Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 45

45 – மனதை மாற்றிவிட்டாய்

ஆதியுடன் அறைக்கு வந்த திவிக்கு செல்லமுடியா வேதனையாக இருந்தது. கோபம், கவலை என அனைத்து உணர்வுகளும் கலந்து இருக்க என்ன செய்வது என புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆதிக்கும் வருத்தம் தான். ஆனால் வேற வழியில்லை.

ஆதிநீ ரெப்பிரேஷ் ஆகிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறதுன்னா எடு.”

திவி அவனை இமைக்காமல் பார்த்தாள். அதை உணர்ந்தவன்பாரு எதையும் இதுக்கு மேல மாத்த முடியாது. இப்டியே என்ன மொறச்சுகிட்டே இருக்கறதுனாலும் பிரச்சனை இல்ல. அவங்கள பழையமாதிரி எப்படி உன்ன நம்பவெக்கலாம்னு பிளான் பண்ணாலும் சரி. ..இல்ல சொத்தை என்ன பண்ணலாம்னு பிளான் பண்ணாலும் சரி. இனி காலம் பூரா உனக்கு டைம் இருக்கு. சோ ரிலாக்ஸா எல்லாமே யோசிச்சு பண்ணு. இப்போ போ. எதையும் அன்னைக்கு பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும். இப்போ முறைச்சு என்ன பண்றதுஎன்றான்.

அவள் ஏதோ பேச ஆரம்பிக்கும் போது கதவு தட்டப்பட்டது.

ஆதி சென்று திறக்க அனுகீழ மகா அத்த மாமா எல்லாரும் வந்திருக்காங்க…” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

ஆதி திவியை பார்த்துவிட்டு அவன் முன்னாடி செல்ல, அவனை கண்டதும் மகாஎப்படி பா இருக்க, கொஞ்சம் உடம்பு முடில. மனசும் சரி இல்லை..அதனால தான் யார்கிட்டேயும் பேசாம அங்கேயே இருந்துட்டேன்.” என விசாரிக்க

ஆதிக்கு இவர்களிடம் எப்படி சொல்வது என அவன் அமைதியாக இருக்க, மகாவேஅவ அப்டி இருந்ததுக்கு யாரையும் தப்பு சொல்லமுடியாது. எனக்கு உன்ன நினைச்சுதான் ரொம்ப கவலையா இருந்தது. உங்கள கஷ்டப்படுத்திட்டாளேன்னு தான் கோபம். அண்ணி, அவளை விட குணத்துல, வசதி, தகுதி, படிப்புன்னு எல்லாத்துலயும் உசந்தவளா ஆதிக்கு பாக்கணும். யாரும் வேண்டாம்னு போனால்ள அவ எப்டியோ போறா. என கண் கலங்க கூறியவளை கண்டு அனைவருக்கும் இவரின் துயரம் கண்டு மனம் வலித்தது. .ஆதிக்கோ சொல்லவே வேண்டாம்

அவங்களுக்கு இருந்த ஒரே பொண்ணு, ஒட்டுமொத்தமா குறை சொல்ராங்க, வீட்டை விட்டு போய்ட்டா. எவ்ளோ கஷ்டம் அவங்களுக்கு. . இப்போவும் எனக்காக இந்த குடும்பத்துக்காக பாக்கறாங்களே..இவர்களிடம் என்னவென்று சொல்வது… ” என தவித்துக்கொண்டு நிற்கும்போதே திவியும் கீழே இறங்கிவந்தாள்.

அம்மா. ..”

“……………”

சத்தம் வந்த திசையில் பார்க்க கழுத்தில் தாலியுடன் அவள் ஆதியின் அருகில் வந்து நிற்க தாய்மார்கள், ஷிவா, ரஞ்சி, தர்ஷி அனைவர்க்கும் அதிர்ச்சி.

அவளிடம் வந்த ராஜீதிவி என்னது இது? எப்போ கல்யாணம் நடந்தது? ” கேட்க திவி தலை குனியபதில் சொல்லுடிஎன கத்தகாலைல தான். கோவில்ல நானும் ஆதியும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ..” என்றதும் அடுத்த நொடி பளார் என்றது.

ஆதி தான் திவியை தாங்கி பிடித்தான். திவிக்கு தன் பெரியம்மாவிடம் அதிக செல்லம். தன்னை கடிந்து கூட ஒரு வார்த்தை பேசத்தவள் இன்று அடிக்கும் அளவிற்கு நான் தப்பு செய்துவிட்டேன் என நொந்துகொண்டு இருந்தாள்.

எது டி கல்யாணம். இந்த மஞ்சள்கயிறு கட்டிட்டு வந்திட்டா கல்யாணமா? பெத்தவங்கள கஷ்டப்படுத்திட்டு யாரோட ஆசிர்வாதமும் இல்லாம சொத்துக்காக மட்டுமே கழுத்துல தாலிய வாங்கிட்டா அது கல்யாணமா? “

இல்ல ராஜீமா, என்ன நம்புங்க, நான் அந்த மாதிரி நினைக்கல. உங்க பொண்ணு நான் அப்டி தப்பு பண்ணமாட்டேன். “

உண்மைதான். நான் வளத்தின என் பொண்ணு திவி இந்தமாதிரி எல்லாம் பண்ணமாட்டா. ஆனா நீ என் பொண்ணு இல்ல. அன்னைக்கு அந்த வீடியோ பாத்தபோது இவங்க எல்லாரும் கோபப்பட்டு உன்ன திட்டும்போது கூட ஏதோ தப்பு நடந்திருக்கு. திவி அப்படிபட்டவை இல்லன்னு நம்புனேன். நீ கோபத்துல வீட்டை விட்டு வெளில போனாலும் தப்பு பண்ணமாட்ட, எதுன்னாலும் நீ தைரியமா பாத்துப்பஅதுக்குள்ள கொஞ்ச நாள்ல இங்க இருக்கற பிரச்சனைய முடிச்சிட்டு உன்ன கூப்பிடலாம்னு இருந்தோம். ஆனா அதுக்குள்ள நீ இப்டி பண்ணிடேள்லஉனக்கு பணம் அவ்ளோ முக்கியமா போட்ச்சா டி ?”

திவிஇல்ல மா, எனக்கு அது முக்கியமில்லைஎன்ன நம்புங்க…”

அவளை அடக்கியவள்பணத்துக்காக இல்லாட்டினா வேற எதுக்காக இப்படி யாருக்குமே தெரியாம, சொல்லாம அவசரமா கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குற? மதிக்கு ஆதி சம்பந்தப்பட்ட எல்லா விஷயமும் எவ்வளோ முக்கியம்னு உனக்கு தெரியாதா? இல்ல மறந்துட்டியா? அவங்க பையன் கல்யாணத்த பாக்கவிடாம அவசரமா பண்ற அளவுக்கு உனக்கு வேற என்ன அவசியமிருக்கு?”

மகா மதியிடம் வந்துநான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாலும் இந்த பாவம் போகாது.. இப்டிப்பட்டவள நானா பெத்தேன்னு நினைக்கும்போது உடம்பே எரியுது… ” என கண்கலங்க, அவரது கைகளை பற்றி மதியும் கண்ணீர் வடிக்க ஈஸ்வரி என்ன இப்படி ஒட்டிக்கிட்டு இருக்காளுங்க என நினைத்துநல்லா இருக்கே உங்க நியாயம்எப்படியும் உங்க புள்ள தானே…? உங்ககிட்ட சொல்லாமலா கல்யாணம் பன்னிருப்பா. இல்ல அவ கல்யாணம் நடந்ததே தெரியாத மாதிரி சரியான நேரத்துக்கு நீங்க எப்படி இங்கே வந்திங்க? “

இல்லைங்க, எங்களுக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா அப்போவே அவளை கொன்னாவது கல்யாணத்த தடுத்திருப்பேன். “

திவிஆண்ட்டி ப்ளீஸ், இதுல தப்பு பண்ணது நான் என்னை என்னவேனாலும் சொல்லுங்க. அவங்க யாரையும் எதுவும் சொல்லாதீங்க. யாருக்கும் எதுவும் தெரியாது. “

எப்படியும் கல்யாணம் பணியாச்சு. கொஞ்ச நாள் அழுது புலம்பி ட்ராமா பண்ணிடலாம். அப்புறம் மன்னிச்சிட்டோம்னு நாங்களும் வந்து சேந்துக்கறோம்னு எல்லாரும் பிளான் பண்ணி தானே வந்திருக்கீங்க. இப்டி சொத்துக்காக குடும்பமே நல்லா நடிக்கிறிங்க பா. “

போதும் நிறுத்துங்க. அந்த மாதிரி புத்தி இங்க யாருக்கும் இல்ல.”

அப்போ எங்களுக்கு இருகுங்க்ரியா? “

ஏன் அது உங்களுக்கே தெரியாதா? ” என சீற

மகாநிறுத்து, சும்மா இப்போ எதுக்கு எங்க மேல பாசம் இருக்கறமாதிரி நடிக்கரமானம், மரியாதை எல்லாமே போச்சு. இன்னும் என்ன இருக்கு.. ஒருவேளை உன் பங்குக்கு வர வேண்டிய சொத்தை எதிர்பார்த்து தான் எங்ககிட்ட நல்லவ மாதிரி நடிக்கிறியா? கவலைப்படாத மா, அது உனக்குன்னு சேத்தி வெச்சது. உனக்கு வந்து சேந்திடும். ஆனா இனி நீ எங்க வாழ்க்கைல இருக்காத. அதுமட்டும் தான் நீ எல்லாருக்கும் செய்ற நல்லது. ” என பொரிந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: