கதை மதுரம்’ எனும் பண்பட்ட வைரத்தைத் தேடும் இந்த சிறு முயற்சியில் முதல் படைப்பாக வருகிறது எழுத்தாளர் சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ எனும் அழகான புதினம். திருமதி. சுகன்யா பாலாஜிஅவர்கள் பத்து வருடங்களுக்கு மேலாக தனது கவிதையின் மூலமும், புதினங்களின் மூலமும், நாவல்கள் மூலமும் நம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். அவரது கதைகளையும், கவிதைகளையும் பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். அவரது படைப்பினை உங்களுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறோம்.

படியுங்கள், படித்துவிட்டு உங்களது எண்ணங்களை எங்களுக்கு சொல்லுங்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

 

 

காற்றெல்லாம் உன் வாசம்

1

 

 

உன்னை தொட்டு விட்டு செல்லும் காற்றை

நின்று – என்னிடம் பேசிவிட்டு செல்ல சொல்கிறேன்

நின்றபடி – உன் வாசத்தை தந்துவிட்டு சென்றது

நின்றுணர்ந்தேன் -காற்றெல்லாம் உன் வாசம்…

தென்றல் தொட்டு விளையாடும் கோவை நகரின் ஒரு அழகான இளங்காலைவேளை!!

அமைதியான அந்த வீட்டின்  அமைதியை கலைத்து, இனிமையான வயலின் ஒழியை எழுப்பி தன் இருப்பை உணர்த்தியது அந்த டச் ஸ்கிரீன் தொலை பேசி……

ஸ்வேதாவின் தொலைபேசி விடாமல் தொல்லை செய்ய, எரிச்சலுடன் தலையணைக்கு அடியில் முகத்தை புதைத்துக் கொண்டாள் ஸ்வேதா.

‘விட்டேனா பார் உன்னை!’ என்பதைப் போல அது மீண்டும் அவளை விடாமல் தொல்லை செய்ய எரிச்சலுடன் போனை காதில் வைத்தாள்

“ஹலோ!” ஸ்ருதியின் ஆரவார குரல் ஸ்வேதாவின் காதில் விழ,

எரிச்சலுடன் ஸ்வேதா கத்தினாள்.“ஏன் டீ பிசாசே உயிரை வாங்கிற!”

“நானா உயிரை வாங்குகிறேன். உன்னை எல்லாம் ஒரு மனுசி என்று மதித்து போன் செய்தேன் பாரு என்னை சொல்ல வேண்டும்!” ஸ்ருதி கடுப்படித்தாள்.

“வேண்டாம் போன் செய்யதே!” ஸ்வேதா பட்டென்று போனை கட் பண்ணினாள்

”மனுசியை நிம்மதியாய் தூங்க கூட விடமாட்டாள்!” முணுமுணுத்து கொண்டே மீண்டும் தூங்க ஆரமித்தாள் ஸ்வேதா

மீண்டும் அவளுடைய போன் அடிக்க,

“விடமாட்டாளே!” முணுமுணுத்து கொண்டே போனை காதில் வைத்தாள்

“என்ன தாண்டி ஸ்ருதி உன் பிரச்சனை!” ஸ்வேதா அழாத குறையாக வினவினாள்

“என் தங்கம் , என் பட்டு , என் வைரம்” ஸ்ருதி காரணத்தை சொல்லாமல் ஸ்வேதாவை கொஞ்சினாள்.

“என்னை கொலைகாரி ஆக்கிவிடாதே சொல்லிவிட்டேன்!” ஸ்வேதா காளி அவதாரம் எடுத்தாள்.

“வந்து”

“நீ இன்னும் வந்துமுடிக்கலையா?”

“இன்னைக்கு..”

“இன்னும் விசயமே வரலயேம்மா?” ஸ்வேதா அழாத குறையாக வினவினாள்.

“என்னுடைய  வெஸ்பா இன்னைக்கு டெலிவிரி எடுக்கணும்” பட்டென்று ஸ்ருதி விசயத்தை போட்டு உடைத்தாள்.

“சரி!” என்றாள் ஸ்வேதா

“என்ன டீ சரி?” ஸ்ருதி எகிறினாள்

“ஒரு மாசமா இதை சொல்லி தானே என்னை கொடுமை செய்கிறாய். நாளைக்கு நான் வண்டி வாங்க போறேன் என்று நீ காலேஜ் மாடியில் நின்று நீ கத்தவில்லை அது ஒன்று தான் பாக்கி…

பிறகு எப்படி டீ உன் கூடவே சுத்திக் கொண்டிருக்கிற எனக்கு இன்றைக்கு நீ வண்டி டெலிவிரி எடுக்கிறாய் என்று தெரியாமல் இருக்கும். வண்டியை டெலிவிரி எடுத்துட்டு வந்து டிரீட் கொடுப்பாளா…

அதை விட்டு விட்டு காலை ஐந்து மணிக்கு போன் செய்து நான் வெஸ்பா டெலிவிரி எடுக்க போறேன் என்று என் காதில் கூவிக் கொண்டிருக்கிறாய், லூசாடி நீ!” ஸ்வேதா தன் காலை தூக்கம் கெட்ட எரிச்சலில் கத்தினாள்.

“இல்லை டீ அப்பாவிற்கு அவசர வேலை ஒன்று வந்துவிட்டது. அதனால் டெல்லிக்கு சென்றுவிட்டார்” ஸ்ருதி சோகமாக சொன்னாள்

“தப்பித்துவிட்டார் என்று சொல்!” ஸ்வேதாவின் குரல் கிண்டல் தொணிக்கு மாறி இருந்தது

“உனக்கு கொழுப்பு !” ஸ்ருதி கடுப்படித்தாள்

“உன்னுடன் இருக்கிறேன் அல்லவா?”                                   “சரி அம்மாவுடன் போக வேண்டியது தானே” ஸ்வேதா கிண்டலாக தொடந்தாள்

“வரமுடியாது என்று விட்டார்கள்!” ஸ்ருதியின் குரலில் சோகம்

“பிழைக்கத் தெரிந்தவர்கள்!” ஸ்வேதா விட்டேனா பார் உன்னை என்பது போல் கிண்டலை தொடர்ந்தாள்

“ரொம்ப ஓட்டாதடி, நீ என்னுடன் வருகிறாயா?” ஸ்ருதி கண்டிப்பான குரலில் வினவினாள்.

“வருகிறேன், வேறு வழி. சரி. இப்ப சொல்லு இதை ஒரு எழு மணிக்கு சொல்ல வேண்டியது தானே, எதற்கு ஐந்து மணிக்கே என்னை எழுப்பினாய்!”

“இல்லை நீ குளித்து கிளம்பி, உன் வண்டியில் என் வீட்டிற்கு வந்தாயென்றால், அப்படியே இருவருமாக கிளம்பி வண்டி எடுத்துவிட்டு வந்துவிடலாம்”

“தேவையில்லாமல் என்னை கொலைகாரி ஆக்காதே ஸ்ருதி. என் வீடு ஆப்ரிக்காவிலும், உன் வீடு அமெரிக்காவிலுமா இருக்கிறது. இரண்டு தெரு தள்ளி உன் வீடு.

ஸோரூமிற்கு ஒரு அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். பத்து மணிக்கு தான் ஸோரூம் திறப்பார்கள். நானெல்லாம் பரிட்சைக்கு கூட ஐந்து மணிக்கு எழுந்து படித்ததில்லை. நீ என்னடா வென்றால், ஒரு வண்டி எடுப்பதற்காக என்னை ஐந்து மணிக்கு எழுப்பி விட்டாய். இந்த பாவமெல்லாம் உன்னை சும்மாவே விடாது டி!”

“சரி, இந்த பஞ்சாயத்தெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். என்னுடன் வருகிறாயா இல்லையா?”

“சரி, சரி வரேன்!”

“அதை கொஞ்சம் சிரிச்சிட்டு சொல்றது!”

“வரேன் டீ, ஆனால் நீ மதியானம் என்னை ஹோட்டல் கூட்டி செல்ல வேண்டும்” என்று மெல்ல நூல் விட்டாள் ஸ்வேதா!.

“ம்ம்ம்..” என்று ஸ்ருதி யோசிக்க,

“நீ ரொம்ப யோசிக்கிற அதனால நீ தனியாகவே போய்க் கொள்”

“அய்யோ சாமி, உனக்கு மட்டன் பிரியாணியே வங்கி தரேன் டீ!”

“அது அந்த பயம் இருக்கணும்! காலை டிபனுக்கு அத்தையிடம் சொல்லி சப்பாத்தி செய்யச் சொல்லு” என்னு கட்டளையிட்டு விட்டு ஸ்வேதா போனை கீழே வைத்தாள்.

‘எல்லாம் என் நேரம் டீ’ என்று காது புகைய போனை கீழே வைத்துவிட்டு ஸ்ருதி குளிப்பதற்கு கிளம்பினாள். மனதின் மகிழ்ச்சியில் அவளுக்கு மேலும் உறக்கம் வரும் என்று தோன்றவில்லை.

சிறு வயதிலிருந்து ஓடியாடி விளையாடி , தோழமையாக மலர்ந்து , உற்ற தோழமையாக வடிவம் பெற்று.. இன்று வரை குறையாத நட்பு அவர்கள் இருவரதும்.

மேலும் சற்று நேரம் உறங்கிய ஸ்வேதா.. எழுந்து குளித்து அவசரமாகக் கிளம்பி பெற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு சென்றாள்.

“அம்மா நான் வெளியே கிளம்புகிறேன்” என்று வந்த மகளை புன்னகை முகமாக பார்த்தார் மஞ்சுளா.

“இன்னைக்கு விடுமுறை என்று சொன்னாயே?” கேள்வியாக வினவினார்.

இதே கேள்வியை முகத்தில் தாங்கி அவளின் தந்தை புருசோத்தமனும் பார்த்தார். முத்தவள் மஞ்சுளா, அடுத்து மூன்று ஆண்டு இடைவெளியில் ஒரு மகனும் என அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.

“ஸ்ருதிக்கு வண்டி எடுப்பதற்காக ம்மா!”

“அவங்க அப்பா கூட போவதாக தானே இருந்தது ?” இது புருசோத்தமன்

“டெல்லி… “ ஸ்ஸ் என பிளைட் போல் கைகளில் செய்து காண்பித்தாள் மகள்.

மஞ்சுளாவும் , புருசோத்தமனும் புன்னகைத்து கொண்டார்கள்.

“சரி இந்தா காபியை குடி” மஞ்சுளா காபியை பிளாஸ்கில் இருந்து ஊற்றிக் கொடுத்தார்.

அன்று சற்று நேரத்தில் நடக்கப் போகும் அனர்த்தங்களை உணராத இருவரும் புன்னகை முகமாக அவளை அனுப்பி வைத்தார்கள்.

காலை உணவை தோழி விட்டிலும் மதிய உணவை ஹோட்டலிலும் பார்த்து கொள்வதாக சொல்லிவிட்டு, மகிழ்ச்சியான மனநிலையுடன் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் ஸ்வேதா.

உன் வாசமாவாள்….

2 thoughts on “சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 1”

  1. ஹாய் அக்கா கதை ஆரம்பம் நல்லா இருக்கு
    ஆல் தி பெஸ்ட் அக்கா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 09

அத்தியாயம் – 09   தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயம் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு மக்கள் கூட்டத்தில் அமிழ்ந்து போயிருந்தது. அக்கம் பக்கமிருந்த இந்துக்கள் எல்லாம் தைப் பூச நன்னாளில் முருகன் அருளைப் பெறவெனக் கூடியிருந்தனர். ஊரைச் சுற்றி ஐந்து தேர்கள் வேறு

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 03ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 03

3 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   மறுநாள் காலையில் அனைவரும் தங்களது பணிகளை தொடங்க அக்சராவும் அனீஸ்,ரானேஷிடம் சொல்லிக்கொண்டு குமாருடன் அனுப்பிவிட்டு எஸ்டேடிற்கு கிளம்பினாள். அவள் அங்கே அனைவருடனும் பேசிக்கொண்டே வெளியில் வேலைகளை கவனித்துக்கொண்டே இருக்க ஆதர்ஷ், ஜெயேந்திரன், அவரது

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23

  கனவு – 23   அமுல் பேபியாகச் சுருட்டைத் தலையோடு பொக்கைவாய் சிரிப்போடு இருந்த அந்த குழந்தையைப் பார்த்ததும் வைஷாலிக்கு வேறு எதுவும் எண்ணத் தோன்றவில்லை. தான் கருவில் அழித்த சிசு தான் கண் முன் தோன்றியது. தான் செய்த