Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Skip to content

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 41

41 – மனதை மாற்றிவிட்டாய்

அர்ஜுன் வர இருந்த நாட்களில் வேலை முடியாததால் இன்னும் அங்கேயே தங்கவேண்டியதாக போய்விட்டது. அர்ஜுனிடம் பேசிய எவரும் அவனிடம் இதை கூறவில்லை. அவன் நேரில் வந்த பின்பு கூறிக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர். அம்முவிற்கும் அதுவே சரியென பட்டது. திவியிடம் தனியாக பேசியவனும் அவளும் இது பற்றி எதுவும் கூறாமல் விட்டுவிட்டாள். அவனது வேலை பாதிக்கவேண்டாம் என. அவனுக்கும் வேலை அதிகம் இருந்ததால் யாரும் அதிகம் பேசாததை பெரிதாக கவனிக்கவில்லை. தெரிந்திருந்தால் இந்த பிரச்சனைக்கு அன்றே முற்றுப்புள்ளி வைத்திருப்பான். உண்மை அறிந்தவன் அவன் ஒருவனே. ஆனால் பிரச்னையை அறியாதவனும் அவன் ஒருவனே.

அபி, அரவிந்திடம் கேட்டு நச்சரித்துகண்டிப்பா திவி கிட்ட பேசுனா ஏதாவது நாம ப்ரோப்லேம சால்வ் பண்ண முடியுமான்னு பாப்போம். ஆதியை இப்டி பாக்கமுடிலேங்க. அதுவுமில்லாம திவியும் தான் தனியா கஷ்டப்படுவாள்ல? அவங்க வீட்லயும் எல்லாரும் மனசொடுஞ்சு போய்ட்டாங்க. அவ எங்க இருக்கான்னு பாருங்க. நாம போயி பாக்கலாம் என கூறஅவனுக்கும் சரியென பட விசாரித்து அன்று மதியமே வந்து திவி இருந்த இடம் தெரிந்துவிட்டது. அவ ஆபீஸ் போயிருப்பா. ஈவினிங் போகலாம் என்று கூற இவளும் அம்முவுடன் தயாராகி மூவரும் மாலையில் அவளை காண சென்றனர்.

போகும் வழியெங்கும் அவர்கள் புலம்பிக்கொண்டே சென்றனர். அவர்களால் முழுதாக திவியை மன்னிக்கவோ, தவறு செய்தவள் என கூறவோ முடியவில்லை. அதைவிட தமது சகோதரன் அவளை இன்னும் விருப்புகிறான் என்பதே அவர்கள் இவளை தேடி வந்த முக்கிய காரணம். சொத்துக்காக ஏன் பிரியவேண்டும்?, ஒருவேளை அவளுக்கு சொத்து வேண்டுமென்றால் அதையும் கொடுத்துவிடலாம். ஆதியுடன் அவள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என நினைத்தனர்.

அவள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவர்கள் அது ஒரு சின்ன சந்துக்குள் செல்லும் என்பதால் இவர்கள் நடந்து சென்று பார்க்க அது ஏதோ காலனி போல இருந்தது. இவள் இருந்தது ஒரு அறை, வீடு என்று எல்லாம் கூற முடியாது. ஒரு ஆள், அதுவும் எமெர்ஜெண்சியில் வந்ததால் இதுவே போதுமென இருந்துவிட்டாள். பின்னால் பார்க் இருந்தது. குழந்தைகளை பார்க்க இவளுக்கு மனது லேசானது போல தோன்ற வேற எதுவும் யோசிக்காமல் இங்கேயே தங்கிவிட்டாள்.

இருபுறமும் ஜன்னல், ஒரு வாயிற்கதவு, வெளியே சின்னதாக ஒரு வராண்டா என இருந்த அவள் இருந்த வீட்டை காட்ட அபியும், அம்முவும் சென்று கொஞ்சமாக திறந்திருந்த கதவை மெதுவாக நகர்த்தி பார்க்க திவி ஜன்னலின் அருகே அமர்ந்த வெளியே பார்க்கைவேடிக்கைபார்த்துகொண்டு, தன் கையில் ஏதோ ஒரு போட்டோவை வைத்து தடவிக்கொண்டு இருந்தாள். அவளை அமைதியாக கவலையோடு பார்த்திராதவர்கள் மனம் வலிக்க அங்கேயே நின்றனர்.

திவி கையில் வைத்திருந்த படத்தை பார்த்துஏன் தயா, நீங்க எப்போ இங்க வருவீங்க? உங்கள பாத்து நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டா போதும், மீதியை நீங்க பாத்துப்பீங்க எனக்கு தெரியும். இதெல்லாம் நான் உங்களுக்காக தானே பண்ணேன்னு உங்களுக்கு தெரியுமா? எல்லாருமே என்ன திட்டி அனுப்பிச்சிட்டாங்க. அவங்க யாருமே என்ன நம்பாட்டி போறாங்க. என்னை எதுவும் பாதிக்காது. உங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன் தயா. என்னால இங்க இருக்க முடியல. மூச்சு முட்டுது. ப்ளீஸ் தயா உங்களுக்காக இத்தனை வருஷம் வெயிட் பண்ணது பத்தாதா? இன்னும் வெயிட் பண்ணனுமா? ப்ளீஸ் தயா. நீங்க என்கூட இருந்தா போதும். நான் எந்த பிரச்னைனாலும் தாங்கிப்பேன். மத்த எல்லாரையும் நான் சமாளிச்சுடுவேன். நீங்க வந்து என்னை கூட்டிட்டு போய்டுங்க தயா ப்ளீஸ்..” என அவள் அந்த போட்டோவிடம் உருகி தனது அன்பை கொட்டிகொண்டு இருக்க இதை கதவருகில் நின்று கேட்ட அம்மு, அபி, அரவிந்த் அப்படியே அதிர்ச்சியாகி வந்ததே தெரியாவண்ணம் சென்றுவிட்டனர்.

அரவிந்த், அபி, அம்மு மூவருக்கும் திவியின் இந்த பேச்சு சுத்தமாக நம்பவே முடியவில்லை. ஆனால் அவள் ஒருவனை காதலிக்கிறாளா? யாருக்குமே தெரியாதே?அன்று மாப்பிள்ளை எப்படி இருக்கவேண்டும் யாரையேனும் காதலிக்கிறாயா என கேட்ட போது கூட இல்லை என்றாளே. நம்ம எல்லாரையும் எவ்வளோ முட்டாளாக்கிருக்கா? என அபியும் அம்முவும் புலம்ப அரவிந்தஎதுக்கும் இத பத்தி திவிகிட்டேயே நேரடியா கேட்டுட்டு முடிவெடுப்போம். கொஞ்சம் பொறுமையா இரு.”

என்ன பேசுறீங்க நீங்க? அவ இப்போ பேசுனத பாத்திங்கள? அப்புறமுமா இப்படி சொல்றிங்க? போட்டோலையே இப்படி உருகுறா? அப்டின்னா எந்த அளவுக்கு அவ விரும்பிருப்பா. ச்சஎன் தம்பி வாழ்க்கை தான் இப்போ இப்டி ஆயிடிச்சு. அவன்தான் இவளை நினச்சு உருகிட்டு இருக்கான். ஆனா இவ எவனையோ நினைச்சுகிட்டு எல்லாரையும் தூக்கிஎறிஞ்சுட்டாள்ல. மொத்த குடும்பத்தையுமே ஏமாத்திட்டாளே. இனிமேல் அவ மூஞ்சிலையே முழிக்கக்கூடாது. ” என கத்திமுடித்தாள். அம்முவும் அதையே ஆமோதித்தாள். அவனுக்கும் இதற்கு பதில் இல்லை என்பதால் என்ன செய்வது என அமைதியாக இருந்தான்.

அன்று இரவு வெகுநேரம் கழித்தே வீடு வந்த ஆதி தனக்காக காத்திருந்த அம்மா, பாட்டியிடம் நீங்க எல்லாரும் சாப்டிங்களா? என வினவ சாப்பிட்டோம் டா. வா உனக்கு எடுத்துவெக்கிறேன் என அழைக்க எனக்கு பசிக்கல மா. யாரும் டிஸ்டர்ப் பண்ண வேணாம். நான் கொஞ்சம் தனியா இருக்கனும் என கூறிவிட்டு விருட்டென்று அறைக்கு சென்றுவிட்டான்.. அவனது பிடிவாதம் அறிந்தவர்களாதலால் யாரும் எதுவும் கூறாமல் அமைதியாக சென்றுவிட்டனர்.

அறைக்கு வந்தவன் அவனது கோபத்தை அங்கு இருந்த பொருட்களிலும், மெத்தையிலும் காட்டினான். கோபம், ஆத்திரம் அவனால் அடக்கமுடியவில்லை. பால்கனிக்கு சென்றான். அங்கு இருந்து கீழே பார்க்கவும் திவியின் விளையாட்டு, சிரிப்பு அவள் அங்கு இருக்கும்போது தான் பார்த்து ரசித்ததை எண்ணி அவனால் இப்போது ஜீரணிக்க முடியவில்லை.

மாலையில் அவனும்தான் திவி பேசியதை கேட்டான். ஆமாம், அவளை நிச்சயம் அன்று இருந்து கோபத்தில் அடித்துவிடுவோமோ என்று தான் போக சொன்னான். அவளும் சென்றுவிட்டாள். அனைவரும் கோபம், சோகம், அதிர்ச்சி என இருந்த நிலையிலும் ஆதிக்கு அப்போதும் தியாவின் ஞாபகமே. அதனாலே அன்றே கிளம்பி அலைந்து அவள் எங்கு தங்குகிறாள் என பார்த்துவிட்டு பிரச்சனை இல்லை என்றவுடன் தான் இவன் வீட்டிற்கு வந்தான். ஏதோ ஒன்று தடுக்க அவளிடம் பேசவில்லை, ஆனால் தினமும் அவளை ஆபீஸ், இல்லை அவள் தங்கியிருந்த வீடு, பார்க் அருகில் என எங்காவது நின்று அவளை பார்த்துவிட்டு தான் வருவான். அது ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை. அவளும் அனைத்து வேலைகளையும் செய்தாலும் நார்மலாக காணப்பட்டாலும் ஏனோ அவளது முகத்தில் இருந்த பழைய மகிழ்ச்சி இல்லாமல் இருந்தது. அனைவரையும் பிரிந்த வருத்தம் என நினைத்தான்.

எந்த நிலையிலும் அவன் அவளை விடவேண்டுமென நினைக்கவில்லை. எப்படி இந்த பிரச்சனைய சால்வ் பண்றது, எல்லாரும் அவ மேல கோபமா இருக்காங்க. அதனால் கொஞ்ச நாள் தனியாக இருக்கட்டும்னு தான் நினைத்தான். அவனுக்கு அவள் மேல் இருந்த காதல் மட்டும் குறையவில்லை. பதில் தெரியாத பல கேள்விகள், அவளது புதிரான பேச்சு, தன்னிடம் அவளுக்கு இருந்த உரிமை, அக்கறை, அதீத அன்பு, அவளது சின்ன சின்ன சண்டைகள், நடிப்பு, எல்லாமே விளையாட்டு என நினைத்தான். அதனால் தான் அவளை பற்றிய சில சந்தேகங்களை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவளே இன்று கூறுகிறாளே.

எப்போதும் போல அவளை பார்க்க சென்ற ஆதி, அங்கே அபி, அம்மு, அரவிந்த் அனைவரும் வர இவன் சுற்றி சென்று ஜன்னலுக்கு அருகில் மறைந்து நின்றுகொண்டான். இவள் பேசியதை அவனும் கேட்க அவனாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனால் அப்போதும் அவளை இன்னொருத்தனோடு எண்ணி பார்க்கமுடியவில்லை. இருந்தும் தன் தியா என்னை பற்றி எண்ணவில்லை என்பதை ஏற்கவும்முடியவில்லை.

ஏன்டி தியா இப்டி பண்ண? நீ என்ன லவ் பண்ணணும்னுதானே நான் நினச்சேன். உனக்கு எல்லாமே நானா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஒரு சின்ன பிரச்னைனாலும் உனக்கு ஆறுதலுக்குன்னா கூட நான் இருக்கனும். நீ என்ன எதிர்பாக்கணும்னு நினச்சேன். ஆனா இவ்ளோ பெரிய பிரச்சனை வந்தும் நீ தைரியமா இருக்கேனு நினைச்சு பெருமைப்பட்டேன். கொஞ்சம் அதனால தான் ரிலாக்ஸா இருந்தேன். ஆனா நீ வேற யாரையோ எதிர்பாத்திருக்கேல்ல? அந்த நம்பிக்கை தைரியத்துல தான் இருந்தியா?

அப்போ, என் தியா என்ன லவ் பண்ணலையா? நோநீ என்ன லவ் பண்ண எனக்கு தெரியும் தியா. ஆனா நீ ஏன் டி அப்படி சொன்ன? ‘ப்ளீஸ் தயா என்ன வந்து கூட்டிட்டு போங்கன்னு.. ‘

அவன்கூட இருந்தா எதுன்னாலும் சமாளிப்பேன்னு சொல்ற? என்ன விட்டுட்டு போக எப்படி உன்னால முடியுது.

அதேதான டி எனக்கும். நீ என்கூட இருந்தா போதும். எதுனாலும் நான் சமாளிப்பேன்னு உனக்கு ஏன் புரியல. முழுசா எல்லாத்தையும் கிளீயர் பண்ணிட்டு உன் மேல எந்த தப்பும் இல்லாம இங்க கூட்டிட்டு வரணும்னு தான் நினச்சேன். எனக்கும் உன்ன இன்னும் புரிஞ்சுக்கணும்னு தோணுச்சு. அப்போதான் லைப் முழுக்க உன்ன சந்தோசமா வெச்சுக்க முடியும்னு நினைச்சேன். ஆனா உன்னால எனக்காக வெயிட் பண்ணமுடியாதில்ல? நான் கோபத்துல திட்டிட்டேனு தான் என்ன விட்டு போறேன்னு சொல்றியா டி? இல்ல தியா, எனக்கு நீ வேணும். என்னோட கோபம், பிடிவாதம் எல்லாத்தையும் தாண்டி உன் விசயத்துல மட்டும் மொத தடவையா பொறுமையா இருந்தேன். லவ் விசயத்துல, அத சொல்றதுல, இப்போ நிச்சயம் அன்னைக்கு நடந்த பிரச்னை எல்லாத்துலையுமே பொறுமையா இருந்து யோசிக்கலாம்னு இருந்தது தப்போன்னு இப்போ தோணுது. என்னால உன்ன இழக்க முடியாது. எனக்கு நீ வேணும். நீ என்கிட்ட வந்திடு. நான் பாத்துக்கறேன். இனி என்னால வெயிட் பண்ண முடியாது. என் மனசு இப்போவும் சொல்லுது நீ என்கூட வாழறத விரும்புவ. சந்தோசம இருப்பேன்னு. எனக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கணும்நான் முடிவு பண்ணிட்டேன். இனி யாரு சொன்னாலும் எப்படி தடுத்தாலும் நான் கேக்கபோறதில்ல. என்றவன் அடுத்து செய்யவேண்டியதை முடிவெடுத்துக்கொண்டு உறங்கிவிட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: