ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47


47 – மனதை மாற்றிவிட்டாய்

தனக்குள் சிறிது நேரம் பல மன போராட்டங்களில் இருக்க அவளிடம் வந்து நின்றனர் அபி, அம்மு, தர்ஷி, ரஞ்சி அனைவரும்.

அபி நேராக திவியை பார்த்துஎன்ன திவி, உன் லவர் தயா நினைச்சிட்டு இருக்கியா? ” என கேட்க

அதிர்ச்சியான திவிஉங்களுக்கு தயா பத்தி எப்படி தெரியும்? “

அம்முஅப்டின்னா உண்மையாவே நீ தயா ன்னு ஒருத்தர லவ் பண்றியா? “

உங்களுக்கு அவரை பத்தி எப்படி தெரியும், யாரு சொன்னது? “

நீ மொதல்ல நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லு, தயாவ லவ் பண்றியா? ” என ரஞ்சியும் கேட்க

ஆமா, நான் தயாவ லவ் பண்றேன். அவரை மட்டும் தான் லவ் பண்றேன். ஏன்? “

தர்ஷிஉனக்கே இது அசிங்கமா இல்ல, ஆதி மாமாவை கல்யாணம் பன்னிருக்க, இப்டி ஒருத்தன இன்னும் லவ் பண்றேனு சொல்ற? “

நானா என்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். அண்ட் தயா யாருனு தெரியாம பேசாதீங்க? “

அவன் யாரா வேணாலும் இருக்கட்டும்.”

தர்ஷி, அவரை மரியாதை இல்லமா பேசாத. எனக்கு பிடிக்காது. “

அம்முஎங்ககூட சண்டை போடற அளவுக்கு அவ்ளோ முக்கியமானவங்களா? அவ்ளோ பெரிய ஆளா? “

மெலிதாக புன்னகைத்த திவிகண்டிப்பா, எல்லாரையும் விட எனக்கு ரொம்ப ஸ்பெஷலான ஆள் என் தயா தான். என்னை எனக்காகவே என்னோட குறை நிறைகளோட சேத்தி அப்டியே ஏத்துக்க நினச்சவரு. என்னை உயிரா நேசிக்கிறவரு. என்கிட்ட காதலை மட்டுமே எதிர்பார்த்தவரு. என்ன எந்த சூழ்நிலையிலும் விடமாட்டாரு. அவரோட பேர், புகழ், அந்தஸ்து எல்லாத்தையும் விட்டுட்டு என்னோட அவரு போடற செல்ல சண்டை, என்கிட்ட குழந்தைத்தனமா எதிர்பார்க்கற அவரோட அன்பு இது எதுவுமே நான் வேற யார்கிட்டேயும் பாத்ததில்லை.” என அவள் கூற

அபிஇவ்ளோ தூரம் வர்ணிக்கறவ எதுக்கு டி என் தம்பிய கல்யாணம் பண்ண? “

திவிஅவரு தான் கம்பெல் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாரு.”

ரஞ்சிஇங்க பாரு திவி, இனி அந்த தயாவ மறந்திடு..”

நான் ஏன் தயாவ மறக்கணும்., எப்போவும் அது நடக்கவே நடக்காது. யாரு நினைச்சாலும் என் தயாவ என் மனசுல இருந்து அழிக்கமுடியாது. “

அபிஇவ்ளோ சொல்றியே அவனை பத்தி, உனக்கு கல்யாணம் நடந்ததாவது அவனுக்கு தெரியுமா? இல்ல அங்கேயும் மறைச்சுட்டேயா?”

அம்முகண்டிப்பா தெரிஞ்சுஇருக்கும் கா, நாம அன்னைக்கு இவளை பாக்க போயிருந்த போது மேடம் சொன்னாங்களே மறந்துட்டீங்களா ? ‘இதெல்லாம் நான் உங்களுக்காக தானே பண்ணேன். உங்ககிட்ட பிரச்சனைய சொல்லிட்டா போதும், நீங்க பாதுப்பிங்க, சீக்கிரம் வந்து என்ன கூட்டிட்டு போங்கன்னுஉருகிட்டு இருந்தாளே….

எப்படி சொத்துக்காக உன்ன அவனே இப்டி ட்ராமா பண்ண அனுப்பிச்சிட்டானா? என்ன ஜென்மமோ. ..இவங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட். ..”

அண்ணி…”

அவளின் கண்ணில் தெரிந்த கோபம் கண்டு ஒருவரும் ஒன்னும் பேசவில்லை.

கண்களை இறுக மூடி திறந்த திவிஇதோட கடைசி, என்னை என்ன வேணாலும் சொல்லிக்கோங்க, ஆனா என் தயாவ பத்தி தப்பா யாரு பேசுனாலும் என்னால ஏத்துக்கமுடியாது. அப்டி பேசுனா யாருன்னாலும் நான் சும்மா இருக்கமாட்டேன். இது ஆர்டர்னு நினைச்சாலும் சரி, ரெக்வஸ்ட் னு நினைச்சாலும் சரி, தயா ரொம்ப நல்லவரு. நான் அன்னைக்கு பேசுனது அவருக்கு தெரியாது. அதுக்கான காரணத்தை இன்னும் நான் அவர்கிட்ட சொல்லல. மொதல கோபப்பட்டாலும் அப்புற புரிஞ்சுப்பாரு எனக்கு தெரியும். அவரு என்ன நம்புவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. தயாவ பத்தி யாரும் எதுவும் தப்பா சொல்லாதீங்க…” என்று அவள் உள்ளே சென்று விட்டாள்.

அவளை சமாதானம் செய்யலாம் என நினைத்து அங்கு வந்த ஆதி இதை கேட்டு கடுப்பாக அவளை பின்தொடர்ந்து நேரே அறைக்கு வந்தான். “உன் மனசுல என்ன டி நினைச்சிட்டு இருக்க? எதுக்கு இப்போ அவங்ககிட்ட அப்டி சொன்ன?” என கத்த முதலில் புரியாமல் விழித்தவள் பின் மெலிதாக சிரித்துவிட்டுநான் உண்மையாத்தானே சொன்னேன். தயாவ லவ் பண்றேன்.”

விளையாடாத, கோபத்துல அறைஞ்சுட போறேன். “

ஆதி, மறந்துட்டீங்களா? உங்ககிட்ட நான் பொய் சொல்லமாட்டேனு சொல்லிருக்கேன். நீங்க தான் அவசரப்பட்டு என்ன கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டீங்க. இட்ஸ் ட்ரு. நான் தயாவ லவ் பண்றேன். அவருன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அவரு தான் என் உலகம். அவரு அளவுக்கு யாருமே என்கிட்ட அவ்ளோ காரிங்கா இருந்திருக்கவே முடியாது, அவரும் என்னை அவ்ளோ லவ் பன்றாரு. நான்னா அவருக்கு உயிரு தெரியுமா? நான் அவரோட எவ்ளோ ஜாலியா சண்டை போட்டுட்டு இருந்திருப்பேன். என்னோட நேரம் சரில்ல. சோ இப்டி எல்லாம் மாறிடுச்சு. பரவால்லநமக்குன்னு என்ன விதிச்சிருக்கோ அதுதான் நடக்கும்ல.” என பெருமூச்சுடன் நகர இவனுக்கு தான் பிபி எகுறியது.

அவன் பேச ஆரம்பிக்கும் போது மொபைல் சிணுங்க அவனும் போனுடன் சென்று ஆபீஸ் விஷயமாக பேச இந்த உரையாடல் இப்டியே நின்றுவிட்டது.

சற்று மாறிய மனநிலையில் திவி கீழே இறங்கி வர அனைவரும் அமைதியாக இருக்க இவள் அவர்களிடம் சென்றுகாபி குடிக்கிறிங்களா? ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரவா தாத்தா? ” என பேச சோபனா அங்கே வந்துஎன்ன மேடம் அதுதான் ஆதி என்ன பண்ணாலும் சொத்து இலேன்னு சொல்லிட்டாரே. நீ ஏன் இன்னும் எல்லார் மேலையும் பாசமா அக்கறையா இருக்கற மாதிரி சீன் போடற. போயி ரெஸ்ட் எடு. இதெலாம் வேஸ்ட் தான்.”

ஈஸ்வரிஅதெப்படி முடியும், திவிய பத்தி நீ என்னனு நினைச்ச, அவ்ளோ சீக்கிரம் விட்டுகுடுக்க மாட்டா. ஒன்னு நினச்சா முடிக்காம விடுவாளா? அதனால தான் அவங்க திட்டுனது எலாம் கூட மறந்திட்டு மறுபடியும் இப்டி வந்து வழிஞ்சுட்டு நிக்கிறா.”

திவிஉங்களுக்கு வேணும்னா அந்த மாதிரி பழக்கம் இருக்கலாம்.. எனக்கில்லைஅவங்களுக்கு என்ன திட்ட உரிமை இருக்கு திட்றாங்க. அதுக்காக நான் அவங்ககிட்ட கோவிச்சுக்கிட்டு போகணும்னு என்ன இருக்கு. நாங்க பேசுகிறோம். நீங்க இதுல தலையிடாதீங்க.”

அபிஏன் சொல்லக்கூடாதுதப்பு பண்ணத சொல்லிக்காட்டுனா இவளோ கோபம் வருதோ உனக்கு? “

அண்ணி, நான் கோபப்படல. பதில் தான் சொல்றேன். என்ன திட்றதுக்கு உங்க எல்லாருக்கு உரிமை இருக்கு. அவங்க ஏன் சொல்றாங்க. காபி வேணுமான்னு தானே கேட்டேன். அதுவும் தாத்தா பாட்டிகிட்ட. அதுக்கு ஏன் அவங்க தேவையில்லாம பேசுறாங்க.”

மதிஅவங்க என் அண்ணி, அவங்களுக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு. அவங்க சொன்னதுல என்ன தப்பு, எப்படியும் நீ நினைச்சதை அடைஞ்சிடணும்னு இருப்ப. இதுல இருந்து என்ன பிளான் பன்னிருப்பியோனு கேக்கறாங்கஏன்னா உன்னோட எந்த குணத்தை தான் நம்ப முடியுது. அவ்ளோ சுயமரியாதை பாக்கிறவ நாங்க இவ்ளோ திட்டுனதுக்கு அப்புறமும் வந்து நார்மலா பேசுறியே அதுனால கூட சந்தேகம் வந்திருக்கும். ஏன் எங்களுக்கே வருது.

நிச்சயம்னு உனக்கு ஊர்ல இருந்து சொன்னதும் ஒரு வாரம் அமைதியாவே இருந்த, சரி கல்யாண பொண்ணு கூச்சம்னு நாங்களும் பெருசா எடுத்துக்கல. நிச்சயத்தன்னைக்கு பெரிய கல்ல தூக்கிபோட்டுட்ட. அன்னைக்கு திட்டி போக சொன்னதும் அமைதியா போயிட்ட, பிரச்னை எதுவும் பண்ணாம இருந்தா. அப்புறம் ஒட்டு மொத்தமா என் பையன கல்யாணம் பண்ணிட்டு வந்து அதிர்ச்சி குடுத்தஇப்போ திட்டுனத வாங்கிட்டு போயிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி நீ இருக்கறத பாத்தா வேற என்ன பிரச்னை பண்ண போறியோனு பயமா இருக்கு. இந்த அழகுல உன்கிட்ட காபி வாங்கிக்குடிக்காதது தான் குறைச்சல் பாரு.”

தாத்தாசந்திரா, ஏன் மா இவளோ கோபப்படற? அம்மு அம்மாவ உள்ள கூட்டிட்டு போ

அமைதியாக அங்கே நின்றிருந்த திவியை பார்த்தவர் பெருமூச்சுடன் எழுந்து சென்றுவிட்டார்.

திவி மீண்டும் வந்து அறையில் அடைந்துகொண்டாள்.

மீண்டும்எது பேசுனாலும் இப்படி சண்டைன்னு நினைச்சாலே கஷ்டமாக இருந்ததுஎன அவள் புலம்பி கொண்டே அமர்ந்துவிட

அவளது உள் மனது எப்போவும் போல கூறியது என்ன திவி நீ, இப்போ எல்லாம் எதுக்கெடுத்தாலும் மூஞ்ச தூக்கி வெச்சுக்கற. எதுன்னாலும் மொதல்ல ஸ்டார்டிங் எங்கன்னு பாரு. அதுல இருந்து ஆரம்பி. பேசப்போகும் போது பொறுமையா இரு.

நான் கரெக்ட்டா தான் இருக்கேன். அந்த சொறி ஆண்ட்டியும், அவங்க பண்ணு அந்த ஸ்கூபியும் சீ. ..சோபியும் தான் நடுவுல வந்து குட்டைய கொளப்புறாங்க

அப்போ பஸ்ட் அவங்கள கண்ட்ரோல் பண்ணு…. ஆனா கத்தி கோபப்பட்டா அவங்க ட்ராக்க மாத்திவிட்ருவாங்க. சோ அங்கே பாரு. ..அப்புறம் மத்தவங்கள கவனிஎன்ன இருந்தாலும் கல்யாணம் பண்ணதுல எல்லாரும் கோபமா இருப்பாங்க. அதனால உடனே எதுக்கும் டென்ஷன் ஆகிடாத. …பீ ரிலாக்ஸ். ..டோன்ட் கிவ் அப்…..” என முடிவுடன் படுத்தவள் அப்டியே உறங்கிவிட்டாள்.

ஆபீஸ்க்கு அவசர வேலையாக சென்று வீடு திரும்ப ஆதிக்கு வெகுநேரம் ஆனது. மதி ஹாலில் அமர்ந்திருந்து அவன் வந்த பின்பே தன் அறைக்கு சென்று படுத்தாள். எப்படியும் அவன் 11.30 மணி பக்கம் ஆனதால் சாப்பிட்ருப்பான்னு அவருக்கு தெரியும். அதனாலே அவர் சென்றுவிட்டார். ஆனால் ஒருவார்த்தையும் பேசாமல் அவர் சென்றது மனதிற்கு கஷ்டமாக இருக்க, அம்மா இங்க இருக்காங்க இவ என்ன பண்ரா? என மாடிக்கு செல்ல அவளோ அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாள்.

அருகில் சென்று அவளை ரசித்தவன்எப்படி தூங்குறா? சாப்பிட்டாலா? இல்லையா? ஒருத்தன் வெளில போனானே என்ன ஆனான்னு அக்கறை இருக்கா. தூங்குமூஞ்சி. ஆமா இவளோ நாள் நீ ஆஃபீஸ்க்கே போனதில்லை பாரு புதுசா அவ உன்ன பத்தி நினைச்சதா உனக்கு வழி தெரியுமா? என மனம் கிண்டல் செய்ய இருக்கட்டும் ஏன் என்ன பத்தி இவதான நினைக்கணும். என பதில் கூறி விட்டுமுகம் காலைல இருந்த குழப்பம் இல்லையே. தெளிவா இருக்கு. என்னவோ பிளான் பன்னிருப்பா. என சிரித்துக்கொண்டு சரி பாப்போம். எல்லா பிரச்சனையும் முடிஞ்சா சரி….என்று பெருமூச்சுடன் அவளை ரசித்துவிட்டு அவளருகில் சென்று நெற்றியில் இதழ் பதித்து விட்டுலவ் யூ டா தியாஎன கூற அவள் தூக்கக்கலக்கத்துலையேலவ் யூ டூ தயாஎன்றாள்.

அவனுக்கு கைகள் இறுக மெத்தையை விட்டு எழுந்தவன் கோபமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் அவளை தட்டி எழுப்பினான்.

ஏய் எந்திரி டி“, என உலுக்க அவளும் கண் விழித்து ஆதியை காண ஆதி, “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன் ப்ளீஸ்என அவள் கூற இவனுக்கு இன்னும் கோபம் ஏறஏய், உன்ன ஒன்னும் நான் காலைல சுப்ரபாதம் பாட எழுப்பல. இது என் பெட். ஒழுங்கா போயி அந்த சோபால படுஎன காட்ட இவள் அவனை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் அமைதியாக சென்றுவிட்டாள்.

ஆதிக்கு தான் ரொம்ப திட்டிட்டேனோ? ஒரு வார்த்தைகூட சொல்லாம போறா? இல்லையே சோபால படு ன்னு தானே சொன்னேன். இருந்தாலும் இது என் பெட் நீ போ னு சொன்னா அவளுக்கு சங்கடமா இருக்காதா? இனிமேல் எப்போவுமே வரமாட்டா போ. சரி போகட்டும் எனக்கென்ன, நான் அவளுக்காக உருகிட்டு இருக்கேன். இவ தூக்கத்துல கூட தயா தயாங்கிறா மனுசனுக்கு கடுப்பாகாதா? டேய் அவள் ஏதாவது உன்ன வெறுப்பேத்த சொல்லிருக்க போறா. நந்து, சூரியனை பத்தி வர்ணிச்ச மாதிரி இதுவும் இருக்கும். ..அவங்களையும் இவ என் ஆளுன்னு தானே சொன்னா. அப்புறம் என்ன? நீ இப்டியே அவகிட்ட எரிஞ்சு எரிஞ்சு விழு அவளே போய்டுவா..ச்ச ச்சஅப்படியெல்லாம் என் செல்லம் போகமாட்டா. என மனம் திட்ட அதற்கு மேல் எதுவும் பிரச்சனை பண்ணாமல் அவளை பார்த்துக்கொண்டே சென்று இவனும் படுத்துகொண்டான். அவள் அமைதியாக உறங்க ஆதி தான் அவள் பற்றிய தவிப்பில் புரண்டுகொண்டே துயில்கொண்டான். ..

2 thoughts on “ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47”

 1. Reena says:

  Iva unmaya sonna family namba pohudhu ….adha vitutu kaduppethuringa…
  Waste of time

 2. Reena says:

  Simply dragging the story…..
  Yarume kekalana madam unmaya solla mataangala…
  “Daya “ adithaaya oda short form nu koodava therla

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.