Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 44

44 – மனதை மாற்றிவிட்டாய்

என்னதான் யோசித்தும் முயற்சித்தும் ஒன்றும் நடவாமல் போகவே கவலையில் அமர்ந்தே இருந்தவள் அப்படியே உறங்கிவிட்டாள். முழிப்பு வந்து பார்த்த போது மணி 4.15 என இருந்தது. என்ன செய்வது என எண்ணிக்கொண்டே இருக்க 6 மணியளவில் ஆதி வந்துநின்றான். குளித்து முடித்து இருந்தவளிடம் புது புடவையை கொடுத்தவன்சீக்கிரம் ரெடியாகு. நான் போயி இரண்டுபேருக்கும் டிபன் வாங்கிட்டு வரேன்.” என்று சென்றுவிட்டான்.

இல்ல, பசிக்கல. ப்ளீஸ் கம்பெல் பண்ணாதீங்க. எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க சாப்பிட்டு வாங்க. ” என கூறியவளின் முகத்தை கண்டவன் எதுவும் கூறாமல் வெளியேறிவிட்டான்.

மீண்டும் அவன் வந்து கதவை தட்ட வெளிப்பட்ட திவியை கண்டவன் அப்படியே மெய்மறந்து நின்றான்.

ஒரு நிமிடம் தான், பின் அவள் முகத்தை திருப்பி கொண்டு உள்ளே செல்ல பின்னோடு சென்றவன்உன்னோட திங்ஸ் பேக் பண்ணிடு ஹவுஸ் ஓனர்கிட்ட பேசிட்டேன். ” ரெஜிஸ்டரேஷன் முடிச்சிட்டு அப்படியே வீட்டுக்கு போகணும். ஞாபகம் இருக்கில்ல. சீக்கிரம் இன்னும் 15 மினிட்ஸ்ல எல்லாம் எடுத்துவெச்சுட்டு கோவிலுக்கு கிளம்பணும்.” என அவன் துரிதப்படுத்த இவளும் கிளம்பினாள்.

காரில் இருவரும் செல்லும் போது மீண்டும் ஒருமுறை என திவி கேட்டாள், இல்லை கெஞ்சினாள். “ஆதி, யோசிங்க ஆதி, நம்ம பேரன்ட்ஸ் நமக்கு எந்த குறையும் வெக்கல. அவங்க ஆசைப்பட்டது நம்ம கல்யாணத்த பாக்கணும்னு தான். ஏதோ கொஞ்சம் கொழப்பத்துல அது நின்னிடிச்சு. எப்படியாவது புரியவெச்சு அப்புறம் அவங்க ஆசிர்வாதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம். இப்போ வேண்டாமே. ஏற்கனவே அவங்களுக்கு நிறையா அதிர்ச்சி. இதுல இதுவுமா? ப்ளீஸ் ஆதி…” என அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க அவன் அமைதியாக காரை ஓட்டியவன் ஜூஸ் பாட்டில் ஒன்றை எடுத்து அவளிடம் குடுத்து குடிக்க சொன்னான்.

எதுவும் நீ சாப்படல. சோ இதவாது குடி

அவளுக்கு கோபம் தலைக்கேறியது. தான் கூறுவது என்ன இவன் செய்வது என்ன. இதுக்கு மேல இவன்கிட்ட பேசுறதே வேஸ்ட் என திரும்பி அமர்ந்துகொண்டாள்.

என்ன, எதுவும் சாப்பிடாம மயக்கம்போட்டு விழுந்து கல்யாணத்த நிறுத்த ட்ராமா பண்ண பாக்கறியா? நம்ம கல்யாணத்துல நீயாவது தெளிவா அத பார்க்க இருக்கணும்னு நினைக்கறேன். மயக்கம் போட்டாலும் நான் கவலைப்படமாட்டேன். உன் கழுத்துல தாலி கட்டிட்டு தான் ஹோச்பிடலே கூட்டிட்டு போவேன். சோ அந்த பிளான் எல்லாம் ட்ராப் பண்ணிட்டு ஒழுங்கா குடி.”

திவிக்கு ஏன் ஆதி இப்டி பிடிவாதம் பண்ராரு? என கோவம், கவலை என அனைத்தும் தோன்ற அமைதியாக அதை குடிக்க, கோவிலை அடைந்தனர்.

அதன் பிறகு திவி எல்லாமே ஒரு மெஷின் போல சொன்னதை மட்டும் செய்ய கோவிலில் அம்மன் சன்னிதியில் ஆதி, திவியை தன்னவள் ஆக்கிக்கொண்டான். திவிக்கு தெய்வத்தை வழிபட கூட தோன்றவில்லை. அவன் சொன்னதை மட்டும் செய்துவிட்டு திருமணத்தை பதிவு செய்ய அனைத்தும் முன்னமே அவன் சொல்லி வைத்திருந்ததால் அதையும் முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்றனர்.

கார் வீட்டு வாசலில் நிற்க திவிக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஆதி அவளின் கைகளை பற்றினான். அவனது கைகளை இறுக பற்றியவள்ஆதி, கடைசியா கெஞ்சி கேக்கறேன். அதான் தாலி கட்டியாச்சுல்ல. நான் தனியாவே இருக்கேன். இப்போதைக்கு யாருக்கும் இது தெரியவேண்டாம். எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு அவங்க சம்மதத்தோட அப்புறம் சொல்லிக்கலாம். அவங்க பாவம் ஆதி சங்கடப்படுவாங்க.” என கூற

அவனுக்குமே அவளை பார்க்க சங்கடமாக இருந்தது. இருந்தும் அவளது கையை அழுத்திவிட்டுஇறங்கி வா, உள்ள போலாம்என அவன் பிடியிலேயே இருக்க இவளும் இறங்கி வர வீட்டிற்குள் நுழைந்தவர்களை கண்ட அனைவரும் அதிர்ச்சியாயினர்.

பாட்டிராஜா, என்ன பா இது?” என திவி கழுத்தில் இருந்த தாலியை பார்த்து கேட்க

ஆதிதிவிய கல்யாணம் பண்ணிட்டேன் பாட்டி.”

சேகர்டேய், என்ன நினைச்சு இப்படி பன்னிட்டு வந்திருக்க, என்ன பிரச்சனை நடந்திருக்கு. எல்லாரும் என்ன மனநிலைமைல இருக்கோம்னு தெரிஞ்சுதான் இப்டி பன்னிருக்கியா?”

ஆதிஅந்த பிரச்சனை எதுவாயிருந்தாலும் என் முடிவு இதுதான் பா.. நான் எடுத்த முடிவுல மாறமாட்டேன். இவளை தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னேனே. அதேதான் இப்போ பண்ணிட்டு வந்திருக்கேன். இதுல நீங்க சங்கடப்பட எதுவுமில்லை.”

அம்முஎன்ன அண்ணா, நீ இப்டி பண்ணுவேன்னு எதிர்பாக்கல. “

அபிஏன் ஆதி, சொத்துக்காக அவ நம்மகூட பழகுனானு அவளே சொல்லிருக்கா, நம்ம மொத்த குடும்பத்தையும், ஏன் அவ குடும்பத்தியே அவ முழுசா ஏமாத்திருக்கா. இப்படிப்பட்டவ உனக்கு வேணுமாடா? “

அக்கா, அவ அப்படி சொத்துக்கு ஆசைபட்டான்னு அவ வாயில இருந்து சொன்ன அந்த வார்த்தை மட்டும்தான். இதுவரைக்கும் அவளோட பீஹவியர்ல அந்த மாதிரி ஏத்துவமில்லேல. ஒருவேளை அது பொய்ன்னு ப்ரூவ் ஆனா திவி நீங்க எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரி இந்த வீட்டு மருமகளாய்ட்டானு சந்தோசப்படுங்க. இல்ல அவ சொத்துக்காகத்தான் பழகுனான்னா அது அவளுக்கு கிடைக்காது. ஏமாத்தணும்னு நினச்சவங்கள நான் யாரானாலும் மன்னிக்க மாட்டேன். அதுக்கு தண்டனையா அவ இந்த வீட்ல இருக்கட்டும் சொத்துல இருந்து ஒரு பைசா கூட அவளுக்கு போகாது.. அவ என் வீட்ல ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி தான் இருப்பா. எனக்கு பொண்டாட்டியா இல்ல. ஆனா எதுன்னாலும் சரி, அவ இங்க தான் இருக்கனும்.” என முடிவாக கூறினான்.

தாத்தாகடைசியா என்ன சொல்ற, நீ பண்ணது உனக்கு சரினு தோணுதா ஆதி? “

தாத்தாவை நேருக்கு நேர் பார்த்தவன்எனக்குன்னு கிடைக்கவேண்டிய பொருளை நான் எடுத்துக்கிட்டேன். ஒருவேளை என்ன ஏமாத்தனவங்கள உள்ள விட்ருக்கேனு நீங்க நினச்சா, அவங்கள ஏன் டா இவனை ஏமாத்த நினைச்சோம்னு சொல்ற அளவுக்கு என்னோட பீஹெய்வியர் இருக்கும். யாருக்கும், எதுக்காகவும் நான் பயந்து போகமாட்டேன் தாத்தா. அதனால நான் பண்ணது சரிதான் தாத்தா.” என்றான்.

அவனது உறுதி கண்டு யாரும் அவனிடம் அடுத்து எதுவும் கேட்கவில்லை.

ஆதிஅம்மா. …”

மதிநீ எப்போ நாங்க யாருமே இல்லாம கல்யாணம் பண்ணியோ, அப்போவே உன் அம்மா உனக்கில்லைனு தெரிஞ்சிருக்கணுமே ஆதிநீ என் புள்ளையே இல்லடா…”

திவிஅத்தை, ப்ளீஸ் அவரை. ..”

அவளை கையமர்த்தி தடுத்தவள்நீ என்ன அப்டி கூப்பிடாத, உன்ன என் பொண்ணுங்கள விட உசத்தியாதான் நினைச்சேன். அவ்வளோ நம்பிக்கை, என்னைவிட உன்ன ரொம்ப நம்புனேன். எனக்கப்புறம், இந்த குடும்பத்தை சண்டை சச்சரவு இல்லாம பத்துக்கறவ, என் மகனை நல்லா புரிஞ்சுகிட்டு அவனை சந்தோசமா வெச்சுக்கறவ நீயா மட்டும் தான் இருக்கமுடியும்னு நம்புனேன். அதனால தான் ஆதிக்கு உன்ன பிடிக்கறமாதிரி தெரிஞ்சதும் நான் இவர்கிட்ட கூட கேக்காம சந்தோசமா ஆதிகிட்ட உங்க கல்யாணத்துக்கு சரினு சொன்னேன். யாரும் யாருகிட்டேயும் பேசி முடிவுபண்ணல. நான் மட்டுமில்ல, அவரு, என் அப்பா அம்மா என் பொண்ணுங்கன்னு மாப்பிளைன்னு எல்லாருக்குமே உன் பேர மட்டும் சொன்னதுதான். யோசிக்கக்கூட இல்லாம சரினு சொன்னாங்க. அந்த அளவுக்கு நம்பிக்கை உன்மேல.

ஆனாலும் உன்ன தப்பு சொல்லமாட்டேன் திவி. நீஉங்க மருமகளா வரப்போறேன், சொல்றத கேக்கலேனா உங்க பையனை உங்ககிட்ட இருந்து பிரிச்சுவெச்சுடுவேன், உங்க சொத்தை எழுதி வாங்க போறேன்னுசொன்னதெல்லாம் விளையாட்டுக்குன்னு நினைச்சுட்டேன். ஆனா இப்போதான் தெரியுது உண்மைன்னு. எல்லாரும் நான் என் பையனை பத்தி சொல்லும் போது கிண்டல் பண்ணுவாங்க, கேக்கமாட்டாங்க, ஆனா நீ கேக்கும்போது உன்னோட பொறுமை, அடுத்தவங்க மனச புரிஞ்சுக்கற மனசு, ஆதிய பத்தி தெரிஞ்சுக்க இருந்த ஆர்வம், அவன்மேல பாசம்னு உன்ன பத்தி பெருமையா நினச்சேன். ஆனா இப்போதான் புரியுது நீ சொத்துக்காக தானே அவனை அடைய பிளான் பண்ணிருக்க. என்ன பேசுனாலும் இதுக்கு மேல என் பையன் எனக்கு இல்லேல்ல. அவன் கூட இருந்து வளர்த்த தான் என்னால முடியல. அவன் கல்யாணத்த எந்தமாதிரி பண்ணனும், எப்படி இருக்கணும்னு எவ்வளோ கனவு மத்தவங்க எல்லாருக்கும் தெரியுமோ இல்லையோ உனக்கு தெரியும்ல திவி, அப்புறமும் ஏன் டி இப்டி என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்ச?” என கண்கலங்க கேட்டவரிடம் திவி சிலையாய் நிற்க

ஆதிஇதுல அவ தப்பு எதுவுமில்லை, அவ வேண்டாம்னு தான் சொன்னா. ..ஆனா நான்தான் கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்த பண்ணேன். அவளை இந்த விசயத்துல எதுவும் சொல்லாதீங்க….”

அபி. …அவளுக்கு ஒண்ணுமே தெரியாது பாரு, பச்ச குழந்தை..டேய் அவ பொய் சொன்னது, நடிச்சது, ஏமாத்துனது வேணா யாருக்கும் தெரியமா இருக்கலாம். ஆனா அவளுக்கு ஒன்னு வேணம்னா அத கட்டாயப்படுத்தி யாராலயும் கொடுக்கமுடியாது. அவ அந்த அளவுக்கு கோழை இல்ல. பிடிக்காததை ஏத்துக்கற அளவுக்கு அவ தியாகம் பண்ணனும்னு எல்லாம் நினைக்கவும் மாட்டா. அப்டி பண்றது தான் தப்புன்னு சொல்றவ. அது எங்க எல்லாருக்கும் தெரியும். அவளுக்கு உன்ன அடையணும்னு நினைப்பு ஒரு துளிகூட இல்லாம இந்த கல்யாணத்த அவ பன்னிருக்கமாட்டா. பிடிக்காட்டி எப்டின்னாலும் அவ தடுத்திருப்பா. ஆனா அத ஏன் பண்ணல. சும்மா வாய் வார்த்தைக்கு வேணாம்னு சொல்லிட்டு சொத்தை விட மனசில்லாம கிடைச்ச சான்ஸ்ஸ யூஸ் பண்ணிட்டா.”

பாட்டிவிடுமா, இதுக்கு மேல இத பத்தி யாரும் பேசவேணாம். நடந்த எதையும் யாராலையும் மாத்த முடியாது. அவங்க அவங்க வாழ்க்கையை அவங்களே எடுத்துகிட்டாங்க. இதுல நாம சொல்றதுக்கு ஒன்னுமில்ல.” என முடிக்க அனைவரும் அவரவர் அறைகளுக்கு சென்றுவிட்டனர். ஈஸ்வரியும், சோபனாவும் தங்களுக்கு வேலையே இல்லாமல் அவர்களே சண்டை போட்டுக்கொண்டது மகிழ்ச்சியே எனினும் ஆதியை கல்யாணம் செய்ய வேற பிளான் போட்ட சோபியின் ஆசையில் இப்போதும் திவி மண்ணை அள்ளிப்போட்டுவிட்டாள். என கடும்கோபத்தில் இருந்தாள் சோபி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: