Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா – 24

அத்தியாயம் – 24

 

இசை நிகழ்ச்சி முடிவடைந்ததும் குடும்பத்தினர் அனைவரும் லீ யூ வோனின் வீட்டிற்குத்தான் சென்றிருந்தனர். இரவு பத்து மணி கடந்திருக்கவே இரவு உணவைப் பேசிக் கொண்டே உண்டனர். ஷானவியைத் தவிர எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.

 

லீ ஷானவியைத் தன்னருகே இருத்திக் கொண்டான். உள்ளே கணன்று கொண்டிருந்தவளோ ஒரு வார்த்தை கூட யாரோடும் பேசவில்லை. கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் வெட்கம் எனும் பெயரில் புன்னகையையே பதிலளித்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள். தமிழ்ப் பெண்ணாய்ப் போனதின் வசதி அது.  

 

எல்லோரும் உணவருந்தி முடியச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தங்கள் தங்களுக்கென்று கொடுத்திருந்த அறைகளுக்குத் தூங்கச் சென்றனர். எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சியான நாள் அயர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்திருந்தது.

 

ஷானவியின் அறை மாடியில் இருந்தது. அவளுக்கு எப்போதடா லீயைத் தனியாகச் சந்தித்துப் பேசுவேன் என்று இருந்தது. ஆயிரம் கேள்விகள் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன. அனைத்துக்கும் விடை அவன் ஒருவனாலேயே அளிக்க முடியும் என்றபடியால் அவனைக் காணத் தவித்தாள். அவனோ எதுவுமே நடக்காததுப் போலக் காட்டிக் கொண்டாலும் அவளைச் சந்திப்பதை இயல்பாய்த் தவிர்த்துக் கொண்டிருந்தான்.

 

தனது அறைக்குச் சென்ற ஷானவிக்கு தூக்கம் கொஞ்சமும் வரவில்லை. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் மனதோ அலைபாய்ந்தது. விடிந்தால்த் திருமணம். அவளை ஒரு வார்த்தை எதுவும் கேட்கவில்லை. ‘இந்தக் கொரியன் ரோபோ என்னதான் மனசில நினைச்சுக் கொண்டிருக்கிறான்?’ என்று எண்ணியவள் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தவள், தனதறைக்கு அடுத்த அறைக் கதவைத் தட்டினாள்.

 

அவள் மனதிலோ ஒவ்வொரு அறையாகத் தட்டிப் பார்த்தென்றாலும் லீயைக் கண்டுபிடித்து நன்றாக நாலு கேள்வி கேட்டு விட வேண்டும் என்று தோன்றியது. இவள் கதவைத் தட்டியதும் திறந்தது வேறு யாருமல்ல. சாட்சாத் லீ யூ வோனே தான். அவனைக் கண்டதுமே தாண்டவமாட ஆயத்தமாக அவன் ரீசேர்ட் கொலரைக் கொத்தாகப் பிடித்தாள் ஷானவி.

 

அவள் கோபம் புரிந்தவனாய் அவளை அப்படியே அறையின் உள்ளே இழுத்துக் கதவைச் சாத்தினான். அதற்கும் இவனிடமே கோபப்பட்டுக் கத்த ஆரம்பித்தாள்.

 

“நீ என்ன நினைச்சிட்டு இருக்கிறாய் உன்ர மனசில? என்ர பீலிங்ஸ் எல்லாம் உனக்கு வெறும் விளையாட்டப் போச்சுத் தானே. நீ என்னைத் தேடி வருவாய் என்று நம்பிக் காத்துக்கொண்டிருக்க வெடிங் கார்ட் அனுப்பிறாய். தேடி வந்தால் புரபோஸ் பண்ணுறாய். மாமா, அனுஷரா, ஆதூர் எல்லோருமே உன்ர பக்கம். அந்த யூ வூனும் உன்ர கையாள் என்று தெரியுது. ஒட்டு மொத்தத்தில நான் தவிச்சதை எல்லோருமாகச் சேர்ந்து வேடிக்கைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்திருக்கிறீங்க என்ன?”

 

கோபமாகத் தான் ஆரம்பித்திருந்தாலும் முடிக்கும் போது அவளையும் மீறி அழுகை வர அவன் எதிரேயிருந்து விலகி யன்னல்ப் புறமாகப் போனவள் மின் விளக்கின் ஒளியில்த் தெரிந்த அந்தப் பூந்தோட்டத்தின் மீதுப் பார்வையைச் செலுத்தினாள். மனதோ சுயபச்சாதாபத்தில் வருந்திக் கொண்டிருந்தது.

 

அப்போது அவள் பின்னே வந்தவன், அவள் தோள்களுக்கு மேலாகக் கைகளைப் போட்டு அவளைத் தன் வசமாய் அணைத்து அவள் தோள் வளைவில் முகம் புதைத்தான். முதலில் அவன் கைகளைத் தட்டி விட்டவள், அவன் பிடி இரும்பாய் இருக்கவும் தனது முயற்சியைக் கை விட்டு விட்டு உடல் விறைக்க நின்றாள். சிறிது நேரம் அப்படியே எதுவும் பேசாது நின்றவன் தன் மௌனம் கலைத்தான்.

 

“நீ கோபப்படுறது நியாயம்தான் ஷானு. எல்லாப் பிழையும் என்ரதான். மற்றவங்களுக்கு இதில எந்த சம்பந்தமும் இல்லை. நீ கொஞ்சம் பொறுமையாக நான் சொல்லுறதைக் கேளு சில்துப்ளே. முதல்ல வந்து உட்காரு. நீ ரொம்ப பத்திகேயா (களைப்பு) இருக்கிறாய்.”

 

கூறியவன் அவளைத் தன் கையணைப்பிலேயே அழைத்துச் சென்று அங்கிருந்த ஃஸோபாவில் அமர வைத்துத் தானும் அமர்ந்து கொண்டான். அவள் கரங்களைத் தன் கையில்ப் பொதிந்து கொண்டவன், முதல் முறையாகத் தன் மனம் திறந்து பேச ஆரம்பித்தான்.

 

“அம்மா  பற்றி முதலே உனக்குச் சொல்லியிருக்கிறேன் ஷானு. நான் யுனிவர்சிட்டி முடிச்சதும் மொடலிங், ஆக்டிங், ஸிங்கிங் என்று இந்தத் துறையில பிஸி ஆகிட்டேன். அப்பா பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று அதிலேயே பிஸி. சின்ன நட்டில இருந்து பெரிய கார் வரை எல்லாமே வோன் குறூப் ஒப் கொம்பனிஸ்ல புரடெக்ட்ப் பண்ணி எக்ஸ்போர்ட் பண்ணுறாங்க. கொரியாலயே நம்பர் வன் பிஸ்னஸ்மான் அப்பா தான். அவருக்கு நான் அவரிட பிஸ்னஸைக் கவனிக்க வேண்டும் என்று விருப்பம். அவர் குடும்பத்தைக் கவனிக்காமல் பிஸ்னஸ் என்று ஓடினதே எனக்கு பிஸ்னஸ் பக்கமே விருப்பம் இல்லாமல்ப் போய்ட்டுது.

 

நான் ஒரு படம் நடிச்சுக் கொண்டிருந்த போது அதில நடிச்ச ஹீரோயின் சூ ஆவோட எனக்குப் பழக்கமாச்சு. அம்மாவையும் யூ வூனையும் தவிர நான் யாரோடயும் நெருங்கிப் பழகினதில்லை. சூட்டிங் நடக்கிறப்ப எல்லாம் சூ ஆ என்னைப் பார்த்துப் பார்த்துக் கவனிச்சுக் கொள்ளுவாள். கொஞ்சம் கொஞ்சமாக நானும் அவளை விரும்ப ஆரம்பிச்சேன். மூணு வருசம் போச்சு இப்பிடியே.

 

அம்மா இறந்து கொஞ்ச நாள்ச் செல்ல அப்பா தான் இன்னொரு கல்யாணம் செய்யப் போறதாகச் சொன்னார். எனக்கு அப்பாவோட பெருசா நெருக்கம் இருந்ததில்லை. நானும் ஓகே என்றிட்டு வெடிங்குக்குப் போனால் அங்கே அப்பாட ரெண்டாவது வைஃபாக நின்றது சூ ஆ. என்னால எதையுமே நம்ப முடியலை. ஒரே வீட்டில நான் காதலிச்சவளையே என்ர ஸ்டெப் மதராகப் பார்க்க என்னால முடியலை.

 

சூ ஆக்கு என்ர பணம் தான் குறியாக இருந்துச்சே தவிர நான் இல்லை என்றது பிறகுதான் எனக்குப் புரிஞ்சுது. ஒரு நாள் தாங்க முடியாமல் ஏன் இப்பிடிச் செய்தாய் என்று அவளிடம் கேட்டே விட்டேன். ‘உனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணுற ஐடியா கொஞ்சமும் இல்லை. இந்தச் சொத்து, சுகத்தை அனுபவிக்கிறதுக்கு வெயிட் பண்ணிட்டிருக்க என்னால முடியாது. அதுதான் உன் அப்பாவையே கல்யாணம் பண்ணிட்டேன். இனி எல்லாம் எனக்குத்தான்’ என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்ச் சொன்னாள்.

 

அவள் இப்பிடி என்னை நம்ப வைச்சு ஏமாற்றினதை என்னாலக் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியலை. அவளைக் காணுற நேரம் எல்லாம், அவள் என்னைப் பார்த்து சிரிப்பது எனக்கு உயிரையே விட்டு விடலாம் போல அவமானமாக இருந்துச்சு. இனியும் அந்த வீட்டில இருக்கக் கூடாது என்று முடிவு செய்து தான் ஆமிக்குப் போனேன். அங்க ஒன்றரை வருசம் ட்ரெயினிங் முடிய பிரான்ஸ் வந்து வாழ ஆரம்பிச்சன்.

 

அம்மாவும் இல்லாமல் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த எனக்கு உன்னைச் சத்திச்சது வாழ்க்கைல பழையபடி ஒரு பிடிப்பை ஏற்படுத்திச்சு. இந்தளவு தூரம் வேகமாக எப்பிடி உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சனோ எனக்கு இன்னமும் கூட அது புரியாத புதிர். என்னைப் பற்றி எதுவும் தெரியாமலேயே என்னில் நீ அக்கறையாக இருந்ததும், என்னோடு சண்டை போடுவதும் எனக்கு வாழ வேண்டும் என்ற ஆசையை உண்டாக்கியது.

 

ஆனால் அதே நேரம் பழைய காதல் தந்த கசப்பு மனசில குழப்பத்தையும் ஏற்படுத்திச்சு. தனியாக இருக்கும்போது உன் காதல் உண்மை தானா என்று யோசித்துக் குழம்புவன். ஆனால் உன்முகத்தைப் பார்த்ததும் நீ தான் வாழ்க்கை என்று தோணும்.

 

அப்பிடியிருக்கத்தான் ஒரு நாள், யூ வூன் ஃபோன் செய்து அப்பா ஜப்பான்ல ஒரு மீட்டிங்குக்குப் போயிருந்த நேரம் ஸ்ரோக் வந்து ஹொஸ்பிடலில என்று சொன்னான். எனக்குப் போவதா? வேணாமா? என்ற குழப்பம் வேற. ஆனால் நான் போகவில்லை என்றால் இத்தனை நாளும் அப்பா கஸ்டப்பட்டுக் கட்டிக்காத்த பிஸ்னஸ் சாம்ராஜ்யமே அழிந்து போய் விடக் கூடிய ஆபத்தில இருக்கிறதாகச் சொன்னான்.

 

சரி நேரில் போய்ப் பார்ப்போம் என்று போனேன். அப்போ தான் டொக்டேர்ஸ்ட  மெடிக்கல் ரிப்போர்ட்ல சந்தேகம் வந்து சூ ஆவைப் பொலிஸ் பிடித்து விசாரிச்சதில ஒரு கட்டத்தில அவ உண்மையை ஒத்துக் கொண்டிட்டா.

 

அப்பாட்ட சொத்தில பங்கு வேணும் என்று சண்டை போட்டிருக்கிறா. டைவோர்ஸ் வேணும் என்று கேட்டிருக்கிறா. அப்பா முடியாது என்று சொல்லவும் அவருக்கு வைன்ல ஏதோ கலந்து குடுத்திருக்கா. நல்ல காலம் அப்பா முழுவதும் குடிக்கல. ஸ்ரோக்கோட போய் இப்ப குணமாகிட்டு இருக்கிறார். அப்பா படுத்த படுக்கையானதில பிஸ்னஸ் விசயம் எல்லாம் நானே கவனிக்க வேண்டியாதகப் போச்சு.

 

யூ வூன் அப்பாக்கு பிஏ ஆக இருந்தான். அவனுக்கு முதல் அவன்ட அப்பா இருந்தார். அதனால சின்ன வயசில இருந்தே நாங்க ரெண்டு பேரும் குளோஸ் ப்ரெண்ட்ஸ். அவனிட உதவியோட எல்லாப் பிரச்சினையையும் சமாளிச்சன்.

 

ஆரம்பத்தில உண்மையிலேயே எனக்கு உன்னோட கதைக்க நேரம் கிடைக்கல. உண்மையாவே வேறு எதைப் பற்றியும் சிந்திக்க டைம் இல்லாம இருந்துச்சு. உன்னோட நான் கதைக்க வெளிக்கிட யூ வூனுக்கு உன்னில நம்பிக்கை இல்லை.

 

அவன் என்னைக் கதைக்க விடேல்ல. ‘உன் காதல் பணத்துக்காக இல்லை. உண்மையானது தான்’  என்று தன்னால நம்ப முடியவில்லை என்றான். இன்னொரு தரம் ஏமாந்து நான் பைத்தியக்காரன் ஆகிறதுக்குத் தான் விட மாட்டேன் என்றான்.

 

நானும் ‘சரி ஷானுட லவ் உண்மை தான் என்று உனக்கு நிருபிக்கிறேன்’ என்று சொன்னன். யூ வூனிட ஐடியாப்படி தான் என்னோட ஒரு மூவி ஸ்டில்ஸ்ஸ உனக்கு என்கேஜ்மென்ட் என்று சொல்லி அனுப்பி வைச்சன். உனக்கு மட்டும்தான் அந்த வெடிங் கார்ட். மற்றவர்களுக்கு எல்லாம் உன்ர பேர் போட்டுத்தான் அடிச்சுக் குடுத்த.

 

நீ கொரியா விஸா எடுக்கிற வரை அனுஷரா, ஆதூருக்கும் எதுவும் சொல்லலை. அப்புறம் என் செல்வாக்கைப் பயன்படுத்தி விஸா எடுத்து அவங்களையும் உடன வர வைச்சன்.

 

எனக்குத் தெரியும் ஷானு. நீ எப்பிடியும் என்னைத் தேடி வருவாய். எங்கட காதல் தோத்துப் போய்ட விட மாட்டாய் என்று. அதே போல நீ வந்திட்டாய் ஷானு. அதுக்காக நான் உன்னைச் சந்தேகப்பட்ட என்று மட்டும் நினைக்காதை ப்ளீஸ்.

 

உன்னை இத்தனை மாசமாகத் தவிக்க விட்டப் பெரிய பிழை தான். அதுக்கு சின்சியர்ளி ஸொரி மொன்னம்மோர்.”

 

அவன் கூறி முடித்ததும் அவளையே பார்த்திருந்தான். கண்கள் கலங்கியிருக்க அவன் சொல்வதையே அமைதியாகக் கேட்டிருந்தவள், சில நிமிடங்கள் அவனையே வெறித்து விட்டு அமைதியாக எழுந்து சென்றாள். அவள் கோபப்பட்டுக் கத்தியிருந்தால்க் கூட லீக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்திருக்கும் போலத் தோன்ற, அவள் கையைப் பிடித்துத் தடுத்தான்.

 

“ஷானு…! இப்பிடி மௌனமாய் இருக்காதை. ஏதாவது சொல்லிட்டுப் போ… சில்துப்ளே…”

 

கையை உதறி அவன் பிடியை விடுவித்தவள், காளி தேவியானாள்.

 

“யூ வூன் தான் ஏதோ சொன்னான் என்றால் அதை ஒத்துக் கொண்ட உனக்கு அறிவு எங்க போச்சு? என்னைக் காதலிச்சது நீ தான் லீ. செய்யிறதெல்லாம் செய்திட்டு இப்ப சந்தேகப்பட்ட என்று நினைக்காதை என்று வெரி ஸிம்பிளாகச் சொல்லுறியே. எல்லாம் என்ர பிழை தான். எந்த ஒற்றுமையுமே இல்லாத உன்னைக் காதலிச்சு என்ர கலாச்சாரம், பண்பாடு எதையும் பற்றிக் கணக்கெடுக்காமல் உன்னோட வந்தன் பாரு. என்னைச் சொல்லோணும். அநாதை தானே, கேட்க நாதியில்லை என்று நினைச்சிருப்பாய். நீ பணக்காரன் என்று தெரிஞ்சதும் உன்னைத் தேடி வந்து உன்ர காலில விழுவன் என்று நினைச்சாய் போல.

 

நீ கே என்று தெரிஞ்சும் உன்னை உன்ர குணத்துக்காக மட்டுமே விரும்பின என்ர காதலையே சந்தேகப்பட்டுச் சோதினை செய்து பார்த்த நீ எனக்குத் தேவையில்லை லீ. இதைக் காதல் என்று கூடச் சொல்லலாமா என்று கூட எனக்குத் தெரியாது. நான் உன்னில வைச்சது வெறும் அன்பு தான். எதிர்பார்த்ததும் அன்பை மட்டும் தான். அப்பிடியிருக்க நீ என்னைப் போய் இந்தளவு தூரம் செக் பண்ணிப் பார்த்தது ரொம்ப அவமானமாக இருக்கு லீ. தயவுசெய்து இந்தக் கல்யாணத்தை நிப்பாட்டு. இனி இந்த ஜென்மத்தில என்ர முகத்தில முழிக்காமல் இருக்கிறது தான் நீ எனக்குச் செய்யும் உதவி.”

 

படபடவெனக் கூறியவள், அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல்த் தனது அறைக்குள்ச் சென்று படுக்கையில் வீழ்ந்தாள். இதைச் சற்றும் எதிர்பாராத லீயோ திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். ஷானவியைத் தான் அளவுக்கதிகமாகவே புண்படுத்தியிருந்தது புரிய கண்களோடு சேர்த்து மனமும் கலங்கிப் போய் அன்றிரவு தூக்கம் தொலைத்தான்.

 

மனம் மாறுவாளா ஷானவி? லீ யூ வோன் அவள் கரம் பிடிப்பானா?

 

1 Comment »

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: